ENGLISH-TAMIL PHRASES (Q-R)
qua members, shareholders | உறுப்பினர்கள் என்ற வகையில் பங்குதாரர்கள் |
qualified individual with a disability | தகைமைவாய்ந்த மாற்றுத்திறனாளர் |
qualifying ratio | தகைமையுறு விகிதம் |
qualitative research | தரவாரி ஆராய்ச்சி; தினிசுவாரி ஆராய்ச்சி |
quality and quantity | தரமும் தொகையும்; தினிசும் கணியமும் |
quality of life | வாழ்க்கைத் தரம்; வாழ்க்கைத் தினிசு |
quantity, bill of | கணிய முறி |
quantity surveyor | கணிய அளவையாளர் |
quantitative research | கணியவாரி ஆராய்ச்சி |
quash a conviction | குற்றத்தீர்ப்பை நீக்கு |
quasi-judicial procedure | மருவு நீதி நடைமுறை; தோற்றத்தளவிலான நீதி நடைமுறை (எ-கா: தீர்ப்பாய விசாரணை) |
quasi-predatory lending | சற்று வஞ்சகமான கடன்கொடுப்பு |
Queen's Counsel | வேத்துவ சட்டவுரைஞர் |
queer community | நெகிழ்பாலுறவாளர் சமூகம் |
queer theory | பால்மைச் சீர்திருத்தக் கோட்பாடு |
question mark (?) | வினாக்குறி (?) |
questionnaire, a long | நீண்ட வினாக்கொத்து |
quicksand, vast | பரந்த புதைமணல் |
quid pro quo = something for something | கைமாறு; கைம்மாறு |
quitclaim deed | உத்தரவாதமற்ற உறுதி |
Quo vadis? = Where are you going? | எங்கே போகிறாய்? |
quo warranto, writ of | அதிகாரவினாப் பேராணை |
quotation marks ("...") | மேற்கோட்குறி |
R2P = Responsibility to Protect | பாதுகாக்கும் பொறுப்பு |
race relations | இன உறவு |
races, major | பேரினங்கள் (வெள்ளை, மஞ்சள், கருப்பு இனத்தவர்கள்) |
racial chauvinism | பேரினத்துவம் |
racial discrimination | இனப்பாகுபாடு காட்டல் |
racial minority | இனச் சிறுபான்மை |
racial profiling | இனவாரிக் கண்ணோட்டம் |
racial stereotypes | இனப்படிவார்ப்பு |
racialization | இனமயமாக்கம் |
racialized communities | இனமயப்படுத்திய சமூகங்கள் |
racism, racial discrimination, xenophobia and related intolerance | இனவாதம், இனப்பாகுபாடு காட்டல், வேற்றினக்காழ்ப்பு, அவற்றுடன் தொடர்புடைய சகிப்புணர்வீனம் |
racist slurs | இனப்பழிச்சொற்கள் |
radar, ground-penetrating | தரை ஊடுருவு கதிர்மானி |
radical thoughts | பருமாற்ற சிந்தனை |
radio host (personality) | வானொலி நிகழ்ச்சிநெறியாளர் |
radio silence | தொடர்பாடல் ஒழிதல்; கருத்துப் பரிமாற்றம் அற்றுப்போதல் |
radioactive contamination | கதிரியக்கப்பொருட் படிவு |
radioactive decay | கதிரியக்கச் சிதைவு |
radioactive waste | கதிரியக்கக் கழிவு |
radiocarbon dating | கதிர்க்கரிய தேதியீடு |
radioecology | கதிரியக்க சூழலியல் |
rail-based transportation | தண்டவாளப் போக்குவரத்து |
rain shadow | மழையொதுக்கு |
Rainbow Nation | வானவில் தேயம்; பல்வண்மைத் தேயம் (தென் ஆபிரிக்கா) |
raison d'etre of the Commonwealth | பொதுநலவாயம் உள்ளதற்கான காரணம் |
rallying point | அணிதிரள் முனை |
range management | மேய்ச்சனில முகாமை |
rapid cycling bipolar disorder | விரைசுழற்சி இருமுனைக் கோளாறு |
rapid eye movements | துரித கண் அசைவுகள் |
rapture, with | கழிபேருவகையுடன் |
raptures, go into | கழிபேருவகை கொள் |
rare species | அரிய உயிரினம் |
rate of march | படைநடப்பு வேகம் |
rate of natural increase | இயல்பான அதிகரிப்பு வீதம் |
ratification of the treaty | பொருத்தனையின் ஏற்புறுதி; பொருத்தனையை ஏற்று உறுதிப் படுத்தல் |
ratify the treaty | பொருத்தனையை ஏற்று உறுதிப்படுத்து |
rational agreement | நியாயபூர்வமான இணக்கம் |
rational choice theory | நியாயத் தெரிவுக் கோட்பாடு |
rational decision-making | நியாயபூர்வ முடிபெடுப்பு; நியாயபூர்வமாக முடிபெடுத்தல் |
rational-emotive therapy | நியாய-உணர்வெழுச்சி சிகிச்சை |
rationalize accounting standards | கணக்கீட்டு நியமங்களை சீரமை |
rationalize war | போருக்கு நியாயம் கற்பி |
rationalization for war | போருக்கு நியாயம் கற்பித்தல் |
rationalization of accounting standards | கணக்கீட்டு நியமங்களை சீரமைத்தல் |
rave review | ஏற்றிப்போற்றும் மதிப்புரை |
raw rice flour | பச்சை அரிசி மா |
raw sewage | சுத்திகரிக்கப்படாத கழிநீர் |
reaction formation | பதில்வினை உருவாக்கம் |
read the riot act = give a severe warning | கடும் எச்சரிக்கை செய் |
reading disability | வாசிப்பு வலுக்குறைவு |
ready to proceed | விசாரணைக்குத் தயாரான |
real culture | மெய்ப் பண்பாடு |
real estate = realty | ஆதனத்துறை; ஆதனவியல் |
real estate agent | ஆதன முகவர் |
real estate broker | ஆதனத் தரகர் |
real estate brokerage | ஆதனத் தரகாண்மை |
real estate community | ஆதன சமூகம் |
real estate property | ஆதனம் |
real estate sales representative | ஆதன விற்பனைப் பிரதிநிதி |
real estate settlement procedures | ஆதன இணக்க நடைமுறைகள் |
real estate trust account | ஆதன நம்பிக்கைக் கணக்கு |
real interest rate | மெய் வட்டி வீதம் |
real investment return | ஆதன முதலீட்டு மீள்வு |
real price | மெய் விலை |
real property | ஆதனம் |
realism of art | கலையின் மெய்மை |
realistic assessment | மெய்மைக் கணிப்பீடு |
realistic (achievable) goal | எய்தக்கூடிய இலக்கு |
realistic (possible) solution | இயலக்கூடிய (ஒப்பேறக்கூடிய) தீர்வு |
realistic story | மெய்மைக் கதை; நிகழக்கூடிய கதை |
realists, idealists & pragmatists | மெய்கோள்நெறிஞர், குறிக்கோள்நெறிஞர், செயல்நோக்கு நெறிஞர் |
reality check | மெய்மை செவ்வைபார்ப்பு |
reality orientation | மெய்மை உணர்த்தல் |
reality TV | மெய்மைத் தொலைக்காட்சி |
reality, face | மெய்நிலையை எதிர்கொள் |
reality, in | உண்மையில் |
realtor | ஆதனத்துறைஞர்; ஆதனவியலர் |
realty = real estate | ஆதனத்துறை; ஆதனவியல் |
Rear Admiral | இணைக் கடற் தளபதி |
rear guard | பின் காவலணி |
reason, age of | நியாயநெறி ஊழி |
reasonable doubt | நியாயமான ஐயம் |
reasonable grounds | நியாயமான ஆதாரம் |
reasoning skills | நியாயத் திறன் |
reasons for decision | முடிபுக்கான ஏதுக்கள் |
rebel forces | கிளர்ச்சிப் படைகள் |
rebellion against the government | அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சி |
rebellious generation | கிளர்ந்தெழும் தலைமுறை |
recalcitrant children | முரண்டுபிடிக்கும் பிள்ளைகள் |
recency effect | இறுதிவிபர விளைவு |
reception centre | தகவல் நிலையம் |
reception centre for refugees | அகதிகள் வரவோம்பு நிலையம் |
reception on arrival, report to | வந்ததும் வரவேற்புப் பணியாளரிடம் தெரிவிக்கவும் |
recession, economic | பொருளாதார பின்னடைவு |
reciprocal altruism | இருவயினொத்து நலனோம்பல்; ஆளுக்காள் நலனோம்பல் |
reciprocal reward | இருவயினொத்த கைமாறு |
reciprocating jurisdiction | இருவயினொத்த நியாயாதிக்கம் |
reciprocity norm | இருவயினொப்பு நியமம் |
reckon with, a name to | பேர்போனவர் |
reckoning, a day of | தீர்ப்புக்குள்ளாகும் நாள் |
reckoning, by my | எனது கணிப்பின்படி |
reckoning, divine | இறை ஒறுப்பு |
reclusive lifestyle | ஒதுங்கி வாழும் பாங்கு |
recognition of their achievement, in | அவர்களின் சாதனையை மெச்சி |
recognition, change beyond | அடையாளம் தெரியாமல் மாறு |
recognition, international | சர்வதேய அங்கீகாரம் |
recognize as a convention refugee | பொருத்தனை அகதியாக ஏற்றுக்கொள் |
reconciliation of accounts | கணக்கிணக்கம் |
reconciliation, process of | மீளிணக்கப் படிமுறை |
reconnaissance aircraft | வேவு வான்கலம் |
reconnaissance patrol | வேவுச் சுற்றுக்காவல் |
reconstructing arguments | வாதங்களை மீளமைத்தல் |
reconstructive memory | மீளுருவாக்க நினைவாற்றல் |
reconvene the parties | தரப்புகளை மீளக் கூட்டு |
record of landing = landing paper | குடிபுகல் பதிவு; குடிபுகல் பத்திரம் |
record, on the | வெளியரங்கமாக; அதிகார பூர்வமாக |
recoup losses | இழப்பை மீட்பீடுசெய் |
recoupment of losses | இழப்புக்கான மீட்பீடு |
recreation park | பொழுதுபோக்கு கோட்டம் |
recreation room | பொழுதுபோக்கு கூடம் |
recreational vehicle | பொழுதுபோக்கு ஊர்தி |
rectal examination | குத பரிசோதனை; நேர்குடற் சோதனை |
recuperative incineration | வலுமீட்பு நீறாக்கம் |
red book value | செவ்வேட்டுப் பெறுமதி |
red herring | பராக்கு; கவனத்தை திசைதிருப்பக் காட்டும் பொருள் |
red list of threatened animals | அருகு விலங்கின செந்நிரல் |
red tape | அலுவலக தாமதம் |
red tide | செவ்வுயிர்மப் பெருக்கு |
redacted document | மழுக்கிய ஆவணம்; மழுக்கப்பட்ட ஆவணம் |
reductio ad absurdum | விழல்படு குறுக்கம் |
refer the claim to the ombudsman | முறைகேள் ஆணையாளரிடம் கோரிக்கையைப் பாரப்படுத்து |
reference group | உசாவற் குழுமம் |
reference library | உசாவல் நூலகம் |
reference theory of meaning | தொடர்பீட்டுக் கருத்துக் கோட்பாடு |
referential ambiguity | தொடர்பீட்டுவாரியாக இருபொருள்படல் |
referral recommendation | தொடர்பீட்டு விதப்புரை |
referral centre | தொடர்பீட்டு நிலையம் |
referred claim | பாரப்படுத்திய கோரிக்கை |
referring physician | தொடர்புபடுத்தும் வைத்தியர் |
refinance transaction | மீள்நிதியீட்டு அலுவல் |
reform liberalism | சீர்திருத்த தாராண்மைவாதம் |
refoulement | (அகதிக் கோரிக்கையாளரை) திருப்பி அனுப்பல் |
refractory approach | நெகிழா அணுகுமுறை |
refractory depression | (சிகிச்சைக்கு) நெகிழா உளவழுத்தம் |
refrain from smoking | புகைப்பதை தவிர் |
refugee convention | அகதி ஒப்பந்தம் |
refugee protection division | அகதிப் பாதுகாப்பு பகுதி |
refund, receive a | மீள்கொடை பெறு |
refuse reclamation | திண்மக் கழிவு மீட்பு |
refuse to accept | ஏற்கமறு |
regime change | ஆட்சி மாற்றம் |
regime, previous | முந்திய ஆட்சிபீடம் |
regime, tax | வரி முறைமை |
regional migration | பிராந்திய இடப்பெயர்வு |
registered insurance broker | பதிவுக் காப்புறுதித் தரகர் |
registered nurses | பதிவுச் செவிலியர் (தாதியர்) |
registration of documents | ஆவணப் பதிவு |
Registry of the Federal Court – Trial Division | நடுவண் நீதிமன்றப் பதிவகம் - விசாரணைப் பகுதி |
registry office | பதிவகம் |
regressive tax | இறங்கு வரி |
regulate commerce | வணிகத்தை ஒழுங்குபடுத்து |
regulative law | ஒழுங்குறுத்து சட்டம் |
regulatory agency | ஒழுங்குறுத்து முகமையகம் |
regulatory mechanisms | ஒழுங்குறுத்தும் பொறிமுறை |
regulatory offence | ஒழுங்குவிதியை மீறிய குற்றம் |
rehabilitation facilitation officer | மறுவாழ்வு வசதியளிப்பு அதிகாரி |
reimburse expenses | செலவுகளை மீளீடுசெய் |
reimbursement for expenses | செலவுகளுக்கான மீளீடு |
relationship status (single / friendship / romance / dating / married…) | உறவுத்தகுநிலை (மணமாகாமை / நட்பு / காதல் / உடன்போக்கு / திருமணம்…) |
relative claim index | சார்புக் கோரிக்கைச் சுட்டெண் |
relative poverty | ஒப்பீட்டளவிலான வறுமை |
relative truth | சார்புடை உண்மை |
relaxation response | ஆறித்தேறும் பதில்வினை |
relaxation techniques | ஆறித்தேறும் உத்திகள் |
relaxation training | ஆறித்தேறும் பயிற்சி |
release on bail | பிணையில் விடுதலைசெய் |
relevant to the matter at issue | சர்ச்சைக்குரிய விடயத்துக்கு இயைபுடைய |
relief, seek | நிவாரணம் கோரு |
religious syncretism | சமயக் கலப்பு |
religious freedom | சமய சுதந்திரம் |
religious fundamentalism | சமயப் பழைமைவாதம் |
religious marriage | சமயத் திருமணம் |
remain silent | அமைதியாய் இரு |
remainder, the | எஞ்சியோர்; எஞ்சியது; எஞ்சியவை |
remaining term | எஞ்சிய தவணை |
remains of an ancient fort | பழைய கோட்டையின் எச்சமிச்சங்கள் |
remains, human | பூதவுடல்; மனித உடற்கூறுகள் |
remedial and disciplinary measures | பரிகார-ஒழுக்காற்று நடவடிக்கைகள் |
remedial justice | பரிகார நீதி |
Remembrance Day | நினைவேந்து நாள் |
reminiscence therapy | நினைவுறுத்தல் சிகிச்சை |
remote evidence | சேய்மைச் சான்று |
remote work | சேய்மைப் பணி |
removal order | அகற்றல் கட்டளை |
remove counsel | சட்டவுரைஞரை அகற்று |
renewable energy | மீள்தகு வலு (எ-கா: கதிரொளி வலு, வளிவலு, நீர்வலு) |
renewable natural resources | மீள்தகு இயற்கை வளங்கள் |
renewal certificate | புதுப்பித்தல் சான்றிதழ் |
renewed plan | புதுக்கிய திட்டம் |
renounce (abjure) violence | வன்முறை துற |
renovation, building in need of | புதுப்பிக்க வேண்டிய கட்டிடம் |
rent insurance | வாடகைக் காப்புறுதி |
rent loss insurance | வாடகை இழப்புக் காப்புறுதி |
rental application | வாடகை விண்ணப்பம் |
rental item | வாடகைப் பொருள் |
rental value insurance | வாடகைப் பெறுமதிக் காப்புறுதி |
renunciation of violence | வன்முறை துறத்தல் |
reopen a claim | கோரிக்கையை மீண்டும் முன்வை |
reorder level = reorder point | மறு தருவிப்பு மட்டம் (முனை) |
repairs and maintenance | பழுதுபார்ப்பும் பராமரிப்பும் |
reparations, pay | இழப்பீடு செலுத்து |
reparatory justice | இழப்பீட்டு நீதி |
repayment plan | மீள்கொடுப்பனவுத் திட்டம் |
repeal a law | சட்டத்தை நீக்கு |
replacement cost | மாற்றீட்டுச் செலவு |
replacement fertility | ஈடுசெய் பிறப்பு வீதம் |
report card | தேர்ச்சி அறிக்கை; அறிக்கை அட்டை |
report on inadmissibility | அனுமதிக்கவியலாமை பற்றிய அறிக்கை |
reported (indirect) speech | பிறர் கூற்று |
reporting obligations under international instruments on human rights | மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச ஆவணங்களுக்கமைய அறிக்கையிடும் கடப்பாடுகள் |
reportive (standard) definition | நியம வரையறை |
repository of wisdom | ஞானக் களஞ்சியம் |
representations committee, public | மக்கள் கருத்துரைக் குழு |
representative democracy | பிரதிநிதித்துவ குடியாட்சி |
reproductive age | கருத்தரிப்பு வயது |
reproductive choice | கருத்தரிப்புத் தெரிவு |
reproductive coercion | பலவந்த கருத்தரிப்பு |
reproductive health care | கருத்தரிப்புகால சுகாதார பராமரிப்பு |
reproductive responsibilities | கருத்தரிப்பு பொறுப்புகள் |
reproductive rights | கருத்தரிப்பு உரிமைகள் |
reproductive technologies | கருத்தரிப்பு தொழினுட்பவியல் |
repudiate the accord | இணக்கத்தை மறுதலி |
repudiation of the accord | இணக்கத்தின் மறுதலிப்பு |
reputation of the family | குடும்பத்தின் மானம் |
reputed husband | கணவராய் விளங்குபவர் |
requiem for the late leader | இறந்த தலைவருக்கு அஞ்சலி |
required minimum age for marriage | மணம்புரிவதற்கான ஆகக்குறைந்த வயது |
requirements, immediate | உடனடித் தேவைகள் |
requirements, meet the | நியதிகளை நிறைவேற்று |
res judicata | நீதிகண்டது |
rescind a warrant | பிடியாணையை நீக்கு |
rescue refugees | அகதிகளைக் காப்பாற்று |
research institute | ஆராய்ச்சி நிறுவகம் |
research project | ஆராய்ச்சி நிகழ்பாடு |
reserve a seat | இருக்கை ஒதுக்கு |
reserve bank | சேம வங்கி |
reserve fund | சேம நிதியம் |
reserve judgement | தீர்ப்பை ஒத்திவை |
reserve police | சேமக் காவல்துறை |
reserve the right to refuse | நிராகரிக்கும் உரிமை கொண்டிரு |
reserve, nature | இயற்கைக் காப்புலம் |
reserve, without | முற்றுமுழுதாக |
reserved judgment | ஒத்திவைத்த தீர்ப்பு |
reserved, all rights | நூலுரிமைகள் அனைத்தும் எமக்கே |
resettled refugee | மீள்குடியமர் அகதி |
residency obligation | வதிவுக் கடப்பாடு |
residential care | வதிவுப் பராமரிப்பு |
residential composition | வதிவகக் கட்டுக்கோப்பு |
residential property | குடியிருப்பு ஆதனம் |
residual phase | எஞ்சு கட்டம் |
residual powers | எஞ்சிய அதிகாரங்கள் |
residual stress pattern | எஞ்சிய உளைச்சல் பாங்கு |
residuary estate | எஞ்சிய இறப்புச்சொத்து |
resilient age | மீள்திற வயது |
resilience, build | மீள்திறனை வளர்த்தெடு |
resolution of the dispute | பிணக்குத் தீர்வு |
resolution, pass a | தீர்மானம் நிறைவேற்று |
resonate with public opinion | மக்கள் கருத்தை எதிரொலி |
respiratory therapy | மூச்சுயிர்ப்புச் சிகிச்சை |
resource person | வளவாளர் |
respite care = short term care | குறுங்காலப் பராமரிப்பு |
respondent conditioning | ஊக்கிவழி பதில்வினை ஆற்றுவித்தல் |
respondents of study | ஆய்வுப் பதில்வினைஞர்கள் |
responding to warning signs | எச்சரிக்கை அறிகுறிகளுக்குப் பதில்வினையாற்றல் |
response bias | பதில்வினைப் பக்கச்சார்பு |
response error | பதில் வழு |
Responsibility to Protect = R2P | பாதுகாக்கும் பொறுப்பு |
responsive cooperation, policy of | பதில்வினையாற்றி ஒத்துழைக்கும் கொள்கை |
responsive to suggestions, a government | யோசனைகளை உவந்தேற்கும் அரசாங்கம் |
responsive to treatment, a virus | சிகிச்சைக்கு நெகிழும் நச்சுநோய் |
responsiveness to customers | வாடிக்கையாளருக்குப் பதில்வினையாற்றும் தன்மை |
rest house | வாடிவீடு |
restaurant owner | உணவக உரிமையாளர் |
restitution of property | சொத்து மீட்டளிப்பு |
restoration cost | மீள்வுறுத்தல் செலவு |
restorative care | மீள்வுறுத்தல் பராமரிப்பு |
restorative crops | மீள்வுறுத்தல் பயிர்கள் |
restorative justice | மீள்வுறுத்தல் நீதி |
restraining order | தடைக் கட்டளை |
restricted weapons | கட்டுறுத்தப்பட்ட ஆயுதங்கள் |
restrictions, impose | கட்டுப்பாடுகள் விதி |
restrictive covenants | கட்டுறுத்தும் உடன்பாடுகள் |
resume a procedure | நடைமுறையை மீண்டும் தொடங்கு |
retail banking | தனியாருக்கான வங்கியலுவல் |
retain a lawyer | சட்டவாளரை அமர்த்து |
retention money | பற்றுப்பணம் |
retirement (pension) age | ஓயும் வயது |
retirement community | ஓய்வுச் சமூகம் |
retirement contracts | ஓய்வுகால ஒப்பந்தங்கள் |
retirement home | ஓய்வகம் |
retirement village | ஓய்வுக் கிராமம் |
retributive justice | ஒறுப்பு நீதி; தண்டிப்பு நீதி |
retributivism | ஒறுப்புவாதம்; தண்டிப்புவாதம் |
retroactive law | கடந்த காலத்திலிருந்து செல்லுபடியாகும் சட்டம் |
retrospective labelling | நிகழ்கால நெறிபிறழ்வுக்கேற்ப கடந்தகால நடத்தைக்குப் பொருள்கோடல் |
retrospective rule | கடந்தகாலத்திலிருந்து செல்லுபடி யாகும் விதி |
return premium | மீள்வரு கட்டுப்பணம் |
returnee women | மீளும் பெண்கள் |
returning officer | தேர்தல் பொறுப்பதிகாரி |
reunification of family members | குடும்ப உறுப்பினர்களின் மீளிணைவு |
revenge on your enemy, take | உன் எதிரியை பழிவாங்கு |
reversal of sterilization procedure | கருவளமீட்புச் சிகிச்சை |
reversal theory | மறுதலைக் கோட்பாடு |
reverse (positive) discrimination | ஈடுசெய் பாரபட்சம் (முன்னைய ஏற்றத்தாழ்வை ஈடு செய்வதற்கான இன்றைய ஏற்றத்தாழ்வு) |
reverse onus | பதில்வாதியின் பொறுப்பு |
review of decision for detention | தடுத்துவைப்பு தீர்மான மீள்நோக்கு |
review troops | படையினரைப் பார்வையிடு |
review, book | நூல் மதிப்புரை |
revoke a licence | உரிமத்தை நீக்கு |
revolt against the martial law | படைச்சட்டத்துக்கு எதிராகக் கலகம் புரி |
revolt against the martial law, a | படைச்சட்டத்துக்கு எதிரான கலகம் |
revolting smell | அருவருக்கும் மணம் |
revolutionist, a | புரட்சிவாதி |
revoluionary, a | புரட்சியாளர் |
rheumatoid arthritis | வாதமூட்டழற்சி |
rhythm method = natural family planning | இயற்கைமுறைக் குடும்பக் கட்டுப்பாடு; இடைவிலக்கு முறை (சூலுறும் நாட்களில் உடலுறவு தவிர்ப்பு) |
rice flakes | அவல் |
right flank | வலப்புற அணி |
right of appeal | மேன்முறையிடும் உரிமை |
right of everyone to the enjoyment of the highest attainable standard of physical and mental health | எய்தக்கூடிய உச்ச நியம உடல்நலம், உளநலம் என்பவற்றை ஒவ்வொருவரும் துய்க்கும் உரிமை |
right of first refusal | முதல் மறுப்புரிமை |
right of ingress and egress | உட்புகல்-வெளிவரல் உரிமை |
Right of Minister | அமைச்சரின் உரிமை |
right of survivorship | மீந்த சொத்துரிமை |
right to development | விருத்தி பெறும் உரிமை |
right to drinking water and sanitation | குடிநீர், துப்புரவு பெறும் உரிமை |
right to education | கல்வி கற்கும் உரிமை |
right to food | உணவு பெறும் உரிமை |
right to freedom of opinion and expression | சுதந்திர கருத்துரைப்பு, எடுத்துரைப்பு உரிமை |
right to information | தகவல் அறியும் உரிமை |
Right to Information Commission | தகவல் உரிமை ஆணையம் |
right to restitution, compensation and rehabilitation for victims of grave violations of human rights and fundamental freedoms | மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் பாரதூரமாக மீறப்பட்டதன் விளைவாகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீளளிப்பு, நட்டஈடு, மறுவாழ்வு பெறும் உரிமை |
righteous rage | நேரிய சீற்றம் |
righteousness, ideal of | நேரிய குறிக்கோள் |
rights of persons belonging to national or ethnic, religious and linguistic minorities | தேசிய, இன, மத, மொழிவாரிச் சிறுபான்மையோரின் உரிமைகள் |
rights of the child | மகவுரிமைகள் |
rights-based approach to women's empowerment and advancement and gender equality | உரிமை அடிப்படையில் பெண்கள் வல்லமையீட்டம், முன்னேற்றம், பால்மைச் சமத்துவ அணுகுமுறை |
rigorous imprisonment | கடூழியச் சிறைத்தண்டனை; அருஞ்சிறை |
ringette, game of | பனிச்சறுக்குக் கோலாட்டம் |
riot act, read the = give a severe warning | கடும் எச்சரிக்கை விடு |
riots, racial | இனக் கலவரம் |
riot police | கலகம் அடக்கும் காவல்துறை |
riparian habitat | ஆற்றோர வாழிடம் |
ripple effect | அதிர்வலைகள் |
riser height | படி உயரம் |
rising action | ஏற்றங்கொள் நிகழ்வு |
risk behaviour | கெடுதி நடத்தை (எ-கா: புகைத்தல்) |
risk of flight | (விசாரணைக்குத் தோற்றாமல்) தப்பியோடும் சாத்தியம் |
ritual healing | சடங்குப் பரிகாரம் |
river basin | ஆற்று வடிநிலம் |
river fish | ஆற்று மீன் |
river-regulating reservoir | ஆற்றொழுக்கு நீர்த்தேக்கம் |
road block | தெருத் தடை |
roasted rice flour | வறுத்த அரிசி மா |
robotic arm | தானியங்கிக் கை |
robotically, work | இயந்திரம்போல் வேலைசெய் |
role allocation | வகிபாகம் ஒதுக்கல் |
role conflict | வகிபாக முரண்பாடு |
role model | முன்மாதிரி |
role of environment | சூழல் வகிபாகம் |
role reversal | வகிபாக மறுதலை |
role set | வகிபாகத் தொகுதி |
role strain | வகிபாக ஒவ்வாமை |
rolling barrage | முன்னகர் பல்லவேட்டு |
romance is in the air | காதலூடாட்டம் மேலோங்கியுள்ளது |
romance, a | காதல் புனைவு |
romance, holiday | விடுமுறைக் காதல் |
romantic relationship | காதலூடாட்டம்; காதலுறவு |
romantic view, a | கற்பனை நவிற்சிக் கண்ணோட்டம் |
romantic, a | கற்பனை நவிற்சியாளர் |
romanticize antiquity | தொன்மையை கற்பனை நவிற்சிக்கு உட்படுத்து |
Rome Statute of the International Criminal Court | சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த உரோமாபுரி நியதிச் சட்டம் |
roof topping, art of | கூரையேற்றப் படப்பிடிப்புக் கலை |
root canal treatment | பல்-வேர்க்குழிச் சிகிச்சை |
root planing | பல்வேர்க்காவி அகற்றல் |
rosacea | நுண்குருதிக்கலன் புடைப்பு |
rose water | பன்னீர் |
rote learning | பாடமாக்கிக் கற்றல் |
routes of communication | தொடர்பாடல் மார்க்கங்கள் |
routine procedure | வாடிக்கையான நடைமுறை |
routinization of charisma | கவர்ச்சியாதிக்கத்தை தலைமுறைப்படுத்தல் |
roving gun | களம்மாறு பீரங்கி |
royal assent | வேத்துவ இசைவு |
royalty and politicians | அரச குடும்பத்தவரும் அரசியல்வாதிகளும் |
rudimentary knowledge | அடிமட்ட அறிவு |
rule of inference | அனுமான விதி |
Rule of Law | சட்ட ஆட்சி |
rule utilitarianism | விதிப்பயன்வாதம் |
rules based order | விதி மூல ஒழுங்கு |
rules of evidence | சாட்சிய விதிகள் |
run-off, hold a | மறுதேர்தல் நடத்து |
ruptured eardrum | பீறிய செவிப்பறை |
No comments:
Post a Comment