Search This Blog

 LITERATURE = இலக்கியம்  

abstract noun

பண்புப் பெயர்

accent

அசையழுத்தம்

accusative case

இரண்டாம் வேற்றுமை

acronym

முன்னெழுத்துச்சொல்  (-கா: Aids)

active verb

தன்வினை

active voice

செய்வினை

adjective

பெயரடை

adverb

வினையடை

aesthetics

கலையழகியல்

affirmative verb

உடன்பாட்டு வினை

agent

கருத்தா

allegory

உருவகப் படைப்பு

alliteration

மோனை

allusion

மறைகுறிப்பு

alphabet

நெடுங்கணக்கு

anecdote

துணுக்கு

annotation

விளக்கக்குறிப்பு

antagonist

எதிராளர்

anthology

தொகைநூல்

anticlimax = bathos

சுவையிறக்கம்

antithesis

முரண்கோள்

antonym = opposite

எதிர்ச்சொல்

aphorism

மணிமொழி

apostrophe (')

உடைமைக்குறி; எச்சக்குறி

appellative verb

குறிப்புவினை

apposition

அருகமைவு

archaic word

வழக்கொழிந்த சொல்

archaism

வழக்கொழிந்த சொல்லாட்சி

article

சார்படை

articulation

அறுத்துரைப்பு

assonance

ஒலியியைவு

asterisk

உடுக்குறி

asyndeton

இடைச்சொல் நீக்கம் (-கா: பேசு, எழுது,வாசி)

attributive

உரிச்சொல்

autofiction

சுயசரிதைப்புனைவு

auxiliary verb

துணை வினை

ballad

கதைப்பாடல்

baroque

பகட்டுக்கலை; பகட்டுப்படைப்பு

biography

வாழ்க்கை வரலாறு

brackets ( )

அடைப்புக்குறி

burlesque

ஏளனம் = எள்ளற் படைப்பு

cadence

ஓசையிறக்கம்

caption

தலைப்பு; இணைகூற்று

case

வேற்றுமை

catharsis = purification

அகத்தூய்மைப்பேறு; கலைவடிகால்

causative verb

பிறவினை

change

விகாரம்

character

கதைமாந்தர் = கதாபாத்திரம்

charade

பம்மாத்து

chiasmus

முரண்தொடரணி

choir

பாடகர் குழு

chorus

குழு இசை ; பல்லவி

chronicle

கால ஏடு

circumlocution = periphrasis

சுற்றிவளைத்துரைப்பு

classic

செவ்விலக்கியம்

clause

துணை வசனம்; வாசகம்

cliché

தேய்வழக்கு

climax

சுவையுச்சம்; ஏற்றவணி; வீறுகோளணி

coincident

உடனிகழ்வு

collage

கோவை; கோவைக்கலை; வைப்படைப்பு

collective noun

கூட்டுப் பெயர்

collocation

ஒருங்குவைப்பு

colloquial

பேச்சுவழக்கு

colon (:)

விளக்கக்குறி (:)

combination

புணர்ச்சி

comedian

நகைச்சுவையாளர்

comedy

இன்பியல்; நகைச்சுவை; நகைச்சுவைப் படைப்பு

comma (,)

காற்புள்ளி (,)

compound word

கூட்டுச்சொல்

concordance

ஒத்திசைவு; ஏட்டுச்சொற்கோவை

conjunction

இடைச்சொல்

consonant

மெய்யெழுத்து

corruption

மரூஉ

couplet

ஈரடிச்செய்யுள் = குறள்

crescendo

ஓசையேற்றம்

critic

திறனாய்வாளர் = விமர்சகர்

criticism

திறனாய்வு; விமர்சனம்; கண்டனம்

criticize

திறனாய்; விமர்சி; கண்டி

critique

கணிப்புரை

dash (-)

கீறு (-)

dative case

நான்காம் வேற்றுமை

denotation

குறிப்பொருள்

denouement

ஈற்றமைதி = ஈற்றுரை

derivative

வழிவந்த சொல்

dialect

கிளைமொழி

dialogue

உரையாடல்

dictionary

அகராதி = அகரமுதலி

dictum

நெறியுரை

didactic verse

அறிவுறுத்தும் செய்யுள்

digression

மற்றொன்றுவிரித்தல்

direct speech

தற்கூற்று

discourse

அளவளாவல்

divisible word

பகுபதம்

dot (…)

குற்று (…)

double entendre

இரட்டுற மொழிதல்

elegy

புலம்பற்பாடல் = கையறுநிலைப்பாடல்

ellipsis

சொல்லெச்சம் = அவாய்நிலை

embodiment of truth

உண்மையின் திருவுருவம்

emotional language

உணர்வெழுச்சி மொழி

emphasis

அழுத்தம்

epic

காப்பியம் = காவியம்

epigram

நன்மொழி

epilogue

நிறைவுரை

episode -1

அங்கம் -1

epithet

அடைமொழி

etymology

சொற்பிறப்பியல்

euphemism

இடக்கரடக்கல்

exception

புறனடை; விதிவிலக்கு

excitement

பூரிப்பு; பரபரப்பு

exclamation = interjection

வியப்பிடைச்சொல்

exclamation mark (!)

வியப்புக்குறி (!)

exposition = elaboration

விரித்துரைப்பு

fable

நீதிக்கதை

fantasy

கற்பனை இன்பம்; நப்பாசை; வீண்கனவு

farce

கேலிக்கூத்து

feedback

மீள்தரவு; பின்னூட்டு

female minstrel

விறலி

feminine gender

பெண்பால்

festschrift

சிறப்பிதழ்

fiction

புனைவு

figure of speech

அணி

finite verb

முற்றுவினை

first person

தன்மை

flash-back

முன்னிகழ்வு; மின்னல் நினைவு

folk-dance

நாட்டார் நடனம்

folk-drama

நாட்டார் கூத்து

folklore

நாட்டார் மரபு

folk-music

நாட்டார் இசை

folksong

நாட்டார் பாடல்

formal usage

முறைசார் வழக்கு

free verse

புதுக்கவிதை

full stop = period (.)

முற்றுப்புள்ளி

funny episode

வேடிக்கை நிகழ்வு

future tense

எதிர்காலம்

gender

பால்

genitive case

ஆறாம் வேற்றுமை

genre

படைப்பு வகை

gerund = verbal noun

தொழிற்பெயர்; வினைப்பெயர்

glossary

சொற்கோவை

gradual loss of vigour and tone

சென்றுதேய்ந்திறுதல்

grammar

இலக்கணம்

historic present

காலவழுவமைதி

homograph

பலபொருளொருசொல்

homophone

ஓரொலிவேற்றுச்சொல்

hubris

இறுமாப்பு

humour

நகைச்சுவை

hyperbole

உயர்வுநவிற்சி

hyphen (-)

கூட்டுக்குறி

hysteron proteron

தலைதாள் மாற்றணி (-கா: வென்றேன், கண்டேன், வந்தேன்)

idiom

மரபுத்தொடர்

idyll

ஊரெழில்; ஊரெழிற்பாட்டு

image

படிமம் = விம்பம்

imagery

உருவகிப்பு

imperative verb

ஏவல் வினை

inappropriate use of words

வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல்

incomplete statement

குன்றக்கூறல்

inconsistency

மாறுகொளக்கூறல்

indirect speech = reported speech

பிறர் கூற்று

indivisible word

பகாப் பதம்

infinitive

வினைப்பொதுநிலை

inflection = inflexion

சொல்லுருமாற்றம்

informal usage

முறைசாரா வழக்கு

innuendo

மறைமுக இகழ்ச்சி

interjection = exclamation

வியப்பிடைச்சொல்

interrogative

வினா

intonation

குரலேற்றத்தாழ்வு

intransitive verb

செயப்படுபொருள் குன்றிய வினை

irony (i.e: We learn from experience that men never learn anything from experience – Bernard Shaw)

முரண் அணி (-கா: நாம் பட்டறிவிலிருந்து கற்றுக்கொள்வது யாதெனில் மனிதர் பட்டறிவிலிருந்து எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதேபேர்ணாட் சோ)

italics

சாய்வெழுத்து

jargon

துறைமொழி

leitmotif

மீள்வரி

lexicon

பேரகராதி

lilt

ஓசைநயம்

limerick

நகைக்குறும்பா

linguistics

மொழியியல்

literary usage

இலக்கிய வழக்கு

literature

இலக்கியம்

litotes

தாழ்வுநவிற்சி

loanword

இரவற் சொல்

locative case

ஏழாம் வேற்றுமை

lyric

இசைப்பாடல்

magic(al) realism

மாந்திரிக மெய்ம்மை

malapropism

சொல்மாறாட்டம்

masculine gender

ஆண்பால்

maxim

மூதுரை

melodrama

கூத்து; இசைநாடகம்

melody

இன்னிசை

metalanguage

மீமொழி

metaphor

உருவகம்

metonymy

ஆகுபெயர்

metre

யாப்பு; சீர்

misnomer

வழுச்சொல்; வழூஉச் சொல்

monologue

ஓரங்கவுரை; தனியுரை

mood

வினைப்பாங்கு

montage

கீற்றுச்ச்சரம்

moral = lesson

படிப்பினை

morals = ethics

ஒழுக்கம்

motif of the novel

நாவலின் முனைப்புக்கூறு

motive

உள்நோக்கம்

motto

பொன்மொழி

mystification

மயங்கவைத்தல்

myth

தொன்மம்; புராணம்; கட்டுக்கதை

mythology

தொன்மவியல்

narration

எடுத்துரைப்பு

narrative

கதை; விவரிப்பு

negative

எதிர்மறை

nemesis

சூழ்வினை

neologism

புதுப்பதம்

nominative case

எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை

non-fiction

புனைவிலி

note

குறிப்பு

noun

பெயர்

novel

நாவல்

novelette

குறுநாவல்

numeral

எண்ணுப் பெயர்

object

செயப்படுபொருள்

oblique = slash (/)

சாய்கோடு (/)

ode

வாழ்த்துப்பா

one-act-play

ஓரங்க நாடகம்

onomatopoeia

ஒலிக்குறிப்பு

optative verb

வியங்கோள் வினை

orature

பாமரர் வாய்மரபு

orthography

எழுத்தியல்

oxymoron

முரண்தொடை

paean

வெற்றிப்பாட்டு

palindrome (i.e: rotator)

இருதலைச்சொல் (-கா: விகடகவி)

panegyric

புகழ்பாடல்

parable

உவமைக் கதை

paradox

முரண்புதிர்

paragraph

பந்தி

paraphrase

பொழிப்புரை

parenthesis

இடைப்பிறவரல்

parlance

மொழிப்பாணி

parody

நையாண்டிப் போலி; நையாண்டிப் படைப்பு

parsing

சொல்லிலக்கணம்

part of speech

வாக்கிய உறுப்பு

participle

எச்சம்

passage

உரைக்கூறு

passive voice

செயப்பாட்டு வினை

pathetic fallacy

தற்குறிப்பேற்றம் (-கா: நிலவும் மலரும் குலவக் கண்டேன்)

performance arts

நிகழ்த்து கலை

pejorative

இழிமொழி

persona

முகத்திரை; பிம்பம்; வேடம்

personification

ஆளுருவகம்

personification of truth

உண்மையை ஆளாக உருவகித்தல்

perspective = point of view

கண்ணோட்டம்

philology

மொழிவரலாற்றியல்

phrasal verb = verbal phrase

வினைத்தொடர்

phrase

சொற்றொடர்

pidgin

கலப்புமொழி

plagiarism

படைப்புத்திருட்டு

plot

கதைப்பின்னல்

plural

பன்மை

poem

கவிதை

poetics

கவித்துவக்கலை

poetry

கவியியல்

point of view = perspective

கண்ணோட்டம்

portmanteau word = blend (i.e: motor + hotel = motel)

இருபாதிச்சொல்

portrayal

சித்தரிப்பு

possessive form

உடைமை உரு

predicate

பயனிலை

prefix

முன்னொட்டு

preposition

வேற்றுமை உருபு

prologue

தொடக்கவுரை

pronoun

பதிற்பெயர்

pronunciation

உச்சரிப்பு

prose

உரைநடை

prosody

யாப்பியல்

protagonist

முதன்மையாளர்

proverb

பழமொழி; முதுமொழி

pun

சிலேடை

punctuation

நிறுத்தக்குறியீடு

puppet show

பொம்மலாட்டம்

question mark

(?) வினாக்குறி

quotation marks

('') மேற்கோட்குறி

realism

மெய்ம்மைத்துவம்

realistic

மெய்ம்மைவாய்ந்த; நிகழக்கூடிய

reality

மெய்ம்மை

recension

மறுவாசகம்

redundancy

மிகையுரை

reinterpretation

மறுபொருள்கோடல்; மறுவியாக்கியானம்

reported speech = indirect speech

பிறர் கூற்று

rhapsody

முழக்கம்; இசைமுழக்கம்; பாராயணம்

rhetoric

அணியியல்; சொற்சிலம்பம்

rhyme

எதுகை; இயைபு

rhythm

சந்தம்

romance

காதலூடாட்டம்; காதல் புனைவு

romanticism

கற்பனை நவிற்சி

root

பகுதி

sarcasm

வஞ்சப்புகழ்ச்சி; இகழாவிகழ்ச்சி

sardonic tone

எள்ளிநகையாடும் தொனி

sardonicism

எள்ளிநகையாடல்

satire

கேலி; அங்கதம்

saying

முதுமொழி

scene

காட்சி

second person

முன்னிலை

semantics

சொற்பொருளியல்

semicolon (;)

தொடர்க்குறி (;)

seminar

கருத்தரங்கு

sentence

வசனம்

sentimental value

மென்னுணர்வுசார் பெறுமதி

sentimentalism

மென்னுணர்வுமயம்

sentimentality

மென்னுணர்வுடைமை

short story

சிறுகதை

simile

உவமை

singular

ஒருமை

slang

கொச்சைவழக்கு

sobriquet

பட்டப்பெயர்

soliloquy

நெட்டுரை; நெஞ்சொடுகூறல்

sonnet

ஈரேழ்வரிப்பா

spelling

எழுத்துக்கூட்டல்

spoken language

பேச்சு மொழி

spoonerism

எழுத்து மாறாட்டம்

square brackets [ ]

சதுரக்குறி [ ]

stanza

பாடற்கூறு 

stereotype

படிவார்ப்பு

stigma

வடு

stream of consciousness

உணர்வோடை

style

பாணி

subject

எழுவாய்; நுதல்பொருள்

suffix

பின்னொட்டு

suggestion

குறிப்பு

summary

சுருக்கம்

surrealism

அதீதகற்பிதம்

suspense

மர்மம்

swear word

இழிசொல்

syllable

அசை

symbol

குறியீடு

symposium

ஆய்வரங்கு

synecdoche

சினையாகுபெயர்

synonym

ஒத்தசொல்

syntax

சொற்றொடரியல்

tautology

கூறியதுகூறல்

technique

உத்தி; நுட்பம்

tense

காலம்

term

பதம்

termination

விகுதி

terminology

கலைச்சொற்கள்; கலைச்சொல்லியல்; கலைச்சொல்லாட்சி

text

உரை

theme

கரு; நுதல்பொருள்; பாடுபொருள்

thesaurus

இயைசொற்களஞ்சியம்; நிகண்டு

third person

படர்க்கை

tone

தொனி

tragedy

துன்பியல்

transgressive fiction

பிறழ் புனைவு

transitive verb

செயப்படுபொருள் குன்றா வினை

trope

சொல்லணி

usage

வழக்கு

useless statement

பயனில் கூற்று; நின்றுபயனின்மை

values

விழுமியம்

verb

வினை

verbal noun = gerund

தொழிற்பெயர்; வினைப்பெயர்

verbal phrase = phrasal verb

வினைத்தொடர்

verbosity

வெற்றுரை; வெற்றெனத்தொடுத்தல்

verse

செய்யுள்

vocabulary

சொல்வளம்

vocative case

எட்டாம் வேற்றுமை; விளிவேற்றுமை

vowel

உயிரெழுத்து

vulgarism

இழிவழக்கு

word

சொல்

workshop

பயிலரங்கு

No comments:

Post a Comment