Search This Blog

ENGLISH-TAMIL PHRASES 

(SABBATICAL-SOLITUDE)

 

sabbatical leave

பணியிடை விடுப்பு

sabbatical, on

பணியிடை விடுப்பில்

sabotage, act of economic

பொருளாதார நாசவேலை

saboteur, a masked

முகமூடி அணிந்த நாசதாரி

safari park

சவாரிக் கானகம்

safe abortion

பத்திரமான  கருக்கலைப்பு

safe and reliable transportation

பத்திரமான, நம்பிக்கையான போக்குவரத்துச் சேவை

safe delivery

பத்திரமான மகப்பேறு

safe drinking limits

பத்திரமான மதுநுகர்வு  வரம்புகள்

safe female hood

பத்திரமான பெண்மை

safe haven

பத்திரமான புகலிடம்

safe motherhood

பத்திரமான தாய்மை

safe sex practices

பத்திரமான பாலுறவு முறைகள்

safe third country

பத்திரமான மூன்றாவது நாடு

safe womanhood

பத்திரமான பெண்மை

safety deposit box

பத்திர காப்புப் பெட்டி

sages and kings

முனிவர்களும் மன்னர்களும்

sailors and pilots

மாலுமிகளும் விமானிகளும்

salami slicing

சிறுகச்சிறுக ஒழிக்கும் உத்தி

sale by owner

உடைமையாளரின் விற்பனை

sale option

விற்பனைத் தெரிவு

sale, purchase, closure

விற்பனவு, கொள்வனவு, உறுதிமுடிப்பு

sale-leaseback

விற்றுக் குத்தகைக்குப் பெறுதல்

sales tax

விற்பனை வரி

saline soil reclamation; desalination

உவர்நீக்கம்

salon, hairdressing

சிகை ஒப்பனையகம்

salt water intrusion

உவர்நீர் ஊடுருவல்

salvage team

மீட்பு அணி

salvaged property

மீட்டெடுத்த உடைமை

same-day surgery

ஒரேநாள் அறுவைச் சிகிச்சை

sample drop-off

மாதிரிக்கூறு இட்டுச்செல்கை

sanction a tax increase

வரி அதிகரிப்புக்கு இசைவளி

sanction of the court

நீதிமன்றின் இசைவாணை

sanctions, economic

பொருளாதார முட்டுக்கட்டைகள்

sanctity of marriage

மணவாழ்வின் மகிமை (மகத்துவம்)

sanctity of law

சட்டத்தின் மகிமை (மகத்துவம்)

sanctuary cities

அடைக்கல மாநகரங்கள்

sanctuary states

அடைக்கல அரசுகள்

sanctuary to refugees, provide

அகதிகளுக்கு அடைக்கலம் அளி

sanctuary, wildlife

அடைக்கலக் கானகம்; கானுயிர் காப்புலம்

sanitary napkin; sanitary pad

விலக்கங்கி

sanitary sewage

உள்ளகக் கழிநீர்

sanitation worker

துப்புரவுப் பணியாளர்

sapiosexual

விற்பன்னர்பால் ஈர்ப்புடைய

sapiosexual, a

விற்பன்னர்பால் ஈர்ப்புடையவர்

sardonic tone

எள்ளிநகையாடும் தொனி

saturated fat

நிறைகொழுப்பு

saturated soil

நீர்நிறை மண்

satyr play

காம நாடகம்

savings account

சேமிப்புக் கணக்கு

savings bank

சேமிப்பு வங்கி

savings deposits

சேமிப்பு வைப்பு

scan the document

ஆவணத்தை கதிர்ப்படியெடு

scan the food

உணவ நோட்டமிடு

scan through the newspaper

செய்தித்தாளை புரட்டிப்பார்

scan, a brain

மூளைக் கதிர்ப்படிமம்

scanned copy

கதிர்ப்படிமப் பிரதி

scarred for life, live

வாழ்நாள் முழுவதும் வடுவுண்டு வாழு

scars of war

போரின் வடுக்கள்

scars, lifelong

வாழ்நாள் வடுக்கள்

scenario, a possible

சாத்தியப்பாடு

scene change

காட்சி மாற்றம்

schedule of insurance

காப்புறுதி அட்டவணை

schedule of property

உடைமை அட்டவணை

scheduled property

அட்டவணையிட்ட உடைமை

scheme, housing

வீடமைப்புத் திட்டம்

schism within the Church, a

திருச்சபையினுள் ஒரு பிளவு

scholars, literary

இலக்கியப் புலமையாளர்கள்

scholarship, literary

இலக்கியப் புலமை

scholarships for students

மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள்

school board trustee

பாடசாலைச் சபை அறங்காவலர்

school discipline

பாடசாலை ஒழுக்கம்

school of thought

சிந்தனைக் குழாம்

school terms

பாடசாலைத் தவணைகள்

school-age population

பாடசாலை செல்லும் வயதினர் தொகை

science journalism

அறிவியல் ஊடகத்துறை

science journalist

அறிவியல் ஊடகர்

science popularization award

அறிவியல் தகவல்பரப்பு விருது

scientific method

அறிவியல் முறை

scientific reasoning

அறிவியல் நியாயம்

scientific socialism

அறிவியற் சமூகவுடைமைவாதம்

scorched earth mentality

பகைப்புலம் அழிக்கும் உளப்போக்கு

scorched earth policy

பகைப்புலம் அழிப்புக் கொள்கை

scourge of politics

அரசியற் கொடுமை; அரசியல் என்னும் கொடுமை

scourge of war

போர்க் கொடுமை

screen memory

திரை நினைவு

screening smoke

மறைதிரைப் புகை

scrutiny, legal

சட்ட நுண்ணாய்வு; சட்டச் சல்லடை

scum collector

புறநீர்க் கழிவகற்றி

sea change

முழுமாற்றம்

searching fire

தேடல் வேட்டு

search warrant

தேடல் ஆணை

seasonal risk

பருவகாலக் கெடுதிவாய்ப்பு

seasonality, climatic

காலநிலையின் பருவவேறுபாடு

seaworthy boat

கடற்பயணத்துக்கு உகந்த படகு

second degree murder

சடுதி வன்மக் கொலை

second degree unintentional murder

சடுதி வன்மக் கருதாக்கொலை

second mortgage

இரண்டாவது ஈடு (அடைமானம்)

second person

முன்னிலை; இரண்டாம் ஆள்

second secretary

இரண்டாம் செயலாளர்

secondary air pollution

இரண்டாங்கட்ட வளிமாசு

secondary care

இரண்டாம்நிலைப் பராமரிப்பு

secondary education

இடைநிலைக் கல்வி            

secondary financing

இரண்டாம் நிதியீடு

secondary radiation

இரண்டாங்கட்டக் கதிர்வீச்சு

secondary school; high school

இரண்டாம்நிலைப் பாடசாலை

secondary sterility

இரண்டாம்நிலை மகப்பேறின்மை

second-hand smoke

பிறர் புகை 

second-hand smoking

பிறர் புகை உள்வாங்கல்

secrecy regime

ஒளிவுமறைவு ஆட்சிபீடம்

sectoral oversight committee

துறைசார் மேற்பார்வைக் குழு

secular humanism

உலகியல் மானுடத்துவம்; சமயச்சார்பற்ற மானுடத்துவம்

secular state

உலகியல் அரசு; சமயச்சார்பற்ற அரசு

secure aging

பத்திரமாக மூப்பெய்தல்

secured loan

ஈட்டுக் கடன்

securitization of communal differences for political ends

சமூக பேதங்களை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தல்

security grounds

பாதுகாப்புக் காரணங்கள்

security guard

கண்காவலர்

security risks

பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய கெடுதிகள்; பாதுகாப்புக்கு கெடுதி ஏற்படும் சாத்தியங்கள்

sedimentation tank

அடையல் குளம்

sedition

கலகம் புரிய ஏவுதல்

seditious libel

கலகம் புரிய ஏவும் வரைதூறு

seduce

வசப்படுத்தி உடலுறவுகொள்

seduction

வசப்படுத்தி உடலுறவுகொள்கை

seed money

வித்துப் பணம்

seek relief

நிவாரணம் கோரு

segregated account

புறம்பான கணக்கு

seizure memo

பறிமுதல் மடல்

seizure, The baby had a

குழந்தைக்கு வலித்தது (வலி வந்தது)

selective cutting

தேர்ந்து மரந்தறிப்பு

selective social interaction theory

தேர்ந்த சமூக ஊடாட்டக் கோட்பாடு

self-aggrandizement

அகங்காரப் பெருக்கம்

self care

தன்பராமரிப்பு; சுய பராமரிப்பு

self worth = self-esteem

தன்மானம்

self-actualization

தன்திறனெய்தல்; தன்வலுவெய்தல்

self-awareness

தன்விழிப்புணர்வு

self-care

தன்பராமரிப்பு

self-contradiction

தன்முரண்பாடு

self-contradictory argument

தன்முரண் வாதம்

self-control

தன்னடக்கம்

self-defeating argument

தன்தோல்வி  வாதம்: தனது தோல்விக்கு இட்டுச்செல்லும் வாதம்

self-defense

தற்காப்பு

self-determination

சுய நிர்ணயம்

self-discharge

தன் விருப்ப வெளியேற்றம்; தான் விரும்பி வெளியேறல் 

self-driving car

தானூர்திக் கார்

self-driving vehicle

தானூர்தி

self-efficacy

தன்னாற்றலுணர்வு

self-employment

சொந்தவேலை; சுயதொழில்

self-esteem

தன்மானம்

self-evident truth; axiom; axiomatic truth; e.g. Two parallel lines never intersect each other

வெளிப்படை மெய்; மெய்த்தளம் (எ+கா: இரு சமாந்தரக் கோடுகள் ஒன்றை ஒன்று ஊடறுக்கா)

self-fulfilling prophecy

தன் ஆரூடம் பலிக்குமாறு தானே செயற்படல்

self-fulfillment

தன்னுள நிறைவு

self-government

தன்னரசு

self-handicapping

தன் முடக்கம்

self-harm

தன்தீங்கு

self-help group

தன்னுதவிக் குழுமம்

self-idealization

தன் புகழ்பாடல்; தற்புகழ்ச்சி

self-image

தன்படிமம்

self-infliction by proxy

பதிலாள் மூலம் தன்வதை

self-injury = self-mutilation

தன்னூறு(பாடு)

self-medication

தன்மருந்தீடு

self-perception theory

தன் புலனறிவுக் கோட்பாடு

self-quarantine

தன் தனிமை

self-represented accused

தானே வாதாடும் பதில்வாதி

self-righteousness

தான் நேரியர் எனும் நிலைப்பாடு

self-rule

தன்னாட்சி

self-serving bias

தன் பலன்கருதிய பக்கச்சார்பு

self-sufficiency

தன்னிறைவு

self-will

தன்விருப்பு; சுயேச்சை

selfy, my

எனது சுயபடம்

semantic memory

சொற்பொருள் நினைவாற்றல்

semblance of evidence

சான்றின் சாயல்

semi-arid zone

பாதி வறண்ட வலயம்

semi-automatic rifle

பாதி தன்னியக்க துவக்கு

semi-automatic weapon

பாதி தன்னியக்க படைக்கலம்

semi-confined aquifer

பாதி மண்ணணைந்த நீர்தாங்கு படுகை

semi-detached house

பாதி இணைந்த வீடு; ஒருபக்கம் இணைந்த வீடு

seminar on solar power

கதிரொளி வலுவள கருத்தரங்கு

seminary, Catholic

கத்தோலிக்க குருமடம்

semi-skilled jobs

பாதித்தேர்ச்சி வேலைகள்

Senior Tamils Centre

முது தமிழர் நிலையம்

senior citizen

முதுகுடியாளர்

senior student

முதுமாணவர்

sensate focus technique

உணர்வுகளில் புலன்செலுத்தும் உத்தி

sense of unfairness

அநீத உணர்வ

senses and the intellect, the

புலன்களும் நுழைபுலமும்

sensibilities, religious

சமய மென்னுணர்வுகள்

sensible readers

அறிவார்ந்த வாசகர்கள்

sensitive documents

உணர்ச்சிவசப்படுத்தும் ஆவணங்கள்

sensitive mind

கூர்ந்துணரும் உள்ளம்; உணர்ச்சிவசப்படும் உள்ளம்

sensitive plant = touch-me-not

தொட்டால் சிணுங்கி

sensitive to criticism, a writer

திறனாய்வு கண்டு உணர்ச்சிவசப்படும் எழுத்தாளர்

sensitivity and awareness

கூருணர்வும் விழிப்புணர்வும்

sensitivity training

கூருணர்வுப் பயிற்சி

sensory disabilities

புலன் வலுவீனங்கள்

sensory extinction

புலனொடுக்கம்

sensory impairment

புலனுணர்வுத் தடங்கல்

sensory memory

புலனுணர்வு நினைவாற்றல்

sensory nerves

புலனுணர்வு நரம்புகள்

sensory physiology

புலனுணர்வுசார் உடற்றொழிலியல்

sensual pleasure

புலனின்பம்; சிற்றின்பம்

sensuous painting

புலனுகர்ச்சி ஓவியம்

sentence to life

வாழ்நாள் சிறைத்தண்டனை விதி

sentient animals

புலனுணர்வு விலங்குகள்

sentimental value

மென் உணர்வுப் பெறுமதி

sentiments, religious

சமய மென்னுணர்வுகள்

separating claims

கோரிக்கைகளைப் புறம்பாக்கல்

separation anxiety disorder

பிரிவுப் பதைப்புக் கோளாற

separation (division) of powers

வலு வேறாக்கம்; அதிகாரப் பிரிவீடு

separation-individuation theory

தனித்துவ உணர்வுக் கோட்பாடு

septic tank

ஊழ்த்தொட்டி; கழிவுத்தொட்டி

septic wound

ஊழ்க்காயம்

sequential retirement

ஒருவர் பின்னொருவராக ஓய்தல்

sequester a jury

யூரர்குழுவை தனிமைப்படுத்து

sequestered jury

தனிமைப்படுத்திய யூரர்குழு

serendipity

எதிர்பாரா இன்பம்

sergeant-at-arms

படைக்கலச் சேவிதர்

serial position effect

தொடர் நிலை விளைவு

serial processes

தொடர் படிமுறைகள்

serious criminality

கடுங் குற்றச்செயற்பாடு

serve summons

அழைப்பாணை சேர்ப்பி

set aside

புறந்தள்ளு; உதறித்தள்ளு

settlement of a debt

படுகடன் தீர்ப்பனவு

settlement statement

இணக்கக் கூற்று

seven-day review

ஏழு-நாள் மீள்நோக்கு

sever diplomatic relations

சூழ்வியல் உறவைத் துண்டி

severance (pay)

பணிநீக்கக் கொடுப்பனவு

severance of diplomatic relations

சூழ்வியல் உறவு துண்டிப்பு

severe intellectual disability

கடும் அறிவாற்றல் குறைபாடு

severe mental illnesses

கடும் உளநோய்கள்

sewage effluent standards

கழிவுநீர்ம நியமங்கள்

sewage farm

கழிநீர்ப் பண்ணை

sewage lagoon

கழிநீர்த் தேக்கம்

sewerage network

சுருங்கைத்தொகுதி; கழிகால்தொகுதி

sexual advances

வம்பு; சரசம்

sex(ual) tourism

சிற்றின்பச் சுற்றுலா; பாலுறவுச் சுற்றுலா

sex(ual) trafficking

பாலடிமை வியாபாரம்

sex composition

பால் கோப்பு

sex drive

பாலுந்தல்

sex ratio

பால் விகிதம்

sex role

பால் வகிபாகம்

sex trade worker

பாலியல் தொழிலாளர்

sex trafficking

பாலியல் வியாபாரம்

sex workers

பாலியல் பணியாளர்கள்

sexism in language

மொழியில் பால்மைப் பாகுபாடு (ஏற்றத்தாழ்வு)

sexist stereotypes

பால்மைப் படிவார்ப்புகள்

sex-selective abortion

பால்தெரிவுக் கருக்கலைப்பு

sex-specific marriage rate

பால்குறித்த மணவீதம்

sexting

பாலியல் அலைபேசி அஞ்சல்

sextortion

இணையப் பாலியல் மோசடி

sexual abuse

பாலியல் துர்ப்பிரயோகம்

sexual and gender-based violence against refugees, returnees and internally displaced persons

அகதிகள், மீள்வோர், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மீது பாலியல்வாரியான, பால்மைவாரியான வன்முறை

sexual assault

பாலியல் தாக்குதல்

sexual dysfunction

பாலியல் பிறழ்வு

sexual ethics

பாலியல் ஒழுக்கம்

sexual excitement

பாலியல் பூரிப்பு

sexual exploitation

பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல்

sexual harassment

பாலியல் தொந்தரவு

sexual intercourse

பாலுறவு; புணர்ச்சி

sexual interference

பாலியல் இடையூறு

sexual orientation (preference) gay / lesbian / straight / bisexual / asexual

பாலியல் நாட்டம் (ஒரேபாலி / பெண்ணி / எதிர்பாலி / இருபாலி / பாலிலி)

sexual partner

பாலுறவுத் துணைவர்

sexual relationship

பாலுறவு

sexual repression

பாலுணர்ச்சி அடக்கல்

sexual response cycle

பாலியல் பதில்வினை வட்டம்

sexual rights

பாலியல் உரிமைகள்

sexual slavery

பாலியல் அடிமைத்தளை

sex(ual) trafficking

பாலுறவு அடிமை வியாபாரம்

sexual urge

பாலியல் வேட்கை

sexual violence against refugees

அகதிகள் மீதான பாலியல் வன்முறை

sexuality

பாலியல் நாட்டம்

sexually abused children

பாலியல்வாரியாகத் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள்

sexually active individual

நிகழ்பாலுறவாளர்

sexually transmitted disease

பாலுறவு கடத்து நோய்

shadow cabinet

நிழல் அமைச்சரவை

share market

பங்குச் சந்தை

shared custody

பகிர்வுக் கட்டுக்காப்பு (கூட்டுக் கட்டுக்காப்புக்கு உட்பட்ட பிள்ளைகளை பெற்றோர் ஆள்மாறி வைத்திருத்தல்)

shared housing

பகிர்வகம்

sheet erosion

தகட்டு மண்ணரிப்பு

shell companies

கோது வணிக நிலையங்கள்

shell, artillery

பீரங்கிக் குண்டு

shelled prawn

கோதுநீக்கிய இறால்

shellproof shelter

குண்டுவேட்டுக் காப்பிடம்

sheltered housing

காப்பகம்

shift work

முறைமாற்று வேலை

shifting agriculture

பெயர்ச்சி வேளாண்மை

shifting cultivation

பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை

shipwreck, report of the

அக்கப்பாடு (கப்பல்விபத்து)பற்றிய அறிக்கை

short attention span

புலன்செலுத்தும் நேரக் குறைவு

short story

சிறுகதை

short-term aged care

குறுமூப்புகாலப் பராமரிப்பு

short-term care; respite care

குறுங்காலப் பராமரிப்பு

short-term interest rate

குறுந்தவணை வட்டி வீதம்

short-term memory

குறுங்கால நினைவு

short-term reserves

குறுந்தவணைச் சேமநிதி

show business

காட்சிக்கலை

show cause hearing; bail hearing

காரணம் காட்டும் விசாரணை; பிணை விசாரணை

show-cause notice; bail notice

காரணம் காட்டல் அறிவித்தல்; பிணை விசாரணை அறிவித்தல்

show-cause order; bail order

காரணம் காட்டல் கட்டளை; பிணை விசாரணைக் கட்டளை

show of force

படைபலம் காட்டல்

shrimps and prawns

இறால் வகைகள்

sick role

நோயாளர் வகிபாகம்

Siddha Medicine

சித்த வைத்தியம்

sight translation

பார்வை மொழிபெயர்ப்பு; பார்த்து மொழிபெயர்த்தல்

sign here

இங்கே ஒப்பமிடு

sign language

சைகை மொழி

signature card

கையொப்ப அட்டை

signs of stress

உளைச்சலின் அறிகுறிகள்

signs of trauma to the body

உடலூறுபட்ட அறிகுறிகள்

silent killer, Diabetes is a

நீரிழிவு ஓர் இரகசிய உயிர்கொல்லி

silent majority

அமைதிகாக்கும் பெரும்பான்மை

silhouette, in

நிழலுருவில்

silo mentality

தகவல் பதுக்கும் மனப்பான்மை

silver bullet

உடனடித் தீர்வு

simple interest

எளிய வட்டி

simple majority

சாதாரண பெரும்பான்மை

simple statement

எளிய கூற்று (எ-கா: நான் இளநீர் பருகினேன்)

simulated childbirth

போலி மகப்பேறு

simultaneous interpreting

உடனிகழ் மொழிபெயர்ப்பு

sin of omission

தவிர்க்கைப் பாவம்

sin qua non; without which not; an indispensable condition

இன்றியமையாதது

sincere thanks

உளமார்ந்த நன்றி

sine die; without fixing a date

காலவரையறையின்றி; தேதி குறிப்பிடாது

single blind peer review

ஆக்கியோரால் இனங்காணப்படாத ஒப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் மீள்நோக்கு

single delivery

ஒற்றை மகப்பேறு

single house

தனி வீடு

single mother

தனித்தாய்

single (sole / lone) parent

தனிப் பெற்றார்

single parenthood

தனிப் பெற்றாரியம்

single room occupancy hotel

தனியறைவாச விடுதியகம்

single status

மணமாகாத் தகுநிலை

single transferable vote

தனிமாற்று வாக்கு

single-party system

தனிக்கட்சி முறைமை

singulate mean age at marriage

50 வயதுக்குமுன் மணம் புரிவோருள்  மணமாகாதோர் அவ்வாறிருக்கும் சராசரிக் காலம்

sinkhole, a deep

ஆழ்நிலப் போறை

sinking fund

கடன்கரைப்பு நிதியம்

sitting service

இடைநேரச் சேவை

situation comedy

நிலைவர நகைச்சுவை நிகழ்ச்சி

situationism; situation ethics

நிலைவர ஒழுக்கம்

skateboarding, game of

உருள்தட்டுவலம்

skating, game of

உறைபனிச்சறுக்கு

skiing, game of

பனிச்சறுக்கு

skill development

தேர்ச்சி விருத்தி

skilled jobs

தேர்ச்சி வேலைகள்

slash-and-burn agriculture

காடழித்துப் பயிரேற்றல்

slaughterhouse

கொல்களம்

sleep apnea

உறக்க மூச்சுத்திணறல்

sleep deprivation

உறக்கக்குறைவு

sleep terror disorder

திடுக்கிட்டு விழிக்கும் கோளாறு

slippery slope argument

வழுக்குச் சரிவு வாதம்

slow sand filtration

மெது மணல்நீர் வடிகட்டல்

sludge digestion

அடிக்கூள செரிமானம்

sludge disposal

அடிக்கூளம் அகற்றல்

slush fund

இலஞ்ச சேம நிதியம்

small business tax

சிறு வணிக வரி

Small Claims Court

சிறு கோரிக்கை நீதிமன்று

small designated public sector organization

அரசுத்துறை நிர்ணயித்த சிற்றமைப்பு

small organization

சிற்றமைப்பு

small print, the

நுட்பநுணுக்கம்

smoke damage

புகைபடு சேதம்

smoke screen

புகைத்திரை

smoking gun (pistol)

திட்டவட்டமான தடயம்

snake venom

பாம்பு நஞ்சு

snap election

திடீர் தேர்தல்

soap opera

தொடர்க்காட்சி

social adaptation

சமூக நியமத்துக்கு இசைவுடைமை

social anxiety disorder

சமூகம் குறித்த பதைப்புக்   கோளாறு

social bubble

புழங்கு வட்டம்; சமூக குமிழ்

social capital

சமூக வளம்

social categorization

சமூகவகுதியாக்கம் (வகுதியீடு)

social change

சமூக மாற்றம்

social character

சமூக குணவியல்பு

social class

சமூக வர்க்கம்

social conflict

சமூக முரண்பாடு

social construction of reality

சமூக நடப்புநிலைக் கட்டுமானம்

social contract

சமூக ஒப்பந்தம்

social control

சமூக கட்டுப்பாடு

social control system

சமூக கட்டுப்பாட்டு முறைமை

social conventions

சமூக வழக்காறுகள்

social democracy

சமூக குடியாட்சி

social democrat

சமூக குடியாட்சிவாதி

social demography

சமூக குடிவிபரவியல்

social development

சமூக விருத்தி

social distancing

விலகி நடமாடல்

social divisions

சமூக பிரிவினைகள்

social dysfunction

சமூக குலைவு

social epidemiology

சமூக அறிவுநெறியியல்

social etiquette

சமூக ஒப்பாசாரம்

social exclusion

சமூக விலக்கு

social forum

சமூக அரங்கு

social function

சமூகச செயற்பாடு

social gerontology

சமூக மூப்பியல்

social group

சமூகக் குழுமம்

social group persecution

சமூக குழுமக் கொடுமை

social host liability; liquor liability

விருந்தோம்புநர் பொறுப்பு; மதுவழங்குநர் பொறுப்பு

social housing

சமூகநல வீட்டுவசதி

social identity

சமூக அடையாளம்

social insurance

சமூகநலக் காப்புறுதி

social integration

சமூக ஒருங்கிணைப்பு

social intelligence

சமூகநுண்மதி

social interaction

சமூக ஊடாட்டம்

social isolation

சமூகத்திலிருந்து தனிமைப்படுதல்

social justice

சமூக நீதி

social marginalization

சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலை

social media

சமூக ஊடகங்கள்

social mobility

சமூகநிலைபெயர்வு

social movement

சமூக இயக்கம்

social network

சமூக வலையம்

social norms

சமூக வழப்பங்கள்

social phobia

சமூகவெருட்சி

social psychology

சமூக உளவியல்

social role

சமூக வகிபாகம்;  சமுதாயத்தில் வகிக்கும் பங்கு

social science

சமூக அறிவியல்

social skills

சமூகத்தில் ஊடாடும் திறன்கள்

social stratification

சமூகப் படுகையாக்கம்

social structure

சமுதாயக் கட்டமைப்பு

social subordination

சமூகத்துக்கு அடிப்பட்ட நிலை

social support (welfare) services

சமூக நன்னல சேவைகள்

social support system

சமூக ஆதரவுக் கட்டுக்கோப்பு

social welfare benefits

சமூக நன்னலங்கள்

social-conflict paradigm

சமூக முரண்பாட்டுப் படிமை

socialized medicine; free medicine

இலவச மருத்துவம்

socialism in one country

ஒரு நாட்டினுள் சமவுடைமை

socialite, a

நாகரிகமணி

socialization, process of

சமூகமயமாக்கப் படிமுறை

social-learning theory

சமூகத்திடம் கற்றல் கோட்பாடு

social-learning therapy

சமூகத்திடம் கற்றல் சிகிச்சை

societal protection

சமூகம் அளிக்கும் பாதுகாப்பு

society for all ages

அனைத்து வயதினருக்குமான சமூகம்

society wardship order

சிறார் பாதுகாவல் கட்டளை; சிறாருக்கான சமுதாய பாதுகாவல் கட்டளை

sociocultural evolution

சமூக பண்பாட்டுக் கூர்ப்பு

socio-economic characteristics

சமூக-பொருளாதார குணவியல்புகள்

socio-economic status

சமூக பொருளாதாரத் தகுநிலை

soft detergents

மென் சலவைப்பொருட்கள்

soft drink

மென்பானம்

soft pesticides

மென் பீடைகொல்லிகள்

soft power (Joseph Nye)

மென்வலு; மென்மைவலு (பலவந்தம், படைபலம்பயன்படுத்துவதை விடுத்து இணங்கத்தூண்டும் நடவடிக்கைகள் மூலம் மக்களை ஈர்க்கும் கொள்கை)

soil aeration

மண் வளியூட்டம்

soil conditioner

மண் நெகிழ்த்தி

soil conservation

மண் பேணல்

soil creep

மண் ஊர்வு

soil erosion

மண்ணரிப்பு

soil erosion index

மண்ணரிப்புச் சுட்டு

soil injection

கீழ்மண் களைகொல்லியீடு

soil morphology

மண் உருவவியல்

soil sealing

மண் மறைப்பு

solar power

கதிரொளி வலு

solar powered plane

கதிரொளிவலு வானூர்தி

soldier

போர்வீரர்; படைவீரர்

sole proprietor

தனி உடைமையாளர்

solemn affirmation

பற்றுணர்வுடன் கூடிய உறுதிமொழி

solemn oath

பற்றுணர்வுடன் கூடிய சத்தியம்

solemnly affirm

பற்றுணர்வுடன் உறுதியளி

solicit funds

நிதி கோரு

soliciting, the crime of

உடலுறவுக்கு  இசைந்து பேரம்பேசும் குற்றம்

Solicitor General

தலைமை மன்றாடுநர்; மன்றாடுநர் அதிபதி

solicitor undertaking

சட்டவாளர் பொறுப்பேற்பு

solid waste; refuse

திண்மக்கழிவு

solid waste disposal

திண்மக் கழிவகற்றல்

solid waste management

திண்மக்கழிவு கையாள்கை

solidarity; comradeship; camaraderie

தோழமை

solitary confinement

தனிக்காவல்; தனிச்சிறைவாசம்

solitude, pleasure of

ஏகாந்த இனிமை

No comments:

Post a Comment