DISABILITIES = மாற்றுத்திறன்கள்
access to a library | நூலகத்தை அணுகும் வசதி |
access barriers to health services | சுகாதார சேவைகள் பெறுவதில் தடங்கல்கள் |
access to services | சேவை பெறும் வசதி |
accessibility equipment | மாற்றுத்திறனுதவி உபகரணம் (உபகரணங்கள்) |
accessibility features | மாற்றுத்திறனுதவி அம்சங்கள் |
accessibility plan | மாற்றுத்திறனுதவித் திட்டம் |
accessibility services | மாற்றுத்திறனுதவிச் சேவைகள் |
accessible format | மாற்றுத்திறனுதவி உருவமைப்பு |
accessible taxicab | மாற்றுத்திறனாளருக்கான வாடகையூர்தி |
accessible web design | மாற்றுத்திறனுதவி இணைய வடிவமைப்பு |
accommodation for people with disabilities | மாற்றுத்திறனாளருக்கான இடவசதி |
adaptive technology | இசைவிப்புத் தொழினுட்பவியல் |
allocated mobility aid space | நடமாட்ட துணைக்கருவிகள் பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட ஊர்தியக வெளி |
alternative communication devices | மாற்றுத் தொடர்பாடல் சாதனங்கள் |
architectural barriers | கட்டிடவமைப்புத் தடங்கல்கள் |
assistive technology | திறனுதவித் தொழினுட்பவியல் |
assistive tools | திறனுதவிக் கருவிகள் |
attitudinal barriers | உளப்பான்மைத் தடங்கல்கள் |
augmentative communication devices | தொடர்பாடல் மேம்படுத்தும் சாதனங்கள் |
aural impairment | செவிப்புலன் மட்டுப்பாடு; மட்டுப்பட்ட செவிப்புலன் |
barrier free apartment | மாற்றுத்திறவசதி அடுக்குமாடியகம் |
barriers to accessibility | மாற்றுத்திறனாளர் எதிர்நோக்கும் தடங்கல்கள் |
barriers to accessing health information | சுகாதார விபரங்கள் பெறுவதில் தடங்கல்கள் |
Braille | தொட்டச்சு |
captioned film | குறிப்பீட்டுத் திரைப்படம் |
captioned video | குறிப்பீட்டுக் காணொளி |
caring for elderly and disabled family members | குடும்பத்து முதியோரையும் மாற்றுத்திறனாளரையும் பராமரித்தல் |
charitable trust | அறக்கொடை |
child disability | சிறார்-வலுவீனம் |
closed circuit TV magnifier | வேவுத் தொலைக்காட்சி உருப்பெருக்கி |
cognitive disabilities | அறிதிறன் வலுவீனங்கள் |
communication barriers | தொடர்பாடல் தடங்கல்கள் |
communication device | தொடர்பாடல் சாதனம் |
communications supports | தொடர்பாடல் வசதிகள் |
community participation | சமூக பங்குவகிப்பு |
Comprehensive and Integral International Convention to Promote and Protect the Rights and Dignity of Persons with Disabilities | மாற்றுத்திறனாளரின் உரிமை களையும் கண்ணியத்தையும் மேம்படுத்திப் பாதுகாப்பது பற்றிய முற்றுமுழுதான சர்வதேய ஒப்பந்தம் |
corrective surgery | திருத்தல் அறுவைச்சிகிச்சை |
disabilities, learning | கற்கை வலுவீனங்கள் |
discrimination | பாரபட்சம் |
discriminatory practices and treatment | பாரபட்ச நடைமுறைகளும் நடத்துமுறையும் |
documented individual accommodation plans | மாற்றுத்திறனாளருக்கு வசதியளித்து ஆவணப்படுத்திய திட்டங்கள் |
domiciliary care = homecare | அகவரவுப் பராமரிப்பு |
early referral | தொடக்கத்திலேயே தொடர்புபடுத்தல் |
electronic information | மின்மத் தகவல் |
empowerment | வல்லமையீட்டம்; வல்லமையளிப்பு |
equalization of opportunities for persons with disabilities | மாற்றுத்திறானாளருக்கான வாய்ப்புகளைச் சமப்படுத்தல் |
extranet website | புறவலைய இணையதளம் |
facility | வசதி; கட்டிடம்; நிலையம்; சாதனம் |
forced institutionalization | பலவந்தமாக நிலையத்தில் சேர்த்தல் |
forced intervention | பலவந்த தலையீடு |
full and inclusive life | (மாற்றுத்திறனாளரை) உள்வாங்கும் முழுவாழ்வு |
functional competencies | தொழிற்படு தகுதிகள் |
grab bar | கைத்தாங்கு |
guardianship | பாதுகாவல் |
habilitation and rehabilitation services | வாழ்வளிப்பு-மறுவாழ்வளிப்புச் சேவைகள் |
handhold | கைபிடி |
handrail | கைபிடிச்சட்டம் |
hearing impaired | செவிப்புலன் மட்டுப்பட்ட |
Homecare = domiciliary care | அகவரவுப் பராமரிப்பு |
impairment(s) | வலுக்குறைவுகள் |
inclusive design | (மாற்றுத்திறனாளரை) உள்வாங்கும் வடிவமைப்பு |
inclusive education | (மாற்றுத்திறனாளரை) உள்வாங்கும் கல்வி |
inclusive language | (மாற்றுத்திறனாளரை) உள்வாங்கும் மொழி |
individualized workplace emergency response information | மாற்றுத்திறனாளருக்கான வேலைத் தல அவசர பதில்வினைத் தகவல் |
information barriers | தகவல் தடங்கல்கள் |
integrated accessibility standards regulation | ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுதவி நியமங்கள் ஒழுங்காக்கம் |
large designated public sector organization | நிர்ணயித்த அரசுத்துறைப் பேரமைப்பு |
large print books | பேரச்சு நூல்கள் |
legal guardian | சட்டபூர்வ பாதுகாவலர் |
life and social development skills | வாழ்வு-சமூக விருத்தித் திறன்கள் |
life-long learning | வாழ்நாள் கற்கை |
lifting device | உயர்த்தி |
linguistic identity of the deaf community | செவிப்புலன் மட்டுப்பட்டோரின் மொழி அடையாளம் |
mainstreaming = inclusion | உள்வாங்கல் |
major life activities | பெருவாழ்வுச் செயற்பாடுகள் |
maltreatment = ill-treatment | துன்புறுத்தல் |
medical aid | மருத்துவத் துணை |
mental impairment | உள்ளத் தடங்கல் |
mobility aid | நடமாட்டத் துணை |
mobility assistive devices | நடமாட்ட திறனுதவிச் சாதனங்கள் |
mobility impairment | நடமாட்ட மட்டுப்பாடு; மட்டுப்பட்ட நடமாட்டம் |
multimedia information | பல்லூடகத் தகவல் |
needs of persons with disabilities | மாற்றுத்திறனாளரின் தேவைகள் |
neglect or negligent treatment | புறக்கணித்தல் அல்லது புறக்கணித்து நடத்தல் |
obligated organization | கடப்பாடுடைய அமைப்பு |
oral impairment | வாய்மொழித் தடங்கல்; மட்டுப்பட்ட வாய்மொழி |
oral-aural communication | வாய்வழி-செவிவழித் தொடர்பாடல் |
organizational barriers | அமைப்பகத் தடங்கல்கள் |
orientation and mobility skills | சூழ்நிலை உணர்ந்து நடமாடும் திறன்கள் |
pathologizing disabilities | வலுவீனங்களை நோய்களாக நோக்குதல் |
perceived impairments | உணரப்படும் தடங்கல்கள்; உணரப்படும் மட்டுப்பாடுகள் |
periphery | சுற்றயல் |
personal mobility devices | சுய நடமாட்ட சாதனங்கள் |
physical barriers | உருப்படித் தடங்கல்கள் |
physical impairment | உடல்சார் மட்டுப்பாடு |
portable bridge plate | கையடக்க கடப்புத்தகடு |
protecting and monitoring the human rights of persons with disabilities | மாற்றுத்திறனாளரின் மனித உரிமைகளைப் பதுகாத்தலும் கண்காணித்தலும் |
qualified individual with disabilities | தகைமைவாய்ந்த மாற்றுத்திறனாளர் |
rail-based transportation | தண்டவாளப் போக்குவரத்துச் சேவை |
ramp | சாய்வாரம் |
reasonable accommodation | நியாயமான இடவசதி |
respite care = short term care | குறுங்காலப் பராமரிப்பு |
rights-based approach | உரிமைவழி அணுகுமுறை |
riser height | படி உயரம் |
safe and reliable transportation | பாதுகாப்பான, நம்பிக்கையான போக்குவரத்துச் சேவை |
self-service kiosk | சுயபணிக் கூண்டு |
self-worth = self-esteem | தன்மானம் |
sensory disabilities | புலன்சார் வலுவீனங்கள் |
sensory impairment | புலன்சார் மட்டுப்பாடு |
short term care = respite care | குறுங்காலப் பராமரிப்பு |
sign language | சைகை மொழி |
small designated public sector organization | நிர்ணயித்த அரசுத்துறைச் சிற்றமைப்பு |
specialized transportation services | பிரத்தியேக போக்குவரத்துச் சேவைகள் |
specific learning disability | குறித்த கற்கை வலுவீனம் |
speech impairment | பேச்சுத் தடங்கல்; பேச்சு மட்டுப்பாடு; மட்டுப்பட்ட பேச்சு |
stanchion | பிடிவடம் |
standard rules on the equalization of opportunities for persons with disabilities | மாற்றுத்திறனாளருக்கான வாய்ப்பு களைச் சமப்படுத்துவது பற்றிய நியம விதிகள் |
step nosing | படிவிளிம்பு |
streetcar | மின்பேருந்து |
subway | சுரங்கத் தொடருந்துச் சேவை |
support person | துணையாளர் |
surrogate | பதிலி |
tactile communication | தொட்டுத் தொடர்பாடல்; தொடுகைத் தொடர்பாடல் |
taxicab | வாடகையூர்தி |
technology barriers | தொழினுட்பத் தடங்கல்கள் |
transit bus | பயணப் பேருந்து |
transportation for seniors and disabled patients | முதியோருக்கும் நோயுற்ற மாற்றுத் திறனாளருக்குமான போக்குவரத்துச் சேவை |
tread depth | படியகலம் |
trusteeship | நம்பிக்கைப் பொறுப்பாண்மை |
universal design | பொது வடிவமைப்பு |
vision impairment | பார்வை மட்டுப்பாடு; மட்டுப்பட்ட பார்வை |
visually delivered materials | பார்த்தறியக் கொடுக்கும் வெளியீடுகள் |
vocational rehabilitation | தொழில்சார் மறுவாழ்வு |
vocational training | தொழிற் பயிற்சி |
wardship | சிறார்-பாதுகாவல் |
Web Content Accessibility Guidelines (WCAG) | மாற்றுத்திறனாளருக்கான இணையப் பொருளடக்க வழிகாட்டிகள் |
wheelchair accessible transportation | சில்லிருக்கையாளர் போக்குவரத்துச் சேவை |
wheelchair transportation for seniors | முதியோருக்கான சில்லிருக்கைப் போக்குவரத்துச் சேவை |
workplace emergency response plan | வேலைத்தல அவசர பதில்வினைத் திட்டம் |
No comments:
Post a Comment