Search This Blog

ENGLISH-TAMIL PHRASES (T-Z)

taboo

இடக்கர்; இடக்கு

taboo word

இடக்கர்ச் சொல்; இடக்குச் சொல்; தகாத சொல்

tact and consideration

சாமர்த்தியமும் நிதானமும்

tactful move

சாமர்த்திய நகர்வு

tactical nuclear weapons

போர்க்கள அணுவாயுதங்கள்

tactical obstacles

தந்திரோபாய தடங்கல்கள்

tactical retreat

தந்திரோபாயப் பின்னகர்வு

tactician, a

தந்திரோபாயி

tactile communication

தொடுகைத் தொடர்பாடல்

tainted evidence

கறைபட்ட சான்று

take exception to = object

ஆட்சேபி

talent, artistic

கலைத்திறம்

talented artists

திறம்படைத்த கலைஞர்கள்

tamper with evidence

சான்றினைத் திரிவுபடுத்து

tandem with democracy, human rights in

மனித உரிமைகளும் குடியாட்சியும் அருகருகே

tandem, two seats in

ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு இருக்கைகள்

tangent, to go off at (on) a

மற்றொன்று விரி

tangible evidence

உருப்படியான சான்று

tantrum won't succeed, This

இந்தக் கடுகடுப்பு வெற்றி  அளிக்காது

target audience

இலக்கு நேயர்கள்

task force

செயலணி; படையணி

taste-aversion learning

சுவை தவிர்ப்பு கற்கை

taunt me, Don't

என்னைச் சீண்ட வேண்டாம்

tax bracket

வரி அடைப்பு

tax break

வரிச் சலுகை

tax burden

வரிச்சுமை; வரிப்பளு

tax credit

வரிக் கழிவு

tax free savings

வரியற்ற சேமிப்பு

tax haven

வரிப்புகலிடம்

tax holiday

வரி விலக்கு

tax regime

வரி முறைமை

tax relief

வரிக் குறைப்பு

tax return

வரிபடு விபரம்

tax write-off

வரி நீக்கம்

taxable income

வரிபடு வருமானம்

T-bone accident

குறுக்குமறுக்கு விபத்து

Tea Party Movement

அமெரிக்க குடியரசுக் கட்சி ஆதரவு இயக்கம்

teaching career

கற்பித்தல் பணி

teaching profession

கற்பித்தல் துறை

team of military officers

படையதிகாரிகள் அணி

technical director

தொழினுட்ப நெறியாளர்

technical education

தொழினுட்பக் கல்வி

technicality, on a legal

ஒரு சட்ட நுணுக்கத்தால்

technically correct answer

நுணுக்கப்படி சரியான விடை

technically possible

தொழினுட்பவாரியாக கைகூடவல்ல

technically speaking...

நுணுக்கமாகக் கூறுவதாயின்…

technical terms

கலைச்சொற்கள்

technocracy, impact of

தொழினுட்பவாண்மையின் தாக்கம்

technocrat, a

தொழினுட்பவாளர்

technocratic approach

தொழினுட்பவாண்மை அணுகு முறை

teenage pregnancy

பதின்மவயதுக்   கர்ப்பம்; பதின்மவயதினர் கருத்தரிப்பு

telegraphic transfer

தந்திப் பணமாற்றீடு

teleological ethics

பயனோக்கு அறவியல்

teleology

பயனோக்கியல்

telepathy, power of

தொலைப்புலன் தொடர்பாற்றல்

telephone booth

தொலைபேசிக் கூடம்

telephone box (kiosk)

தொலைபேசிக் கூண்டு

telephone directory

தொலைபேசி விபரக்கொத்து

telephone tapping

தொலைபேசி ஒற்றுக்கேட்டல்

television channel

தொலைக்காட்சி அலைவழி

television host (personality)

தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்

television journalism

தொலைக்காட்சி ஊடகவியல்

television network

தொலைக்காட்சி வலையம்

television personality (host)

தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்

telex message

தொலைப் பரிமாற்றச் செய்தி

temper, good

நல்லுளப்பாங்கு; நல்லுளநிலை

temper, keep your

உன் சினத்தைக் கட்டுப்படுத்து

temperament, artistic

கலைத்துவக் குணவியல்பு

Temperance Movement

மதுவிலக்கு இயக்கம்

temperature inversion

தட்பவெப்ப எதிர்மாற்று

tempo of change

மாற்ற வேகம்

temporal and spatial dimensions

கால-வெளிப் பரிமாணங்கள்

temporal and spiritual joys

உலகியல்-ஆன்மீக இன்பங்கள்

temporal bone

கன்னப்பொட்டெலும்பு

temporal jurisdiction

கால நியாயாதிக்கம்

temporal life

இம்மை; இவ்வுலக வாழ்வு; உலகியல் வாழ்வு

temporalities ordinance

கோயிலுடைமைகள் கட்டளைச் சட்டம்

temporality and spatiality

காலத்துவமும் வெளித்துவமும்

temporary resident

தற்காலிக வாசி                            

temporary resident permit

தற்காலிக வசிப்பு அனுமதிப் பத்திரம்

temporary worker

தற்காலிக தொழிலாளர்

ten million = 10,000,000

ஒரு கோடி

tenancy in common

பொது வாசம்

tenant's liability

வாடகைவாசியின் பொறுப்பு

tenant's policy

வாடகைவாசியின் காப்புறுதி ஒப்பந்தம்

tender board

கேள்விப்பத்திர சபை

tender your resignation

உனது பதவிதுறப்பு மடலை சமர்ப்பி

tenders = bids

கேள்விப் பத்திரங்கள்

tennis, game of

வரிப்பந்தாட்டம்

tension and anxiety

பதற்றமும் பதைப்பும்

term of lease

குத்தகைத் தவணை

terminal care

கடையிறுதிப் பராமரிப்பு

terminal disease

கடையிறுதி நோய்

terminal, airport

வானூர்தி துறைமுனை

terminally ill patient

கடையிறுதி நோயாளர்

termination and cancellation

முடிவுறுத்தலும் நீக்கலும்

termination of agreement

உடன்படிக்கை முடிவுறுத்தம்

terms and conditions

நியதிகளும் நிபந்தனைகளும்

terms of reference

வரையறை நியதிகள்

terms, technical

கலைச்சொற்கள்

territorial integrity

ஆள்புலத் திண்மை (கட்டுறுதி)

territorial waters

ஆள்புல நீர்ப்பரப்பு

tertiary care

மூன்றாம்நிலைப் பராமரிப்பு; சிறப்பு மருத்துவமனைச் சேவைகள்

tertiary education

மேல்நிலைக் கல்வி

testamentary disposition

இறப்புச்சொத்தளிப்பு

test cricket match

நாட்டிடைத் துடுப்பாட்டப் போட்டி

test flight

பரீட்சார்த்த பறப்பு

testamentary trust

இறுதியாவண நம்பிக்கைப் பொறுப்பு

testimonial

நற்சான்றிதழ்

testimony

சான்றுரை; சாட்சியம்

tête-à-tête

இருவர் உரையாடல்

text and graphics

உரையும் வரைபும்

theatre of operations

பொருதுகளரி

theatre of war

போர்க்களரி

theatrical practices

அரங்க வழமை

theft at or after fire

எரிகையில் அல்லது எரிந்தபின் திருடல்

thematic apperception test

தொனிப்பொருள் புரிதிறன் தேர்வு

thematic procedures

தொனிப்பொருள்வாரியான நடைமுறைமைகள்

theme of a speech

உரைப்பொருள்

theme of a story

கதையின் கரு

theme park

சிறப்பு உவகைக் கோட்டம்

theoretical paradigm

கோட்பாட்டுப் படிமை

theoretical perspective

கோட்பாட்டுக் கண்ணோட்டம்

theory of intergenerational solidarity

தலைமுறைகளுக்கு இடைப்பட்ட தோழமைக் கோட்பாடு

theory, in

கோட்பாட்டளவில்

therapeutic massage

உருவு சிகிச்சை

therapeutic touch

தொடுகைச் சிகிச்சை

thermal pollution

அனல்வலு மாசு

thermodynamics

அனலியக்கவியல்

thesaurus

இயைசொற்களஞ்சியம்; நிகண்டு

thesis, a doctoral

முனைவர் பட்ட ஆய்வேடு

thesis, antithesis, synthesis

முற்கோள், எதிர்கோள், இணைகோள்

think tank

சிந்தனைக் குழாம்

Third Culture Kids

மூன்றாம் பண்பாட்டுப் பிள்ளைகள்

third party

மூன்றாந் தரப்பு

third person

படர்க்கை

Third Reich

ஹிட்லரின் நாசியப் பேரரசு (1933-45)

Third Secretary

மூன்றாம் செயலாளர்

third-party liability

மூன்றாம் தரப்பு பொறுப்பு

thought experiments

சிந்தனைச் சோதனைகள்

thousand-yard stare

உறுத்த நெடுநோக்கு

three-person baby technique

மூவர்வழிக் குழந்தை நுட்பம்

Thucydides's Trap; “It was the rise of Athens and the fear that this instilled in Sparta that made war inevitable” - Thucidides, History of the Peloponnesian War

தூசிடிட்சின் பொறி; “அதென்சின் எழுச்சியும், அதனால் ஸ்பார்ட்டா அடைந்த அச்சமும் தவிர்க்கவியலாவாறு போரை ஏற்படுத்தின.”

thumb impression

பெருவிரல் அடையாளம்

thyroid gland

கேடயச் சுரப்பி

tidal flat

வற்றுப்பெருக்குச் சமதரை

tidal marsh

வற்றுப்பெருக்குச் சேற்றுத்தரை

time of attack = “H" hour

தாக்கும் நேரம்

title deed

உரித்துறுதி

title insurance

உரித்துக் காப்புறுதி

title search

உரித்துவிபரம் தேடல்

toast to the bride, propose a

மணமகள் நலம் பாராட்டி அருந்துரை கூறு

tolerance, religious

சமயப்பொறை; சமய சகிப்புணர்வு

toll free telephone numbers

இலவச தொலைபேசி இலக்கங்கள்

toll road

ஆயவீதி

toll, death

இறந்தோர் தொகை

too many chiefs not enough Indians

சொல்லப் பலர், செய்யச் சிலர்

tortfeasor

தீங்கு விளைவிப்பவர்

torture and other cruel, inhuman or degrading treatment or punishment

சித்திரவதை மற்றும் பிற கொடிய, மனிதாபிமானமற்ற அல்லது  இழிவுபடுத்தும் செயல் அல்லது தண்டனை

total dependency ratio

தங்கிவாழ்வு மொத்த விகிதம்; பிள்ளைகளும் முதியோரும் தொழிலாளரில் தங்கிவாழும் விகிதம்

total fertility rate

மொத்தக் கருவள வீதம்

total final consumption

மொத்த இறுதி நுகர்வு

total loss

மொத்த இழப்பு

tour de force

வியத்தகு சாதனை

tour d'horizon

கலந்துரையாடல்

tourist resort

சுற்றுலாத்தலம்

town hall

நகர மண்டபம்; மக்களரங்கு

townhouse complex

நிரைமனைத் தொகுதி

townhouse condominium

கொண்ட நிரைமனை

townhouse unit

நிரைமனையகம்

toxic pollutants

நச்சு மாசுவகைகள்

track and field

தடகள விளையாட்டுகள்

tradable pollution permit

மாசு வியாபார அனுமதிச்சீட்டு

trade deficit

வியாபாரப் பற்றாக்குறை

trade surplus

வியாபார மிகை

tradition, literary

இலக்கிய மரபு

traditional authority

மரபுவழி அதிகாரம்

traditional birth attendant

மரபுசார் மகப்பேற்றுத் தாதி

traditional intellectual

மரபார்ந்த அறிவார்ந்தவர்

traditional women

மரபார்ந்த மகளிர்

tradition-directedness

மரபு நெறிநிற்கை

traffic calming

ஊர்திப் போக்குவரத்தை சுமுகமாக்கல்

traffic in arms

ஆயுதக் கடத்தல்

traffic in drugs

போதைமருந்து கடத்தல்

traffic in girls

சிறுமியரைக் கடத்தல்

traffic in persons

ஆட்கடத்து

traffic in women

மகளிரைக் கடத்தல்

tragic flaw

குணவியல்புக் குறைபாடு

tragic hero

துன்பியல் கதாநாயகன்

tragicomedy

இன்பதுன்பியல்

trailer release

முன்னோட்ட திரை வெளியீடு

training scheme

பயிற்சித் திட்டம்

trait theory

குணாம்சக் கோட்பாடு

trans community

திருநங்கையர் சமூகம்

trans fat

மாறுகொழுப்பு

transboundary pollution

எல்லைகடப்பு மாசு

transcript of the trial

விசாரணையின் எழுத்துப்பிரதி

transfer of ownership

உடைமை மாற்றம்

transfer tax

உடைமை மாற்ற வரி

transferable instrument

கைமாற்றத்தக்க ஆவணம்

transgress the bounds of decency

பண்புவரம்பை மீறு

transgressive fiction

மீறுபுனைவு

transient human life

குறு மனித வாழ்வு

transit bus

பயணப் பேருந்து

Transit Elevated Bus

தண்டவாளக் கடவைப் பேருந்து

transition, period of

மாறுகாலப்பகுதி

transitional government

மாறுகால அரசாங்கம்

transitional justice

மாறுகால நீதி

transitional phase

மாறுகால கட்டம்

transitive verb

செயப்படுபொருள் குன்றா வினை

transmissibility of a virus

நச்சுயிரியின் தொற்றியல்பு

transnational crime

நாடுகடந்து புரியும் குற்றம்

transnational government

நாடுகடந்த அரசாங்கம்

Transparency International

சர்வதேய வாய்மை அமைப்பு

Transparency International India

இந்திய சர்வதேய வாய்மை அமைப்பு

transparent package

வெளித்தெரி பொதி

transportation for seniors and disabled patients

முதியோருக்கும் நோயுற்ற மாற்றுத் திறனாளருக்குமான போக்குவரத்துச் சேவை

transvestite, a

எதிர்பாலுடையாளன்; எதிர்பாலுடையாளர்

trauma, brain

மூளைக்காயம்

trauma centre

காயச் சிகிச்சையகம்; விபத்துச் சிகிச்சையகம்

trauma, emotional

உணர்வூறுபாடு

trauma of divorce

மணவிலக்குத் துயர்

trauma patients

காய நோயாளர்கள்

trauma, physical

உடலூறுபாடு

trauma, psychological

உளவூறுபாடு

trauma, signs of

காயப்பட்ட அறிகுறிகள்

traumatic experience

அதிரடி அனுபவம்

traumatic brain injury

அதிரடி மூளைக் காயம்

traumatism

அதிரடி ஊறுபாடு

traumatize children

பிள்ளைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கு

traumatized children

அதிர்ச்சிக்கு உள்ளான பிள்ளைகள்; அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள்

travel document

பயண ஆவணம்

traveler's cheque

பயணக் காசோலை

travesty of justice

நீதிப் பம்மாத்து

tread width = tread depth

படியகலம்

treasury bill

திறைசேரி உண்டியல்

treasury bond

திறைசேரி முறி

treatment of refugees

அகதிகளை நடத்தும் விதம்

treaty, peace

அமைதிப் பொருத்தனை

trend, literary

இலக்கியப் பாங்கு

trend story

பரபரப்புக் கட்டுரை; பரபரப்பான கட்டுரை

trending topics

பரபரப்பான தலைப்புகள்; பரபப்பாகப் பேசப்படும் தலைப்புகள்

triable issue

விசாரணைக்குரிய சர்ச்சை

trial and error

பட்டறிந்து தெளிதல்; பட்டறிந்து தெளியும் படிமுறை

trial balance

பரீட்சார்த்த சமன்பாடு

trial judge

விளக்க நீதிபதி; விசாரணை நீதிபதி

trial-at-bar

நீதாய விளக்கம்; மன்று விளக்கம்; யூரரில்லா விளக்கம்

trials and tribulations

வேதனைகளும் சோதனைகளும்

tribal chief

குலபதி; மூப்பர்

tribute to the empire, pay

பேரரசுக்கு திறை செலுத்து

tribute to the late leader, pay

மறைந்த தலைவருக்கு புகழாரம் சூட்டு

tribute, floral

அஞ்சலி மலர்க்கொத்து

trichromatic theory

முந்நிறக் கோட்பாடு

trickling filter

தாரை வடிகட்டி

trillion = a million million 1,000,000,000,000

ஒரு இலட்சம் கோடி

troll factory

இணையப்புரளிக் களம் 

troll for fish

மீன் தூண்டில் கையாளு

troll for votes

வாக்குத் தூண்டில் கையாளு

troll, a

இணையப் புரளியாளர்

trolling online

இணையப்புரளி

troop movement by air

வான்வழிப் படை நகர்வு

troop-leading

படை இட்டுச்செல்கை

trophy, a hunting

வேட்டைச் சின்னம்

trophy, a war

போர் வெற்றிச்சின்னம்

tropical forest

அயனமண்டலக் காடு

true statement

மெய்க்கூற்று

truncated soil profile

துணித்தமண் பக்கத்தோற்றம்

trust fund

நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்

trust territory

பொறுப்பாண்மைப் புலம்

trust, a charitable

அறக்கொடை நிலையம்

Trust, a Hindu

இந்து அறநிலையம்

trust, based on

நம்பிக்கையின் அடிப்படையில்

trust, hold in

நம்பிக்கைப் பொறுப்பில் வைத்திரு

trustee, a

அறங்காவலர்

Trustees, Board of

அறங்காவல் சபை; அறங்காவலர் சபை

trusteeship

அறங்காவல் பொறுப்பு; அறங்காவல் காலப்பகுதி

truth and reconciliation

மெய்-மீளிணக்கம்

truth claim

மெய்ம்மை வாதீடு            

truth functional statement

மெய்த் தொழிற்பாட்டுக் கூற்று

truth-of-reason

நியாய உண்மை

truth-table

மெய்ம்மை அட்டவணை

truth-value

மெய்ம்மைப் பெறுமதி

tubal occlusion = female sterilization

கருப்பைக்குழாய் அடைத்தல் சிகிச்சை

tuition fee

போதனைக் கட்டணம்

TV host (personality)

தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்

two storey house

ஈரடுக்கு வீடு

two-party system

இருகட்சி முறைமை

two-spirit person

ஈரான்மி

UAV = drone

உந்துவான்கலம்

ulcerative colitis

பெருங்குடல் உள்ளுறைப் புண்பாடு

ulterior motive

உள்நோக்கம்; உட்கிடை நோக்கம்

ultimate goal = final goal

இறுதி இலக்கு

ultimate reality

அடிப்படை மெய்ந்நிலை

ultimate truth = fundamental truth

அடிப்படை உண்மை

ultra vires the constitution

அரசியல்யாப்பின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட

ultrasonography

அதியதிர்வொலிப்படப்பதிவு

ultrasound examination

அதியொலிப்படப் பரிசோதனை

umbrella policy

மேல்மிகைக் காப்புறுதி ஒப்பந்தம்

UN Decade for Women and Development

ஐ. நா. மகளிர்-விருத்தி தசாப்தம்

UN Decade for Women: Equality, Development and Peace

ஐ. நா. மகளிர் தசாப்தம்: சமத்துவம், விருத்தி, அமைதி

UN Decade for Women: Policies, Principles and Mandates

ஐ. நா. மகளிர் தசாப்தம்: கொள்கைகள், நெறிகள், ஆணைகள்

UN Focal Point for Women

ஐ. நா. மகளிர் பணி இலக்கு

unalienable rights

களையவொண்ணா உரிமைகள்

unambiguous statement

தெட்டத்தெளிவான கூற்று; இருபொருள்படாத கூற்று

uncollected funds

மீட்கப்படாத நிதியம்

unconditional discharge = absolute discharge

நிபந்தனையற்ற விடுவிப்பு; முழு விடுவிப்பு

unconscious inference

ஆழ்மன அனுமானம்

unconscious, the

ஆழ்மனம்

unconstitutional action

அரசியல்யாப்புக்கு ஒவ்வாத நடவடிக்கை

uncontrollable impulse

கட்டுப்படுத்தவியலாத உந்தல்

unctuous receptionist

பசப்புரை வரவேற்பாளர்

undefended accused

சட்டவாதித்துணையற்ற பதில்வாதி

under (in) the circumstances

மேற்படி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு

under-employment

குறைந்த வேலை

Tube, London

இலண்டன் சுரங்கத் தொடருந்துச் சேவை

underground economy

பாதாளப் பொருளாதாரம்

underground nuclear test

தரைக்கீழ் அணுவாயுத பரிசோதனை

underinsured motorist coverage

குறைகாப்புறுதி ஊர்தியாளர் காப்பீடு

underlying illness

உள்ளார்ந்த சுகயீனம்

undermine one's influence

ஒருவரின் செல்வாக்கை கெடு

under-served areas

சேவை குறைந்த பகுதிகள்

undertaker = funeral director

ஈமநெறிஞர்; ஈமநெறியாளர்

undertaking relating to sponsorship

பொறுப்பேற்புத் தொடர்பான உறுதிமொழி

underwater drone

நீரடிச் சுரும்பூர்தி

underwriting rules

காப்புறுதி விண்ணப்ப கணிப்பு விதிகள்

undisclosed assets

வெளிப்படுத்தாத சொத்துகள்

undisputed evidence

பிணக்கிற்குட்படாத சான்று

undocumented workers

ஆவணப்பதிவற்ற தொழிலாளர்கள்

undue advantage

அடாத அனுகூலம்

undue delay

அடாத தாமதம்

undue hardship

அடா இடும்பை

unearned income

உழைக்கா வருமானம்

unemployed population

தொழில்புரியாதோர் தொகை

unemployment percentage

தொழில்புரியாதோர் சதவிகிதம்

unequivocal statement

தெட்டத்தெளிவான கூற்று

unexecuted warrant

நிறைவேற்றப்படாத கைதாணை

unfair dismissal

அநியாயமான பதவிநீக்கம்

unfriendly act

நட்புமீறிய செயல்

UNHCR Guidelines on Evaluation and Care of Victims of Trauma and Violence

அதிரடி ஊறுபாட்டுக்கும் வன் முறைக்கும் உள்ளானவர்களைக் கணிப்பிட்டுப் பராமரிப்பதற்கான  ஐ. நா. அகதிகள் ஆணையக வழி முறைகள்

unhealthy diet

நலம்படா உணவு

unilateral coercive measures

ஒருதலைப்பட்சமான வலுக்கட்டாய நடவடிக்கைகள்

unilateral declaration of independence

ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம்

unimpeachable evidence

அப்பழுக்கற்ற சான்று; ஐயத்துக்கு இடங்கொடாத சான்று

uninsurable perils

காப்புறுதி செய்யவியலாத பேரிடர்கள்

uninsured motorist coverage

காப்புறுதியுறாத ஊர்தியாளர் காப்பீடு

uninterrupted possession

இடையறா உடைமை

unit labour cost

அலகுக் கூலிச் செலவு

unitary system

ஒற்றையாட்சி முறைமை

United Nations Convention Against Corruption

ஐக்கிய நாடுகள் ஊழல் தடுப்பு பொருத்தனை

United Nations Decade for Human Rights Education (1995 2004)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கல்வித் தசாப்தம் (1995 2004)

United Nations High Commissioner for Refugees

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையாளர்

United Nations Organization = UNO

ஐக்கிய நாடுகள் அமைப்பு

United Nations Special Rapporteur on the Human Rights of Internally Displaced Persons

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் தொடர்பான ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர்

unities = unity of action, place and time

நிகழிடங்கால ஒருமை

unity in diversity

வேற்றுமையில் ஒற்றுமை

universal basic income

பொது அடிப்படை வருமானம்

Universal Declaration of Human Rights

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்

universal design

பொது வடிவமைப்பு

universal jurisdiction

உலகளாவிய நியாயாதிக்கம்

Universal Law

உலகளாவிய சட்டம்

universal periodic review

உலகளாவிய காலவாரியான மீள்நோக்கு

universal soil loss equation

உலகளாவிய மண் இழப்புச் சமன்பாடு

university graduate

பல்கலைக்கழகப் பட்டதாரி

unjust enrichment

அநியாய ஆதாயம்

unjustifiable action

நியாயப்படுத்தவியலாத நடவடிக்கை

unlawful assembly

சட்டவிரோதமான கூட்டம்

unlawfully at large, criminals

சட்டவிரோதமான முறையில் தடுப்புக்காவலுக்கு மீளாதிருக்கும்

unlikely to appear

தோற்றும் (வெளிப்படும்) வாய்ப்பு இல்லை

unmanned drone

ஆளில்லாச் சுரும்பூர்தி

unmanned aerial vehicle

ஆளில்லா வான்கலம்

unmanned underwater vehicle

ஆளில்லா நீர்மூழ்கிக் கலம்

unnamed insured

பெயர்குறிப்பிடப்படாத காப்புறுதியுறுநர்

unnatural death

அவச்சா

unoccupied premises

குடியிரா (ஆளில்லா) வளவு

unpaid contribution

ஊதியம்பெறாத பங்களிப்பு

unpaid family work

ஊதியம்பெறாத குடும்ப வேலை

unpaid family worker

ஊதியம்பெறாத குடும்ப பணியாளர்

unparliamentary language

நாடாளுமன்றத்துக்கு ஒவ்வாத மொழி

unprofessional conduct

துறைமைநெறிபடா நடத்தை

unprotected premises

பாதுகாப்பற்ற வளவு

unqualified applicant

தகைமையற்ற விண்ணப்பதாரி

unqualified support

முற்றுமுழுதான ஆதரவு

unrealistic idea

மெய்நிலைக்கு ஒவ்வாத எண்ணம்

unreasonable conditions

நியாயமற்ற நிபந்தனைகள்

unregulated fishing

சட்டதிட்டத்துக்கு உட்படாத மீன்பிடி

unremunerated work

ஊதியமற்ற வேலை

unrepresented accused

சட்டவாதித்துணையற்ற பதில்வாதி

unsafe abortion

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

unseaworthy boat

கடற்செலவுக்கு ஒவ்வாத படகு

unskilled jobs

திறனுறா வேலைகள்

unsound mind, of

உளத்திட்பமற்ற; சித்தசுவாதீனமற்ற

unsound practices

திட்பமற்ற செயல்முறைகள்

unsoundness of mind

உளத்திட்பமின்மை; சித்தசுவாதீனமின்மை

unsustainable ecosystem

பேணவியலா சூழல்-தொகுதி

unwanted pregnancy

வேண்டாக் கர்ப்பம்; வேண்டாத கருத்தரிப்பு

unwritten constitution

எழுதா யாப்பு

update the files

கோப்புகளை இற்றைப்படுத்து (புதுப்பி)

uphold the law.

சட்டத்தை நிலைநிறுத்து

uprising, peasants'

உழவர் கிளர்ச்சி

upset, Were you?

நீங்கள் விசனப்பட்டீர்களா? (விசனமடைந்தீர்களா?)

urban council

பட்டின (ஆட்சி) மன்றம்

urban designer

நகர வடிவமைப்பாளர்

urban ecology

நகர்ப்புற சூழலியல்

urban runoff

நகர்ப்புறத்து வழிந்தோடு மழைநீர்

urban sprawl

நகரின் வியாபகம்

urbanity and generosity

இங்கிதமும் தயாளமும்

urgent message

அவசர செய்தி

US Open (Golf)

அமெரிக்க வாகைப்போட்டி (குழிப்பந்தாட்டம்)

US Open (Tennis)

அமெரிக்க வாகைப்போட்டி (வரிப்பந்தாட்டம்)

usage, modern

தற்கால வழக்கு

useless statement

பயனற்ற கூற்று; நின்றுபயனின்மை

user friendly computer, a

இலகு கணினி

uterine fibroid

கருப்பை இழையக் கழலை

uterine prolapse

கருப்பை இறக்கம்

utility bill

வழங்கல் கட்டணச்சீட்டு

utmost good faith

உச்ச நல்லெண்ணம்

vacant building

வெறும் கட்டிடம்

vacate determination

தீர்மானத்தை நீக்கு

vacate refugee protection

அகதிப் பாதுகாப்பை நீக்கு

vacation pay

விடுமுறைச் சம்பளம்

vaginal atrophy

யோனியுறை நலிவு

vaginal discharge = leucorrhoea

வெள்ளைப்படல்

valid argument

வலிதான வாதம்

valid chain of reasoning

வலிது நியாயத் தொடர்

valid passport

வலிதான கடவுச்சீட்டு

validity period

வலிது காலப்பகுதி

valuable papers insurance

பெறுமதி ஆவணக் காப்புறுதி

value judgment

தன்னெண்ண நிதானிப்பு

value chain

பெறுமதிச் சங்கிலி

value system

ஒழுக்கநெறிக் கோவை

value, monetary

பணப் பெறுமதி

value-added tax = VAT

பெறுமதி சேர்ப்பு வரி

values and norms

விழுமியங்களும் வழப்பங்களும்

values statement

விழுமியக் கூற்று

values, democratic

குடியாட்சி விழுமியங்கள்

vandal free bin

சேதமுறா வாளி

vandalize windows

சாளரங்களை நாசமாக்கு

vanguard of progress, in the

முன்னேற்றத்தின் முன்னணியில்

vaping

போதையாவி நுகர்வு

variable mortgage rate

வேறுபடும் அடைமான வீதம்

variable rate

மாறு வீதம்

varicose vein

புடைநாளம்

variety show

பல்சுவை நிகழ்ச்சி

vascular disease

குருதிக்கலன் நோய்

VAT = value-added tax

பெறுமதி சேர்ப்பு வரி

vault cash

தாழ்வறைக் காசு

vegan, a

கடுஞ்சைவர்; கடுஞ்சைவ உணவினர்

veganism, practice of

கடுஞ்சைவ உணவு நுகர்வு

vegetable oil

தாவர எண்ணெய்

vegetarian, a

சைவ உணவினர்; மரக்கறி உணவினர்

vegetarian diet

சைவ உணவு; மரக்கறி உணவு

vegetarianism, practice of

சைவ உணவு நுகர்வு

vegetation cover

தாவரக் கவிகை

vehicle identification number

ஊர்தி அடையாள இலக்கம்

venal politicians

விலைபோகும் அரசியல்வாதிகள்

vendetta, political

அரசியல் வஞ்சம்

veneration

வணக்கவொடுக்கம்

venereal disease

மேகநோய்

vengeance on your enemy, take (wreak)

உன் எதிரியை பழிவாங்கு

veni vidi vici = I came, I saw, I conquered (Julius Caesar)

வந்தேன், கண்டேன், வென்றேன்

venomous snake

நச்சுப் பாம்பு

venting of landfill

தாழ்புலவாயு வெளிப்பாடு

verbal agreement

வாய்மொழி உடன்படிக்கை

verbal de-escalation technique

சொல்லித் தணிக்கும் உத்தி

verbal noun = gerund

தொழிற்பெயர்; வினைப்பெயர்

verbal order = oral order

வாய்மொழிக் கட்டளை

verbal phrase

வினைத் தொடர்

verbatim report

சொல்லுக்குச் சொல்லான அறிக்கை

verifiable facts

மெய்காணவல்ல விவரங்கள்

verified by affidavit

சத்தியக்கடதாசி கொண்டு மெய்காணப்பட்ட

vertical democracy

செங்குத்துக் குடியாட்சி

vertical inequality

ஆள்வாரியான ஏற்றத்தாழ்வு; ஆட்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு

vertical thinking

செங்குத்துச் சிந்திப்பு

vested interests

உடைமை நலன்கள்; தன்னலமிகள்

vesting rules

உரித்து விதிகள்

vet a report

அறிக்கையை செவ்வைபார்

veteran writer

முதுபெரும் எழுத்தாளர்; பழுத்த எழுத்தாளர்; எழுத்து மறவர்

Veterans Day

மறவர் நாள்

vexatious action

அலைக்கழிக்கும் வழக்கு

vexatious litigant

அலைக்கழிக்கும் வழக்காடி

via media

இடைநடு வழி; ஒத்துமேவல்

viability of a project

நிகழ்பாடு ஒப்பேறும் வாய்ப்பு

viable project

ஒப்பேறக்கூடிய நிகழ்பாடு

vibe well with others

பிறருடன் நன்கு உறவாடு

vibe of the festival

விழாவின் அதிர்வலை

vibrant economy

துடின பொருளாதாரம்

vicarious liability

மறைமுகப் பொறுப்பு

Vice Admiral

துணைக் கடற்தளபதி

Vice Consul

துணைத் தூதாணையர்

vice versa

மறுதலையாக

victim / witness assistance program

பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சி களுக்கும் உதவும் நிகழ் முறை

victim fine surcharge

பாதிப்புக் கட்டண மிகை

victim impact statement

பாதிக்கப்பட்டோர் கூற்று

victim surcharge

பாதிப்பு மிகைக்கட்டணம்

victimless crime

பாதிக்கப்படுவோர் புலனாகா வாறு இழைக்கப்படும் குற்றம்

victims and perpetrators

பாதிக்கப்பட்டோரும் பாதகம் புரிந்தோரும்

video cassette recorder

ஒலியொளி இழைப் பதிகலம்

video clips

ஒலியொளிக் கீற்றுகள்

video meliora proboque deteriora sequor;

I see and approve of the better, but I follow the worse (Ovid)

சிறந்ததையே காண்கிறேன், ஏற்கிறேன்; எனினும் இழிந்ததையே நாடுகிறேன்

video phone

ஒலியொளிபேசி

video press release

செய்திக் காணொளி வெளியீடு

Vienna Declaration and Programme of Action

வியன்னா பிரகடனம் – நடவடிக்கை நிகழ்முறை

vigil, a bedside

படுக்கையருகில் விழித்திருத்தல்

vigil, a protest

அமைதி எதிர்ப்பு

vigil, keep

விழித்திரு

vigil at the scene of the massacre, hold a

படுகொலை நிழ்ந்த இடத்தில் அஞ்சலி செலுத்து (நினைவஞ்சலி நடத்து)

vigil outside the jail, hold a

சிறைக்கு வெளியே அமைதி எதிர்ப்பில் ஈடுபடு

vigilante, a

தான்தோன்றிக் குழுமத்தவர்

vigilante group

தான்தோன்றிக் குழுமம்

vigilante justice

தான்தோன்றிக் குழும நீதி

village midwife

கிராம மகப்பேற்றுத் தாதி

vintage, a delay in

கொடிமுந்திரி அறுவடையில் தாமதம்

vintage, the 1999

1999ல் ஆக்கப்பட்ட முந்திரிமது

vintage wine

சிறப்பு முந்திரிமது

violate human rights

மனித உரிமைகளை மீறு

violations of human rights

மனித உரிமை மீறல்கள்

violence against women

மகளிருக்கெதிரான வன்முறை

violent death

வன் இறப்பு

viral advertising (marketing)

விளாசிப்பரவும் விளம்பரம்

viral disease

நச்சொட்டு நோய்

viral, go

விளாசிப்பரவு

virtual autopsy

கணிய பிரேத பரிசோதனை

virtual dictator, a

சர்வாதிகாரிக்கு நிகரானவர்

virtual meeting

மெய்நிகர் சந்திப்பு; இணைய சந்திப்பு

virtual reality

கணிய மெய்நிகர்; கணிய முப்பரிமாணம்

virtual university

இணையப் பல்கலைக்கழகம்

virtual vigil

இணையவெளி அஞ்சலி

virtue of educational qualifications, by

கல்வித் தகைமைகளைக் கொண்டு

virtue of the powers vested in me, by

எனக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு

virtuosity, musical

இசைவிற்பனம்

virtuoso flutist, a

புல்லாங்குழல் விற்பன்னர்

virtuous life

அறவாழ்வு

visa, business

வணிக உள்ளிசைவு

visible minority

தோற்றச் சிறுபான்மையோர்

vision (visual) impairment

பார்வைக்குறை

vision of a peaceful world

அமைதி உலக அகநோக்கு

vision of my future wife, I had a

என் எதிர்கால மனைவி என் அகக்கண்ணில் தென்பட்டார்

vision statement and mission statement

இலக்குரையும் பணியுரையும்

vision, a leader of

தொலைநோக்குடைய தலைவர்

visionary leadership

தொலைநோக்குடைய தலைமை

visionary, a

தொலைநோக்காளர்

visiting lecturer

இடைவரவு விரிவுரையாளர்

visual arts

கண்கவர் கலைகள் (எ-கா: வரைதல், வனைதல், ஒவியம், கட்டிடவியல், சிற்பம், நிழற்படம், திரைப்படம், காணொளி...)

visual effects

மெருகுக் காட்சிகள்

visual hallucination

பார்வைப் பிரமை

visualize the future, It is not easy to

எதிர்காலத்தை அகக்கண் கொண்டு நோக்குவது எளிதல்ல

visually delivered materials

பார்த்தறியக் கொடுக்கும் வெளியீடுகள்

visually impaired

பார்வை குறைந்த

vital signs

உயிர்நிலைக் குறிகள்

vital registration

வாழ்க்கை விபரப்பதிவு

vital statistics

வாழ்க்கைப் புள்ளிவிபரம் (பிறப்பு, திருமண, இறப்பு விபரம்)

vitriolic criticism

வன்மையான கண்டனம்

viva voce evidence

வாய்மொழிச் சாட்சியம்

vocal minority

முழக்கமிடும் சிறுபான்மையோர்

vocational education

தொழிற் கல்வி

vocational rehabilitation

தொழில்சார் மறுவாழ்வு

vocational training

தொழிற் பயிற்சி

void in their absence, the

அவர்கள் இல்லாத வெறுமை

void of moonlight, night

நிலவிலா இரவு

void, declare the contract null and

ஒப்பந்தம் வெற்றுவெறிதானதென வெளிப்படுத்து

voir dire

ஏற்புடைமை விசாரணை; வழக்கிற்குள் வழக்கு

volatile liquid

சடுதியில் ஆவியாகும் நீர்மம்

volatile situation

தளம்பு நிலைவரம்

volcanology

எரிமலையியல்

volition, of their own

தமது சொந்த விருப்பின் பேரில்; தாமே விரும்பி; தாமாக விரும்பி

volume of migration

இடப்பெயர்வுத் தொகை

voluntary agency

தொண்டு முகமையகம்

voluntary confession

உளமிசைந்த ஒப்புதல்

voluntary departure

உளமிசைந்த புறப்பாடு; உளமிசைந்து புறப்படல்

voluntary manslaughter

உளமிசைந்த ஆள்வதம்

voluntary part-time work

உளமிசைந்த பகுதிநேர வேலை

volunteer-teacher

தொண்டர்-ஆசிரியர்

votary of MGR, a

எம். ஜி. ஆர். தாசர்

voter turnout

வாக்களித்தோர் தொகை

vouch for his ability

அவர் ஆற்றலுக்கு உத்தரவாதமளி

vox populi =  general public opinion

பொதுமக்கள் கருத்து

vulnerability analysis

நலிபடுநிலை ஆய்வு

vulnerability to illness

நோய்வாய்ப்படு நிலை

vulnerable species

நலிபடவல்ல உயிரினங்கள்

vulnerable to illness

நோய்வாய்ப்படவல்ல

women at risk; at-risk women; vulnerable women

நலிபடவல்ல பெண்கள்; பாதிக்கப் படவல்ல பெண்கள்

wagering contract

பந்தய ஒப்பந்தம்

waiver of arraignment

குற்றவினாத்தொடுப்பை தளர்த்தி விடுகை

waiver of subrogation

கடன்பற்றுரிமையை தளர்த்தி விடுகை

walkie-talkie

செல்கைப்பேசி

walk-in clinic

உடன் சிகிச்சையகம்

wand search

துப்பறிகோல் கொண்டு தேடுதல்

wanted person, a

தேடப்படும் ஆள்

wanton behaviour

தறிகெட்ட நடத்தை

wants and needs

விருப்புகளும் தேவைகளும்

war correspondent

போர்க்கள ஊடகர்

war council

போர் மன்றம்

War Crimes Act

போர்க் குற்றச் சட்டம்

war cry

அறைகூவல்

war dead

போரில் மடிந்தோர்

war drum

போர்முரசு

war field

போர்க்களம்

war game

போர்ப் பயிற்சி

war of attrition

கடுநெடும் போர்

war of nerves

தெம்பு கெடுக்கும் போர்

war of words = propaganda war

சொற் போர்; பரப்புரைப் போர்

ward of court, a

நீதிமன்ற பாதுகாவலுக்கு உட்பட்ட சிறார்

ward, hospital

மருத்துவமனைக் காவறை

ward, municipal

மாநகரக் குறிச்சி (வட்டாரம்)

warming centre

வெதுமை நிலையம்

warp and woof

ஊடும் பாவும்

waste absorption

கழிவுறிஞ்சல்

waste collection

கழிவகற்றல்

waste disposal

கழிவு நீக்கல்

waste management

கழிவு கையாள்கை

waste stabilization pond

கழிவு தெளிவிப்புக் குட்டை

waste-water treatment

கழிவுநீர் சுத்திகரிப்பு

watchdog, police

காவல்துறை கண்காணிப்பு குழாம்

water abstraction (withdrawal)

நீர் மீட்பு

water conservation

நீர் பேணல்

water conveyance tunnels

நீர்க் குழாய்ச் சுருங்கைகள்

water cycle

நீர் வட்டம்

water damage clause

நீர்வழிச் சேத வாசகம்

water erosion

நீரினாலாகும் மண்ணரிப்பு

water mining

நீர் அகழ்வு

water pollution

நீர் மாசு

water quality criteria

நீர்த்தரப் பிரமாணங்கள்

water quality index

நீர்த்தரச் சுட்டு

water quality monitoring

நீர்த்தரக் கண்காணிப்பு

water resources

நீர் வளங்கள்

water supply system

நீர் வழங்கல் கட்டுக்கோப்பு

water table

நீர்ப்பீடம்

water treatment

நீர் சுத்திகரிப்பு

water use

நீர்ப் பயன்பாடு

water withdrawal (abstraction)

நீர் மீட்பு

water-based disease = waterborne disease; water-related disease

நீர்வழிவரு நோய்; நீர்கொணர் நோய்; நீர்சார் நோய்

weapons of mass destruction

பேரழிவாயுதங்கள்

Web Content Accessibility Guidelines

மாற்றுத்திறனாளருக்கான இணையத் தொனிப்பொருள் வழிகாட்டிகள்

Web-enabled database

இணையத்துக்கேற்ற தரவுத்தளம்

webinar on mental health

இணைய உளநல ஆய்வரங்கு

weight, losing

எடை குறைத்தல்

welfare service

பொதுநல சேவை

welfare state

பொதுநல அரசு

well elderly

உடனல முதியோர்; முதிய சுகதேகிகள்

well-being

சுகசேமம்

well-founded fear of persecution

தகுந்த  காரணங்களுடன் கொடுமைக்கு உள்ளாகும் அச்சம்

wellness centre

உடல்நல நிலையம்

Wernicke's aphasia

மொழிபுரியாமை

wet lease

பணியணியுடன் கூடிய வானூர்தி வாடகை உடன்படிக்கை

wet nurse

பாலூட்டும் செவிலி

wetland full of worms, a

புழுக்கள் நிறைந்த குட்டை

whataboutism

திசைப்புரட்டு; திசைதிருப்பு வாதம்

wheelchair accessible transportation

சில்லிருக்கைப் போக்குவரத்துச் சேவை

wheelchair transportation for seniors

முதியோருக்கான சில்லிருக்கைப் போக்குவரத்துச் சேவை

whistle-blower

அம்பலப்படுத்துபவர்

white supremacist

வெள்ளையின மேலாதிக்கவாதி

white supremacy

வெள்ளையின மேலாதிக்கம்

white-collar crime

அதிகாரிகள் புரியும் குற்றம்

white-collar occupation

அலுவலக வேலை

wholesaler

மொத்த வியாபாரி

widows and widowers

கணவரை இழந்தோரும் மனைவியை இழந்தோரும்

wife-burning

மனைவி-எரிப்பு

WiFi = Wireless Fidelity

தொலைநுண்மை

WikiLeaks

விக்கியம்பலம்

wildcat strike

திடீர் வேலைநிறுத்தம்

wildlife habitat; wildlife park; game park

கானுயிர் வாழ்புலம்; வனவிலங்கு வாழ் புலம்

game reserve; wildlife reserve

கானுயிர்க் கோட்டம்; வனவிலங்குக் கோட்டம்

wildlife sanctuary

கானுயிர் காப்புலம்; அடைக்கலக் கானகம்

will; testament

இறப்பாவணம்; இறுதியாவணம்

will power

திடசித்தம்

Will Say Statement

அளிக்கவுள்ள சாட்சியம்

will to power (Nietzsche)

உந்துவலு வேட்கை (நீட்சே)

willful blindness

வேண்டுமென்றே கண்மூடித்தனமாக இருத்தல்

willful evasion

வேண்டுமென்றே தட்டிக்கழித்தல்

willful ignorance

வேண்டுமென்றே  அறியாதிருத்தல்

wind chill effect

காற்றுக் கூதல் விளைவு

wind erosion

காற்று மண்ணரிப்பு

wind power

காற்றுவலு

wind strip cropping

காற்றுரிப்புப் பயிரீடு

windfall tax

மிகை இலாப வரி

windmill network

காற்றாலை வலையம்

windstorm insurance

புயல் சேதக் காப்புறுதி

win-lose game; zero-sum game

வெற்றி-தோல்வி ஆட்டம்

win-win outcome; positive-sum outcome

பொது வெற்றிப் பெறுபேறு

wire services

செய்திச் சேவைகள் (சேவையகங்கள்)

wire transfer

வங்கியிடைப் பணமாற்றீடு

wisdom tooth

ஞானப்பல்

wishful thinking

உவந்த நினைப்பு; நப்பாசை

wit and wisdom

கூர்மதியும் ஞானமும்

witch hunt

எதிரிவேட்டை

withdraw the charges

குற்றச்சாட்டுகளை மீளப்பெறு

withdrawal and depression

விடுபாடும் உளவழுத்தமும்

withdrawal method

விந்துபாய்வு இடைவிலக்கல்

withdrawal of money from the bank

வங்கியிலிருந்து பணம் மீட்பு

withdrawal symptoms

விடுபாட்டு விக்கினங்கள்; போதைமருந்து, மருந்துவகை  நுகர்விலிருந்து விடுபடுகையில்  எழும் விக்கினங்கள்

without let or hindrance

தங்குதடையின்றி

Witness Protection Act

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம்

woke ideology

இனவாரி அநீதி குறித்த விழிப்புணர்வுக்  கருத்தியல்

woke, stay

இனவாரி அநீதி குறித்து விழிப்புடன் இரு

Women Action Network

மகளிர் நடவடிக்கை வலையம்

Women and Children First

பெண்கள்-பிள்ளைகள் முதன்மை இயக்கம்

women at risk; at-risk women; vulnerable women

பாதிக்கப்படக்கூடிய பெண்கள்; நலிபடவல்ல் பெண்கள்

women in decision making

தீர்மானம் எடுப்பதில் பெண்கள்

women in development

அபிவிருத்தியில் பெண்கள்

women in domestic service

வீட்டுப்பணிப் பெண்கள்

women in power

அதிகாரம் செலுத்தும் பெண்கள்

women of reproductive age

கர்ப்ப வயதுப் பெண்கள்

Women on the Move

மகளிர் முன்னகர்வு இயக்கம்

Women's Action Agenda

மகளிர் நடவடிக்கை நிரல்

Women's equal ownership, access to and control over land and the equal rights to own property and to adequate housing

மகளிர் சரிநிகர் காணி உடைமை, காணி அடைகை, காணி ஆள்கை, சரிநிகர் ஆதன உடைமை  உரிமைகள் மற்றும் நிறைவான வதிவக உரிமைகள்

women's health counts

மகளிர் சுகாதாரப் புள்ளிவிபரம்

women's indicators and statistics database

மகளிர் குறிகாட்டிகள் மற்றும்  புள்ளிவிபர தரவுத்தளம்

women's productive roles

மகளிரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகள்

Women's Rights are Human Rights!

மாதரின் உரிமைகள் மாந்தரின் உரிமைகளே!

women's self-employment project

மகளிர் சுயதொழில் நிகழ்பாடு

women-specific project

மகளிர் குறித்த நிகழ்பாடு

woodland full of birds, a

பறவைகள் நிறைந்த அடவி

word of mouth, by

வாய்ச்சொல் மூலம்

word salad

சொற்சாம்பார்

working capital

தொழிற்பாட்டு மூலதனம்

working conditions

தொழில்புரி நிலைமைகள்

Working Group of Experts on People of African Descent

ஆபிரிக்க சந்ததியினர் குறித்த நிபுணர் செயற் குழுமம்

Working Group on Indigenous Populations

சுதேச மக்கள் செயற் குழுமம்

working hours

வேலை நேரங்கள்

working knowledge of Tamil

தமிழில் பணியாற்றும் அறிவு

working memory

பணியாற்றும் நினைவாற்றல்

working-age population

தொழில்புரிவயதினர் தொகை

workplace childcare facilities

வேலைத்தல பாலர் பராமரிப்பு  வசதிகள்

workplace emergency response plan

வேலைத்தல அவசர பதில்வினைத் திட்டம்

workshop, drama

நாடகப் பயிலரங்கு

workshop, metal

உலோகப் பட்டறை (வேலைக்களம்)

World Anti-Doping Agency

உலக போதை தடுப்பு முகமையகம்

World Conference against Racism, Racial Discrimination, Xenophobia and Related Intolerance

இனவாதம், இனப்பாகுபாடு, வேற்றினக்காழ்ப்பு, அவை சார்ந்த சகிப்புணர்வின்மைக்கு எதிரான உலக மாநாடு

World Day of the Poor

உலக வறியோர் நாள்

world heritage site

உலக மரபுடைமைத் தலம்

world of ideas

கருத்துலகு

World Plan of Action for the Implementation of the Objectives of the International Women's Year

சர்வதேய மகளிர் ஆண்டின் இலக்குகளை எய்துவதற்கான உலக நடவடிக்கைத் திட்டம்

world power

உலக வல்லரசு

World Public Information Campaign for Human Rights

மனித உரிமைக்ளுக்கான உலக மக்கள் தகவல் இயக்கம்

World Toilet Day

உலக துப்புரவு நாள்

world view

உலக நோக்கு

worst case scenario

படுமோசமான எதிர்கால சாத்தியம்

wreath, lay a

மலர்வளையம் வை

writ application

பேராணை விண்ணப்பம்

writ of certiorari

பதிவேட்டுப் பேராணை

writ of delivery

ஒப்படைப் பேராணை

writ of execution

நிறைவேற்றுப் பேராணை

writ of mandamus

மேல்மன்றுப் பேராணை

writ of possession

உடைமைப் பேராணை

writ of quo warranto

அதிகாரவினாப் பேராணை

writ of seizure and sale

பறிமுதல் விற்பனைப் பேராணை

writ of sequestration

பற்றிவைத்திருப்பு பேராணை

write off

பதிவழி

written request

எழுத்துமூல வேண்டுகோள்

wrongdoing

குற்றமிழைப்பு; குற்றம்புரிவு

wrongful conviction

தவறான குற்றத்தீர்ப்பு

x-factor

அறியாக் காரணி

x-ray, a chest

நெஞ்சுக் கதிர்ப்படம்

yellow fever

மஞ்சள் காய்ச்சல்

yellow journalism

விரச ஊடகவியல்

yeoman service

அரும்பணி

yoga class

யோகாசன வகுப்பு

yogic teachings

யோக போதனை

young offender

இளந் தவறாளி

young old persons

இளமுதியோர் (65-74)

zeitgeist movie, a

காலகட்டத் திரைப்படம்

zero population growth

சுழியக் குடித்தொகை வளர்ச்சி; குடித்தொகை வளராமை

Zero Tolerance Campaign against Trafficking of Women

மகளிர்-கடத்தலை இம்மியும் சகியா இயக்கம்

zero-sum game

வெற்றி-தோல்வி ஆட்டம்

zombie movies

பேய்-பிசாசுத் திரைப்படங்கள்

zombie, a

நடைப்பிணம்

zonal education office

வலயக் கல்வி அலுவலகம்

zone  defence

வலயப் பாதுகாப்பு

zone of action

நடவடிக்கை வலயம்

zone of fire

வேட்டு வலயம்

zoning regulations

வலயப்பிரிப்பு ஒழுங்குவிதிகள்

zoo = zoological garden

விலங்கினக் கோட்டம்

zoology degree

விலங்கியல் பட்டம்

No comments:

Post a Comment