Search This Blog

 PHILOSOPHY = மெய்யியல் 

a fortiori; with a yet stronger reason (e. g: If it is wrong to kill animals for food, a fortiori, it is also wrong to kill them for their skin)

கைமுதிகநியாயம்; மிகவும் வலுவான நியாயம் கொண்டு

(எ-கா: விலங்குகளை உணவுக்காகக் கொல்வது தவறு என்பது நியாயம் என்றால், தோலுக்காகவும் கொல்லக்கூடாது என்பது அதைவிட மிகவும் வலுவான நியாயம் கொண்டதாகும்)

a posteriori knowledge; knowledge   from what comes after; inductive knowledge; empirical knowledge

பின்விளைவறிவு; தொகுத்தறிவு; பட்டறிவு

(எ-கா: நான் பிறந்த திகதி: 1983-08-01)

a priori knowledge; knowledge from what is before; deductive knowledge; inferential knowledge

முன்னேதறிவு; உய்த்தறிவு; அனுமான அறிவு (எ-கா: 3 + 2 = 5)

abduction; argument to the best explanation

சிறந்த விளக்க வாதம்

absolute truth

முழு உண்மை

absolutism

ஒற்றைத்துவம்

abstract questions

கருத்தளவிலான வினாக்கள்

absurd example

விழல்மை எடுத்துக்காட்டு

absurdism

விழல்மை

acceptability

ஏற்புடைமை

accidentalism

தன்னிகழ்வு நெறி

actuality

உளமை

adequacy of explanation; explanatory adequacy

விளக்க நிறைவு(டைமை)

advocate's strategy

பரிந்துரைஞரின் உபாயம்

(எ-கா: "இறக்குமதிகள் தடைசெய்யப்பட வேண்டும்." இங்கு மறுபேச்சுக்கு இடமில்லை)

aestheticism

கலையழகு நெறி

aesthetics

கலையழகு; அழகியல்

aetiology

ஏதியல்

affirmation

உறுதியுரை

agape

அன்புநெறி

agitation

பதகளிப்பு

agnosticism

அறியொணா நெறி

alienation

புறத்திப்படுகை

alternative explanation

மாற்று விளக்கம்

altruism

பொதுநலநெறி

ambiguity

இருபொருள்படுகை; பல்பொருள்படுகை; தெளிவீனம்

ambiguous statement

இருபொருட் கூற்று; பல்பொருட்  கூற்று; தெளிவிலாக் கூற்று

ambivalence

இருவுளப்போக்கு

amphiboly

இருபொருட்கூற்று

analogical arguments by properties

தன்மை ஒப்புநோக்கு வாதங்கள்

analogical arguments by relations

உறவு ஒப்புநோக்கு வாதங்கள்

analogical reasoning

ஒப்புநோக்கு நியாயம்

analogue case

ஒப்புத்தெரி பொருள்

analogy

ஒப்பீடு; ஒப்புமை; ஒப்புநோக்கு

analysis

பகுப்பாய்வு

analytic statement

பகுபடு கூற்று

(எ-கா: சகோதரிகள் அனைவரும் உடன்பிறப்புகள்)

anarchism

ஆட்சியறவுநெறி

angst

பதைப்புணர்வு

anomalous statement

பிறழ் கூற்று

anomaly

பிறழ்வு

antecedent

முன்னிகழ்வு; முன் "ஆல்" கூறு

(எ-கா: கடலில் தீப்பற்றினால், மீன்கள் எல்லாம் மரத்தில் ஏறிவிடும்! - சீனப் பழமொழி)

anthropomorphism

ஆளுருமயமாக்கம்; மன்னுருமயமாக்கம்

antinomy

முரண்மை

antirealism

மெய்மைமறுப்பு நெறி

antithesis

எதிர்கோள்; முரணீடு

anxiety; angst

பதைப்பு

aphorism

மணிமொழி

appellation

பெயரீடு

apperception

அகநிகழ் புரிவு

argument

வாதம்

argument to the best explanation

சிறந்த விளக்க வாதம்

argumentative essay

வாதக் கட்டுரை

argumentum ad silentium

வாயடை வாதம்

assumption

எடுகோள்

atheism

இறைமறுப்பு

atomic statement

கூறுபகுப்புக் கூற்று

(எ-கா: பனை ஒரு மரம்)

atomism

கூறுபகுப்பு நெறி

atomist

கூறுபகுப்பு நெறிஞர்

attributes

இயற்பண்புகள்

attribution theory

கற்பிக்கைக் கோட்பாடு

attunement

இசைவிப்பு

authenticity

மெய்யுடைமை

authoritarianism

ஒருகட்சியாட்சி

automation

தன்னிகழ்வு

autonomy

தன்னாண்மை; தன்னாட்சி

axiom; axiomatic truth; self evident truth

மெய்த்தளம்; வெளிப்படை உண்மை

(எ-கா: கூறிலும் முழுமை பெரிது)

barber paradox

சிகைவலர் முரண்புதிர்

(எ-கா: ஓர் ஊரில் ஒரேயொரு சிகைவலர்  இருக்கிறார் என்றும், அங்கு தமக்குத் தாமே சவரம் செய்யாதவர்களுக்கு மாத்திரமே அவர் சவரம் செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படி என்றால், அந்த சிகையொப்பனை யாளருக்கு சவரம் செய்பவர் யார்? மேற்கண்ட கூற்றின்படி தனக்குத் தானே சவரம் செய்யும் எவருக்கும் அவர் சவரம் செய்பவர் அல்லர். ஆகவே அவர் தனக்குத் தானே சவரம் செய்பவர் என்றால், தனக்குத் தானே சவரம் செய்ய முடியாது என்றாகிறது. அத்துடன், அவர் தனக்குத் தானே சவரம் செய்யாதவராக விளங்கினால் மாத்திரமே தனக்குத் தானே சவரம் செய்பவராக விளங்க முடியும் என்றாகிறது! அப்படி என்றால், அந்த சிகைவலருக்கு சவரம் செய்பவர் யார்? Bertrand Russell)

basic statements

அடிப்படைக் கூற்றுகள்

begging the question; petitio principii; assume the conclusion (Aristotle)

மெய்ப்பிக்கமுன் மெய்யெனக் கொள்ளல்; சுழல் ஏதுப் போலி

behaviourism

நடத்தை நெறி

belief

நம்பிக்கை

belief system

நம்பிக்கைக் கட்டுக்கோப்பு

beneficent nature

நலம்புரி இயல்பு

benevolent society

தண்ணளிச் சமூகம்

bias

பக்கச்சார்பு

biconditional statement (iff; if and only if)

இருசார்புக் கூற்று

bigamy

இருதாரம்

bioethics

உயிரியல் அறம்

bivalence

இருவலு (மெய், பொய் வலு)

business ethics

வணிக ஒழுக்கம் (அறம்)

canon

திருமுறை; விதிமுறை

capacity to reason

நியாயம் உரைக்கும் திறன்

capital punishment

இறப்புத் தண்டனை

capitalism

முதலாளித்துவம்

Cartesian doubt; Descartes' doubt

Cogito ergo sum

I think, therefore I am

தெக்காவின் ஐயம்; முற்றுமுழு ஐயம்

(நான் சிந்திக்கிறேன்; ஆகவே நான் உயிர்வாழ்கிறேன்)

categorical imperative; unconditional command

திட்டவட்டமான கடப்பாடு; விதிவிலக்கற்ற கடப்பாடு

categorical proposition

திட்டவட்டமான எடுப்புரை

categorical syllogism

திட்டவட்டமான நியாயத்தொடை

category

வகுதி

category error

வகுதி வழு

catharsis; purification

தூய்மைப்பேறு; அகத்தூய்மைப்பேறு; உளமீட்சி; கலைவடிகால்

causal fallacy

ஏதுப் போலி

causation = causality

ஏதுடைமை; விளைவிப்பு

cause = reason

ஏது

cause and effect

ஏதும் விளைவும்

caveat

அறிவுறுத்தும் எச்சரிக்கை

certainty

உறுதிப்பாடு

ceteris paribus = other things being constant

மற்றவை மாறாவிடத்து

clear and distinct ideas

தெட்டத் தெளிவான எண்ணங்கள்

code of conduct

நடத்தைவிதிக் கோவை

cognition

அறிதிறம்

cognitivism

அறிதிறநெறி

coherence

இயைவு

coherence theory of truth

இயைவு மெய்க் கோட்பாடு

collective use of a term

ஒரு பதத்தின் கூட்டுப் பயன்பாடு

(எ-கா: பாகற்காய் கசக்கும் = பாகற்காய்கள் எல்லாம் கசக்கும்)

collectivism

கூட்டாண்மை

colonialism

கட்டியாள்கை

commensurability

பொது அளவுடைமை

communalism

வகுப்புக்காழ்ப்பு

communism

பொதுவுடைமை

communitarianism

குழுமத்துவம்

compatibilism

அகமுவப்பு-புறக்காரண உடன்பாடு

complex statement

தொகுதிக் கூற்று; சரடுக் கூற்று

complexity

தொகுதியீடு; சரடு

compound statement

கூட்டுக் கூற்று

concept

கருதுபொருள்

concept chart

கருதுபொருள் சட்டகம்

conceptual analysis

கருதுபொருள் ஒவ்வாமை

conceptual incoherence

கருதுபொருள் பகுப்பாய்வு

conceptualism

கருதுபொருள் நெறி

conclusion

முடிபு

concomitant cause

உடனியல் ஏது

conditional statement; If p, then q

நிலைசார் கூற்று

(எ-கா: மழை பெய்தால், அவர்கள் குடை பிடிப்பார்கள்)

conjecture

ஊகம்

connotation = intension

உட்கருத்து

conscience

உளச்சாட்சி

consequent

பின்விளைவுக் கூறு

(எ-கா: தீப்பற்றினால், புகைக்கும்)

consequentialism

விளைபயனறம்

conservatism

பழைமைபேண் நெறி

consistency

இயைபு

consonance

ஒத்திசைவு

constitutionalism

யாப்புமுறைமை

constructivism

அகவிருத்தி நெறி

contextual definition of a word

சொல்லின் சூழ்நிலைக்கான வேற்றுச்சொல் வரையறை; ஒரு சொல் ஒரு சூழ்நிலையில் பொருள்படும் விதத்தை வேறு சொற்களில் வரையறுத்தல்

contextualism

சூழ்நிலை ஆய்வு நெறி

contingent truth

தங்கியமையும் உண்மை

(எ-கா: மனிதர்கள் வேறு உயிரினங்களிலிருந்து உருவாகினார்கள்)

continuum

தொடர்வு

contractarianism

சமுதாய ஒப்பந்த நெறி

contradiction

முரண்பாடு

contradictory statement

முரண்பட்ட கூற்று

contrapositive statement; If not q, then not p

தலைநேர்மாறு கூற்று

contrary statement

எதிர்மாறு கூற்று     

conventionalism

வழமைபேண் நெறி

converse statement; If q, then p

மறுதலைக் கூற்று

(எ-கா: அவர்கள் குடை பிடித்தால், மழை பெய்கிறது என்பதாகும்)

copula (i. e: be, seem, look)

இணைப்புச்சொல்

corollary

நேரடிப் பெறுபேறு

corporal punishment

உடல் தண்டனை

corporeal plenum

பருப்பொருள் முழுமை                             

corporealism

பருப்பொருள் நெறி

corporeality

பருப்பொருண்மை

correlation

இடைத்தொடர்பு

correspondence theory of truth

மெய் நேரொப்புக் கோட்பாடு

(எ-கா: ஒருவர் பிறந்த திகதி 1990-04-22 என்று வைத்துக்கொள்வோம். அதற்கொரு சான்று தேவைப் படுகிறது. அப்பொழுது அவரது பிறப்புச் சான்றிதழ் உற்று நோக்கப்படுகிறது. அவர் தெரிவித்த திகதியும், அவருடைய பிறப்புச் சான்றிதழில் உள்ள திகதியும் நேரொத்தவையாக விளங்குகின்றன. அவர் பிறந்த திகதி இங்கு நேரொப்புக் கோட்பாட்டின்படி எண்பிக்கப் படுகிறது)

cosmogony

இயலுலகப் பிறப்பியல்

cosmopolitanism

பன்பண்பாட்டு நெறி

counter-example

எதிர்-எடுத்துக்காட்டு

counterfactual statement; if p then q

நேர்வெதிர்க் கூற்று

(எ-கா: நீ அழைத்திருந்தால், நான் வந்திருப்பேன்)

criteria

பிரமாணங்கள்

criteria approach

பிரமாண அணுகுமுறை

criterion

பிரமாணம்

criterion of adequacy

நிறைவுடைமைப் பிரமாணம்

criterion of relevance

இயைபுடைமைப் பிரமாணம்

critic's strategy

கண்டிப்பவரின் உபாயம்

(எ-கா: "இறக்குமதிகள் தடைசெய்யப் படவேண்டும் என்னும் கோரிக்கையை நான் கண்டிக்கிறேன்." தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை)

critical thinking

திறனாய்வுச் சிந்தனை

cultural relativism

பண்பாட்டுச் சார்புடைமை நெறி

cynicism

ஏளிதம்

deduction

உய்த்தறிவு

(எ-கா: காகங்கள் எல்லாம் கரியவை; இது ஒரு காகம்; ஆகவே இது கரியது)

deductive argument

உய்த்தறி நெறி

deductive logical thought

உய்த்தறி ஏரண சிந்தனை

deductive reasoning

உய்த்தறி ஏதீடு

defeasibility

இலதாக்கவியலும் நிலை

define

வரையறு

definition

வரையறை

deism

இறைநெறி

democracy

குடியாட்சி

denotation; extension

குறிப்பொருள்

deontology

கடப்பாட்டியல்

descriptive ethics

விவரண அறவியல்

descriptive meaning

விவரணக் கருத்து

despotism

கடுங்கோன்மை

determinism

புறவேது நெறி

deterrence

தடுப்பு

dialectic(s)

தருக்கியல்; முரணியல்; முரணியக்கம்

dialectical materialism

முரணியற் பொருண்மியம்

dialectical method

முரணியல் முறை

dialogue

உரையாடல்

dichotomy

கவர்ப்பாடு; இருபிரிவீடு

dilemma

சங்கடம்; திண்டாட்டம்; கவர்ப்பொறி; இருதலைப்பொறி; இருதலைக்கொள்ளி

directive language

பணிப்பு மொழி

disjunct

பிரிகூறு

disjunction; either p or q

பிரிநிலை; ஒன்றில் இது அல்லது அது

(எ-கா: ஒன்றில் அவர் காணாமல் போய்விட்டார் அல்லது வெளிநாடு போய்விட்டார்)

distinction

சிறப்பு; வேறுபாடு

distributive use of a term

ஒரு பதத்தின் வகுப்பீட்டுப் பயன்பாடு

distributivism

நிகர்பகிர்வு நெறி

divination

முன்னருள்வு; வருவதுரைப்பு

doctrine

நெறி

doctrine of the mean

இடைநடு நெறி

dogma

சித்தநெறி

dogmatic

சித்தநெறிசார்ந்த

dogmatics

சித்தநெறியியல்

dogmatism

சித்தநெறித்துவம்

dogmatize

சித்தநெறிப்படுத்து

double-effect

இரட்டை விளைவு

doublethink

இரட்டைச் சிந்தனை

doubt

ஐயம்

dualism

இருமைத்துவம்

duty

கடமை

dynamism

வீறாண்மை

efficient cause

நிமித்த காரணம்

egalitarianism

நிகராண்மை

egoism

தன்னலநெறி

element

தனிமம்

eliminativism

வழுகளைவு நெறி

emotion

உணர்வெழுச்சி

emotional intelligence

உணர்வெழுச்சி நுண்மதி

emotional language

உணர்வெழுச்சி மொழி

emotive language

உணர்வுறுத்து மொழி

emotivism

உணர்வெழுச்சி நெறி

empirical statement

பட்டறிவுக் கூற்று

empirical truth claim

பட்டறிவு மெய்ம்மைக் கோரிக்கை

empiricism

பட்டறிவு நெறி

ends and means

இலக்கும் வழிவகையும்

enlightenment

உள்ளொளி

enthymeme

குறைநியாயத்தொடை

entity

உள்பொருள்

environmentalism

சூழல்பேண் நெறி

Epicureanism

அகமகிழ்ச்சி நெறி

epistemology

அறிவுநெறியியல்

equality

நிகர்மை

equivocation

கருத்துமயக்கல்; மழுப்பல்

error

வழு

essence

சாரம்

essentialism

உள்ளியல்பு ஆய்வு நெறி

essentialist definition

உள்ளியல்பு வரையறை

eternalism

நிலைபேற்று நெறி

ethics; moral philosophy

அறவியல்; ஒழுக்கவியல்

ethnocentrism

இனநோக்கு நெறி

eudaemonism

நல்வாழ்வியல்

eudaimonia

அகமகிழ்ச்சி

euthanasia = mercy killing

கருணைக் கொலை

evaluative language

மதிப்பிடு மொழி

evaluative meaning

மதிப்பிடு கருத்து

evidence

சான்று

evil

தீது; தீமை; தீய

evocative language

உணர்வூட்டு மொழி

excitement

பரபரப்பு

existentialism

தனிமனித வாழ்வு நெறி

experimentalism

ஆய்கோள் நெறி

explanation

விளக்கம்

explanatory adequacy

விளக்க நிறைவு(டைமை)

expressionism

அகவுணர்ச்சி வெளியீடு

external world

புற உலகு

extramental

உளம்கடந்த

extremism

தீவிரத்துவம்

extrinsic good

புறநலம்

fact

("I mean by a 'fact' something which is there, whether anybody thinks so or not. If I look up a railway timetable and find that there is a train to Edinburgh at 10 A.M., then, if the timetable is correct, there is an actual train, which is a 'fact.' The statement in the timetable is itself a 'fact,' whether true or false, but it only states a fact if it is true, i.e., if there really is a   train. Most facts are independent of our volition; that is why they are called 'hard,' 'stubborn' or 'ineluctable.' Physical facts, for the most part, are independent, not only of our volitions but even of our existence (Bertrand Russell)

மெய்ப்பொருள்; விவரம்; நேர்வு; உண்மை

factual claims

மெய்மை வாதீடுகள்; விவர வாதீடுகள்

factual statement

மெய்மைக் கூற்று

(எ-கா: அந்த வழக்கு விசாரணை 6 நாட்கள் நடைபெற்றது)

faith

(சமய) நம்பிக்கை

fallacy

போலி(மை)

fallibilism

வழுவாய்ப்பு ஏற்பு நெறி

false cause

பொய் ஏது

false confidence

பொய் நம்பிக்கை

false dilemma

பொய்த் திண்டாட்டம்

false statement

பொய்க் கூற்று

falsifiability

பொய்வாய்ப்புடைமை

(எ-கா: "அன்னங்கள் அனைத்தும் வெள்ளை." வேறு நிறம் கொண்ட ஓர் அன்னம் அகப்பட்டால், அதனைக் கொண்டு "அன்னங்கள் அனைத்தும் வெள்ளை" என்னும் கூற்றைப் பொய்ப்பிக்க முடியும். அவ்வாறு பொய்ப்பிக்கக்கூடிய வாய்ப்பே, பொய்வாய்ப்புடைமை. அதாவது பொய்வாய்ப்புடைமை என்பது மெய்வாய்ப்புடைமையை உணர்த்துகிறது - Karl Popper)

falsification

பொய்ப்பிப்பு; பொய்ப்பிக்கை

falsification principle

பொய்ப்பிக்கை நெறி

fascism

கொடுந்தேசியம்

fatalism

ஊழ்வலி நெறி

fate

தலைவிதி

fiction

புனைவு

fideism

உள்ளொளி நெறி

final cause

இறுதி ஏது

form

படிவம்; உரு; கருத்துரு

formal cause

முறைமை ஏது

formal invalidity

முறைமை வலிதீனம்

formal usage

முறைசார் வழக்கு

foundationalism

அடியொற்று நெறி

free choice

சுயாதீன தெரிவு

free will

அகமுவந்த விருப்பு; உளமுவந்த விருப்பு

freedom

சுதந்திரம்

function of language

மொழியின் தொழிற்பாடு

functionalism

அகச்செயல் நெறி

fundamentalism

பழைமைநெறி

fuzzy logic

ஐதான ஏரணவியல்

(இதில் சற்று, மிகவும், பெரிதும்... போன்ற அடைகள் தாராளமாகப் பயன்படுத்தப் படுவதால், இது முறைசார் ஏரணவியல் ஆகாது)

genetic fallacy

தோற்றுவாய்ப் போலி

golden rule theory

பொன்விதிக் கோட்பாடு

good

நலம்

goodness ethics

நல்லறம்

grammatical ambiguity

இலக்கணக் குழப்பம்; இலக்கணவாரியாக இருபொருள்படுகை

groupthink

குழுமச் சிந்தனை

harmony

இசைவு

hedonic calculus

இன்னுண்கணிதம்

hedonism

இன்பநெறி

hermeneutics

பொருள்கோளியல்

heteronomy

வேற்றரசாட்சி

heuristic principle

கற்றறிவு நெறி

historicism

வரலாற்றுக் கற்பிதம்

historicity

வரலாற்று மெய்மை

holism

கூறுதொகுப்பு நெறி

horned dilemma

திண்டாட்டம்; திரிசங்குசொர்க்கம்

relations of ideas and matters of fact

Hume's fork; David Hume's Fork

எண்ணங்களின் உறவும், நேர்வு விவரங்களும்

hypothesis

கருதுகோள்

hypothetical imperative

கருதுகோட் கடப்பாடு

hypothetical proposition

கருதுகோள் எடுப்புரை

hypothetico-deductive method

கருதுகோள்-உய்த்தறிவு முறை

idea

கருத்து; எண்ணம்; யோசனை

idea theory of meaning

கருத்துப் பொருட் கோட்பாடு

ideal

குறிக்கோள்; விழைகோள்

idealism

குறிக்கோள் நெறி; விழைகோள் நெறி

ideology

கருத்தியல்

ignorance

அறியாமை

illusion

மாயை; கண்மாயம்

immanent transcendence

நிறைமீமை

immoral thoughts

தீயொழுக்க சிந்தனை

immorality

தீயொழுக்கம்

impartial adjudicator's strategy

பக்கஞ்சாரா தீர்ப்பாளரின் உபாயம்

(எ-கா: "இன்றியமையாத பொருட்கள் தற்பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை என்றால்,அல்லது அவற்றுக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவினால், அவை உற்பத்தி செய்யப்படும் கட்டம் ஓங்கும்வரை, அல்லது அவற்றுக்கான தட்டுப்பாடு நீங்கும்வரை, அவற்றை இறக்குமதி செய்யலாம். உள்நாட்டில் தாராளமாக உற்பத்தி செய்யப்பட்டு, தாராளமாகக் கிடைக்கும் பொருட்கள் எவற்றையும் இறக்குமதி செய்யக்கூடாது!")

impartiality

பக்கஞ்சாராமை

implication

உட்கிடை; மறைகுறிப்பு; விளைவு

impulse

உள்ளுந்தல்

inclination

நாட்டம்

incommensurability

பொது அளவின்மை

inconsistency

மாறுகொளக்கூறல்முன்பின் முரண்பாடு; மேற்கோண்மலைவு

indefeasibility

இலதாக்கவியலாமை

indeterminism

முன்னேது கொள்ளாமை 

individualism

தனிமனிதத்துவம்

induction

தொகுத்தறிவு

(எ-கா: இந்தக் காகம் கரியது; அந்தக் காகம் கரியது; ஆகவே காகங்கள் எல்லாம் கரியவை)

induction by confirmation

உறுதிப்படுத்தல் ஊடான தொகுத்தறிவு

inductive argument

தொகுத்தறி வாதம்

inductive generalization

தொகுத்தறிவுடன் கூடிய பொதுமையாக்கம்

inference

அனுமானம்

infinity

முடிவிலி; ஈறிலி

instrumentalism

பயனுடைமை நெறி

integrationist

ஒருங்கிணைப்புவாதி

intellect

நுழைபுலம்

intellectualism

அறிவாண்மை

intelligence

நுண்மதி

intention

நோக்கம்

internal inquiry

அக விசாரணை

internalism

அகக்கருத்து நெறி

interpretive skills

பொருள்கோடல் திறன்

interpretivism

பொருள்கோடல் நெறி

interrogative language

வினாவு மொழி

interventionism

இடையீட்டு நெறி

intramental

உள்மன

intrinsic good

அகநலம்

intuition

உள்ளுணர்வு

intuitionism

உள்ளுணர்வு நெறி

invalid argument

வலிதிலா வாதம்

invalidity

வலிதீனம்; வலிதின்மை; வலிதறவு

inverse statement; If not p, then not q

நேர்மாறு கூற்று

(எ-கா: மழை பெய்யாவிட்டால், அவர்கள் குடை பிடிக்க மாட்டார்கள்)

irrational technique of persuasion

நியாயம்மீறி இணங்கத்தூண்டும் உத்தி

irrational thinking

நியாயமற்ற சிந்திப்பு

irrationalism

நியாயமில் நெறி

irrelevance

இயைபின்மை; பொருந்தாமை

ism

இயம்; நெறி

joint method of agreement and difference

உடன்பாட்டு வேறுபாட்டுக் கூட்டு முறை

judgement

நிதானிப்பு; மட்டிடுகை

justice

நீதி

justification

நியாயப்பாடு; நியாயப்படுத்துகை

kingdom of ends

இலக்குலகு

knowledge

அறிவு

laws of logic

ஏரண விதிகள்

legalism

சட்டநெறித்துவம்

lemma

முற்கோள்

liar's paradox

பொய்யர் முரண்புதிர்

(எ-கா: "அடுத்த கூற்று பொய். முந்திய கூற்று மெய்!")

liberalism

தாராண்மை 

libertarianism

தன்னாண்மை 

linguistic ambiguity

மொழிவழி இருபொருள்படுகை

loaded term

முடிச்சுப் பதம்; சரட்டுப் பதம்

logic

ஏரணவியல்

logical fallacies

ஏரணப் போலிகள்

logical positivism

ஏரணப் புலனறிவு நெறி

logical strength

ஏரண வலு

love

அன்பு

macrocosm

அண்டம்

major premise

பேரெடுகூற்று

(எ-கா: எல்லா மலேசியர்களும் ஆசியக் கண்டத்தவர்கள்)

Marxism

மார்க்சியம்

material cause

பொருண்மைக் காரணம்

materialism

பொருண்மியம்

matter

பொருண்மை

matter-of-fact

மெய்ப் பொருண்மை

maxim

மூதுரை

meaning

கருத்து

metaethics

மீயறவியல்

metaphysics

மீயியல்

method

முறை

method of absurd example

விழல்மை எடுத்துக்காட்டு முறை

method of agreement

உடன்பாட்டு முறை

method of concomitant variations

உடனிணை வேறுபாட்டு முறை

method of difference

வேறுபாட்டு முறை

method of residue

எச்ச முறை

methodical doubt

முறையுறு ஐயம்

methodology

முறையியல்

minor premise

சிறு எடுகூற்று

(எ-கா: சாக்கிரத்தீஸ் ஒரு மனிதர்)

modernism

புதுமைத்துவம்

modus ponens

உடன்பாட்டு முறை

(எ-கா: புகைக்கிறது என்றால் எரிகிறது; புகைக்கிறது; ஆகவே எரிகிறது)    

modus tollens

மறுப்பீட்டு முறை

(எ-கா: புகைக்கவில்லை என்றால் எரியவில்லைபுகைக்கவில்லை; ஆகவே எரியவில்லை)

monad

தனிமம்

monism

ஒருமைத்துவம்; அத்துவைதம்

monistic hypothesis

ஒருமைத்துவக் கருதுகோள்

monotheism

ஓரிறை நெறி

moral ballpark

ஒழுக்க அரங்கு

moral code

ஒழுக்கவிதிக் கோவை

moral imperative

ஒழுக்கக் கடப்பாடு

moral judgement

ஒழுக்க மட்டீடு; ஒழுக்க நிதானிப்பு

moral maturity

ஒழுக்க முதிர்ச்சி

moral philosophy; ethics

அறவியல்; ஒழுக்கவியல்

moral reasoning

ஒழுக்க நியாயம்

moral relativism

ஒழுக்கநெறிச் சார்புடைமை

moral rights

ஒழுக்கநெறி உரிமைகள்

morality

ஒழுக்கம்

morals; moral principles

அறநெறிகள்; ஒழுக்க நெறிகள்

motive

உள்நோக்கம்

mysticism

மறைபுலம்; மறைஞானம்; அனுபூதிநெறி

natural theology

இயற்கை இறையியல்

naturalism

இயற்பண்பு நெறி

naturalistic fallacy

இயற்பண்புப் போலி

nature

இயற்கை; இயல்பு

Nazism

கொடும்பேரினத்துவம்

necessary and sufficient conditions

அவசிய, போதிய நிபந்தனைகள்

necessary truth

இன்றியமையா உண்மை

(எ-கா: இரு முனைகளுக்கிடையே, அவற்றை இணைக்கும் நேர் கோடே மிகக் குறுகியது)

negation

மறுப்பு

negativism

எதிர்மறை நெறி

neutralism

நடுநிலை நெறி

nihilism

சூனிய நெறி 

nominalism

பெயரீட்டு நெறி 

noncognitivism

மெய்யறிவின்மை நெறி

(சில துறைகளில் அறிவதற்குரிய மெய்மை இல்லாதபடியால் அங்கு மெய்மை அறிவு இல்லை எனும் நெறி)   

nonconsequentialism; deontological ethics

கடப்பாட்டு அறவியல்

non-contradiction

முரணின்மை; முரண்படாமை

normative ethics

நியம அறவியல்

normative principles

நியம நெறிகள்

obedience

பணிவு

objective approach

புறவய அணுகுமுறை

objectivism

புறவயநெறி

objectivity

புறவயம்

obscure; vague

தெளிவற்ற

ontology

உளதியல்; உளமையியல்

operational definition

அலுவலுக்கான வரையறை

(எ-கா: இந்த நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே வயது வந்தவர்கள்)

opposites

எதிரீடுகள்

optimism

நன்னம்பிக்கை நெறி

original position

முழுமுதல் நிலைப்பாடு

ostensive definition

எடுத்துக்காட்டு வரையறை

pacifism

அமைதிவாதம்

pantheism; cosmotheism

இறைநிறை நெறி

paradigm

படிமை

paradigm shift; fundamental change; radical change; revolutionary change

படிமை மாற்றம்; பருமாற்றம்; அடிப்படை மாற்றம்; புரட்சிகர மாற்றம்

paradox

முரண்புதிர்

paralogism

போலி நியாயத்தொடை

particularity

தனிமயம்

per se

அதனளவில்

perception

புலனறிவு; புலனுணர்வு

perfectionism

செம்மைநெறி

performative language

ஆற்றுகை மொழி

personalism

ஆள்வயநெறி

persuasive language

இணங்கத்தூண்டு மொழி

persuasive redefinition

இணங்கத்தூண்டும் மீள்வரையறை

pessimism

துன்னம்பிக்கை நெறி

phenomena

புலப்பாடுகள்

phenomenalism

புலனுணர்வு நெறி

phenomenon

புலப்பாடு

philosopher-king

மெய்ஞான வேந்தன்

philosophy

மெய்யியல்

phronesis

நிலைவர ஞானம்

playboy philosophy

இன்ப மெய்யியல்

pluralism

பன்மைத்துவம்

polytheism

பல்லிறைநெறி

positivism

புலனறிவு நெறி

postmodernism

புதுமைத்துவ பின்னெறி

postulate

இடுகோள்; அடிக்கோளிடு

potentiality

இயல்திறம்

practical ethics; applied ethics

செய்முறை அறவியல்; பிரயோக அறவியல்

pragmatic theory of truth

செயல்நோக்கு மெய்மைக் கோட்பாடு

pragmatism

செயல்நோக்கு நெறி

prejudice

முன்னுளச்சாய்வு; முன்மனக் கோட்டம்

premise

எடுகூற்று

prescriptivism

வரையறுப்பு நெறி

presupposition

முற்கற்பிதம்

prima facie

முதல் தோற்றத்தில்

principle

நெறி

principle of charity

நெகிழ்ந்து பொருள்கொள் நெறி

private language

பிரத்தியேக மொழி

probability

நிகழ்தகவு

professionalism

துறைமைத்துவம்

proof

சான்று

proportionalism

ஒப்பளவீட்டு நெறி

proportionality

ஒப்பளவீடு

proposition

எடுப்புரை

providence

இறைசெயல்

psychology

உளவியல்

psychosomatic factors

உளத்தாக்கவுடற் காரணிகள்

puritanism

செந்நெறிமை

puzzle

புதிர்

quantity

கணியம்

racial chauvinism

பேரினத்துவம்

racism

இனவாதம்

radical thoughts

பருமாற்ற சிந்தனை

radicalism

பருமாற்ற நெறி

rarefaction

ஐதாக்கம்

rational agreement

நியாயபூர்வமான இணக்கம்

rational decision-making

நியாயமான முறையில் முடிபெடுத்தல்

rationalism

நியாயத்துவ நெறி

realism

மெய்மைத்துவம்

reason

ஏது; காரணம்; நியாயம்; நியாயநெறி; நியாயத்துவம்; தருக்க சிந்தை; தருக்க சிந்தனைத் திறன்

reasoning

நியாயம் உரைத்தல்

reasoning skills

நியாயத்திறன்; நியாயம் உரைக்கும் திறன்

reconstructing arguments

வாதங்களை மீளமைத்தல்

recreational language

கேளிக்கை மொழி

red herring

கவனத்தை திசைதிருப்பும் விடயம்

reductio ad absurdum

விழல்படு குறுக்கம்

reduction

எளிமைக்குறுக்கம்

reductionism

எளிமைக்குறுக்க நெறி

redundancy

மேல்மிகை

reference theory of meaning

தொடர்பீட்டுக் கருத்துக் கோட்பாடு

referential ambiguity

தொடர்பீடுவாரியாக இருபொருள் படுகை

referentialism

சொற்பொருள் நெறி

refutation

மறுப்பீடு

regress

விளைவேது நியாயம்; விளைவு கொண்டு ஏது அறியும் நியாயம்

reification

உருக்கொடுப்பு

relationism

உறவீட்டு நெறி

relative truth

சார்புடை உண்மை

relativism

சார்பீட்டு நெறி

relevance

இயைபு; பொருத்தப்பாடு

religion

சமயம்

religious freedom

சமய சுதந்திரம்

reportive definition; standard definition

நியம வரையறை

reproductive technologies

இனப்பெருக்க தொழினுட்பவியல்

retention

பற்றுநிலை

retribution

ஒறுப்பு

retributivism

ஒறுப்புநெறி

rights

உரிமைகள்

romanticism

கற்பனை நவிற்சி 

rule of inference

அனுமான விதி

rule utilitarianism

விதிப்பயன்பாட்டு நெறி

sceptic; skeptic

ஐயவாளர்

scepticism; skepticism

ஐயநெறி

science

அறிவியல்

scientific reasoning

அறிவியல் ஏதீடு

scientism

அறிவியல் நெறி

secular humanism

இயலுலக மானுடத்துவம்

secularism

உலகியல் நெறி

selectivity

தெரிவீடு

self evident truth; axiom; axiomatic truth

மெய்த்தளம்; வெளிப்படை உண்மை

self-contradiction

தன்முரண்பாடு; சுயமுரண்பாடு

self-defeating argument

தன்மறுப்பு வாதம்

self-will

தன்னிச்சை; சுயேச்சை

sensualism

புலனின்ப நெறி

sexual ethics

பாலியல் அறம்

simple statement

எளிய கூற்று

sin of omission

தவிர்க்கைப் பாவம்

situationism; situation ethics

நிலைவர அறம்; நிலைவர ஒழுக்கம்

skepticism; scepticism

ஐயநெறி

slippery slope argument

வழுக்குச் சரிவு நெறி

social contract

சமுதாய ஒப்பந்தம்

socialism

சமூகவுடைமை

solipsism

அகத்துவம்

sophism

போலிநெறி

sophist

போலிநெறிஞர்

soul

உயிர்; ஆவி

sound mind

உளத்திட்பம்

soundness

திட்பம்

species

உயிரினம்

spirit and matter

ஆன்மாவும் சடமும்

spiritualism

ஆன்மீகம்

standard definition; reportive definition

நியம வரையறை

state of nature

இயற்கை நிலை

stipulative definition

நிர்ணய வரையறை

stoic

உள்ளொடுக்க நெறிஞர்

stoicism

உள்ளொடுக்க நெறி

structuralism

கட்டமைப்பு நெறி

structure of argument

வாதத்தின் கட்டமைப்பு

subject case

ஒப்புக்குட்படு பொருள்

subjectivism

அகவயநெறி

subjectivity

அகவயத்துவம்

subsidiary statements

உப கூற்றுகள்

substance

பிழம்பு; சொற்பொருள்

sufficient conditions

போதிய நிபந்தனைகள்

summum bonum; supreme good

உச்ச நலம்

supererogatory act

கடப்பாடிகந்த செயல் ; கடப்பாடு விஞ்சிய செயல்

supernaturalism

இறைநெறி

surrealism

அதிகற்பிதம்

syllogism

நியாயத்தொடை

synthesis

இணைகோள்; சேர்க்கை; தொகுப்பீடு

synthetic statement

சேர்க்கைக் கூற்று

tautology

கூறியதுகூறல்

teleological ethics

பயனோக்கு அறவியல்

teleology

பயனோக்கியல்

testability

எண்பிப்புடைமை

theism

இறைநிறை நெறி

theology

இறையியல்

theorem

தேற்றம்

theory

கோட்பாடு

thesis

முற்கோள்; முன்னீடு

thought experiments

சிந்தனைப் பரிசோதனைகள்

thoughts

சிந்தனை

toleration

சகிப்பு

totalitarianism

தனிக்கட்சியாட்சி

tradition

மரபு

traditionalism

மரபுநெறி

transcendence

மீமை

transcendent

மிகு

transcendentalism

ஆழ்வுணர்வு நெறி

true statement

மெய்ம்மைக் கூற்று

truth

மெய்(ம்மை)

truth claim

மெய்ம்மை வாதீடு 

truth functional statement

மெய்ம்மைத் தொழிற்பாட்டுக் கூற்று

truth-of-reason

நியாய உண்மை

truth-value

மெய்ம்மைப் பெறுமதி

ultimate goal; final goal

இறுதி இலக்கு

ultimate truth; fundamental truth

அடிப்படை உண்மை

unity

ஒருமை

universalism

பொதுமய நெறி

universalizability

பொதுமயப்பாடு

univocity

ஒருமை(த்துவம்)

utilitarianism

பயன்பாட்டு நெறி

utopia

கனவுலகு; விழைவுலகு

vagueness

தெளிவீனம்

valid argument

வலிதான வாதம்

valid chain of reasoning

வலிது நியாயத் தொடர்

validity

வலிதுடைமை

value judgement

தன்னெண்ண நிதானிப்பு

value system

விழுமக் கட்டுக்கோப்பு

values

விழுமியங்கள்; விழுமங்கள்

verifiability

மெய்ப்புடைமை; நிச்சயிப்புடைமை

verifiable

மெய்காணவல்ல; உறுதி செய்யவல்ல; நிச்சயிக்கவல்ல

verification

மெய்காண்கை; உறுதிசெய்கை; நிச்சயிப்பு

verify

மெய்காண்; உறுதிசெய்; நிச்சயி

vice

பாவம்

virtue

அறம்

vitalism

உயிரியக்க நெறி

volition

விழைவு; விருப்பு; உளமிசைவு

weasel word

மழுப்புச் சொல்

will power

உரன்; வேட்கை வலு

will to power

வலு வேட்கை

world of ideas

கருத்துலகு

world view

உலக நோக்கு

Zodiac

இராசி மண்டலம்

No comments:

Post a Comment