ENGLISH-TAMIL PHRASES (D)
danger to public safety |
பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து |
dark comedy = dark humour = black humour = black comedy |
அவலநகை(ப் படைப்பு) |
dark energy |
இருண்மை வலு |
dark matter |
இருண்மைச் சடம் |
Dark Web, the |
இருண்மை இணையம் |
data bank = database |
தரவுத் தளம் |
data mining |
தரவகழ்வு |
date line |
திகதி-இட வரி |
date rape |
உடன்போக்கு வன்புணர்ச்சி |
dating partner |
உடன்போக்குத் துணைவர் |
dating relationship |
உடன்போக்கு உறவு |
day care |
பகல்வேளைப் பராமரிப்பு |
day care centre |
பகல்வேளைப் பராமரிப்பகம் |
day hospital |
பகல்வேளை வைத்தியசாலை |
day surgical centre |
பகல்வேளை அறுவைச் சிகிச்சை நிலையம் |
day surgical clinic |
பகல்வேளை அறுவைச் சிகிச்சைக்களம் |
day-care centre for the elderly |
பகல்வேளை முதியோர் பராமரிப்பகம் |
daytime sleepiness |
பகல்தூக்க மயக்கம் |
de facto enumeration |
தரிப்பிடவாரிக் கணக்கெடுப்பு |
de facto ruler |
நிகழ்நிலை ஆட்சியாளர்; செயலளவிலான ஆட்சியாளர் |
de jure enumeration |
வசிப்பிடவாரிக் கணக்கெடுப்பு |
de jure ruler |
சட்டநிலை ஆட்சியாளர்; பெயரளவிலான ஆட்சியாளர் |
de novo |
பழையபடி |
death benefit |
இறப்பு உதவிப்படி |
death penalty |
இறப்புத் தண்டனை |
death rattle |
சேடம் |
death row, prisoners on |
இறப்புத் தண்டனைக் கைதிகளின் சிறைக்கூடம் |
death sentence |
இறப்புத் தண்டனைத் தீர்ப்பு |
death spiral |
வீழ்ச்சிச் சூறை |
death squad |
கொலையணி |
debit and credit account |
பற்று வரவுக் கணக்கு |
debit card |
பற்றுமதி அட்டை |
debit note |
பற்றுமதிக் குறிப்பு |
debriefing team |
விபரம் வினவும் அணி |
debris removal |
சிதிலம் அகற்றல் |
debt financing |
படுகடன் நிதியீடு |
debt instrument |
படுகடன் ஆவணம் |
debt service |
படுகடன் செலுத்துமதி |
debt servicing |
படுகடன் செலுத்தல் |
debt slavery |
படுகடன் அடிமை |
debt sustainability |
படுகடன் தீர்க்கும் வல்லமை; தான் பட்ட கடனை தானே தீர்க்கும் வல்லமை |
debt trap |
படுகடன் பொறி |
decadent society |
சீரழிந்த சமூகம்; சீர்கெட்ட சமூகம் |
deceptive statement |
ஏமாற்றும் கூற்று |
deciduous forest |
இலையுதிர்க்காடு |
decipher |
தெரிகூற்றாக்கு |
decision aversion |
முடிபு தவிர்ப்பு |
decision making |
முடிபெடுத்தல் |
decision rendered orally |
வாய்மொழி வழங்கிய முடிபு |
declaration on environment and development |
சூழல்-அபிவிருத்திப் பிரகடனம் |
declaration on the human environment |
மனித சூழல் பிரகடனம் |
declarative memory |
விபர நினைவாற்றல் |
declare a contract void |
ஒப்பந்தம் வெற்றானதென வெளிப்படுத்து |
decode |
ஆள்மொழியாக்கு; எடுத்துரை |
decommissioning of arms |
படைக்கலம் ஒப்படைப்பு; ஆயுத ஒப்படைப்பு |
decommunization, process of |
பொதுவுடைமைக் கட்டமைப்பை களையும் படிமுறை |
decomposer organism |
உருச்சிதைக்கும் அங்கி |
decriminalize the drug |
போதைமருந்து நுகர்வை குற்றமற்றதாக்கு |
decriminalization of the drug |
போதைமருந்து நுகர்வை குற்றமற்றதாக்கல் |
decree absolute |
அறுதித் தீர்வை (கட்டளை) |
decree nisi |
பின்னுறுதித் தீர்வை (கட்டளை) |
decrypt |
தெரிகுறியாக்கு |
deductive argument |
உய்த்தறி வாதம் |
deductive logical thought |
உய்த்தறி தருக்க சிந்தனை |
deductive reasoning |
உய்த்தறி நியாயம் |
deed in lieu of foreclosure |
அறுதிக்குப் பதிலுறுதி |
deeds of gift |
கொடை உறுதிகள் |
deep ecology = holistic ecology |
முழுமைச் சூழலியல் |
deep learning |
செயற்கை நுண்ணறிவுக் கற்கை |
deep state (A body of people, typically influential members of government
agencies or the military, believed to be involved in the secret manipulation
or control of government policy) |
உள்ளரசுத் தரப்பு (அரசாங்க திணைக்களங்களை அல்லது படைத்துறையைச் சேர்ந்த
செல்வாக்கு மிகுந்த தரப்பினர்; அத்தகைய தரப்பினர்
அரசாங்கத்தின் கொள்கையை மறைவாகத் திரித்து அல்லது கட்டுப்படுத்திக் கையாள்வதாக
நம்பப்படுகிறது) |
deep vein thrombosis |
ஆழ்நாளக் குருதியடைப்பு |
deepfake |
ஒலியொளி மாறாட்டம்; மாறாட்ட ஒலியொளி |
defamation of religions |
சமய அவதூறு |
default party = party in default |
கடப்பாடுதவறிய தரப்பு |
default hearing |
கடப்பாட்டுத்தவறு விசாரணை |
default judgement |
எதிர்வாதமற்ற தீர்ப்பு |
default, win the case by |
எதிர்வாதமற்ற வெற்றி ஈட்டு |
default, win the competition by |
போட்டியின்றி வெற்றி ஈட்டு |
defence expenditure |
பாதுகாப்புச் செலவினம் |
defence of provocation |
ஆத்திரமடைந்து ஆற்றிய செயல் என்னும் பதில்வாதம் |
defend all the accused |
குற்றஞ்சாட்டப்பட்டோர் அனைவருக்காகவும் பதில்வாதம் புரி |
defence mechanism |
பாதுகாப்புப் பொறிமுறை |
defensive approach to criticism |
குறைகூறலை எதிர்த்துரைக்கும் அணுகுமுறை; விமர்சனத்தை எதிர்த்துரைக்கும் அணுகுமுறை |
defensive government, a critical media and a |
குறைகூறும் ஊடகங்களும் எதிர்த்துரைக்கும் அரசாங்கமும்; விமர்சிக்கும் ஊடகங்களும் எதிர்த்துரைக்கும் அரசாங்கமும் |
defensive coastal area |
பாதுகாப்புக் கரையோரப் பரப்பு |
defensive environmental cost |
சூழல் பாதுகாப்புச் செலவு |
defensive offensive |
பாதுகாப்புத் தாக்குதல் |
defensive position |
பாதுகாப்பு நிலை |
defensive sea area |
பாதுகாப்புக் கடற் பரப்பு |
defensive zone |
பாதுகாப்பு வலயம் |
deferred premium payment plan |
பிற்போட்ட கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம் |
deferred tax |
பிற்போட்ட வரி |
defined benefit |
வரையறுத்த உதவிப்படி |
defined contribution |
வரையறுத்த உதவுதொகை |
defining moment |
தீர்க்கமான தருணம் |
defunding the police |
காவல்துறையைக் குறுக்கல் |
degenerate war |
இழிபோர்; குடிமக்களுக்கு
எதிரான போர் |
degradation of environmental assets |
சூழல் வளக்கேடு |
dehumanization of prisoners |
கைதிகளை விலங்குநிலைக்குத் தாழ்த்தல் |
dehumanize prisoners |
கைதிகளை விலங்குநிலைக்குத் தாழ்த்து |
dehumanizing us, Technology is |
தொழினுட்பவியல் எமது மானுடத் தன்மையைக் களைகிறது |
déjà vu |
ஏற்கெனவே பட்டறிந்த உணர்வு |
delaying action |
தாமதிப்பு நடவடிக்கை |
delaying position |
தாமதிப்பு நிலை |
delectable smell of freshly baked bread |
சுடுபாணின் சுவைமணம் |
delegate authority |
அதிகாரத்தை கையளி |
delegates, a few |
ஒருசில பேராளர்கள் |
delegation of authority |
அதிகாரம் கையளிப்பு |
delegation, a |
தூதுக்குழு; பேராளர் குழு |
delinquency, juvenile |
இளையோர் நெறிபிறழ்வு |
delinquent teenager |
நெறிபிறழும் பதின்ம வயதினர் |
delirium tremens |
சன்னி நடுக்கம் |
delusion |
மதிமயக்கம்; மலைவு |
delusion of grandeur = grandiose delusion |
மாட்சி மலைவு |
delusion of reference |
சுற்றயல் மதிமயக்கம் |
delusional disorder |
மதிமயக்கக் கோளாறு |
delusional jealousy |
மதிமயக்கப் பொறாமை |
demagogue |
உணர்ச்சி அரசியல் தலைவர் |
demand and supply |
கிராக்கியும் கிடைப்பும்; கேள்வியும் நிரம்பலும் |
demeanour, professional |
துறைமைத் தோரணை |
demand compensation |
இழப்பீடு கோரு |
demilitarization, demand |
படைவிலக்கம் கோரு |
demobilization, seek |
படைப்பணி விலக்கம் நாடு |
democratic values |
குடியாட்சி விழுமியங்கள் |
demographic sample survey |
குடித்தரவு மாதிரி ஆய்வு |
demographic survey |
குடித்தரவு ஆய்வு |
demographic transition |
குடித்தரவு நிலைமாற்றம் |
demolition insurance |
சிதைவகற்றல் காப்புறுதி |
demonstration of simultaneous interpretation |
சமகால மொழிபெயர்ப்பு செய்முறைகாட்டல் |
demonstration, anti-government |
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் |
demonstrative evidence = physical evidence |
உருப்படிச் சான்று |
demure dress |
அடக்கமான உடை; எளிமையான உடை |
denial of service |
சேவை மறுப்பு |
density of population |
குடித்தொகை அடர்த்தி |
dental floss |
பல்லிடுக்கு-நூல் |
dental tape |
பல் நாடா |
dental filling |
பற்குழி நிரப்பல் |
denture therapist |
செயற்கைப்பற் சிகிச்சையாளர் |
denunciation and deterrence of crime |
குற்றம் கடிதலும் தடுத்தலும் |
deny access |
வழிமறு |
department store |
பல்பொருள் அங்காடி |
departure order |
வெளியேற்றக் கட்டளை; புறப்பாட்டுக் கட்டளை |
dependant ascendant |
தங்கிவாழும் மூத்த குருதியுறவினர் (மூத்த குடும்ப
உறுப்பினர்) |
dependant relative = dependent relative |
தங்கிவாழும் குருதியுறவினர் (குடும்ப உறுப்பினர்) |
dependency ratio |
தங்கிவாழ்வு விகிதம் |
dependency theory |
தங்கிவாழ்வுக் கோட்பாடு |
depletion of natural economic assets |
இயற்கைப் பொருளாதார வளம் ஒழிதல் |
deploy troops |
படையினரை களமிறக்கு |
deportation order |
நாடுகடத்தல் கட்டளை |
deposit slip |
வைப்பு நறுக்கு |
deposition from the witness |
சாட்சியின் சத்திய வாக்குமூலம் |
depraved mind |
வக்கிர உள்ளம் |
depression, economic |
பொருளாதார மந்தம் |
depression, mental |
உளவழுத்தம் |
deprived people = underprivileged people |
வசதிகுன்றிய மக்கள் |
deputy, a |
பிரதியாளர் |
deputy chief of mission |
தூதரக பிரதி அதிபதி |
deputy inspector general of police |
பிரதிக் காவல்துறை அதிபதி |
deputy minister |
பிரதி அமைச்சர் |
deradicalization programme |
தீவிரம் தணிப்பு நிகழ்முறை |
deregulation |
கட்டுப்பாடு தளர்த்தல் |
derelict land |
கைவிட்ட நிலம் |
derivative, a |
வழிவந்த சொல்; வழிவந்த பொருள் |
derivative evidence |
வருவித்த சான்று |
derogatory remarks |
தாழ்த்தும் கூற்றுகள் |
descriptive ethics |
விவரண அறவியல் |
descriptive language |
விவரண மொழி |
descriptive meaning |
விவரணக் கருத்து |
descriptive measure |
விவரண அளவு |
designated driver |
சுட்டிய சாரதி |
designated non-smoking area |
புகைத்தல் தவிர்க்க சுட்டிய பகுதி |
designated safe countries |
பத்திரமானவை என்று சுட்டிய நாடுகள் |
desk research |
அமர்விட ஆராய்ச்சி |
designated successor (survivor) |
சுட்டிய வழித்தோன்றல் |
destruction fire |
அழிப்பு வேட்டு |
detached house |
தனிவீடு |
detachment, air of |
பற்றற்ற உணர்வு |
detail, lack of |
விபரம் இன்மை |
detail, secret service |
இரகசிய சேவை சிறப்பணி |
details of the plan |
திட்ட விபரம் |
detainee liaison officer |
தடுப்புற்றோர் உறவு அதிகாரி |
detention centre |
தடுப்பு நிலையம் |
detention review |
தடுப்பு மீள்நோக்கு |
deterrence and denunciation of crime |
குற்றம் தடுத்தலும் கடிதலும் |
detractors, my |
என்னைக் குறைகூறுவோர் |
detrimental to the national interest |
தேசிய நலனுக்குக் கேடான |
devastate the pests, Let's |
பீடைகளுக்குப் பேரழிவு புரிவோம் |
devastated by miscarriage |
கருச்சிதைவினால் பேரதிர்ச்சியடைந்த |
devastating news |
பேரதிர்ச்சியூட்டும் செய்தி |
devastating smile |
ஆட்கொள்ளும் புன்முறுவல் |
developmental age |
விருத்தி வயது |
developmental disability |
விருத்தி வலுவீனம் |
developmental disorders |
விருத்திக் கோளாறுகள் |
developmental psychology |
விருத்தி உளவியல் |
devil's advocate |
கலந்துரையாடத் தூண்டும் கருத்துரையாளர் |
dew point |
பனிபடுநிலை |
diabetic retinopathy |
நீரிழிவுசார் விழித்திரைநோய் |
Diagnostic and statistical manual (DSM) |
நோய்நிர்ணய, புள்ளிவிவரக் கையேடு |
Diagnostic and Statistical Manual of Mental Disorders |
உளக் கோளாறு நிர்ணய, புள்ளிவிவரக் கையேடு |
diagnostic measure |
நோய்நிர்ணய நடவடிக்கை |
diagnostic testing |
நோய்நிர்ணய சோதனை |
dialectical materialism |
முரணியற் பொருண்மியம்; முரணியக்க பொருள்முதல்வாதம் |
dialectical method |
முரணியல் முறை |
Dialogue, Ministry of National |
தேசிய உரையாடல் அமைச்சு |
dialysis = haemodialysis |
குருதி சுத்திகரிப்பு |
diapause |
விருத்தி இடைநிற்பு |
Diaspora, Tamil |
புலம்பெயர்ந்த தமிழர் |
diastolic pressure |
இதய ஓய்வழுத்தம் |
diathesis-stress hypothesis |
உடற்கூற்று உளைச்சல் கருதுகோள் |
dictated order |
சொல்ல எழுதிய கட்டளை |
dictatorship of the proletariat |
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் |
dicta, Avvai’s |
அவ்வையின் வாக்குகள் |
dictum of the Chief Justice |
தலைமை நீதியரசரின் கூற்று |
didactic verse |
அறிவுறுத்தும் செய்யுள் |
diehard nationalists |
கடும் பிற்போக்குத் தேசியவாதிகள் |
diet, a low-fat and salt-free |
கொழுப்புக் குறைந்த உப்பில்லா உணவு |
diet, balanced |
ஒப்பளவுணவு |
diet, go on a |
எடைகுறைய பத்தியம் உண்ணு |
diet, Japanese |
யப்பானிய உணவு |
Diet, Japanese |
யப்பானிய நாடாளுமன்றம் |
difference threshold |
வேறுபாட்டு நுழைவாய் |
diffuse emission |
பரவுமாசு வெளிப்பாடு |
diffusing an evolving crisis |
உருவாகும் நெருக்கடியைத் தணித்தல் |
diffusion of responsibility |
பொறுப்புப் பரம்பல் |
digital archiving |
எண்மக் குவையீடு |
digital assets repository |
எண்மச் சொத்துக் களஞ்சியம்; எண்ம ஆவணக் களஞ்சியம் |
digital video disc = DVD |
எண்மக் காணொளி வட்டு |
diligence, due |
உரிய ஊக்கம் |
dilution ratio |
ஐதாக்க விகிதம் |
diploma in education |
கல்வியியல் பட்டயம் |
diplomatic agent |
சூழ்வியல் முகவர் |
diplomatic bag (pouch) |
சூழ்வியல் திருமுகப்பை |
diplomatic corps |
சூழ்வியலர் குழாம் |
diplomatic deafness |
செவிமடுக்கா சூழ்வியற் பாவனை |
diplomatic illness |
சுகயீன சூழ்வியற் பாவனை |
diplomatic immunity |
சூழ்வியல் விதிவிலக்கு |
diplomatic note |
சூழ்வியற் குறிப்பு |
diplomatic privileges and immunities |
சூழ்வியற் சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளும் |
diplomatic protocol |
சூழ்வியல் ஒப்பாசாரம் |
diplomatic ranks |
சூழ்வியற் பதவிவரிசை |
direct accountability program |
நேரடிப் பொறுப்பேற்பு நிகழ்முறை |
direct billing |
நேரடி அறவீடு |
direct compensation |
நேரடி நட்டஈடு |
direct democracy |
நேரடிக் குடியாட்சி (மக்களாட்சி) |
direct deposit |
நேரடி வைப்பு |
direct discharger |
நேரடிக் கழிப்பு உபகரணம் |
direct fire |
நேர் வேட்டு |
direct incineration |
நேரடி நீறாக்கம் |
direct indictment |
நேரடிக் குற்றச்சாட்டு (முதனிலை விசாரணையற்ற நேரடிக் குற்றச்சாட்டு ) |
direct loss |
நேரடி இழப்பு |
direct measurement |
நேரடி அளவீடு |
direct pursuit |
நேர்ப் பின்தொடர்வு |
direct speech |
தற்கூற்று |
direction of march |
படைநடப்புத் திசை |
direction of migration |
புடைபெயர் திசை |
direction, stage |
மேடை நெறியாள்கை |
directive language |
பணிப்பு மொழி |
director, film |
திரைப்பட இயக்குநர் |
director, managing |
முகாமைப் பணிப்பாளர் |
disability insurance |
மாற்றுத்திறன் காப்புறுதி |
disability levels associated with old age |
மூப்பு மாற்றுத்திற மட்டங்கள் |
disabled person |
மாற்றுத் திறனாளர் |
disabled vehicle |
செயலிழந்த ஊர்தி |
disappearance, certificate of |
காணாமைச் சான்றிதழ் |
disappearances, (enforced) |
(பலவந்தமாக) காணாமல் போக்கடிப்புகள் |
disappearing deductible |
மறையும் கழிப்புத்தொகை |
disaster management |
பேரழிவு கையாள்கை |
disaster preparedness and response |
பேரழிவை எதிர்கொள்வதற்கான தயார்நிலையும் பதில்
நடவடிக்கையும் |
disaster, natural |
இயற்கைப் பேரழிவு |
discharge chemicals into the river |
வேதிவகைகளை ஆற்றினுள் பாய்ச்சு |
discharge electricity, Clouds |
முகில்கள் மின்சாரம் பாய்ச்சுகின்றன |
discharge from hospital |
மருத்துவமனையிலிருந்து நீக்கு |
discharge responsibilities |
பொறுப்புகளை நிறைவேற்று |
disciplinary action |
ஒழுக்காற்று நடவடிக்கை |
disclaimer of liability |
பொறுப்புத் துறப்பு |
disclosure of information |
தகவல் வெளிவிடல் |
discount period |
கழிவுக் காலப்பகுதி |
discovery of a new planet |
புதிய கோள் கண்டுபிடிப்பு |
discovery of documents |
ஆவணங்களை வெளிப்படுத்தல் |
discretion, at their |
தாமே துணிந்தவாறு; தமது தற்றுணிபின்படி |
discretionary bench warrant |
நீதிமன்றின் தற்றுணிபுடன் ஒத்திவைக்கப்படும் கைதாணை |
discretionary income |
விஞ்சிய வருமானம் |
discretionary power |
தற்றுணிபு அதிகாரம் |
discriminatory practices and treatment |
பாகுபாடுகாட்டும் நடைமுறைகளும் நடத்துமுறையும் |
discuss with citizens |
குடிமக்களுடன் கலந்துரையாடு |
discussion forum |
கருத்தாடல் அரங்கு; கலந்துரையாடல் அரங்கு |
disempower voters |
வாக்காளர்களை வலுவிழக்கச் செய் |
disempowerment of voters |
வாக்காளர்களை வலுவிழக்கச் செய்தல் |
disengagement theory |
விடுபடல் கோட்பாடு |
disinformation and misinformation |
பொய்த்தகவலும் தவறான தகவலும் |
disinterested as a judge, as |
ஒரு நீதிபதி போல் பக்கஞ்சாயாத |
dismiss the case |
வழக்கை தள்ளுபடிசெய் |
dismissal of an appeal |
மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தல் |
dismissal with prejudice |
பங்கமிட்டுத் தள்ளுபடிசெய்தல் (இனிமேல் அத்தகைய
முகாந்திரம் கொண்டு வழக்காட முடியாது) |
dismissal without prejudice |
பங்கமின்றித் தள்ளுபடிசெய்தல் (இனிமேல் அத்தகைய
முகாந்திரம் கொண்டு வழக்காட முடியும்) |
dismissive gesture |
உதாசீனப்படுத்தும் சைகை |
dispensation of justice |
நீதி பாலிப்பு |
dispense justice |
நீதி பாலி |
dispense with justice |
நீதியை ஒழித்துக்கட்டு |
displaced person |
இடம்பெயர்ந்தவர்; இடம்பெயர்ந்த ஆள் |
display ad |
பட விளம்பரம் |
disposable income |
எஞ்சிய வருமானம் |
dispose of waste |
கழிவகற்று |
disposal of waste |
கழிவகற்றல் |
disposal value |
அகற்றல் பெறுமதி |
disposition, cheerful |
இன்னியல்பு |
dispute resolution = conflict resolution |
பிணக்குத் தீர்வு |
disruptive behaviour |
சீர்குலைக்கும் நடத்தை |
dissent, deter |
மாற்றுக்கருத்தை தடு |
dissenting judge |
ஒருப்படாத நீதிபதி; மாறுபடும் நீதிபதி |
dissenting judgement |
ஒருப்படாத தீர்ப்பு; மாறுபடும் தீர்ப்பு |
dissidence |
மாற்றுக்கருத்துடைமை; ஒருப்படாமை; மாறுபாடு; இணங்காமை |
dissidents |
மாற்றுக்கருத்தாளர்; ஒருப்படாதோர்; மாறுபடுவோர்; இணங்காதோர் |
dissolved solids |
கரைந்த திண்மங்கள் |
dissertation, doctoral |
முனைவர் பட்டத்துக்கான ஆய்வேடு |
distance learning |
அஞ்சல்வழிக் கல்வி |
distinct society |
தனித்துவ சமூகம் |
distort the truth |
உண்மையை திரி |
distortion of the truth |
உண்மை திரிப்பு; உண்மையைத் திரித்தல் |
distracted driving |
பராக்குப்பார்த்து ஊர்திசெலுத்தல் |
distributed fire |
பரம்படி வேட்டு |
distributing point |
விநியோக மையம் |
distribution cost |
விநியோகச் செலவு |
distributive use of a term |
ஒரு பதத்தின் வகுப்பீட்டுப்
பயன்பாடு |
divergent thinking |
பரக்கச் சிந்தித்தல் |
diversion program |
மாற்று நிகழ்முறை |
divestment of shares |
பங்குகளை விற்றுத்தீர்த்தல் |
divest shares |
பங்குகளை விற்றுத்தீர் |
dividend warrant |
பங்கிலாபக் கொடையாணை |
divisible word |
பகுபதம் |
division of labour |
தொழிற் பகுப்பு |
Doctor of Philosophy = PhD |
கலாநிதி; முனைவர் |
doctrine of fairness |
செந்நெறி |
doctrine of the mean |
இடைநெறி |
document an agreement |
இணக்கத்தை ஆவணப்படுத்து (ஆவணமாக்கு) |
document archiving |
ஆவணக்குவையீடு |
documentarians |
குறும்படத் தயாரிப்பாளர்கள் |
documentarists and archivists |
ஆவணவியலர்களும் ஆவணக்குவைஞர்களும் |
documentary = documentary film |
ஆவணப்படம் |
documentary evidence |
ஆவணச் சான்று |
documentation of an agreement |
இணக்கத்தை ஆவணமாக்கல்; இணக்கத்தின் ஆவணவாக்கம் |
documentation science |
ஆவணவியல் |
documentation, all the necessary = all the necessary documents |
வேண்டிய ஆவணங்கள் அனைத்தும் |
documents and archives |
ஆவணங்களும் ஆவணக்குவைகளும் |
documents, historical |
வரலாற்று ஆவணங்கள் |
dog walkers |
நாயுடன் உலாவுவோர் |
dollar, weaponization of the |
டாலரை ஆயுதமாகப் பயன்படுத்தல் |
dollarization
(Oxford) |
டாலர்மயமாக்கம்
|
domestic arts |
இல்லக் கலைகள் |
domestic law |
உள்நாட்டுச் சட்டம் |
domestic partnership |
துணை இல்வாழ்வு |
domiciliary care = homecare |
அகவரவுப் பராமரிப்பு |
dominant group |
ஆதிக்க குழுமம் |
Doomsday Clock |
உலகிறுதி மணிக்கூடு |
dormant account |
செயலற்ற கணக்கு |
double bind |
இருதளை |
double blind peer review |
ஆக்கியோரும் மீள்நோக்கும் ஒப்பாளரும் இனங்காட்டப்படாமல்
மேற்கொள்ளப்படும் மீள்நோக்கு |
double entendre |
இரட்டுற மொழிதல் |
double entry accounting |
இரட்டைப் பதிவுக் கணக்கீடு |
double-effect |
இரட்டை விளைவு |
double jeopardy |
ஒரே குற்றத்துக்காக ஒருவர்மீது இரு தடவைகள் வழக்குத்
தொடுத்தல் |
down light |
உட்கூரை ஒளி |
down payment |
முன் கொடுப்பனவு |
Down Syndrome = Down's Syndrome |
உளமுடக்கப் பிணி |
Downtown Chennai |
சென்னை அகநகர் |
dowry-related violence |
சீதனம் தொடர்பான வன்முறை |
dox confidential information |
அந்தரங்க தகவலை இணையவழி அம்பலப்படுத்து |
draft, bank |
வங்கி வரைவோலை |
Draft optional protocol to the Convention against Torture and
Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment |
சித்திரவதை மற்றும் பிற கொடிய, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் செயல் அல்லது
தண்டனைக்கு எதிரான பொருத்தனை சார்ந்த தெரிவுக்குரிய வரைமுறை |
drag queen |
பெண்ணுடையாளன் |
drag racing |
கார்வேகப் பந்தயம் |
drainage basin = catchment area = watershed |
வடிநிலம் |
dramatic conflict |
திடீர் முரண்பாடு |
dramatic irony |
நாடக முரண்சுவை |
dramatis personae |
நாடக பாத்திரங்கள்; கதாபாத்திரங்கள் |
drawee of a cheque |
காசோலையுறுநர் |
drawer of a cheque |
காசோலையிடுநர் |
drawing account |
மீட்புக் கணக்கு |
dream analysis |
கனவுப் பகுப்பாய்வு |
dream work |
கனவுத் தொழிற்பாடு |
dream world |
கனவுலகு |
dredging sludge |
கூளம் வாரல் |
dress circle |
முன்மாடிக் கூடம் |
dress rehearsal |
உடை ஒத்திகை |
dressing room |
உடுக்கைக் கூடம் |
dried chili |
செத்தல் மிளகாய் |
dried ginger |
வேர்க்கொம்பு; சுக்கு |
dried palmyra root |
ஒடியல் |
dried palmyra root flour |
ஒடியல் மா |
drinking water standards |
குடிநீர் நியமங்கள் |
drip irrigation |
கசிவு நீர்ப்பாசனம் |
drive other cars clause |
வேறு கார்கள் செலுத்தல் வாசகம் |
drive, sexual |
பாலியல் உந்தல் |
drive-in claims service |
நிகழ்விட கோரிக்கைச் சேவை |
driver training credit |
சாரதிப் பயிற்சித் தள்ளுபடி |
driverless car |
தானூர்திக் கார் |
driverless vehicle |
தானூர்தி |
drone = UAV (unmanned aerial vehicle) |
சுரும்பூர்தி |
drone missile strike |
சுரும்பூர்தித் தாக்குதல் |
drone, a delivery |
ஒப்படைச் சுரும்பூர்தி |
drudgery-reducing devices |
சலிப்புத் தணிக்கும் சாதனங்கள் |
drug (medication) profile |
மருந்து விபரம் |
drug abuse |
போதைமருந்து துர்ப்பிரயோகம் |
drug cartel |
போதைமருந்து கடத்தல் குழுமம் |
drug dependency |
போதைமருந்து நுகர்வில் தங்கியிருப்பு |
drug kingpin |
போதைமருந்து முதலாளி |
drug of choice |
தெரிவு மருந்து |
drug profile = medication profile |
மருந்து விபரம் |
drug squad |
போதைமருந்து விசாரணை அணி |
drugged driving = drug impaired driving |
போதைமருந்து உட்கொண்டு ஊர்தி செலுத்தல் |
drugs for the elderly |
முதியோருக்கான மருந்து வகைகள் |
dry fish; dried fish |
கருவாடு |
dry lease |
பணியணியற்ற வானூர்தி வாடகை உடன்படிக்கை |
dry skin |
உலர்தோல்; வறள்தோல் |
dry tundra |
உலர் பனிப்புலம் |
dual accreditation |
இரட்டைத் தூதாண்மை |
dual agency |
இரட்டை முகமை |
dual citizenship (nationality) |
இரட்டைக் குடியுரிமை (நாட்டுரிமை) |
dual entitlement |
இரட்டை உரித்துடைமை (எ-கா: சமூகநல உதவிப்படியும்
வாழ்க்கைத்துணை உதவிப்படியும்) |
dual intent |
இரட்டை நோக்கம் |
dual purpose sewer |
இரட்டை நோக்க கழிகால் |
dubious documents |
ஐயுறத்தக்க ஆவணங்கள் |
due diligence |
உரிய ஊக்கம் |
due process = |
உரிய படிமுறை |
due process of the law |
உரிய சட்டப் படிமுறை |
due-on-sale provision |
விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு |
Duke of Wellington |
வெலிங்டன் கோமகன் |
dump at sea |
கடலில் கொட்டு |
dump truck |
கொட்டுச் சுமையூர்தி |
dump, garbage |
குப்பைக் குதம் |
dune stabilization |
மணற்குன்று நிலைநிறுத்தல் |
duplicate; copy |
படி; படியெடு; பிரதி; பிரதியெடு |
duplication equipment |
படியெடுப்பு உபகரணம் |
duplication, wasteful |
வீண் மீளாக்கம் |
durable good |
நீடிக்கும் பொருள் |
duration-specific marital fertility rate = marriage duration
(marital) fertility rate |
மணவாழ்வுகால மகப்பேற்று வீதம் |
dust arrester |
தூசு-பற்றி |
dust burden |
தூசுச் சுமை |
dust devil = dust whirl |
தூசுச் சுழி |
duty counsel |
இலவச சட்டவுரைஞர் |
duty of care |
கவனிப்புக் கடமை |
duty, customs |
சுங்கத் தீர்வை |
DVD = digital video disc |
எண்மக் காணொளி வட்டு |
dwelling coverage |
வசிப்பிடக் காப்பீடு |
dyeing wastes |
சாயக் கழிவுகள் |
dynamic personality |
வீறார்ந்த ஆளுமை |
dynamics, fluid |
பாய்ம இயங்கியல் |
dynamics, group |
குழும இயங்கியல் |
dynamics of political change |
அரசியல் மாற்ற இயங்கியல் |
dynamism of music |
இசையின் வீறு |
dysfunctional family |
குலைவுக் குடும்பம் |
dystopia |
இழவுலகு; இழிவுலகு |
dystrophic water |
கூள நீர் |
No comments:
Post a Comment