ENGLISH-TAMIL PHRASES (N)
nadir, reach a | தாழ்ச்சி அடை; படுமோசமான நிலையை அடை |
NASA = National Aeronautics and Space Administration | நாசா = தேசிய வான்கல-விண்வெளி அமைப்பு |
natality rate | பிறப்பு வீதம் |
nation without a state | அரசற்ற இனம் |
National Co-existence Dialogue and Official Languages, Ministry of | தேசிய சகவாழ்வு - கலந்துரையாடல் - ஆட்சி மொழிகள் அமைச்சு |
National Council | தேசிய மன்றம் |
national debt | தேசிய படுகடன் |
national group (a set of individuals whose identity is defined by a common country of nationality or national origin - Oxford) | தேசிய குழுமம் (ஒரே தேசத்தைச் சேர்ந்தோர் அல்லது ஒரே தேசத்தில் உதித்தோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்) |
National Indigenous Peoples Day | தேசிய தொல்குடி மக்கள் நாள் |
national park | தேசிய வனம் |
National Rapporteur on Trafficking and Human Rights Abuse of Women and Girls | மாதர்-சிறுமியர் கடத்தல் மற்றும் மனித உரிமைத் துர்ப்பிரயோகம் குறித்த தேசிய அறிக்கையாளர் |
nationalism, Indian | இந்திய தேசியவாதம் |
nationalities, more than a hundred | நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் |
nationality (citizenship), dual | இரட்டைக் குடியுரிமை (நாட்டுரிமை) |
nationally and internationally | நாடளாவிய முறையிலும் உலகளாவிய முறையிலும் |
nation-state | தேசிய அரசு |
native country | தாய்நாடு |
natural asset | இயற்கைச் சொத்து |
natural capital | இயற்கை மூலதனம் |
natural disaster | இயற்கைப் பேரழிவு |
natural environment | இயற்கைச் சூழல் |
natural family planning = rhythm method | இயற்கைமுறை குடும்பக் கட்டுப்பாடு; இடைவிலக்கு முறை; சூலுறும் நாட்களில் பாலுறவு தவிர்ப்பு |
natural gas | இயற்கை வாயு |
natural habitat | இயற்கை வாழிடம் |
natural heritage = natural patrimony | இயற்கை முதுசொம் |
natural increase | இயல்பான அதிகரிப்பு |
natural justice | இயற்கை நீதி |
natural law | இயற்கை விதி |
Natural Law | இயற்கைச் சட்டம் |
natural obstacles | இயற்கைத் தடங்கல்கள் |
natural pollutant | இயற்கை மாசுபடுத்தி |
natural resources | இயற்கை வளங்கள் |
natural selection | இயற்கைத் தேர்வு |
natural theology | இயற்கை இறையியல் |
naturalized Canadian citizens | குடிபுகுந்த கனடியக் குடியுரிமையாளர்கள் |
naturally occurring retirement communities | இயல்பாய் ஓயும் சமூகங்கள் |
nature reserve | இயற்கைக் காப்புலம் |
nature-nurture controversy | பிறப்பு-வளர்ப்புச் சர்ச்சை; பிறவி-சூழல் சர்ச்சை |
naturopathy | இயற்கைச் சிகிச்சை |
naval attaché | கடற்படைத் தூதிணைஞர் |
naval drone | கடற் சுரும்பூர்தி |
naval rating | கடற்படை அணியாளர் |
necessaries (necessities) of life | உயிர்வாழ்வு வசதிகள் |
necessary and sufficient conditions | அவசிய, போதிய நிபந்தனைகள் |
necessary truth | இன்றியமையா உண்மை எ-கா: இரு முனைகளுக்கு இடையே, அவற்றை இணைக்கும் நேர் கோடே மிகவும் குறுகியது |
need for achievement | சாதனைத் தேவை; சாதிக்கவேண்டிய தேவை |
needle phobia | ஊசி வெருட்சி |
needs and wants | தேவைகளும் அவாக்களும் |
needs of persons with disabilities | மாற்றுத்திறனாளரின் தேவைகள் |
nefarious activities | கேடுகெட்ட செயல்கள் |
negation | மறுப்பு |
negative absorption | மறைப் புறத்துறிஞ்சல் |
negative amortization | தாமத வட்டிக் கடன் பெருக்கம் |
negative characteristics | எதிர்மறைக் குணவியல்புகள் |
negative goodwill | அடா ஆதாயம் |
negative income tax | வரிவிலக்கு வருமானம் |
negative peace | (போர் நிகழா) வெறும் அமைதி |
negative punishment | எதிர்மறைத் தண்டனை |
negative reinforcement | எதிர்மறை வலியுறுத்தல் |
negative resistance | மறை எதிர்ப்பீடு |
negative symptom | எதிர்மறை அறிகுறி |
negative tone | எதிர்மறைத் தொனி |
negative-sum outcome = lose-lose outcome | பொதுத் தோல்விப் பெறுபேறு |
neglect or negligent treatment | புறக்கணித்தல் அல்லது புறக்கணித்து நடத்தல் |
negotiable cheque (check) | கைமாறத்தக்க காசோலை |
neighbourhood childcare facilities | அயலக பாலர் பராமரிப்பு வசதிகள் |
Nemo debet bis vexari pro una et eadem causa = No one ought to be troubled twice for one and the same cause | ஒரே வழக்கிற்கு எவரையும் இருமுறை அலைக்கழித்தல் ஆகாது |
Nemo debet esse judex in propria causa = No one shall be a judge in their own case | எந்த வழக்கிலும் எவரும் தனக்குத் தானே நீதிபதியாகல் ஆகாது |
Nemo judex in parte sua = No person can judge a case in which he or she is a party | தான் ஒரு தரப்பாக விளங்கும் வழக்கிற்குத் தானே நீதிபதியாகல் ஆகாது |
neocon = neoconservative | நவபழமைபேண்வாதி |
neonatal care | பச்சிளம் சிசு-பராமரிப்பு |
neonatal death | பச்சிளம் சிசு-இறப்பு |
nervous system | நரம்புத் தொகுதி; நரம்பு மண்டலம் |
net book value | தேறிய ஏட்டுப் பெறுமதி |
net income | தேறிய வருமானம் |
net migration rate | தேறிய குடிபெயர்வு வீதம் |
net profit | தேறிய இலாபம் |
net worth | தேறிய பெறுமானம் |
neuro trauma centre | நரம்பு ஊறுபாட்டுச் சிகிச்சையகம் |
neurotic disorder | மூளை-நரம்புக் கோளாறு |
neutralization (neutralizing) fire | முடக்குவேட்டு |
neutralize the enemy | எதிரியை முடக்கு |
New Democratic Party of Canada | கனடிய புதிய குடியாட்சிக் கட்சி |
new evidence | புதிய சான்று |
new immigrant | புதிய குடிவரவாளர் |
new international economic order | புதிய சர்வதேய பொருளாதார ஒழுங்கு |
new journalism | புதிய ஊடகவியல் |
new normal | புது வழமை; புதிய வழமை |
new racism | புது இனவாதம் |
newly industrializing countries | புதுக்க உற்பத்திமயமாகும் நாடுகள் |
newly delivered woman | புதுக்கத் தாயான பெண் |
news agencies | செய்தி முகமையகங்கள் |
news analysts | செய்தி ஆய்வாளர்கள் |
news angle | செய்திக் கோணம் |
news conference | செய்தியாளர் மாநாடு |
news source | செய்தியின் தோற்றுவாய்; செய்தி தெரிவித்த தரப்பு |
news writing | செய்தி எழுதுகை |
newscaster | செய்தி அறிவிப்பாளர் |
news feed = web feed | செய்தியூட்டு; இணையவூட்டு |
newspaper circulation | செய்தித்தாள் விற்பனை |
newspaper column | செய்தித்தாள்-பத்தி |
newspaper distribution | செய்தித்தாள் விநியோகம் |
newspaper publication | செய்தித்தாள் வெளியீடு |
newspaper stand | செய்தித்தாள் தாங்கி |
newspaper styles | செய்தித்தாள் பாணிகள் |
newspeak | திரிப்புமொழி |
news writer | செய்தி எழுதுநர் |
next of kin | கிட்டிய உரித்தாளர் |
NGO = Non-Governmental Organization | அரசு சாரா அமைப்பு |
niceties, legal | சட்ட நுணுக்கங்கள் |
night blindness | மாலைக் கண் |
night club | இரவு விடுதி |
nihilistic delusion | சூனிய மலைவு |
No to Violence Against Women | மகளிர் மீதான வன்முறை-எதிர்ப்பு இயக்கம்; மகளிர் மீதான வன்முறையை எதிர்க்கும் இயக்கம் |
no-contact order | தொடர்பு தவிர்ப்புக் கட்டளை |
no-fault insurance | தவறு தவிர்ப்புக் காப்புறுதி |
no-fire zone | மோதல் தவிர்ப்பு வலயம் |
no-fly zone | பறத்தல் தவிர்ப்பு வலயம் |
noise abatement | இரைச்சல் தணிப்பு |
noise zoning | இரைச்சல் வலய வகுப்பீடு |
nolens volens = willy nilly | விரும்பியோ விரும்பாமலோ |
nolle prosequi = the relinquishment by a plaintiff or prosecutor of all or part of a suit | வழக்கு கைவிடல் அறிவிப்பு |
nominal payment | பெயரளவுக் கொடுப்பனவு |
nominalism | பெயரீட்டுவாதம் |
nominative case | எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை |
non compos mentis | புத்திமாறாட்டமுடைய |
Non-Aligned Movement | அணிசேரா இயக்கம் |
non-associational group | அமைவுறாக் குழுமம் |
non-binding resolution | பிணிக்காத தீர்மானம் |
non-capital offence | இறப்புத் தண்டனைக்கு உள்ளாக்காத குற்றம் |
non-cash benefits | காசு அல்லாத நன்மைகள் |
non-cognitivism | அறிகைமறுவாதம் |
non-cognizable offence | பிடியாணையின்றிக் கைதுக்குள்ளாக்காத தவறு |
non-combatants | பொருதாதோர்; போரிடாதோர் |
non-commissioned officer | ஆணையற்ற அதிகாரி |
non-committal reply, a | பிடிகொடாத மறுமொழி |
non-compliance with the act | சட்டத்துக்கு அமைந்தொழுகாமை |
nonconformists | நெறிநிற்காதோர் |
non-consequentialism = deontological ethics | கடப்பாட்டு அறவியல் |
non-contradiction | முரணின்மை |
non-contributory pension system | உதவுதொகை செலுத்தா ஓய்வூதிய முறைமை |
non-cooperation | ஒத்துழையாமை |
non-derogable human rights | மீறமுடியா மனித உரிமைகள் |
non-description drugs = over-the-counter drugs | நிர்ணயமின்றி வாங்கும் மருந்து வகைகள்; நேரே வாங்கும் மருந்துவகைகள் |
non-disclosure of information | தகவல் வெளிப்படுத்தாமை |
non-discrimination, principle of | பாகுபாடுகாட்டா நெறி |
non-drinker | மது அருந்தாதவர் |
non-durable good | நீடிக்காத பொருள் |
non-epileptic seizure | வலிப்பற்ற இழுப்பு |
nonfeasance | செயற்படாமை |
non-fiction | புனைவிலி |
non-formal education | முறையிலாக் கல்வி |
non-hazardous | கெடுதி விளைவிக்காத |
non-insurable | காப்புறுதி செய்யவியலாத |
non-interest income | வட்டி அல்லாத வருமானம் |
non-interest-bearing account | வட்டி பெறாத கணக்கு |
non-linear thinking | படிமுறையற்ற சிந்திப்பு |
non-marital fertility rates | புறமணப்பேற்று விகிதங்கள் |
non-material culture | பொருள் சாராப் பண்பாடு |
non-migrants | குடிபெயராதோர் |
non-owned automobile policy = non-owner's policy | உடைமை கொள்ளாதோர் ஊர்திக் காப்புறுதி ஒப்பந்தம் |
non-paper | வெறும் மடல் |
nonpareil | ஈடிணையற்றவர் |
non-pecuniary damages | பணக்கணிப்புக்கு உட்படாத இழப்பீடு |
non-proliferation, nuclear | அணுவாயுதங்கள் பெருக்காமை |
non-refoulement | (அகதிக் கோரிக்கையாளரை) திருப்பி அனுப்பாமை |
non-refundable tax credit | மீளா வரிக் கழிவு |
non-renewable natural resources | மீள்வுறா இயற்கை வளங்கள் (எ-கா: எண்ணெய், வாயு, நிலக்கரி) |
non-restricted weapons | கட்டுறுத்தப்படாத ஆயுதங்கள் |
non-spermicidal microbicides | விந்துகொல்லா நுண்ணுயிரி கொல்லிகள் |
non-stereotyped portrayal of women | மகளிரை படிவார்ப்புக்கு உள்ளாக்காத சித்தரிப்பு |
non-verbal communication | வாய்மொழியற்ற தொடர்பாடல் |
non-violence | இன்முறை; இன்செயல்; இன்னாசெய்யாமை; அகிம்சை |
non-violent action | இன்முறை நடவடிக்கை; இன்செயல் |
Nordic walking | கோலூன்றி நடத்தல் |
norm crystallization | வழமைத் துலக்கம் |
norm, deviation from | வழமை பிறழ்வு |
normal barrage | வழமையான பல்லவேட்டு |
normal fire zone | வழமைவேட்டு வலயம் |
normal prudence | சாதாரண மதியுடைமை; பொது மதியுடைமை |
normal retirement age | வழமை ஓய்வு வயது (எ-கா: 65) |
normative ethics | வழப்ப அறவியல் |
normative influence | வழப்பத் தாக்கம் |
normative investigation | வழப்ப ஆய்வு |
normative principles | வழப்ப நெறிகள் |
North American Free Trade Agreement = NAFTA | வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை |
Northern Lights, the | வட உலக வானொளிக் கீற்றுகள் |
Noscitur a sociis = A word is known by the company it keeps | சொல்லின் பொருள் அதன் சூழ் நிலையைப் பொறுத்தது |
nostalgia for the Soviet Union | சோவியத் ஒன்றியத்தை நினைந்துருகல் |
nostalgic memories | உருக்கமான நினைவுகள் |
not ordinarily resident | நிலையூன்றா வாசி |
notarial agreement | நொத்தாரிசு மூலமான உடன்படிக்கை |
notarized document | நொத்தாரிசு அத்தாட்சிப்படுத்திய ஆவணம் |
notary public | பிரசித்த நொத்தாரிசு |
notice of appeal | மேன்முறையீடு அறிவிப்பு |
notice of decision | முடிபு அறிவிப்பு |
notice of default | கடப்பாடு தவறிய அறிவிப்பு |
notice of intervention | தலையீடு அறிவிப்பு |
notice of loss | இழப்பு அறிவிப்பு |
notice of termination | முடிவுறுத்தல் அறிவிப்பு |
notice to appear | வெளிப்படல் அறிவிப்பு |
notwithstanding clause = override clause Section 33 of the Canadian Charter of Rights and Freedoms | மீச்செல் பிரிவு
கனடிய உரிமைகள் - சுதந்திரங்கள் பட்டயத்தின் 33ம் பிரிவு |
notwithstanding the lapse of time | காலங் கழிந்தும் கூட |
delicacy of nuance | நயநுட்பச் சுவை |
nuanced description | நயநுட்ப விபரம் |
nuances, cultural | பண்பாட்டு நயநுட்பங்கள் |
nuclear energy | அணுவலு |
nuclear family | தனிக்குடும்பம்; பெற்றோர், பிள்ளைகள் மாத்திரம் கொண்ட குடும்பம் |
nuclear family household | தனிக்குடும்ப வீட்டார் |
nuclear power plant | அணுமின் ஆலை |
nuclear proliferation | அணுவாயுதப் பெருக்கம் |
nuclear radiation | அணுக் கதிர்வீச்சு |
nuclear reactor | அணு உலை |
nuclear waste pollution | அணுக் கழிவு மாசு |
nuclear winter | அணுப்போர்க் குளிர்மை |
nuclear, if they hesitate to agree go | அவர்கள் இணங்கத் தயங்கினால், கடும்பிடி பிடி |
nuclear, Will South Korea go? | தென் கொரியா அணுக்குண்டு தயாரிப்பில் ஈடுபடுமா? |
nudist colony | அம்மணப் புலம் |
null and void, declare the contract | ஒப்பந்தம் வெற்றுவெறிதான தென வெளிப்படுத்து |
Nulla poena sine lege = No penalty without a law | சட்டமின்றித் தண்டமில்லை |
nullify a contract | ஒப்பந்தத்தை வெற்று வெறிதாக்கு |
nuptiality rate | மணம்புரி வீதம் |
nurse (nursing) consultant | செவிலிய உசாவலர்; தாதிமை உசாவலர் |
nursery school | பாலர் பாடசாலை |
nursing facility | பராமரிப்பு நிலையம் |
nursing home | பராமரிப்பகம் |
nursing visit | பராமரிக்க வருகை |
nursing woman | பாலூட்டும் தாய் |
nutritional supplements | நிரவல் சத்துணவு வகைகள் |
nutritious food | சத்துணவு |
No comments:
Post a Comment