ENGLISH-TAMIL PHRASES (B)
baby blues; postnatal depression | மகப்பேற்றின் பின் உளச்சோர்வு |
baby boom | பிறப்புத்தொகைப் பெருக்கம் |
baby bust | பிறப்புத்தொகைக் குறுக்கம் |
baby-friendly hospital | பாலூட்டுநேய மருத்துவமனை |
baby-led weaning | குழந்தை தானே உண்ணப் பழகல் |
Bachelor of Arts | இளங் கலைமாணி |
back burner, put on the | கிடப்பில் போடு |
background concentration | பின்புலச் செறிவு |
background radiation | பிற்புலக் கதிர்வீச்சு |
back pain | முதுகுநோ; முதுகுவலி |
backstage | பின்னரங்கம் |
backwater valve | மீள்நீர் தடுக்கிதழ் |
bacteria denitrification | பற்றீரியாக்கள் ஊடான நைதரசினிறக்கம் |
bacterial count | பற்றீரிய எண்ணிக்கை |
bacterial leaching; bioleaching | பற்றீரியச் சல்லடை |
bacterial purity | பற்றீரியத் தூய்மை |
bad debt | அறவிடமுடியாக் கடன் |
bad faith; intent to deceive | ஏய்க்கும் எண்ணம்; தகாத எண்ணம் |
bad reputation | அவப்பெயர்; இழுக்கு |
badminton | இறகுப்பந்தாட்டம் |
bail, He is out on | அவர் பிணையில் வெளிவந்துள்ளார் |
bail, The court will grant you | நீதிமன்றம் உங்களுக்குப் பிணை தரும் |
bail bond | பிணை முறி |
bail out the private sector, The government will | அரசாங்கம் தனியார் துறைக்கு கைகொடுக்கும் |
bailout discussions | கடனளிப்புக் கலந்துரையாடல் |
bait-and-switch | ஈர்த்து, தூண்டி, விற்கும் உத்தி |
bait, take the | இரையைக் கவ்வு; ஈர்க்கப்படு; அகப்படு |
balance, bank | வங்கி மீதி |
balance, on | மொத்தத்தில்; அனைத்தையும் கருத்தில் கொள்ளும்பொழுது |
balanced diet | ஒப்பளவுணவு |
balanced portrayal of women | பெண்களை ஒப்பளவாகச் சித்தரித்தல் |
balanced view | ஒப்பளவுக் கண்ணோட்டம் |
balance of evidence | சான்றுச் சமநிலை |
balance of power | வலுச்சமநிலை |
balance of probabilities | நிகழ்தகவுச் சமநிலை |
balance sheet | ஐந்தொகை |
balancing equation method | ஒப்புச் சமன்பாட்டு முறை |
balancing of accounts | கணக்குகளைச் சமப்படுத்தல் |
balancing of ledgers | பேரேடுகளைச் சமப்படுத்தல் |
balcony, flower vases on the | உப்பரிகையில் (மேன்மாடத்தில்) பூச்சாடிகள் |
beleric myrobalan | தான்றி |
ballistic, go | வெகுண்டெழு |
ballistic missile | உந்துகணை |
balloon vine; winter cherry | உழிஞை; முடக்கொற்றான் |
banality of evil (Hannah Arendt) | தீமை நிகழும் வழமை |
banal platitude | வழமையான வெற்றுரை |
banded bay cuckoo | செங்குயில் |
bank account | வங்கிக் கணக்கு |
bank card | வங்கி அட்டை |
bank discount | வங்கிக் கழிவு |
bank draft | வங்கி வரைவோலை |
bank identifier code | வங்கி அடையாளக் குறியீடு |
bank insurance fund | வங்கிக் காப்புறுதி நிதியம் |
bank investment contract | வங்கி முதலீட்டு ஒப்பந்தம் |
bank note | தாள் காசு |
bank rate | வங்கி வீதம் |
bankrupt, go | நொடிப்புக்கு உள்ளாகு |
bankruptcy, file for | நொடிப்புநிலைக்கு விண்ணப்பி |
bank service charges | வங்கிச் சேவைக் கட்டணம் |
bank statement | வங்கிக் கூற்று |
bar, at (the) | நீதிமன்றின் முன்னிலையில் உள்ள |
Bar, be admitted to the = be called to the Bar | சட்டவாளராக அங்கீகரிக்கப்படு |
bar association | சட்டவுரைஞர் சங்கம் |
barbecue chicken | வாட்டடுப்பில் கோழி வாட்டு |
barbecue machine | வாட்டுணவுப் பொறி |
barbecue oven | வாட்டடுப்பு |
barbecue party | வாட்டுணவு விருந்து |
barber paradox (In a certain town, there is a barber who shaves the men who do not shave themselves. In that case who shaves the barber? On one hand, he can't shave himself because he's the barber, and the barber only shaves men who don't shave themselves. But if he doesn't shave himself, he must shave himself, because he shaves all the men who don't shave themselves - Bertrand Russell). | சிகைவலர் முரண்புதிர் (எ-கா: ஓர் ஊரில் ஒரேயொரு சிகைவலர் இருக்கிறார் என்றும், அங்கு தமக்குத் தாமே சவரம் செய்யாதவர்களுக்கு மாத்திரமே அவர் சவரம் செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படி என்றால், அந்த சிகைவலருக்கு சவரம் செய்பவர் யார்? மேற்கண்ட கூற்றின்படி தனக்குத் தானே சவரம் செய்யும் எவருக்கும் அவர் சவரம் செய்பவர் அல்லர். ஆகவே அவர் தனக்குத் தானே சவரம் செய்பவர் என்றால், தனக்குத் தானே சவரம் செய்ய முடியாது என்றாகிறது. அத்துடன், அவர் தனக்குத் தானே சவரம் செய்யாதவராக விளங்கினால் மாத்திரமே தனக்குத் தானே சவரம் செய்பவராக விளங்க முடியும் என்றாகிறது! அப்படி என்றால், அந்த சிகைவலருக்கு சவரம் செய்பவர் யார்? - Bertrand Russell) |
barn owl | கூகை |
barn swallow | தகைவிலான் |
barrage, artillery | பீரங்கிப் பல்லவேட்டு |
barramundi; sea bass; sea perch | கொடுவா |
barren money | வட்டி ஈட்டாத பணம் |
barricade, place a | வழித்தடை இடு |
barrier free apartment | மாற்றுத்திறவசதி அடுக்குமாடியகம் |
barrier methods | கருத்தடை முறைகள் |
barriers to accessibility | மாற்றுத்திறனாளர் எதிர்நோக்கும் தடங்கல்கள் |
bar-winged flycatcher-shrike | கருப்பு வெள்ளைக் கீச்சான் |
base commander | தளப்படைத் தளபதி |
base unit | தளப் பிரிவு |
base year | அடிப்படை ஆண்டு |
basic activities of daily living | அன்றாட அடிப்படை வாழ்வுச் செயற்பாடுகள் |
basic health service | அடிப்படைச் சுகாதார சேவை |
basic insurance policy | அடிப்படைக் காப்புறுதி ஒப்பந்தம் |
basic skills | அடிப்படைத் திறன்கள் |
basic statements | அடிப்படைக் கூற்றுகள் |
basis of claim | கோரிக்கை அடிப்படைக் கூற்று |
baste meat | இறைச்சி குழம்பாக்கு |
battered wives | தாக்குண்ட மனைவியர் |
battered women's shelter = hostel | தாக்குண்ட மகளிர் மனை; மகளிர்மனை |
battered women | தாக்குண்ட பெண்கள் |
battle array | சமர்க்கோலம்; பொருதுகோலம் |
battle cry | சமர் முழக்கம்; போர் முழக்கம் |
battle dress; battle fatigue; combat dress; combat fatigue | சமருடை; போருடை |
battle position | சமர் நிலை |
battleship | சமர்க் கப்பல்; போர்க் கப்பல் |
bawdy house | பாலியல் விடுதி; சிற்றின்ப விடுதி |
baya weaver | தூக்கணாங்குருவி |
bay-backed shrike | கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் |
beach defence | இறங்குகரைப் பாதுகாப்பு |
beach head | இறங்குகரை முகப்பு |
bead tree | குன்றிமணி = மலைவேம்பு |
beaked snake | அலகுப் பாம்பு |
beamhouse wastes | தோல்பதனக் கழிவுகள் |
bear true allegiance, be faithful and | நம்பிக்கைக்குரியவராகவும் மெய்விசுவாசம் கொண்டவராகவும் விளங்கு |
beat an egg | முட்டை அடி(கூழாக்கு) |
beauty parlour; beauty salon | அழகொப்பனையகம் |
beche-de-mer; sea cucumber | கடலட்டை |
Beck's cognitive triad | பெக்கின் மூவகை அறிதிறன்கள் |
beef cattle feedlot | இறைச்சி மந்தை தீன்களம் |
beet root | அக்காரக் கிழங்கு |
before the fact | நிகழ்வின் முன்; நிகழமுன் |
begging the question; petitio principii; assume the conclusion (Aristotle) | மெய்ப்பிக்கமுன் மெய்யெனல் = சுழல்நியாயப் போலி |
behavioral confirmation | நடத்தை உறுதிப்பாடு |
behavioral data | நடத்தைத் தரவுகள் |
behavioral measures | நடத்தை அளவீடுகள் |
behavioral rehearsal | நடத்தை ஒத்திகை |
behavior analysis | நடத்தை பகுப்பாய்வு |
behaviorist perspective | நடத்தையியற் கண்ணோட்டம் |
behavior modification | நடத்தை சீராக்கம் |
behavior therapy | நடத்தைச் சிகிச்சை |
behavioural addiction | நடத்தைக்கு அடிமைப்படுகை |
behavioural and psychological symptoms of dementia | நடத்தை, உளவியல் வாரியான மூளைமழுக்க அறிகுறிகள் |
behaviour modification therapy | நடத்தை மாற்றச் சிகிச்சை |
belief-bias effect | நம்பிக்கை சார்ந்த விளைவு |
belief system | நம்பிக்கைநெறிக் கோவை |
belles letters | இலக்கியப் படைப்புகள் |
bell pepper | கறி மிளகாய் = குடை மிளகாய் |
below replacement fertility | ஈடுசெய் பிறப்பின் தாழ்ச்சி வீதம் |
bench decision | மன்று முடிபு |
bench terrace | படியமைப்பு |
bench warrant | நீதிமன்றக் கைதாணை (பிடியாணை) |
beneficent nature | நலம்புரி இயல்பு |
beneficial ownership | பயன்பெறும் உடைமை |
beneficiary of the will | இறப்பாவண நன்மையாளர் |
beneficiary, sole | ஒரே நன்மையாளர் |
beneficium abstinendi | உரிமை ஏற்காப் பயன் |
beneficium cedendarum actionum | வழக்குரிமையளிப்புப் பயன் |
beneficium de duobus vel pluribus reis debendi | இருவர் அல்லது பலர்க்கிடையில் கடன் பொறுப்பை பகிரும் பயன் |
beneficium divisionis | பிரிப்புப் பயன் |
beneficium ordinis seu excussionis | முறைமைத் தொடர்ச்சிப் பயன் |
benefit of the doubt | ஐய நன்மை |
benefits available | கிடைக்கும் நன்மைகள் |
benevolent society | தண்ணளிச் சமூகம் |
Bengal gram; chickpea | கொண்டைக் கடலை |
benign tumour | புற்றுநோயற்ற கழலை |
bequeath your lands to your children | உனது காணிகள் உனது பிள்ளைகளுக்குச் சேருமாறு விருப்பாவணமிடு |
best interests of the child, the | பிள்ளையின் நன்னலன்கள் |
betel leaf | வெற்றிலை |
better health for women and children through family planning | குடும்பத் திட்டம் ஊடாக பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் நலவாழ்வு |
bewilderment; perplexity | மருட்சி |
beyond a reasonable doubt | நியாயமான ஐயத்துக்கிடமின்றி |
bias, political | அரசியற் பக்கச்சார்பு |
bibliography | நூற்பட்டியல் |
bicameral parliament | இருமன்ற நாடாளுமன்றம் |
biconditional statement; if and only if | இருசார்புக் கூற்று |
bicultural identity | இருபண்பாட்டு அடையாளம் |
bidding war | விலைகூறல் (விலைகேட்டல்) போட்டி |
bids; tenders | கேள்விப்பத்திரங்கள் |
Big Bang Theory | பிரபஞ்ச பேரோசைக் கோட்பாடு |
Big Crunch Theory | பிரபஞ்ச நிலைகுலைவுக் கோட்பாடு |
big eye trevally; dusky trevally | ஊசிப்பாரை |
bigot, religious | சமயவெறியர் |
bigotry, religious | சமயவெறி |
big picture | முழுப்பரிமாணம் |
bilateral negotiation | இருதரப்பு பேச்சுவார்த்தை |
biliary disease | பித்த நோய் |
bilingual education | இருமொழிக் கல்வி |
bill and coo | கொஞ்சிக் குலவு |
bill of lading | சரக்கேற்று முறி |
bill of quantities | கணிய முறி |
Bill of Rights | உரிமைச் சாசனம் |
bill of sale | விற்பனை முறி; கிரய முறி |
Bill, Reform | சீர்திருத்த சட்டமுலம் |
bill, telephone | தொலைபேசிக் கட்டணச்சீட்டு |
billion = 1,000,000,000 | நூறு கோடி |
binary options | இருமைத் தெரிவுகள் |
binding agreement | பிணிக்கும் உடன்படிக்கை |
binding over an accused for trial | குற்றஞ்சாட்டப்பட்டவரை விசாரணைக்குப் பிணித்து விடுதல் (விசாரணைக்குத் தோற்றும்படி பணித்துவிடுதல்) |
binding rule | பிணிக்கும் விதி |
bind the mixture adding an egg yolk | மஞ்சட்கரு சேர்த்து அப்பமாக்கு |
binge drinking | குடிவெறியாட்டம் |
biochemical oxygen demand | உயிர்மவேதி உயிர்வளித் தேவை |
biogeochemical cycle | புவி உயிர்ம வேதி வட்டம் |
biography | வாழ்க்கை வரலாறு |
bioleaching = bacterial leaching | உயிர்மச் சல்லடை |
biological accumulation | உயிர்மக் குவிவு |
biological benchmark | உயிர்ம மட்டக்குறி |
biological clock | உடற் கடிகாரம் |
biological factor | உயிரியற் காரணி |
biological family | குருதி உறவுக் குடும்பம் |
biological indicator | உயிர்ம இனங்காட்டி |
biological parent = blood parent | குருதிப் பெற்றார் |
biological pest control = biocontrol | உயிர்மமுறை பீடை ஒடுக்கம் |
biological pesticides | உயிர்ம பீடைநாசினிகள் |
biological reasons | உயிரியற் காரணங்கள் |
biological sewage treatment | உயிர்மமுறை கழிநீர் சுத்திகரிப்பு |
biological spectrum | உயிரினக் கற்றை |
biological treatment technology | உயிர்ம சுத்திகரிப்பு தொழினுட்பவியல் |
biological waste | உயிர்மக் கழிவு |
biologic erosion | உயிர்ம மண்ணரிப்பு |
biomedical therapy | உயிர்மருத்துவ சிகிச்சை |
BIPOC = Black, Indigenous and People of Colour | பன்னிறத்தோர் |
biosecure bubble | கிருமி தொற்றா குமிழ் |
bipolar disorder | இருமுனைக் கோளாறு; பித்து-சோர்வுக் கோளாறு |
bird sanctuary | புள்ளினக் காப்புலம்; பறவைக்காப்புலம் |
bird snake | பறவைப் பாம்பு |
birth attendant | மகப்பேற்றுத் தாதியாளர் |
birth cohorts | பிறப்புச் சாரிகள் |
birth control; contraception | கருத்தடை |
birth grant | மகப்பேற்று மானியம் |
birthing room | மகப்பேற்றுக் கூடம் |
birth interval; birth spacing; child spacing | பிறப்பிடைக்காலம் |
birth kit | மகப்பேற்றுப் பொட்டலம் |
birth postponement | கருத்தரிப்பை பின்போடல் |
birth rate | பிறப்பு வீதம் |
birthright | பிறப்புரிமை |
birth timing | கர்ப்பகால ஒழுங்கு |
birth weight | பிறப்பெடை |
Bishop's weed; ajowan | ஓமம் |
altcoin; bitcoin; cryptocurrency | மின்மநாணயம் |
bitter gourd; bitter melon | பாகற்காய் |
biweekly mortgage | இரு கிழமைகளுக்கோர் அடைமானம் |
Black Baza | கருங்கொண்டை வல்லூறு |
Black-bellied Tern | கருப்பு வயிற்று ஆலா |
Black Bittern | கருங்குருகு |
black box theatre | கருமை அரங்கம் |
black bulbul | கருப்புச் சின்னான் |
black-capped kingfisher | கருந்தலை மீன்கொத்தி |
black comedy; dark comedy | அவல நகைச்சுவை; அவலநகைப் |
black-crested bulbul | செந்தொண்டைச் சின்னான் |
black-crowned night heron | இராக் கொக்கு |
black cumin | கருஞ்சீரகம் |
black currant | கருங்கொடிமுந்திரி |
black drongo | கருங் கரிச்சான் |
black eagle | கரும்பருந்து |
black gram | உழுந்து |
black-headed cuckoo-shrike | கருந்தலைக் குயில் கீச்சான் |
black-headed gull | கருந்தலைக் கடற்புறா |
black-headed ibis | வெள்ளை அரிவாள் மூக்கன் |
black-headed munia | கருந்தலைச் சில்லை |
black-headed oriole | கருந்தலை மாங்குயில் |
black-headed snake | கருந்தலைப் பாம்பு |
black kingfish = cobia | கடவரை = கடல் விரால் |
black kite | கள்ளப் பருந்து |
Black Lives Matter | கருப்பின மக்கள் வாழ்வியக்கம் |
black-lored yellow tit | மஞ்சள்கண் பட்டாணிக் குருவி |
black magic | செய்வினை |
black market | கள்ளச் சந்தை; கறுப்புச் சந்தை |
black marlin | கொப்பரன் |
black-naped Monarch | கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் |
black pepper | மிளகு |
black pomfret | கருவெளவால் = கருவாவல் |
black rat snake | கருஞ்சாரை |
black shark | கட்டைச் சுறா = கருமுடிச் சுறா = பெருந்தலைச் சுறா |
black-shouldered kite | சிறு கரும்பருந்து |
black snake, red-bellied | சிவப்பு வயிற்றுக் கரும்பாம்பு |
black stork | கருநாரை |
black-tailed godwit | கருவால் மூக்கன் |
black templed cat snake; herald snake | கருங்கன்னப் பூனைப் பாம்பு |
black-throated munia | கருந்தொண்டைச் சில்லை |
black tip shark; grey shark | குண்டன் சுறா |
black winged kite | நரையான் பருந்து |
black-winged stilt | நெடுங்கால் உள்ளான் |
blank cheque | தொகையிடாத காசோலை |
blank endorsement; endorsement in blank | பெயரிடாத மேலொப்பம் |
blank endorsement | பெயரிடாத மேலொப்பம் |
blanket search warrant | பன்முகத் தேடல் ஆணை |
Bleeker's whipray; white tail stingray | சீமான் திருக்கை; சவுக்குத் திருக்கை |
blended family | பலதாரக் குடும்பம் |
blended learning | இணைப்புக் கற்கை |
blend milk and honey | பாலும் தேனும் கல |
blind bake | அரைச்சூடு காட்டு |
blind snake | குருட்டுப் பாம்பு |
blind spot | புலப்படாத புள்ளி |
blind trust | அறியா நம்பிக்கை நிதியம் |
blockade, economic | பொருளாதார முற்றுகை |
blocked account | முடக்கிய கணக்கு |
block of buildings | கட்டிடத் தொகுதி |
blog; weblog | வலைப்பூ |
blood cell | குருதிக் கலம் |
blood coagulation | குருதித் திரள்வு |
blood donor clinic | குருதிக் கொடைக் களம் |
blood-injury phobia | குருதிக்காய வெருட்சி |
blood libel | குருதி வசை (யூதர்கள் தமது சமயச் சடங்கு ஒன்றுக்காக கிறீஸ்தவ சிறுவர்களைக் கொன்று அவர்களது குருதியைப் பயன்படுதியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு) |
blood money | குருதிப்பணம்; பலிப்பணம் |
blood parents; biological parents | குருதிப் பெற்றோர் |
blood platelet | குருதிச் சிறுதட்டு |
blood pressure cuff | குருதி அழுத்தக் கைப்பட்டி |
blood pressure | குருதி அழுத்தம் |
blood sugar | குருதிச் சர்க்கரை |
blood transfusion | குருதி ஏற்றல் |
blood typing | குருதி வகையீடு |
blood volume | குருதிக் கனவளவு |
blowing snow | வீசுபனி |
blue crab | நீல நண்டு |
blue economy | கடற் பொருளாதாரம் |
blue grass | நீலப்புல் |
blue panic grass | நீலக்கினியாப்புல் |
blue rock pigeon | மாடப்புறா |
blue rock thrush | நீலப்பூங்குருவி |
blue runner | கும்புளா |
blue spot mullet | மடவைக் கெண்டை |
blue swimming crab | புள்ளி நண்டு |
blue-banded sea snake; annulated sea snake | நீலவரைக் கடற்பாம்பு |
blue-bearded bee-eater | காட்டுப் பஞ்சுருட்டான் |
blueberry | நீலப்பழம் |
blue-capped rock-thrush | நீலத்தலைப் பூங்குருவி |
blue-collar job; physical job | உடல் வேலை |
blue-faced malkoha | பச்சைவாயன் |
bluefin trevally | மஞ்சள் சிறகுப் பாரை |
blue-tailed bee-eater | நீலவால் பஞ்சுருட்டான் |
blue-throat | நீலகண்டன் |
blue-throated flycatcher | நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் |
blunted affect | மழுங்குணர்நிலை |
boa, dwarf | குள்ள வெங்கிணாத்தி |
boa, emerald tree | பச்சைமர வெங்கிணாத்தி |
boa, rainbow | வானவில் வெங்கிணாத்தி |
boa, red-tailed | செவ்வால் வெங்கிணாத்தி |
boa, rosy | மங்கல் வெங்கிணாத்தி |
boa, sand | மணல் வெங்கிணாத்தி |
boa, tree | மர வெங்கிணாத்தி |
boa constrictor | இரைநெரி வெங்கிணாத்தி |
board and care home | பராமரிப்பு விடுதியகம் |
boarding school | விடுதிப் பாடசாலை |
board of directors | பணிப்பாளர் சபை |
bob-cat | புதர்ப்பூனை |
body attachment, writ of | பிடியாணை |
body burden | மாசுச் சுமை |
body fluid | உடற் பாய்மம் |
body image | உடற்சாயை; உடற்படிமம்; உடல்விம்பம் |
body mass index | உடற் திணிவுச் சுட்டு |
body politic | அரச கட்டுக்கோப்பு |
body search | உடலளாவிய தேடுதல் |
body shaming | உடற்குறைகூறல் |
bog | சதுப்புநிலம் |
Bohemian, a | மரபுசாராக் கலைஞர் |
Bohemian existence | மரபுசாராக் கலைத்துவ வாழ்வு |
boil an egg | முட்டை அவி |
boil water | தண்ணீர் கொதிக்கவை |
Bombay duck | வங்கவராசி |
bona fide mistake | கருதாப் பிழை; நன்னோக்கப் பிழை |
bona fide occupational requirement | நன்னோக்க வேலைத்திற நிர்ணயம் |
bona fides are in order, His | அவருடைய நற்சான்றுகள் ஒழுங்கானவை |
bona fides | நன்னோக்கம்; நல்லெண்ணம்; நற்சான்று |
bona fide tourist | மெய்யான சுற்றுலாவாணர் |
bona vacantia | உடைமையாளரற்ற சொத்து |
bondable, Are you? = Are you without a criminal record? | நீர் குற்றப்பதிவற்றவரா? |
bonded labour | குடிமைத் தொழில் |
bonded warehouse | சுங்கத்தீர்வை செலுத்தாப் பொருட்குதம் |
bond market | உண்டியற் சந்தை |
bond scam | உண்டியல் மோசடி; உண்டியற்புரட்டு |
bone graft | என்பு ஒட்டு |
Bonelli's Eagle | இராசாளிப் பருந்து |
bone loss | என்பிழப்பு |
bone marrow | என்பு மச்சை |
bone mineral | என்புக் கனியம் |
bonus | மிகையூதியம்; சன்மானம் |
bony fish | முள்ளு மீன் |
book, bring to; call to account | விளக்கம் கோரு |
book review | நூல் மதிப்புரை |
bookfair | நூலங்காடி |
books of authority | விற்பன்ன ஏடுகள் |
boomslang | கொப்புப் பாம்பு |
Booted Eagle | பூஞ்சைப் பருந்து |
Booted Warbler | மரக் கதிர்க்குருவி |
borderline intelligence disorder | குறைநிலை நுண்மதிக் கோளாறு |
Border Services Agency | எல்லைப் பணி முகமையகம் |
born out of wedlock | மணமாகாத பெற்றோர்க்குப் பிறந்த |
botanical pesticide | தாவரப் பீடைகொல்லி |
bottle feeding | போச்சிப் பாலூட்டல் |
bottle gourd | சுரைக்காய் |
bottom trawling | இழுவைவலை மீன்பிடிப்பு |
bounced cheque | மறுதலிக்கப்பட்ட காசோலை |
bouquet garni | மூலிகைச் செண்டு |
bourgeois ideology | முதலாளித்துவ கருத்தியல் |
bout de papier | சூழ்வியல் பொது மடல் |
boutique beside the hotel | விடுதியகத்துக்கு அருகிலுள்ள அணிமணியகம் |
bowel movement | மலங்கழிப்பு |
box office | சீட்டுக் கூண்டு |
boyfriend | ஆண் கூட்டாளி |
brackish water | உவர்நீர்; சவர்நீர் |
brahminy kite | செம்பருந்து |
brahminy starling | கருங்கொண்டை நாகணவாய் |
brain dominance | மூளை ஆதிக்கம் |
brain drain | மூளைசாலிகள் வெளியேற்றம் |
brain fever = encephalitis | மூளைக்காய்ச்சல் |
brainfever bird | அக்கா குயில் |
braiser pan | வதக்குகலம் |
branch account | கிளைக் கணக்கு |
brand launch | புத்தம்புதிய அறிமுகம் |
brand name | சிறப்பு வணிகப் பெயர் |
brand new house | புத்தம்புதிய வீடு |
breach of promise | வாக்குறுதி மீறல் |
bread crumbs | மாத்துகள் |
break even point | சமநிலைப் புள்ளி |
breaking news | புதிய செய்தி |
breaking relations | உறவு துண்டிப்பு |
breakout of disease | நோய் கட்டுமீறிப் பரவுதல் |
breast cancer | மார்பகப் புற்றுநோய் |
breast conserving therapy | மார்பகம் பேணு சிகிச்சை |
breast-feeding | தாய்ப்பாலூட்டல் |
breast ironing | மார்பகம் மட்டமாக்கல் |
breast-milk substitutes | தாய்ப்பாலுக்குப் பதிலீடுகள் |
breathing exercises | மூச்சுப் பயிற்சிகள் |
bridge jobs | இடைத்தொடுப்பு வேலைகள் |
bridge loan | இடைத்தொடுப்புக் கடன் |
brigadier general | தானாதிபதி |
bring to book | விசாரித்து தண்டி |
brittle star | கடல் நட்சத்திரம் |
broad beans | அவரைக்காய் |
Broad-billed Roller | பருத்த அலகுப் பனங்காடை |
Broad-billed Sandpiper | அகல் அலகு உள்ளான் |
broadcast feature | சிறப்புச் செய்தி ஒலிபரப்பு (ஒளிபரப்பு) |
broad coverage | பரவைக் காப்பீடு |
broadleaf carpet grass | சாப்புப்புல் |
Broca's aphasia | மொழியாற்றல் இழப்பு |
broiler pan | வாட்டுகலம் |
bronzed drongo | கரும்பச்சைக் கரிச்சான் |
bronze-winged jacana | தாமரை இலைக் கோழி |
broth chicken | விறாத்துக்கோழி |
brown-breasted flycatcher | பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் |
brown-capped pygmy woodpecker | சின்ன மரம்கொத்தி |
brown-cheeked fulvetta | கலகலப்பன் சிலம்பன் |
brown hawk owl | வேட்டைக்கார ஆந்தை |
brown-headed barbet | காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் |
brown-headed gull | பழுப்புத்தலைக் கடற்புறா |
brown meat | இறைச்சியை பழுப்பாக்கு |
brown shrike | பழுப்புக் கீச்சான் |
brown snake | பழுப்புப் பாம்பு |
budget deficit | பாதீட்டுப் பற்றாக்குறை; |
buffel grass = fox-tail grass | கொழுக்கட்டைப்புல் |
buffer state | ஏம நாடு |
buffer stock | ஏம இருப்பு |
buffer zone | ஏம வலயம் |
bugseed grass | உண்ணிப்புல் |
builders risk insurance | கட்டுமானர் ஆபத்துக் காப்புறுதி |
building superintendent | கட்டிடக் கண்காணிப்பாளர் |
bulimia nervosa | உண்ணல்-கக்கல்-கழித்தல் கோளாறு |
bulletproof vest | சன்னம் துளைக்கா அங்கி |
bull eye | கக்காசி |
bull snake; carpet snake; chicken snake | குஞ்சுதின்னிப் பாம்பு |
bully, a | அடாவடியாளர்; தறுகணாளர்; வன்கணாளர் |
bully children | சிறாரை அடாவடிசெய் |
bungalow house | ஒருதள வீடு |
burden of disease | பிணிச்சுமை; நோய்ப்பளு |
burden of proof = onus of proof | எண்பிக்கும் (மெய்ப்பிக்கும்) பொறுப்பு |
burglar alarm | கன்னமிடல் அலறி |
burglary insurance | கன்னமிடல் காப்புறுதி |
business administration | வணிக நிருவாகம் |
business ethics | வணிக ஒழுக்கம் (அறம்) |
business incentive | வணிக ஊக்குவிப்பு |
business insurance | வணிகக் காப்புறுதி |
business interruption insurance | வணிக இடைத்தடங்கல் காப்புறுதி |
business interruption insurance | வணிகத் தடங்கல் காப்புறுதி |
business productivity | வணிக ஆக்கத்திறன் |
business studies | வணிகவியல் |
butch lesbian | ஆணுடை அணியும் ஒரேபாற்சேர்க்கைப் பெண் |
buttermilk | மோர் |
buy back deductible | மீள்கொள் கழிப்புத்தொகை |
buy-down | வட்டி குறைப்புக் கொடுப்பனவு |
buyer's market | கொள்வனவாளர் சந்தை |
buyer; purchaser | கொள்வனவாளர் |
buyer agency agreement | கொள்வனவு முகமையக உடன்படிக்கை |
by cheque or in cash | காசோலையாக அல்லது காசாக |
by-law | துணைச்சட்டம் |
by-line | நிருபர் விபரம் |
bypass surgery | மாற்றுப் பொருத்து |
by proxy | பதிலாள் மூலம் |
by word of mouth | வாய்ச்சொல் மூலம் |
No comments:
Post a Comment