SOCIOLOGY = சமூகவியல்
access to resources | வளங்களை அடையும் வாய்ப்பு |
achieved status | ஈட்டிய (எய்திய) தகுநிலை |
action perspective | செயற் கண்ணோட்டம் |
activity theory | செயற்பாட்டுக் கோட்பாடு |
age stratification | வயதுவாரி அடுக்கு |
age–sex pyramid | வயது-பால் கூம்பு |
animism | ஆன்மத்துவம் |
ascribed status | உற்ற தகுநிலை |
benefits available | கிடைக்கும் நன்மைகள் |
bisexual, a | இருபாற்சேர்க்கையர் |
bisexual relationship | இருபாற்சேர்க்கை உறவு |
blue-collar job = manual job | கைவேலை |
casteism | சாதியம் |
cause and effect | ஏதும் விளைவும் = காரண காரியம் |
census | தொகைக்கணிப்பு |
charisma | கவர்ச்சி; ஈர்ப்பு |
charismatic authority | ஆட்கவர்ச்சி அதிகாரம் |
class conflict | வர்க்க முரண்பாடு |
class consciousness | வர்க்க உணர்வு |
class society | வர்க்க சமூகம் |
class system | வர்க்க முறைமை (கட்டுக்கோப்பு) |
code | விதிக்கோவை |
cohabitation | உடனுறைவு |
cohort | சாரி; யாரி; சகா |
collective behaviour | கூட்டு நடத்தை |
collectivity | கூட்டியக்கம் |
community | சமூகம் |
conflict perspective | முரண் கண்ணோட்டம் |
conglomerate | மாபெரும் கூட்டுத்தாபனம் |
conventions, social | சமூக வழக்காறுகள் |
conversational analysis | உரையாடற் பகுப்பாய்வு |
cosmogony | இயலுலகத் தோற்றம் |
counterculture | எதிர்ப்பண்பாடு |
credentialism | தகைமைத்துவம் |
creed | சமயநெறி |
critical sociology | திறனாய்வுச் சமூகவியல் |
crowd | மக்கள்திரள் |
cult | வழிபாடு |
cultural capital | பண்பாட்டுத் தலைநகர் |
cultural conflict | பண்பாட்டு முரண்பாடு |
cultural ecology | பண்பாட்டுச் சூழலியல் |
cultural hybridisation | பண்பாட்டுக் கலப்பினவாக்கம் |
cultural integration | பண்பாட்டு ஒருங்கிணைப்பு |
cultural lag | பண்பாட்டுப் பின்னடைவு |
cultural relativism | பண்பாட்டுச் சார்புவாதம் |
cultural reproduction | பண்பாடு கடத்துதல் |
cultural transmission | பண்பாடு கையளிப்பு |
cultural universals | பண்பாட்டுப் பொதுமைகள் |
culture shock | பண்பாட்டு அதிர்ச்சி |
decentred | மையம் நீங்கிய |
deductive logical thought | உய்த்தறி ஏரண சிந்தனை |
degenerate war | இழிந்த போர்; குடிமக்களுக்கு எதிரான போர் |
demographic transition theory | குடித்தொகை நிலைமாறு கோட்பாடு |
demography | குடித்தரவியல் |
denomination | சமயப்பிரிவு |
dependency ratio | தங்கியிருப்பு விகிதம் |
dependency theory | தங்கியிருப்புக் கோட்பாடு |
descent | பரம்பரை; சந்ததி |
deterrence and denunciation of crime | குற்றம் தடுத்தலும் கடிதலும் |
deviance | நெறிபிறழ்வு |
discourse | ஆய்வுரை; அளவளாவல் |
disengagement theory | விடுபடல் கோட்பாடு |
division of labour | தொழிற் பகுப்பு |
dramaturgical analysis | நாடகமொழிப் பகுப்பாய்வு |
dysfunctional family | குலைவுறு குடும்பம் |
ecclesiastical law | சமயத்துறைச் சட்டம் |
economic exploitation | பொருளாதார சுரண்டல் |
ecosystem | சூழல் தொகுதி |
elite culture; high culture | மேட்டிமைப் பண்பாடு |
empirical evidence | பட்டறிவு (அனுபவ)ச் சான்று |
empowerment of women | பெண்களுக்கு வலுவூட்டல் |
encode | ஆள்மொழியாக்கு; எடுத்துரை |
endogamy | அகமணம் |
environmental deficit | சூழல் பற்றாக்குறை |
environmental racism | சூழல்சார் இனவாதம் |
epistemic relativism | அறிவுநெறிச் சார்புவாதம் |
epistemology | அறிவுநெறியியல் |
ethnic group (a set of individuals whose identity is defined by common cultural traditions, language or heritage -Oxford) | இனக்குழுமம் (பொதுவான பண்பாட்டு மரபுகள், மொழி, பாரம்பரியம் கொண்டோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்) |
ethnic antagonism | இனக்குழுமப் பகை |
ethnomethodology | இனக்குழுமமுறையியல் |
euthanasia = mercy killing | கருணைக் கொலை |
exogamy | புறமணம் |
extended family = consanguine family | கூட்டுக் குடும்பம் |
fad | குறும்பாணி |
faith | சமய நம்பிக்கை |
false consciousness | போலி உணர்வு |
family of choice | தெரிவுறு குடும்பம் |
family unit | குடும்ப அலகு |
family violence | உட்குடும்ப வன்முறை |
fashion | பாணி |
feminisation of poverty | பெண்மயமாகும் வறுமை |
fertility treatment | கருவளச் சிகிச்சை |
fiance | வருதுணைவன்; வருதுணை |
fiancee | வருதுணைவி; வருதுணை |
folkways | நாட்டார் வழமை; பாமர வழமை |
Fordism | பாரிய உற்பத்திப் பொருளாதாரம் |
formal organisation | முறைசார் அமைப்பு |
fourth estate | ஊடகத் துறை |
frenemy | நண்பகைவர் |
functional illiteracy | செயற்படும் எழுத்தறிவீனம் |
functional paradigm | செயற்பாட்டுப் படிமை |
gay (man) | தன்பாற்சேர்க்கை ஆண் |
gender | பால்மை |
gender analysis | பால்மைப் பகுப்பு |
gender and development | பால்மையும் விருத்தியும் |
gender dispute | பால்மைப் பிணக்கு |
gender equality | பால்மைச் சமத்துவம் |
gender equity | பால்மை ஒப்புரவு |
gender identity | பால்மை அடையாளம் |
gender mainstreaming | பால்மை உள்வாங்கல் |
gender mainstreaming principles | பால்மை உள்வாங்கு நெறிகள் |
gender order | பால்மை ஒழுங்கு |
gender regime | பால்மை ஒழுங்குமுறை |
gender role | பால்மை வகிபாகம் |
gender stratification | பால்மை அடுக்கமைவு |
gender-negative approach | பால்மை முரண் அணுகுமுறை |
gender-neutral terminology | பால்மை நடுநிலைச் சொல்லாட்சி |
gender-positive approach | பால்மைச்சார்பு அணுகுமுறை |
gender-sensitive language | பால்மை உளங்கொள் மொழி |
gender-specific statement | குறித்த பால்மைக் கூற்று |
gender-transformative actions | பால்மை மேம்பாட்டு நடவடிக்கைகள் |
genocide by attrition | பல்முனை இனப்படுகொலை |
gentrification, process of | தரமுயர்த்தல் படிமுறை |
gerontocracy | மூப்பாதிக்கம்; மூப்பாதிக்க சமூகம் |
gerontology | முதுமையியல் |
global economy | உலகப் பொருளாதாரம் |
global perspective | உலகளாவிய கண்ணோட்டம் |
global warming = greenhouse effect | புவி வேகல் |
globalization | உலகமயமாக்கம் |
gross domestic product | மொத்த உள்நாட்டு உற்பத்தி |
gross national product | மொத்த தேசிய உற்பத்தி |
groupthink | குழுமச் சிந்தனை |
hegemonic masculinity | ஆண்மை ஆதிக்கம் |
hegemony | ஆதிக்கம் |
hermaphrodite | இருபாற்பிறவி |
heterosexual, a | எதிர்பாற்சேர்க்கையர் |
heterosexual relationship | ஏதிர்பாற்சேர்க்கை உறவு |
high culture; elite culture | மேட்டிமைப் பண்பாடு |
homosexual, a | தன்பாற்சேர்க்கையர் |
homosexual relationship | தன்பாற்சேர்க்கை உறவு |
humanism | மானுடத்துவம் |
hunting and gathering | வேட்டையாடலும் காய்கனி சேர்த்தலும் |
hybrid | கலப்பினம் |
hybridisation | கலப்பினவாக்கம் |
hypothesis | கருதுகோள் |
ideal culture | விழையும் பண்பாடு; இலட்சியப் பண்பாடு |
identity | அடையாளம் |
indigenous people = aboriginal people | தொல்குடிமக்கள் = ஆதிக்குடிமக்கள் |
inductive logic | தொகுத்தறி ஏரணவியல் |
industrialism | கைத்தொழில்-துறைமை |
ingroup | அகக்குழுமம் = உட்குழுமம் |
inhibition | கூச்சம் |
institutional racism = institutionalized racism = structural racism = systemic racism | கட்டமைப்புவாரியான இனவாதம் |
intellectual ability | அறிவாற்றால் |
intellectual capital | அறிவாற்றால் வளம் |
intellectual property | அறிவாற்றால் சொத்து; புலமைச்சொத்து; படைப்புச்சொத்து |
intellectual property rights | அறிவாற்றால் சொத்துரிமை; புலமைச் சொத்துரிமை; படைப்புச் சொத்துரிமை, (எ-கா: ஆக்கவுரிமை, பிரதியுரிமை) |
intellectual, an | அறிவார்ந்தவர் |
intellectualism | அறிவாண்மைவாதம் |
intellectuality | அறிவாண்மை |
intellectualize | அறிவாண்மைமயப்படுத்து |
intellectuals | அறிவார்ந்தோர் |
intelligence agency | உளவு முகமையகம் |
intelligence quotient | நுண்மதி ஈவு |
intelligentsia | அறிவார்ந்தோர் குழாம் |
intergenerational | தலைமுறைகளுக்கு இடைப்பட்ட |
intersex, an | முழுப்பாற்சேர்க்கையர் |
kinship | குருதியுறவு; இரத்த உறவு |
kith and kin | உற்றார் உறவினர் |
LGBTIQ = lesbian, gay, bisexual, transgender, intersex, and questioning gender (sexuality) | நெகிழ்பாலுறவாளர்கள் |
labelling | முத்திரை குத்தல் |
latent talent | மறைதிறன் |
lesbian, a | தன்பாற்சேர்க்கைப் பெண் |
lesbian wedding | தன்பாற்சேர்க்கைப் பெண்களின் திருமணம் |
liberation theology | விடுதலை இறையியல் |
life expectancy | சராசரி வயது |
linguistic determinism | மொழிவழிச் சிந்தனை |
linguistic relativism | மொழியியற் சார்புவாதம் |
low culture; popular culture | மக்களீர் பண்பாடு |
macro-sociology | மாண் சமூகவியல் |
male chauvinism | ஆணாதிக்கம் |
marketization | சந்தைமயமாக்கம் |
material culture | பொருட் பண்பாடு |
matriarchy | பெண்ணாதிக்க சமூகம் |
matrilineal descent | பெண் சந்ததி |
matrilocality | பெண்குடிவாசம் |
medicalization | மருத்துவமயமாக்கம் |
mega-city | மகாநகர் |
megalopolis | மாபெருநகர் |
meritocracy | தகுதியாண்மை |
metropolis | தலைமைநகரம் |
micro-sociology | நுண் சமூகவியல் |
middle-class | மத்திய வகுப்பு |
middle-income | மத்திம வருமானம் |
migration | பெயர்ச்சி; பெயர்வு |
military force | படை வலு |
military–industrial complex | படைசார் உற்பத்திக் கட்டுக்கோப்பு |
miscegenation | கலப்பினப்பெருக்கம் |
mob | கும்பல் |
mode of production | உற்பத்தி முறை |
modernity | நவீனத்துவம் |
monopoly | தனியாதிக்கம்; ஏகபோகம் |
mores | ஒழுக்கவழக்கம் |
mortality | இறப்பு |
multinational corporation | பல்தேசியக் கூட்டுத்தாபனம் |
multiple perspectives | பன்மைக் கண்ணோட்டங்கள் |
nation-state | இன-அரசு |
natural environment | இயற்கைச் சூழல் |
neo-locality | நவ வாசம்; தனிக் குடித்தனம் |
net migration rate | தேறிய பெயர்ச்சி வீதம் |
new racism | புத்தினவாதம்; புது இனவாதம் |
newly industrialising countries | புதுக்க கைத்தொழில்மயமாகும் நாடுகள் |
non-material culture | பொருள் சாராப் பண்பாடு |
non-verbal communication | வாய்மொழி சாராத தொடர்பாடல் |
norm = standard | நியமம் |
nuclear family = conjugal family | தனிக் குடும்பம் |
nuclear proliferation | அணுவாயுதப் பெருக்கம் |
objectivity | புறவயம் |
occupational gender segregation | பால்வாரி தொழில் பாகுபாடு |
occupational prestige | தொழில் மானம் (மரியாதை) |
oligopoly | உற்பத்தியாளர் சிலரின் ஆதிக்கம் |
oral culture tradition | வாய்மொழிப் பண்பாட்டு மரபு |
organic intellectuals | உள்ளார்ந்த அறிவார்ந்தவர் |
organizational environment | அமைப்புப் புறச்சூழல் |
outgroup | புறக்குழுமம் |
pansexual, a | பொதுப்பாற்சேர்க்கையர் |
paradox | முரண்புதிர் |
paradigm | படிமை |
parentocracy | பெற்றோராதிக்கம் |
participant observation | பங்குபற்றி அவதானித்தல் |
participatory development | பங்குபற்றல் ஊடான விருத்தி |
pastoralism | பண்ணைவிலங்குத் தொழினுட்பவியல் |
patriarchy | ஆணாதிக்க சமூகம் |
patrilineal descent | ஆண் சந்ததி |
patrilocality | ஆண்குடிவாசம் |
peer group | சகவயதினர் குழுமம் |
personal space | அந்தரங்க சூழ்நிலை |
personality | ஆளுமை |
plea bargaining | குற்ற ஒப்புதல் பேரம் |
popular culture; low culture | மக்களீர் பண்பாடு |
positive discrimination = affirmative action = reverse discrimination | ஈடுசெய் பாகுபாடு (அன்றைய பாகுபாட்டை ஈடுசெய்வதற்கான இன்றைய பாகுபாடு) |
positivism | புலனறிவாதம் |
practical gender needs | பால்மை நடைமுறைத் தேவைகள் |
profession | துறைமைப்பணி |
professionalism | துறைமைத்திறம் |
professionals and amateurs | துறைஞர்களும் விழைஞர்களும் |
proletariat | பாட்டாளி(ய) வர்க்கம் |
propaganda | பரப்புரை |
public intellectual | வெளியரங்க அறிவார்ந்தவர் |
questioning gender (sexuality) | பாலறி நிலையினர் |
race (a set of individuals whose identity is defined by physical characteristics) | பேரினம் (உடற் சிறப்பியல்புகள் கொண்டு வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்; எ-கா: கருநிறத்தவர்) |
racialization | இனமயமாக்கம் |
rationalisation | நியாயம் கற்பித்தல் |
rationality | நியாயப்பாடு |
real culture | மெய்ப் பண்பாடு |
reference group | உசாவற் குழுமம் |
rehabilitation | மறுவாழ்வு |
relative poverty | ஒப்பீட்டளவிலான வறுமை |
religiosity | சமயாபிமானம் |
reproductive rights | மகப்பேற்று உரிமைகள் |
retrospective labelling | நிகழ்கால நெறிபிறழ்வுக்கேற்ப கடந்த கால நடத்தைக்குப் பொருள்கோடல் |
risk society | ஊறுபடவல்ல சமூகம் |
ritual | சடங்கு |
role conflict | வகிபாக முரண்பாடு |
role set | வகிபாகத் தொகுதி |
role strain | வகிபாக ஒவ்வாமை |
routinization of charisma | ஆட்கவர்ச்சி ஆதிக்கத்தை தலைமுறைப்படுத்தல் |
scapegoat | பலியாடு |
scar | வடு; தழும்பு |
sect | சாகை |
secularization | உலகியலாக்கம் |
self-fulfilling prophecy | தம் ஆரூடம் பலிக்குமாறு தாமே செயற்படல் |
sexual rights | பாலியல் உரிமைகள் |
social change | சமூக மாற்றம் |
social character | சமூக குணவியல்பு |
social class | சமூக வர்க்கம் |
social conflict | சமூக முரண்பாடு |
social construction of reality | சமூக நடப்புநிலைக் கட்டுமானம் |
social control system | சமூக கட்டுப்பாட்டு முறைமை |
social conventions | சமூக வழக்காறுகள் |
social democracy | சமூகத்துவ மக்களாட்சி |
social divisions | சமூகப் பிரிவினைகள் |
social dysfunction | சமூகக் குலைவு |
social epidemiology | சமூக அறிவுநெறியியல் |
social function | சமூக செயற்பாடு |
social group | சமூகக் குழுமம் |
social identity | சமூக அடையாளம் |
social interaction | சமூக ஊடாட்டம் |
social mobility | சமூக நிலைபெயர்வு |
social movement | சமூக இயக்கம் |
social network | சமூக வலையம் |
social stratification | சமூகப் படுகையாக்கம் |
social structure | சமூகக் கட்டமைப்பு |
social-conflict paradigm | சமூக முரண்பாட்டுப் படிமை |
socialized medicine | சமூக மருத்துவ பராமரிப்பு |
societal protection | சமூகம் அளிக்கும் பாதுகாப்பு |
socio-biology | சமூக உயிரியல் |
sociocultural evolution | சமூக பண்பாட்டுக் கூர்ப்பு |
socio-economic status | சமூக பொருளாதார தகுதிநிலை |
sociology | சமூகவியல் |
special-interest group | தனி நாட்டக் குழுமம் |
spurious correlation | போலி இடைத்தொடர்பு |
standpoint epistemology | நிலைப்பாட்டு அறிவுநெறியியல் |
stigma | வடு; வசை; கறை; களங்கம் |
stigmatize | வடுப்படுத்து; குறிசுடு; களங்கப்படுத்து; வசையுண்டாக்கு |
strategic gender interests | பால்மை நலனோம்பு உபாயங்கள் |
structural adjustment | கட்டமைப்புச் சீரீடு |
structural genocide | கட்டமைப்புவாரியான இனக்கொலை |
structural racism = institutional racism = institutionalized racism = systemic racism | கட்டமைப்புவாரியான இனவாதம் |
structural social mobility | கட்டமைப்புவாரியான சமூகப் பெயர்ச்சி |
structural violence | கட்டமைப்புவாரியான வன்முறை |
structural–functional paradigm | கட்டமைப்பு-செயற்பாட்டுப் படிமை |
structuralism | கட்டமைப்புவாதம் |
structuration | கட்டமைப்பீடு |
structure of argument | வாதத்தின் கட்டமைப்பு |
structured genocide | கட்டமைத்த இனக்கொலை |
subaltern | கீழைமாந்தர் |
subculture | கீழைமாந்தர் பண்பாடு |
subculture theory | கீழைமாந்தர் பண்பாட்டுக் கோட்பாடு |
surveillance society | வேவுச் சமூகம்; கண்காணிப்புச் சமூகம் |
systemic racism = structural racism = institutional racism = institutionalized racism | கட்டமைப்புவாரியான இனவாதம் |
taboo words | தீட்டுச் சொற்கள் |
theoretical paradigm | கோட்பாட்டுப் படிமை |
theoretical perspective | கோட்பாட்டுக் கண்ணோட்டம் |
theory | கோட்பாடு |
totem | குலச்சின்னம் |
tradition | மரபு |
traditional authority | மரபுவழி அதிகாரம் |
traditional intellectuals | மரபார்ந்த அறிவார்ந்தோர் |
tradition-directedness | மரபுநெறிநிற்கை |
transgender, a | திருநங்கை |
unconscious | ஆழ்வுளம்; அடியுளம் |
underclass | தாழ்நிலை வகுப்பினர் |
underground economy | பாதாளப் பொருளாதாரம் |
urban ecology | நகர சூழலியல் |
urbanization | நகரமயமாக்கம் |
values | விழுமியங்கள் |
variable | மாறி |
victimless crime | பாதிக்கப்படுவோர் புலனாகாவாறு இழைக்கப்படும் குற்றம் |
white-collar crime | அதிகாரிகள் புரியும் குற்றம் |
white-collar occupation | அலுவலக வேலை |
women in development | விருத்தியில் பங்குவகிக்கும் பெண்கள் |
zero population growth | மக்கள்தொகை நிலைநிற்பு |