Search This Blog

ENGLISH-TAMIL PHRASES

(ABANDON-AIR)


abandon claim

கோரிக்கையை கைவிடு

abate rules

விதிகளை தணி

abdominal gas

வயிற்று வாயு

abduction of foreigners

வெளிநாட்டவர்களை கடத்தல்

aberrant condition

பிறழ் நிலைமை

aberration, mental

உளப்பிறழ்வு

abeyance, in

நிறுத்திவைப்பில்

abeyance, Legal proceedings are in

சட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன

abide by the rules

விதிகளுக்கு அமைந்தொழுகு

ab initio = from the beginning

தொடக்கத்திலிருந்தே; ஆதிதொட்டு

ab intestato = without a will

விருப்பாவணமின்றி; இறுதியாவணமின்றி

abiotic factors

சடக் காரணிகள்

abject failure

படுதோல்வி

abjure (renounce) violence

வன்முறையை துற

ableism

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்தல் 

abnormal condition

வழமை பிறழ்ந்த நிலைமை; வழமைக்கு மாறான நிலைமை

abnormal psychology

பிறழ்ச்சி உளவியல்

aboriginal people = indigenous people

தொல்குடிமக்கள் = ஆதிக்குடிமக்கள்

abortifacient drugs

கருக்கலைப்பு மருந்துவகைகள்

abortion rate

கருக்கலைப்பு வீதம்

abortion ratio

கருக்கலைப்பு விகிதம்

abortive conspiracy

தோல்வியடைந்த சதி

abortive therapy

கருக்கலைப்புச் சிகிச்சை

above suspicion

ஐயத்துக்கு அப்பாற்பட்ட (உட்படாத)

abrasions and cuts

சிராய்ப்புகளும் வெட்டுகளும்

abreaction therapy

பதைப்புத்தணிப்புச் சிகிச்சை

abrogate responsibility

பொறுப்பை உதறித்தள்ளு

abscess on the gum

முரசில் ஒரு தொப்பளம் (சீழ்க்கட்டு)

abscond with the documents

ஆவணங்களுடன் தலைமறைவாகு

absence, certificate of

இன்மைச் சான்றிதழ்

Absence of evidence is not evidence of absence (Carl Sagan)

சான்றின்மை, இன்மைக்குச் சான்றாகாது; அத்தாட்சி இன்மை, இன்மைக்கு அத்தாட்சி ஆகாது

absence of mind = inattentiveness

கவனயீனம்

absentee landlord

புறத்துறையும் ஆதன உடைமையாளர்

absent from voting

வாக்களியாது வெளியேறு

absolute (unconditional) discharge

அறுதி விடுவிப்பு; நிபந்தனையற்ற விடுவிப்பு

absolute liability

அறுதிப் பொறுப்பு

absolute majority

அறுதிப் பெரும்பான்மை

absolute proof

அறுதிச்சான்று

absolute ruler, an

அறுதி ஆட்சியாளர்

absolute terms, in

அறுதி நியதிகளில்;  ஒற்றைப்படை நியதிகளில்

absolute truth

அறுதி உண்மை

absolutism, against

அறுதியாட்சிக்கு எதிரான

absolve from (of) blame

குற்றச்சாட்டிலிருந்து விடுவி

abstain from voting

வாக்களிப்பதை தவிர்

abstinence from substances

போதைமருந்து நுகராமை (உட்கொள்ளாமை)

abstract, in the

கருத்தளவில்

abstract art

அருவ ஓவியம்

abstract expressionism

உணர்வெளி ஓவியம்

abstraction, gaze at the sky in

வானத்தை வெறித்து நோக்கு

abstraction of water from the river

ஆற்றில் நீரெடுத்தல்

abstractions, mathematical

கணிதக் கருத்துருவங்கள்

abstract noun

பண்புப் பெயர்

abstract of a report

அறிக்கையின் சுருக்கம் (பொழிப்பு)

abstract painting

கருத்தோவியம்

abstract questions

கருத்தளவிலான வினாக்கள்

abstract water from the river

ஆற்றில் நீரெடு

absurd drama

விழல்மை நாடகம்

absurd example

விழல்மை எடுத்துக்காட்டு

absurdism of racial purity

இனத்தூய்மை எனும் விழல்மை

absurdity of argument

வாதத்தின் விழல்மை

abulia, a symptom of

உளவலுவீன அறிகுறி

abuse, a torrent of

துர்மொழிபொழிவு; துன்மொழி பொழிவு

abuse, drug

போதைமருந்து துர்ப்பிரயோகம்

abused children

துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட சிறார்; துன்புறுத்தப்பட்ட சிறார்

abuse of power

அதிகார துர்ப்பிரயோகம்

abuse of process

படிமுறைத் துர்ப்பிரயோகம்

abuse power

அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்

abuser, a child

சிறாரை துர்ப்பிரயோகம் செய்பவர் (துன்புறுத்துபவர்)

abuser, a drug

போதைமருந்து துர்ப்பிரயோகம் செய்பவர்                                                  

abuses and violations of human rights

மனித உரிமைத் துர்ப்பிரயோகங்களும் மீறல்களும்

abusive language

துன்மொழி

abusive parents

துன்புறுத்தும் பெற்றோர்

abusive relationship

துன்புறுத்தும் உறவு

academia, and industry

உயர்கல்வித் துறையும் உற்பத்தித் துறையும்

academic, an

உயர்கல்வித்துறைஞர்

academician, an

உயர்கல்விக் கழகத்தவர்

academic qualification

உயர்கல்வித் தகைமை

academy of music

இசைக் கல்விக்கழகம்

acalculia, causes of

கணிவலுவிழப்பின் காரணங்கள்

accede to a request

வேண்டுகோளுக்கு இணங்கு

accelerated learning

துரித கற்கை

acceleration clause

விரைவுபடுத்தல் கூற்று

accent, speak English with an

அசையழுத்தத்துடன் ஆங்கிலம் பேசு

accent on exports

ஏற்றுமதிக்கு முதன்மை

accent, speak English with a Tamil

தமிழ் உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசு

acceptability of ideologies

கருத்தியல்களின் ஏற்புடைமை

acceptable documentation

ஏற்கக்கூடிய ஆவணங்கள்

acceptable document

ஏற்புடைய (ஏற்கத்தக்க) ஆவணம்

accept a claim

கோரிக்கையை ஏற்றுக்கொள்

acceptance after sight

கண்டபின் ஏற்றுக்கொள்ளல்

acceptance for honour

மதிப்புக்கு ஏற்றுக்கொள்ளல்

acceptance supra protest

எதிர்த்தும் ஏற்றுக்கொள்ளல்

access barriers to health services

சுகாதார சேவைகள் பெறுவதில் தடங்கல்கள்

access to abortion

கருக்கலைக்கும் வாய்ப்பு

access to a library

நூலகத்தை அணுகும் வாய்ப்பு

access to property

ஆதனத்தை சென்றடையும் வாய்ப்பு

access to the vice chancellor

துணை வேந்தரை அணுகும்  வாய்ப்பு

access to services

சேவைகள் பெறும் வாய்ப்பு

access to the computer system

கணினித் தொகுதியை பயன்படுத்தும் வாய்ப்பு

accessibility equipment

மாற்றுத்திறனுதவி உபகரணம் (உபகரணங்கள்)

accessibility features

மாற்றுத்திறனுதவி அம்சங்கள்

accessibility plan

மாற்றுத்திறனுதவித் திட்டம்

accessibility services

மாற்றுத்திறனுதவிச் சேவைகள்

accessible bus service

மாற்றுத்திறனுதவிப் பேருந்துச் சேவை

accessible format

மாற்றுத்திறனுதவி உருவமைப்பு

accessible taxicab

மாற்றுத்திறனுதவி வாடகையூர்தி

accessible web design

மாற்றுத்திறனுதவி இணைய வடிவமைப்பு

accession to the throne

அரியணை ஏற்பு

accession to the UN

ஐ.நா.வில் அங்கத்துவம் ஏற்பு

accessory after the fact

நிகழ்ந்தபின் உடந்தையாய் இருப்பவர்

accessory at the fact

நிகழும்பொழுது உடந்தையாய் இருப்பவர்

accessory before the fact

நிகழமுன் உடந்தையாய் இருப்பவர்

accidentalism, theory of

தற்செயல்வாதக் கோட்பாடு

accident benefits

விபத்து உதவிப்படிகள்

accommodation for people with disabilities

மாற்றுத்திறனாளருக்கான இடவசதி

accompaniment of the pipe, to the

குழல் பக்கவாத்தியத்துடன்

accord, of my own

நானாக விரும்பியே; நானே விரும்பி

accord, peace

அமைதி உடன்பாடு

account, call to

விளக்கம் கேள் (கோரு)

Accountability Court

பொறுப்புக்கூற்று நீதிமன்று

accountability to the voters

வாக்காளர்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு

accountable to the voters

வாக்காளர்களுக்கு பொறுப்புக் கூறும் கடப்பாடுடைய

accountancy course

கணக்கியல் கற்கைநெறி

accountant, a chartered

பட்டயக் கணக்காளர்

account balance

கணக்கு மீதி

account for

கணக்கு காட்டு; பொறுப்புக் கூறு; விளக்கமளி

accounting clerk

கணக்கீட்டு எழுதுநர்

accounting equation

கணக்கீட்டுச் சமன்பாடு

accounting period

கணக்கீட்டுக் காலப்பகுதி

accounting system

கணக்கீட்டு முறைமை

accounts payable

செல்மதி; கொடுக்குமதி

accounts receivable coverage

வருமதிக் காப்பீடு

accounts receivable

வருமதி

account statement

கணக்குக் கூற்று

account value

கணக்குப் பெறுமதி

accrued expenses

பெருகிய செலவு

acculturation, process of

பண்பாடேற்பு படிமுறை

accumulated depreciation

ஒருமித்த தேய்மானம்

accumulated income

ஒருமித்த வருமானம்

accurate time

சரியான நேரம்

accusative case

இரண்டாம் வேற்றுமை

accused, an

குற்றஞ்சாட்டப்பட்டவர்

aches and pains

நோவு நொம்பலம்; நோவும் வேதனையும்

achieved status

ஈட்டிய தகுநிலை; எய்திய தகுநிலை

acid deposition

அமிலப் படிவு

acidification process

அமிலவாக்கப் படிமுறை

acidity of stomach

வயிற்று அமிலநிலை

acidity of soil

நிலத்தின் அமிலத்தன்மை

acid precipitation

அமிலப் பொழிவு

acid rain

அமில மழை        

acknowledge receipt of this letter

இந்த மடல் கிடைத்ததை அறியத்தரவும்

acknowledge the importance of education

கல்வியின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்

acknowledge you?, Did the minister

அமைச்சர உன்னைக் கண்டதாகக் காட்டிக் கொண்டாரா?

acknowledged your mistake

உனது தவறை ஒப்புக்கொள்

acknowledgement of their work, in

அவர்களது பணியை மெச்சி

acknowledgement of my application, an

எனது விண்ணப்பம் கிடைத்ததை அறிவிக்கும் மடல்

acknowledgements, the author’s

நூலாசிரியரின் நன்றியுரை

acoustics equations

ஓசைநுட்ப சமன்பாடுகள்

acoustics of the concert hall

இசைக்கலை மண்டபத்தின் ஒலிவளம்

acquired disease

தேடிய நோய்

acquired immune deficiency syndrome = AIDS

தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணி

acquired property

தேடிய தேட்டம்

acquisition, land

காணித் தேட்டம்; காணி சுவீகரிப்பு

acquittal (of the accused)

(குற்றஞ்சாட்டப்பட்டவரை) விடுதலைசெய்கை

acquit the accused

குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுதலைசெய்

acquit yourself well

நன்கு ஒழுகு; நல்ல முறையில் ஒழுகு

acrobat, an

மெய்வித்தகர்

acrobatics training

மெய்வித்தைப் பயிற்சி

acrophobia, suffer from

உயரவெருட்சிக்கு உள்ளாகு

act of commission

புரியும் செயல்

act of gross indecency

மிக இழிந்த செயல்; பேரிழிசெயல்;   அப்பட்டமான பாலுறவுச் செயல்

act of omission

செயல் தவிர்ப்பு; செய்யாதொழிதல்

act of parliament

நாடாளுமன்றச் சட்டம்

act of violence

வன்செயல்

acting area

நடிப்புக் களம்

acting out

செயலுருப்படுத்தல்

action, take

நடவடிக்கை எடு

action = legal action

சட்ட நடவடிக்கை

action maze

செய்கைத் தடப்புதிர்

action perspective

செய்கைக் கண்ணோட்டம்

activated sludge

சுத்திகரித்த கூளம்

active account

செயற்படு கணக்கு

active aging

செயலூக்கத்துடன் மூப்பெய்தல்

active carbon = activated carbon

சுத்திகரித்த கரியம்

active euthanasia

நிகழவிடப்படும் கருணைவதம்

active ingredient

செயலூக்கக் கூறு

active learning

செயலூக்கக் கற்கை

active life expectancy

செயலூக்க சராசரி ஆயுட்காலம்

active politics, engage in

செயலூக்க அரசியலில் ஈடுபடு

active verb

தன்வினை

active voice

செய்வினை

actively practicing citizenship

செயலூக்க குடித்துவம்

activism, political

அரசியற் செயலூக்கம்

activist, political

அரசியற் செயல்வலர்; அரசியல் வினைவலர்

activities of daily life

அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள்

activity schedule

செயற்பாட்டு அட்டவணை

activity step

செயற்பாட்டுப் படி

activity theory

செயற்பாட்டுக் கோட்பாடு

actual cash value

மெய்க் காசுப் பெறுமதி

actuality of prison life

சிறைவாழ்வின் மெய்ந்நிலை

actuary, a new

புதிய காப்புறுதிக் கணக்கீட்டாளர்

actus reus

குற்றச் செயல்

acupuncture, a demand for

ஊசிவைத்தியத்துக்கு ஒரு கிராக்கி    

acute and transient psychosis

தீவிர குறுங்கால சித்தப்பிரமை

acute care treatment

தீவிர பராமரிப்புச் சிகிச்சை

acute health care

தீவிர சுகாதார பராமரிப்பு

ad hoc basis, The meetings will be held on an

கூட்டங்கள் தேவைப்பட்ட வேளைகளில் நடத்தப்படும்

ad hoc, the tribunals operated

தீர்ப்பாயங்கள் தேவைப்பட்ட வேளைகளில் இயங்கின

ad hoc meeting to deal with the problem, an

பிரச்சனையைக் கையாளத் தேவைப்படும் வேளைக்குரிய கூட்டம்

ad infinitum = in infinitum = without limit

முடிவின்றி; என்றென்றும்

ad referendum

பேச்சளவில் உடன்பாடு

ad valorem

பெறுமதிப்படி

adaptation, an

தழுவல்; தழுவற்படைப்பு

adapted products = clean products

இசைவித்த ஆக்கங்கள்

adaptive (adjustive) device

இசைவிப்பு உத்தி

adaptive function

நெகிழ்ந்திசைவு

adaptive technology

இசைவிப்புத் தொழினுட்பவியல்

ad colligenda bona = to collect the goods

சொத்து ஒன்றுசேர்த்தல்

addiction to drugs (substances)

போதைமருந்துகளுக்கு அடிமைப்படுகை

addictive drug (substance)

அடிமைப்படுத்தும் போதைமருந்து

additional insured

காப்புறுதியில் மேலதிகமாக சேர்க்கப்படுபவர்

additional living expense insurance

மேலதிக வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி

additional premium

மேலதிக கட்டுப்பணம்

address a meeting

கூட்டத்தில் உரையாற்று

address change

முகவரி மாற்றம்

address the Chief Minister in Tamil

முதலமைச்சரை தமிழில் விளி

address the problem of unemployment

வேலையில்லாப் பிரச்சனையை கவனத்தில் கொள்

address to the nation, the President will

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்

address your application to the Mayor

உனது விண்ணப்பத்தை மாநகராதிபதிக்கு முகவரியிட்டு அனுப்பு

adduce evidence

சான்று சமர்ப்பி

ademption of legacies

விருப்பாவண கொடைவிலக்கு

adequacy of explanation = explanatory adequacy

விளக்க நிறைவு(டைமை)

adhesive bandage

ஒட்டுப் பந்தனம்

adjectives and adverbs

பெயரடைகளும் வினையடைகளும்

adjourn Parliament

நாடாளுமன்றத்தை ஒத்திவை

adjournment of Parliament

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல்

adjudicate disputes

பிணக்குத் தீர்ப்பிடு

adjudication of disputes

பிணக்குத் தீர்ப்பீடு

adjudicator of disputes

பிணக்குத் தீர்ப்பாளர்

adjunct program

உப நிகழ்முறை

adjustable rate

நெகிழ் (இசைவிப்பு) வீதம்

adjusted annual rate

நெகிழ்த்திய (இசைவித்த) ஆண்டு வீதம்

adjuster of claims

கோரிக்கை நெகிழ்விப்பாளர் (இசைவிப்பாளர்)

adjustive device

நெகிழ்த்தல்  (இசைவிப்பு) உத்தி

adjustment date

நெகிழ்த்தல் (இசைவித்த) திகதி

adjust your language

உனது மொழியை இசைவுபடுத்து

adjust yourself

உன்னை இசைவுபடுத்து (நெகிழ்த்து)

administration of justice, in particular, juvenile justice

நீதி நிருவாகம், குறிப்பாக, இளையோர் நீதி நிருவாகம்

administration of justice

நீதி நிர்வாகம்

administrative expenses

நிர்வாகச் செலவு

administrative law

நிர்வாகச் சட்டம்

administrative tribunal

நிருவாகத் தீர்ப்பாயம்

administrator, an office

அலுவலக நிர்வாகி

administrator de bonis non

எச்ச உரிமைத்தத்துவகாரர்

administrator of an estate

இறப்புச் சொத்துரிமைத் தத்துவகாரர்

Admiral of the Navy

கடற்படைத் தளபதி

admissibility hearing

அனுமதிவாய்ப்பு விசாரணை

admissible evidence

அனுமதிக்கத்தக்க சான்று

admission of guilt

குற்ற ஒப்புதல்

adolescence, characteristics of

வளரிளம்பருவ குணவியல்புகள்

adopted child

தத்தெடுத்த (தத்தெடுக்கப்பெற்ற) பிள்ளை

adoption of convenience

வசதிக்கான தத்தெடுப்பு

adoption

தத்தெடுப்பு

adoptive parent

தத்தெடுத்த பெற்றார்

adult, an

முதிர்ந்தவர்; வயதுமுதிர்ந்தவர்

adult care home

முதியோர் பராமரிப்பகம்

adult education

முதிர்ந்தோர் கல்வி

adulterous intercourse

பிறர்மனைப் புணர்ச்சி

adultery

பிறர்மனை நயப்பு

adult grooming

வயதுமுதிர்ந்தோரை வளைத்தெடுத்தல்

adulting, a discussion on

முன்முதிர்ச் செயற்பாடு (முதிர்ந்தோர் போல் இளையோர் செயற்படல்) பற்றிய கலந்துரையாடல்

adult life

முதிர் வாழ்வு

adults education

முதிர்ந்தோர் கல்வி

adumbration of the accused

குற்றஞ்சாட்டப்பட்டவரின் பருமட்டான சாயை

advance care planning

பராமரிப்பை முன்கூட்டியே திட்டமிடல்

advance command post

முன்னகர்வு ஆணைப்பீடம்

advance guard

முன்னகர்வுக் காவலணி

advance message center

முன்னகர்வுச் செய்தி நிலையம்

advance of Rs. 100, an

100 ரூபா முற்பணம்

advances to the tourist, make

சுற்றுலாவாணரிடம் வம்புத்தனம் புரி (சரசம் புரி)

adversarial system of justice

எதிர்வாத நீதி முறைமை

adversary, a political

அரசியல் எதிராளி

adverse effects

தகாத விளைவுகள்; பாதிப்புகள்; தாக்கங்கள்

adverse impact

பாதிப்பு

adverse reaction

தகாத விளைவு

advertisement fee

விளம்பரக்   கட்டணம்

advertising manager

விளம்பர முகாமையாளர்

advertorials, online

இணைய விளம்பரக் கட்டுரைகள்

advisory opinion

சட்டதிட்ப மதியுரை

advocacy group

பரிந்துரைக் குழுமம்

advocacy journalism

பரிந்துரை ஊடகவியல்

advocate's strategy

பரிந்துரைஞரின் உபாயம்

advocate of reconciliation, an

மீளிணக்கத்தை பரிந்துரைப்பவர்

advocate reconciliation

மீளிணக்கத்தை பரிந்துரை

aegis of the UN, under the

ஐ. நா.வின் ஆதரவில்

aeration tank

வளியூட்டு தொட்டி

aerial drone

ஆளில்லா வான்கலம்

aerial observation = air observation

வான்வழி அவதானிப்பு

aerial photograph = air photograph

வான்வழி நிழற்படம்

aerobic bacteria

வளிப் பற்றீரியாக்கள்

aerobic exercise

மூச்சுப் பயிற்சி

aerodrome (airdrome), unused

பயன்படுத்தா வான்துறை

aeronautical chart

வான்வலச் சட்டகம்

aeronautics students

வான்வலவியல் மாணவர்கள்

aerosol propellant

வளியமுக்க கலம் முடுக்கி

Aesculapian Snake

நெட்டைப் பாம்பு

aesthetic of the poem

கவிதையின் கலையழகு (வனப்பு)

aesthetic qualities

கலையழகுப் பண்புகள்

aesthetics

கலையழகியல்

(a)etiology, importance of

ஏதியலின் முக்கியத்துவம்

affect development = impact on development

விருத்தியில் தாக்கம் விளைவி

affective disorder

உணர்நிலைக் கோளாறு

affective domain

உணர்நிலைப் புலம்

affect my decision, Your suggestions will

உனது யோசனைகள் எனது முடிபில் தாக்கம் விளைவிக்கும்

affidavit, sworn

சத்தியக் கடதாசி

affirm solemnly

பற்றுணர்வுடன் உறுதியளி

affirmant, an

(நீதிமன்றில்) உறுதியுரைஞர்

affirmation, nod in

உறுதிப்படுத்தும் வண்ணம் தலையசை

affirmation in a court of law

நீதிமன்றில் விடுக்கும் உறுதிமொழி

affirmation, solemn

பற்றுணர்வுடன் கூடிய உறுதிமொழி

affirmative action

பாகுபாட்டை ஈடுசெய்யும் நடவடிக்கை

affirmative or positive action initiatives

பாகுபாட்டை ஈடுசெய்யும் அல்லது இணக்க நடவடிக்கை முன்னெடுப்புகள்

affirmative verb

உடன்பாட்டு வினை

affirm your position

உனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்து

affordable housing

சிக்கன வீட்டுவசதி

afforestation process

காடாக்கப் படிமுறை

a fortiori = with a yet stronger reason (e. g: If it is wrong to kill animals for food, a fortiori, it is also wrong to kill them for their skin)

கைமுதிகநியாயம் = மிகவும் வலுவான நியாயம் கொண்டு (எ-கா: விலங்குகளை உணவுக்காகக் கொல்வது தவறு என்பது நியாயம் என்றால், தோலுக்காகவும் கொல்லக்கூடாது என்பது அதைவிட மிகவும் வலுவான நியாயம் கொண்டதாகும்)

Afro Hair Discrimination

ஆபிரிக்க சிகைப் பாகுபாடு

aftercare facilities

பின்பராமரிப்பு வசதிகள்

afterpain test

பின்னோக்காட்டுப் பரிசோதனை

after-school program

பாடசாலை வேளைக்குப் பிந்திய நிகழ்முறை

after sight

கண்டபின்

after the fact

நிகழ்ந்த பின்; நிகழ்வின் பின்

age at marriage

மணம்புரிந்த வயது

age at next birthday

அடுத்த பிறந்தநாளில் வயது

age at retirement

ஓய்வெடுத்த வயது

age barriers

வயதுசார் தடங்கல்கள்

age cohorts

வயதுவாரிச் சகாக்கள்; சகவயதினர்

age composition

வயதுவாரிக் கோப்பு

age dependency ratio

வயதுவாரி தங்கிவாழ்வு விகிதம்

age discrimination

வயதுப்பாகுபாடு (ஏற்றத்தாழ்வு)

age distribution

வயதுவாரிப் பரம்பல்

age effect

வயதுசார் விளைவு

age grade

வயதுவாரித் தரம்

age integration theory

வயதுவாரி ஒருங்கிணைப்புக் கோட்பாடு

age norm

வயதுவாரி நியமம்

age of consent; age of protection

பாலுறவுக்கு இசையும் வயது

age of discretion

தற்றுணிபு வயது

age of innovation

புத்தாக்க காலம்

age ratio

வயதுவாரி விகிதம்

age stratification theory

வயதுவாரி அடுக்குக் கோட்பாடு

age structure

வயதுவாரிக் கட்டமைப்பு

age timetable

வயதுவாரி நேரசூசி

age-associated memory impairment

வயதுசார் அயர்ச்சி (நினைவாற்றல் குறை)

aged care

மூப்புகாலப் பராமரிப்பு

aged people

மூப்பெய்தியோர்; மூப்படைந்தோர்

age-integrated institution

வயதுவாரி ஒருங்கிணைப்பு நிலையம்

age-related memory loss

வயதுசார் அயர்ச்சி (நினைவாற்றல் குறை)

age-sex composition

வயது-பால்வாரிக் கோப்பு

age-sex pyramid

வயது-பால்வாரிக் கூம்பு

age-sex specific mortality rate

வயது-பால் குறித்த இறப்பு வீதம்

age-specific fertility rate

வயது குறித்த கருவள வீதம்

agent, an insurance

காப்புறுதி முகவர்

agent, chemical

நச்சுவேதிப் பொருள்

agent bank

முகமை வங்கி

agent provocateur (provocative agent)

மாட்டிவிடும் பேர்வழி

aggravated assault

கடுந் தாக்குதல்; மோசமான தாக்குதல்; வலுத்த தாக்குதல்; நையப்புடைத்தல்

aggravated damages

உளத்தாக்க இழப்பீடு

aggravated indecent sexual assault

வலுத்த இழிவான பாலியல் தாக்குதல்

aggravating circumstances

மோசமாக்கும் சூழ்நிலைகள்

aggression, military

படைபல வன்முறை

aggressive policy

வன்முறைக் கொள்கை

aggression, the mob descended to

கும்பல் வன்முறையில் இறங்கியது

aggrieved party

இடருற்ற (துயருற்ற) தரப்பு

aging in place

வதிவிடத்தில் மூப்பெய்தல்

aging index

முதிர்வுச் சுட்டு

aging with security and dignity

பத்திரமாகவும் கண்ணியமாகவும் மூப்பெய்தல்

Agism is wrong

வயதுவாரியாகப் பாகுபாடு காட்டுவது காட்டுவது தவறு; வயதுவாரியாக ஏற்றத்தாழ்வு கற்பிப்பது தவறு

agitation, mental

உள்ளப் பதகளிப்பு

agitation for equal rights

சரிநிகர் உரிமைக் கிளர்ச்சி

agreement of purchase and sale

கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை

agricultural pollutants

வேளாண்நில மாசுவகைகள்

agricultural pollution

வேளாண்நில மாசு

agricultural run-off

வடிந்தோடு வேளாண்நில நீர்

agricultural waste

வேளாண்மைக் கழிவு

aid and abet

உதவியும் ஒத்தாசையும் புரி

aide-de-camp

பணிவிடைப் படைஞர்

aide mémoire

நினைவுதவிக் குறிப்பு

AIDS = acquired immune deficiency syndrome

தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணி

aid with no strings attached

நிபந்தனையற்ற உதவி

aid with strings attached

நிபந்தனைகளுடன் கூடிய உதவி

air advantage = air superiority

வானாதிக்கம்; வான் அனுகூலம்

air ambulance

நோயாளர் வானூர்தி

air area

வான் பரப்பு

air attaché

வான்படைத் தூதிணைஞர்

air base

வான்படைத் தளம்

air basin

வளித்தேக்கம்

airborne disease

வளிகொணர் நோய்

airborne particulates

வளிகொணர் துணிக்கைக் கூறுகள்

airborne troops

வான்வழிப் படையினர்

Air Chief Marshal

வான்படை தலைமைத் தளபதி

Air Commodore

வான் களபதி

air conditioner

குளிரூட்டி

air-conditioning

குளுமை வசதி; குளுமையூட்டி

air contaminant

வளி மாசுபடுத்தி

aircraft warning service

வான்கல எச்சரிக்கைச் சேவை

air curtain

வளித் திரை

air defence command

வான் பாதுகாப்பு ஆணைப்பீடம்

air filter

வளிச் சல்லடை

Air Force

வான் படை

air-landing troops

தரையிறங்கு வான் படையினர்

Air Marshal

வான்படைத் தளகர்த்தர்

air piracy

வான் கொள்ளை

air pollutant

வளி மாசூட்டி

air pollution control

வளிமாசு கட்டுப்படுத்தல்

air pollution episode

வளிமாசுக் கட்டம்

air pollution index

வளிமாசுச் சுட்டு

air pollution sources

வளிமாசு மூலங்கள்

air pollution

வளி மாசு

air quality criteria

வளித்தரப் பிரமாணங்கள்

air quality index

வளித்தரச் சுட்டு

air quality monitoring

வளித்தரக் கண்காணிப்பு

air quality standards

வளித்தர நியமங்கள்

air strikes

வான் தாக்குதல்கள்

Air Vice Marshal

வான்படை துணைத் தளகர்த்தர்

No comments:

Post a Comment