மிழ்ச் சொற்கோவைக் குழு

TAMIL GLOSSARY COMMITTEE

ISMS = வாதங்கள்


absolutism

ஒற்றைப்படைவாதம்; தனியாட்சிவாதம்

absurdism

அபத்தவாதம்

accidentalism

தற்செயல்வாதம்

aestheticism

கலையழகுவாதம்; அழகியல்வாதம்

agnosticism

அறியொணாவாதம்

altruism

பொதுநலநெறி 

anarchism

ஆட்சியறவுவாதம்

antirealism

மெய்ம்மைமறுப்பு வாதம்

atheism

இறைமறுவாதம்; நாத்திகம்

atomism

அணுத்துவம்; ஆள்மையவாதம்

authoritarianism

எதேச்சாதிகாரம்

behaviourism

நடத்தைநெறிவாதம்

capitalism

முதலாளித்துவம்

classicism

செந்நெறிவாதம்

cognitivism

அறிதிறவாதம்

collectivism

கூட்டாண்மை

colonialism

குடியேற்றவாதம்; கட்டியாள்கை

communalism

வகுப்புவாதம்

communism

பொதுவுடைமைவாதம்

communitarianism

சமூகத்துவவாதம்

conceptualism

கருத்தீட்டுவாதம்

confederalism

கூட்டிணைப்பாட்சி வாதம்

consequentialism

விளைபயன்வாதம்

conservatism

பழைமைபேண்வாதம்

constitutionalism

யாப்புமுறைமை

constructivism

அகவிருத்திவாதம்

contextualism

சூழ்நிலைவாதம்

contractarianism

ஒப்பந்தவாதம்

conventionalism

உடன்பாட்டுவாதம்

cosmopolitanism

அகல்குடிவாதம்

cynicism

ஏளிதம்; ஏளிதவாதம்

despotism

கடுங்கோன்மை; வல்லாட்சி

determinism

நோக்குடைமைவாதம்

distributivism

சமதீர்வுவாதம்

dogmatism

சித்தாந்தவாதம்

dualism

இருமைவாதம்

dynamism

இயக்கவாதம்

egalitarianism

சமத்துவவாதம்

egoism

தன்னலவாதம்

eliminativism

வழுகளைவாதம்

emotivism

உணர்வெழுச்சிவாதம்

empiricism

புலனறிவாதம்

environmentalism

சூழல்நலவாதம்

Epicurianism

அகமகிழ்ச்சிவாதம்

essentialism

உள்ளியல்புவாதம்

eternalism

நிலைபேற்றுவாதம்

ethnocentrism

இனமையவாதம்

existentialism

வாழ்வியல்வாதம்; வாழ்வினைவாதம்;

இருப்பியல்வாதம்  

experimentalism

ஆய்கோள்வாதம்

expressionism

அகவுணர்ச்சிவெளியீடு

extremism

தீவிரவாதம்

factionalism

கன்னைவாதம்

fallibilism

வழுவாய்ப்புவாதம் 

fascism

கொடுந்தேசியவாதம்; பாசிசம்

fatalism

ஊழ்வலிவாதம்

fideism

உள்ளொளிவாதம்

foundationalism

மூலநெறிவாதம்

functionalism

அகச்செயல்வாதம்

fundamentalism

பழைமைநெறிவாதம்

hedonism

இன்பவாதம்

historicism

வரலாற்றுநியதிவாதம்

idealism

குறிக்கோள்வாதம்; விழைகோள்வாதம்;

இலட்சியவாதம்

indeterminism

நோக்கின்மைவாதம்

individualism

தனிமனிதவாதம்

instrumentalism

பயனுடைமைவாதம்

intellectualism

அறிதிறவாதம்

internalism

அகக்கருத்துவாதம்

interpretivism

பொருள்கொள்வாதம்

interventionism

இடையீட்டுவாதம்

irrationalism

நியாயமில்வாதம்

ism

வாதம்

leftism

இடதுசாரித்துவம்

legalism

சட்டநெறிவாதம்

liberalism

தாராண்மைவாதம்

libertarianism

சுதந்திரவாதம்

logical positivism

தருக்கப் புலனறிவாதம்

Marxism

மார்க்சியம்

materialism

பொருள்முதல்வாதம்

mercantilism

வணிகத்துவம்

modernism

நவீனத்துவம்

monism

ஒருமைவாதம்

monotheism

தனியிறைவாதம்

mysticism

மறைஞானம்

naturalism

இயற்கைவாதம்

Nazism

கொடும்பேரினவாதம்; நாசிசம்

negativism

எதிர்மறைவாதம்

neutralism

நடுநிலைவாதம்

nihilism

சூனியவாதம்

objectivism

புறவயவயத்துவம்

optimism

நன்னம்பிக்கை வாதம்

pacifism

அமைதிவாதம்

pantheism = cosmotheism

இறைநிறைவாதம்

perfectionism

செம்மைத்துவம்

pessimism

துன்னம்பிக்கை வாதம்

phenomenalism

புலனுணர்வாதம்

pluralism

பன்மைத்துவம்

polytheism

பல்லிறைவாதம்

positivism

புலனறிவாதம்

postmodernism

நவீனத்துவ பின்னிலை வாதம்

pragmatism

நிகழ்பயன்வாதம்

prescriptivism

நிர்ணயவாதம்

professionalism

துறைமைத்திறம்

racial chauvinism

பேரினவாதம்

racism

இனவாதம்

radicalism

பருமாற்றவாதம்

rationalism

நியாயவாதம்

realism

மெய்ம்மைத்துவம்

referentialism

சொற்பொருள்வாதம்

relationism

தொடர்பீட்டுவாதம்

relativism

சார்பீட்டுவாதம்

retributivism

பழிதீர்ப்புவாதம்

romanticism

கற்பனை நவிற்சி 

scepticism = skepticism

ஐயவாதம்

scientism

அறிவியல்வாதம்

secularism

உலகியல்வாதம்; இம்மைவாதம்

sensualism

புலனின்பவாதம்

socialism

சமூகவுடைமைவாதம்

solipsism

அகத்துவம்; அகமையவாதம்

sophism

தார்க்கிகம்

spiritualism

ஆன்மீகவாதம்

stoicism

உள்ளொடுக்கவாதம்

structuralism

கட்டமைப்புவாதம்

subjectivism

அகவயவாதம்

surrealism

அதீதகற்பிதம்

syndicalism

பல்தரப்புடைமை = பல்தரப்பு முறைமை

theism

இறைவாதம்; ஆத்திகம்

totalitarianism

சர்வாதிபத்தியம்

traditionalism

மரபுநெறிவாதம்

transcendentalism

ஆழ்நிலைவாதம்  

universalism

சர்வமயவாதம்

utilitarianism

பயன்பாட்டுவாதம்

vitalism

உயிரியக்கவாதம்

 

No comments:

Post a Comment