Search This Blog

ENGLISH-TAMIL PHRASES (I) 

iconic memory

விழிப்புலன் குறுநினைவு

idea of democracy, We have some

குடியாட்சி பற்றி நாங்கள் கொஞ்சம் அறிந்து வைத்திருக்கிறோம்

idea of equality

சமத்துவ எண்ணம் (கருத்து)

idea theory of meaning

எண்ணக் கருத்துக் கோட்பாடு

idea who is watching me, I have no

என்னை அவதானித்துக் கொண்டிருப்பவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை

idea, a good

நல்ல எண்ணம்; நல்ல யோசனை

ideal culture

உவக்கும்  பண்பாடு; விழையும் பண்பாடு

ideal for translators, a glossary

மொழிபெயர்ப்பாளர்களுக்கு உகந்த சொற்கோவை

ideal of equality

சமத்துவக் குறிக்கோள்

ideal weather to play soccer

உதைபந்தாட உகந்த வானிலை

idealism and realism

குறிக்கோள்நெறியும் மெய்ம்மைநெறியும்

Idealists, pragmatists & realists,

குறிக்கோளர்; செயல்நோக்கர்; மெய்மையாளர்

ideality and reality

குறிக்கோள்நிலையும் மெய்நிலையும்

ideas about foreign policy

வெளிநாட்டுக் கொள்கை பற்றிய எண்ணங்கள்

identification and recognition

அடையாளம் காண்கையும் தெரிந்துகொள்கையும்

identification information

அடையாள விபரங்கள்

identity bracelet

அடையாளக் கைவளை

identity document; identification

ஆளடையாள ஆவணம்

identity groups

அடையாளக் குழுமங்கள்

identity politics

குழும அரசியல்

identity theft

ஆளடையாளத் திருட்டு; ஆளடையாள மோசடி

ideological bias

கருத்துநிலைச் சார்பு

ideologists, a group of

கருத்தாளர் (கருத்தியலாளர்) குழுமம்

ideology and politics

கருத்தியலும் அரசியலும்

idolatry

சிலைவழிபாடு

Ides of March (March 15)

காலக்கெடு

idioms and phrases

மரபுத்தொடர்களும் சொற்றொடர்களும்

idiomatic language

மரபார்ந்த மொழி

idiosyncrasy (eccentricity)

விசித்திரம்; நூதனம்

idiot savant

சாதுரியக் குருமன்

idle land

பயன்படுத்தா நிலம்

idyllic life

ஊரெழில் வாழ்வு

idyllic scenery

ஊரெழிற் காட்சி

If something can go wrong, it will

(Edward Murphy Jr.)

தவறு ஏற்பட வாய்ப்பிருப்பின், அது நிகழ்ந்துவிடும்

Ignorantia juris non excusat; Ignorance of the law is no excuse

சட்டம் அறியாமை சாட்டாகாது (மன்னிப்பளிக்காது)

illegal rave

சட்டவிரோத களிவெறியாட்டம்

illegal migrant

சட்டவிரோத குடிபெயர்வாளர்

illegitimate child

சட்டப்பேறற்ற பிள்ளை

illegitimate fertility rates

சட்டப்பேறற்ற பிறப்பு வீதங்கள்

illicit intercourse

கள்ளப்புணர்ச்சி

ill-treatment of prisoners

கைதிகளை துன்புறுத்தல்

illusion, The world is an

உலகம் ஒரு மாயை

illusions about my looks, I have no

எனது தோற்றத்தை எண்ணி நான் மதிமயங்கவில்லை

image of the past, an

இறந்தகாலப் படிமம்

image, God created man in His own

கடவுள் தனது சாயலில் மனிதனைப் படைத்தார்

image, the minister's public

அமைச்சரின் வெளிமுகம் (விம்பம்)

images, poetic

கவித்துவப் படிமங்கள்; கவித்துவ வார்ப்புகள்

immanent transcendence

நிறைமீமை

Immigration and Refugee Protection Act

குடிவரவு–அகதிப் பாதுகாப்புச் சட்டம்

immigration consultant

குடிவரவு உசாவலர்

immigration counsel

குடிவரவுச் சட்டமதிஞர்

Immigration Division

குடிவரவுப் பகுதி

immoral conduct

தீயொழுக்க நடத்தை

immoral thoughts

தீயொழுக்க எண்ணங்கள்

immune function theory of aging

மூப்பு தடுப்புவலு குன்றல் கோட்பாடு

immune system

நோய்த்தடுப்புவலுத் தொகுதி

immunity, diplomatic

சூழ்வியல் (இராசதந்திர) விதிவிலக்கு

immunization process of

தடுப்புமருந்தீட்டுப் படிமுறை

immunology process of

நோய்த்தடுப்பியற் படிமுறை

impact of crises on poor women

வறிய பெண்கள்மீது நெருக்கடிகள் ஏற்படுத்தும் தாக்கம்

impact on development = affect development

விருத்தியில் தாக்கம் விளைவி

impact on development

விருத்தியில் விளையும் தாக்கம்

impaired driving

போதையில் வாகனம் செலுத்தல்

impairment, visual

பார்வைக்குறை

impaling, practice of

கழுவேற்றும் நடைமுறை

impartial adjudicator's strategy

பக்கஞ்சாரா தீர்ப்பாளரின் உபாயம்

impartiality, maintain

நடுநிலை பேணு; பக்கஞ்சாராது செயற்படு

impasse, end the

முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவா

impeach the head of state

அரசுத் தலைவர் மீது குற்றம்பகரு (பழிமாட்டறை)

impeachment of the head of state

அரசுத் தலைவர் மீதான குற்றப்பகர்வு (பழிமாட்டறைவு)

Imperative Law

கட்டாயச் சட்டம்

imperative verb

ஏவல் வினை

imperium in imperio; the state within a state

அரசுக்குள் அரசு

impervious to insults, a fellow

இகழ்ச்சியால் தாக்குறாத பேர்வழி

impervious to moisture, a rock

ஈரம் சுவறாத பாறை

implant surgery, breast

மார்பக உட்பதிச் சிகிச்சை  

implicate others in the crime

குற்றத்தில் பிறரை உட்படுத்து

implication is obvious, the

உட்கிடை வெளிப்படையாகப் புலப்படுகிறது

implication in the scandal, their

மோசடியில் அவர்களது தொடர்பு

implications of commercialisation

வணிகமயமாக்கத்தின் தாக்கங்கள்

implicit uses of memory

உட்கிடை நினைவாற்றல் பயன்பாடுகள்

implied malice

உட்கிடை வன்மம்

implosion therapy

உள்தகர்ப்புச் சிகிச்சை

impose a fine

அபராதம் விதி

imposter syndrome

இளக்கார உளப்பான்மை

impotence (impotency), cure for

புணர்வலுவீனத்துக்கான பரிகாரம்

impound (confiscate) the passport

கடவுச்சீட்டை பறிமுதல்செய்

impracticable policies

செயற்படுத்தவியலாத கொள்கைகள்

imprescriptible rights

களையவொண்ணா  உரிமைகள்; நிர்ணயிக்கவொண்ணா உரிமைகள்

impressionism, art of

அகப்பதிவு ஓவியக் கலை

imprison racists

இனவாதிகளைச் சிறையிடு (சிறையிலடை)

imprisonment of racists

இனவாதிகளின் சிறையீடு (இனவாதிகளை சிறையிலடைத்தல்)

improbable concept

சாத்தியமாகாத கருத்தீடு

improper conduct

முறையற்ற நடத்தை

impropriety, appearance of

ஒழுக்கம் திறம்பும் தோற்றம

improve your Tamil

உன் தமிழறிவை மேம்படுத்து

improve, The situation will

நிலைவரம் சீரடையும்

improvement of relations

உறவு மேம்பாடு; உறவு மேம்படல்

improvement, signs of

சீரடையும் அறிகுறிகள்

improvisation

இட்டுக்கட்டல்

improvise a poem

ஒரு கவிதையை இட்டுக்கட்டு

impulsive aggression

உள்ளுந்து வன்மை

impunity, with

தண்டனைக்கு உட்படாமல்; தண்டனைப் பயமின்றி

imputation of motives

உள்நோக்கம் கற்பித்தல்

imputed income

கற்பித்த வருமானம்

in bad faith

துர்நோக்கம் (துன்னோக்கம்) கொண்டு

in camera

அந்தரங்கமாக; நீதிபதியின் கூடத்தில்

in escrow

மூன்றாந் தரப்பிடம்

in express terms

வெளிப்படையான சொற்களில்

in fact; in actual fact; in point of fact

உண்மையில்

in force, the law

நடைமுறையில் உள்ள சட்டம்

in good faith

நல்லெண்ணம் (நன்னோக்கம்) கொண்டு

in lieu of money

பணத்துக்குப் பதிலாக

in open court

நீதிமன்றின் முன்

in perpetuity

என்றென்றும்

in position

உரிய நிலையில்

in readiness

தயார் நிலையில்

in situ experiment

நிலைக்களப் பரிசோதனை

in (under) the circumstances

மேற்படி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு

In Transformation Initiative

மாறுகால முன்முயற்சி அமைப்பு

in vitro fertilization

புறக்கருக்கட்டல்

in words and deeds

சொல்லிலும் செயலிலும்

inactive account

செயற்படாத கணக்கு

inadmissibility of evidence

சான்று அனுமதிக்கவியலாமை

inadmissible claimant

அனுமதிக்கவியலாத கோரிக்கையாளர்

inadmissible evidence

அனுமதிக்கவியலாத சான்று

inadmissible family member

அனுமதிக்கவியலாத குடும்ப உறுப்பினர்

inadmissible in law

சட்டப்படி அனுமதிக்கவியலாத

inalienable rights

களையவொண்ணா உரிமைகள்

inappropriate affect

பொருந்தா உணர்நிலை

inappropriate use of words

பொருந்தாச் சொல்லாட்சி; வழுச் சொல்லாட்சி; வழூஉச்சொற் புணர்த்தல்

Inattentiveness

கவனயீனம்

inaugural address

தொடக்கவுரை

inbred children

சொந்தத்துள் உறவுகொண்டு பெற்றெடுத்த பிள்ளைகள்

incel = involuntary celibate

விழையா பாலுறவிலி

incendiary agent

தீமூட்டி

incendiary bomb; firebomb

தீக்குண்டு; எரிகுண்டு

incest, crime of

முறையிலாப் புணர்ச்சிக் குற்றம்

incidental expenses

இடைநேர் செலவு

incineration at sea

கடற்கலத்தில் நிலைகொண்டு நீறாக்கல்

incineration with recovery of energy

வலுமீள் நீறாக்கம்

incisive remarks

ஊடறுக்கும் குறிப்புரைகள்

incite and collaborate

ஏவி உடந்தையாய் இரு

incitement and collaboration

ஏவலும் உடந்தையும்

inclination to help

உதவும் நாட்டம்

inclusive citizenship

உள்வாங்கும் குடித்துவம்

inclusive development

உள்வாங்கும் விருத்தி

inclusive society for all ages

எல்லா வயதினரையும் உள்வாங்கும் சமூகம்

incognito, travel

தலைமறைவாகப் பயணஞ்செய்

income inequality

வருமான ஏற்றத்தாழ்வு

income supplement allowance

வருமான பிற்சேர்ப்பு உதவிப்படி

income-generating and voluntary work

உழைப்பும் தொண்டும்

incommunicado, hold

வெளித்தொடர்பின்றி தடுத்து வைத்திரு

incompetent person

தகுதியற்ற ஆள்

incomplete statement

குன்றக்கூறல்

inconsistency in foreign policy

வெளியுறவுக் கொள்கையில் முன்பின் முரண்பாடு

inconsistent statement

முன்பின்முரணான கூற்று

incontrovertible evidence

மறுத்தற்கரிய சான்று

inconvertible currency

மாற்றமுடியாத நாணயம்

incorporate new data

புதிய தரவுகளை உள்ளடக்கு

incorporation order

கூட்டிணைத்தற் கட்டளை

incorporeal minds and material bodies

அருவ உள்ளங்களும் உருவ உடல்களும்

incorrigible liar

திருத்தவியலாத பொய்யர்

incriminating evidence

குற்றப்படுத்தும் சான்று

inculpating statement

குற்றஞ்சார்த்தும் கூற்று

indecent assault

இழிவான பாலியல் தாக்குதல்

indecent words

இழிசொற்கள்

indemnity insurance

இழப்பீட்டுக் காப்புறுதி

indentured servitude 

ஒப்பந்த அடிமை

indigenous people = aboriginal people

தொல்குடிமக்கள்; ஆதிக்குடிமக்கள்

independence and impartiality of the judiciary, jurors and assessors and the independence of lawyers

நீதித்துறை, நடுவர்கள், கணிப்பீட்டாளர்களின் சுயாதீனம், பக்கஞ்சாரமை; சட்டவாளர்களின் சுயாதீனம்

independent and credible investigation

சுயாதீனமான நம்பத்தகுந்த விசாரணை

independent auditor

சுயாதீன கணக்காய்வாளர்

independent living

சுயாதீன வாழ்வு

independent witness

சுயாதீன சாட்சி

Indian Act

கனடிய தொல்குடிச் சட்டம்

indicator measure

குறிகாட்டி அளவு

indictable conviction

கடுங்குற்றத் தீர்வு

indictable offences

கடுங்குற்றங்கள்

indictment against robbers

கொள்ளையர்கள் மீதான கடுங் குற்றச்சாட்டு (கடுங்குற்றப்பகர்வு)

indigenous people = aboriginal people

தொல்குடிமக்கள் = ஆதிக்குடிமக்கள்

indigenous women: taking control of their destiny

தொல்குடிமகளிர்: தமது தலை விதியை தாமே நிர்ணயித்தல்

indirect fire

நேரல் வேட்டு

indirect loan

நேரல் கடன்

indirect measurement

மறைமுக அளவீடு

indirect or consequential loss

மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு

indirect speech; reported speech

பிறர் கூற்று

indirect tax

நேரல் வரி

individual equipment; personal equipment

கைவச உபகரணவகை 

individual racism

தனியார் இனவாதம்

individualism in the West

மேலைத்தேயத்தில் தனி மனிதத்துவம் (தனிமனிதவாதம்)

individuality, the writer's

எழுத்தாளரின் தனித்துவம்

individualized support

தனிப்பட்ட துணை

indivisible word

பகாப் பதம்

indoctrination (brainwash) of youth

இளையோர்மீது கருத்துத் திணிப்பு

Indology, field of

இந்தியவியல் துறை

indoor air pollution

உள்ளக வளி மாசு

induced (intentional) abortion

கருதிச்செய்யும் கருக்கலைப்பு

induction by confirmation

உறுதிப்படுத்தல் ஊடான தொகுத்தறிவு

inductive argument

தொகுத்தறி வாதம்

inductive generalization

தொகுத்தறிவுடன் கூடிய பொதுமையாக்கம்

inductive logic

தொகுத்தறி அளவையியல

inductive reasoning

தொகுத்தறி நியாயம்

industrial estate (park)

கைத்தொழிற் பேட்டை

industrial waste

கைத்தொழிற் கழிவு

industry, cottage

குடிசைக் கைத்தொழில்

ineligible claim

தகவற்ற கோரிக்கை

inequality, economic

பொருளாதார ஏற்றத்தாழ்வு

inequitable, distribution

ஒப்புரவற்ற விநியோகம்

inequity

ஒப்புமையின்மை; ஒப்புரவின்மை

inevitable death

தவிர்க்கவியலாத இறப்பு

infant mortality rate

சிசு இறப்பு வீதம்

infantry ammunition dump

காலாட்படைக் கணையக் குதம்

infectious disease

கிருமித்தொற்று நோய்

inferential statistics

அனுமானப் புள்ளிவிபரம்

inferiority complex

தாழ்வுளச் சிக்கல்

infidelity

சோரம்; துரோகம்

infinity of space

ஈறிலா வெளி; முடிவிலா வெளி

inflammatory language

கொதிப்பூட்டு மொழி

inflation

விலையேற்றம்; பணவீக்கம்

Inflection = inflexion

சொல்லுருமாற்றம்

influence campaign

செல்வாக்கு இயக்கம்

influence peddling

இலஞ்சம் வசூலித்தல்

influencer, an

விளம்பரக் கலைஞர்

informal assistance

முறைசாரா உதவி

informal caregivers

முறைசாரா பராமரிப்பாளர்கள்

informal education

முறைசாராக் கல்வி

informal production

முறைசாரா தயாரிப்பு

informal usage

முறைசாரா வழக்கு

informally and quickly

முறைசாராமலும் விரைவாகவும்

information barriers

தகவல் தடங்கல்கள்

informational influence

தகவல் தாக்கம்

informed choice

விபரமறிந்து நாடும் தெரிவு

informed consent

விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

infrastructure, cost of

கீழ்க்கட்டுமானச் செலவு 


(எ-கா: தெரு, பாலம், சுருங்கைச் செலவு)

infringe copyright

பிரதியுரிமை மீறு

in-group bias

தன் குழுமச் சார்பு

inherent defect

உள்ளார்ந்த குறைபாடு

inherent explosion

உள்ளார்ந்த வெடிப்பு

inherit a house

வீட்டை இறப்புச்சொத்தாகப் பெறு

inheritance tax

இறப்புச்சொத்துப்பேறு வரி

inheritance, cultural

பண்பாட்டுப் பாரம்பரியம்

inimitable style

ஈடுகொடுக்கமுடியாத பாணி

iniquity of racism

இனவாத அநீதி

initial (starting) point

தொடக்கப் புள்ளி

initial requirements

தொடக்கத் தேவைகள்

initiative on age

வயதுசார் முன்னெடுப்பு

initiative, on our own

எமது சொந்த முன்முயற்சியில் 

initiative, peace

அமைதி முன்னெடுப்பு

injected medication

ஊசி மருந்தேற்றம்

injurious interference

ஊறுபடுத்தும் தலையீடு

injury severity indicator

காயக்கடுமை காட்டி

innate ability

பிறவி ஆற்றல்; உடன்பிறந்த ஆற்றல்

inner harbour area

அகத் துறைமுகப் பரப்பு

innocent misrepresentation

வஞ்சகமற்ற பிறழ்கூற்று

innocuous remark 

கேடற்ற கூற்று; தீங்கற்ற கூற்று

innovation, age of

புதுமைக் காலம்

innovation, technological

தொழினுட்பப் புதுமை

innovative women

புதுமைப் பெண்கள்

innuendo, sexual

மறைமுக சிற்றின்ப இகழ்ச்சி

inorganic matter

அசேதனப் பொருள்

inorganic pesticide

அசேதனப் பீடைகொல்லி

inquisitorial system

விசாரித்தறியும் முறைமை

insectivorous plant; carnivorous plant

பூச்சிதின்னி (ஊனுண்ணி)த் தாவரம்

inshore patrol

உட்கடலோர சுற்றுக்காவல்

insider trading

உள்ளொற்று முதலீட்டு மோசடி

insight therapy

அகக்காட்சிச் சிகிச்சை

inspection condition

பரிசோதனை நிபந்தனை

inspector, sanitary

துப்புரவுப் பரிசோதகர்

inspector general of police

காவல்துறை அதிபதி

inspiration from local life, draw

உள்ளூர் வாழ்வில் ஊக்கம் பெறு

inspirational leader

ஊக்குவிக்கும் தலைவர்

inspire students

மாணவர்களை ஊக்குவி

inspired killings, politically-

அரசியல்வாரியாக ஊக்குவிக்கப்பட்ட கொலைகள்

inspired poet

உந்துதல் உற்ற கவிஞர்

instigate violence

வன்முறையை தூண்டு

instinctual drift

இயல்பூக்க நாட்டம்

institute action

வழக்குத் தொடு

institute of auditors

கணக்காய்வாளர் நிறுவகம்

institute, research

ஆராய்ச்சி நிறுவகம்

institution, educational

கல்வி நிறுவனம்

institutional health services

நிலைய சுகாதார சேவைகள்

institutional racism; institutionalized racism; structural racism; systemic racism

கட்டமைப்புவாரியான இனவாதம்

institutional stupidity

கட்டமைப்புவாரியான மடமை

instream aeration

கழிவுநீர்ம வளியேற்றம்

instruct the school be reopened

பாடசாலையை மீண்டும் திறக்கும்படி அறிவுறுத்து

instruct the interpreters in sign language

உரைபெயர்ப்பாளர்களுக்கு சைகை மொழி போதி

instructions, follow the

அறிவுறுத்துரைகளை பின்பற்று

instructor in translation

மொழிபெயர்ப்பு போதனாசிரியர்

instrumental activities of daily living

அன்றாட வாழ்வில் கையாளல் செயற்பாடுகள்

instrumental music

வாத்திய இசை

instrumentalism

பயனுடைமைவாதம்

instruments, banking

வங்கிஆவணங்கள்

instruments, musical

இசைக்கருவிகள்; வாத்தியங்கள்

insulin resistance

இன்சுலினுக்கு நெகிழாமை

insurable property

காப்புறுதிக்கு உட்படக்கூடிய உடைமை

insurance broker

காப்புறுதித் தரகர்

insurance bureau

காப்புறுதிப் பணியகம்

insurance corporation

காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

insurance policy

காப்புறுதி ஒப்பந்தம்

insurgent groups

கிளர்ச்சிக் குழுமங்கள

insuring clause

காப்புறுதி வாசகம்

insurrection, armed; armed uprising

ஆயுதக் கிளர்ச்சி

integrated accessibility standards regulation

ஒருங்கிணைந்த மாற்றுத் திறனுதவி நியமங்கள் ஒழுங்காக்கம்

integrated care

ஒருங்கிணைத்த பராமரிப்பு

integrating the human rights of women throughout the United Nations system

ஐக்கிய நாடுகள் கட்டுக்கோப்பு முழுவதிலும் பெண்களின் மனித உரிமைகளை ஒருங்கிணைத்தல்

integrity commissioner

நேர்சீர் ஆணையாளர்

integrity of the report

அறிக்கையின் நேர்சீர்

integrity, territorial

ஆள்புலத் திண்மை; ஆள்புலக் கட்டுறுதி

intellect, human

மனித நுழைபுலம்

intellectual ability

அறிவாற்றல்

intellectual capital

அறிவாற்றல் வளம்

intellectual disability

அறிவாற்றல் குறைபாடு

intellectual property

புலமைச்சொத்து; படைப்புச் சொத்து

intellectual property rights

புலமைச் சொத்துரிமைகள்; படைப்புச் சொத்துரிமைகள் 


(எ-கா: ஆக்கவுரிமை, பிரதியுரிமை)

intellectual weakness

அறிவாற்றல் பலவீனம்

intellectual will, lack of

அறிவாற்றல் வேட்கையின்மை

intellectual, an

அறிவார்ந்தவர்

intellectually gifted students

அறிவாற்றல் படைத்த மாணவர்கள்

intelligence agency

உளவு முகமையகம்

intelligence quotient

நுண்மதி ஈவு

intelligence, high

மிகு நுண்மதி

intelligible speech

புரியக்கூடிய உரை

intensive agriculture

தீவிர வேளாண்மை

intensive care

தீவிர பராமரிப்பு

intent to deceive (bad faith)

ஏய்க்கும் நோக்கம் (எண்ணம்)

intentional (induced) abortion

கருதிச்செய்யும் கருக்கலைப்பு

intentional tort

கருதிச்செய்யும் தீங்கு

inter absentes, a contract

நேருக்கு நேர் சந்தியாது செய்யும் ஒப்பந்தம்

inter alia; among other things

ஏனையவற்றுடன்; மற்றும் பிறவற்றுடன்

inter alios; among other people

ஏனையோருடன்; மற்றும் பிறருடன்

Inter arma enim silent lex; The law falls silent in times of war

போர் நிகழ்கையில் சட்டம் உறங்கும்

Inter Parliamentary Union

சர்வ நாடாளுமன்ற சங்கம்

inter partes; between the parties

தரப்புகளுக்கிடையே

inter praesentes, a contract

நேருக்கு நேர் சந்தித்து செய்யும் ஒப்பந்தம்

inter se; among or between themselves

தம்மிடையே

inter vivos; between the living

வாழ்வோரிடையே

interaction between teachers and learners

ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் இடைப்பட்ட ஊடாட்டம்

interactive teaching

ஊடாட்ட போதனை

Inter-Agency Field Manual for Reproductive Health in Refugee Situations

அகதிச் சூழ்நிலையில் மகப் பேற்று உடல்நலம் குறித்த சர்வ முகமையக கைநூல் 

Inter-Agency Plan of Action on Protection from Sexual Exploitation and Abuse

பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல், பாலியல் துர்ப்பிரயோகம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பது குறித்த சர்வ முகமையக நடவடிக்கைத் திட்டம்

interbank loan

வங்கியிடைக் கடன்

intercepted information; signal intelligence

ஒற்றுக்கேட்ட துப்பு 

intercultural communication

பண்பாட்டிடைத் தொடர்பாடல்

interdiction fire

இடைத்தடுப்பு வேட்டு

interdisciplinary study

துறையிடை ஆய்வு

interest groups

தனிநலக் குழுமங்கள்

interest party

தனிநலக் கட்சி

interest reserve account

வட்டி ஒதுக்குக் கணக்கு

interest, a person of

(காவல்துறையினரால்) நாடப்படும் ஆள்

interested parties

நாட்டம்கொண்ட தரப்புகள்

interested people

நாட்டம் கொண்டோர்; அக்கறை உடையோர்

interesting story

சுவையான கதை

interface between law and ethics

சட்டமும் அறமும் ஊடாடும் புள்ளி

interface, multimedia

பல்லூடக ஊடாட்டப் புள்ளி

interface, user

பயனாளர் - கணினி ஊடாட்டப் புள்ளி

interim nursing home care

இடைக்கால தாதிமையக பராமரிப்பு

interim order

இடைக்காலக் கட்டளை

interlocutory judgment

இடைக்காலத் தீர்ப்பு

intermediaries between lenders and borrowers, Financial institutions act as

கடன் கொடுக்கும் தரப்புகளுக்கும், கடன் எடுக்கும் தரப்புகளுக்கும் இடையே நிதி நிறுவனங்கள் இடைநடுத் தரப்புகளாகச் செயற்படுகின்றன

intermediary institutions

இடைநடு நிறுவனங்கள்

intermediary, through an

இடைநடுவர் ஊடாக

intermediate care

இடைநிலைப் பராமரிப்பு

intermediate objective

இடை நோக்கம்

intermittent sentence

இடைவிட்ட தண்டனைத்தீர்ப்பு 


(எ-கா: திங்கள் முதல் வெள்ளி வரை வேலை; சனி-ஞாயிறு சிறை)

internal audit

உள்ளகக் கணக்காய்வு; அகநிலைக் கணக்காய்வு

internal displacement

உள்நாட்டு இடப்பெயர்வு

internal flight alternative

உள்நாட்டில் மாற்றுப் புகலிடம்

internal inquiry

உள்ளக விசாரணை

internal medicine

உள்ளுடல் மருத்துவம்

internal migration

உள்நாட்டுக் குடிபெயர்வு            

internalized dominance

உள்ளகமய ஆதிக்கம்

internalized oppression

உள்ளகமய ஒடுக்குமுறை

internally displaced person

உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆள்

International Commission of Jurists

அனைத்துநாட்டுச் சட்டவல்லுநர் ஆணையம்

International Consortium of Investigative Journalists

அனைத்துநாட்டுப் புலனாய்வு ஊடகர் கூட்டமைப்பு

International Convention on the Elimination of All Forms of Racial Discrimination

இனப் பாகுபாட்டு முறைகள் அனைத்தயும் ஒழிப்பது தொடர்பான அனைத்துநாட்டுப் பொருத்தனை

International Covenant on Civil and Political Rights

குடியியல்-அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடு

International Covenant on Economic, Social and Cultural Rights

பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடு

International Covenants on Human Rights

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடுகள்

International Crisis Group

அனைத்துநாட்டு நெருக்கடி தணிப்புக் குழுமம்

International Decade of the World's Indigenous People

உலக சுதேச மக்களின் சர்வதேய  தசாப்தம்

International Humanitarian Law

அனைத்துநாட்டு மனிதாபிமான சட்டம்

International Humanitarian Fact-Finding Commission

அனைத்துநாட்டு மனிதாபிமான மெய் விபரம் கண்டறியும் ஆணையம்

International Law

அனைத்துநாட்டுச் சட்டம்

international legal obligations

அனைத்துநாட்டு சட்டக் கடப்பாடுகள்

international migration

நாட்டிடைப் பெயர்வு; நாடுவிட்டு நாடுபெயர்வு

International Monetary Fund

அனைத்துநாட்டு நாணய நிதியம்

International Non-governmental Organization; INGO

அனைத்துநாட்டு அரசு சாரா அமைப்பு

international order

அனைத்துநாட்டு ஒழுங்கு

international relations

அனைத்துநாட்டு உறவு

International Right to Truth Day

அனைத்துநாட்டு உண்மை உரிமை நாள்

International Tribunal

அனைத்துநாட்டுத் தீர்ப்பாயம்

International Truth and Justice Project

அனைத்துநாட்டு உண்மை-நீதி அமைப்பு

International Women's Day

அனைத்துநாட்டு மகளிர் நாள்

International Women's Information and Communication Service

அனைத்துநாட்டுமகளிர் தகவல் - தொடர்பாடல் சேவை

International Women's Year

அனைத்துநாட்டு மகளிர் ஆண்டு

internet dating; online dating

இணையவழி உடன்போக்கு

internet trolling

இணையப் புரளி

internet service

இணைய சேவை

interpersonal therapy

ஆளுறவுச் சிகிச்சை; ஊடாட்ட சிகிச்சை

interplay between politics and human rights

அரசியலும் மனித உரிமைகளும் தொடர்புறுதல்; அரசியலுக்கும் மனித உரிமைகளுக்கும் இடைப்பட்ட தொடர்பு

INTERPOL = International Police

அனைத்துநாட்டுக் காவல்துறை

interpregnancy intervals

கருத்தரிப்பு இடைக்காலப் பகுதிகள்

interpretation of information

தகவற் பொருள்கோடல்

interpretive skills

பொருள்கோடல் திறன்

intersection of lines

கோடுகளின் ஊடறுப்பு

intersectional relations

ஊடறுக்கும் உறவுகள்

intersectionality

ஊடறுக்கும் ஏற்றத்தாழ்வு; ஏற்றத்தாழ்வுகள் ஊடறுத்தல்

intersex condition

இடைப்பால் நிலைமை

interval between marriage and first birth

திருமணத்துக்கும் முதலாவது மகப்பேற்றுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி

intervals between successive births

மகப்பேற்றுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகள்

intervene in the appeal

மேன்முறையீட்டில் தலையிடு

intervenient counsel

இடைவரு சட்டவுரைஞர்

intervention by the minister

அமைச்சரின் தலையீடு

intestate heir

இறப்பாவணமில்லா வழியுரித்தாளி

intestate succession

இறப்பாவணமில்லா பின்னுரிமைப்பேறு

intra vires the constitution

அரசியல்யாப்பின் அதிகாரத்துக்கு உட்பட்ட

intransigence

விட்டுக்கொடாமை

intransitive verb

செயப்படுபொருள் குன்றிய வினை

intrapersonal concerns

உள்மனக் கரிசனைகள்

intrauterine device

கருப்பையக கருத்தடைச் சாதனம்

intrauterine growth retardation

கர்ப்பச்சிசு வளர்ச்சி குன்றல்

intravenous injection

நாள ஊசியேற்றம்

intricate language

சிக்குப்பிக்கு மொழி

intrigue readers

வாசகரை ஈர்

intrigue, political

அரசியற் சூழ்ச்சி

intrinsic evidence

அகநிலைச் சான்று; உள்ளமைந்த சான்று

intrinsic good

அகநலம்

introduction, foreword, preamble, preface

அணிந்துரை, முன்னுரை, பாயிரம், முகவுரை

intrusive procedure

ஊடுருவு சிகிச்சை

invalid argument

வலிதிலாவாதம்

invalid coin

செல்லாக் காசு; வலிதிலா நாணயம்

invalid legal proceeding

வலிதற்ற சட்ட நடவடிக்கை

invalid proceeding

வலிதிலா விசாரணை

invalidity of the proceeding

விசாரணையின் வலிதீனம்

invasive surgery

ஊடறு(வைச்) சிகிச்சை        

invective, avoid

தூற்றுவதை தவிர்

invective speech

தூற்றும் உரை

inverse statement (If not p, then not q)

நேர்மாறு கூற்று (எ-கா: மழை பெய்யாவிட்டால், அவர்கள் குடை பிடிக்க மாட்டார்கள்)

inverted pyramid

தலைகீழ்க்கூம்பு

investigation, criminal

குற்றப் புலனாய்வு

investigative journalism

புலனாய்வு ஊடகவியல்

investigative journalist

புலனாய்வு ஊடகர்; புலனாய்வு ஊடகத்  துறைஞர்

investigators, crime scene

குற்ற நிகழ்விடப் புலனாய் வாளர்கள்

inviolable rights

மீறவொண்ணா உரிமைகள்

invoke international law 

அனைத்துநாட்டுச் சட்டத்ததை மேற்கோள்காட்டு

involuntary celibate; incel

விழையா பாலுறவிலி

involuntary disappearances

விழையா காணாமல் போக்கடிப்புகள்

involuntary manslaughter

விழையா ஆள்வதம்; கைமோசக்கொலை

ipso facto

அந்நிகழ்வாலே

ipso jure

அச்சட்டத்தினாலே

iron deficiency

இரும்புச்சத்துக் குறைபாடு

ironic statement

முரண் அணிக் கூற்று

irrational technique of persuasion

நியாயத்துக்கு அமையாது இணங்கத் தூண்டும் உத்தி

irrational thinking

நியாயமில் சிந்திப்பு; நியாயப்படி அமையாத சிந்திப்பு

irrational thoughts

நியாயமில் சிந்தனை; நியாயப்படி அமையாத சிந்தனை

irreconcilable differences

இணக்கமுடியா வேறுபாடுகள்

irrefutable presumption

மறுத்து எண்பிக்கமுடியாத ஊகம்

irregular arrival

ஒழுங்குமீறி வந்தடைதல்

irregular arrivals

ஒழுங்குமீறி வந்தடைவோர்

irreparable loss

ஈடுசெய்யமுடியாத இழப்பு

irredentism, policy of

புலமீட்புவாதக் கொள்கை

irresistible impulse

அடக்கமுடியாத உந்தல்

irreversible change

மீளவொண்ணா மாற்றம்

irrevocability date

நீக்க காலக்கெடு

irrevocable power of attorney

நீக்கமுடியாத பதிலாளித் தத்துவம்

irritable bowel syndrome

குடற் பதற்றப் பிணி

irritable mood

எரிச்சல் உணர்நிலை

issue of fact

விவரச் சர்ச்சை

issue of law

சட்டச் சர்ச்சை

issue of the newspaper, an old

செய்தித்தாளின் பழைய பிரதி

IVF; in vitro fertilization

புறக்கருக்கட்டல்

No comments:

Post a Comment