Search This Blog

சட்டவியல் = LAW (A-D) 


ab initio = from the beginning

தொடக்கத்திலிருந்தே; ஆதிதொட்டு

ab intestato = without a will

விருப்பாவணமின்றி; இறுதியாவணமின்றி

abandon a claim

கோரிக்கையை கைவிடு

abate rules

விதிகளை தணி

abduction = kidnap

ஆட்கடத்து

abeyance, in

நிறுத்திவைப்பில்

abide by the rules

விதிகளுக்கு அமைந்தொழுகு

abjure violence

வன்முறையை துறப்பதாக ஆணையிடு; வன்முறையை  துறப்பதாக சத்தியஞ்செய்

above suspicion

ஐயத்துக்கு அப்பாற்பட்ட

abrogate a rule

விதியை உதறித்தள்ளு (நீக்கு)

abscond

தலைமறைவாகு

absentee landlord

புறத்துறையும் ஆதன உடைமையாளர்

absolute discharge = unconditional discharge

முழு விடுவிப்பு; நிபந்தனையற்ற விடுவிப்பு

absolute liability

முழுப்பொறுப்பு

absolute proof

முழுச்சான்று; அறுதிச்சான்று

absolve the accused of the charges

குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவி

abuse of process

படிமுறைத் துர்ப்பிரயோகம்

accede to a request

வேண்டுகோளுக்கு இணங்கு

acceleration clause

விரைவுபடுத்தல் கூற்று

accept a claim

கோரிக்கையை ஏற்றுக்கொள்

acceptable document

ஏற்கக்கூடிய ஆவணம்

acceptance after sight

கண்டபின் ஏற்றுக்கொள்ளல்

acceptance for honour

மதிப்புக்கு ஏற்றுக்கொள்ளல்

acceptance supra protest

எதிர்த்தும் ஏற்றுக்கொள்ளல்

accessory after the fact

நிகழ்ந்தபின் உடந்தையாய் இருப்பவர்

accessory at the fact

நிகழும்பொழுது உடந்தையாய் இருப்பவர்

accessory before the fact

நிகழமுன் உடந்தையாய் இருப்பவர்

accord

உடன்பாடு

account for

பொறுப்புக் கூறு; விளக்கமளி

accountability

பொறுப்பேற்கும் கடப்பாடு

Accountability Court

பொறுப்புக்கூற்று நீதிமன்று

accountable

பொறுப்பேற்கும் கடப்பாடுடைய

accused, an

குற்றஞ்சாட்டப்பட்டவர்

acquired property

தேடிய தேட்டம்

acquisition

தேட்டம்

acquit

விடுதலை செய்

acquittal

விடுதலை (செய்கை)

act of commission

புரியும் செயல்

act of gross indecency

மிக இழிந்த செயல்; பேரிழிசெயல்

act of omission

செய்யாதொழிதல்

act of parliament

நாடாளுமன்றச் சட்டம்

act of violence

வன்செயல்

action = legal action

சட்ட நடவடிக்கை

actus reus

குற்றச் செயல்

ad colligenda bona

சொத்து ஒன்றுசேர்த்தல்

ad hoc basis, The meetings will be held on an

கூட்டங்கள் தேவைப்பட்ட வேளைகளில் நடத்தப்படும்

ad hoc committee

தேவைவேளைக் குழு

ad hoc, he tribunals operated

தீர்ப்பாயங்கள் தேவைப்பட்ட வேளைகளில் இயங்கின

ad hoc meeting to deal with the problem, an

பிரச்சனையைக் கையாளத் தேவைப்படும் வேளைக்குரிய கூட்டம்

ad idem

கருத்தொருமித்து; ஒரே பொருள் குறித்து

ad infinitum = in infinitum = without limit =  for ever

முடிவின்றி; என்றென்றும்

ad valorem

பெறுமதிப்படி

addenda

பிற்சேர்க்கைகள்

addendum

பிற்சேர்க்கை

adduce evidence

சான்று முன்வை

ademption

விருப்பாவண கொடைவிலக்கு

adjourn(ment)

ஒத்திவை(ப்பு)

adjudication

தீர்ப்பீடு

adjudicator

தீர்ப்பாளர்

administrative law

நிருவாகச் சட்டம்

administrative tribunal

நிருவாகத் தீர்ப்பாயம்

administrator

நிருவாகி; உரிமைத்தத்துவகாரர்

administrator de bonis non

எச்ச உரிமைத்தத்துவகாரர்

admissibility hearing

அனுமதிப்பு விசாரணை

admissible evidence

அனுமதிக்கத்தக்க சான்று

admission of guilt

குற்ற ஒப்புதல்

adopted child

தத்தெடுத்த பிள்ளை

adoption

தத்தெடுப்பு

adoption of convenience

வசதிக்கான தத்தெடுப்பு

adoptive parent

தத்தெடுத்த பெற்றார்

adulterous intercourse

பிறர்மனைப் புணர்ச்சி

adultery

பிறர்மனை நயப்பு

adversarial system of justice

எதிர்வாத நீதி முறைமை

adversary

எதிராளி

advisory opinion

சட்டதிட்ப மதியுரை

advocate

வழக்குரைஞர்

affidavit

ஆணையீட்டு மடல்; சத்தியக் கடதாசி

affirmant

உறுதியுரைஞர்

affirmation

உறுதியுரை

after sight

கண்டபின்

after the fact

நிகழ்ந்த பின்; நிகழ்வின் பின்

age of discretion

தற்றுணிபு வயது

aggravated assault

கடுந் தாக்குதல்; வலுத்த தாக்குதல்; நையப் புடைத்தல்

aggravated damages

உளத்தாக்க இழப்பீடு

aggravating circumstances

மோசமாக்கும் சூழ்நிலைகள்

aggrieved party

இடருற்ற தரப்பு

agreement

உடன்படிக்கை

aid and abet

உதவியும் ஒத்தாசையும் புரி

alcohol abuse

மதுபான துர்ப்பிரயோகம்; மட்டுமீறிய மதுபான நுகர்வு

Alford plea = Kennedy plea

முன்னர் தான் குற்றமற்றவர் என்று வாதித்தாலும் பின்னர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளல்

alias

எனப்படும்

alibi

இடத்திலாச் சான்று; நிகழ்ந்த இடத்தில் நில்லாத சான்று

alimony

பிரிமனைப்படி

alimony pendente lite

வழக்காடுகால பிரிமனைப்படி

allegation

சார்த்துரை; சாட்டுரை; குற்றச்சாட்டு

allow a claim

கோரிக்கையை அனுமதி

allow an appeal

மேன்முறையீட்டை அனுமதி

alternative dispute resolution

பிணக்கிற்கு மாற்றுத் தீர்வு

alternatives to detention

தடுத்துவைப்புக்கு மாற்றுவழிகள்

altius tollendi

உயர்த்தல் உரிமை

altius non tollendi

உயர்த்தல் மட்டுப்படுத்தும் உரிமை

ambiguity

இருபொருள்படுகை; தெளிவீனம்

ambiguous statement

இருபொருட் கூற்று; தெளிவிலாத கூற்று

ambivalence

இருவுளப்போக்கு

ambivalent

இருவுளப்போக்குடைய

amendment

திருத்தம்

amicable settlement

நட்பிணக்கம்

amicus curiae = friend of the court

நீதிமன்றின் நட்பாளர்

amnesty

மன்னிப்பு

animo furandi

திருட்டு எண்ணத்துடன்

animo revocandi

அழிக்கும் எண்ணத்துடன்

animosity

பகைமை

animus iniuriandi

அவமானப்படுத்தும் எண்ணம்

animus manendi

வதியும் எண்ணம்

annulment of marriage

திருமண நீக்கம்

anonymous

பெயரறியப்படாத; அநாமதேய

ante nuptial settlement

மணமுன் இணக்கம்

anticipatory bail

முன்பிணை

Apex Court = Supreme Court

உச்ச நீதிமன்று

apparent authority = ostensible authority

வெளித்தோற்ற அதிகாரம்

appeal

மேன்முறையிடு; மேன்முறையீடு

appear in court

நீதிமன்றில் வெளிப்படு (தோன்று)

appearance notice

வெளிப்படல் அறிவிப்பு

appearance of bias

பக்கச்சார்பு காணப்படல்

appellant

மேன்முறையீட்டாளர்

appellate court

மேன்முறையீட்டு நீதிமன்று

applicant

விண்ணப்பதாரி

apportionment

பங்கீடு

apprehend the suspect

ஐயத்துக்குரியவரை (சந்தேகநபரை)  கைதுசெய்

approbation = approval = consent

இசைவு

appropriate action

ஏற்ற நடவடிக்கை

appropriate public funds

பொது நிதியைக் கையாடு

appurtenances

சேருமதி

arbitral tribunal

நடுத்தீர்ப்பாயம்

arbitrary detention

விதிமுறைமீறிய தடுத்துவைப்பு

arbitration

நடுத்தீர்ப்பு

arbitration board

நடுமைச் சபை

arbitrator

நடுத்தீர்ப்பாளர்

Are you guilty or not guilty?

நீர் குற்றவாளியா, அல்லவா?

argue

வாதிடு

argument

வாதம்; வாதீடு

arraign

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி குற்றவினாத்தொடு

arraignment

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி குற்றவினாத்தொடுப்பு

arrest

கைதுசெய்

arrest warrant

கைதாணை; பிடியாணை

arson

தீவைப்பு

articled clerk = articling student = student-at-law

பொருந்திப்பயிலும் சட்ட மாணவர்

articling

பொருந்திப்பயிலல்

as of right

உரிமைப்படி

assailant

தாக்குநர்

assassination

படுகொலை

assault

தாக்கு(தல்)

assault and battery

தாக்குதலும் ஊறுபடுத்தலும்

assault with bodily harm

உடலூறுபடத் தாக்குதல்

assault with grievous bodily harm

உடலூனப்படத் தாக்குதல்

assessment order

கணிப்பீட்டுக் கட்டளை

assignment court

சாட்டுதல் நீதிமன்று

assize court

பருவ நீதிமன்று

assizes

பருவ நீதிமன்றுகள்

asylum

தஞ்சம்

at (the) bar

நீதிமன்றின் முன்னிலையில் உள்ள

at a premium

மிகை விலையில்; மிகுந்த செலவில்

at large, criminals unlawfully

சட்டவிரோதமான முறையில் தடுப்புக்காவலுக்கு மீளாதிருக்கும் குற்றவாளிகள்

at large, the people

மக்கள் அனைவரும்

at large, the robbers

அகப்படாத கொள்ளையர்கள்

at law = in law

சட்டப்படி

attempted murder

எத்தனித்த கொலை; கொலை எத்தனம் (எத்தனிப்பு)

attest a will

இறப்பாவணத்தை உறுதிப்படுத்து (அத்தாட்சிப்படுத்து)

attest to their determination

அவர்களின் திடசித்தத்துக்கு சான்று பகரு

attestation of a will

இறப்பாவணத்தை உறுதிப்படுத்தல்  (அத்தாட்சிப்படுத்தல்)

attorney = lawyer

சட்டத்தரணி = சட்டவாளர்

attorney in fact

தத்துவம்பெற்ற சட்டவாளர்

Attorney General

அரச தலைமைச் சட்டவாளர்

audi alteram partem = hear the other side

மறுதரப்பை செவிமடுத்தல்

authentic document = genuine document

மெய்யாவணம்

authenticated document

மெய்யுறுதி ஆவணம்

authoritative document

அதிகாரபூர்வ ஆவணம்

authority on law

சட்டவியல் வல்லுநர்

authority to enforce

நடைமுறைப்படுத்தும் அதிகாரம்

authorize to enforce the act

சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமளி

autopsy = post mortem examination

யாக்கைத் தேர்வு

autrefois acquit

முன் விடுதலையானார் என்ற வாதம்

autrefois convict

முன் குற்றத்தீர்ப்புக்கு உள்ளானார் என்ற வாதம்

aver

உறுதிகூறு

average prudent person

சராசரி அறிவுள்ள ஆள்; சராசரி அறிவுள்ளவர்

averment

உறுதிக்கூற்று

bad faith = intent to deceive

ஏய்க்கும் எண்ணம்; தகாத எண்ணம்

bail

பிணை

bail bond

பிணை முறி

bailee

ஒப்படையுறுநர்

bailiff

நீதிமன்ற அதிகாரி

bailment

ஒப்படையீடு

bailor

ஒப்படையிடுநர்

balance of evidence

சான்றுச் சமநிலை

balance of probabilities

நிகழ்தகவுச் சமநிலை

bankrupt

நொடித்த; நொடித்தவர்

bankruptcy

நொடிப்பு

Bar

சட்டபீடம்; சட்டவுரைஞர் குழாம்

barrister

சட்டவுரைஞர்

bastard

புறமணப்பிள்ளை; சோரமகவு

be admitted (called) to the bar

சட்டவாளராக அங்கீகரிக்கப்படு

be faithful and bear true allegiance

நம்பிக்கைக்குரியவராகவும் மெய்விசுவாசம் கொண்டவராகவும் விளங்கு

before the fact

நிகழமுன்; நிகழ்வின் முன்

Bench

நீதிமன்று; நீதிபதிகள் குழாம்

bench decision

நீதிமன்ற முடிபு

bench warrant

நீதிமன்றக் கைதாணை; நீதிமன்றப் பிடியாணை

beneficiary

பயன்பெறுநர்

beneficium abstinendi

உரிமை ஏற்காப் பயன்

beneficium cedendarum actionum

வழக்குரிமையளிப்புப் பயன்

beneficium de duobus vel pluribus reis debendi

இருவர் அல்லது பலர்க்கிடையில் கடன் பொறுப்பை பகிரும் பயன்

beneficium divisionis

பிரிப்புப் பயன்

beneficium ordinis seu excussionis

முறைமைத் தொடர்ச்சிப் பயன்

benefit of the doubt

ஐய நன்மை

bequeath your lands to your children

உனது காணிகள் உனது பிள்ளைகளுக்குச் சேருமாறு விருப்பாவணமிடு

bequest

விருப்பாவணப்பேறு

best interests of the child

பிள்ளையின் நன்னலன்கள்

bestiality

விலங்குப் புணர்ச்சி

beyond a reasonable doubt

நியாயமான ஐயத்துக்கிடமின்றி

bias

பக்கச்சார்பு

bicameral parliament

இருமன்ற நாடாளுமன்றம்

bigamy

இருதாரம்

bill of rights

உரிமை முறி

binding over an accused for trial

குற்றஞ்சாட்டப்பட்டவரை விசாரணைக்குப் பிணித்துவிடுதல் (விசாரணைக்குத் தோற்றும்படி பணித்துவிடுதல்)

binding rule

பிணிக்கும் விதி

blackmail

பிடிவைத்து உடன்படச்செய்(கை); பிடிவைத்துப் பணம்பறி(ப்பு)

blackmailer

பிடிவைத்து உடன்படச்செய்பவர்; பிடிவைத்துப் பணம்பறிப்பவர்

blood money

பலிப்பணம்

body attachment, writ of

பிடியாணை

bona fide mistake

கருதாப் பிழை; நன்னோக்கப் பிழை

bona fide tourist

மெய்யான சுற்றுலாவாணர்

bona fides

நன்னோக்கம்; நல்லெண்ணம்; நற்சான்று

bona fides are in order, His

அவருடைய நற்சான்றுகள் ஒழுங்கானவை

bona vacantia

உடைமையாளரற்ற சொத்து

bond

முறி; ஒப்பந்தம்

bondable, Are you? = Are you without a criminal    record?

நீர் குற்றப்பதிவற்றவரா?

bookmaker

பந்தயத்தாச்சி

books of authority

வல்மிகு ஏடுகள்

Border Services Agency

எல்லைச் சேவைகள் முகமையகம்

born out of wedlock

மணமாகாத பெற்றோர்க்குப் பிறந்த

boyfriend

ஆண் கூட்டாளி

breach

மீறு; மீறல்

breach of promise

வாக்குறுதி மீறல்

brief

வழக்கேடு

buggery

குதவழிப்புணர்ச்சி

bully, a

அடாவடியாளர்; தறுகணாளர்; வன்கணாளர்

bullying

அடாத்து; அடாவடி; தறுகண்மை; வன்கண்மை

burden of proof 

onus of proof

எண்பிக்கும் பொறுப்பு;

நிரூபிக்கும் பொறுப்பு

burglary

கன்னமிடல்; வீடு புகுந்து திருடல்

by proxy

பதிலாள் மூலம்

by word of mouth

வாய்ச்சொல் மூலம்

by-law

துணைவிதி

call a witness

சாட்சியை அழை

carding

வழிமறி விசாரிப்பு; வழிமறித்து விசாரித்தல்

case law

முன்தீர்ப்புச் சட்டம்

cause celebre

பரபரப்பூட்டும் வழக்கு

caveat = let the person beware

அறிவுறுத்தும் எச்சரிக்கை

caveat emptor = let the buyer beware = the principle that the buyer alone is responsible if dissatisfied

கொள்வனவு நிறைவு தராவிட்டால், அதற்கு கொள்வனவாளரே பொறுப்பு என்று எச்சரிக்கும் நெறி

cepi corpus

கைக்கொளல் அறிக்கை

certiorari, writ of

பதிவேட்டுவினாப் பேராணை

cessio bonorum

சொத்து ஒப்பளிப்பு

cessio in jure

வழக்குமுறை உரித்தளிப்பு

changing the location of a hearing

விசாரணைக்குரிய இடத்தை மாற்றல்

character evidence

குணவியல்புச் சாட்சியம்

charter of rights

உரிமைப் பட்டயம்

checks and balances

கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும்

chokehold

கழுத்துநெரிப்பு

circumstantial evidence

சூழ்நிலைச் சான்று

circuit court

சுற்றமர்வு நீதிமன்று

citizen

குடியாளர்; குடியுரிமையாளர்; பிரசை

citizen's arrest

குடியாளர்-கைது

citizenship

குடியுரிமை

civic duty

குடிமைக் கடமை

civil court

குடியியல் நீதிமன்று

Civil Law

குடியியல் சட்டம்

civil liberties

குடி உரிமைப்பேறுகள்

civilian witness

குடியாளர் சாட்சி

civilians

குடிமக்கள்; குடியாளர்கள்; குடியினர்

claim for refugee protection

அகதிப் பாதுகாப்புக் கோரிக்கை

claimant without identification

அடையாள ஆவணங்களற்ற கோரிக்கையாளர்

class action = class suit

கூட்டு வழக்கு

class action lawsuit

கூட்டு வழக்கீடு

clause

வாசகம்

client

பணியுறுநர்; சேவைபெறுநர்

codicil

விருப்பாவணப் பிற்சேர்க்கை

cognizable offence

பிடியாணையின்றி கைதுக்குள்ளாக்கவல்ல குற்றம்

cold case

தீராவழக்கு

commissioner of oaths

ஆணையீட்டு வாக்குமூல ஆணையாளர்

Common Law

வழக்காற்றுச் சட்டம்

common-law partner

கூடிவாழும் துணைவர்

commutation of the death sentence to life imprisonment

இறப்புத் தண்டனையை வாழ்நாள் சிறையாகத்தணித்தல்

commute

தண்டனை தணி

commuted sentence

தணிக்கப்பட்ட தண்டனை

compensatory damages

நட்ட இழப்பீடு

concession

சலுகை

conciliation board

இணக்க சபை

concurrent sentences

உடனிகழ் தண்டனைத் தீர்ப்புகள்

condictio indebiti

பிழையாகக் கொடுத்ததை மீளக்கோரல்

condictio sine causa

சட்ட ஏதின்றிக் கொடுத்ததை மீளக்கோரல்

conditional discharge

நிபந்தனையுடன்கூடிய விடுவிப்பு

conditional sentence

நிபந்தனையுடன்கூடிய தண்டனைத்தீர்ப்பு (எ-கா: வீட்டுமறியலுடன் கூடிய தண்டனைத்தீர்ப்பு)

confess to a crime

குற்றத்தை ஒப்புக்கொள்

confess to a priest

குருவிடம் ஒப்புக்கொள்

confession of a crime

குற்றத்தை ஒப்புக்கொள்கை

confidentiality of application

விண்ணப்பத்தின் அந்தரங்கம்

conflict resolution = dispute resolution

பிணக்குத் தீர்வு

conjugal family

தனிக் குடும்பம் (பெற்றோர், பிள்ளைகள்,பாட்டன்/பாட்டி)

conjugal love

மண உறவு அன்பு

conjugal partner

மண உறவுத் துணைவர்

conjugal relationship

மண உறவு

conjugal rights

மண உறவு உரிமைகள்

conjugal visit

(சிறையில்) மண உறவுச் சந்திப்பு

conscientious objector

மனச்சாட்சிக்கமைந்து மறுப்புத்தெரிவிப்பவர்

consecutive sentences

உடனடுத்த (அடுத்தடுத்த) தண்டனைத் தீர்ப்புகள்

consensus ad idem

கருத்தொருமை

consensual sex

இசைவுப் புணர்ச்சி

consensual validation

இசைவு வலிதாக்கம்

consensus

கருத்தொற்றுமை

consent bail

இசைவுப் பிணை; இணக்கப் பிணை

consent bail hearing

இசைவுப் பிணை விசாரணை; பிணை இணக்க விசாரணை

consent of the governed

ஆளப்படுவோரின் இசைவு

consent to bail

பிணைக்கு இணங்கு; பிணை இணக்கம்

consenting adult

(உடலுறவுக்கு) இசையும் வயதினர்; (உடலுறவுக்கு) இணங்கும் வயதினர்

consolidated grounds of protection

பாதுகாப்பு வழங்குவதற்கு ஒருங்குதிரட்டிய ஆதாரங்கள்

constitutional law

யாப்புச் சட்டம்

contempt of court

நீதிமன்ற அவமதிப்பு

contested bail hearing

பிணை எதிர்ப்பு விசாரணை

continued detention

தொடர்ந்து தடுத்துவைப்பு

contra bonos mores

நல்லொழுக்கத்துக்கு முரணான

contravene, breach, infringe

முரண்படு, மீறு, வரம்புமீறு

contributory negligence

துணைபோகும் கவலையீனம்

controversial

சர்ச்சைக்குரிய

controversy

சர்ச்சை

convention against torture

சித்திரவதைக்கு எதிரான பொருத்தனை

convention refugee

பொருத்தனை அகதி

conventions, social

சமூக வழக்காறுகள்

conveyance of title

உரித்துமாற்றம்

corrective justice

திருத்த நீதி

corroborate

ஒப்புறுதிப்படுத்து

corroborating evidence

ஒப்புறுதிப்படுத்தும் சான்று (சாட்சியம்)

council

மன்றம்

councillor

மன்றாளர்

counsel on record

பதிவிலுள்ள சட்டவுரைஞர்

counselling

உளவள மதியுரை

counsellor

உளவள மதியுரைஞர்

Counselor of Embassy

தூதரக மேலதிகாரி

Court of Arbitration for Sport

விளையாட்டு நடுத்தீர்ப்பு மன்று

covenant

இணக்கம்

covenant, deed of

இணக்க உறுதி

coverage

காப்பீடு

credibility issues

நம்பகப் பிரச்சனைகள்

credible evidence

நம்பத்தக்க சான்று

crimes against humanity

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்

criminal harassment = stalking

குற்றத் தொந்தரவு; தொந்தரவுக் குற்றம்

criminally not responsible

குற்றப் பொறுப்பற்ற

cross examination

குறுக்கு விசாரணை

crown prosecution

அரச வழக்குத்தொடர்வு

cruel punishment

கொடூர தண்டனை

cruel treatment

கொடூரமாக நடத்துதல்

culpable homicide

குற்றமுடைய இறப்பு

culpable homicide not amounting to murder

கொலையாகாத குற்றமுடைய இறப்பு

culpability

குற்றமுடைமை

custodial death

தடுப்புக்காவலில் இறத்தல்

custody

கட்டுக்காப்பு; தடுப்புக்காவல்

Customary Law

வழமைச் சட்டம்

damage

சேதம்

damages

இழப்பீடு

danger to public safety

பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து

danger to the security of the country

நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து

date rape

உடன்போக்கு வன்புணர்ச்சி

dating

உடன்போக்கு

de facto ruler

நிகழ்நிலை ஆட்சியாளர்; செயலளவிலான ஆட்சியாளர்

de jure ruler

சட்டநிலை ஆட்சியாளர்; பெயரளவிலான ஆட்சியாளர்

de novo

பழையபடி

death convict

இறப்புத் தண்டனைக் கைதி

death sentence

இறப்புத் தண்டனைத் தீர்ப்பு

decision rendered orally

வாய்மொழி முடிபு

decree absolute

அறுதித் தீர்வை (கட்டளை); முற்றுத் தீர்வை (கட்டளை)

decree nisi

பின்னுறுதித் தீர்வை (கட்டளை)

decriminalize the drug

போதைமருந்து நுகர்வை குற்றமற்றதாக்கு

decriminalization of the drug

போதைமருந்து நுகர்வை குற்றமற்றதாக்கல்

default hearing

கடப்பாட்டுத்தவறு விசாரணை

default judgement

எதிர்வாதமற்ற தீர்ப்பு

defendant

எதிர்வாதி; மறுவாதி

defloration

கன்னிமையழிப்பு

delict

தீது

delinquent teenager

நெறிபிறழும் பதின்ம வயதினர்

delirium tremens

வெறிநடுக்கம்

democratic values

குடியாட்சி விழுமியங்கள்

demonstrative evidence = physical evidence

பருப்பொருட் சான்று; உருப்படிச் சான்று

denunciation and deterrence of crime

குற்றம் கடிதலும் தடுத்தலும்

deny access

வழிமறு

departure order

வெளியேற்றக் கட்டளை; புறப்பாட்டுக் கட்டளை

deponent

ஆணையீட்டுச் சாட்சி; சத்திய சாட்சி

deportation order

நாடுகடத்தல் கட்டளை

deposition

ஆணையீட்டு வாக்குமூலம்; சத்திய வாக்குமூலம்

derivative evidence

வருவித்த சான்று

derogate another's achievements

இன்னொருவரின் சாதனைகளைத் தாழ்த்து

derogate from a responsibility

பொறுப்பை உதறித்தள்ளு

designated representative

சுட்டிய பிரதிநிதி

detention review

தடுத்துவைப்பு மீள்நோக்கு

deterrence and denunciation

குற்றம் தடுத்தலும் கடிதலும்

detrimental to the national interest

தேசிய நலனுக்குக் கேடான

Diaspora

புலம்பெயர்ந்தோர்

direct accountability program

நேரடிப் பொறுப்பேற்பு நிகழ்முறை

direct indictment

(முதனிலை விசாரணையற்ற) நேரடிக் குற்றச்சாட்டு

discharge

விடுவிப்பு

discharge of liability

பொறுப்புகளை நிறைவேற்றல்

disciplinary action

ஒழுக்காற்று நடவடிக்கை

discipline

ஒழுக்காறு; ஒழுக்கம்

disclaimer of liability

பொறுப்புத் துறப்பு

disclose information

தகவல் வெளிவிடு

disclosure of information

தகவல் வெளிவிடல்

discovery

கண்டுபிடிப்பு; வெளிப்படுத்தல்

discovery of documents

ஆவணங்களை வெளிப்படுத்தல்

discretionary bench warrant

நீதிமன்றின் தற்றுணிபுடன் ஒத்திவைக்கப்படும் கைதாணை

dismiss the case

வழக்கை தள்ளுபடிசெய்

dismissal of an appeal

மேன்முறையீட்டை தள்ளுபடிசெய்தல்

dismissal with prejudice

பங்கமிட்டுத் தள்ளுபடிசெய்தல் (இனிமேல் அத்தகைய முகாந்திரம் கொண்டு வழக்காட முடியாது)

dismissal without prejudice

பங்கமின்றித் தள்ளுபடிசெய்தல் (இனிமேல் அத்தகைய முகாந்திரம் கொண்டு வழக்காட முடியும்)

displaced person

இடம்பெயர்ந்த ஆள்

dispute resolution = conflict resolution

பிணக்குத் தீர்வு

dissent

ஒருப்படாமை

dissenter

ஒருப்படாதவர்; இணங்காதவர்

dissenting judge

ஒருப்படாத நீதிபதி

dissenting judgement

ஒருப்படாத தீர்ப்பு

dissidence

கருத்துமுரண்பாடு; பிணக்கம்

dissidents

ஒருப்படாதோர்; இணங்காதோர்

distributive justice

ஒப்புரவு நீதி

diversion program

மாற்று நிகழ்முறை

doctrine of fairness

செந்நெறி

documentation

ஆவணவாக்கம்; ஆவணங்கள்

domestic law

உள்நாட்டுச் சட்டம்

donatio mortis causa

சாவேதுக்கொடை

double entendre

இரட்டுற மொழிதல்

drug abuse

போதைமருந்து துர்ப்பிரயோகம்

drug squad

போதைமருந்து விசாரணை அணி

dual intent

இரட்டை நோக்கம்

due diligence

உரிய ஊக்கம்

due process

உரிய படிமுறை

due process of the law

உரிய சட்டப் படிமுறை

duty counsel

இலவச சட்டவுரைஞர்


No comments:

Post a Comment