ENGLISH-TAMIL PHRASES
(CABAL-COMMUTED)
cabal of dissidents, a | மாற்றுக்கருத்தாளர் சூழ்ச்சிக்குழு |
cabinet solidarity | அமைச்சரவைத் தோழமை |
cable news channels | வடத் தொலைக்காட்சி செய்தி அலைவழிகள் |
cable TV connection | வடத் தொலைக்காட்சி இணைப்பு |
cadre of experts | நிபுணர் அணி |
call a witness | சாட்சியை அழை |
call of nature, answer a | இயற்கைக் கடன் கழி |
call to account | விளக்கம் கோரு |
calling card | தொலைபேசி அழைப்பு அட்டை |
calls and calling cards | சந்திப்புகளும் சந்திப்பு மடல்களும் |
cancel culture | புறக்கணிக்கும் போக்கு; ஒதுக்கித்தள்ளும் போக்கு |
canopy of forest | காட்டு மூடாப்பு |
canvass for the Green Party | பசுமைக் கட்சிக்கு ஆதரவு கோரு |
canvass opinions | கருத்துகள் கேட்டறி |
cap rock | தொப்பிப் பாறை |
capable of teaching us | எமக்கு கற்பிக்கவல்ல |
capacity as directors, They participated in the meeting in their | பணிப்பாளர்கள் என்ற வகையில் அவர்கள் அக்கூட்டத்தில் பங்குபற்றினார்கள் |
capacity, The directors participated in their official | பணிப்பாளர்கள் உத்தியோக பூர்வமாகப் பங்குபற்றினார்கள் |
capacity crowd | நிறைந்த மக்கள்திரள் |
capacity of 60 passengers, a bus with a | 60 பயணிகள் கொள்ளத்தக்க பேருந்து |
capacity to reason | நியாயத்திறன்; நியாயம் உரைக்கும் திறன் |
capacity, electricity generating | மின் உற்பத்தித் திறன் |
Capgras' syndrome | தமர் பிறரெனும் மலைவு; தம்மவரை பிறரென மலைதல் |
capital budget | முதலீட்டுப் பாதீடு (காணி, கட்டிடம், கட்டுமானம், பொறிவகளுக்கான பாதீடு) |
capital cost | முதலீட்டுச் செலவு (காணி, கட்டிடம், கட்டுமானம், பொறிவகைகளுக்கான செலவு) |
capital gains | முதலீட்டு விற்பனை இலாபம் (முதலீடுகளை, உடைமைகளை விற்று ஈட்டிய இலாபம்) |
capital goods and consumer goods | முதலீட்டுப் பொருட்களும் நுகர்வுப் பொருட்களும் |
capital offence | இறப்புத் தண்டனைக்குரிய குற்றம் |
capital punishment | இறப்புத் தண்டனை |
capital, starting | தொடக்க மூலதனம் |
capital-intensive industry | மிகைமூலதனக் கைத்தொழில் |
caption of a cartoon | கேலிச்சித்திரக் குறிப்பீடு |
caption, picture | படக் குறிப்பீடு |
captioned article | குறிப்பீட்டுக் கட்டுரை |
captioned film | குறிப்பீட்டுத் திரைப்படம் |
captioning, close | தொலைக்காட்சிக் குறிப்பீடு |
car park | கார்ப்புலம்; ஊர்திக் காப்புலம் |
carbon adsorber | கரியம் புறத்துறிஞ்சி |
carbon cycle | கரிய வட்டம் |
carbon footprint | கரியச் சுவடு |
carbon neutral fuel | கரிய நிகர்நிலை எரியம் |
carbon neutrality: Carbon neutrality means having a balance between emitting carbon and absorbing carbon from the atmosphere in carbon sinks. Removing carbon dioxide from the atmosphere and then storing it is known as carbon sequestration. In order to achieve net zero emissions, all worldwide greenhouse gas (GHG) emissions will have to be counterbalanced by carbon sequestration (European Parliament). | கரிய நிகர்நிலை |
carbon neutral plan | கரிய நிகர்நிலைத் திட்ட ம் |
carbon sequestration. | கரியம் தனிமைப்படுத்தல் |
carbon sink | கரியமேந்தி |
carbon tax | கரிய வரி |
cardiac arrest | இதய முடக்கம் |
cardiac life support | இதய இயக்கத் துணை |
cardiac stress test | இதய உளைச்சல் தேர்வு |
cardinal principle | தலையாய நெறி |
cardiopulmonary resuscitation | இதயமூச்சூட்டல் |
care home | பராமரிப்பகம் |
care-dependent | பராமரிப்பில் தங்கிவாழ்பவர் |
career diplomat, a | பணிசார் சூழ்வியலர் |
career, diplomatic | சூழ்வியற் பணி |
career, teaching | கற்பித்தல் பணி |
caregiver | பராமரிப்பாளர் |
caregiver burden | பராமரிப்புச் சுமை |
caregiver stress | பராமரிப்பாளரின் உளைச்சல் |
caring communities | பராமரிக்கும் சமூகங்கள் |
caring for elderly and disabled family members | குடும்பத்து முதியோரையும் மாற்றுத்திறனாளரையும் பராமரித்தல் |
carnivorous plant; insectivorous plant | ஊனுண்ணி (பூச்சிதின்னி)த் தாவரம் |
carpetbagger | வந்தான்வரத்து |
carpet bombing | பரவைக் குண்டுவீச்சு |
carte blanche | வெள்ளோலை; வெற்றுத்தாள்; முழு அதிகாரம் |
cartel, drug | போதைமருந்து கடத்தல் குழுமம் |
Cartesian doubt; Descartes' doubt | தெக்காவின் ஐயம்; முற்றுமுழு ஐயம் |
case history | நோயாளர் வரலாறு |
case law | முன்தீர்ப்புச் சட்டம்; வழக்குத்தீர்ப்புச் சட்டம் |
case study | விடய ஆய்வு |
cash card | பண அட்டை |
cash cow | காசுக் காமதேனு |
cash flow | காசுப் புழக்கம்; பணப் புழக்கம் |
casino in the city, a | மாநகரத்தில் ஒரு சூதாட்டகம் |
cast iron | வார்ப்பிரும்பு |
cast net | வீச்சு வலை |
caste system; casteism | சாதியம் |
castor oil | ஆமணக்கு எண்ணெய் |
casualty line insurance | சேதாரக் காப்புறுதி வகை |
casus belli | போருக்கான (பிணக்கிற்கான) சாட்டு |
catalytic converter | சடுதி உருமாற்றி |
catalytic incineration | சடுதி நீறாக்கம் |
cataract removal | பசாடு நீக்கல் |
catastrophic loss | பேரிழப்பு |
Catch 22 | திரிசங்குசொர்க்கம் [எ-கா: (1) வேலை செய்யாமல் அனுபவம் பெற முடியாது; அனுபவம் இல்லாமல் வேலை பெற முடியாது (2) சாவி இல்லாமல் வீட்டுக்குள் புகமுடியாது; வீட்டுக்குள் புகாமல் சாவி எடுக்க முடியாது)] |
catchment area; drainage basin; watershed | வடிநிலம் |
categorical attitude | திட்டவட்டமான உளப்பான்மை |
categorical imperative = unconditional command | திட்டவட்டமான (விதிவிலக்கற்ற) கடப்பாடு |
categorical proposition | திட்டவட்டமான கூற்று |
categorical syllogism | திட்டவட்டமான நியாயத் தொடை |
category error | வகுதி வழு |
cat's paw, Don't use me as a | என்னை ஒரு பகடையாகப் பயன்படுத்த வேண்டாம் |
causal fallacy | ஏதுப் போலி |
causative verb | பிறவினை |
cause an accident | விபத்துண்டாக்கு |
cause and effect | ஏதும் விளைவும்; காரண காரியம் |
cause celebre | பரபரப்பூட்டும் வழக்கு (சச்சரவு) |
cause of democracy | குடியாட்சிக் குறிக்கோள் |
cause-specific mortality rate | காரணம் குறித்த இறப்பு வீதம் |
caveat emptor; Let the buyer beware; The principle that the buyer alone is responsible if dissatisfied | கொள்வனவு நிறைவு தராவிட்டால், அதற்கு கொள்வனவாளரே பொறுப்பு என்று எச்சரிக்கும் நெறி |
cavity search | ஊடுருவித் தேடுதல்; புழையூடுருவித் தேடுதல் |
CCTV | வேவுத் தொலைக்காட்சி |
CCTV camera | வேவுத் தொலைக்காட்சிக் கருவி |
CCTV image | வேவுத் தொலைக்காட்சிப் படிமம் |
CCTV system | வேவுத் தொலைக்காட்சிக் கட்டுக்கோப்பு |
CD player; compact disc player | இறுவட்டுக் கருவி |
cease-fire | போர்நிறுத்தம் |
celebrity journalism | பிரபலர் நவிற்சி ஊடகவியல் |
celiac disease | குளூட்டன் ஒவ்வாமை |
celibate priest | மணத்துறவு மதகுரு |
cellular phone | செல்பேசி; அலைபேசி |
central bank | நடுவண் வங்கி; மத்திய வங்கி |
Central Intelligence Agency | நடுவண் உளவு முகமையகம் |
central nervous system | நடுவண் நரம்புத் தொகுதி |
centralization | நடுமுகப்படுத்தல்; ஒருமுகப்படுத்தல் |
cerebral aneurysm | மூளைக்குருதிக்கலன் புடைப்பு |
cerebral thrombosis | மூளைக்குருதியடைப்பு |
ceremonial occasion | சடங்கு வேளை |
ceremonious welcome | சடங்குமுறை வரவேற்பு |
ceremony, award(s) | விருது விழா |
certainty, political | அரசியல் உறுதிப்பாடு |
certificate of absence | இன்மைச் சான்றிதழ் |
certificate of disappearance | காணாமைச் சான்றிதழ் |
certificate of eligibility | தகவுச் சான்றிதழ் |
certificate of insurance | காப்புறுதிச் சான்றிதழ் |
certificate of reasonable value | நியாய பெறுமதிச் சான்றிதழ் |
certified cheque (check) | அத்தாட்சிக் காசோலை |
certified copy | அத்தாட்சிப் பிரதி |
certiorari, writ of | பதிவேட்டுவினாப் பேராணை |
certitude, moral | ஒழுக்கவிறல் |
cervical cancer | கருப்பைமுகைப் புற்றுநோய் |
cessio bonorum | சொத்து ஒப்பளிப்பு |
ceteris paribus; other things being constant | மற்றவை மாறாவிடத்து |
chain of title | உரித்து மாற்ற வரலாறு |
chain reaction | தொடரடி விளைவு |
chains, prisoners in | விலங்கிட்ட கைதிகள் |
Chamber of Commerce | வணிகக் கழகம் |
champion, a | வாகையர் |
champion the cause of human rights. | மனித உரிமைக் குறிக்கோளுக்காகப் பாடுபடு |
championship game | வாகைப்போட்டி |
Chancery, Head of | தூதரக தலைமை அலுவலர் |
change (changing) room | உடைமாற்று கூடம் |
channel, TV | தொலைக்காட்சி அலைவழி |
chapter, local | உள்ளூர்க் கிளை |
character evidence | குணவியல்புச் சாட்சியம் |
characteristic species | சிறப்பியல்பு உயிரினங்கள் |
Chargé d'Affaires ad hoc; Chargé d'Affaires pro tempore | குறித்தநோக்க தூதரக பொறுப்பாளர்; தற்காலிக தூதரக பொறுப்பாளர் |
Chargé d'Affaires ad interim | இடைக்கால தூதரகப் பொறுப்பாளர் |
charge nurse = nurse-in-charge | பொறுப்புச் செவிலியர் (தாதியாளர்) |
charismatic authority, wield | ஆட்கவர்ச்சி அதிகாரம் செலுத்து |
charitable trust | அறக்கட்டளை |
charities, local | உள்ளூர் அறக்கொடை(யகங்கள்) |
charity, children's | சிறார் அறக்கொடை(யகம்) |
charity, raise money for | அறக்கொடைக்கு பணம் திரட்டு |
charter of rights | உரிமைப் பட்டயம் |
chartered accountant | பட்டயக் கணக்காளர் |
chartered insurance broker | பட்டயக் காப்புறுதித் தரகர் |
chattel slavery | அடிமைப் பண்டம் |
check irrigation | பொல்ல நீர்ப்பாசனம் |
checkbook journalism | தகவல் வசூல்; ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து கட்டணம் வசூலித்தல் |
checking account; current account | நடப்புக் கணக்கு |
checks and balances | கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் |
chemical agent | நச்சுவேதிப் பொருள் |
chemical cylinder | நச்சுவேதி உருளை |
chemical landmine | நச்சுவேதி நிலக் கண்ணி |
chemical oxygen demand | வேதி உயிர்வாயுத் தேவை |
chemical toilet | வேதிக் கழிவுகூடம் |
chemical treatment | வேதிமூல சுத்திகரிப்பு |
chemical warfare | நச்சுவேதிப் போரீடு |
chemical weapon | நச்சுவேதிப் படைக்கலம் |
cheque book; check book | காசோலை ஏடு |
chest pain | நெஞ்சுவலி |
chickpea | கொண்டைக் கடலை |
Chief of Mission | தூதரக அதிபதி |
chief of staff | ஆளணி அதிபர்; படையணி அதிபர் |
child abuse | சிறார் துர்ப்பிரயோகம்; சிறாரை துர்ப்பிரயோகம் செய்தல் |
child and adolescent mental health disorders | பாலப்பருவ, வளரிளம்பருவ உளக் கோளாறுகள் |
childcare; day care | சிறார் பராமரிப்பு |
child dependency ratio | சிறார் தங்கிவாழும் விகிதம் |
child disability | மாற்றுத்திறச் சிறார் |
child grooming | சிறாரை வளைத்தெடுத்தல் |
child mortality ratio | குழந்தை இறப்பு விகிதம் |
child poverty | சிறார் வறுமை |
child prostitutes | விலைச்சிறார் |
child prostitution | சிறாரை விபசாரத்துக்கு பயன்படுத்தல் |
child tax benefit | சிறார் வரிவிலக்கு உதவிப்படி |
childbearing age | மகப்பேற்று வயது |
child-directed speech | குழந்தைப் பாணிப் பேச்சு |
chilling effect | வெப்பத் தாழ்ச்சி விளைவு |
chilling story | பயங்கரக் கதை |
chimney effect | மேற்கிளம்பு விளைவு |
chit fund | சீட்டு |
chlorinated hydrocarbon | குளோறினேற்றிய நீரகக் கரியம் |
chlorine loading | குளோறின் செறிவு |
Christ shell crab | சிலுவை நண்டு |
chronic and degenerative disease | நீடித்து உருக்குலைக்கும் நோய் |
chronic care | நீடித்த பராமரிப்பு |
chronic disease | நீடித்த நோய் |
chronic stress | நீடித்த உளைச்சல் |
chronic toxicity | நீடித்த நச்சுடைமை |
chronicles of Malaysia | மலேசிய வரலாற்றுப் பதிவேடுகள் |
chronicler, a | வரலாற்றுப் பதிவாளர் |
chronological age | கால வயது |
chummery | இளைஞரகம் |
cipher | மறைகூற்றாக்கு |
circadian rhythm | அன்றாட உடலியக்க சுழற்சி |
circuit court | சுற்றமர்வு நீதிமன்று |
circumstances, disappear under suspicious | ஐயுறவுக்கிடமான சூழ்நிலையில் காணாமல்போ |
circumstances, in the = under the circumstances | மேற்படி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு |
circumstances, under no | எக்காரணம் கொண்டும்; எத்தகைய சூழ்நிலையிலும் |
circumstantial evidence | சூழ்நிலைச் சான்று |
citation for bravery | தீரச் சான்றுரை |
cite a paragraph | பந்தியை மேற்கோள்காட்டு |
cite bad weather for the delay | தாமதத்துக்கு சீரற்ற வானிலையைச் சாட்டு (காரணம்காட்டு) |
citizen journalist | பாமர ஊடகர் |
citizen's arrest | குடியாளர் மேற்கொள்ளும் கைது |
citizenship, Russian | இரசியக் குடியுரிமை |
civic centre | குடிமை நிலையம் |
civic duty | குடிமைக் கடமை |
civic holiday; public holiday | குடிமை விடுதலை |
civic nationalism | குடிமைத் தேசியவாதம் |
civic space | குடிமைச் சுதந்திர வெளி |
civil commotion | குடியினர் கொந்தளிப்பு |
civil court | குடியியல் நீதிமன்று |
civil disobedience | குடியினர் பணியாமை |
Civil Law | குடியியற் சட்டம் |
civil liberties | குடி உரிமைப்பேறுகள் |
civil litigation | குடியியல் வழக்காடல் |
civil rights | குடியியல் உரிமைகள் |
civil servant | குடியியற் சேவையாளர் |
civil service | குடியியற் சேவை |
civil society Human rights defenders, human rights NGOs, bar associations, student clubs, trade unions, university institutes, bloggers, environmental rights activists, or charities working with discriminated groups – countless civil society actors work for a better future and share the common goals of justice, equality, and human dignity (UNO). | குடியியற் சமூகம் மனித உரிமை காப்பாளர்கள், அரசுசாரா மனித உரிமை அமைப்புகள், சட்டவுரைஞர் சங்கங்கள், மாணவர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், பல்கலைக்கழக நிறுவகங்கள், இணைய வலைப்பூவினர், சூழல் உரிமைச் செயலர்கள், பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படும் குழுமங்களுடன் இணைந்து செயற்படும் அறக்கொடையகங்கள் - எண்ணிறந்த குடியியற் சமூக அலுவலர்கள் சிறந்த எதிர்காலத்துக்காகச் பாடுபட்டு பொது நீதி, சமத்துவ, மனித கண்ணிய இலக்குகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் (ஐநா). |
civil status; marital status: single, married, separated, divorced, widowed… | குடித்தகுநிலை: மணமாகாமை / மணமாகியமை / பிரிந்து வாழ்தல் /மணவிலக்கு… |
civilian attaché | குடித்துறை தூதிணைஞர் |
civilian dress | குடித்துறை உடை; பொது உடை |
civilian rule | குடித்துறை ஆட்சி |
civilian witness | குடித்துறைச் சாட்சி |
civilian-based defence | குடித்துறைசார் பாதுகாப்பு |
civilians | குடியினர்; குடிமக்கள்; பொது மக்கள்; குடித்துறையினர் |
cladistics | விலங்கினப் பகுப்பியல் |
cladophora blanket weed | பசும்பாசிப்படிவு |
claim for refugee protection | அகதிப் பாதுகாப்புக் கோரிக்கை |
claimant without identification | அடையாள ஆவணங்களற்ற கோரிக்கையாளர் |
claims examiner | கோரிக்கை தேர்வாளர் |
clairvoyance, stories of | முன்புலனுணர்வுக் கதைகள் |
class action; class suit | கூட்டு வழக்கு |
class action lawsuit | கூட்டு வழக்கீடு |
class conflict | வர்க்க முரண்பாடு |
class consciousness | வர்க்க உணர்வு |
class society | வர்க்க சமூகம் |
class system | வர்க்க கட்டமைப்பு |
classic, a | செவ்விலக்கியம்; செம்படைப்பு; பழம்பெரும் இலக்கியம் |
classic aging pattern | வயதுநியம மூப்பு விதம் |
classic novel, a | செந்நாவல் |
classical music | செவ்விசை; பழம்பெரும் இசை |
classification of environmental protection activities | சூழல் பாதுகாப்புச் செயற்பாட்டு வகுப்பீடு |
classified ads | வகைவாரி விளம்பரங்கள் |
classified documents | இரகசிய ஆவணங்கள் |
classroom learning | வகுப்பறைக் கற்கை |
clean products = adapted products | இசைவித்த ஆக்கங்கள் |
clean technology = adapted technology | இசைவித்த தொழினுட்பவியல் |
cleansing, ethnic | இனக்குழுமக் களைவு |
clear and present danger | தெட்டத்தெளிவாக நிகழும் ஆபத்து |
clear liquid | தெளிவு நீர்மம் |
clear liquid diet | தெளிவு நீர்ம உணவு |
clear title | பாத்தியமற்ற உரித்து |
clearance for departure | புறப்படுவதற்கான இசைவு (அனுமதி) |
clearance of one metre | ஒரு மீட்டர் இடைவெளி |
clearance sale | தீரவிற்பனை; விற்றுத் தீர்த்தல் |
clearance, slum | சேரி அகற்றல் |
clear-cutting | முழுக்காடு வெட்டல் |
clearing network | அனுமதிக்கும் வலையமைப்பு |
cleft lip | உதட்டுப் பிளவு |
cleft palate | அண்ணப் பிளவு |
clemency, a plea for | இரக்கக் கோரிக்கை |
clergy, Buddhist | பெளத்த குருமார் |
client sate | கையேந்தும் அரசு |
climate change | காலநிலை மாற்றம் |
climate index | காலநிலைச் சுட்டி |
climate protection | காலநிலைப் பாதுகாப்பு |
climate smart agriculture | காலநிலைக்கு ஈடுகொடுக்கும் வேளாண்மை |
climatological statistics | காலநிலைப் புள்ளிவிபரம் |
cinema comment | திரைப்படக் கருத்துரை |
clinical depression | சிகிச்சைநிலை உளவழுத்தம் |
clinical psychology | சிகிச்சைநிலை உளவியல் |
clinical research | சிகிச்சைநிலை ஆராய்ச்சி |
clinical social worker | சிகிச்சைநிலை சமூகப் பணியாளர் |
clinical training | சிகிச்சைநிலைப் பயிற்சி |
clips, video | காணொளிக் கீற்றுகள் |
closed captioning | தொலைக்காட்சிக் குறிப்பீடு |
closed circuit tv magnifier = CCTV | உற்றுநோக்கு தொலைக்காட்சி உருப்பெருக்கி |
closed ecological system | மூடிய சூழல் தொகுதி; மீள்பாவனைச் சூழல் தொகுதி |
closed mortgage | வரையறுத்த அடைமானம் |
closing costs | உறுதிமுடித்த செலவுகள் |
closing entry | இறுதிப் பதிவு |
closure to the tragedy | பேரிடிக்கு ஒரு முற்றுப்பேறு |
closures, road | தெருத்தடைகள் |
cloud computing | இணையசேவைக் கணியவியல் |
cloud forest | மந்தாரக் காடு |
cloud seeding | செயற்கைமழை வித்தீடு |
club, a sport | விளையாட்டுக் கழகம் |
cluster bomb | கொத்துக் குண்டு |
Cluster Munitions Convention | கொத்துப் படைக்கல ஒப்பந்தம் |
coalition government | கூட்டரசாங்கம் |
coast artillery | கரையோரப் பீரங்கித்தொகுதி |
coast route | கரையோர மார்க்கம் |
coastal force | கரையோரப் படை |
coastal frontier defense | கரையோர எல்லைப் பாதுகாப்பு |
coastal lagoon | கடல் நீரேரி; கடனீரேரி |
coastal protection | கடற்கரைப் பாதுகாப்பு |
coastal zone | கரையோர வலயம் |
coastwise sea lane | கரையோரக் கடல் மார்க்கம் |
co-borrower | இணைந்து கடன்படுநர் |
cocktail party | பானவிருந்து; தேறல்விருந்து |
coconut oil | தேங்காய் எண்ணெய் |
code name | குறியீட்டுப் பெயர் |
code of conduct | நடத்தைவிதிக் கோவை |
code of law | சட்டக் கோவை |
coercion use of | பலவந்தப் பிரயோகம் |
cognitive appraisal | அறிதிற மதிப்பீடு |
cognitive appraisal theory of emotion | உணர்வெழுச்சி அறிதிற மதிப்பீட்டுக் கோட்பாடு |
cognitive behavior modification | அறிதிற நடத்தை சீராக்கம் |
cognitive development | அறிதிற விருத்தி |
cognitive disabilities | அறிதிற வலுவீனங்கள் |
cognitive dissonance | சுருதிபேத உளைச்சல் |
cognitive impairment | அறிதிறத் தடங்கல் |
cognitive map | அறிதிறப் படம் |
cognitive perspective | அறிதிறக் கண்ணோட்டம் |
cognitive process | அறிதிறப் படிமுறை |
cognitive psychology | அறிதிற உளவியல் |
cognitive science | அறிதிறனியல் |
cognitive skill | அறிதிறன் |
cognitive therapy | அறிதிற சிகிச்சை |
cognizable offence | கைதாணையின்றி கைதுக்கு உள்ளாக்கவல்ல குற்றம் |
coherence theory of truth | இயைவு மெய்க் கோட்பாடு |
cohort aging | சாரி மூப்பெய்தல் |
cohort effect | சாரி விளைவு |
co-insurance clause | சக காப்புறுதிக் கூற்று |
co-insurer | சக காப்புறுதியுறுநர் |
coitus interruptus; withdrawal method | விந்துபாய்வு இடைவிலக்கல் |
coke oven emissions | கற்கரி உலைக் கால்வுகள் |
cold case | தீராவழக்கு |
cold desert | குளிர்ப் பாலைவனம் |
Cold War | அமெரிக்க-சோவியத் கெடுபிடிப் போர் |
coliform index | குடற்பற்றுயிரிச் சுட்டு |
coliform organism | குடல் உயிர்மம் |
collaborative learning | கூடிக் கற்கை |
collateral damage | பக்கவாட்டுச் சேதம் |
collect call; reverse charge call | மறுதரப்புக் கட்டண அழைப்பு |
collect funds | நிதி திரட்டு |
collection agency | கடன்மீட்பு முகமையகம் |
collection, data | தரவுத் திரட்டு; தரவு திரட்டல் |
collection of poems | கவிதைத் திரட்டு |
collection of waste | கழிவகற்றல் |
collection, stamp | முத்திரை சேகரிப்பு |
collective behaviour | கூட்டு நடத்தை |
collective fire | கூட்டு வேட்டு |
collective noun | கூட்டுப் பெயர் |
collective security | கூட்டுப் பாதுகாப்பு |
collective task | கூட்டு முயற்சி |
collective unconscious | கூட்டு ஆழ்மனம் |
collective use of a term | ஒரு பதத்தின் கூட்டுப் பயன்பாடு (எ-கா: பாகற்காய் கசக்கும் = பாகற்காய்கள் எல்லாம் கசக்கும்) |
collectivism | கூட்டாண்மை |
collision coverage | மோதல் காப்பீடு |
colourful birds | வண்ணப் பறவைகள் |
colourful fellow | பகட்டான பேர்வழி |
column, military | நெடும்படையணி |
combat zone | பொருது வலயம் |
combat intelligence | பொருதுகள உளவு |
combat orders | பொருதற் கட்டளைகள் |
combat outpost | பொருதுகளப் புறமுனை |
combat team | பொருது படையணி |
combat unit | பொருதுபடைப் பிரிவு |
combined operation | இணைந்த நடவடிக்கை |
combustion chamber | கனற்கூடம் |
come to power | ஆட்சி எய்து |
comedy, stand-up | ஓரங்கப் பகிடி (விகடம்) |
comic (comedian), stand-up | ஓரங்கப் பகிடியாளர் (விகடர்) |
comic relief | நகைச்சுவைத் தேற்றம்; ஆற்றித்தேற்றும் நகைச்சுவை |
command | ஆணை(யிடு) |
command car | ஆணை ஊர்தி |
command economy | அரசாணைப் பொருளாதாரம் |
command post | ஆணைப் பீடம் |
command-and-control policy | ஆணை-கட்டுப்பாட்டுக் கொள்கை |
Commander-in-Chief; Supreme Commander | அதியுச்சத் தளபதி; தலைமைத் தளபதி |
commemorate the fallen comrades | களப்பலியன தோழர்களை நினைவுகூரு |
commemoration of the fallen comrades | களப்பலியன தோழர்களை நினைவுகூர்தல் |
commencement of lease | குத்தகைத் தொடக்கம் |
Comment is free, but facts are sacred (C. P. Scott) | கருத்துரைகள் வேறுபடலாம், எனினும் உண்மைகள் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் |
commercial attaché | வணிகத் தூதிணைஞர் |
commercial auto insurance | வணிக ஊர்திக் காப்புறுதி |
commercial bank | வணிக வங்கி |
commercial host liability; liquor liability | ஓம்பு வணிகர் பொறுப்பு; மதுவழங்கு பொறுப்பு |
commercial property | வணிக உடைமை |
commercial property policy | வணிக உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம் |
commission of inquiry | விசாரணை ஆணையம் |
commission to design a new building | புதிய கட்டிட வடிவமைப்பு ஆணை |
commission, a warship in | செயற்படும் போர்க்கப்பல் |
commission, a warship out of | செயற்படாத போர்க்கப்பல் |
commission, act of | புரியும் செயல்; புரிந்த செயல் |
commission, the General resigned his | தளபதி பதவி துறந்தார் |
commission, work on | தரகு வேலை செய் |
commissioned officer | படையாணை அதிகாரி |
commissioner of oaths | சத்திய வாக்குமூல ஆணையர் |
Committee on Economic, Social and Cultural Rights | பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைக் குழு |
Committee on Public Enterprises | அரசாங்க தொழிலகக் குழு |
Committee on the Elimination of Discrimination against Women | பெண்களுக்கு எதிரான பாரபட்சம் ஒழிப்புக் குழு |
common areas | பொது இடங்கள் |
common era | பொது ஊழி |
common ground | பொது நிலைப்பாடு |
common knowledge, Her scholarship is | அவர் புலமையை அனைவரும் அறிவர் |
Common Law | வழக்காற்றுச் சட்டம் |
common learning objective | பொது கற்கை நோக்கம் |
common mental disorders | பொது உளக் கோளாறுகள் |
common millet | வரகு |
common property resources | பொதுச்சொத்து வளங்கள் |
common sense | பொதுப்புத்தி |
common share | சாதாரண பங்கு |
common-law partner | கூடிவாழும் துணைவர் |
common-law relationship | கூடிவாழும் உறவு |
Commonwealth | பொதுநலவாயம் |
Commonwealth Eminent Persons Group | பொதுநலவாய மேன்மக்கள் குழுமம் |
communal marriage | குழுமத் திருமணம் |
communalism | வகுப்புவாதம்; சமூகவாதம் |
communicable disease | கடத்துநோய் |
communication device | தொடர்பாடல் சாதனம் |
communication skills | தொடர்பாடல் திறன்கள் |
community health care centre | சமூக சுகாதார பராமரிப்பு நிலையம் |
community health worker | சமூக சுகாதாரப் பணியாளர் |
community involvement | சமூக ஈடுபாடு |
community of species | உயிரின சமூகம் |
community treatment order | சமூகநிலைச் சிகிச்சைக் கட்டளை |
community-based care | சமூகநிலைப் பராமரிப்பு |
community-based programmes | சமூகநிலைத் திட்டங்கள் |
community-based services | சமூகநிலைச் சேவைகள் |
commutation of sentence | தண்டனை தணிப்பு |
commute daily | அன்றாடம் பயணம்செய் |
commute death sentence to life imprisonment | இறப்புத் தண்டனையை வாழ்நாள் சிறையாகத் தணி |
commuted pension | மாற்றீட்டு ஒய்வூதியம் |
No comments:
Post a Comment