ENGLISH-TAMIL PHRASES
(COMPACT-CYNICAL)
compact disc player; CD player | இறுவட்டுக் கருவி |
company it keeps, A word is known by the | சொல்லின் பொருள் அதன் சூழ்நிலையைப் பொறுத்தது |
company with the party, part | கட்சியிலிருந்து பிரிந்துசெல் |
company, a | நிறுமம் |
company, good | நல்ல கூட்டு |
compare and contrast | ஒப்பிட்டு வேறுபடுத்து |
compartment of terrain | தரைக்கூறு |
compassionate care | கருணைகூர் பராமரிப்பு |
compelling evidence | வலிந்து ஈர்க்கும் சான்று |
compelling translation | வலிந்து ஈர்க்கும் மொழிபெயர்ப்பு |
compendium of standards and norms | நியம, வழப்பத் திரட்டு |
compensatory damages | நட்ட இழப்பீடு |
competency-based instruction | தகுதியடிப்படைப் போதனை |
competitive prices | ஈடுகொடுக்கும் விலைகள் |
complaint mechanism under the International Covenant on Civil and Political Rights | குடியியல்-அரசியல் உரிமைகள் உடன்பாட்டுக்கு அமைந்த முறைப்பாட்டுப் பொறிமுறை |
complementary medicine | குறைநிரப்பு மருத்துவம் |
complementary therapy | குறைநிரப்பு சிகிச்சை |
complete fertilizer | முற்றுரம் |
complex problem | சிக்கலான பிரச்சனை |
complex sentence | கலப்பு வசனம் |
complex, building | கட்டிடத் தொகுதி |
complex, inferiority | தாழ்வுளச் சிக்கல் |
complex, superiority | உயர்வுளச் சிக்கல் |
complexities, political | அரசியற் சரடுகள் |
complexity, simplicity and | எளிமையும் சரடும் |
compliance with the law, in | சட்டத்துக்கு அமைந்து |
complicated life | சிக்கலான வாழ்வு |
complications after the surgery, suffer | அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பிற நோயூறுகளுக்கு ஊள்ளாகு |
complicity in the crime | குற்றத்துக்கு உடந்தை |
compliment, pay a | மெச்சு |
compliments of the minister, with the | அமைச்சரின் வாழ்த்துடன் கூடிய (அன்பளிப்பு) |
compound interest | கூட்டு வட்டி |
compound statement | கூட்டுக் கூற்று |
compound word | கூட்டுச் சொல் |
comprehensive and integral international convention to promote and protect the rights and dignity of persons with disabilities | மாற்றுத்திறனாளரின் உரிமைகளையும் கண்ணியத்தையும் மேம்படுத்திப் பாதுகாப்பது பற்றிய முற்றுமுழுதான அனைத்துநாட்டுப் பொருத்தனை |
comprehensive automobile coverage | முழு ஊர்திக் காப்பீடு |
comprehensive personal liability | தனியாளுக்குரிய முழுப் பொறுப்பு |
compression of morbidity thesis | நோய்மை குறுக்கல் கோட்பாடு |
compromise principles | நெறிகளை விட்டுக்கொடு |
compromise with the trade union | தொழிற்சங்கத்துடன் ஒத்துமேவு |
compromising situation | இக்கட்டு; தர்மசங்கடம் |
compulsion and obsession | உந்தலும் ஒன்றலும் |
compulsion to bribe, under | இலஞ்சம் கொடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு |
compulsory insurance | கட்டாயக் காப்புறுதி |
compulsory licensing of medicines | கட்டாய மருந்துரிமம் வழங்கல் |
computational creativity; artificial creativity | கணியப் படைப்பாற்றல் |
computer generated art | கணியமூலக் கலை |
computer generated imagery | கணியமூல உருவகிப்பு |
computer graphics | கணிய வரைபியல் |
computer program | கணிய நிகழ்நிரல் |
computer programming | கணிய நிகழ்நிரலாக்கம் |
computer-assisted instruction | கணிய உதவிப் போதனை |
computer-based training | கணியவழிப் பயிற்சி |
Computerized Axial Tomography; CAT scan; CT scan | கணிய கதிர்ப்பட அடுக்கு பகுப்பாய்வு |
con artist, | ஏமாற்றிப் பிழைப்பவர் |
con game = con trick | ஏமாற்று மோசடி |
concentration camp | வதை முகாம் |
concentration of acid in water | நீரில் அமிலச் செறிவு |
concentration on work | வேலையில் புலன்செலுத்தல் |
concept paper | கருதுபொருள் பத்திரம் |
concept of democracy | குடியாட்சிக் கருதுபொருள் |
conceptual analysis | கருதுபொருள் பகுப்பாய்வு |
conceptual incoherence | கருதுபொருள் ஒவ்வாமை; ஒவ்வாத கருதுபொருள் |
concert with the Diaspora, in | புலம்பெயர்ந்தோருடன் கூடி |
concert, musical | இசைநிகழ்ச்சி |
concerted effort, a | கூட்டு முயற்சி |
concessions, make | விட்டுக்கொடு |
concessions, tax | வரிச் சலுகைகள் (விட்டுக்கொடுப்புகள்) |
conciliation board | இணக்க சபை |
conclusion, in | முடிவாக |
concomitant cause | உடனியல் ஏது |
concrete thinking | திண்ணிய சிந்தனை |
concurrent disorders | ஒருங்கியல் கோளாறுகள் |
concurrent list | ஒருங்கியல் நிரல் |
concurrent sentences | ஒருங்கியல் தண்டனைத் தீர்ப்புகள் |
condescend to meet them | அவர்களைச் சந்திக்கத் தயைகூரு (திருவுளம்கொள்) |
condescending attitude | தயைகூரும் உளப்பான்மை |
condescension | தயைகூர்வு; திருவுளம்கொள்கை |
conditional discharge | நிபந்தனையுடன்கூடிய விடுவிப்பு |
conditional sentence | நிபந்தனையுடன்கூடிய தண்டனைத் தீர்ப்பு (எ-கா: வீட்டு மறியலுடன் கூடிய தண்டனைத் தீர்ப்பு) |
conditional statement | நிலைசார் கூற்று (எ-கா: மழை பெய்தால், அவர்கள் குடை பிடிப்பார்கள்) |
conditioned response | நெறிநிலைப் பதில்வினை |
conditioning of radioactive wastes | கதிரியக்க கழிவுகளை நெகிழ்த்தல் |
conditions, terms and | நியதிகளும் நிபந்தனைகளும் |
conductor, music | இசை நிகழ்ச்சிநெறியாளர் |
cone of fire | வேட்டுக் கூம்பு |
confer a degree | பட்டமளி |
confer authority | அதிகாரமளி |
confer with experts | நிபுணர்களுடன் கலந்துரையாடு |
conference call | கூட்டுத் தொலைபேசி உரையாடல் |
confess to a crime | குற்றத்தை ஒப்புக்கொள் |
confess to a priest | குருவிடம் ஒப்புக்கொள் |
confession of a crime | குற்றத்தை ஒப்புக்கொள்கை |
confidence game = confidence trick | நம்பிக்கை மோசடி |
confidence letter | நம்பிக்கையுறுதிக் கடிதம் |
confidentiality of application | விண்ணப்பத்தின் அந்தரங்கம் |
confined aquifer | அடைநீர்ப் படுகை |
confined water well | அடைநீர்க் கிணறு |
confirmation of acceptance | ஏற்புறுதிக் கூற்று |
confirmation of co-operation and representation | ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று |
conflate ideas and facts, Don’t | எண்ணங்களையும் உண்மைகளையும் ஒன்றுகுழைக்க வேண்டாம் |
conflict management | முரண்பாடு கையாளல் |
conflict of interest(s) | அக்கறை முரண்பாடு |
conflict perspective | முரண்படு கண்ணோட்டம் |
conflict prevention | பிணக்குத் தடுப்பு |
conflict resolution; dispute resolution | பிணக்குத் தீர்வு |
conflict transformation | முரண்பாடு உருமாற்றம் |
congenital disease | பிறவி நோய் |
Congress, U. S. | ஐக்கிய அமெரிக்க பேரவை |
Congressman; Congresswoman | பேரவையாளர் |
conjugal family | தனிக் குடும்பம் (பெற்றோர், பிள்ளைகள், பாட்டன்/பாட்டி) |
conjugal partner | மண உறவுத் துணைவர் |
conjugal relationship | மண உறவு |
conjugal rights | மண உறவு உரிமைகள் |
conjugal visit | (சிறையில்) மண உறவுச் சந்திப்பு |
conman | காசுமோசடிக்காரர்; பண மோசடிக்காரர் |
connectivity, air | வான்பயண இணைப்பு |
connectivity to the internet, high-speed | இணையத்துடன் அதிவேக இணைப்புவலு |
consanguine family; extended family | கூட்டுக் குடும்பம் |
conscience, prisoners of | கொள்கைநெறிக் கைதிகள் |
conscientious objection to military service | உளச்சாட்சிக்கமைந்து படைச்சேவைக்கு மறுப்புத்தெரிவிப்பு |
conscientious objector | உளச்சாட்சிக்கமைந்து மறுப்புத்தெரிவிப்பவர் |
consciousness, guilty | குற்ற உணர்வு |
consecutive interpreting | உடனடுத்து உரைபெயர்த்தல் |
consecutive sentences | உடனடுத்த தண்டனைத் தீர்ப்புகள் |
consensual sex | இசைவுப் புணர்ச்சி |
consensual validation | இசைவு வலிதாக்கம் |
consensus | கருத்திசைவு; கருத்தொருமை |
consent bail | இசைவுப் பிணை; இணக்கப் பிணை |
consent bail hearing | இசைவுப் பிணை விசாரணை; பிணை இணக்க விசாரணை |
consent of the governed | ஆளப்படுவோரின் இசைவு |
consent to bail | பிணைக்கு இணங்கு; பிணை இணக்கம் |
consenting adult | (உடலுறவுக்கு) இசையும் முதிர்வயதினர் |
consequential loss | பின்விளை இழப்பு |
conservation biologist | இயற்கைபேண் உயிரியலர் |
conservation biology | இயற்கைபேண் உயிரியல் |
Conservation International | சர்வதேய இயற்கைபேண் அமைப்பு |
conservation of water | நீர் பேணல் |
Conservative Party | பழமைபேண் கட்சி |
consideration, passing of | வெகுமதி அளித்தல் |
consist of five members, the committee will | குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் |
consistency paradox | நிலைபேறுசார் முரண்புதிர்; ஆளுமை முரண்புதிர் |
consistency principle | நிலைபேற்று நெறி |
consistent approach | நிலைபேறான அணுகுமுறை |
consolidated fund | திரட்டு நிதியம் |
consolidated glossary | சொற்கோவைத் திரட்டு |
consolidated grounds of protection | பாதுகாப்பு வழங்குவதற்கு ஒருங்குதிரட்டிய ஆதாரங்கள் |
consortium, aid | உதவிக் கூட்டமைப்பு |
consortium, foreign aid | வெளிநாட்டு உதவிக் கூட்டமைப்பு |
Consortium of Investigative Journalists, International | சர்வதேய புலனாய்வு ஊடகர் கூட்டமைப்பு |
constable, police | காவல்துறை அணியாளர் |
constitutional assembly | அரசியல்யாப்பு மன்றம் |
constitutional autochthony | சுதேச அரசியல்யாப்பு |
constitutional despotism | அரசியல்யாப்பு வாரியான கடுங்கோன்மை |
constitutional guarantees | அரசியல்யாப்பு வாரியான உத்தரவாதங்கள் |
constitutional law | அரசியல்யாப்புச் சட்டம் |
constitutional supremacy | அரசியல்யாப்பின் மீயாண்மை |
constricted affect | நெரிவுணர்நிலை |
construct, mental | உள்ளக் கற்பிதம் |
constructed response | ஆக்கப் பதில்வினை |
construction lien | கட்டுமானப் பாத்தியம் |
construction loan | கட்டுமானக் கடன் |
constructional apraxia | கட்டுக்கோப்பு ஒப்புவிக்கும் சிரமம் |
Consul, Honorary | கெளரவ தூதகர் |
Consular Agent | தூதக முகவர் |
Consular Division | தூதகப் பகுதி |
Consulate General | உயர் தூதகம் |
consultant to the ministry, a | அமைச்சுக்கு ஓர் உசாவலர் |
Consultation Task Force on Reconciliation Mechanisms | மீளிணக்க பொறிமுறைகள் குறித்து கலந்துசாவும் பணிக்குழு |
consumer bank | நுகர்வோர் வங்கி |
consumer credit | நுகர்வுக் கடன் |
consumer goods | நுகர்வுப் பொருட்கள் |
consumer price index | நுகர்வு விலைச் சுட்டு |
consumer surplus | நுகர்வு உறுமிகை |
consumerism, the impact of | நுகர்பொருள்-வேட்கையின் தாக்கம் |
consumption residues | நுகர்வெச்சங்கள் |
contact comfort | உடல்-தொடர்பு வசதி |
contact hypothesis | தொடர்பீட்டுக் கருதுகோள் |
contact pesticide | தொடுபடு பீடைகொல்லி |
contact tracing | தொடர்பாளரை கண்டறிதல் |
container ship | கொள்கலன் கப்பல் |
containing action | கட்டுப்படுத்தும் நடவடிக்கை |
containing force | கட்டுப்படுத்தும் படை |
contaminated water | மாசுபட்ட நீர் |
contempt of court | நீதிமன்ற அவமதிப்பு |
contested bail hearing | பிணை எதிர்ப்பு விசாரணை |
context of discovery | கண்டறியும் சூழ்நிலை |
context of justification | நியாயப்படுத்தும் சூழ்நிலை |
contextual definition of a word | சொல்லின் சூழ்நிலைசார்ந்த வரையறை |
contextual distinctiveness | சூழ்நிலைத் தனித்துவம் |
contextual interference | சந்தர்ப்ப தலையீடு |
continence aids = incontinence aids | கழிப்புதவிப் பொருள்வகைகள் |
contingency reinforcement | நெறிநிற்கத்தூண்டி வலியுறுத்தும் நடவடிக்கை |
contingent liability | சார்ந்தமையும் பொறுப்பு |
contingent truth | சார்ந்தமையும் உண்மை (எ-கா: மனிதர்கள் வேறு உயிரினங்களிலிருந்து உருவாகினர்) |
contingent zone | படைக்கூறு வலயம் |
continued detention | தொடர்ந்து தடுத்துவைப்பு |
continuing care | தொடர் பராமரிப்பு |
continuing care facility | தொடர் பராமரிப்பு நிலையம் |
continuing care retirement community | தொடர் பராமரிப்பு ஓய்வுச் சமூகம் |
continuity theory | தொடர்வுக் கோட்பாடு |
contour interval; vertical interval | தரையிடை வெளி; செங்குத்து இடைவெளி |
contract of sale | விற்பனை ஒப்பந்தம் |
contractor's liability insurance | ஒப்பந்தி பொறுப்புக் காப்புறுதி |
contractual liability | ஒப்பந்தப் பொறுப்பு |
contradictory statement | முரண்படு கூற்று |
contrapositive statement | நேர்மாறு கூற்று |
contrary statement | எதிர்மாறு கூற்று |
contrast, compare and | ஒப்பிட்டு வேறுபடுத்துக |
contravene, breach, infringe | முரண்படு, மீறு, வரம்புமீறு |
contributory negligence | துணைபோகும் கவலையீனம் |
contributory pension system | உதவுதொகை ஓய்வூதிய முறைமை |
control over land | காணி ஆள்கை |
control over resources | வளங்கள் ஆள்கை |
control procedure | கட்டுப்பாட்டு நடைமுறை |
control room | கட்டுப்பாட்டுக் கூடம் |
controlled process | கட்டுப்படுத்திய படிமுறை |
controversial book | சர்ச்சைக்குரிய நூல் |
controversy, cause | சர்ச்சை உண்டாக்கு |
convention against torture | சித்திரவதைக்கு எதிரான பொருத்தனை |
Convention on the Prevention and Punishment of the Crime of Genocide | இனப் படுகொலைக் குற்றத் தடுப்பு–தண்டனைப் பொருத்தனை |
Convention on the Elimination of All Forms of Discrimination against Women | பெண்களுக்கு எதிரான பாரபட்சங்கள் முழுவதையும் ஒழிப்பது தொடர்பான பொருத்தனை |
Convention on the Rights of the Child | சிறார் உரிமைப் பொருத்தனை |
Convention, Party | கட்சிச் சமவாயம்; கட்சி மாநாடு |
convention refugee | பொருத்தனை அகதி |
conventions, social | சமூக வழக்காறுகள் |
conventional mortgage | பாரம்பரிய அடைமானம் |
conventional warfare | பாரம்பரிய போரியல் (போராட்டம்) |
convergence theory | குவிவுக் கோட்பாடு |
converging fire | குவி வேட்டு; ஒருமுக வேட்டு |
conversational analysis | உரையாடற் பகுப்பாய்வு |
converse statement | மறுதலைக் கூற்று |
| எ-கா: அவர்கள் குடை பிடித்தால், மழை பெய்வதாகும் |
conversion symptom | உருமாற்று அறிகுறி |
convertible rate; adjustable rate | நெகிழ் வீதம்; இசைபடு வீதம் |
conveyance of title | உரித்துமாற்றம் |
conveyance of water | நீர் கொண்டுசெல்லல் |
conviction, appeal against | குற்றத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய் |
conviction, moral | ஒழுக்க உளவுறுதி |
convoy model of social relations | புடைசூழ் சமூக உறவு |
Cool War | தண் போர்; சீன-அமெரிக்கப் போட்டி |
cooling off period | தணிவு காலப்பகுதி |
cooperative (co-op) building | கூட்டுவதிவகம் |
co-operative bank | கூட்டுறவு வங்கி |
cooperative learning | கூட்டுக் கற்கை |
coordinated, integrated, sequenced | இயைபுபடுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, வரிசைப்படுத்தப்பட்ட |
COPE; Committee on Public Enterprises | அரசாங்க தொழிலகக் குழு |
cope with stress | உளைச்சலுக்கு ஈடுகொடு |
coping mechanism | ஈடுகொடுக்கும் பொறிமுறை |
copy, certified | சான்றுப் பிரதி; அத்தாட்சிப் பிரதி |
copy, true | மெய்ப் பிரதி |
copycat violence | பாவனை வன்முறை |
coral tree | முள்முருக்கு |
core committee | கருக்குழு; மையக் குழு |
core group | கருக்குழுமம்; மையக் குழுமம் |
corn oil | சோளம் எண்ணெய் |
coronary artery | இதய நாடி |
coronary bypass (surgery) | இதயநாடி மாற்றுப்பொருத்து |
coronary thrombosis | இதயநாடிக் குருதியுறைவு |
corporal punishment | உடல் தண்டனை; சரீர தண்டனை |
corporate culture | கூட்டுத்தாபன ஒழுகுமுறை |
corporate tax | கூட்டுத்தாபன வரி |
Corporation, Greater Chennai | அகண்ட சென்னை மாநகராட்சி |
corporation, multinational | பல்தேசிய கூட்டுத்தாபனம் |
corporeal needs | உடலுறு தேவைகள் |
corporeal plenum | சடப்பொருள் முழுமை |
corps, diplomatic | சூழ்வியலர் குழாம் |
corps, medical | மருத்துவப் படையணி |
correcting entry | திருத்தப் பதிவு |
correctional facility | சிறை |
corrective surgery | திருத்தல் அறுவைச்சிகிச்சை |
correlation coefficient | இடைத்தொடர்புக் குணகம் |
correlational method | இடைத்தொடர்பு முறை |
correspondence theory of truth | மெய் நேரொப்புக் கோட்பாடு |
corroborating evidence | ஒப்புறுதிப்படுத்தும் சான்று (சாட்சியம்) |
corruption perception index | ஊழல் புலப்பாட்டுச் சுட்டி |
cosmetic procedure | உடலொப்பனைச் சிகிச்சை |
cosmic rays | அண்டவெளிக் கதிர்கள் |
cosmopolitan, a | பன்பண்பாட்டவர் |
cosmopolitan city | பன்பண்பாட்டு மாநகரம் |
cosmopolitan outlook | பன்பண்பாட்டுக் கண்ணோட்டம் |
cost of funds index | நிதியச் செலவுச் சுட்டி |
cost-benefit analysis | செலவு-நயப் பகுப்பு |
cost-of-living adjustment | வாழ்க்கைச்செலவுப் படி இசைவிப்பு |
cottonseed oil | பருத்திவிதை எண்ணெய் |
coulrophobia | கோமாளிகள் மீதான வெருட்சி |
counsel on record | பதிவிலுள்ள சட்டவுரைஞர் |
Counsellor of Embassy | தூதரக மேலதிகாரி |
countenance | முகச்சாயல்; முகச்சாடை; முகக்குறிப்பு |
counter-attack | எதிர்த் தாக்குதல் |
counter-battery fire | எதிர்த் தொடர்ப் பீரங்கி வேட்டு |
counter-conditioning | எதிர்நெறிநிலைப்படுத்தல் |
counterculture | எதிர்ப்பண்பாடு |
counter-espionage | எதிர் ஒற்றாடல் |
counter-example | எதிர் எடுத்துக்காட்டு |
counterfactual, a | ஆல்-நிலை = நேர்ந்தது நேர்ந்திராவிட்டால் விளைந்திருக்கக்கூடிய நிலை |
counterfactual conjecture | உண்மைக்கு மாறான ஊகம் |
counterfactual question, a | ஆல்-வினா (எ-கா: அனுமன் சீதையைக் கண்டிராவிட்டால், என்ன விளைந்திருக்கும்?) |
counter-insurgency operations | கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் |
counter-intelligence | எதிர் ஒற்றாடல் |
counter-offensive | எதிர் வன்தாக்குதல் |
counterpart | மாற்றிணையாளர்; மாற்றிணை |
counterphobia | வெருட்சிநாட்டம்; அஞ்சுவதை நாடுதல் |
counter-preparation | எதிர் ஆயத்தம் |
counterproductive, Any military action will be | படைபல நடவடிக்கை எதுவும் எதிர்விளைவை உண்டாக்கும் |
counter-reconnaissance | எதிர் வேவு |
countertransference | நோயாளர்மீது திசைதிருப்பும் உணர்வெழுச்சி |
country desk | நாட்டு அலுவலகம் |
country of origin, our | நாங்கள் பிறந்த நாடு; எங்கள் தாய்நாடு |
County of Wellington | வெலிங்டன் புலம் |
coup de grace | இறுதி அடி; சாகடிப்பு |
coup d'état | ஆட்சிக்கவிழ்ப்பு |
court, food | உணவுக் கோட்டம் |
court martial; military court | படை நீதிமன்று |
Court of Arbitration for Sport | விளையாட்டு நடுத்தீர்ப்பு மன்று |
Court of Permanent Arbitration | நிரந்தர நடுத்தீர்ப்பு மன்று |
covariation principle | கூட்டு மாறுபாட்டு நெறி |
Covenant, International | அனைத்துநாட்டு உடன்பாடு |
coverage, insurance | காப்புறுதிக் காப்பீடு |
coverage, media | ஊடக பிரசித்தம் |
covering force | காக்கும் படை |
covert operations | மறைமுக நடவடிக்கைகள் |
cowboy boots | ஆயர் சப்பாத்து |
coworking space | கூட்டுப் பணியகம் |
craniosacral therapy | தலை-கையாள்கைச் சிகிச்சை |
crazy, Don’t drive them | அவர்களுக்கு சினமூட்ட வேண்டாம் |
crazies on the Internet | இணையப் பித்துகள் |
crazy, go | பித்துப்பிடித்தவராகு |
crazy look, a | பித்துப்பிடித்த தோற்றம் |
crazy slow, move | மிகவும் சுணக்கமாக நகரு |
credentials, academic | உயர்கல்வித் தகைமைகள் |
credentials; letter of credence | தூதுவ நியமன மடல் |
credibility issues | நம்பகப் பிரச்சனைகள் |
credible evidence | நம்பக சான்று; நம்பக சாட்சியம் |
credible investigation | நம்பக விசாரணை |
credible justice process | நம்பக நீதி முறைமை |
credit bureau | நாணயநிலைப் பணியகம் |
credit card | கடன் அட்டை |
credit check | நாணயநிலை செவ்வைபார்ப்பு |
credit course | திறமைச்சித்திக் கற்கைநெறி |
credit history | நாணயநிலை வரலாறு |
credit note | மீள்பெறுமதிக் குறிப்பு |
credit rating | நாணயநிலை மதிப்பீடு |
credit report | நாணயநிலை அறிக்கை |
credit repository | நாணயநிலைக் களஞ்சியம் |
credit terms | கடன்வரவு நியதிகள் |
credit union | கூட்டுறவு நிதியகம் |
creditor | கடன்தருநர்; கடன்தருதரப்பு |
creed, political | அரசியல் நெறி |
creeping grass | கொடியரக்குப்புல் |
crematorium | தகனக்கூடம் |
crew, passengers and | பயணிகளும் பணியணியும் |
cri du chat | நிறவுரு 5 குன்றிய உளப் பின்னடைவு |
crib death; sudden infant death | தொட்டிற் சிசு இறப்பு; சிசு திடீர் இறப்பு |
crimes against humanity | மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் |
criminal harassment; stalking | குற்றத் தொந்தரவு |
criminal investigation bureau | குற்றப் புலனாய்வுப் பணியகம் |
criminal offence | குற்றத் தவறு |
criminally not responsible | குற்றப் பொறுப்பற்ற |
crisis aversion and response education | நெருக்கடி தவிர்ப்பு–பதில்வினைக் கல்வி |
crisis aversion and response priorities | நெருக்கடி தவிர்ப்பு–பதில்வினை முதன்மைகள் |
crisis counselling | நெருக்கடிகால மதியுரை |
crisis de-escalation | நெருக்கடி தணிப்பு |
crisis intervention | நெருக்கடிகால இடையீடு |
crisis management | நெருக்கடி கையாள்கை |
crisis process | நெருக்கடிப் படிமுறை |
crisis response | நெருக்கடிக்கான பதில்வினை |
crisis theory | நெருக்கடிக் கோட்பாடு |
criteria approach | பிரமாண அணுகுமுறை |
criterion of adequacy | நிறைவுடைமைப் பிரமாணம் |
criterion of relevance | இயைபுடைமைப் பிரமாணம் |
criterion validity | பிரமாண வலிதுடைமை |
criterion-referenced instruction | பிரமாணம் சார்ந்த போதனை |
critic, a literary | இலக்கியத் திறனாய்வாளர் |
critical acclaim | திறனாய்வுப் புகழாரம் |
critical care; intensive care | தீவிர பராமரிப்பு |
critical care nursing | தீவிர பராமரிப்புத் தாதிமை |
critical comment | குறைகாணும் கருத்துரை |
critical condition | பாரதூரமான நிலைமை |
critical edition | திறனாய்வுப் பதிப்பு |
critical factor; crucial factor | தீர்க்கமான காரணி |
critical illness insurance | தீவிர நோய்க் காப்புறுதி |
critical importance | தீர்க்கமான முக்கியத்துவம் |
critical moment | தீர்க்கமான தருணம் |
critical race theory | இனத்திறனாய்வுக் கோட்பாடு; இனம் என்பது ஒரு செயற்கையான கட்டுக்கோப்பு எனக்கொண்டு அதைத் திறனாய்வுக்கு உட்படுத்தும் கோட்பாடு |
critical sociology | திறனாய்வுச் சமூகவியல் |
critical support | நெருக்கடிகால ஆதரவு |
critical thinking skills | திறனாய்வுச் சிந்தனைத் திறன்கள் |
criticism of human rights violations | மனித உரிமை மீறல்கள் குறித்த கண்டனம் |
criticism, literary | இலக்கியத் திறனாய்வு |
criticize poems | கவிதைகளை திறனாய் |
criticize privatization | தனியார்மயமாக்கத்தை குறைகூறு (கண்டி) |
critics of capitalism | முதலாளித்துவத்தை குறை கூறுவோர் (கண்டிப்போர்) |
critics, literary | இலக்கியத் திறனாய்வாளர்கள் |
crony capitalism | அரசியற்கூட்டு முதலாளித்துவம் |
crop rotation | பயிர்ச் சுழற்சி |
cross currency swap; currency swap | நாணயப் பரிமாற்றம் |
cross examination | குறுக்கு விசாரணை |
crossbow | சிலுவை-வில் |
cross-linkage theory of aging | மூப்பு பிணைவுக் கோட்பாடு |
cross-sectional design | குறுக்குவெட்டு வடிவமைப்பு |
cross-sectional research | குறுக்குவெட்டு ஆராய்ச்சி |
cross-training | மேலதிக பயிற்சி |
crowd science | திரள் அறிவியல் |
crowded nest | தாய்மனை நெருக்கடி |
crowdfund | திரள்நிதியிடு |
crowdfunding | திரள்நிதியீடு |
crown counsel | முடிசார் சட்டவுரைஞர் |
crown prosecution | அரச வழக்குத்தொடர்வு |
crowned snake | முடிநாகம் |
crucial factor | தீர்க்கமான காரணி |
crude oil | கச்சா எண்ணெய் |
cruel punishment | கொடூர தண்டனை |
cruel treatment | கொடூரமாக நடத்துதல் |
cruise missile | ஏவுதட உந்துகணை |
cruise ship | சுற்றுலாக் கப்பல் |
crunch talks | தீர்க்கமான பேச்சுவார்த்தை |
crunch time | தீர்க்கமான தருணம் |
crypto-communist | மறைமுக பொதுவுடைமைவாதி |
cryptocurrency; altcoin; bitcoin | மின்மநாணயம் |
cryptographic security | குழூஉக்குறியீட்டுப் பாதுகாப்பு |
cryptography | குழூஉக்குறியியல்; குழூஉக்குறியீடு; சங்கேத மொழியீடு |
crystallized intelligence | துலக்க நுண்மதி |
culpable homicide | குற்றமுடைய இறப்பு |
culpable homicide not amounting to murder | கொலையாகாத குற்றமுடைய இறப்பு |
cult movies | குழுமக்கவர்ச்சித் திரைப் படங்கள் |
cult, personality | ஆளுமை வழிபாடு |
cultural appropriation | பண்பாட்டுத் தத்தெடுப்பு |
cultural attaché | பண்பாட்டுத் தூதிணைஞர் |
cultural awareness and sensitivity | பண்பாட்டு விழிப்புணர்வும் கூருணர்வும் |
cultural capital | பண்பாட்டுத் தலைநகர் |
cultural conflict | பண்பாட்டு முரண்பாடு |
cultural ecology | பண்பாட்டுச் சூழலியல் |
cultural fabric | பண்பாட்டுக் கட்டுக்கோப்பு |
cultural group | பண்பாட்டுக் குழுமம் |
cultural heritage | பண்பாட்டுப் பாரம்பரியம் |
cultural hybridisation | பண்பாட்டுக் கலப்பினவாக்கம் |
cultural identities | பண்பாட்டு அடையாளங்கள் |
cultural integration | பண்பாட்டு ஒருங்கிணைப்பு; பண்பாட்டு உள்ளிணைப்பு |
cultural lag | பண்பாட்டுப் பின்னடைவு |
cultural perspective | பண்பாட்டுக் கண்ணோட்டம் |
cultural racism | பண்பாட்டு இனவாதம் |
cultural relativism | பண்பாட்டுச் சார்புடைமை (வாதம்) |
cultural reproduction | பண்பாடு கடத்துகை |
cultural revolution | பண்பாட்டுப் புரட்சி |
cultural studies | பண்பாட்டியல் |
cultural transmission | பண்பாடு கையளிப்பு |
cultural universals | பண்பாட்டுப் பொதுமைகள் |
culture bound syndrome | பண்பாட்டுக்கு உட்பட்ட பிணிக்கூட்டு |
culture shock | பண்பாட்டு அதிர்ச்சி |
culture, corporate | கூட்டுத்தாபன ஒழுகுமுறை |
cunnilingus | பெண்குறிமதனம் |
curator, museum | அரும்பொருளக காப்பாணையர் |
currency in circulation | புழக்க நாணயம் |
currency swap; cross currency swap | நாணயப் பரிமாற்றம் |
currency trading | நாணய வியாபாரம் |
current assets | நடப்புச் சொத்து |
current era | நிகழ் ஊழி |
curriculum | பாடத்திட்டம் |
curriculum vitae; resume | தகைமைத் திரட்டு |
curtail spending | செலவைக் குறுக்கு |
curtain call | மீள்தோற்ற அழைப்பு |
curtain lecture | தலையணை மந்திரம் |
curtain line | திரைவரி |
curtain raiser | கட்டியம் |
curtain speech | திரைநிறைவுரை |
curtain time | திரைவிலகும் நேரம் |
custodial account | பாதுகாவல் கணக்கு |
custodial death | தடுப்புக்காவலில் இறத்தல் |
custody, child | சிறுவர் கட்டுக்காப்பு |
custody, in | தடுப்புக்காவலில் |
Customary Law | வழமைச் சட்டம் |
customer service | வாடிக்கையாளர் சேவை |
customs and habits | பழக்க வழக்கங்கள் |
customs duty | சுங்கத் தீர்வை |
cut motion | தொகைவெட்டு முன்மொழிவு |
cutting edge technology; state-of-the-art technology | புத்தம்புதிய தொழினுட்பவியல் |
cutting off; interruption | குறுக்கீடு |
cyber bullying; online bullying | இணைய அடாவடி |
cyber crime | இணையவழிக் குற்றம் |
cyclone collector | நடுநீக்க மாசகற்றி |
cynical smile | ஏளனப் புன்னகை |
No comments:
Post a Comment