99 தமிழ் மலர்கள்
குறிஞ்சிப்பாட்டு
புலவர்: கபிலர்
திணை: குறிஞ்சி
துறை: அறத்தொடு நிற்றல்
பா: ஆசிரியப்பா
வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.
99 தமிழ் மலர்கள் | COMMON NAMES | BOTANICAL NAMES |
1. அடும்பு | goat foot vine | Ipomoea Pes-caprae |
2. அதிரல் | hog creeper | Derris Scandens |
3. அவரை | hyacinth bean | Dolichos Lablab |
4. அனிச்சம் | blue/scarlet pimpernel | Anagallis Arvensis |
5. ஆத்தி | yellow orchid | Bauhinia Tomentosa |
6. ஆம்பல்; அல்லி | white water lily | Nymphaea Lotus |
7. ஆரம்; சந்தனம் | sandalwood | Santalum Album |
8. ஆவிரை | tanner's senna | Cassia Auriculata |
9. இலவம் | red-flowered silk-cotton tree | Bombax Malabaricum |
10. ஈங்கை | Himalayan mimosa | Mimosa Rubicaulis |
11. உந்தூழ்; பெருமூங்கில் | Indian thorny bamboo | Bambusa Arundinacea |
12. எருவை; நாணல் | small bulrush | Typha Angustata |
13. எறுழ் | paper flower climber | Calycopteris Floribunda |
14. கஞ்சங்குல்லை | Indian hemp; marijuana | Cannabis Sativa |
15. கரந்தை | East Indian globe thistle | Sphaeranthus Indicus |
16. கருங்குவளை; மணிக்குலை | blue nelumbo | Nelumbo Nucifera |
17. கருவிளம் | butterfly pea | Clitoria Ternatea |
18. காஞ்சி; ஆற்றுப்பூவரசு | false white teak | Mallotus nudiflorus |
19. காந்தள்; செங்காந்தள் | red glory lily | Gloriosa Superba |
20. காயா; காசா | ironwood | Memecylon Edule |
21. காழ்வை; அகில் | eagle wood | Aquilaria Agallocha |
22. குடசம்; வெட்பாலை | Indrajao | Holarrhena Antidysenterica |
23. குரவம் | Asiatic tarenna | Webera Corymbosa |
24. குரீஇப் பூளை | mountain top grass | Aerva Lanata |
25. குருக்கத்தி; மாதவிக்கொடி | hiptage | Hiptage Madablota |
26. குருகிலை; முருக்கிலை | flame of the forest | Butea Frondosa |
27. குருந்தம்; புனவெலுமிச்சை | wild lime | Atalantia Monophylla |
28. குவளை | fragrant water lily | Nymphaea Odorata |
29. குளவி; காட்டுமல்லி; பன்னீர்; மரமல்லிகை | Indian cork tree; tree jasmine | Millingtonia Hortensis |
30. குறிஞ்சி | square branched conehead | Strobilanthes Kunthiana |
31. குறுநறுங்கண்ணி குன்றி; குன்னி முத்து | coral bead vine; crab’s eye | Abrus Precatorius |
32. கூவிரம் | sacred garlic pear | Crateva Religiosa |
33. கூவிளம்; வில்வம் | bael | Aegle Marmelos |
34. கைதை; தாழ்; தாழம்பூ | fragrant screw-pine | Pandanus Odoratissimus |
35. கொகுடி | Indian jasmine | Jasminum Pubescens |
36. கொன்றை | Indian laburnum | Cassia Fistula |
37. கோங்கம்; இலவு | golden silk cotton | Cochlospermum Gossypium |
38. கோடல்; வெண்காந்தள் | white glory lily | Gloriosa Superba |
39. சண்பகம் | champak | Michelia Champaca |
40. சிந்துவாரம்; கருநொச்சி | five leaved chaste tree | Vitex Negundo |
41. சிறுசெங்குரலி; கருந்தாமக்கொடி | water chestnut | Trapa Bispinosa Roxb |
42. சிறுபூளை | mountain knot grass | Aerva Lanata |
43. சுள்ளி; மரவம்; மராமரம் | porcupine flower | Barleria Prionitis |
44. சூரல் | wild jujube | Ziziphus Oenoplia |
45. மாரோடம்; செங்கருங்காலி | red catechu | Acacia Sundra |
46. செங்கொடுவேரி | scarlet leadwort | Plumbago Rosea |
47. செம்மல்; சாதி | Spanish jasmine | Jasminum Grandiflorum |
48. செருந்தி | golden champak | Ochna Squarrosa |
49. செருவிளை; வெண்காக்கணம் | butterfly pea | Clitoria Ternatea |
50. சேடல்; பவழமல்லி | coral jasmine | Nyctanthesis Arbor-tristis |
51. ஞாழல்; புலிநகக்கொன்றை | tiger claw tree | Caesalpinia Cucullata |
52. தணக்கம்; தணக்கு | helicopter tree | Gyrocarpus Americanus |
53. தளவம்; செம்முல்லை | red kunda | Jasminum Polyanthum |
54. தாமரை | lotus | Nelumbo Nucifera |
55. தாழை; தென்னம்பூ | coconut flower | Cocos Nucifera |
56. திலகம்; மஞ்சாடி | red sandalwood | Adenanthera Pavonina |
57. தில்லை | blinding tree | Excoecaria Agallocha |
58. தும்பை | bitter toombay | Leucas Aspera |
59. துழாய் | sacred basil | Ocimum Sanctum |
60. தேமா | sweet mango | Mangifera Indica |
61. தோன்றி; செங்காந்தள் | glory lily | Gloriosa Superba |
62. நந்தி(யாவட்டம்) | crape jasmine | Tabernaemona Coronaria |
63. நரந்தம் | Malabar lemon grass | Cymbopogon Flexuosus |
64. நள்ளிருணாறி; இருள்வாசி; இருவாட்சி | iruvatchi jasmine | Jasminum Sambac |
65. நறவம்; நறைக்கொடி | Indian lavanga | Luvunga Scandens |
66. நாகம்; நாகப்பூ | Ceylon ironwood | Mesua Ferrea |
67. நெய்தல் | red and blue water lily | Nymphaea Stellata |
68. பகன்றை; சிவதை | Indian jalap | Operculina Turpethum |
69. பசும்பிடி; பச்சிலை | Mysore gamboge | Garcinia Xanthochymus |
70. பயினி | Indian copal | Vateria Indica |
71. பலாசம்; புரசை | flame of the forest | Butea Frondosa |
72. பாங்கர் | toothbrush tree | Salvadora Persica |
73. பாதிரி | yellow-flowered fragrant trumpet | Stereospermum Chelonoides |
74. பாரம்; பருத்தி | Indian cotton plant | Gossypium Herbaceum |
75. பாலை | pala indigo plant | Wrightia Tinctoria |
76. பிடவம் | bedaly emetic nut | Randia Malabarica |
77. பிண்டி; அசோகு | asoka | Saraca Indica |
78. பித்திகம்; பித்திகை; பிச்சி | wild jasmine | Jasminum Angustifolium |
79. பீரம்; பீர்க்கம் | sponge gourd; strainer vine; ridge gourd | Luffa Acutangula |
80. புழகு | crown flower | Calotropis Gigantea |
81. புன்னாகம் | poon | Calophyllum Elatum |
82. புன்னை | mast wood | Calophyllum Inophyllum |
83. போங்கம் | horse eye beans | Ormosia Travancorica |
84. மணிச்சிகை; செம்மணி | purple heart glory | Ipomoea Sepiaria |
85. மரவம் | porcupine flower | Barleria Prionitis |
86. மருதம் | Indian laurel | Terminalia Elliptica |
87. முல்லை | juhi | Jasminum Auriculatum |
88. மௌவல் | poet jasmine | Jasminum Officinale |
89. வகுளம்; மகிழம் | Spanish cherry | Mimusops Elengi |
90. வஞ்சி | rattan palm | Calamus Rotang |
91. வடவனம் | holy basil | Ocimum Sanctum |
92. வழை; சுரபுன்னை | long-leaved two-sepalled gamboge | Ochrocarpus Longifolius |
93. வள்ளி | five leaf yam | Dioscorea Pentaphylla |
94. வாகை | woman's tongue | Albizia Lebbeck |
95. வாழை | plantain | Musa Paradisiaca |
96. வானி | spindle | Euonymus Dichotomous |
97. வெட்சி | scarlet Ixora | Ixora Coccinea |
98. வேங்கை | Indian kino | Pterocarpus Marsupium |
99. வேரல்; சிறுமூங்கில் | Nilgiri bamboo | Arundinaria Whitianga |
No comments:
Post a Comment