Search This Blog

PSYCHOLOGY = உளவியல்


abnormality

பிறழ்ச்சி

agitation

பதகளிப்பு

aggression

வன்மம்

agoraphobia

வெளிவெருட்சி

algorithm

நிரலீடு

altruism

பிறர்நலனோம்பல்

analysis

பகுப்பாய்வு

analytic psychology

பகுப்புளவியல்; உளவியல் பகுப்பாய்வு

animal cognition

விலங்கின அறிதிறன்

antecedent

முன்னிலைவரம்

antecedents

முன்வரலாறு; முற்சந்ததி

anticipatory coping

எதிர்பார்த்து வினையாற்றல்

anxiety and tension      

பதைப்பும் பதற்றமும்

anxiety disorder

பதைப்புக் கோளாறு

apparent motion

தோற்ற நகர்வு; நகரும் தோற்றம்

archetype

முன்மாதிரி

attachment

பற்று

attention

கவனம்

attributes

இயற்பண்புகள்

attribution theory

கற்பிக்கைக் கோட்பாடு

audience design

அவையோர் வடிவமைப்பு

automatic process

தன்னிகழ் படிமுறை

heuristics

பட்டறிவியல்

aversion therapy

வெறுப்பூட்டல் சிகிச்சை

behavior analysis

நடத்தை பகுப்பாய்வு

behavior modification

நடத்தை சீராக்கம்

behavior therapy

நடத்தைச் சிகிச்சை

behavioral confirmation

நடத்தை உறுதிப்பாடு

behavioral data

நடத்தை தரவுகள்

behavioral measures

நடத்தை அளவீடுகள்

behavioral rehearsal

நடத்தை ஒத்திகை

behaviorist perspective

நடத்தையியற் கண்ணோட்டம்

belief-bias effect

நம்பிக்கை சார்ந்த விளைவு

biomedical therapy

உயிர்மருத்துவ சிகிச்சை

bulimia nervosa

மிகை உண்ணல்-கக்கல் கோளாறு

centration

ஒற்றை அவதானம்

child-directed speech

குழந்தைப் பாணிப்  பேச்சு

chronic stress

நீடித்த உளைச்சல்

chronological age

கால வயது

circadian rhythm

அன்றாட உடலியக்க சுழற்சி

clinical psychology

சிகிச்சைநிலை உளவியல்

clinical social worker

சிகிச்சைநிலை சமூகப் பணியாளர் 

cognition

அறிதிறம்

cognitive appraisal

அறிதிற மதிப்பீடு

cognitive appraisal theory of emotion

உணர்வெழுச்சி அறிதிற மதிப்பீட்டுக் கோட்பாடு

cognitive behavior modification

அறிதிற நடத்தை சீராக்கம்

cognitive development

அறிதிற விருத்தி

cognitive dissonance

அறிதிற முரண்பாடு

cognitive impairment

அறிதிற தடங்கல்

cognitive map

அறிதிறப் படம்

cognitive perspective

அறிதிறக் கண்ணோட்டம்

cognitive process

அறிதிறப் படிமுறை

cognitive psychology

அறிதிற உளவியல்

cognitive science

அறிதிறவியல்

cognitive skill

அறிதிறன்

cognitive therapy

அறிதிறன் சிகிச்சை

cognitivism

அறிதிற நெறி

collective unconscious

கூட்டு ஆழ்மனம்

comorbidity

கூட்டுநோய்மை

complex

சிக்கல்  

compliance

அமைந்தொழுகல்

conditioning

நெறிநிலைப்படுத்தல்

consciousness

உணர்வு

consensual validation

உடன்பாட்டு உறுதிப்பாடு

consistency paradox

நிலைபேறுசார் முரண்புதிர்; ஆளுமை முரண்புதிர்

contact comfort

உடல்தொடர்பு வசதி

contact hypothesis

தொடர்பாடல் கருதுகோள்

context of discovery

கண்டறியும் சூழ்நிலை

context of justification

நியாயப்படுத்தும் சூழ்நிலை

contextual distinctiveness

சூழ்நிலை சார்ந்த தனித்துவம்

contingency management

இடைமாற்றச் சிகிச்சை

control procedure

கட்டுப்பாட்டு நடைமுறை

controlled process

கட்டுப்படுத்திய படிமுறை

coping

எதிர்கொள்ளல்

correlation coefficient

இடைத்தொடர்புக் குணகம்

correlational method

இடைத்தொடர்பு முறை

counselling psychologist

மதியுரை உளவியலாளர்

counsellor

உளவள மதியுரைஞர்

counter-conditioning

எதிர்நெறிநிலைப்படுத்தல்

covariation principle

கூட்டு மாறுபாட்டு நெறி

creativity

படைப்பாற்றல்

criterion validity

பிரமாண வலிதுடைமை

cross-sectional design

குறுக்குவெட்டு வடிவமைப்பு

crystallized intelligence

துலக்க நுண்மதி 

cultural perspective

பண்பாட்டுக் கண்ணோட்டம்

daytime sleepiness

பகல் உறக்கம்

decision aversion

முடிபு தவிர்ப்பு

decision making

முடிபெடுத்தல்

declarative memory = memory for information such as facts and events

விவர நினைவாற்றல்

deductive reasoning

உய்த்தறி நியாயம்

delusion

மலைவு

demeanour

தோரணை

developmental age

விருத்தி வயது

developmental psychology

விருத்தி உளவியல்

diathesis-stress hypothesis

உடற்கூற்று உளைச்சல் கருதுகோள்

difference threshold

வேறுபாட்டு நுழைவாய்

diffusion of responsibility

பொறுப்பு பரவல்

divergent thinking

பரக்கச் சிந்தித்தல்

doublethink

இரட்டைச் சிந்தனை

dream analysis

கனவுப் பகுப்பாய்வு

dream work

கனவுத் தொழிற்பாடு

dream world

கனவுலகு

drive

உந்துதல்

eccentricity = idiosyncrasy

தற்போக்கு; தனிப்போக்கு 

echoic memory

ஒலி நினைவாற்றல்

ego

சுயம்; வீம்பு

egocentrism

தன்முனைப்பு

elaboration likelihood model

விரித்துரை வாய்ப்பு மாதிரி

elaborative rehearsal

விரித்துரை ஒத்திகை

emotion

உணர்வெழுச்சி

emotional intelligence

உணர்வெழுச்சி நுண்மதி

environmental variable

சூழல் மாறி

episodic memories

கட்டம் கட்டமான நினைவுகள்

equity theory

ஒப்புரவுக் கோட்பாடு

evolutionary perspective

கூர்ப்புக் கண்ணோட்டம்

excitement

பரபரப்பு; பூரிப்பு

expectancy effects

எதிர்பார்ப்பு விளைவுகள்

expectancy theory

எதிர்பார்ப்புக் கோட்பாடு

experience-sampling method

பட்டறிவு மாதிரிக்கூறாக்க முறை

experimental method

பரீட்சார்த்த முறை

explicit uses of memory

வெளிப்படை நினைவாற்றல் பயன்பாடு 

face validity

தோற்றத்தளவிலான வலிதுடைமை

fear

அச்சம்

fight-or-flight response

எதிர்க்கும் அல்லது தப்பும் பதில்வினை 

five-factor model

ஐங்காரணி மாதிரி

fixation

ஒன்றிப்பு

fixed-interval schedule

நிர்ணய இடைவேளை அட்டவணை

fixed-ratio schedule

நிர்ணய விகித அட்டவனை

fluid intelligence

நெகிழ் நுண்மதி

formal assessment

முறைசார் கணிப்பீடு

foundational theories

மூலக் கோட்பாடுகள்

free association

உளந்திறந்துரைப்பு

frequency

மீடிறன்

frustration-aggression hypothesis

உளமுறிவு-வன்மக் கருதுகோள்

fundamental attribution error

கற்பிதக்கூற்று அடிப்படை வழு

gate-control theory

வாயில் கட்டுப்பாட்டுக் கோட்பாடு

gender role

பால் வகிபாகம் 

generalized anxiety disorder

பொதுப்படையான பதைப்புக் கோளாறு

gestalt psychology

பொதுமை உளவியல்

gestalt therapy

பொதுமைச் சிகிச்சை

goal-directed selection

இலக்கு நோக்கிய தெரிவு

group dynamics

குழும இயக்கவியல்

group polarization

குழும முனைப்பு

groupthink

குழுமச் சிந்தனை

guided search

வழிகாட்டிய தேடல்

hallucination

பிரமை

health promotion

சுகாதார மேம்பாடு

health psychology

சுகாதார உளவியல்

heredity

பரம்பரை

heritability estimate

பரம்பரைப்பேறு மதிப்பீடு

heuristics

பட்டறிவியல்

hierarchy of needs

தேவைப் படிவரிசை 

homeostasis

அகவுடற்சமநிலை

human behavior genetics

மனித நடத்தைப் பிறப்பியல் 

human-potential movement

மனித இயல்திறச் சிகிச்சை இயக்கம்

humanistic perspective

மானுடத்துவ கண்ணோட்டம்

hydrophobia = rabies

நாய்க்கடிசன்னி 

hypnosis

அறிதுயில்

hypnotism

அறிதுயிலியல்

hypnotizability

அறிதுயிலூட்டளவு

hypnotize

அறிதுயிலூட்டு

hysteria

மிகையுணர்ச்சிவசம்

hysterical crying

மிகையுணர்ச்சிவச அழுகை

hysterics

மிகையுணர்ச்சிவசப்படுவோர்; மிகையுணர்ச்சிவச சிரிப்பு; மிகையுணர்ச்சிவச வலிப்பு

iconic memory

விழிப்புலன் குறுநினைவாற்றல்

id

ஆழ்மனவுந்தல்

identification and recognition

அடையாளம் காண்கையும் புரிந்துகொள்கையும்

idiosyncrasy = eccentricity

தற்போக்கு; தனிப்போக்கு

illusion

மாயை

implicit uses of memory

உட்கிடை நினைவாற்றல் பயன்பாடுகள்

implosion therapy

உள்தகர்ப்புச் சிகிச்சை

imprinting

உளப்பதிவுக் கற்கை

impulse

உள்ளுந்தல்

impulsive aggression

உள்ளுந்து வன்மை

incentive

ஊக்குவிப்பு

inductive reasoning

தொகுத்தறி நியாயம்  

inference

அனுமானம்

inferential statistics

அனுமானப் புள்ளிவிபரம்

inferiority complex

தாழ்வுளச் சிக்கல்

informational influence

தகவல்வழித் தாக்கம்

in-group bias

தன் குழுமச் சார்பு

inhibition

விலக்கு

insanity

பித்துநிலை; சித்தசுவாதீனமின்மை

insight therapy

அகக்காட்சிச் சிகிச்சை

instinct

இயல்பூக்கம்

instinctual drift

இயல்பூக்க நாட்டம்

intelligence quotient

நுண்மதி ஈவு

intelligence

நுண்மதி

intimacy

நெருங்கிய உறவு

job burnout

வேலைச் சலிப்பு

kinesthetic sense

மெய்ப் புலன்

language-making capacity

மொழியாக்கத் திறன் 

language production

மொழியாக்கம்

latent content

மறைந்துறை பொருள்

law of effect

விளைவு விதி

law of proximity

அண்மை விதி

law of similarity

ஒப்புடைமை விதி

learned helplessness

கற்றதனால் ஆற்றாமை

learning

கற்கை

learning-performance distinction

கற்கை-ஆற்றுகை வேறுபாடு

libido

பாலியலுந்தல்

longitudinal study of participants

பங்குபற்றுவோரை தொடர்ந்து ஆய்விடல்

long-term memory

நெடுங்கால நினைவாற்றல்

lucid dreaming theory

உணர் கனவுக் கோட்பாடு

major depressive disorder

பேருளச்சோர்வுக் கோளாறு

manic episode

பித்துக் கட்டம்

manifest content

வெளிப்படும் பொருள்

mass hysteria

மிகையுணர்ச்சிப்பெருக்கு

maturation

முதிர்வு

measure of central tendency

மத்திம தன்மை அளவீடு

measure of variability

வேறுபாட்டு அளவீடு

memory

நினைவாற்றல்

menarche

முதல் மாதவிலக்கு

mental age

உள வயது

mental retardation

உளப் பின்னடைவு

mental set

உள நிலைப்பாடு 

mood disorder

உளநிலைக் கோளாறு

morbid

நோயுற்ற

morbidity

நோய்மை

motivation

ஊக்கம்

narcolepsy

பகல் தூக்க வெறி

natural selection

இயற்கைத் தேர்வு

nature-nurture controversy

இயற்கை-பேணிவளர்ப்புச் சர்ச்சை

need for achievement

சாதனைத் தேவை

negative punishment

எதிர்மறைத் தண்டனை

negative reinforcement

எதிர்மறை வலியுறுத்தல்

neuropathic pain

நரம்புநோய் வேதனை

neuroscience

நரம்புத்தொகுதியியல்

neurotic disorder

மூளை-நரம்புக் கோளாறு

norm crystallization

நியமத் துலக்கம்

normative influence

நியமத் தாக்கம்

normative investigation

நியம ஆய்வு

norm

நியமம்

nostalgia

மீட்சிவேட்கை; தாயகவேட்கை; தாபம்

observational learning

அவதானிப்புக் கற்கை

observer bias

அவதானியின் பக்கச்சார்பு

obsessive-compulsive disorder

ஒன்றல்-உந்தல் கோளாறு

operant

செய்கை

operant conditioning

செய்கை நெறிநிலைப்படுத்தல்

operant extinction

செய்கை ஒழிவு

operational definition

தொழிற்பாட்டு வரையறை

organizational psychologist

அமைப்பு உளவியலாளர்

out-group

புறக் குழுமம்  

overregularization

அதியொழுங்குவிதியாக்கம்

panic disorder

பீதிக் கோளாறு

paradox

முரண்புதிர்

parallel form

சமாந்தர உரு

parallel process

சமாந்தரப் படிமுறை 

paranoia

படு ஐயுறவு; ஐயுறவுக் கோளாறு  

parental involvement

பெற்றோரிய ஈடுபாடு

parenting practices

பெற்றோரிய செயல்முறைகள்

parenting style

பெற்றோரியப் பாணி

partial reinforcement effect

அரைகுறை வலியுறுத்தல் விளைவு

participant modeling

பங்குபற்றுநர் முன்மாதிரியாதல்

pastoral counsellor

மதியுரைக் குரவர்

peace psychology

அமைதி உளவியல்

perceptual constancy

புலப்பாட்டு நிலைபேறு

perceptual organization

புலப்பாட்டு ஒழுங்கு

peripheral nervous system

சுற்றயல் நரம்புத் தொகுதி

personality disorder

ஆளுமைக் கோளாறு

personality type

ஆளுமை வகை

persuasion

இணங்கவைத்தல்

pervasive development disorder 

தாமத விருத்திக் கோளாறு

perversion

பிறழ்வு; பிறழ்ச்சி; கோணல்; கோட்டம்; வக்கிரம்    

pervert

பிறழி; கோணி; கோடி; வக்கிரர்;

பிறழ்த்து; கோணலாக்கு; வக்கிரப்படுத்து

phobia

வெருட்சி

physical development

உடல் விருத்தி

place theory

இடக் கோட்பாடு

polarity

நேரெதிர்முனைப்பு

polarization

நேரெதிர்முனைப்பாடு

political repression

அரசியல் அடக்குமுறை

positive punishment

இணக்கத் தண்டனை

positive reinforcement

இணங்க வலியுறுத்தல்  

possible self

கைகூடவல்ல சுயம்

post-traumatic stress disorder

ஊறுபாட்டை அடுத்த உளைச்சல் கோளாறு

preattentive processing

அவதானிக்க முன் படிமுறையீடு

preconscious memory

உணர்வுக்கு முந்திய நினைவு

primacy effect

முதனிலை விளைவு

primary reinforcers

முதனிலை வலியுறுத்திகள்  

problem solving

பிரச்சனை தீர்த்தல்

problem space

பிரச்சனை வெளி

procedural memory

நடைமுறை நினைவாற்றல்

projective test

வெளிப்படுத்துவிக்கும் பரிசோதனை

prosocial behavior

சமூகசார்பு நடத்தை

prototype

மூலமுன்மாதிரி

psychiatrist

உளமருத்துவர்

psychic healing

ஆவிமூலப் பரிகாரம்

psychoactive drugs

உளச்செயற்பாட்டு மருந்துகள்

psychoanalysis

உளப்பகுப்பாய்வு

psychoanalyst

உளப்பகுபாய்வாளர்

psychobiography

சுய உள வரலாறு

psychodynamic personality theory

உளவியக்க ஆளுமைக் கோட்பாடு

psychodynamic perspective

உளவியக்க கண்ணோட்டம்

psychological assessment

உளவியல் கணிப்பீடு

psychological diagnosis

உளநோய் நிர்ணயம்

psychologist

உளவியலாளர்

psychology

உளவியல்

psychometrics

உள அளவீடு

psychoneuroimmunology

நரம்புநோய்த்தடுப்புளவியல்

psychopathology

உளநோயியல்

psychopharmacology

உளமருந்துச்செயலியல்  

psychophysics

உளவுடலியல்

psychosis

பிராந்தி

psychosocial stages

உள-சமூக விருத்திக் கட்டங்கள் 

psychosomatic disorders

உளத்தாக்க உடற் கோளாறுகள் 

psychosurgery

மூளை இழைய அறுவை

psychotherapy

உளச்சிகிச்சை

psychotic disorder

உளக்கோட்டக் கோளாறு

rabies = hydrophobia

நாய்க்கடிசன்னி

rapid eye movements

துரித கண் அசைவுகள்

rational-emotive therapy

நியாய-உணர்வெழுச்சி சிகிச்சை

reasoning

நியாயம் கூறல்

recall

நினைவுமீட்டல்

recency effect

இறுதிவிபர விளைவு

reciprocal altruism

இருவயினொத்து நலனோம்பல் 

reciprocity norm

இருவயினொப்பு நியமம்

recognition

ஏற்பு; அங்கீகாரம்; அடையாளம் காணல்

reconstructive memory

மீளுருவாக்க நினைவாற்றல்

reflex

தெறிவினை

refractory period

நெகிழாக் காலப்பகுதி

reinforcer

மீள்வலியுறுத்தி

relaxation response

தணிவுப் பதில்வினை

residual stress pattern

எஞ்சிய உளைச்சல் பாங்கு 

response bias

பதில்வினை பக்கச்சார்பு

retrieval

மீட்பு

reversal theory

நேரெதிர்மாறுக் கோட்பாடு

sanity

சித்தநலம்

schema

திட்டமூலம்

schizophrenia

சித்தப்பிறழ்வு

scientific method

அறிவியல் முறை

selective social interaction theory

தேர்ந்த சமூக  ஊடாட்டக் கோட்பாடு

self-actualization

தன்வலுவெய்தல்

self-awareness

தன் விழிப்புணர்வு

self-efficacy

தன்னாற்றலுணர்வு

self-esteem

தன்மானம்

self-handicapping

தன் முடக்கம்

self-perception theory

தன் புலனறிவுக் கோட்பாடு

self-serving bias

தன் பலன்கருதிய பக்கச்சார்பு

semantic memory

சொற்பொருள் நினைவாற்றல்

sensation

புலனுணர்வு

sensory memory

புலனுணர்வு நினைவாற்றல்

serial position effect

தொடர் நிலை விளைவு

serial processes

தொடர் படிமுறைகள்

sexual repression

பாலுணர்ச்சி அடக்கல்

short-term memory

குறுங்கால நினைவாற்றல்

shyness

நாணம்

social categorization

சமுக வகுதியாக்கம்

social development

சமூக விருத்தி

social intelligence

சமூக நுண்மதி

social-learning theory

சமூக கற்கைக் கோட்பாடு

social-learning therapy

சமூக கற்கைச் சிகிச்சை

social norms

சமூக நியமங்கள்

social phobia

சமூகம் குறித்த வெருட்சி

social psychology

சமூக உளவியல்

social support

சமூக உதவி

socialization

சமூகமயமாக்கம்

sociobiology

சமூக உயிரியல்

sound mind

உளத்திட்பம்  

soundness

திட்பம்

specific phobia

தனிப்பட்ட வெருட்சி

spontaneous recovery

தன்னிகழ் மீட்சி

spontaneous-remission effect

தன்னிகழ் தணிவு விளைவு  

standard deviation

நியமப் பிறழ்வு

standardization

நியமவாக்கம்

stereotype threat

படிவார்ப்புக்கு உள்ளாகும் அச்சம் 

stigma

வடு; குறி; தழும்பு; வசை; களங்கம்

stigmata

வடுக்கள்; தழும்புகள்

stigmatize

வடுப்படுத்து; குறிசுடு; களங்கப்படுத்து ; வசையுண்டாக்கு

stimulus

தூண்டி

stimuli

தூண்டிகள்

stress

உளைச்சல்

stressful

உளைச்சல்மிகுந்த

stressor

உளைச்சலூட்டி

superego

அதியகம்; அதிசுயம்

superiority complex

உயர்வுளச் சிக்கல்  

taste-aversion learning

சுவை-தவிர்ப்பு கற்கை

tension and anxiety

பதற்றமும் பதைப்பும்

thematic appreciation test

கதைக்கரு புரிதிறன் பரிசோதனை

trait

குணாம்சம்

transduction

வலுவுருமாற்றம்

transference

உணர்வெழுச்சிப் பெயர்ச்சி

trauma

ஊறுபாடு

trichromatic theory

முந்நிறக் கோட்பாடு

unconscious

ஆழ்மனம்

unconscious inference

ஆழ்மன அனுமானம்

validity

வலிதுடைமை; செல்மதி

volition

விழைவு

voyeurism

அம்மண வேட்கை

wisdom

ஞானம்

working memory

வினைசெயல் நினைவாற்றல்

No comments:

Post a Comment