HUMAN RIGHTS = மனித உரிமைகள்
administration of justice, in particular, juvenile justice | நீதிபாலனம், குறிப்பாக, இளையோர் நீதிபாலனம் |
adverse effects of the illicit movement and dumping of toxic and dangerous products and wastes on the enjoyment of human rights | நச்சுப் பொருட்கள், ஆபத்தான பொருட்கள், கழிவுகளைக் கள்ளத்தனமாக நகர்த்துவதும் கொட்டுவதும் மனித உரிமைகளைத் துய்ப்பதில் ஏற்படுத்தும் தகாத விளைவுகள் |
affirmative or positive action initiatives | பாரபட்சத்தை ஈடுசெய்யும் அல்லது இணக்க நடவடிக்கை முன்னெடுப்புகள் |
arbitrary detention | சட்டதிட்டத்துக்கு உட்படாத தடுத்துவைப்பு |
Club of Rome, The | உரோமாபுரிக் கழகம் |
Commission for Social Development | சமூக விருத்தி ஆணையம் |
Committee on the Elimination of Discrimination against Women | பெண்களுக்கு எதிரான பாரபட்சம் ஒழிப்புக் குழு |
Committee on Economic, Social and Cultural Rights | பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் குழு |
complaint mechanism under the International Covenant on Civil and Political Rights | சர்வதேச குடியியல்-அரசியல் உரிமைகள் உடன்பாட்டுக்கு அமைந்த முறைப்பாட்டுப் பொறிமுறை |
Conscientious objection to military service | மனச்சாட்சிக்கமைந்து படைச் சேவைக்கு மறுப்புத்தெரிவிப்பு |
Convention, Geneva | ஜெனீவா பொருத்தனை |
Convention for the Protection of All Persons from Enforced Disappearances | வலிந்து காணாமல் போக்கடிப்பிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பொருத்தனை |
Convention on the Elimination of All Forms of Discrimination against Women | பெண்களுக்கு எதிரான பாரபட்சங்கள் முழுவதையும் ஒழிப்பது தொடர்பான பொருத்தனை |
Convention on the Rights of the Child | மகவுரிமைகள் பொருத்தனை |
cultural identities | பண்பாட்டு அடையாளங்கள் |
death penalty | இறப்புத் தண்டனை; மரண தண்டனை |
defamation of religions | சமய அவதூறு; மத அவதூறு |
Draft optional protocol to the Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment | சித்திரவதை மற்றும் பிற கொடிய, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் செயல் அல்லது தண்டனைக்கு எதிரான பொருத்தனை சார்ந்த தெரிவுக்குரிய வரைவுடன்பாடு |
Durban Declaration and Programme of Action | டேர்பன் நடவடிக்கைப் பிரகடனம் – நிகழ்முறை |
effects of structural adjustment policies and foreign debt on the full enjoyment of all human rights, particularly economic, social and cultural rights | மனித உரிமைகள், குறிப்பாக பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் அனைத்தையும் முற்றிலும் துய்ப்பதில், கட்டமைப்பு சீரிடற் கொள்கைகளும், வெளிநாட்டுக் கடனும் ஏற்படுத்தும் தாக்கங்கள் |
elimination of all forms of religious intolerance | மதங்களைச் சகியாத செயல்முறைகள் அனைத்தையும் ஒழித்தல் |
enforced or involuntary disappearances | வலிந்த அல்லது மனமிசையா காணாமல் போக்கடிப்புகள் |
enhancement of the effectiveness of the working methods of the Commission | ஆணையம் செப்பமுறச் செயற்படும் முறைகளை மேம்படுத்தல் |
extrajudicial, summary or arbitrary executions | நீதிமுறைக்குப் புறம்பான, உடனடியான, சட்டதிட்டத்துக்கு உட்படாத மரண தண்டனைகள் |
forcible confinement | வலிந்து தடுத்துவைப்பு |
forcible disappearance | வலிந்து காணாமல் போக்கடிப்பு |
forcible entry | வலிந்து நுழைவு |
fundamental standards of humanity | அடிப்படை மனிதாபிமான நியமங்கள் |
gender perspective | பால்மைக் கண்ணோட்டம் |
Geneva Convention | ஜெனீவா பொருத்தனை |
Geneva Convention Conference | ஜெனீவா பொருத்தனை மாநாடு |
Geneva Protocol | ஜெனீவா முன்வரைவு |
globalization and its impact on the full enjoyment of human rights | உலகமயமாக்கமும், மனித உரிமைகளை முற்றிலும் துய்ப்பதில் அதன் தாக்கமும் |
human rights
(“Everyone is entitled to all the rights and freedoms set forth in this Declaration, without distinction of any kind, such as race, colour, sex, language, religion, political or other opinion, national or social origin, property, birth or other status. Furthermore, no distinction shall be made on the basis of the political, jurisdictional or international status of the country or territory to which a person belongs, whether it be independent, trust, non-self-governing or under any other limitation of sovereignty” (The Universal Declaration of Human Rights, UN,1948, Article 2.) | மனித உரிமைகள்
(“இனம், நிறம், பால், மொழி, சமயம்,அரசியல் அபிப்பிராயம் அல்லது வேறு அபிப்பிராயம், தேசியத் தோற்றுவாய் அல்லது சமூகத் தோற்றுவாய், உடைமை, பிறப்பு அல்லது வேறு தகுநிலை போன்ற பாகுபாடு எதுவுமின்றி அனைவரும் இப்பிரகடனத்தில் எடுத்துரைக்கப்பட்ட உரிமைகள் சுதந்திரங்கள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள். மேலும், ஒருவரது நாடு அல்லது ஆள்புலம் சுதந்திரமானதாகவோ, நம்பிக்கைப் பொறுப்பாள்புலமாகவோ, தன்னைத் தானே ஆளாததாகவோ, வேறு வகையில் இறைமை மட்டுப்பட்டதாகவோ விளங்கினாலும் கூட, அதன் அரசியல் தகுநிலையை அல்லது நியாயாதிக்க தகுநிலையை அல்லது சர்வதேய தகுநிலையை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு பாகுபாடு காட்டலாகாது”(உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், ஐ. நா., 1948, உறுப்புரை 2) |
human rights abuses and violations | மனித உரிமைத் துர்ப்பிரயோகங்களும் மீறல்களும் |
human rights and human responsibilities | மனித உரிமைகளும் மனித பொறுப்புகளும் |
Human rights are universal, indivisible, interdependent and interrelated | மனித உரிமைகள் உலகளாவியவை, கூறுபடாதவை, ஒன்றை ஒன்று சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை |
Human Rights Council | மனித உரிமை மன்றம் |
human rights defenders | மனித உரிமைக் காவலர்கள் |
human rights of persons with disabilities | மாற்றுத் திறனாளர்களின் மனித உரிமைகள் |
Human Rights Watch | மனித உரிமைகள் கண்காணிப்பகம் |
impunity | தண்டனைக்குட்படாமை |
independence and impartiality of the judiciary, jurors and assessors and the independence of lawyers | நீதித்துறை, யூரர்கள், கணிப்பீட்டாளர்களின் சுதந்திரம், பக்கஞ்சாரமை; சட்டவாளர்களின் சுதந்திரம் |
integrating the human rights of women throughout the United Nations system | ஐக்கிய நாடுகள் கட்டுக்கோப்பு முழுவதிலும் பெண்களின் மனித உரிமைகளை உள்ளிணைத்தல் |
International Commission of Jurists | அனைத்துநாட்டு சட்டவல்லுநர் ஆணையம் |
International Convention on the Elimination of All Forms of Racial Discrimination | இனப்பாரபட்ச செயல்முறைகள் அனைத்தயும் ஒழிப்பது தொடர்பான சர்வதேச பொருத்தனை |
International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families | இடம்பெயர் தொழிலாளர், அவர்தம் குடும்பத்தவர் அனைவரதும் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான அனைத்துநாட்டுப் பொருத்தனை |
International Covenant on Economic, Social and Cultural Rights | பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் தொடர்பான அனைத்துநாட்டு உடன்பாடு |
International Covenants on Human Rights | மனித உரிமைகள் தொடர்பான அனைத்துநாட்டு உடன்பாடுகள் |
International Decade of the World’s Indigenous People | உலக சுதேச மக்களின் அனைத்துநாட்டு தசாப்தம் |
International League of Human Rights | அனைத்துநாட்டு மனித உரிமைகள் கழகம் |
involuntary disappearances | உளமிசையா காணாமல் போக்கடிப்புகள் |
missing persons | காணாமல் போனவர்கள் |
Office of the United Nations High Commissioner for Human Rights | ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் |
Optional Protocol to the International Covenant on Economic, Social and Cultural Rights | பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் தொடர்பான அனைத்துநாட்டு உடன்பாட்டுக்கான விருப்பத்தெரிவு முன்வரைவு |
prisoners of conscience | கொள்கைநெறிக் கைதிகள் |
promotion and protection of human rights | மனித உரிமைகளை மேம்படுத்தலும் பாதுகாத்தலும் |
protocol, a breach of | விதிமுறை மீறல் |
protocol of diplomatic visits | சூழ்வியலர் வரவுகளுக்கான விதிமுறைகள் |
Protocol to the Climate Convention, a | காலநிலைப் பொருத்தனைக்கான முன்வரைவு |
Protocol, Geneva | ஜெனீவா முன்வரைவு |
racial profiling of people of African descent | ஆபிரிக்க சந்ததியினர் தொடர்பான இனவாரி நடவடிக்கை |
racism, racial discrimination, xenophobia and related intolerance | இனவாதம், இனப் பாரபட்சம், வேற்றினக்காழ்ப்பு, அவற்றுடன் தொடர்புடைய சகிப்புணர்வீனம் |
reporting obligations under international instruments on human rights | அனைத்துநாட்டு ஆவணங்களுக்கமைய மனித உரிமைகள் தொடர்பாக அறிவிக்கும் கடப்பாடுகள் |
right of everyone to the enjoyment of the highest attainable standard of physical and mental health | எய்தக்கூடிய உச்ச நியம உடல்நலம், உளநலம் என்பவற்றை ஒவ்வொருவரும் துய்க்கும் உரிமை |
right to development | விருத்தி பெறும் உரிமை |
right to drinking water and sanitation | குடிநீர், துப்புரவு பெறும் உரிமை |
right to education | கல்வி கற்கும் உரிமை |
right to food | உணவு பெறும் உரிமை |
right to freedom of opinion and expression | சுதந்திர கருத்துரைப்பு, எடுத்துரைப்பு உரிமை |
right to restitution, compensation and rehabilitation for victims of grave violations of human rights and fundamental freedoms | மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் பாரதூரமாக மீறப்பட்டதன் விளைவாகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீளளிப்பு, நட்டஈடு, மறுவாழ்வு பெறும் உரிமை |
rights of persons belonging to national or ethnic, religious and linguistic minorities | தேசிய, இனக்குழும, மத, மொழிவாரிச் சிறுபான்மையோரின் உரிமைகள் |
rights of the child | பிள்ளையின் உரிமைகள் = மகவுரிமைகள் |
secretariat of the procedure established pursuant to Council resolution 1503 (XLVIII) | 1503 (XLVIII) இலக்க மன்றத் தீர்மானத்தின்படி அமைக்கப்பட்ட நடைமுறைமைக்கான செயலகம் |
Rome statute of the international criminal court | அனைத்துநாட்டு குற்றவியல் நீதிமன்றம் குறித்த உரோமாபுரி நியதிச்சட்டம் |
Social Forum (on economic, social and cultural rights) | (பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் குறித்த) சமூக அரங்கு |
special procedures mandate holders | சிறப்பு நடைமுறைகள் ஆணையர் |
special rapporteurs | சிறப்பு அறிக்கையாளர்கள் |
Standard Rules on the Equalization of Opportunities for Persons with Disabilities | மாற்றுத் திறனாளர்களுக்கான வாய்ப்புகளைச் சமப்படுத்தும் நியம விதிகள் |
structural racism = institutional racism= institutionalized racism = systemic racism | கட்டமைப்புவாரியான இனவாதம் |
structural adjustment | கட்டமைப்புவாரியான சீரீடு |
structural genocide | கட்டமைப்புவாரியான இனக்கொலை |
structural social mobility | கட்டமைப்புவாரியான சமூகப் பெயர்ச்சி |
structural violence | கட்டமைப்புவாரியான வன்முறை |
structural–functional paradigm | கட்டமைப்பு-செயற்பாட்டுப் படிமை |
structuralism | கட்டமைப்புவாதம் |
structuration | கட்டமைப்பீடு |
structure of argument | வாதத்தின் கட்டமைப்பு |
structured genocide | கட்டமைத்த இனக்கொலை |
Sub Commission on the Promotion and Protection of Human Rights | மனித உரிமைகள் மேம்பாடு, பாதுகாப்பு உப-ஆணையம் |
thematic procedures | உரைப்பொருள் வாரியான நடைமுறைமைகள் |
Third World Forum | மூன்றாம் உலக அரங்கு |
torture and other cruel, inhuman or degrading treatment or punishment | சித்திரவதை மற்றும் பிற கொடிய, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் செயல் அல்லது தண்டனை |
traffic in girls | சிறுமியர்-கடத்தல் வியாபாரம் |
traffic in persons = human trafficking | ஆட்கடத்தல் வியாபாரம் |
traffic in women | மகளிர்-கடத்தல் வியாபாரம் |
traffic in women and girls | பெண்கள்- கடத்தல் வியாபாரம் = மாதர், சிறுமியர் கடத்தல் வியாபாரம் |
unilateral coercive measures | ஒருதலைப்பட்சமான பலவந்த நடவடிக்கைகள் |
United Nations Decade for Human Rights Education (1995 2004) | ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கல்வித் தசாப்தம் (1995 2004) |
Universal Declaration of Human Rights | உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் |
universal periodic review mechanism | உலகளாவிய காலவாரியான மீள்நோக்குப் பொறிமுறை |
Vienna Declaration and Programme of Action | வியன்னா பிரகடனம் – நடவடிக்கை நிகழ்முறை |
Women’s equal ownership, access to and control over land and the equal rights to own property and to adequate housing | பெண்களுக்கான சம காணி உடைமை, காணி அடைகை, காணி ஆள்கை, சம ஆதன உடைமை உரிமைகள் மற்றும் நிறைவான வதிவக உரிமைகள் |
Women’s Rights are Human Rights! | மாதரின் உரிமைகள் மாந்தரின் உரிமைகளே! |
Working Group of Experts on People of African Descent | ஆபிரிக்க சந்ததியினர் தொடர்பான நிபுணர் செயற் குழுமம் |
Working Group on Indigenous Populations | சுதேச மக்கள் தொடர்பான செயற் குழுமம் |
World Conference against Racism, Racial Discrimination, Xenophobia and Related Intolerance | இனவாதம், இனப் பாரபட்சம், வேற்றினக்காழ்ப்பு, அவற்றுடன் தொடர்புடைய சகியாமைக்கு எதிரான உலக மாநாடு |
World Order Models Project. | உலக ஒழுங்கு மாதிரி உருவத் திட்டம் |
World Public Information Campaign for Human Rights | மனித உரிமைகள் குறித்த உலகளாவிய பொதுமக்கள் தகவல் இயக்கம் |
No comments:
Post a Comment