Search This Blog

ENGLISH-TAMIL PHRASES

E-COLI - ENVIRONMENTALLY


E. Coli = Escherichia Coli

ஈ-கொலாய் பற்றுயிரி; குடற்கோலுருப் பற்றுயிரி

eagle wood

அகில்

early adult transition

இளமுதிர்வு நிலைமாற்றம் (17-45)

early adulthood

இளமுதிர்வு (17-45)

early childhood education

இளம்பராயக் கல்வி

early detection

தொடக்கத்திலேயே கண்டறிதல்

early family formation

இளவயதில் குடும்பம் அமைத்தல்

early foetal death

கர்ப்பச்சிசு முன்னிறப்பு

early marriage

இளவயது மணம்

early pregnancy

இளவயதுக் கர்ப்பம்

early referral

வேளைக்கே தொடர்புபடுத்தல்

early retirement age

இள ஓய்வு வயது (62)

early retirement incentive program

இள ஓய்வு ஊக்குவிப்புத் திட்டம்

early signal grass

ஏலம்சாணிப்புல்

early term birth

முந்து மகப்பேறு; முந்திப் பிறத்தல் (37-38 கிழமைகள்)

early weaning

வேளைக்கே பால்குடிமறப்பு

early years centre

பாலர் நிலையம்

earned premium

ஈட்டிய கட்டுப்பணம்

earnest money deposit

நாட்டப் பணவைப்பு

earnings test

உழைப்பு வரம்பு

Earth Day

புவி நாள்

earthquake insurance

நிலநடுக்க காப்புறுதி

Earth Summit

புவி உச்சமாநாடு

earth tremor

நில அதிர்வு

earth watch

புவி கண்காணிப்பு

eating disorder

உண்ணல் கோளாறு

ebb and flow

வற்றுப்பெருக்கு

Ecclesiastical Law

சமயத்துறைச் சட்டம்

echelon

படைக்கூம்பு; கூம்பு படையடுக்கு

echelons, the upper

மேல்மட்டம்; மேல்மட்டத்தோர்

echocardiogram

இதய எதிரொலிப் படம்

echoic memory

ஒலி நினைவாற்றல்

eclectic reader

பரந்துதேர்ந்து வாசிப்பவர்

ecological amplitude

சூழல்வீச்சம்

ecological balance; ecological equilibrium

சூழற்சமநிலை

ecological dominance

சூழல்சார் ஆதிக்கம்

ecological equilibrium = ecological balance

சூழற்சமநிலை

ecological ethics

சூழல் ஒழுக்கம்

ecological impact

சூழல் தாக்கம்

ecological statistics

சூழல் புள்ளிவிபரம்

economic assets

பொருளாதார சொத்துக்கள்

economic demography

பொருளாதார குடிவிபரவியல்

economic dependency ratio

பொருளாதார தங்கியிருப்பு விகிதம்

economic depression

பொருளாதார மந்தம்

economic empowerment programme

பொருளாதார வல்லமை அளிப்பு நிகழ்முறை

economic exploitation

பொருளாதார சுரண்டல்

economic injury level

பொருளாதார பாதிப்பு மட்டம்

economic liberalisation

பொருளாதார கட்டுப்பாடு தளர்த்தல்

economic migrant

பொருள்நாட்டக் குடிபெயர்வாளர்

economic sanctions

பொருளாதாரத் தடைகள்

economic territory

பொருளாதாரப் புலம்

economically active population; labour force

பொருளாதார செயற்பாட்டுக் குடித்தொகை; தொழிற்படை

ecstasy, state of

களிவெறி நிலை

ectopic pregnancy

பிறழ் கருத்தரிப்பு

edaphic characters

மண்ணியல்புகள்

educational attainment

கல்வித் தகைமை ஈட்டம்

educational research

கல்வி ஆராய்ச்சி

effective age

பலித காலம்; விளைபயன் காலம்

effective control

செயலளவிலான கட்டுப்பாடு

effective date

செல்லுபடியாகும் திகதி

effective fertility

பலித மகப்பேறு


(5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையை 15 - 49 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையால் பிரித்த தொகை)

effective range

பலித வீச்சு; விளைபயன் வீச்சு

effectiveness and efficiency

பயன்விளைவும் வினைத்திறனும்

effects of structural adjustment policies and foreign debt on the full enjoyment of all human rights, particularly economic, social and cultural rights

மனித உரிமைகள், குறிப்பாக பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் அனைத்தையும் முற்றிலும்  துய்ப்பதில், கட்டமைப்பு சீரிடற் கொள்கைகளும், வெளி நாட்டுக் கடனும் ஏற்படுத்தும் விளைவுகள்

efficient cause

நிமித்த காரணம்

efficient secretary

திறமைவாய்ந்த செயலாளர்

effluent charge

கழிவுநீர்மக் கட்டணம்

effluent standards

கழிவுநீர்ம நியமங்கள்

ego

அகம்; சுயம்; தன்மானம்

ego, a boost to my

என் தன்மானத்துக்கு ஓர் உந்துவிசை

ego is unconscious, a part of the (Freud)

அகத்தின் ஒரு பகுதி உள்ளத்துள் ஆழ்ந்துள்ளது

ego, massage somebody's

ஒருவரை பெருமிதம் அடையச்செய்

ego ideal

அகக் குறிக்கோள்; சுய குறிக்கோள்

ego trip

தன்தொழில்; தன்காரியம்; தன்கருமம்

egocentric behaviour

அகமைய நடத்தை

egocentrism

அகமைய முனைப்பு; சுயமைய முனைப்பு

egoism

அகங்காரம்; யான்மை

ego-dystonic behavior

அகமுரண் நடத்தை

egotism

தன்னல முனைப்பு

Eh nihilo nihil fit; Nothing comes out of nothing (Parmenides)

இன்மையில் எழுவதும் இன்மையே

eidetic image

அரிய அகக்காட்சி

ejusdem generis; of the same kind

அதே வகைப்பட்ட

elaborate arrangements

விரிவான ஏற்பாடுகள்

elaboration likelihood model

விரித்துரை வாய்ப்பு மாதிரி

elaborative rehearsal

விரித்துரை ஒத்திகை

elderly dependency ratio

முதியோர் தங்கிவாழ்வு விகிதம்

elderly person

முதுவர்

e-mail; electronic mail

மின்மடல்; மின்னஞ்சல்

election by the accused

விசாரணை வகை தொடர்பான குற்றஞ்சாட்டப்பட்டவரின் தெரிவு

election by the crown

விசாரணை வகை தொடர்பான அரச வழக்குத்தொடுநரின் தெரிவு

electoral authoritarianism

தேர்தல் மூலமான வன்கோன்மை

electoral autocracy

தேர்தல் மூலமான தனியாளாட்சி

electoral college

தேர்தற் குழாம்

electroconvulsive therapy; ECT

மின் அதிர்ச்சி சிகிச்சை

electrodialysis

மின்மவழிச் சுத்திகரிப்பு

Electroencephalogram; EEG

மூளை மின்னலைப் பதிவு

electronic communication

மின்மத் தொடர்பாடல்

electronic funds transfer

மின்ம நிதிய மாற்றீடு

electronic information

மின்மத் தகவல்

electronic wearables

மின்ம அணிகலன்கள்

elementary school

தொடக்கப் பாடசாலை

elements of a crime (intent, conduct, concurrence, and causation)

குற்றத்தின் கூறுகள்


(நோக்கம்; செயல்; நோக்கமும் செயலும் உடனிகழ்தல்; உடனிகழ்கையில் குற்றம் இடம் பெறல்)

elevated mood

உள்ளப் பூரிப்பு

eligibility to refer claim

கோரிக்கையை பாரப்படுத்தும் தகவு

elimination of all forms of religious intolerance

மதங்களைச் சகியாத செயல்முறைகள் அனைத்தையும் ஒழித்தல்

eliminativism

வழுகளைவாதம்

elite, the

மேட்டிமைக் குழாம்

elite military team

மேட்டிமைப் படையணி

elite athlete

மேட்டிமை மெய்வலர்

elite military academy

மேட்டிமைப் படைக் கல்விக் கழகம்

emaciated body

நலிந்த உடல்

embargo, economic

பொருளாதாரத் தடையாணை

embedded journalist

உடனுறை ஊடகர்

emblem of peace, The dove is an

அமைதியின் சின்னம் புறா

emblematic cases

வகைமாதிரி வழக்குகள்

embodiment of truth

உண்மையின் திருவுருவம்

embolic cerebrovascular accident

மூளைக்குருதிக்கலன் அடைப்பு

emergency barrage

அவசர பல்லவேட்டு

emergency contraception

அவசர கருத்தடை

emergency counter-preparation

அவசர எதிர் ஆயத்தம்

emergency medical attendant

அவசர மருத்துவ பணிவிடையாளர்

emergency preparedness

அவசர தயார்நிலை

emeritus professor; professor emeritus

தகைசால் பேராசிரியர்

eminent domain

அரச கையக உரிமை

Eminent Persons Group

மேன்மக்கள் குழுமம்

emission damage

கால்வுச் சேதம்

emission factor

கால்வுக் காரணி

emission inventory

கால்வு அட்டவணை

emission standard

கால்வு நியமம்

emission, greenhouse gas

புவிவெப்ப வாயு கால்வு

emotional intelligence

உணர்வெழுச்சி நுண்மதி

emotional language

உணர்வெழுச்சி மொழி

emotive language

உணர்வுறுத்து மொழி

empathize with your students

உனது மாணவர்களை புரிந்துணரு

empathizing and sympathizing with one another

ஒருவரை ஒருவர் புரிதலும் பரிதலும்

empathy and sympathy

புரிவும் பரிவும்

empathy for others' situations

மற்றவர்களின் நிலைவரங்களை புரிந்துணரல்

empathy with their students, Teachers'

ஆசிரியர்கள் தமது மாணவர் களை புரிந்துணரல்

emphysema

நுரையீரல் வளிப்பை வீக்கம்

empirical evidence

பட்டறிவுச் சான்று

empirical statement

பட்டறிவுக் கூற்று

empirical truth claim

பட்டறிவு மெய்மைக் கோரிக்கை

employed population

தொழில்புரிவோர் தொகை

employer's liability insurance

தொழில்கொள்வோர் பொறுப்புக் காப்புறுதி

employment equity

சரிநிகர் தொழில்வாய்ப்பு

employment insurance

தொழிற் காப்புறுதி

employment letter

தொழில்பார்ப்புக் கடிதம்

employment of women with family responsibilities

குடும்ப பொறுப்புடைய பெண்களை பணிக்கமர்த்தல்

employment percentage

தொழில்புரி சதவிகிதம்

emporium, a hardware

உலோகப்பொருள் விற்பனைக்கூடம்

empowerment of women

பெண்களுக்கு வலுவூட்டல்

empty nest

வெற்றுத்தாய்மனை

en banc session

முழுநீதிமன்ற அமர்வு; குறித்த நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் இடம்பெறும் அமர்வு

en bloc; all at the same time

ஒட்டுமொத்தமாக

enable social media to act responsibly, Professional ethics will

சமூக ஊடகங்கள்  பொறுப்புணர்வுடன் செயற்படுவதை துறைமை அறம் இயலச்செய்யும்

enabler of quarrels, Immaturity is an

முதிர்ச்சியின்மை சச்சரவுகளை இயலச்செய்யும்

enabler of gambling, an

சூதாட்டத்தை இயலச்செய்பவர்; சூதாட்டத்தை இயலச்செய்யும் தரப்பு; சூதாட்டத்தை இயலச்செய்யும் காரணி

enabling act

இயலச்செய்யும் சட்டம்

enabling and supportive environments

இயலச்செய்து துணைநிற்கும் சூழ்நிலை

enacted by parliament, legislation

நாடாளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட சட்டவாக்கம்

enactment, legal

சட்ட நிறைவேற்றம்

enactment, legislative

சட்டவாக்க நிறைவேற்றம்

encephalitis; brain fever

மூளைக்காய்ச்சல்

encircling force = enveloping force

சூழு படை

enclave, coastal

கடலோரக் குறிச்சி

encode

பொறிமொழியாக்கு; எடுத்துரை

encounter deaths

எதிர்கொள்வு இறப்புகள்

encounter killings

எதிர்கொள்வுக் கொலைகள்

encrypt

மறைகுறியாக்கு

endangered species

அருகிவரும் உயிரினங்கள்

endemic species

குறும்புல உயிரினங்கள்

end-of-pipe protection

சேர்த்திடு பாதுகாப்பு

end-of-pipe technology

சேர்த்திடு தொழினுட்பவியல்

endogamy and exogamy

அகமணமும் புறமணமும்

endogenous mortality

அகக்காரண இறப்பு

endowment mortgage

மீள்முதல் ஈடு; மீள்முதல் அடைமானம்

endowments, university

பல்கலைக்கழக அறக்கொடைகள்

endorsement

மேலொப்பம்; மாட்டறைவு

ends and means

இலக்கும் வழிவகையும்

energy sources

எரிவலு மூலவளங்கள்

energy theory of valuation

எரிவலுவள மதிப்பீட்டுக் கோட்பாடு

(en)forced disappearances

வலிந்து (பலவந்தமாக) காணாமல் போக்கடிப்புகள்

enforcement of removal orders

அகற்றல் கட்டளைகளை நடைமுறைப்படுத்தல்

English monthly

ஆங்கில மாசிகை

enhancement of the effectiveness of the working methods of the Commission

ஆணையம் செப்பமுறச் செயற்படும் முறைகளை மேம்படுத்தல்

enhancing women's role in community development

சமூக விருத்தியில் பெண்கள் பங்குவகிப்பதை விரிவு படுத்தல்

enigma of life

வாழ்வின் புதிர்; வாழ்க்கைப் புதிர்

enigmatic smile

புதிர்ப் புன்னகை

enjoining order

தடைக் கட்டளை

entente; entente cordiale

கேண்மை உடன்படிக்கை

entering and remaining

புகுந்து தங்கியிருத்தல்

enterprise, private

தனியார் தொழில்முனைவு; தனியார் தொழிலகம்

entertainer, an

கேளிக்கையாளர்; கேளிக்கை கலைஞர்

entertainment show

கேளிக்கை நிகழ்ச்சி

entitled attitude

உரித்துடைமை நாடும் உளப்பான்மை

entitled, feel

உரித்துடைமைக்கு உரியவராக உணரு

entitlement to compensation

இழப்பீட்டு உரித்துடைமை

entitlement to the property

ஆதன உரித்துடைமை

entitlement programs, medicare

மருத்துவ பராமரிப்பு உரித்துடைமை  நிகழ் முறைகள்

entitlements, legal

சட்ட உரித்துடைமைகள்

entitlements, pension

ஓய்வூதிய உரித்துடைமைகள்

entitlements, reform of

உதவிப்படி உரித்துடைமைச் சீர்திருத்தம்

entity, separate

புறம்பான அமைப்பு

entrenched discrimination

நிலைபெற்ற பாரபட்சம்

entrepreneurial skills

தொழில்முனைவுத் திறன்கள்

entrepreneurs

தொழில்முனைவர்கள்

enumeration stage

கணக்கெடுப்புக் கட்டம்

enumerator

கணக்கெடுப்பு அலுவலர்

environment statistics

சூழற் புள்ளிவிபரம்; சூழற் புள்ளி விபரவியல்

environmental assets

சூழற் சொத்துக்கள்

environmental clean-up

சூழல் சுத்திகரிப்பு

environmental conditioning

சூழல் நெகிழ்த்தல்

environmental costs

சூழல்சார் இழப்புகள்

environmental damage cost

சூழல் சேதச் செலவு

environmental debt

சூழற் கடப்பாடு

environmental deficit

சூழல் பற்றாக்குறை

environmental degradation

சூழல் வளம்குன்றல்

environmental disease

சூழல் நோய்

environmental effect

சூழல் விளைவு

environmental expenditures

சூழற் செலவினம்

environmental externalities

சூழல்சார் புறக்கடப்பாடுகள்

environmental functions

சூழல் தொழிற்பாடுகள்

environmental health indicators

சூழல்நலம் காட்டிகள்

environmental impact

சூழலுறு தாக்கம்

environmental impact assessment

சூழலுறு தாக்கக் கணிப்பீடு

environmental impact statement

சூழலுறு தாக்கக் கூற்று

environmental indicator

சூழல் காட்டி

environmental labelling

சூழலுறு தாக்கம் சுட்டிக்காட்டல்

environmental media

சூழல்சார் ஊடகங்கள்


(வளி, நீர், நிலம்)

environmental protection

சூழல் பாதுகாப்பு

environmental quality

சூழல் தரம்

environmental quality standard

சூழல் தர நியமம்

environmental racism

சூழல்சார் இனவாதம்

environmental refugee

சூழல்சார் அகதி

environmental restoration

சூழல் மீள்நிலைப்படுத்தல்

environmental restructuring

சூழல் மீள்கட்டமைப்பு

environmental risk assessment

சூழலுறு பாதிப்புக் கணிப்பீடு

environmental services

சூழற் சேவைகள்

environmental stewardship

சூழல் பராமரிப்பு

environmental sustainability

சூழல் நிலைபேறு

environmental variable

சூழல் மாறி

environmentally adjusted national income

சூழலிழப்புக் கழிந்த தேசிய வருமானம்; இயற்கைவள இழப்புக் கழிந்த தேசிய வருமானம்

environmentally adjusted net domestic product; eco domestic product

சூழலிழப்புக் கழிந்த தேறிய உள்நாட்டு உற்பத்தி; இயற்கை வள இழப்புக் கழிந்த தேறிய உள்நாட்டு உற்பத்தி

environmentally sound technologies

சூழல் நலனோம்பு தொழினுட்ப வியல்கள்

environmentally adjusted net capital formation

சூழலிழப்புக் கழிந்த தேறிய நிலைமுதற்சொத்து உருவாக்கம்; இயற்கைவள இழப்புக் கழிந்த தேறிய நிலைமுதற்சொத்து உருவாக்கம்

No comments:

Post a Comment