Search This Blog

AGEING = மூப்பியல்


active aging

செயலூக்க மூப்பெய்வு; செயலூக்கத்துடன் மூப்பெய்தல்

active life expectancy

சராசரி செயலூக்க ஆயுட்காலம்

activities of daily life

அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள்

acute care treatment

தீவிர பராமரிப்புச் சிகிச்சை

acute health care

தீவிர சுகாதார பராமரிப்பு

adult care home

முதியோர் பராமரிப்பகம்

adult education

முதிர் கல்வி

adult life

முதிர் வாழ்வு

adults

முதிர்ந்தோர்; வயதுவந்தோர்

advance care planning

முன்கூட்டியே பராமரிப்பு திட்டமிடல்

age at marriage

மணம்புரி வயது

age at next birthday

அடுத்த பிறந்தநாளில் வயது

age at retirement

ஓயும் வயது

age barriers

வயதுசார் தடங்கல்கள்

age cohorts

ஒத்த வயதினர்

age composition

வயதுக் கோப்பு

age dependency ratio

வயதுவாரி தங்கிவாழ்வு விகிதம்

age discrimination

வயதுப் பாகுபாடு காட்டல்

age distribution

வயதுவாரிப் பரம்பல்

age effect

வயதுசார் விளைவு

age grade

வயதுவாரித் தரம்

age integration theory

வயதுவாரி ஒருங்கிணைப்புக் கோட்பாடு

age norm

வயதுசார் நியமம்

age of consent; age of protection

பாலுறவுக்கு இசையும் வயது

age of discretion

தற்றுணிபு வயது

age of innovation

புத்தாக்க காலம்

age ratio

வயதுசார் விகிதம்

age stratification theory

வயதுவாரி அடுக்குக் கோட்பாடு

age structure

வயதுவாரிக் கட்டமைப்பு

age timetable

வயதுவாரி நேரசூசி

age-associated memory impairment

வயதுசார் அயர்ச்சி (நினைவாற்றல் குறை)

aged care

மூப்புகாலப் பராமரிப்பு

aged people

மூப்பெய்தியோர்; மூப்படைந்தோர்

age-integrated institution

வயதுவாரி ஒருங்கிணைப்பு நிலையம்

age-related memory loss

வயதுசார் அயர்ச்சி (நினைவாற்றல் குறை)

age-sex composition

வயது-பால்வாரிக் கோப்பு

age-sex pyramid

வயது-பால்வாரிக் கூம்பு

age-sex specific mortality rate

வயது-பால் குறித்த இறப்பு வீதம்

age-specific fertility rate

வயது குறித்த கருவள வீதம்

aging in place

வதிவிடத்தில் மூப்பெய்தல்

aging index

முதிர்வுச் சுட்டு

aging with security and dignity

பத்திரமாகவும் கண்ணியமாகவும் மூப்பெய்தல்

Agism is wrong

வயதுவாரியாகப் பாகுபாடு காட்டுவது காட்டுவது தவறு; வயதுவாரியாக ஏற்றத்தாழ்வு கற்பிப்பது தவறு

almshouse

ஆதுலசாலை; ஆதுலர்சாலை

Alzheimer's disease

மூளைத்தளர்ச்சி நோய்

angina

நெஞ்சுத் தெண்டல்

aphasia

மொழித்திறன் தடங்கல்

arthritis

மூட்டுவாதம்

assisted living facility

வாழ்வுதவி நிலையம்

autonomy

தன்னாண்மை

balanced diet

ஒப்பளவுணவு

basic health service

அடிப்படைச் சுகாதார சேவை

bereavement

பிரிவு; இழப்பு

board and care home

பராமரிப்பு விடுதியகம்

bridge jobs

இடைத்தொடுப்பு வேலைகள்

burden of disease

பிணிச்சுமை; நோய்ப்பளு

capitation

முழுமட்டக் கொடுப்பனவு

care home

பராமரிப்பகம்

care-dependent

பராமரிப்பில் தங்கிவாழ்பவர்

caregiver

பராமரிப்பாளர்

caregiver burden

பராமரிப்புச் சுமை

caregiver stress

பராமரிப்பு உளைச்சல்

caring communities

பராமரிப்புச் சமுதாயம்

cataract

பசாடு; விழிவில்லைப் படலம்

cataract removal

பசாடு நீக்கல்

central nervous system

மைய நரம்புத் தொகுதி

child dependency ratio

பிள்ளை தங்கிவாழும் விகிதம்

chronic and degenerative diseases

நீடித்து உருக்குலைக்கும் நோய்

chronic care

நீடித்த பராமரிப்பு

chronic disease

நீடித்த நோய்

chronic health problems

நீடித்த சுகாதாரப் பிரச்சனைகள்

chronological age

கால வயது

classic aging pattern

வயதுநியம மூப்பு விதம்

climacteric

மாதவிலக்கு முடிவுகாலம்

clinical depression

சிகிச்சைநிலை உளச்சோர்வு

cognitive disabilities

அறிதிறன் வலுவீனங்கள்

cognitive psychology

அறிதிறன் உளவியல்

cohort aging

சகா மூப்பெய்தல்

cohort effect

சகாவழி விளைவு

communicable diseases

கடத்தப்படு நோய்

community health care

சமூக சுகாதார பராமரிப்பு

community health centre

சமூக சுகாதார நிலையம்

community health worker

சமூக சுகாதாரப் பணியாளர்

community involvement

சமூக ஈடுபாடு

community-based care

சமூகநிலைப் பராமரிப்பு

community-based programmes

சமூகநிலைத் திட்டங்கள் 

community-based services

சமூகநிலைச் சேவைகள்

compression of morbidity thesis

நோய்மை குறுக்கல் கோட்பாடு

compulsory licensing of medicines

கட்டாய மருந்துரிமம் வழங்கல்  

continuing care facility

தொடர் பராமரிப்பு நிலையம்

continuing care retirement community

தொடர் பராமரிப்பு ஓய்வுச் சமுதாயம்

continuity theory

தொடர்வுக் கோட்பாடு

contributory pension system

உதவுதொகை ஓய்வூதிய முறைமை

convergence theory

ஒருங்குதிரள்வுக் கோட்பாடு

convoy model of social relations

புடைசூழ் சமுதாய உறவு

coping

ஈடுகொடுத்தல்

coronary bypass surgery

இதயநாடி மாற்றுப்பொருத்து

cost-of-living adjustment

வாழ்க்கைச்செலவுப் படி இசைவிப்பு

creativity

படைப்பாற்றல்

crisis theory

நெருக்கடிக் கோட்பாடு

cross-linkage theory of aging

மூப்பு பிணைவுக் கோட்பாடு

cross-sectional research

குறுக்குவெட்டு ஆராய்ச்சி

crowded nest

தாய்மனை நெருக்கடி

crystallized intelligence

துலக்க நுண்மதி

day care centre

நாள்வேளைப் பராமரிப்பு நிலையம்

day hospital

நாள்வேளை வைத்தியசாலை

day surgical centre

நாள்வேளை அறுவைச் சிகிச்சை நிலையம்

day surgical clinic

நாள்வேளை அறுவைச் சிகிச்சைக்களம்

day-care centre for the elderly

முதியோர் நாள்வேளைப் பராமரிப்பு நிலையம்

deeds of gift

கொடை உறுதிகள்

defined benefit

வரையறுத்த உதவிப்படி

defined contribution

வரையறுத்த உதவுதொகை

dementia

மூளைமழுக்கம்

demographic transition

குடித்தொகை நிலைமாற்றம்

demography

குடிவிபரவியல்

depression

உளச்சோர்வு

diagnostic measure

நோய்நிர்ணய நடவடிக்கை

disability insurance

மாற்றுத்திறன் காப்புறுதி

disability levels associated with old age

மூப்பு மாற்றுத்திற மட்டங்கள்

disengagement theory

விடுபடல் கோட்பாடு

domiciliary care = homecare  

அகவரவுப் பராமரிப்பு

drugs for the elderly

முதியோருக்கான மருந்துவகைகள்

dual entitlement

இரட்டை உரித்து 


(எ-கா: சமுதாயநல உதவிப்படியும் வாழ்க்கைத்துணை உதவிப்படியும்)

early adult transition

இளமுதிர்வு நிலைமாற்றம் (17-45)

early adulthood

இளமுதிர்வு (17-45)

early retirement age

இள ஓய்வு வயது (62)

early retirement incentive program

இள ஓய்வு ஊக்குவிப்புத் திட்டம்

earnings test

உழைப்பு வரம்பு

elderly dependency ratio

முதியோர் தங்கிவாழ்வு விகிதம்

empowerment of older persons

முதியோர்க்கு வல்லமையளிப்பு 

empty nest

வெறுந்தாய்மனை; வெற்றுத்தாய்மனை

enabling and supportive environments

வலுவளித்து துணைநிற்கும் சூழ்நிலை

encoding

உள்ளத்தில் பதித்தல்

entitlement crisis

உதவிப்படி உரித்து நெருக்கடி

entitlements

உதவிப்படி உரித்துகள்

erectile dysfunction

ஆண்குறி ஓங்காமை

euthanasia = mercy killing

கருணைக்கொலை

exchange theory

பரிமாற்றக் கோட்பாடு

extended family household

கூட்டுக் குடும்ப வீட்டார்

extra care sheltered housing

மேலதிக பராமரிப்புக் காப்பகம்

family life cycle

குடும்ப வாழ்க்கை வட்டம்

fee-for-service

சேவைக்கான கட்டணம்

feminist theory

பெண்ணியக் கோட்பாடு

fertility rate

பிறப்பு வீதம்

filial piety

முதியோர் மீதான பற்று

flexible employment

நெகிழ் வேலைவாய்ப்பு

flexible retirement

நெகிழ் ஓய்வு

fluid intelligence

நெகிழ் நுண்மதி

forward thinking

முன்னோக்குச் சிந்தனை

foster care

வளர்ப்புவழிப் பராமரிப்பு

frail elderly = the frail older persons

தளர்ந்த முதியோர்

functional age

தொழிற்படு வயது

functional status

தொழிற்படு தகுநிலை

functionally disabled

தொழிற்படுதிறன் குன்றிய

gender neutrality

பால்மை நடுநிலைப்பாடு

gender recognition

பால்மை அங்கீகாரம்

gender splitting

பால்மைப் பிளப்பு

genetic control theory of aging

பரம்பரைவழி வயது நிர்ணயக் கோட்பாடு

geriatric care

முதுமைப் பராமரிப்பு

geriatric centre

முதுமைப் பராமரிப்பு நிலையம்

geriatric medicine

முதுமை மருத்துவம்

geriatrics

முதுமையியல்

gerontocracy

மூப்பாதிக்க சமுதாயம்

gerontology

மூப்பியல்

glaucoma

விழியழுத்தநோய்

gray lobby

முதியோர்சார்புக் குழுமம்

health behavior

நலவாழ்வு நடத்தை

health expectancy

சராசரி நலவாழ்வுக் காலம்

health for all

அனைவருக்கும் நலவாழ்வு 

health implications of ageing

நலவாழ்வில் மூப்பின் தாக்கங்கள்

health lifestyle

நலவாழ்வுப் பாங்கு

healthy ageing

உடல்நலத்துடன் மூப்பெய்தல்

home and community

இல்லமும் சமூகமும்

home and community-based services

இல்லநிலை-சமூகநிலைச் சேவைகள்

home health aide

இல்ல சுகாதாரத் துணைஞர்

home help

இல்ல உதவியாளர்

hospice

அந்திம பராமரிப்பகம்

humane societies

கருணைச் சமாசங்கள்

hypertension = high blood pressure

உயர் குருதி அமுக்கம்

hypertensive cardiovascular disease

உயர்குருதியமுக்க இதயக்கலன் நோய்

immune function theory of aging

மூப்பு தடுப்புவலு குன்றல் கோட்பாடு

impairments

மட்டுப்பாடுகள்; தடங்கல்கள்  

inclusive society for all ages

எல்லா வயதினரையும் உள்வாங்கும் சமுதாயம்

income-generating and voluntary work

உழைப்பும் தொண்டும்

independence

சுயாதீனம்

independent living

சுயாதீன வாழ்வு

infectious and parasitic diseases

கிருமித்தொற்று-ஒட்டுண்ணி நோய்கள்

informal assistance

முறைசாரா உதவி

informal caregivers

முறைசாரா பராமரிப்பாளர்கள்

initiative on age

வயதுசார் முன்னெடுப்பு

innovative women

புதுமைப்பெண்

institutional health services

நிலைய சுகாதார சேவைகள்

integrated care

ஒருங்கிணைத்த பராமரிப்பு

intelligence

நுண்மதி

intensive care

தீவிர பராமரிப்பு

interest groups

நலன்நாடு குழுமங்கள்

interim nursing home care

இடைக்கால தாதிமையக பராமரிப்பு

intermediate care

இடைநிலைப் பராமரிப்பு

internal displacement

உள்நாட்டு இடப்பெயர்வு

joint retirement

கூட்டோய்வு

land dispossession

காணி களைவு

learning

கற்கை

life course

வாழ்க்கைப் போக்கு

life cycle

வாழ்க்கை வட்டம்

life expectancy

சராசரி ஆயுட்காலம்

life review

வாழ்க்கை மீள்நோக்கு

life span

ஆயுள் வரம்பு

life-long learning

வாழ்நாட் கற்கை

literacy and numeracy

எழுத்தறிவும் எண்ணறிவும்

live-in caregiver

உடனுறையும் பராமரிப்பாளர்

living will

பராமரிப்பு விருப்பாவணம்

longevity

நெடுவாழ்வு; நீடித்த வாழ்வு

longitudinal research

நெடுந்தொடர் ஆராய்ச்சி

long-term care

நெடுங்காலப் பராமரிப்பு

long-term memory

நெடுங்கால நினைவு

mainstreaming the issue of ageing in all sectors

எல்லாத் துறைகளிலும் மூப்பு விவகாரத்தை மையப்படுத்தல்  

mandatory retirement

நியதிப்படியான ஓய்வு

menopause

மாதவிலக்கொழிவு

middle adulthood

இடைநடு முதிர்வு (40-65)

middle-old people

இடைநடு முதியோர் (75-84)

midlife crisis

வாழ்விடை நெருக்கடி

midlife transition

வாழ்விடை நிலைமாற்றம்

migration

குடிபெயர்வு

migratory stream

குடிபெயர்ச்சி ஓடை

mobility aid

நடமாட்டத் துணை

mortality rate

இறப்பு வீதம்

multigenerational relationships

பல்தலைமுறை உறவுகள்

mutual self-help

ஆளுக்காள் தன்னுதவி 

naturally occurring retirement communities

இயல்பாய் ஓயும் சமுதாயங்கள்

neglect

புறக்கணிப்பு

new ageism

புதிய வயதுசார் பாரபட்சம்

non-contributory pension system

உதவுதொகை செலுத்தா ஓய்வூதிய முறைமை

normal retirement age

வழமை ஓய்வு வயது (எ-கா: 65)

nuclear family

தனிக்குடும்பம் (பெற்றோர், பிள்ளைகள்

மாத்திரம் கொண்ட குடும்பம்)

nuclear family household

தனிக்குடும்ப வீட்டார்

nursing facility

பராமரிப்பு நிலையம்

nursing home

பராமரிப்பு இல்லம்

occupational safety standards

தொழில்சார் பாதுகாப்பு நியமங்கள்

old people (old old)

முதியோர்; முதுமுதியோர் (75-84)

older persons

மூத்தோர்

oldest old persons

மிகமூத்த முதியோர் (85+)

osteoporosis

என்புப்போறை

palliative care

வேதனை தணிக்கும் பராமரிப்பு

Parkinson's disease

உடல்-தளர்ச்சி நோய்

passive euthanasia

செயப்பாட்டுக் கருணைவதம்

pension-splitting

ஓய்வூதியப் பகிர்வு

period effect

காலகட்ட விளைவு

peripheral nervous system

சுற்றயல் நரம்புத் தொகுதி

personal support worker

ஆள் உதவிப் பணியாளர்

personality traits

ஆளுமைக் குணாம்சங்கள்

physical inactivity

உடற்செயலின்மை

plan of action on ageing

மூப்பு நடவடிக்கைத் திட்டம்

population ageing

குடித்தொகை மூப்பெய்தல்

population pyramid

குடித்தொகைக் கூம்பு

post-traumatic stress

அதிரடி ஊறுபாட்டை அடுத்த உளைச்சல்

presbycusis

மூப்புசார் செவிப்புலனிழப்பு

presbyopia

மூப்புசார் கிட்டப்பார்வைக் குறைவு

prescription drugs

நிர்ணய மருந்துகள்

preventive care

நோய்த்தடுப்பு பராமரிப்பு

preventive medicine

நோய்த்தடுப்பு மருந்து

primary care

முதனிலைப் பராமரிப்பு

primary caregiver

முதனிலைப் பராமரிப்பாளர்

primary health care

முதனிலைச் சுகாதார பராமரிப்பு

primogeniture

முதற்பிறப்பு; முதற்பிறப்புரிமை

programme of research on ageing and health

மூப்பு-சுகாதார ஆராய்ச்சித் திட்டம்

progressive tax

ஏறுவரி

prospective payment system

எதிர்பார்க்கப்படும் கொடுப்பனவு முறைமை

prospective voting

எதிர்பார்க்கப்படும் வாக்களிப்பு

psychogeriatric facility

உளமுதுமை பராமரிப்பு நிலையம்

psychological fatigue

உள அயர்ச்சி

quality of life

வாழ்க்கைப் பாங்கு

quantitative research

அளவுமுறை ஆராய்ச்சி

rational choice theory

நியாயத் தெரிவுக் கோட்பாடு

reality orientation

நிகழ்வுணர்த்தல் சிகிச்சை

regulatory mechanisms

ஒழுங்குறுத்தும் பொறிமுறை

rehabilitation

மறுவாழ்வளிப்பு

reminiscence therapy

நினைவுறுத்தல் சிகிச்சை

residential care

வதிவுப் பராமரிப்பு

residential facility

வதிவகம்

restorative care

மீள்வுறுத்தல் பராமரிப்பு

restrictive covenants

கட்டுறுத்தும் உடன்பாடுகள்

retirement age = pension age

ஓயும் வயது

retirement community

ஓய்வுச் சமுதாயம்

retirement contracts

ஓய்வுகால ஒப்பந்தங்கள்

retirement village

ஓய்வுக் கிராமம்

rheumatoid arthritis

வாதமூட்டழற்சி

role allocation

வகிபாகம் ஒதுக்கல்

role conflict

வகிபாக முரண்பாடு

role reversal

வகிபாக மறுதலையாக்கம்

secondary care

இரண்டாம்நிலைப் பராமரிப்பு

secure ageing

பத்திரமாக மூப்பெய்தல்

self care

தன் பராமரிப்பு; சுய பராமரிப்பு

self-fulfilment

தன் நிறைவேற்றம்; சுய நிறைவேற்றம் 

self-image

தன்படிமம்

senility

தளர்ச்சி

senior center

முதியோர் நிலையம்

sequential retirement

ஒருவர் பின்னொருவராக ஓய்தல்

sex ratio

பால் விகிதம்

sexual response cycle

பாலியல் பதில்வினை வட்டம்

sexually transmitted diseases

பாலுறவு கடத்து நோய்

young old persons

இளமுதியோர் (60-74)

shared housing

பகிர்வகம்

sheltered housing

காப்பகம்

short-term aged care

குறுமூப்புகாலப் பராமரிப்பு

short-term memory

குறுங்கால நினைவு

single room occupancy hotel

தனியறைவாச விடுதியகம்

sitting service

இடைநேரச் சேவை

social control

சமுதாயக் கட்டுப்பாடு

social exclusion

சமுதாய விலக்கு

social gerontology

சமுதாய மூப்பியல்

social group

சமுதாயக் குழுமம்

social insurance

சமுதாயக் காப்புறுதி

social integration

சமுதாய ஒருங்கிணைப்பு

social isolation

சமுதாயத்திலிருந்து தனிமைப்படுதல்

social movements

சமுதாய இயக்கங்கள்

social network

சமுதாய வலையம்

social role

சமுதாய வகிபாகம்

social support

சமுதாய ஆதரவு

social support system

சமுதாய ஆதரவுக் கட்டுக்கோப்பு

society for all ages

அனைத்து வயதினருக்குமான சமுதாயம்

spouse benefit

வாழ்க்கைத்துணை உதவிப்படி

stages of loss and grief


denial, anger, bargaining, depression & acceptance

இழந்து வருந்தும் கட்டங்கள் 


மறுத்தல்,  சினத்தல், பேரம்பேசல், சோர்தல், ஏற்றல்

stakeholders

கரிசனையாளர்கள் 

stereotyping of older persons

முதியோரைப் படிவார்ப்புக்கு உட்படுத்தல்

structural lag

கட்டமைப்பு வாரியான பின்னடைவு

subculture theory

உப பண்பாட்டுக் கோட்பாடு

subjective age identity

அகவய வயது வரையறை

successful aging

நலம்பெற மூப்பெய்தல்

support bank

ஆதரிப்பு வலையம்

support system

ஆதரிப்புக் கட்டுக்கோப்பு

supportive housing

ஆதரிப்பகம்

surrogate parents

பதிலிப் பெற்றோர்

survivor's benefit

மீந்தார் உதவிப்படி

suttee

உடன்கட்டையேறல்

telemedicine

தொலைமருத்துவம்

temperament

குணவியல்பு

terminal care

கடையிறுதி நோயாளர் பராமரிப்பு

tertiary care

மூன்றாம்நிலைப் பராமரிப்பு; சிறப்புவகை மருத்துவமனைச் சேவைகள்

theory of intergenerational solidarity

தலைமுறைகளுக்கு இடைப்பட்ட தோழமைக்

கோட்பாடு

total dependency ratio

தங்கிவாழ்வு மொத்த விகிதம்

traditional women

மரபொழுக்க மாதர்

trait theory

பாங்கியற் கோட்பாடு

transition

நிலைமாற்றம்

under-employment

குறைந்த வேலை

under-served areas

சேவை குறைந்த பகுதிகள்

unhealthy diet

நலம்படா உணவு

veneration

வணக்கவொடுக்கம்

vested

உரித்துடைய

vesting rules

உரித்து விதிகள்

voluntary part-time work

உளமிசைந்த பகுதிநேர வேலை

voter turnout

வாக்களித்தோர் தொகை

wealth

செல்வம்

welfare service

பொதுநல சேவை

welfare state

பொதுநல அரசு

well elderly

உடனல முதியோர்

well-being

சுகசேமம்

wisdom

ஞானம்

young-old 

இளமுதியோர் (65-74)


No comments:

Post a Comment