Search This Blog

ENGLISH-TAMIL PHRASES (F)

fables, Aesop's

ஈசாப்பின் நீதிக்கதைகள்

fabrication of evidence

சான்று புனைவு

facade, the politician's

அரசியல்வாதியின் போலிமுகம்

face covering

முகத்திரை

face to face

நேருக்கு நேர்

face validity

தோற்ற வலிதுடைமை; தோற்றத்தளவிலான   செல்லுமதி

face value

முகப்புப் பெறுமதி; முகப்பில் பொறித்த பெறுமதி

face value, take at

தோற்றத்தைக் கொண்டு நம்பு

face-lift

முகசெப்பம்

faces, make

அழகு காட்டு; நைக்காட்டு

facial, a

முகவொப்பனை

facial expression

முகபாவம்

facial hair

முகமுடி (தாடி, மீசை)

facilitate discussion

கலந்துரையாடலுக்கு வசதி செய்து கொடு

facilitator, They need a

அவர்களுக்கு ஒரு வசதியாளர் தேவை

facility fee = facilities fee

வசதிக் கட்டணம்

facility, health

சுகாதார நிலையம்

fact, after the

நிகழ்வின் பின்; நிகழ்ந்த பின்

fact, before the

நிகழ்வின் முன்; நிகழமுன்

fact-finding mission

விவரம் அறியும் பயணம்

factionalism

கன்னைவாதம்; உட்கட்சிவாதம்

factitious illness

பாசாங்கு நோய்

factor, an essential

இன்றியமையாத காரணி

facts and fiction

மெய்யும் புனைவும்

facts and figures

விவரங்களும் எண்ணிக்கைகளும்

facts of life, the

மகப்பேற்று விவரங்கள்

facts sheet

விவரமடல்

factual claims

விவர வாதீடுகள்   

factual statement

விவரக் கூற்று

fads, a list of

குறும்பாணிகளின் நிரல்

faecal coliform bacteria

மலக்குடற் பற்றீரியாக்கள்

failed state

தோல்வி அரசு

failure to appear at the proceeding

விசாரணைக்குத் தோற்றத் தவறுதல்

failure to thrive

தேறத் தவறல்

fair and efficient

செவ்விய, திறமான

fair and equitable

செவ்விய, ஒப்புரவான

fair and square = fairly and squarely

செவ்வையாகவும் நேர்மையாகவும்

fair and reasonable

செவ்விய, நியாயமான

fair market value

செவ்விய சந்தைப் பெறுமதி

fair trial

செவ்விய விசாரணை

fairness and natural justice

செவ்விதும் இயற்கை நீதியும்

fairness commission

செந்நெறி ஆணையம்

fairness commissioner

செந்நெறி ஆணையாளர்

fairy tale

மாயமந்திரக் கதை

fait accompli

முடிந்துபோன விடயம்

faith healing

தொழுகைச் சிகிச்சை; தொழுது குணப்படுத்தல் 

faith, lose

நம்பிக்கை இழ

faithful and bear true allegiance, be

நம்பிக்கைக்குரியவராகவும் மெய்விசுவாசம் கொண்ட வராகவும் விளங்கு

fallacy, a logical

ஏரணப் போலி; அளவையியற் போலி; தருக்கப் போலி 

fallen bladder

சிறுநீர்ப்பை இறக்கம்

falling action

சரிவுக் காட்சி

fallow agricultural land

தரிசுப் பயிர் நிலம்

false affidavit

பொய்ச் சத்தியக்கடதாசி

false analogy

பொய் ஒப்புமை

false confidence

பொய் நம்பிக்கை

false consciousness

பொய்யுணர்வு 

false dilemma

பொய்த் திண்டாட்டம்

false evidence

பொய்ச் சான்று; பொய்ச் சாட்சியம்

false flag attack

ஏய்ப்புத் தாக்குதல்

false statement

பொய்க் கூற்று

falsely personate

ஆள்மாறாட்டம் செய்

falsification principle

பொய்ப்பித்தல் நெறி

family class

குடும்ப வகுப்பு

family constellation

குடும்பக் குழுமம்

family counselling

குடும்ப உளவளமதியுரை

family doctor = general practitioner

பொது மருத்துவர்

family feud

குடும்ப மோதல்; குடிப்பகை; குலப்பகை

family health services

குடும்பநல சேவைகள்

family life cycle

குடும்ப வாழ்க்கை வட்டம்

family life education

குடும்ப வாழ்வுக் கல்வி

family member

குடும்ப உறுப்பினர் (அங்கத்தவர்)

family of choice

தெரிவுறு குடும்பம்

family planning

குடும்பக் கட்டுப்பாடு

family planning provider

குடும்பக் கட்டுப்பாட்டுத் துறைஞர் 

family reunification

குடும்ப மீளிணைவு

family unit

குடும்ப அலகு

family violence

உட்குடும்ப வன்முறை 

family wage

குடும்ப வேதனம்

family-friendly society

குடும்பநேய சமூகம்

family-planning acceptor

குடும்பக் கட்டுப்பாடு ஏற்பவர்

fanaticism, religious

சமய வெறித்தனம்

fanatics, religious

சமய வெறியர்கள்

fans, cinema

திரைப்பட இரசிகர்கள்

fantasies, childhood

இளமைக் கனவுகள்

fantasize about becoming a novelist

நாவலாசிரியராக மாற கனவுகாணு

fantastic dreams

விசித்திரக் கனவுகள்

fantasy world, a

கனவுலகு

fantasy, indulge in

கனவுலகில் திளை

FAQ = Frequently Asked Questions

வினாவிடை

farce, literary

இலக்கிய கேலிக்கூத்து

fashion designer

பாணியுடை வடிவமைப்பாளர்

fatality rate

இறப்பு வீதம்

fate was sealed, our

எங்கள் தலைவிதி முடிவு செய்யப்பட்டது

Fathers Day

தந்தையர் நாள்

fatigue and dizziness

அயர்ச்சியும் தலைச்சுற்றும்

fatty acid

கொழுப்பு அமிலம்

fault determination rules

தவறு நிர்ணய விதிகள்

fault line, religious

சமயப் பிளவு

fauna and flora

தாவர, விலங்கினங்கள்

Faustian Bargain = Faustian Pact

விழுமியப்பேரம்; விழுமியங்களை விற்றுப் பிழைத்தல்

faux pas = blunder

அசட்டுத்தனம்

favourite song

உவக்கும் பாடல்; உவந்த பாடல் 

favouritism and corruption

பாரபட்சமும் ஊழலும்

fealty to the king, vow

மன்னனுக்கு பற்றுறுதிச் சூளுரை

fear mongering

பீதி கிளப்பல்

fear of persecution

கொடுமைக்கு உள்ளாகும் அச்சம்

fear psychosis

பயப்பிராந்தி

feature article

சிறப்புக் கட்டுரை

fecal impaction

மலக்கட்டு

Federal Bureau of Investigation

ஒன்றிய புலனாய்வுப் பணியகம்

Federal Court

ஒன்றிய நீதிமன்று

federalism, system of

இணைப்பாட்சி முறைமை

Fédération Internationale de Football Association (FIFA)

அனைத்துநாட்டு உதைபந்தாட்ட ஒன்றியம்

federation of trade unions

தொழிற்சங்க ஒன்றியம்

fee-for-service

சேவைக்கான கட்டணம்

feeling of excitement

பரபரப்புணர்வு

feign sleep

உறங்குவதுபோல் பாசாங்குசெய்

fellow of the college of teachers

ஆசிரியர் கல்லூரிச் சகித்துவர்

fellowship of the college of teachers

ஆசிரியர் கல்லூரிச் சகித்துவம்

female circumcision = female genital mutilation = clitoridectomy = excision

பெண் உறுப்புச் சிதைப்பு

female headship of household

பெண்-தலைமைக் குடும்பம்

female infanticide

பெண்சிசுக்கொலை

female literacy

மகளிர் எழுத்தறிவு

female minstrel

விறலி

female poverty

பெண் வறுமை

female sterilization = tubal occlusion

கருப்பைக்குழாய் அடைத்தல் சிகிச்சை

female-headed household

பெண் தலைமைக் குடும்பம்

female-maintained household

பெண் பராமரிப்புக் குடும்பம்

feminine gender

பெண் பால்

feminisation of poverty

பெண்மயமாகும்வறுமை; பெண்களிடையே   ஓங்கும் வறுமை

feminist theory

பெண்ணியக் கோட்பாடு

feminization of employment

பணியாற்றும் பெண்களின் அதிகரிப்பு

feminized poverty

வறிய பெண்களின் அதிகரிப்பு

femoral artery

தொடை நாடி

fertility decline

கருவள வீழ்ச்சி

fertility rate

பிறப்பு வீதம்

fertility regulation = birth control

பிறப்புக் கட்டுப்பாடு; குடும்பக் கட்டுப்பாடு

fertility centre

கருவள நிலையம்

fertility treatment

கருவளச் சிகிச்சை

fertility-controlling drugs

பிறப்புக் கட்டுப்பாட்டு மருந்துகள்

festival, harvest

அறுவடை விழா

festschrift in honour of the national poet, a

தேசிய கவிஞரை மாண்புறுத்தும்  சிறப்பிதழ்

fetal death rate = fetal mortality

கர்ப்பச்சிசு இறப்பு வீதம்

Feudal Law

மானியச் சட்டம்

fiction and nonfiction

புனைவும் புனைவிலியும் 

fiduciary agent

நம்பக முகவர்

fiduciary partnership

நம்பகப் பங்குடைமை

field capacity

களக் கொள்ளளவு

field day, have a

இச்சைப்படி களமாடு

field fortification

கள வலுவூட்டம்

field marshal

களபதி

field of fire

வேட்டுக் களம்

field order

களக்கட்டளை

FIFA = Fédération Internationale de Football Association

அனைத்துநாட்டு உதைபந்தாட்டக் கழகம்

fight-or-flight response

எதிர்க்கும் அல்லது தப்பும் பதில்வினை 

figurative language

உருவக மொழி

figure of speech

அணி

filial piety

முதியோர் மீதான பற்று

filibuster

இழுத்தடிப்பு

Film Certificate Appellate Tribunal (FCAT)

திரைப்படச் சான்றிதழ் மேன்முறையீட்டு தீர்ப்பாயம்

filtration camp

சல்லடை முகாம்

final act = acte final

இறுதிக் கூற்று 

final and conclusive

இறுதி முடிபான

final cause

இறுதிக் காரணம்

final decision

இறுதி முடிபு

final solution = extermination

கொன்றொழித்தல்

finale to the festivities

கொண்டாட்டங்களுக்கு முத்தாய்ப்பு

finance company

நிதி நிறுமம்

financial accounting

நிதிக் கணக்கீடு

financial advisor

நிதி மதியுரைஞர்

financial claim

நிதிக் கோரிக்கை

Financial Crimes Investigations Division

நிதிக் குற்றப் புலனாய்வுப் பகுதி

financial derivative

பெறுமதி வழிவரும் நிதி ஒப்பந்தம் 

financial institution

நிதி நிறுவனம்

financial planner

நிதித் திட்டமிடுநர்

financial statement

நிதிக் கூற்று

financing condition

நிதியீட்டு நிபந்தனை

finder's fee

கண்டறியுநரின் கட்டணம்

finding fault

தவறு காணல்

fine art

கவின் கலை

fine difference

நுண்ணிய வேறுபாடு

fine motor movements

நுண் உடலியக்கங்கள்

finite resources

முற்றுவளங்கள்

finite verb

முற்றுவினை

Finlandization

பின்லாந்துமயமாக்கம்; அண்டை வல்லரசை மேவும் நிர்ப்பந்தம்

fire control

வேட்டுக் கட்டுப்பாடு

fire damage

தீச்சேதம்

fire direction

வேட்டுத் திசை

fire insurance

தீக்காப்புறுதி

fire on targets of opportunity

வாய்த்த இலக்கு வேட்டு

fire superiority

வேட்டு ஆதிக்கம் 

fire-resistive construction

தீ தடுப்புக் கட்டுமானம்

firing squad

சுடுபடை அணி

first degree burn

மேல் தோலெரிவு

first degree murder (murder committed with deliberately premeditated malice aforethought)

திட்டமிட்ட வன்மக் கொலை (முன்கூட்டியே சிந்தித்து திட்டமிட்ட வன்மக் கொலை)

first detention review

முதலாவது தடுத்துவைப்பு மீள்நோக்கு

First Nations

மூத்தகுலங்கள்; முதற்குடிகள்

First Nations Communities

மூத்தகுல சமூகங்கள்; முதற்குடிச் சமூகங்கள்

first party

முதலாம் தரப்பு

first quarter

முதற் காலாண்டு

first secretary

முதலாம் செயலாளர்

first-past-the-post

பெரும்பான்மை  வாக்குத்  தேர்தல்

fiscal cliff

அரசிறைக் கண்டம்

fiscal property

அரசிறை ஆதனம்

fish farm

மீன் பண்ணை

fishhook

தூண்டில் ஊசி

fish liver oil = cod liver oil

மீன் எண்ணெய்

fish roe

மீன் சினை

fish stock

மீன் இருப்பு

fishing effort

மீன்பிடி முயற்சி

fishing twine

தங்கூசு

fitness centre

உடலுறுதி நிலையம்

fitness hearing

உளநிலைப் பொருத்த விசாரணை

fits and starts, in

விட்டு விட்டு

five-factor model

ஐங்காரணி மாதிரி

fixed assets

நிலைச்சொத்துகள்

fixed fire = concentrated fire

குறி வேட்டு; ஒருமிப்பு வேட்டு

fixed-interval schedule

நிர்ணய இடைவேளை அட்டவணை

fixed-rate mortgage

நிர்ணய வீத அடைமானம்

fixed-ratio schedule

நிர்ணய விகித அட்டவனை

fixtures & fittings

சேர்மானங்களும் பொருத்து கலங்களும்

flank guard = flank patrol

புறச்சுற்றுக் காவலணி

flanking attack

புற அணி மீதான தாக்குதல்

flash flood

அதிரடி வெள்ளம்

flat affect

உணர்வொடுக்கம்

flat cancellation

படுரத்து

fleet policy

பன்னூர்தி ஒப்பந்தம்

flexible employment

நெகிழ் வேலைவாய்ப்பு

flexible retirement

நெகிழ் ஓய்வு

flight of ideas

எண்ணப் பறப்பு

flight risk

(விசாரணைக்குத் தோற்றாமல்) தப்பியோடும் சாத்தியம்

floating assets

தளம்பல் சொத்து

flood, flash

அதிரடி வெள்ளம்

flood insurance

நீர்ப்பெருக்கு காப்புறுதி

flooding therapy

ஆழ்த்தல் சிகிச்சை 

floor limit

கீழ் வரம்பு

floor tile

பரப்பானோடு; தரையோடு

flora and fauna

தாவர விலங்கினங்கள்

flow data

படிமுறைத் தரவுகள்

flower essence

மலர்ச்சாரம்

fluctuation, economic

பொருளாதாரத் தளம்பல்

flue gas

அனல் வாயு

fluid intelligence

நெகிழ் நுண்மதி

fluid retention = oedema

நீர்ப்பிடிப்பு

flutist virtuoso, a

புல்லாங்குழல் விற்பன்னர்

fly ash

பறக்கும் சாம்பல்

focal point = focus

ஈர்ப்புமையம்; குவியம்

focus group

பிரதிநிதித்துவ குழுமம்

f(o)etal death

கர்ப்பச்சிசு இறப்பு

folk theatre

நாட்டார் அரங்கம்

folk-dance

நாட்டார் நடனம்

folk-drama

நாட்டார் கூத்து

folklore

நாட்டார் மரபு

folk-music

நாட்டார் இசை

folksong

நாட்டார் பாடல்

food chain

உணவுச் சங்கிலி

food court

உணவுக் கோட்டம்

food insecurity

நல்லுணவு கொள்ளும் வல்லமை இன்மை

food security

நல்லுணவு கொள்ளும் வல்லமை

food sensitivity (intolerance)

உணவுவகை ஒவ்வாமை

food web

இரைகொள் வலையம்

food, clothing and shelter

உணவு, உடை, உறையுள்

footpath

ஒற்றையடிப்பாதை

footprint across the world, China expands its

சீனா உலகெங்கும் பரந்து தடம் பதித்து வருகிறது

footprint, carbon

கரியச்சுவடு (தடம்)

footprint, digital

எண்மச்சுவடு (தடம்)

footprint, ecological

சூழல் வள நுகர்வு; இயற்கை வள நுகர்வு

footprint of the former mill

முன்னாள் ஆலையின் சுவடு (தடம்)

footprints of animals

விலங்குகளின் அடிச்சுவடுகள் (அடித்தடங்கள்)

force of law

சட்ட வலு

forced (enforced) disappearances

பலவந்தமாக காணாமல் போக்கடிப்புகள் 

forced abortion

பலவந்த கருக்கலைப்பு

forced institutionalization

பலவந்தமாக நிலையத்தில் சேர்த்தல்

forced intervention

பலவந்த தலையீடு

forced marriage

பலவந்த மணம்

forced migration

பலவந்த இடப்பெயர்வு

forced pregnancy

பலவந்த கருத்தரிப்பு

forced prostitution

பலவந்த விபசாரம்

forced reproduction

பலவந்த கருத்தரிப்பு

forced sterilization

பலவந்த கருவளநீக்கம்

forcible confinement

வலிந்து தடுத்துவைப்பு

forcible disappearance

வலிந்து காணாமல் போக்கடிப்பு

forcible entry

வலிந்து நுழைவு

forecast, economic

பொருளாதார எதிர்வுரை

forecast, weather

வானிலை எதிர்வுரை

foreign exchange reserve

வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு

foreign national

வெளிநாட்டவர்

forensic evidence

தடயவியற் சான்று

forensic toxicologist

தடய நச்சியலர்

forensic toxicology

தடய நச்சியல்

forest cover

காட்டுக் கவிகை

forest functions

காட்டின் தொழிற்பாடுகள்

foreword, introduction, preamble, preface

முன்னுரை, அணிந்துரை, பாயிரம், முகவுரை

forge a knife

கத்தி உருவாக்கு (உருப்படுத்து)

forge ahead

முன்னகரு

forgery

போலியாக்கம்; போலியொப்பம்

forged document

போலி ஆவணம்

form and language of documents

ஆவணங்களின் உருவும் மொழியும்

form of application

விண்ணப்ப படிவம்

formal assessment

முறைசார் கணிப்பீடு

formal cause

முறைமைக் காரணம்

formal education

முறைசார் கல்வி

formal inquiry

முறைசார் விசாரணை

formal invalidity

முறைமை வலிதின்மை (வலிதீனம்)

formal organisation

முறைசார் அமைப்பு

formal usage

முறைசார் வழக்கு

formality, a mere

வெறும் ஒப்புரவு

formation, lotus

தாமரை வியூகம்; சக்கர வியூகம்

formula, peace

அமைதி முறைமை

fornication

களவொழுக்கம்; களவுப்புணர்ச்சி (காதலர் களவொழுக்கம்)

fortified town

கடிநகர்

fortuitous cause

தற்செயல் கூற்று

fortuitous event

தற்செயல் நிகழ்வு

fortuitous meeting

தற்செயலான சந்திப்பு

forty-eight (48) hour review

நாற்பத்தெட்டு (48) மணித்தியால மீள்நோக்கு

forward thinking

முன்னோக்குச் சிந்தனை

fossil fuel (coal, oil, gas)

தாது எரியம் (நிலக்கரி, எண்ணெய், வாயு)

fossil oil

தாது எண்ணெய்

foster care, children in

வளர்ப்போரின்  பராமரிப்பில் உள்ள பிள்ளைகள்

foster parent

வளர்ப்புப் பெற்றார்

foul play

வஞ்சனை

foundation course

அடிப்படைக் கற்கைநெறி

foundation, research

ஆராய்ச்சிக் கொடையகம்

foundational theories

மூலநெறிக் கோட்பாடுகள்

founder of a party

கட்சி நிறுவனர்

founder, the plan will

திட்டம் தோற்கும்

founder, the boat will

படகு கவிழும்

founding fathers of Dravidian Movement

திராவிட இயக்கத்தின் பிதாமகர்கள்

fourth estate

ஊடகத் துறை

fourth wall

கற்பனைச் சுவர்; நான்காம் சுவர்

fracking = hydraulic fracturing

தாதுப்பாறை நீர்மத் தகர்ப்பு மூலம் எண்ணெய், எரிவாயு மீட்பு

fragmentary orders

உதிரிக் கட்டளைகள்

fragmentation anxiety = disintegration anxiety

உருக்குலைவுப் பதைப்பு

fragmentation bomb

சிதறு குண்டு

franchise, local

உள்ளூர்க் கிளை

frail elderly, the = frail older persons

தளர் முதியோர்

fraudulent claim

மோசடிக் கோரிக்கை

fraudulent misrepresentation

மோசடிப் பிறழ்கூற்று

freak of nature, a

இயற்கையின் விசித்திரம்

freak storm, a

விசித்திரமான புயல்

free and fair elections

சுதந்திர-செவ்விய தேர்தல்

free association

உளந்திறந்துரைப்பு

free choice

சுயேச்சைத் தெரிவு

free light

தங்குதடையற்ற வெளிச்சம்

free trade

கட்டில்லா வணிகம்

free verse

புதுக்கவிதை

free vote

சுதந்திர வாக்கு

free will

அகமுவந்த விருப்பு; உளமுவந்த விருப்பு

free will, of my own

எனது சொந்த விருப்பத்தின் பேரில்

freedom of association

குழுமச் சுதந்திரம்

freedom of expression

எடுத்துரைக்கும் சுதந்திரம்

freedom of movement

நடமாடும் சுதந்திரம்

freedom of speech

பேச்சுச் சுதந்திரம்

freehold townhouse

தற்கொண்ட நிரைமனை

freelance journalist

சுயேச்சை ஊடகர்

freelance, I work

நான் சுயேச்சைப் பணி புரிகிறேன்

freelancer, I am a

நான் ஒரு சுயேச்சைப் பணியாளர்

French Open

பிரெஞ்சு வரிப்பந்தாட்ட வாகைப்போட்டி

French weekly

பிரெஞ்சுக் கிழமையேடு

frequency of services

சேவை நிகழுமுறை

fresh cut flowers

உடன் கொய்த மலர்கள்

fresh cut foliage

உடன் கொய்த இலைகள

fresh vegetables

உடன் மரக்கறி வகைகள்

freshwater fish

நன்னீர் மீன்

friendly fire

தன்படை வேட்டு

front line

முன்னணி

front organization

வெளிமுக அமைப்பு

frontal fire

முகப்பு வேட்டு

frontal lobe

முன்மூளை மடல்

frozen account

முடக்கிய கணக்கு

frustration-aggression hypothesis

உளமுறிவு-வன்மைக் கருதுகோள்

fry of fish

மீன்குஞ்சு

fuel consumption

எரிய நுகர்வு

fuel, solid

திண்ம எரியம் (எ-கா: விறகு, நிலக்கரி)

fugitive criminal

பிடிபடாத குற்றவாளி

fugitive emission

பிடிபடாத வெளியேற்றம் (ஆவி, புகை, வாயு)

full and inclusive life

(மாற்றுத்திறனாளரை) உள்வாங்கும் முழு வாழ்வு

full spectrum dominance

முற்றுமுழுதான ஆதிக்கம்

full term birth

நிறைமாத மகப்பேறு (39-40 கிழமைகள்)

function of language

மொழியின் தொழிற்பாடு

functional age

தொழிற்பாட்டு வயது

functional competencies

தொழிற்படு தகுதிகள்

functional illiteracy

செயற்படும் எழுத்தறிவின்மை

functional paradigm

செயற்பாட்டுப் படிமை

functional status

தொழிற்படு தகுநிலை

functionally disabled

தொழிற்படு திறன்குன்றிய

functus officio

பணிமுடிவு

fund, research

ஆராய்ச்சி நிதியம்

fundamental attribution error

அடிப்படைக் கற்பித வழு

fundamental concepts

அடிப்படைக் கருத்தீடுகள்

Fundamental Law

அடிப்படைச் சட்டம்

fundamental skills

அடிப்படைத் திறன்கள்

fundamental standards of humanity

அடிப்படை மனிதாபிமான நியமங்கள்

fundamentalism, study

பழைமைநெறிவாதத்தை ஆராய்

funeral director = undertaker

ஈமநெறிஞர்; ஈமநெறியாளர்

funeral home

ஈமச்சாலை

funeral, attend a

ஈமச்சடங்கில் கலந்துகொள்

funeral, It's our

இது நாங்களே பட்டுத்தீர வேண்டியது

funny episode

வேடிக்கைத் துணுக்கு

further reviews

மேலதிக மீள்நோக்குகள்

future tense

எதிர்காலம்

futures contract = futures

எதிர்காலம் குறித்த ஒப்பந்தம்

futuristic design

நூதன வடிவமைப்பு

No comments:

Post a Comment