Search This Blog

சட்டவியல் = LAW (E-H)

easement

வழியுடித்து, வழிவாய்க்கால் உரித்து

economic embargo

பொருளாதாரத் தடை

economic sanctions

பொருளாதார முட்டுக் கட்டைகள்

ejusdem generis = of the same kind 

அதே வகைப்பட்ட

election by the accused

விசாரணை வகை தொடர்பான குற்றஞ்சாட்டப்பட்டவரின் தெரிவு

election by the crown

விசாரணை வகை தொடர்பான அரச வழக்குத்தொடுநரின் தெரிவு

elements of a crime

 

(i. e: intent, conduct, concurrence, and causation)

குற்றக் கூறுகள்

 

(எ-கா: குற்றநோக்கம்; குற்றச்செயல்; நோக்கமும் செயலும் உடனிகழ்தல்; நோக்கமும் செயலும் உடனிகழ்கையில் குற்றம் இடம்பெறல்)

eligibility to refer claim

கோரிக்கையைப் பாரப்படுத்தும் தகவு

embargo

தடையாணை

embezzlement

கையாடல்

emblem

சின்னம்

emergency

அவசரகால நிலைமை

emigrate

குடியகல்

emigration

குடியகல்வு

emphyteusis

நெடுங்காலப் பாட்டம் (குத்தகை)

enacted by parliament, legislation 

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டவாக்கம்

enactment, legal 

சட்ட நிறைவேற்றம்

enactment, legislative

சட்டவாக்க நிறைவேற்றம்

en banc session

முழுநீதிமன்ற அமர்வு; குறித்த நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் இடம்பெறும் அமர்வு  

en bloc = all at the same time

ஒட்டுமொத்தமாக

encumbrance

பாரபந்தம்

endorse

மேலொப்பமிடு; மாட்டறை

endorsement

மேலொப்பம்; மாட்டறைவு

enforcement of removal orders

அகற்றல் கட்டளைகளை நிறைவேற்றல்

enjoining order

தடைக் கட்டளை

entering and remaining

புகுந்து தங்கியிருத்தல்

equitable action

தடைக்கட்டளை நடவடிக்கை

equitable distribution

ஒப்புரவான விநியோகம்

equivocal statement

கருத்துமயக்கும் கூற்று

equivocation

கருத்துமயக்கல்; மழுப்பல்

espionage

ஒற்றாடல்

establish identity

அடையாளத்தை எண்பி

established custom

நிலைபெற்ற வழமை

estate tax

இறப்புச்சொத்து வரி; மரணச்சொத்து வரி

estate trustee

இறப்புச்சொத்துப் பொறுப்பாளர்

estoppel

முரண்வாதத் தடை

estoppel by deed

உறுதிமூலமான முரண்வாதத் தடை

estreatment

பிணைத்தொகை பறிமுதல்  

ethical jurisprudence

ஒழுக்கச் சட்டவியல்

ethnic cleansing

இனக்குழுமக் களைவு

evade payment

கொடுப்பனவைத் தட்டிக்கழி

evict

வெளியேற்று

evidence de bene esse = evidence admitted provisionally by the court on the understanding that its admissibility will be shown later.

தற்காலிகமாக அனுமதிக்கப்படும் சான்று

evidence relating to identity

அடையாளம் தொடர்பான சான்று

evil state of mind

தீய உளநிலை; தீய மனநிலை

ex cathedra = from the seat of authority

அதிகாரபூர்வமாக; அதிகார பீடத்தில் அமர்ந்தபடி

ex contractu = arising from a contract

ஒப்பந்தத்திலிருந்து

ex delicto = as a result of fraud, malfeasance, or misconduct beyond the terms of a contract

தீங்கியல் வழியாக

ex empto = out of purchase

கொள்வனவிலிருந்து

ex gratia payment = voluntary payment as a favour

அகமுவந்த கொடுப்பனவு; உளமுவந்த கொடுப்பனவு

ex hypothesi = according to the hypothesis proposed

கருதுகோளின்படி

ex improviso = unexpected

எதிர்பாரா

ex justa causa = from a just cause

நல்லேதுவால்

ex lege = by law

சட்டத்தால்

ex majore cautela = out of an abundance of caution

மிதமிஞ்சிய கவனத்தால்

ex mero motu = of one's own accord

தானாகவே

Ex nihilo nihil fit  = Nothing comes out of nothing (Parmenides)

இன்மையில் எழுவதும் இன்மையே

ex nudo pacto non oritur action = A cause of action does not arise from a naked agreement

வெற்று ஒப்பந்தத்தால் வழக்கு எழாது

ex parte trial

ஒருமுக விளக்கம் (விசாரணை); மறுதரப்பற்ற விளக்கம் (விசாரணை)

ex post facto = after the fact

பிற்செயலால்; நிகழ்ந்த பின்; நிகழ்வின் பின்

ex turpi causa non oritur actio = An action does not arise from a base cause

இழியேதுவால் வழக்கெழாது

ex testamento = under a will

இறப்பாவணத்துக்கமைய

examination for discovery

விபர வெளியீட்டு விசாரணை

examination-in-chief = direct examination

நேர் விசாரணை 

exceptio rei venditae et traditae = a plea that the thing was sold and delivered

விற்று ஒப்படைத்தாயிற்று என்ற தடக்கு

exceptions to public hearing

பொது விசாரணைக்கு விதிவிலக்குகள்

excessive demand

மட்டுமீறிய கோரிக்கை

Excise Law

மதுவரிச் சட்டம்

excluded persons

விலக்கப்பட்ட ஆட்கள்

exclusion clause

விலக்கல் வாசகம்

exclusion order

விலக்கல் கட்டளை

exclusive jurisdiction

பிரத்தியேக நியாயாதிக்கம்

exculpate

குற்றத்திலிருந்து விடுவி

exculpatory defence

குற்றவிடுவிப்புக்கான பதில்வாதம்

exculpatory evidence

குற்றவிடுவிப்புக்கான சான்று

executed warrant

நிறைவேற்றப்பட்ட கைதாணை

execution by hanging

தூக்குத்தண்டனை; தூக்குமரண தண்டனை

execution of duty

கடமை நிறைவேற்றம்

execution of a lease

குத்தகை உறுதிமுடிப்பு

executioner

இறப்புத்தண்டனையாளர்; இறப்புத்தண்டனை நிறைவேற்றுநர்

executive, chief

தலைமை நிறைவேற்றுநர்

executor

இறப்பாவண தத்துவகாரர்

executor dative

நீதிமன்றம் அமர்த்தும் நிறைவேற்றுநர்

executor de son tort

தானாகத் தலையிடும் நிறைவேற்றுநர்

executory contract

நிறைவேற்றவேண்டிய ஒப்பந்தம்

exhibits before the court

நீதிமன்றின் முன்னுள்ள தடயங்கள்

exonerate

பழிவிலக்கு

expatriate

நாடுகடத்து; நாடுகடந்தவர்; நாடுகடந்த

expedited hearing

துரித விசாரணை

expert-witness

நிபுணர்-சாட்சி

express purpose

வெளிப்படை நோக்கம்

Expressio unius est exclusio alterius = The expression of one thing is the exclusion of another

ஒன்றின் விதப்பு மற்றதன் விலக்கு

expressum facit cessare tacitum = What is expressed renders what is implied silent

விதந்து கூறப்பட்டவிடத்து, கூறப்படாதவை விலக்கு  

expulsion order

வெளியகற்றல் கட்டளை

expunge from the file

கோப்பிலிருந்து நீக்கு

extenuating circumstances

தணிக்கும் சூழ்நிலைகள்

extortion

வன்பறி

extrajudicial

நீதிபிறழ்ந்த

extraterritorial

ஆள்புலங் கடந்த

extradition procedure

திருப்பியனுப்பும் நடைமுறை

extraneous evidence

தொடர்பற்ற சான்று

eye-witness

கண்கண்ட சாட்சி; நேரில் கண்ட சாட்சி

fabrication of evidence

சான்று புனைவு

fact

மெய்; விவரம்; நேர்வு

factor

காரணி

factum

வாதவிவரம்

factum probandum = the fact to be proved

எண்பிக்கவேண்டிய விவரம்

fait accompli

முடிந்துபோன விடயம்

failure to appear at the proceeding

விசாரணைக்குத் தோற்றத் தவறுகை

fair and efficient

செவ்விய, திறமான

fair and equitable

செவ்விய, ஒப்புரவான

fair and reasonable

செவ்விய, நியாயமான

fair trial

செவ்விய விசாரணை

fairness and natural justice

செவ்வையும், இயற்கை நீதியும்

false affidavit

பொய்ச் சத்தியக்கடதாசி

false evidence

பொய்ச் சான்று; பொய்ச் சாட்சியம்

false statement

பொய்க்கூற்று

falsely personate

ஆள்மாறாட்டம் செய்

falsify

பொய்யாக்கு

falsity

பொய்மை

family class 

குடும்ப வகுப்பு

family member

குடும்ப உறுப்பினர் (அங்கத்தவர்)

fault

தவறு; தப்பு

fear of persecution

கொடுமைக்கு உள்ளாகும் அச்சம்

Federal Court

மத்திய நீதிமன்று

felony

பாதகம்

felony murder

பாதகக் கொலை

Feudal Law

மானியச் சட்டம்

fiduciary = trustee

நம்பிக்கைப் பொறுப்பாளர் 

fiduciary partnership

நம்பகப் பங்குடைமை

final and conclusive

இறுதி முடிபான

final decision

இறுதி முடிபு

fine

அபராதம்

first degree murder

திட்டமிட்ட வன்மக் கொலை; முன்சிந்தித்து திட்டமிட்ட வன்மக் கொலை

first detention review

முதலாவது தடுத்துவைப்பு மீள்நோக்கு

first offender

முதல் தவறாளி

fiscal property

அரசிறை ஆதனம்

fitness hearing

உளநிலைப் பொருத்த விசாரணை

footpath

ஒற்றையடிப் பாதை

force of law

சட்ட வலு

forcible confinement

வலிந்து தடுத்துவைப்பு

forcible disappearance

வலிந்து காணாமல் போக்கடிப்பு

forcible entry

வலிந்து நுழைவு

foreign national

வெளிநாட்டவர்

forensic evidence

தடயவியற் சான்று

forensics

தடயவியல்

forged document

போலி ஆவணம்

forgery

போலியாக்கம்; போலியொப்பம்

form and language of documents

ஆவணங்களின் உருவும் மொழியும்

forma pauperis = in the form of a pauper

வறியோர் முறையில்

formal inquiry

விதிமுறை விசாரணை; முறைசார் விசாரணை

fortuitous meeting

தற்செயலான சந்திப்பு

forty-eight (48) hour review

நாற்பத்தெட்டு (48)மணித்தியால மீள்நோக்கு

foster parent

வளர்ப்புப் பெற்றார்

foul play

வஞ்சனை

fraudulent claim

மோசடியான கோரிக்கை

free light

தங்குதடையற்ற வெளிச்சம்

fructus

பலன்

fructus decidentes

விழுந்த பழம்

fructus industriales 

முயற்சிப் பலன்

fructus naturales

இயற்கைப் பலன்

functus officio

பணிமுடிவு

fugitive criminal

தப்பியோடிய குற்றவாளி

Fundamental Law

அடிப்படைச் சட்டம்

further reviews

மேலதிக மீள்நோக்குகள்

furtum

களவு; வெளவல்

furtum manifestum = open theft

அப்பட்டமான களவு

garnish

கடன்பற்று அறிவித்தல் கொடு

garnishee

கடன்பற்றுப் பொறுப்பாளர்

garnishee order

கடன்பற்றுக் கட்டளை

garnishment, notice of

கடன்பற்று அறிவித்தல்

gender related issue

பால்மை தொடர்பான பிரச்சனை

general damages

பொது இழப்பீடு

general provisions

பொது ஏற்பாடுகள்

generalized risk

பொதுப்படையான ஆபத்து

generally known fact

பொதுவாக அறியப்பட்ட விவரம்

genocide

இனப்படுகொலை

genuine

உண்மையான; மெய்யான; நேரிய

girlfriend

பெண் கூட்டாளி

give evidence = testify

சான்றுபகர்; சாட்சியமளி

golden rule = Treat others as you want to be treated

தன்னைப் போல் பிறரையும் நேசிக்கும் நெறி

good faith = bona fides

நன்னோக்கம்; நேரிய நோக்கம்

goods and chattels

பொருட்களும் தளபாடங்களும்

goodwill

நல்லெண்ணம்

government-in-exile

சேயக அரசாங்கம்

grand jury

அதிபெரும் யூரர்குழாம்

grant permanent resident status

நிரந்தர வசிப்புத் தகுநிலை வழங்கு

grave and sudden provocation

பாரதூரமான திடீர் ஆத்திரமூட்டல்

grievance

உளக்குறை; மனக்குறை

grievous bodily harm

கடும் உடலூறு

gross misconduct

மிக்க துர்நடத்தை

grounds of security

பாதுகாப்புக் காரணங்கள்

guarantee

உத்தரவாதம்

guilt

குற்றப்பாடு

guilty by association

உறவாடிய குற்றப்பாடு

guilty or not guilty? Are you,

நீர் குற்றவாளியா, அல்லவா?

habeas corpus, writ of

ஆட்கொணர்வுப் பேராணை

habitual criminal

பழகிப்போன குற்றவாளி

half brother

ஒருவழிச் சகோதரன்

handcuffs

கைவிலங்கு

harassment

தொந்தரவு

harm

தீங்கு; கேடு

head office

தலைமை அலுவலகம்

headquarters

தலைமையகம்

health, to protect the

உடல்நலம் காக்க

health grounds

உடல்நிலைக் காரணங்கள்

hearing

விசாரணை

hearsay evidence

சொல்லக்கேட்ட சாட்சியம்

heir

வழியுரித்தாளர்; பின்னுரிமையாளர்; மரபுரிமையாளர்

hereditary right

பரம்பரை உரிமை

hiatus

இடைவெளி

high court

மேல் நீதிமன்று

high treason

அரசதுரோகம்

highway robbery

வழிப்பறிக் கொள்ளை; ஆறலைப்பு

hoarding

பதுக்கல்

hold in common

பொதுவில் வைத்திரு

hold on remand

விளக்க மறியலில் வைத்திரு

hold to ransom

கப்பம் கேட்டு வைத்திரு

holograph will

சுயகையெழுத்து விருப்பாவணம்

home invasion

அத்துமீறி வீடுபுகுந்து குற்றம் புரிகை

homicide

கொலை

homosexuality

ஓரினச்சேர்க்கை

human rights violations

மனித உரிமை மீறல்கள்

human smuggling

ஆள் கடத்தல்

human trafficking

ஆட்கடத்து வியாபாரம்

humanitarian and compassionate grounds

மனிதாபிமான, கருணை அடிப்படைகள்

humiliate

அவமானப்படுத்து

hybrid courts

கலப்பு நீதிமன்றுகள் உள்ளக-வெளியுலக கலப்பு நீதிமன்றுகள்

hybrid offences

கலப்புக் குற்றங்கள் குறுங்குற்றங்களும் கடுங்குற்றங்களும்


No comments:

Post a Comment