Search This Blog

அரசறிவியல் = POLITICAL SCIENCE


absent from voting

வாக்களியாது வெளியேறு

abstain from voting

வாக்களிப்பதை தவிர்

absolutism

தனியாட்சி

abuse of power

அதிகார துர்ப்பிரயோகம்

accession to the throne

அரியணை ஏற்பு

accession to the UN

ஐ.நா.வில் அங்கத்துவம் ஏற்பு

accord, peace

அமைதி உடன்பாடு

act of parliament

நாடாளுமன்றச் சட்டம்

ad hoc committee

தேவைநேரக் குழு

ad referendum

பேச்சளவில் உடன்பாடு

affirmative action

பாகுபாட்டை ஈடுசெய்யும் நடவடிக்கை

agrément

சம்மதம்

aide mémoire

நினைவுதவிக் குறிப்பு

air attaché

வான்படைத் தூதிணைஞர்

alternat

தேசிய முதன்மை

ambassador

தூதர்

Ambassador Extraordinary and Plenipotentiary

அதிவிசேட முழுவலுவாய்ந்த தூதர்

Ambassador-Designate

அமர்த்தப்பட்ட தூதர்

Ambassadress

தூதரின் பாரியார்

anarchy

ஆட்சியறவு; களேவரம்

anarchism

ஆட்சியறவு நெறி (இது பலவந்த ஆட்சிவகை எதற்கும் எதிரான கோட்பாடு; சமூகத்தை ஆள்வதற்கு கையாளப்படும் வலுவின் உருவமாய் விளங்கும் அரசுக்கு எதிரானது; பெரும்பான்மை யோரின் ஆட்சி என்று பொருள்படுவதை விடுத்து, அனைவரின் இசைவையும் ஈட்டிய ஆட்சி என்று பொருள் படுவது. அத்துணை சுதந்திரத்தை ஈயும் ஆட்சியையே ஆட்சியறவு வாதிகளால்  சகிக்கமுடியும் - Bertrand Russell)

arbitral tribunal

நடுத்தீர்ப்பாயம்

arbitrary detention

விதிமுறைமீறிய தடுத்துவைப்பு

arbitration

நடுமை

arbitration board

நடுமைச் சபை

arbitrator

நடுத்தீர்ப்பாளர்

aristocracy

உயர்குடியாட்சி; உயர்குலம்

army attaché

தரைப்படைத் தூதிணைஞர்

assistant attaché

உதவித் தூதிணைஞர்

asylum

தஞ்சம்

asymmetrical federalism

நிகர்சீரிலா இணைப்பாட்சி

attaché

தூதிணைஞர்

Attorney General

அரச தலைமைச் சட்டவாளர்

authoritarianism

வன்கோன்மை

autocracy

தனியாளாட்சி

autocrat

தனியாட்சியாளர்

autogenocide

தன்னினப் படுகொலை

autonomy

தன்னாட்சி; தன்னாண்மை

balance of power

வலுச்சமநிலை

belligerency

போர்க்குணம்

bicameralism

இருமன்ற முறைமை

bilateral negotiations

இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

bill, reform

சீர்திருத்த சட்டமூலம்

bondable, Are you? = Are you without a criminal record?

நீங்கள் குற்றப்பதிவற்றவரா?

bout de papier

பொது மடல்

breaking relations

உறவு துண்டிப்பு

buffer state

ஏமநாடு

bureaucracy

பணித்துறை(மை)

bureaucrat

பணித்துறைஞர்

cabal

சூழ்ச்சிக்குழு

cabinet solidarity

அமைச்சரவைத் தோழமை

calls and calling cards

சந்திப்புகளும் சந்திப்பு மடல்களும்

canton

புலம்

casus belli

பாதக நடவடிக்கை

caucus

கட்சிக் குழுக்கூட்டம்

cause of democracy

குடியாட்சிக் குறிக்கோள்

census

தொகைமதிப்பு

centralized state

ஒருமுக அரசு

chancelleries

வெளியுறவு அலுவலகங்கள்

chancery

தூதரக அலுவலகம்

chancery, head of

தூதரக தலைமை அலுவலர்

chargé d'affaires ad hoc

தனிநோக்க தூதரகப் பொறுப்பாளர்

chargé d'affaires ad interim

இடைக்கால தூதரகப் பொறுப்பாளர்

charismatic authority

ஆட்கவர்ச்சி அதிகாரம்

checks and balances

கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும்

chief of mission

தூதரக அதிபதி

circuit court

சுற்றமர்வு நீதிமன்று

citizenship

குடியுரிமை

civic centre

குடிமை நிலையம்

civic duty

குடிமைக் கடமை

civic holiday = public holiday

குடிமை விடுதலை

civic nationalism

குடிமைத் தேசியநெறி

civil commotion

குடியினர் கொந்தளிப்பு

civil court

குடியியல் நீதிமன்று

civil disobedience

குடியினர் பணியாமை

Civil Law

குடியியற் சட்டம்

civil liberties

குடியியல் உரிமைப்பேறுகள்

civil litigation

குடியியல் வழக்காடல்

civil rights

குடியியல் உரிமைகள்

civil servant

குடியியற் சேவையாளர்

civil society

குடிமைச் சமுதாயம்

civilian attaché

குடிசார் தூதிணைஞர்

civilian dress

குடியாளர் உடை; பொது உடை

civilian witness

குடியாளர் சாட்சி

civilian-based defence

குடிசார் பாதுகாப்பு

civilians

குடியினர்; குடிமக்கள்; பொதுமக்கள்

clearance, security

பாதுகாப்பு ஒப்புமடல்

coalition

கூட்டணி; அணிக்கூட்டு

coalition government

கூட்டரசாங்கம்

code of law

சட்டக் கோவை

coercion

பலவந்தம்

cold war

கெடுபிடி; உட்பகை

Cold War

அமெரிக்க-சோவியத் பகைமை

collective security

கூட்டுப் பாதுகாப்பு

colonialism

கட்டியாள்கை

colony

கட்டியாள்புலம்; குடியேற்றம்

commercial attaché

வணிகத் தூதிணைஞர்

common law

வழக்காற்றுச் சட்டம்

Commonwealth

பொதுநலவாயம்

communiqué

கூட்டறிக்கை

community

சமூகம்

communism

பொதுவுடைமை(நெறி)

conciliation board

இணக்க சபை

concordat

பாப்பரசருடன் செய்யப்படும் ஒப்பந்தம்

confederation

கூட்டிணைப்பாட்சி

confer authority

அதிகாரமளி

conference

மாநாடு

Congress, U. S.

ஐக்கிய அமெரிக்க பேரவை

Congressman; Congresswoman

பேரவையாளர்

consent of the governed

ஆளப்படுவோரின் சம்மதம்

conservatism

பழைமைபேணல்; பழைமைபேண் நெறி

conservative party

பழைமைபேண் கட்சி

constituency = electorate

தேர்தற்றொகுதி

constitutional assembly

அரசியல்யாப்பு மன்றம்

constitutional guarantees

அரசியல்யாப்புவழி உத்தரவாதங்கள்

constitutional law

அரசியல்யாப்புச் சட்டம்

constitutionalism

அரசியல்யாப்பு முறைமை

consul, honorary

கெளரவ தூதாணையர்

consular agent

தூதாணை முகவர்

consulate general

உயர் தூதாணையம்

consulate

தூதாணையம்

Convention, The Geneva

ஜெனீவா பொருத்தனை

counselor of embassy

தூதரக மேலதிகாரி

country desk

நாட்டு அலுவலகம்

coup d'état

ஆட்சிக்கவிழ்ப்பு

Covenant, International

அனைத்துநாட்டு உடன்பாடு

credentials = letter of credence

தூதாண்மை நியமன மடல்

cultural attaché

பண்பாட்டுத் தூதிணைஞர்

custom

வழமை

customary law

வழமைச் சட்டம்

de facto ruler

நிகழ்நிலை ஆட்சியாளர்; செயலளவிலான ஆட்சியாளர்

de jure ruler

சட்டநிலை ஆட்சியாளர்; பெயரளவிலான ஆட்சியாளர்

decentralized state

பன்முக அரசு

declaration

பிரகடனம்

delegate responsibilities

பொறுப்புகளை ஒப்படை

delegated authority

ஒப்படைத்த அதிகாரம்

delegates

பேராளர்கள்

delegation of authority

அதிகார ஒப்படைப்பு

delegation of teachers

ஆசிரியர் தூதுக்குழு

demarché

சூழ்வியல் நடவடிக்கை; இராசதந்திர நடவடிக்கை

democide

குடிக்கொலை (குடியினரை அரசு கொல்லுதல்)

democracy

குடியாட்சி; மக்களாட்சி

deputy

பிரதியாளர்

deputy chief of mission

தூதரக பிரதி அதிபதி

deputy minister

பிரதி அமைச்சர்

deregulation

விதிகளைவு

derogatory remarks

இழிவுபடுத்தும் கூற்றுகள்

designated safe countries

பாதுகாப்பானவை என்று சுட்டிய  நாடுகள்

despotism

கடுங்கோன்மை

détente

மீளுறவு

devolution

அதிகாரப் பரவலாக்கம்

dictatorship

தனிவன்கோன்மை

diplomacy

சூழ்வியல்

diplomat

சூழ்வியலர்

diplomatic agent

சூழ்வியல் முகவர்

diplomatic bag = diplomatic pouch

சூழ்வியல் திருமுகப்பை

diplomatic corps

சூழ்வியலர் குழாம்

diplomatic deafness

செவிமடுக்கா சூழ்வியற் பாவனை

diplomatic illness

சூழ்வியற் சுகயீன பாவனை

diplomatic immunity

சூழ்வியல் விதிவிலக்கு

diplomatic note

சூழ்வியற் குறிப்பு

diplomatic privileges and immunities

சூழ்வியற் சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளும்

 

சூழ்வியல் விதிமுறை

diplomatic ranks

சூழ்வியற் பதவிவரிசை

direct democracy

நேரடிக் குடியாட்சி

discretion

தற்றுணிபு

disenfranchisement

வாக்குரிமைநீக்கம்

dispatch

மடல்

dissent

பிணக்கம்; மாறுபாடு; ஒருப்படாமை

dissenters

பிணங்குவோர்; மாறுபடுவோர்; ஒருப்படாதோர்

dual accreditation

இரட்டைத் தூதாண்மை

duke

கோமகன்

dynasty

வமிசம்

economic embargo

பொருளாதாரத் தடையாணை

economic officer

பொருளாதார அதிகாரி

economic sanctions

பொருளாதாரத் தடைகள்

economy

பொருளாதாரம்; பொருண்மியம்

economics

பொருளியல்

electoral college

தேர்தற் குழாம்

elite

மேட்டிமைக் குழாம்; சிட்டர் குழாம்

embargo, economic

பொருளாதாரத் தடையாணை

embassy

தூதரகம்

emigrants

குடியகல்வோர்

emigrate

குடியகல்

emigration

குடியகல்வு

enacted by parliament, legislation 

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டவாக்கம்

enactment, legal 

சட்ட நிறைவேற்றம்

enactment, legislative

சட்டவாக்க நிறைவேற்றம்

entente cordiale

கேண்மை உடன்பாடு

entity, separate

புறம்பான அமைப்பு

envoy, special

சிறப்புத் தூதர்

equality of opportunity

வாய்ப்புச் சமத்துவம்

equality of result

பெறுபேற்றுச் சமத்துவம்

equality of right

உரிமைச் சமத்துவம்

equality rights

சரிநிகர் உரிமைகள்

equitable distribution

ஒப்புரவான விநியோகம்

ethical jurisprudence

ஒழுக்க சட்டவியல்

ethics = moral philosophy

அறவியல்; ஒழுக்கவியல்

ethics commissioner

ஒழுக்கநெறி ஆணையாளர்

ethnic antagonism

இனக்குழுமப் பகை

ethnic cleansing

இனக்குழுமக் களைவு

ethnic composition

இனக்குழுமக் கட்டுக்கோப்பு

ethnic group (a set of individuals whose identity is defined by common cultural traditions, language or heritage - Oxford)

இனக்குழுமம் (பொதுவானபண்பாட்டு மரபுகள், மொழி, பாரம்பரியம் கொண்டோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்)

ethnicity

இனக்குழுமத்துவம்

ethnocentrism

இனக்குழும பக்கச்சார்பு

ethnology

இனக்குழுமவியல்

ethnomethodology

இனக்குழும முறையியல்

ex gracia

நல்லெண்ண நடவடிக்கை

exchange of notes

குறிப்பு பரிமாற்றம்

executive, an

நிறைவேற்றுநர்

Executive, the

நிறைவேற்றுத்துறை

executive president

நிறைவேற்று ஜனாதிபதி

executive presidential system

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமை

exequatur

தூதாணை அனுமதி

extradition

ஆளொப்படைப்பு

extraterritoriality

ஆள்புலம் கடந்த நடவடிக்கை

federalism

இணைப்பாட்சி நெறி

feminism

பெண்ணியம்

final act = acte final

இறுதிக் கூற்று

finale

முத்தாய்ப்பு; மங்களம்; இறுதிநிகழ்வு

Finlandization

பின்லாந்துமயமாக்கம்; அண்டை வல்லரசை மேவும் நிர்ப்பந்தம்

first secretary

முதலாம் செயலாளர்

formal education

முறைசார் கல்வி

formality, legal

சட்ட முறைமை

foul play

வஞ்சனை

franchise = suffrage

வாக்குரிமை

free and fair elections

சுதந்திர-செவ்விய தேர்தல்

free vote

சுதந்திர வாக்கு

freedom of association

குழுமச் சுதந்திரம்

freedom of expression

பேச்சுச் சுதந்திரம்

freedom of movement

நடமாடும் சுதந்திரம்

freedom of speech

பேச்சுச் சுதந்திரம்

full powers

முழு அதிகாரம்

Geneva Convention

ஜெனீவா பொருத்தனை

Geneva Protocol

ஜெனீவா முன்வரைவு

Genocide ("Any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: killing members of the group; causing serious   bodily or mental harm to members of the group; deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part ; imposing measures intended to prevent births within the group; and forcibly transferring children of the group to another group", Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, U. N., 1948)       

இனப்படுகொலை ("தேசிய, இனத்துவ, பேரின, சமயக் குழுமம் எதையும் முழுமையாகவோ பகுதியாகவோ  அழித் தொழிக்கும் எண்ணத்துடன் புரியப்படும் பின்வருவன போன்ற செயல்களுள் எதுவும் இனப்படுகொலை ஆகும்: அக்குழுமத்தவர்களைக் கொல்லுதல்; அக்குழுமத் தவருக்கு பாரதூரமான உடலூறு அல்லது உளவூறு விளைவித்தல்; அக்குழுமத்தவருக்கு முற்றிலும் அல்லது ஓரளவு ஆளழிவு ஏற்படுத்தும் நோக்குடன் அவர்களை வேண்டுமென்றே அத்தகைய வாழ்க்கை நிலைமைகளுக்கு உள்ளாக்குதல்; அக்குழுமத்துள் பிறப்புகளைத் தடுக்கும் எண்ணத்துடன் நடவடிக்கை எடுத்தல்; அக்குழுமத்துப் பிள்ளைகளை வலிந்து இன்னொரு குழுமத்துக்குப் பெயர்த்தல்", இனப்படுகொலைக் குற்றம் தடுத்தல்-தண்டித்தல் ஒப்பந்தம், ஐ.நா.,1948).

genocide by attrition

பல்முனை இனப்படுகொலை

good offices

செல்வாக்கு

governance, good

நல்லாட்சி

government-in-exile

சேயக அரசாங்கம்

guarantee, treaty of

உத்தரவாத பொருத்தனை

head of state

அரசுத் தலைவர்

heterogeneous country

பல்லின நாடு

high commission

தூதரகம்

high commissioner

தூதர்

homogeneous state

ஓரின அரசு; தனியின அரசு

horizontal democracy

கீழ்மேல் குடியாட்சி

hot war

வெம்போர்

House of Commons

மக்கள் அவை

House of Representatives

பிரதிநிதிகள் அவை

Human Rights ("Everyone is entitled to all the rights and freedoms set forth in this Declaration, without distinction of any kind, such as race, colour, sex, language, religion, political or other opinion, national or social origin, property, birth or other status. Furthermore, no distinction shall be made on the basis of the political, jurisdictional or international status of the country or territory to which a person belongs, whether it be independent, trust, non-self-governing or under any other limitation of sovereignty", The Universal Declaration of Human Rights, UN,1948, Article 2)

மனித உரிமைகள் ("இனம், நிறம், பால், மொழி, சமயம், அரசியல் அபிப்பிராயம் அல்லது வேறு அபிப்பிராயம், தேசியத் தோற்றுவாய் அல்லது சமுதாயத்  தோற்றுவாய், உடைமை, பிறப்பு அல்லது வேறு தகுநிலை போன்ற பாகுபாடு எதுவுமின்றி அனைவரும் இப்பிரகடனத்தில் எடுத்துரைக் கப்பட்ட உரிமைகள் சுதந்திரங்கள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள்.  மேலும், ஒருவரது நாடு அல்லது ஆள்புலம் சுதந்திரமானதாகவோ, நம்பிக்கைப் பொறுப்பாள் புலமாகவோ, தன்னைத்   தானே ஆளாததாகவோ, வேறு வகையில் இறைமை மட்டுப்பட்டதாகவோ விளங்கினாலும் கூட, அதன் அரசியல் தகுநிலையை அல்லது நியாயாதிக்க தகுநிலையை அல்லது சர்வதேய தகுநிலையை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு பாகுபாடு காட்டலாகாது", உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், ஐ. நா., 1948, உறுப்புரை 2)

immigrants

குடிவரவாளர்கள்

immunity, diplomatic

சூழ்வியல் விதிவிலக்கு; இராசதந்திர விதிவிலக்கு

impeach the head of state

அரசுத் தலைவர் மீது குற்றம்பகரு (பழிமாட்டறை)

impeachment of the head of state

அரசுத் தலைவர் மீதான குற்றப்பகர்வு (பழிமாட்டறைவு)

impunity, with

தண்டனைக்கு உட்படாமல்; தண்டனைப் பயமின்றி

injunction

தடையுத்தரவு

interest groups

தனிநலக் குழுமங்கள்; நலன்நாடு குழுமங்கள்

interest party

தனிநலக் கட்சி

intergovernmental panel

நாடுகளுக்கு இடைப்பட்ட குழாம்

international law

அனைத்துநாட்டுச் சட்டம்

International Monetary Fund

அனைத்துநாட்டு நாணய நிதியம்

international order

அனைத்துநாட்டு ஒழுங்கு

international relations

அனைத்துநாட்டு உறவு

irregular arrival

ஒழுங்கீனமாக வந்தடைதல்

irregular arrivals

ஒழுங்கீனமாக வந்தடைவோர்

Judicial Committee of the Privy Council

கோமறை மன்ற நீதிக் குழு

judiciary

நீதித்துறை

junta, military

படையாட்சிக் குழு

jurisprudence

சட்டவியல்

justice

நீதி

laissez-faire

தலையிடா நெறி

Lawmaker = Legislator

சட்டமன்றாளர்

legation

தூதலுவலகம்

legislation

சட்டவாக்கம்

Legislative Assembly

சட்டமன்றம்

Legislator = Lawmaker

சட்டமன்றாளர்

Legislature

சட்டமன்றம்

legitimacy

சட்டப்பேறு

letter of credence = credentials

தூதாண்மை நியமன மடல்

letter of recall

மீளழைப்பு மடல்

liberal democracy

தாராண்மைக் குடியாட்சி

liberal party

தாராண்மைக் கட்சி

liberalism

தாராண்மை நெறி

liberality

தாராண்மை

Lieutenant Governor

மாகாண ஆளுநர்

lobby

வாயிற்கூடம்; அணைவு நாடும் குழுமம்

lobbying

அணைவு நாடுதல்

lobbyist

அணைவு நாடுபவர்

logrolling

வாக்குப் பேரம்

Magna Carta = Great Charter ("No free man shall be seized or imprisoned, or stripped of his rights or possessions, or outlawed or exiled, or deprived of his standing in any other way, nor will we proceed with force against him, or send others to do so, except by the lawful judgement of his equals or by the law of the land" (1215).

மகா பட்டயம் ("சுதந்திர மனிதர் எவரும் கைதுசெய்யப்படல் அல்லது சிறையில் அடைக்கப்படல் அல்லது அவருடைய உரிமைகள் அல்லது உடைமைகள் களையப்படல் ஆகாது; அல்லதுசட்டப்படி அவருக்கு உரித்தான பாதுகாப்பு நீக்கப்படல் ஆகாது; அல்லது அவர் நாடுகடத்தப்படல் ஆகாது; அல்லது அவருடைய தகுநிலை வேறெந்த விதத்திலும் நீக்கப்படல் ஆகாது; நாங்கள் அவர்மீது பலவந்தம் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் போவதில்லை, அப்படிச் செய்வதற்கு மற்றவர்களை அனுப்பவும் போவதில்லை; அவருக்கு ஒப்பானவர்களின் சட்டபூர்வமான தீர்ப்புக்கு அல்லது நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் அப்படிச் செய்வோம்" (1215).    

Machiavellian

சாணக்கியர்

Machiavellianism

சாணக்கியம்

matriarchy

பெண்ணாதிக்க சமுதாயம்

mediation

நடுக்கட்டு

mediation board

நடுக்கட்டு சபை

mediator

நடுக்கட்டுநர்

memo(random)

அலுவல் குறிப்பு

merit recruitment

தகுதிப்படி ஆட்சேர்ப்பு

messenger

தூதுவர்

migrants

குடிபெயர்வோர்

military attaché

படைத் தூதிணைஞர்

military junta

படையாட்சிக் குழு

military regime

படை ஆட்சிபீடம்

minister plenipotentiary

முழுவலுவாய்ந்த தூததிகாரி

minister-counselor

தூததிகாரி

ministerial responsibility

அமைச்சுப் பொறுப்பு

minority government

சிறுபான்மை அரசாங்கம்

mission

தூதரகம்

mixed economy

கலப்புப் பொருளாதாரம்

modernization

நவீனமயமாக்கம்

modus operandi

செயல் முறை

modus vivendi

வாழும் முறை; இடை உடன்பாடு

monarchy

முடியாட்சி

monism

ஒருமைநெறி

moratorium

தற்காலிக தடை

multilateral negotiations

பல்தரப்பு பேச்சுவார்த்தைகள்

multinational state

பல்தேசிய அரசு

multiparty system

பல்கட்சி முறைமை

multipolar world

பல்முனை உலகு

nation without a state

அரசற்ற இனம்

nationhood

தேசியம்

National Council

தேசிய மன்றம்

national debt

தேசிய படுகடன்

national group (a set of individuals whose identity is defined by a common country of nationality or national origin - Oxford)

தேசிய குழுமம் (ஒரே தேசத்தைச் சேர்ந்தோர் அல்லது ஒரே தேசத்தில் உதித்தோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்)

national park

தேசிய வனம்

nationalism, Indian

இந்திய தேசியநெறி

nationalities, more than a hundred

நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள்

nationality, dual = dual citizenship

இரட்டைக் குடியுரிமை

nationally and internationally

நாடளாவிய முறையிலும் உலகளாவிய முறையிலும்

nation-state

தேசிய அரசு

native country

தாய் நாடு

natives

சுதேசிகள்

natural law

இயற்கை விதி

naturalized Canadian citizens

குடிபுகுந்த கனடியக் குடியுரிமையாளர்கள்

naval attaché

கடற்படைத் தூதிணைஞர்

neoconservatism

நவபழைமைபேண் நெறி

new international economic order

புதிய அனைத்துநாட்டுப் பொருளாதார ஒழுங்கு

Non-Aligned Movement

அணிசேரா இயக்கம்

non-associational group

அமைவுறாக் குழுமம்

non-formal education

விதிமுறையற்ற கல்வி

notwithstanding clause

மீச்செல் பிரிவு

official opposition

உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சி

oligarchy

சிலவராட்சி; செல்வர்குழாம்

ombudsman

முறைகேள் ஆணையாளர்

one-party-dominant system

ஒருகட்சியாண்மை; ஒருகட்சியாதிக்கம்

opposition

எதிர்க்கட்சி

optional protocol

விருப்பத்தெரிவு வரைமுறை

order-in-council

அரச மன்றக் கட்டளை

paradiplomacy

உபசூழ்வியல்; உபவெளியுறவு

parliamentary sovereignty

நாடாளுமன்ற இறைமை

party discipline

கட்சி ஒழுக்கம்

passport

கடவுச்சீட்டு

patriarchy

ஆணாதிக்க சமுதாயம்

persona grata

ஏற்கத்தகுந்தவர்

persona non grata

ஏற்கத்தகாதவர்

personal freedom

தனியாள் சுதந்திரம்

philosopher–king

மெய்நெறிமன்னர்

plebiscite

குடியொப்பம்

pluralism

பன்மைத்துவம்

plurality

பன்மை

plutocracy

செல்வராட்சி

poachers

கள்ள வேட்டையாளர்கள்; கள்ள மீனவர்கள்

poaching

கள்ளவேட்டை; கள்ளமீன்பிடி

police chief

காவல்துறை அதிபர்

police constable

காவல்துறையாளர்

police officer = policeman = policewoman

காவல்துறை அதிகாரி

policing

காவல்துறையியல்

political alienation

அரசியற் புறக்கணிப்பு; அரசியல் அந்நியப்பாடு

political assassination

அரசியற் படுகொலை

political consultant

அரசியல் உசாவலர்

political correctness

அரசியல் உசிதப்பாடு

political culture

அரசியற் பண்பாடு

political dissidents

அரசியல் மாற்றுக் கருத்தாளர்

political economy

அரசியற் பொருளாதாரம்

political opinion

அரசியல் அபிப்பிராயம்

political orientation

அரசியல் நிலைப்பாடு

political patronage

அரசியலணைவு

political power

அரசியல் அதிகாரம்

political process

அரசியற் படிமுறை

political repression

அரசியல் அடக்குமுறை

political science

அரசறிவியல்

political strategist

அரசியல் விரகாளர் (தந்திரோபாயி)

political will

அரசியற் திடசித்தம்

politically correct language

அரசியலுக்கு உசிதமான மொழி

politically sensitive situation

அரசியல்வாரியாக உணர்ச்சி வசப்படுத்தும் நிலைவரம்

politicide

அரசியற்கொலை

politics

அரசியல்

polity, democratic

குடியாட்சி அரசமைப்பு

popular sovereignty

குடியிறைமை

portfolio

அமைச்சுடைமை

pour condoler

இரங்கற் குறிப்பு

pour féliciter

பாராட்டுக் குறிப்பு

pour memoire

நினைவூட்டற் குறிப்பு

pour prendre congé

விடைபெறு குறிப்பு

pour presenter

அறிமுகக் குறிப்பு

pour remercier

நன்றிக் குறிப்பு

power politics

வல்லாதிக்க அரசியல்

precedence = priority

முதன்மை

precedent

முன்னிகழ்ச்சி; முன்தீர்ப்பு

preferential ballot

தெரிவொழுங்கு வாக்கு

prerogative

மீயுரிமை

President, the new

புதிய அரசதிபர்

pressure group

நிர்ப்பந்தக் குழுமம்

primus inter pares = first among equals

ஒப்பாருள் முதல்வர் 

prisoners of conscience   

கொள்கைநெறிக் கைதிகள்

private law

ஆளுறவுச் சட்டம்

private member's bill

தனி அங்கத்தவர் சட்டமூலம்

privatization

தனியார்மயமாக்கம்

Privy Council

கோமறை மன்றம்

proclamation

பிரகடனம் 

produce the accused before the court

குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்து

progressive tax

ஏறு வரி

proletariat

பாட்டாளி வர்க்கம்

property franchise (suffrage)

சொத்துவழி வாக்குரிமை

proportional representation

விகிதாசார பிரதிநிதித்துவம்

protectorate, a British

பிரித்தானிய கட்டிக்காப்பு நாடு; பிரித்தானியாவால் கட்டிக் காக்கப்படும் நாடு

protocol officer

உபசரணை அதிகாரி

protocol, diplomatic

சூழ்வியல் விதிமுறை

Protocol, Geneva

ஜெனீவா முன்வரைவு

pro tem speaker

தற்சமய தவிசாளர்

provincial council

மாகாண மன்றம்

provincial court

மாகாண நீதிமன்று

public law

பொதுச் சட்டம்

quorum

நிறைவெண்

race (a set of individuals whose identity is defined by physical characteristics (Oxford)

இனம் (உடற் சிறப்பியல்புகள் கொண்டு வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்)

rapporteur

அறிக்கையாளர்

rapprochement

உறவு மேம்பாடு

ratification of the treaty

உடன்பாட்டுக்கு இசைவளிப்பு

ratify the treaty

உடன்பாட்டுக்கு இசைவளி

realpoitik

தன்பயன் அரசியல்

recognition

அங்கீகாரம்

redistribution

மீள்விநியோகம்

referendum

மக்கள்தீர்ப்பு; ஒப்பங்கோடல்

reform liberalism

சீர்திருத்த தாராண்மை நெறி

refrain from criticizing

கண்டிப்பதைத் தவிர்

regent

பதிலாட்சியாளர்

regime

ஆட்சிபீடம்

regime change

ஆட்சி மாற்றம்

regressive tax

இறங்கு வரி

regulative law

ஒழுங்குறுத்து சட்டம்

regulatory agency

ஒழுங்குறுத்து முகமையகம்

Remembrance Day

நினைவேந்து நாள்; நினைவுகூர்(வு) நாள்

remainder

மீதி; எச்சம்

reminder

நினைவுக் குறிப்பு

representative

பிரதிநிதி

representative democracy

பிரதிநிதித்துவ குடியாட்சி

republic

குடியரசு

residual powers

எஞ்சிய அதிகாரங்கள்

restraining order

தடைக் கட்டளை

return of the writs

தேர்தல்-ஆணை மீள்வு

returning officer

தேர்தற் பொறுப்பதிகாரி

revolt

கிளர்ச்சி

right to information

தகவல் அறியும் உரிமை

right to freedom of opinion and expression

சுதந்திர கருத்துரைப்பு, எடுத்துரைப்பு உரிமை

royal assent

அரச இசைவு

rule of law

சட்ட ஆட்சி

run-off, hold a

மறுதேர்தல் நடத்து

sanction a tax increase

வரி அதிகரிப்புக்கு இசை

sanction of the court

நீதிமன்றின் இசைவாணை

sanctions, economic

பொருளாதார முட்டுக்கட்டைகள்

scientific socialism

அறிவியற் சமூகவுடைமை

second secretary

இரண்டாம் செயலாளர்

self-determination

சுயநிர்ணயம்; சுநிர்ணய உரிமை

self-governance

தன்னாண்மை

self-government

தன்னரசு

self-rule

தன்னாட்சி

Senate

மூதவை

Senator

மூதவையாளர்

separation of powers

அதிகாரப் பிரிவீடு

shadow cabinet

நிழல் அமைச்சரவை

single transferable vote

தனி மாற்று வாக்கு

single-party system

தனிக் கட்சி முறைமை

social democrat

சமுதாய குடியாட்சி நெறிஞர்

social justice

சமுதாய நீதி

socialism

சமூகவுடைமை

society

சமுதாயம்

Solicitor General

மன்றாடுநர் அதிபதி

sovereignty

இறைமை

special counsel     

சிறப்பு சட்டவுரைஞர்

spontaneous order

இயல்பெழுச்சி ஒழுங்கு

standing committee

நிலையியற் குழு

stare decisis

முன்தீர்ப்பு வழிநிற்கை

state

அரசு

state of affairs

நிலைவரம்

statesman

அரசியல்மேதகை

statute

நியதிச்சட்டம்

sub judice, This case is

இந்த வழக்கு நீதிமன்றின் விசாரணைக்கு உட்பட்டுள்ளது (ஆதலால் அதைப் பற்றி வெளியே கதைப்பது சட்டவிரோதம்)

superior court

மேல் நீதிமன்று

supremacy of the constitution

அரசியல்யாப்பின் மீயாண்மை

supremacy of the parliament

நாடாளுமன்றத்தின் மீயாண்மை

supreme court

உச்ச நீதிமன்று

Tamil Nation

தமிழினம்; தமிழர் தேயம்

territorial integrity

ஆள்புலத் திண்மை; ஆள்புலக் கட்டுறுதி

territorial waters

ஆள்புல நீர்நிலைகள்

territory, India’s

இந்தியாவின் ஆள்புலம்

theocracy

குருமாராட்சி

third secretary

மூன்றாம் செயலாளர்

totalitarianism

தனிக்கட்சியாட்சி

tour d'horizon

கலந்துரையாடல்

traditional authority

மரபுவழி அதிகாரம்

transitional government

மாறுகால அரசாங்கம்

transitional justice

மாறுகால நீதி

(பொறுப்பேற்பை உறுதிப்படுத்தி, நீதிக்குத் தொண்டாற்றி, மீளிணக்கத்தை எய்துவதற்கு ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் முயற்சியுடன் தொடர்புடைய - கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட பாரிய தீங்குகளை எதிர்கொள் வதற்கு ஒரு சமூகம் மேற்கொள்ளும் முயற்சியுடன் தொடர்புடைய - படிமுறைகளையும் பொறிமுறைகளையும் கொண்ட முழுப்பொதியும் மாறுகால நீதியின் பாற்படும். வழக்குத்தொடுப்பு முன்முயற்சிகள், உண்மை அறியும் உரிமை குறித்த அனுசரணை முன் முயற்சிகள், இழப்பீடுகள், கட்டமைப்புச் சீர்திருத்தம், தேசிய கலந்துரையாடல்கள் உட்பட நீதிசார்ந்த, நீதிசாராத படிமுறைகளும், பொறிமுறைகளும் அதனுள் அடங்கும். அவற்றுள் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி எதுவும் சர்வதேய சட்ட நியமங்களுக்கும், கடப்பாடுகளுக்கும் அமைவாகவே கையாளப்பட வேண்டும் (ஐ.நா.)

transnational government

நாடுகடந்த அரசாங்கம்

Transparency International

சர்வதேய வாய்மை அமைப்பு

treaty

பொருத்தனை

two-party system

இருகட்சி முறைமை

tyranny

கொடுங்கோன்மை

ultimatum

இறுதி எச்சரிக்கை

ultra vires

அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட

unconstitutional action

அரசியல்யாப்புக்கு ஒவ்வாத நடவடிக்கை

unfriendly act

நட்புமீறிய செயல்

unicameralism

ஒருமன்ற முறைமை

unipolar world

ஒருமுனை உலகு

unitary system

ஒற்றையாட்சி முறைமை

United Nations Organization = UNO

ஐக்கிய நாடுகள் அமைப்பு = ஐ நா

unwritten constitution

எழுதா யாப்பு

vassal state, a

அடிப்பட்ட அரசு

vertical democracy

மேல்கீழ்க் குடியாட்சி

Veterans Day

மறவர் நாள்

veto

வெட்டுவாக்கு

vice consul

துணைத் தூதாணையர்

viceroy

பதிலரையர்

violations of human rights

மனித உரிமை மீறல்கள்

visa

உள்ளிசைவு

welfare state

பொதுநல அரசு

writ of election

தேர்தல் ஆணை

Westminster 

பிரித்தானிய அரசு

Winner-take-all

பெரும்பான்மை மூலமான முழுவெற்றி

No comments:

Post a Comment