IMMIGRATION = குடிவரவு
abandon a claim | கோரிக்கையைக் கைவிடு |
abuse of process | படிமுறையைத் தவறாகப் பயன்படுத்தல் |
accept a claim | கோரிக்கையை ஏற்றுக்கொள் |
acceptable documentation | ஏற்கக்கூடிய ஆவணங்கள் |
admissibility hearing | அனுமதிவாய்ப்பு விசாரணை |
adopted child | தத்தெடுத்த (தத்தெடுக்கப்பெற்ற) பிள்ளை |
adoption of convenience | வசதிக்கான தத்தெடுப்பு |
adoptive parent | தத்தெடுத்த பெற்றார் |
allow a claim | கோரிக்கையை அனுமதி |
allow an appeal | மேன்முறையீட்டை அனுமதி |
alternatives to detention | தடுத்துவைப்புக்கு மாற்றுவழிகள் |
appeal | மேன்முறையிடு; மேன்முறையீடு |
appearance of bias | பாரபட்சம் நிலவும் தோற்றப்பாடு |
arrest warrant | பிடியாணை |
assignment court | சாட்டுதல் மன்று |
authorize to enforce the act | சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமளி |
basis of claim | கோரிக்கை அடிப்படைக் கூற்று |
bench decision | மன்று முடிபு |
best interests of the child | பிள்ளையின் நன்னலன்கள் |
Border Services Agency | எல்லைச் சேவைகள் முகமையகம் |
burden of proof; onus of proof | எண்பிக்கும் பொறுப்பு; நிரூபிக்கும் பொறுப்பு |
call a witness | சாட்சியை அழை |
changing the location of a hearing | விசாரணைக்குரிய இடத்தை மாற்றல் |
citizen | குடியாளர்; குடியுரிமையாளர்; பிரசை |
citizenship | குடியுரிமை |
claim for refugee protection | அகதிப் பாதுகாப்புக் கோரிக்கை |
claimant without identification | அடையாள ஆவணங்களற்ற கோரிக்கையாளர் |
client | சேவையுறுநர்; சேவைபெறுநர் |
common-law partner | கூடிவாழும் துணைவர் |
confidentiality of application | விண்ணப்பத்தின் அந்தரங்கம் |
conscientious objector | உளச்சான்றின்படி மறுப்பவர் |
consolidated grounds of protection | பாதுகாப்பு வழங்குவதற்கு ஒருங்குதிரட்டிய ஆதாரங்கள் |
continued detention | தொடர்ந்து தடுத்துவைப்பு |
contravene, breach, infringe | முரண்படு, மீறு, வரம்புமீறு |
convention against torture | சித்திரவதைக்கு எதிரான பொருத்தனை |
convention refugee | பொருத்தனை அகதி |
counsel of record | பதிவிலுள்ள சட்டமதிஞர் |
credibility issues | நம்பகப் பிரச்சனைகள் |
credible evidence | நம்பத்தக்க சான்று |
crimes against humanity | மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் |
cruel punishment | கொடூரமான தண்டனை |
cruel treatment | கொடூரமாக நடத்துதல் |
cultural fabric | பண்பாட்டுக் கட்டுக்கோப்பு |
danger to public health | பொதுமக்களின் நலவாழ்வுக்கு ஆபத்து |
danger to public safety | பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து |
de novo | பழையபடி |
decision rendered orally | வாய்மொழி முடிபு |
deny access | வழி மறு |
departure order | வெளியேற்றக் கட்டளை |
deportation order | நாடுகடத்தல் கட்டளை |
designated representative | அமர்த்தப்பட்ட பிரதிநிதி |
detention review | தடுத்துவைப்பு பற்றிய மீள்நோக்கு |
detrimental to the national interest | தேசிய நலனுக்குக் கேடான |
discharge of liability | பொறுப்புகளை நிறைவேற்றல் |
disclose personal information | சொந்த விபரங்களை வெளிப்படுத்து |
disclosure of documents | ஆவணங்களை வெளிப்படுத்தல் |
dismissal of an appeal | மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தல் |
displaced person | இடம்பெயர்ந்தவர்; இடம்பெயர்ந்த ஆள் |
dual intent | இரட்டை நோக்கம் |
eligibility to refer claim | கோரிக்கையைப் பாரப்படுத்தும் தகவு |
enforcement of removal orders | அகற்றல் கட்டளைகளை நிறைவேற்றல் |
entering and remaining | புகுந்து தங்கியிருத்தல் |
establish identity | அடையாளத்தை எண்பி (நிரூபி) |
ethnic cleansing | இனக்களைவு |
evidence relating to identity | அடையாளம் தொடர்பான சான்று |
exceptions to public hearing | பொது விசாரணைக்கு விதிவிலக்குகள் |
excessive demand | மட்டுமீறிய கோரிக்கை |
excluded persons | விலக்கப்பட்டோர்; விலக்கப்பட்ட ஆட்கள் |
exclusion clause | விலக்கல் வாசகம் |
exclusion order | விலக்கல் கட்டளை |
expedited hearing | துரித விசாரணை |
expert-witness | சாட்சியமளிக்கும் நிபுணர்; நிபுணர்-சாட்சி |
extradition procedure | வேற்றரசிடம் ஒப்படைக்கும் நடைமுறை |
failure to appear at the proceeding | விசாரணைக்குத் தோற்றத் தவறுதல் |
fair and efficient procedures | செவ்விய, திட்பமான நடைமுறைகள் |
fairness and natural justice | செவ்விதும் இயற்கை நீதியும் |
falsely personate | ஆள்மாறாட்டம் செய் |
family class | குடும்ப வகுப்பு |
family member | குடும்ப உறுப்பினர் (அங்கத்தவர்) |
fear of persecution | கொடுமைக்கு உள்ளாகும் அச்சம் |
Federal Court | மத்திய நீதிமன்று |
final decision | இறுதி முடிபு |
first detention review | முதலாவது தடுத்துவைப்பு மீள்நோக்கு |
foreign national | வெளிநாட்டவர் |
form and language of documents | ஆவணங்களின் உருவும் மொழியும் |
forty-eight (48) hour review | நாற்பத்தெட்டு (48) மணித்தியால மீள்நோக்கு |
further reviews | மேலதிக மீள்நோக்குகள் |
gender related issue | பால்மை தொடர்பான பிரச்சனை |
general provisions | பொது ஏற்பாடுகள் |
generalized risk | பொதுப்படையான ஆபத்து |
generally known fact | பொதுவாக அறியப்பட்ட விவரம் |
genuine | உண்மையான; மெய்யான |
give evidence | சான்று பகர்; சாட்சியம் அளி |
grant permanent resident status | நிரந்தர வசிப்பு நிலை வழங்கு |
grounds of security | பாதுகாப்புக் காரணங்கள் |
head office | தலைமை அலுவலகம் |
headquarters | தலைமையகம் |
health (to protect the) | உடல்நலம் (காக்க) |
health grounds | உடல்நிலைக் காரணங்கள் |
human rights abuses | மனித உரிமைத் துர்ப்பிரயோகங்கள் |
human rights violations | மனித உரிமை மீறல்கள் |
human smuggling | ஆள் கடத்தல் |
human trafficking | ஆள் கடத்து வியாபாரம் |
humanitarian and compassionate grounds | மனிதபிமான, கருணை அடிப்படைகள் |
identity document | ஆளடையாள ஆவணம் |
immigration | குடிவரவு |
Immigration and Refugee Protection Act | குடிவரவு–அகதிப் பாதுகாப்புச் சட்டம் |
immigration consultant | குடிவரவு உசாவலர் |
immigration counsel | குடிவரவுச் சட்ட மதிஞர் |
Immigration Division | குடிவரவுப் பகுதி |
in camera | அந்தரங்கமாக; நீதிபதியின் கூடத்தில் |
in force | நடைமுறையில் உள்ளது |
inadmissibility | அனுமதிக்கவியலாமை |
inadmissible claimant | அனுமதிக்கவியலாத கோரிக்கையாளர் |
inadmissible family member | அனுமதிக்கவியலாத குடும்ப உறுப்பினர் |
incompetent person | தகுதியற்ற ஆள் |
inconsistency | முன்பின் முரண்பாடு |
ineligible claim | தகவற்ற கோரிக்கை |
informally and quickly | விதிமுறைசாராமலும் விரைவாகவும் |
interlocutory judgment | இடைக்காலத் தீர்ப்பு |
internal flight alternative | உள்நாட்டில் மாற்றுப் புகலிடம் |
international legal obligations | அனைத்துநாட்டு சட்டக் கடப்பாடுகள்; சர்வதேய சட்டக் கடப்பாடுகள் |
interpreter | உரைபெயர்ப்பாளர் |
intervene in the appeal | மேன்முறையீட்டில் தலையிடு |
intervention by the minister | அமைச்சர் தலையிடல் |
invalid proceeding | செல்லுபடியற்ற விசாரணை |
joining claims or applications | கோரிக்கைகளை அல்லது விண்ணப்பங்களை இணைத்தல் |
judicial consideration | நீதித்துறையின் பரிசீலனை |
judicial release | நீதித்துறை அளிக்கும் விடுதலை |
judicial review | நீதித்துறை மீள்நோக்கு |
judicial system | நீதி முறைமை |
jurisprudential guides | சட்டவியல் வழிகாட்டிகள் |
landing paper = record of landing | குடிபுகல் பத்திரம் = குடிபுகல் பதிவு |
language of proceedings | விசாரணை மொழி |
lawful owner | சட்டபூர்வ உடைமையாளர் |
lawfulness | சட்டபூர்வம் |
leading question | இட்டுச்செல்லும் வினா |
leave to appeal | மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி |
legal status | சட்டத் தகுதிநிலை |
legal system | சட்ட முறைமை |
list of exhibits | தடய நிரல் |
loss of status and removal | தகுதிநிலை இழப்பும் அகற்றலும் |
low income cutoff (LICO) | தாழ்ந்த வருமான வரம்பு |
make an appeal | மேன்முறையிடு |
make representations | எடுத்துரை |
mandatory detention | சட்ட நியதிப்படி தடுத்துவைப்பு |
marriage of convenience | வசதிக்கான திருமணம் |
medical examination | வைத்திய பரிசோதனை |
medical inadmissibility | வைத்திய காரணங்களினால் அனுமதிக்கவியலாமை |
member of the economic class | பொருளாதார வகுப்பினர் |
member of the family class | குடும்ப வகுப்பினர் |
military service | படைச் சேவை |
minister's counsel | அமைச்சரின் சட்டமதிஞர் |
misrepresentation | பிறழ்கூற்று |
mitigating circumstance | தணிக்கும் சூழ்நிலை |
natural justice | இயற்கை நீதி |
new evidence | புதிய சான்று |
new immigrant | புதிய குடிவரவாளர் |
nexus | தொடர்பு |
non-compliance with the act | சட்டத்துக்கு அமைந்தொழுகாமை |
non-disclosure of information | தகவல் வெளிப்படுத்தாமை |
notice of appeal | மேன்முறையீடு பற்றிய அறிவிப்பு |
notice of decision | முடிபு பற்றிய அறிவிப்பு |
notice of intervention | தலையீடு பற்றிய அறிவிப்பு |
notice to appear | தோற்றும்படி (வெளிப்படுமாறு) அறிவிப்பு |
oath | ஆணைக்கூற்று; சத்தியம் |
oath or solemn affirmation | ஆணைக்கூற்று அல்லது பற்றுறுதிமொழி; சத்தியம் அல்லது பற்றுறுதிமொழி |
oral decision | வாய்மொழி முடிபு |
organized criminality | கூட்டுச் சேர்ந்து குற்றம் புரிகை |
outstanding charge | தீர்க்கப்படாத குற்றச்சாட்டு |
people smuggling | ஆட்கடத்தல் |
peremptory adjournment | மீறமுடியாத ஒத்திவைப்பு |
permanent resident | நிரந்தர வாசி |
persecuted person | கொடுமைப்படுத்தப்பட்டவர்; கொடுமைப்படுத்தப்பட்ட ஆள் |
person concerned | சம்பந்தப்பட்டவர்; சம்பந்தப்பட்ட ஆள் |
person detained | தடுத்து வைக்கப்பட்டவர்; தடுத்து வைக்கப்பட்ட ஆள் |
person in need of protection | பாதுகாப்புத் தேவையானவர்; பாதுகாப்புத் தேவையான ஆள் |
personal information form | ஆள் விவரப் படிவம் |
political opinion | அரசியற் கருத்து |
port of entry | நுழைவுத் துறை |
pre-removal risk assessment | அகற்றலுக்கு முந்திய ஆபத்துக் கணிப்பீடு |
probative value | எண்பித்தற் பெறுமதி; நிரூபித்தற் பெறுமதி |
prohibition against disclosure of information | தகவல் வெளிப்படுத்துவதற்கு எதிரான தடை |
proof that document was provided | ஆவணம் வழங்கிய சான்று |
prosecution of designated offences | குறிக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய வழக்குத்தொடுப்பு |
prosecution of offences | குற்றங்களுக்கான வழக்குத்தொடுப்பு |
protected person | பாதுகாக்கப்பட்டவர்; பாதுகாக்கப்பட்ட ஆள் |
protection determination | பாதுகாப்புத் தீர்மானம் |
public hearing | பகிரங்க விசாரணை |
public proceeding | பகிரங்க நடவடிக்கை |
quash a conviction | குற்றத்தீர்ப்பை நீக்கு |
quasi-judicial procedure | மருவுநீதி நடைமுறை |
ready to proceed | விசாரணைக்குத் தயாரான |
reasons for decision | முடிபுக்கான காரணங்கள் |
recognize as a convention refugee | பொருத்தனை அகதியாக ஏற்றுக்கொள் |
reconsideration | மீள்கணிப்பு |
reconvene the parties | தரப்புகளை மீளக் கூட்டு |
record of landing = landing paper | குடிபுகல் பதிவு = குடிபுகல் பத்திரம் |
redetermination | மீள்தீர்மானம் |
re-enter | மீள நுழை |
re-examination | மீள்-விசாரணை |
refer the claim | கோரிக்கையைப் பாரப்படுத்து |
referred claim | பாரப்படுத்திய கோரிக்கை |
refugee | அகதி |
refugee convention | அகதி ஒப்பந்தம் |
refugee protection | அகதிப் பாதுகாப்பு |
refugee protection division | அகதிப் பாதுகாப்புப் பகுதி |
refugee protection officer | அகதிப் பாதுகாப்பு அதிகாரி |
Registry of the Federal Court – Trial Division | மத்திய நீதிமன்றப் பதிவகம்-விசாரணைப் பகுதி |
Registry Office | பதிவு அலுவலகம் |
rejection of a claim | கோரிக்கையை நிராகரித்தல் |
remedial and disciplinary measures | பரிகார-ஒழுக்காற்று நடவடிக்கைகள் |
removal order | அகற்றல் கட்டளை |
remove counsel | சட்டமதிஞரை அகற்று |
reopen a claim | கோரிக்கையை மீண்டும் முன்வை |
report on inadmissibility | அனுமதிக்கவியலாமை பற்றிய அறிக்கை |
reserved decision | ஒத்திவைத்த தீர்மானம் |
resettlement | மீள்குடியமர்வு |
residency obligation | வசிப்புக் கடப்பாடு |
respondent | எதிர்வாதி |
resume a procedure | நடைமுறையை மீண்டும் தொடரு |
reunification of family members | குடும்ப உறுப்பினர்களின் மீளொருங்கிணைவு |
review of decision for detention | தடுத்துவைப்பு தீர்மான மீள்நோக்கு |
right of appeal | மேன்முறையிடும் உரிமை |
Right of Minister | அமைச்சரின் உரிமை |
rules of evidence | சாட்சிய விதிகள் |
safe haven | பத்திரமான புகலிடம் |
safe third country | பத்திரமான மூன்றாவது நாடு |
sanction of the court | நீதிமன்றின் இசைவாணை |
security grounds | பாதுகாப்புக் காரணங்கள் |
security risks | பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் |
seized panel | பற்றிக்கொண்ட குழாம் |
separating claims | கோரிக்கைகளைப் புறம்பாக்கல் |
serious criminality | பாரதூரமான குற்றச்செயற்பாடு |
set aside a decision | முடிபை புறந்தள்ளு |
seven-day review | ஏழு-நாள் மீள்நோக்கு |
show cause hearing | காரணம் காட்டும் விசாரணை; பிணை விசாரணை |
sine die = without fixing a date | காலவரையறையின்றி; திகதி குறிப்பிடாது |
social group persecution | சமூகக் குழுமக் கொடுமை |
sponsor of the applicant | விண்ணப்பதாரியைப் பொறுப்பேற்பவர் |
sponsored applicant | பொறுப்பேற்கப்பட்ட விண்ணப்பதாரி |
spouse | வாழ்க்கைத் துணை |
state protection | அரச பாதுகாப்பு |
statement that documents were provided | ஆவணங்கள் வழங்கிய கூற்று |
statutory declaration | நியதிச்சட்டப் பிரகடனம் |
stay a removal order | அகற்றல் கட்டளையை தள்ளிவை |
student authorization | மாணவர்க்கான அனுமதி |
substantive evidence | உருப்படியான சான்று |
summary conviction | குறுவிசாரணக் குற்றத்தீர்ப்பு |
summon a witness | ஒரு சாட்சிக்கு அழைப்பாணையிடு |
supporting evidence | துணைச் சான்று |
suspension or termination | இடைநிறுத்தம்(ல்) அல்லது முடிவுறுத்தம்(ல்) |
temporary resident | தற்காலிக வாசி |
temporary resident permit | தற்காலிக வசிப்பு அனுமதிப் பத்திரம் |
temporary worker | தற்காலிக தொழிலாளர் |
termination and cancellation | முடிவுறுத்தலும் நீக்கலும் |
terms and conditions | நியதிகளும் நிபந்தனைகளும் |
testimony | சாட்சியம் |
trafficking in persons = human trafficking | ஆட்கடத்து வியாபாரம் |
transnational crime | நாடுகடந்து புரியும் குற்றம் |
travel document | பயண ஆவணம் |
undertaking relating to sponsorship | பொறுப்பேற்புத் தொடர்பான உறுதிமொழி |
undue hardship | அடா இடும்பை |
United Nations High Commissioner for Refugees | ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையாளர் |
unlikely to appear | தோற்றும் வாய்ப்பு இல்லை; வெளிப்படும் வாய்ப்பு இல்லை |
vacate determination | தீர்மானத்தை நீக்கு |
vacate refugee protection | அகதிப் பாதுகாப்பை நீக்கு |
violate human rights | மனித உரிமைகளை மீறு |
visa | உள்ளிசைவு |
voluntary departure | உளமிசைந்து புறப்படல்; உளமிசைந்த புறப்பாடு |
War Crimes Act | போர்க் குற்றச் சட்டம் |
warrant to arrest | பிடியாணை |
well-founded fear of persecution | தகுந்த காரணங்களுடன் கொடுமைக்கு உள்ளாகும் அச்சம் |
withdraw a claim | கோரிக்கையை மீளப்பெறு |
written request | எழுத்துமூல வேண்டுகோள் |
written submissions | எழுத்துமூல சமர்ப்பணம் |
No comments:
Post a Comment