Search This Blog

ENGLISH-TAMIL PHRASES (G-H)

G 20; The Group of 20

20 நாட்டுக் குழுமம்; 20 நாடுகள் குழுமம்

gag rule

வாய்ப்பூட்டு விதி

gainful employment

சம்பள வேலை

gallery, art

கலைக் களரி

Gallup Poll = opinion poll

கருத்து வாக்கெடுப்பு

game bird

வேட்டைப்படு பறவை

game changer

நிலைமாற்றி; மாற்றம் உண்டுபண்ணி

game cock

வேட்டைச் சேவல்

game park = game refuge = game reserve = wildlife reserve

காவல் கானகம்

game theory

போட்டிக் கோட்பாடு

gamut of artistic styles, the whole

கலைத்துவப் பாணிகளின் முழுத்திரள்

gang of pickpockets

முடிச்சுமாறிக் குழுமம்

gang rape

குழும வன்புணர்ச்சி

gang, criminal

குற்றக் குழுமம்

gangsters, number of

குழுமச் சண்டியரின் எண்ணிக்கை

garage liability insurance

ஊர்தி பழுதுபார்ப்பிட பொறுப்புக் காப்புறுதி

garaging location

ஊர்திக்காலை

garnishee order

கடன்பற்றுக் கட்டளை

garnishment, notice of

கடன்பற்று அறிவித்தல்

garrison town

அரண்படை நகர் (நகரம்)

gas (gasoline) station

எரிவலு நிலையம்

gas chamber

கொல்வாயுக் கூடம்

gas cleaning plant

எரிவாயு சுத்திகரிப்பு ஆலை

gas field

எரிவாயுப் புலம்

gas fireplace

எரிவாயுக் கணப்பு

gas fitter

எரிவாயுக்கலம் பொருத்துநர்

gas flaring

எரிவாயு மூளல்

gas meter

எரிவாயுமானி

gas oil

எரிவாயு எண்ணெய்

gas reserves

எரிவாயுப் படிவுகள்

gas, run out of = run out of steam

வலுவிழந்து போ; ஊக்கம் குன்று

gaslighting

ஏய்த்துப் பணியவைத்தல்

gate-control theory

வாயில் கட்டுப்பாட்டுக் கோட்பாடு

gatekeepers

கட்டுப்பாட்டாளர்கள்

gender analysis

பால்மைப் பகுப்பு

gender and development

பால்மையும் அபிவிருத்தியும்

Gender and Humanity

பால்மையும் மானுடமும்

gender apartheid

பால்மை ஒதுக்கல்

gender asymmetry

பால்மைச் சீரின்மை

gender awareness

பால்மை விழிப்புணர்வு

gender balance

பால்மை ஒப்பளவு

gender bias

பால்மைப் பக்கச்சார்பு

gender blindness

பால்மை காணாமை 

gender citizenship

பால்மைக் குடித்துவம்

gender contract

பால்மை ஒப்பந்தம்

gender disaggregated information = data disaggregated by sex

பால்மைவாரித் தரவுகள்

gender discrimination

பால்மைப் பாகுபாடு (பாரபட்சம்)

gender disparities

பால்மைப் பேதங்கள்

gender dispute

பால்மைசார் பிணக்கு

gender dysphoria

பால்மைச் சோகம்

gender equality

பால்மைச் சமத்துவம்

gender equity

பால்மை ஒப்புரவு

gender focal point

பால்மை இலக்கு

gender identity

பால்மை அடையாளம்

gender impact assessment methodology

பால்மைத் தாக்கம் கணிப்பீட்டு முறையியல்

gender in development programme

விருத்தி நிகழ்முறையில் பால்மை

gender inequalities

பால்மை ஏற்றத்தாழ்வுகள்

gender mainstreaming principles

பால்மை உள்வாங்கு நெறிகள்

gender needs assessment

பால்மைசார் தேவைகள் கணிப்பீடு

gender neutrality

பால்மை நடுநிலைப்பாடு

gender order

பால்மை ஒழுங்கு

gender perspective

பால்மைக் கண்ணோட்டம்

gender recognition

பால்மை அங்கீகாரம்

gender regime

பால்மை ஒழுங்குமுறை

gender responsiveness

பால்மைப் பதில்வினை

gender role

பால்மை வகிபாகம்

gender specialist

பால்மை விற்பன்னர்

gender statistics

பால்மைப் புள்ளிவிபரம்

gender stereotypes

பால்மைப் படிவார்ப்புகள்

gender stratification

பால்மை அடுக்கமைவு  

gender wage gap

பால்மைவாரிச் சம்பள  வேறுபாடு

gender, poverty and well-being

பால்மை, வறுமை, சுகசேமம்

gender-adjusted (gender-related) human development index

பால்மைசார் மனித விருத்திச் சுட்டு

gender-balanced composition

பால்மை ஒப்பளவுக் கோப்பு

gender-based division of labour

பால்மை அடிப்படையில் தொழிற் பகுப்பு

gender-based harassment

பால்மை அடிப்படையில் அலைக் கழிப்பு

gender-based human rights violations

பால்மை அடிப்படையில் மனித உரிமை மீறல்கள்

gender-based pay inequalities

பால்மை அடிப்படையில் சம்பள ஏற்றத் தாழ்வுகள்

gender-based violence

பால்மை அடிப்படையில் வன்முறை

gender-derived skills

பால்மைவழிவந்த திறன்கள்

gender-differentiated impacts

பால்மைவழி வேறுபடுத்திய தாக்கங்கள்

gender-dominated job

பால்மை ஆதிக்க வேலை

gendered language

பால்மைத்துவ மொழி

gender-equity-sensitive indicator

பால்மை ஒப்புரவு உளங்கொள் குறிகாட்டி

gender-just laws

பால்மை-நீதிச் சட்டங்கள்

gender-negative approach

பால்மை முரண் அணுகுமுறை

gender-neutral terminology

பால்மைப் பொதுச் சொல்லாட்சி

gender-positive approach

பால்மைச்சார்பு அணுகுமுறை

gender-related claim to refugee status

பால்மை தொடர்பான அகதிநிலைக் கோரிக்கை

gender-related persecution

பால்மை தொடர்பான கொடுமை

gender-responsive budgeting

பால்மைப் பதில்வினை வரவுசெலவீடு

gender-sensitive budgeting

பால்மை உளங்கொள் பாதீடு

gender-sensitive concerns

பால்மை உளங்கொள் கரிசனைகள்

gender-sensitive language

பால்மை உளங்கொள் மொழி

gender-sensitive planning

பால்மை உளங்கொள் திட்டமிடல்

gender-specific research

பால்மை குறித்த ஆராய்ச்சி

gender-specific statement

பால்மை சுட்டும் கூற்று

gender-transformative actions

பால்மை மேம்பாட்டு நடவடிக்கைகள் 

gene

பரம்பரையலகு; மரபணு

genecology

சூழல்சார் பரம்பரையியல்

genealogical tree

வமிசாவளி

General = Marshal

தளகர்த்தர்

general cover

பொதுக் காப்பீடு

general damages

பொது இழப்பீடு

general fertility rate

பொதுக் கருவள வீதம்

general health questionnaire

பொது சுகாதார வினாக்கொத்து

general insurance

பொதுக் காப்புறுதி

general knowledge quiz

பொது அறிவுப் போட்டி

general liability policy

பொது பொறுப்புக் காப்புறுதி ஒப்பந்தம்

general medical practitioner

பொது மருத்துவம் புரியுநர்

general provisions

பொது ஏற்பாடுகள்

generalized anxiety disorder

பொதுப்படையான பதைப்புக் கோளாறு

generalized risk

பொதுப்படையான ஆபத்து

Generalised Scheme of Preferences Plus (GSP +)

பொதுமைப்படுத்திய முன்தெரிவுத் திட்ட ஊக்குவிப்பு (பொ.மு.தி.+)

generally known fact

பலரும் அறிந்த விவரம்; பரவலாக அறியப்பட்ட விவரம்

generic drug

வர்க்க மருந்து

genetic control theory of aging

பரம்பரைவழி வயது நிர்ணயக் கோட்பாடு

genetic disease

பரம்பரை நோய்

genetic resources

பரம்பரை மூலவளங்கள்

Geneva Convention

ஜெனீவா  பொருத்தனை

Geneva Protocol

ஜெனீவா வரைமுறை

genital mutilation

பாலுறுப்புச் சிதைப்பு

genocide by attrition

பல்முனை இனப்படுகொலை

Genocide Watch

இனப்படுகொலை கண்காணிப்பகம்

gentlemen's agreement

கனவான்கள் உடன்படிக்கை

genuine concern

நேரிய கரிசனை; மெய்யான கரிசனை

geographical information system

புவியியல் தகவல் தொகுதி

geologic hazard

புவிக் கெடுதி

geriatric care

முதுமைப் பராமரிப்பு

geriatric centre

முதுமைப் பராமரிப்பு நிலையம்

geriatric medicine

முதுமை மருத்துவம்

geriatrics

முதுமை மருத்துவ இயல் 

German measles = rubella

குறுஞ்சின்னமுத்து

gestalt psychology

பொதுமை உளவியல்

gestalt therapy

பொதுமைச் சிகிச்சை

gestation period

கர்ப்ப காலப்பகுதி

gesture of goodwill, a

நல்லெண்ணச் சாடை

gifted education

இயற்கொடைக் கல்வி

gilded crown

பொன்முலாம் முடி

gilded youth

செல்வந்த இளையோர்

girl child

பெண் பிள்ளை

girlfriend, my

எனது பெண் கூட்டாளி

give evidence = testify

சாட்சியம் அளி; சான்று பகர்

given, a

ஏற்கப்பெற்ற விடயம்

glass ceiling    

உயர்பதவி மறுக்கும் கட்டமைப்பு

glass cliff

உச்சப்பதவி ஈடாட்டம்

global commons

உலக பொதுச் சொத்துகள் (ஆழிகள், விண்வெளி, அந்தாட்டிக்கு…)

global economy

உலகளாவிய பொருளாதாரம்

Global Hunger Index

உலகளாவிய பட்டினிச் சுட்டு

global perspective

உலகளாவிய கண்ணோட்டம்

global slavery index

உலகளாவிய அடிமைத்தளைச் சுட்டு

global warming = greenhouse effect

புவி வேகல்

globalization and its impact on the full enjoyment of human rights

உலகமயமாக்கமும், மனித உரிமைகளை முற்றிலும் துய்ப்பதில் அதன் தாக்கமும்

glossary of phrases

சொற்றொடர்க் கோவை

goal-directed selection

இலக்கு நோக்கிய தெரிவு

gobbledygook

சிக்குப்பிக்குமொழி

gold standard

பொன் நியமம்

golden crown

பொன்முடி

Golden Rule Theory = Treat others as you want to be treated

பொன்னெறி; நேயநெறி; தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் நெறி 

golf course

குழிப்பந்தாட்ட வெட்டை

gonzo journalism

முரட்டுமொழி ஊடகவியல்

Good Country Index

நன்னாட்டுச் சுட்டு

good faith = bona fides

நேரிய நோக்கம்; நன்னோக்கம்

good offices

செல்வாக்கு

good reputation

மானம்; நற்பெயர்; நன்மதிப்பு

goodness ethics

நல்லறம்

goods and chattels

பொருட்களும் தளபாடமும்

GOP = Grand Old Party = Republican Party

அமெரிக்க குடியரசுக் கட்சி

governance, good

நல்லாட்சி

governance, mode of

ஆட்சி முறைமை

government spending on services

சேவைகளுக்கான அரசாங்க செலவீடு

government-in-exile

சேயக அரசாங்கம்; புகலிட அரசாங்கம்

government-run auto insurance

அரசாங்கம் நிர்வகிக்கும் ஊர்திக் காப்புறுதி

Governor of the Eastern Province

கிழக்கு மாகாண ஆளுநர்

grab bar

பற்றுச்சட்டம்

grace period

தயவு காலப்பகுதி

graded exposure with desensitization

படிப்படியாக உட்படுத்தலும் உணர்வு தணித்தலும்

gradual loss of vigour and tone

சென்றுதேய்ந்திறுதல்

graduated driver's licensing

படிமுறைச் சாரதி உரிமம் வழங்கல்

grain merchant

கூல வணிகர்; தானிய வணிகர்

grammar school

அரிவரிப் பாடசாலை

grammatical ambiguity

இலக்கண மயக்கம் 

grand jury

மாநடுவர் குழாம்

grand strategy

மாபெருந் திட்டம் 

grandiose delusion = delusion of grandeur

மாட்சி மலைவு

grandiosity of the palace

மாளிகையின் மாட்சி 

grant permanent resident status

நிரந்தர வசிப்பு நிலை வழங்கு

granular report, a

நுண்மைகள் கொண்ட அறிக்கை

granularity of the report

அறிக்கையின் நுண்மைத்திரள்

graphic arts

வரைகலை

graphic video

பச்சைவிவரக் காணொளி

grasping and releasing

பற்றலும் தளர்த்தலும்

grass-root action

கீழ்மட்ட நடவடிக்கை

grass-root organization

கீழ்மட்ட அமைப்பு

gratuity, retirement

ஓய்வுப் பணிக்கொடை

grave and sudden provocation

பாரதூரமான திடீர் ஆத்திரமூட்டல்

gravitational waves

ஈர்ப்பலைகள்

gravy train

காலாட்டு வருமானம்

gray lobby

முதியோர்நலக் குழுமம்

grazing fire

கிடை வேட்டு

Greater Chennai Corporation

சென்னை மாநகராட்சி மன்றம்

green ban

பசுமைகாப்புத் தடை

green belt

பசுமை வலயம்  

green car

பசுமைக்கார்

green revolution

பசுமைப் புரட்சி

green room

ஓய்வு கூடம்

greenhouse

பளிங்ககம்

greenhouse effect

புவிவெப்ப விளைவு

greenhouse gas

புவிவெப்ப வாயு

greenhouse gas emission

புவிவெப்ப வாயு கால்வு; புவிவெப்ப வாயு வெளியேற்றம்

grey area

துலங்காத கூறு

grey literature (Documentary material which is not commercially published or publicly available, such as technical reports or internal business documents)

உள்ளுறை ஆவணங்கள் (விற்பனைக்கு வெளியிடப்படாத அல்லது வெளியே கிடையாத தொழினுட்ப அறிக்கைகள் அல்லது உள்ளக வணிக ஆவண வகைகள்)

grey zone tactics

மறைமுகமாகத் தலையிடும் சூழ்ச்சிகள்   

gridlock, citywide

மாநாகரளாவிய ஊர்திப் போக்கு வரத்து முடக்கம்

grief counselling

துயர்தணிப்பு மதியுரை

grief counsellor

துயர்தணிப்பு மதியுரையாளர்

grievances, bare your

உன் உள்ளக்குறைகளைத் தெரிவி

grievous bodily harm

கடும் உடலூறு

grooming, online

இணையமூலம் சிறாரை பாலுறவுக்கு ஈர்த்தல்

grooming, personal

உடல்வாகு பேணல்

grooming, pet

செல்லப்பிராணிகளின் உடல்வாகு பேணல்

gross domestic product

மொத்த உள்நாட்டு உற்பத்தி 

gross earnings

மொத்த உழைப்பு

gross income

மொத்த வருமானம்

gross indecency

பேரிழிசெயல்; மிக  இழிந்த செயல்;    வெளிப்படையான பாலுறவுச் செயல்                                                      

gross migration

மொத்த இடப்பெயர்வு

gross misconduct

மிக்க துர்நடத்தை

gross motor

மிக்க உடலசைவுகள்

gross national product

மொத்த தேசிய உற்பத்தி

gross negligence

மிக்க கவலையீனம்

gross profit

மொத்த இலாபம்

ground reality

களநிலைவரம்

ground-breaking novel

புதுவகை நாவல்

ground-level ozone

தரைமட்ட ஓசோன்

ground-level pollution

தரைமட்ட மாசு

ground-penetrating radar

தரை ஊடுருவு கதிர்மானி

grounds of security

பாதுகாப்புக் காரணங்கள்

groundwater protection

தரைநீர்ப் பாதுகாப்பு

groundwater reservoir

தரைநீர்த் தேக்கம்

groundwater runoff

கழிந்தோடு தரைநீர்

groundwater surface = water table

தரைநீர்ப் பீடம்

group dynamics

குழுமவீறு

Group of 20 = The G 20

20 நாட்டுக் குழுமம் = 20 நாடுகள் குழுமம்

group polarization

குழும முனைப்பு

groupthink

குழுமச் சிந்தனை

GSP + (Generalized Scheme of Preferences Plus)

பொ.மு.தி.+ (பொதுமைப்படுத்திய முன்தெரிவுத் திட்ட ஊக்குவிப்பு)

guarantee, treaty of

உத்தரவாத ஒப்பந்தம்

guaranteed replacement cost endorsement

உத்தரவாத செலவீட்டு மாட்டறைவு (மேலொப்பம்)

guerrilla warfare

கரந்தடிப் போரியல்

guest house

விருந்தகம்

guidance counselor

வழிகாட்டு மதியுரைஞர்

guidance notes on gender mainstreaming

பால்மை உள்வாங்கல் வழிகாட்டிக் குறிப்புகள்

guided reading levels

வழிகாட்டிய வாசிப்பு மட்டங்கள்

guided search

வழிகாட்டிய தேடல்

guidelines for the evaluation of the women's dimension in fund-assisted programmes

நிதியுதவி நிகழ்முறைகளில் பெண்களின் பரிமாணத்தைக் கணிப்பதற்கான வழிமுறைகள் 

guidelines on the protection of refugee women

அகதி மகளிர் பாதுகாப்பு வழிமுறைகள்

guild, editors

பதிப்பாளர் சங்கம்

guilty by association

உறவாடிய குற்றப்பாடு

guilty or not guilty?, Are you

நீர் குற்றவாளியா, அல்லவா?

guinea pigs, Don't use prisoners as

கைதிகளில் பரீட்சித்துப் பார்க்க வேண்டாம்;  கைதிகளைப் பரிசோதனைக்குப் பயன்படுத்த வேண்டாம் 

gum disease

முரசு நோய்

gust of wind

கடுங்காற்றுவீச்சு

gustatory hallucination

சுவைப் பிரமை

gusty winds

கடுங்காற்று

gut reaction = instinctive reaction

உணர்ச்சிப் பதில்வினை; நிதானமற்ற பதில்வினை

gut-wrenching experience

வயிற்றைப் புரட்டும் அனுபவம்; அருவருக்கும் அனுபவம்

gymnasium, national

தேசிய மெய்வன்கூடம்

gymnasts, a group of

மெய்வல்லுநர் குழுமம்

gymnastics team, a

மெய்வல்லுநர் அணி

habeas corpus, writ of

ஆட்கொணர்வுப் பேராணை

habilitation and rehabilitation services

வாழ்வளிப்பு-மறுவாழ்வளிப்பு பணிகள்

habitat diversity

வாழிட வகைமை

habitat protection

வாழிடப் பாதுகாப்பு

habitational fire

வாழ்விடத் தீ

habitual criminal

பழகிப்போன குற்றவாளி

haemodialysis = dialysis

குருதி சுத்திகரிப்பு

haemorrhage

குருதிமிகைப்போக்கு

haemorrhagic cerebrovascular accident

மூளைக்குருதிக்கலன் வெடிப்பு 

h(a)emorrhoid = piles

மூலநோய்

hail insurance

ஆலிக்காப்புறுதி

hairdresser

சிகை ஒப்பனையாளர்; 

hair loss

சிகை உதிர்வு; முடி உதிர்வு

hairdressing salon

சிகை ஒப்பனையகம்; 

half brother

ஒருவழிச் சகோதரன்

half sister

ஒருவழிச் சகோதரி

hallucinatory drugs

பிரமையூட்டும் போதைமருந்து வகைகள்

handheld device = mobile device

கைத்தொலைச் சாதனம்

hara kiri

வயிறுகிழிப்புத் தற்கொலை

harassing fire

அலைக்கழிப்பு வேட்டு

hard core

கடும்பிடிவாதிகள்; கடும்பிடிவாதக் குழுமம்

hard core member

கடும்பிடி உறுப்பினர்

hard evidence

திட்பமான சான்று

hard facts

திட்பமான விவரங்கள்

hard news

கடுஞ்செய்தி

hard power

வன்மை வலு (படைபலம், பலவந்தம் கொண்டு இணங்கவைக்கும் கொள்கை)

hard water

கடுநீர்; வன்னீர்

hardball politics

கடும்பிடி அரசியல்

hardball, play

கடும்பிடி பிடி

hardball, political

அரசியற் கடும்பிடி

hardliner

கடும்பிடியாளர்; கடும்போக்கர்

harmony, peace and

அமைதியும் ஒருங்கிசைவும்

hartal, countrywide

நாடளாவிய கடையடைப்பு (கதவடைப்பு)

hate group activity

காழ்ப்புக் குழுமச் செயற்பாடு

hate propaganda

காழ்ப்புப் பரப்புரை

hate vocabulary

காழ்ப்புச் சொல்லாட்சி

haunted face

சஞ்சலம் பீடித்த முகம்

haunted house

பேய்வீடு

hazard insurance

இடர்க் காப்புறுதி

hazardous substance

இடர்ப் பொருள்

hazardous waste treatment

இடர்க் கழிவு சுத்திகரிப்பு

hazardous wastes

இடர்க் கழிவுகள்

haze coefficient

மென்புகார்க் குணகம்

head of household

இல்லத் தலைவர்

head of state

அரசுத் தலைவர்

head office

தலைமை அலுவலகம்

headache

தலைவலி

headline, today's

இன்றைய செய்தித்தலைப்பு

headquarters, military

படைத் தலைமையகம்

health behavior

நலனோம்பு நடத்தை

health care

சுகாதார பராமரிப்பு

health expectancy

சராசரி நலவாழ்வுக் காலம்

health for all

அனைவருக்கும் நலவாழ்வு 

health grounds

உடல்நிலைக் காரணங்கள்

health implications of aging

மூப்பினால் நலவாழ்வில் விளையும் தாக்கங்கள்

health lifestyle

நலவாழ்வுப் பாங்கு

health promotion

சுகாதார மேம்பாடு

health psychology

சுகாதார உளவியல்

health-anxiety = hypochondria = hypochondriasis

உடனலம் குறித்த பதைப்பு 

healthy ageing

உடல்நலத்துடன் மூப்பெய்தல்

healthy balanced diet

பல்நிகர் நல்லுணவு

healthy lifestyle

நலவாழ்வுப் பாங்கு (பாணி)

healthy women counselling guide

மகளிர் நல்லுள மதியுரை வழிகாட்டி

hearing aid

செவித்துணை

hearing impaired

செவிப்புலன் குன்றிய

hearing loss

செவிப்புலன் இழப்பு

hearing test = auditory test

செவிப்புல பரிசோதனை

hearing, disciplinary

ஒழுக்காற்று விசாரணை

hearing, give a patient

பொறுமையுடன் செவிமடு

hearing, in (within) my

என் காதில் விழும்படி

hearsay evidence

சொல்லக்கேட்ட சாட்சியம்

heart attack

மாரடைப்பு

heart failure

இதய நொடிப்பு

heart palpitation

இதயப் படபடப்பு

heat island

வெப்ப வட்டம்

heat sink

வெப்பம் உறிஞ்சுபுலம்

heat stroke

வெப்ப அயர்ச்சி

heat wave

அனல் வெப்பம்

heathen

அஞ்ஞானி

heavy metals

கனரக உலோகங்கள்

hedge fund

பரிசை முதலீட்டு நிதியம்

hedgers and speculators

பரிசை முதலீட்டாளர்களும் ஊக முதலீட்டாளர்களும் 

hedonic calculus

இன்பவியல் நுண்கணிதம்

heeding the calls

அழைப்புகளைப் பொருட்படுத்தல்

hegemonic masculinity

ஆண்மை ஆதிக்கம் 

heir apparent

ஏற்புடைய வழியுரித்தாளி

heir presumptive

வாய்ப்புடைய வழியுரித்தாளி

help-seeking behaviour

உதவி நாடும் நடத்தை

herbal medicine

மூலிகை மருந்து

hereditary disease

பரம்பரை நோய்

hereditary right

பரம்பரை உரிமை

heretical beliefs

பரநெறி நம்பிக்கைகள்; புறநெறி நம்பிக்கைகள்

heretics, influence of

பரநெறியாளரின் செல்வாக்கு; புறநெறியாளரின் செல்வாக்கு 

heritability estimate

பரம்பரைப்பேறு மதிப்பீடு

Heritage Centre, Indian

இந்திய மரபுடைமை நிலையம்

Heritage Day

மரபுடைமை நாள்

heritage fund

மரபுடைமை நிதியம்

heritage language

தாய்மொழி

heritage, cultural

பண்பாட்டு மரபுடைமை

hermaphrodite

இருபாற்பிறவி

hermeneutics

பொருள்கோளியல்

hero of the novel

நாவலின் தலைமகன்

heroes, national

தேசிய வீரர்கள்

heroes, war

போர் மறவர்கள் 

heroic efforts

வீரதீர முயற்சிகள்

heroine of the novel

நாவலின் தலைமகள்

heterogeneous country

பல்லின நாடு

heterosexual = straight

எதிர்பாற்சேர்க்கையர்; எதிர்பாற்சேர்க்கை சார்ந்த

heterotrophic bacteria

பிறபோசணைப் பற்றீரியா

heuristic principle

பட்டறிவு நெறி

hidden agenda

மறைதிரைத் திட்டம்

hierarchy, political

அரசியல் அதிகாரப் படிநிலை

high blood pressure = hypertension

உயர் குருதி அழுத்தம்

High Commission

உயர் தூதாணையம்

High Commissioner

உயர் தூதாணையர்

high court

மேல் நீதிமன்று

high expressed emotion

மிகை உணர்வெழுச்சி வெளிப்பாடு

high frequency (3–30 megahertz)

மின்காந்த மிகைவீச்சு

high occupancy vehicle lane = HOV lane

பல்பயணிகள் ஊர்தித் தடம்

high profile case

பேர்போன வழக்கு

high rise

உயர் மாடிக் கட்டிடம்

high school = secondary school

இரண்டாம்நிலைப் பாடசாலை

hiigh seas = international waters

அனைத்துநாட்டுக் கடற்பரப்பு; அனைத்துநாட்டு நீர்நிலைகள்

high treason

அரசதுரோகம்

high-angle fire

மேற்சாய் வேட்டு

higher education

உயர் கல்வி

highlight hair

சிகைக்கு மென்னிறம் பூசு

high-risk pregnancy

பாதிப்பு மிகுந்த கருத்தரிப்பு

highway robbery

வழிப்பறிக் கொள்ளை; ஆறலைப்பு; அதர்கோள்

highway traffic act

வீதிப் போக்குவரத்துச் சட்டம்

hike, interest rate

வட்டி விகித அதிகரிப்பு

hikers, a group of

பேருலாவலர் குழுமம்

hip fracture

இடுப்பு முறிவு; இடுப்பொடிவு

hipster bar

பகட்டகம்

historic monument

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம்

historic present

காலவழுவமைதி

historicism

வரலாற்றுக் கற்பிதம்

historicity

வரலாற்று மெய்மை

historiography

வரலாற்றியல்

historical background

வரலாற்றுப் பின்புலம்

hit and run

மோதி விரைதல்

HIV = Human Immunodeficiency Virus

மனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி

HIV-AIDS and human rights: international guidelines

மனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி: தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணியும் மனித உரிமைகளும்: சர்வதேய வழிமுறைகள்

hoarding and black marketing

பதுக்கலும் கள்ள விற்பனையும்

hobby, swimming as a

பொழுதுபோக்கு நீச்சல்

Hobson's Choice

எடு அல்லது விடு

hold in common

பொதுவில் வைத்திரு

hold on remand

விளக்க மறியலில் வைத்திரு

hold to ransom

கப்பம் கேட்டு வைத்திரு

holding centre

தடுப்பு நிலையம்

holding company

பங்குகொள் கூட்டகம்

holistic approach

முழுமை அணுகுமுறை

holistic ecology = deep ecology

முழுமைச் சூழலியல்

holistic medicine

முழுமை மருத்துவம்

holocaust, face a

பாரிய இனப்படுகொலையை எதிர்நோக்கு

holograph will

சுயகையெழுத்து விருப்பாவணம்

handicrafts in Tamil Nadu

தமிழ்நாட்டில் இல்லக் கைவினைகள்

home and community

வீடும் சமூகமும்

home and community-based services

வீட்டுநிலை-சமூகநிலைச் சேவைகள்

home economics

இல்லப் பொருளியல்

home equity line of credit

வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி 

home equity mortgage

வீட்டுத் தேறுமதி அடைமானம்

home health aide

வீட்டு சுகாதாரத் துணைஞர்

home help

வீட்டு உதவியாளர்

home inspection

வீட்டுப் பரிசோதனை

home insurance

வீட்டுக் காப்புறுதி

home invader

வீடுபுகும் பாதகர்

home invasion

வீடுபுகும் பாதகம்

home showing

வீடு காட்டல்

home-based work; homework

இல்லநிலைப் பணி

home-based worker

இல்லநிலைப் பணியாளர்

homecare (domiciliary care) regulations

அகவரவுப் பராமரிப்பு ஒழுங்குவிதிகள்

homegrown artists

தாயக கலைஞர்கள்; உள்நாட்டுக் கலைஞர்கள்

homeland security

தாயக பாதுகாப்பு

homeless, the

வீடற்றோர்

homelessness, problem of

வீடின்மைப் பிரச்சனை 

homemaker, remain as a

மனையாளராக விளங்கு

homemaking tips

மனையாள்கை (மனையாண்மை) துப்புக்கள்

homeowners' association

வீட்டு உடைமையாளர் சங்கம்

home-schooling

வீட்டுப் போதனை

Homo sapiens

மானுடர்

homogeneous state

தனியின அரசு

honey trap

மோகப்பொறி

honour killing

மானக் கொலை

honour veterans

மறவரை மாண்புறுத்து

honourable mention

மாண்புக் குறிப்பீடு

horizontal democracy

கீழ்மேல் குடியாட்சி

horizontal inequalities

குழும ஏற்றத்தாழ்வுகள் (பால் / வயது / சமய / இன / மொழிவாரி ஏற்றத்தாழ்வுகள்)

horned dilemma

சங்கடம்; திண்டாட்டம்; இருதலைக் கொள்ளி; திரிசங்குசொர்க்கம்

horror flick

திகில் திரைப்படம்

hospice in the city, a

மாநகரத்தில் ஓர் அந்திம பராமரிப்பகம்

hostel for battered women = battered women's hostel

தாக்குண்ட மகளிர் மனை

hostile fire

பகைவர் வேட்டு; ஆகாவிடத் தீ

hostile takeover

வலிந்த கொள்வனவு; வலிந்து கொள்வனவு செய்தல்

hostile witness

பகைச் சாட்சி

hot news

சுடுசெய்தி

hot pursuit

(எல்லைகடந்து) துரத்திச்செல்கை

hot war

வெம்போர்

hotel, stay in a

விடுதியகத்தில் தங்கியிரு

hotspots, douse

தணல் மையங்களை அணை (அவி)

hotspots, pollution

மாசுக்களங்கள்

hotspots, world

உலக அமர்க்களங்கள் (சமர்க்களங்கள்)

Hottentot

பட்டிக்காட்டார்

house lights

அவைக்கள விளக்குகள்

household

வீட்டுவாசிகள்; இல்வாழ்வார்; வீட்டார் 

household hazardous waste depot

வீட்டு இடர்ப்பொருட் கழிவு மடுவம்

household name

அறியப்பட்டவர்

household survey questionnaire

வீட்டு ஆய்வு வினாக்கொத்து

household waste

வீட்டுக் கழிவு

householders, all the

வீட்டுக்காரர்கள் அனைவரும்

housewife, a sweet

இனிய இல்லாள்

housing market

வீட்டுச் சந்தை

HOV lane = high occupancy vehicle lane

பல்பயணிகள் ஊர்தித் தடம்

hoverboard riders

உருள்தட்டு ஊர்வோர்

HPV = Human Papillomavirus

பாலுண்ணிக் கழலை நச்சுயிரி

human behavior genetics

மனித நடத்தைப் பிறப்பியல் 

Human Immunodeficiency Virus = HIV

மனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி

human interest story

உளநெகிழ்வுக் கட்டுரை

Human Papillomavirus = HPV

பாலுண்ணிக் கழலை நச்சுயிரி

human remains

மனித உடல்; மனித உடலங்கள்

human reproduction

மனித இனவிருத்தி

human rights ("Everyone is entitled to all the rights and freedoms set forth in this Declaration, without distinction of any kind, such as race, colour, sex, language, religion, political or other opinion, national or social origin, property, birth or other status. Furthermore, no distinction shall be made on the basis of the political, jurisdictional or international status of the country or territory to which a person belongs, whether it be independent, trust, non-self-governing or under any other limitation of sovereignty"- The Universal Declaration of Human Rights, UN,1948, Article 2.)

மனித உரிமைகள் ("இனம், நிறம், பால், மொழி, சமயம், அரசியல் அபிப்பிராயம் அல்லது வேறு அபிப்பிராயம், தேசியத் தோற்றுவாய் அல்லது சமூகத்  தோற்றுவாய், உடைமை, பிறப்பு அல்லது வேறு தகுநிலை போன்ற பாகுபாடு எதுவுமின்றி அனைவரும் இப்பிரகடனத்தில் எடுத்துரைக்கப்பட்ட உரிமைகள் சுதந்திரங்கள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள்.  மேலும், ஒருவரது நாடு அல்லது ஆள்புலம் சுதந்திரமானதாகவோ, நம்பிக்கைப் பொறுப்பாள் புலமாகவோ, தன்னைத் தானே ஆளாததாகவோ, வேறு வகையில் இறைமை மட்டுப்பட்டதாகவோ விளங்கினாலும் கூட, அதன் அரசியல் தகுநிலையை அல்லது நியாயாதிக்க தகுநிலையை அல்லது சர்வதேய தகுநிலையை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு பாகுபாடு காட்டலாகாது" - உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், ஐ. நா., 1948, உறுப்புரை 2) 

human rights abuses and violations

மனித உரிமைத் துர்ப்பிரயோகங்களும் மீறல்களும்

Human rights are universal, indivisible, interdependent and interrelated

மனித உரிமைகள் உலக ளாவியவை, கூறுபடாதவை, ஒன்றை ஒன்று சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று தொடர்பு டையவை

Human Rights Council

மனித உரிமை மன்றம்

human rights defenders

மனித உரிமைவாதிகள்

Human rights in relation to women's health

மகளிர் நலவாழ்வு குறித்த மனித உரிமைகள்

human rights of persons with disabilities

மாற்றுத் திறனாளர்களின் மனித உரிமைகள்

human rights violations

மனித உரிமை மீறல்கள்

Human Rights Watch

மனித உரிமைகள் கண்காணிப்பகம்

human smuggling

ஆட்கடத்து

human test subject

பரிசோதனைக்கு உள்ளாக முன்வருபவர்

human trafficking

ஆட்கடத்து வியாபாரம்

humane societies

கருணைச் சமாசங்கள்

humanistic perspective

மானுடத்துவ கண்ணோட்டம்

humanitarian and compassionate grounds

மனிதாபிமான, கருணை அடிப்படைகள்

humanities and social sciences

மனிதபண்பியல், சமூக அறிவியல் துறைகள்

humanity and compassion

மனிதாபிமானமும் கருணையும்

humanity, crimes against

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்

human-potential movement

மனித இயல்திறச் சிகிச்சை இயக்கம்

humic acid

உக்கல் அமிலம்

humidity, atmospheric

வளிமண்டல ஈரப்பதன்

humiliate yourselves, Don't

உங்களை நீங்களே அவமானப் படுத்தாதீர்கள்

humiliation, suffer

அவமானப்படு; அவமானத்துக்கு உள்ளாகு

humour, sense of

நகைச்சுவை உணர்வு

hundred thousand

நூறாயிரம்

hunting and gathering

வேட்டையாடலும் காய்கனி சேர்த்தலும்

hush money

வாயடக்குப் பணம்

hybrid courts

கலப்பு நீதிமன்றுகள் (உள்நாட்டு - வெளிநாட்டு கலப்பு நீதிமன்றுகள்)

hybrid offences

கலப்புக் குற்றங்கள் (குறுங்குற்றப்பாடும் கடுங்குற்றப்பாடும்)

hydrologic cycle

நீர்க் காலவட்டம்

hypertensive cardiovascular disease

உயர்குருதியமுக்க இதயக்கலன் நோய்

hypnagogic hallucination

அரைத்தூக்கப் பிரமை

hypnopompic hallucination

விழிப்புக்கு முந்திய பிரமை

hypocrisy of politicians

அரசியல்வதிகளின் படிற்றொழுக்கம்; அரசியல்வதிகளின் வஞ்சகம்

hypothetical imperative

கருதுகோளுக்கு  உட்பட்ட கடப்பாடு 

hypothetical proposition

கருதுகோள் எடுப்புரை

hypothetico-deductive method

கருதுகோள்-உய்த்தறிவு முறை

hysterical crying

மிகையுணர்ச்சி அழுகை

hysteron proteron

தலைதாள் மாற்றணி (எ. கா: வென்றேன், கண்டேன்,  வந்தேன்)

No comments:

Post a Comment