Search This Blog

 அளவையியல் = ஏரணவியல் =  LOGIC 

a fortiori = with a yet stronger reason 



e. g: If it is wrong to kill animals for food, a fortiori, it is also wrong to kill them for their skin)

கைமுதிகநியாயம் = மிகவும் வலுவான நியாயம் கொண்டு 


(எ-கா: விலங்குகளை உணவுக்காகக் கொல்வது தவறு என்பது நியாயம் என்றால், தோலுக்காகவும் கொல்லக் கூடாது என்பது அதைவிட மிகவும் வலுவான நியாயம் கொண்டதாகும்)

a posteriori knowledge = knowledge from what comes after = inductive knowledge = empirical knowledge

பின்விளைவறிவு; தொகுத்தறிவு; பட்டறிவு


(எ-கா: நான் பிறந்த திகதி: 1983-08-01)

a priori knowledge   = knowledge  what is before = deductive knowledge = inferential knowledge

முன்னேதறிவு; உய்த்தறிவு; அனுமான அறிவு 


(எ-கா: பிரமச்சாரிகள் எல்லோரும் மணமாகாதவர்கள்) 

absurd example

விழல்மை எடுத்துக்காட்டு

acceptability

ஏற்புடைமை

adequacy of explanation = explanatory adequacy

விளக்க நிறைவுடைமை

advocate's strategy

பரிந்துரைஞரின் உபாயம்


(எ-கா: "இறக்குமதிகள் தடை செய்யப்பட வேண்டும்." இங்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை)

affirmation

உறுதியுரை

ambiguity

இருபொருள்படுகை; பல்பொருள்படுகை

amphiboly

இருபொருட்கூற்று

analogical arguments by properties

தன்மை ஒப்புநோக்கு வாதங்கள்

analogical arguments by relations

உறவு ஒப்புநோக்கு வாதங்கள்

analogical reasoning

ஒப்புநோக்கு நியாயம்

analogue case

ஒப்புத்தெரி பொருள்

analogy

ஒப்புமை; ஒப்பீடு; ஒப்புநோக்கு  

analytic statement

பகுபடு கூற்று 


(எ-கா: சகோதரிகள் அனைவரும் உடன்பிறப்புகள்)

antecedent

முன்னிலைவரம்; முன் "ஆல்" கூறு


(எ-கா: கடலில் தீப்பற்றினால், மீன்கள் எல்லாம் மரத்தில் ஏறிவிடும்! [சீனப் பழமொழி])

antecedents

முன்வரலாறு; முற்சந்ததி

argument

வாதம்

argument to the best explanation

சிறந்த விளக்க வாதம்

argumentative essay

வாதக் கட்டுரை

atomic statement

கூறுபகுப்புக் கூற்று 


(எ-கா: பனை ஒரு மரம்)

axiom = axiomatic truth = self evident truth (i.e: The whole is greater than the part)

மெய்த்தளம்; வெளிப்படை உண்மை


(எ-கா: கூறிலும் முழுமை பெரிது)

barber paradox 


(In a certain town, there is a barber who shaves the men who do not shave themselves. In that case who shaves the barber? On one hand, he can't shave himself because he's the barber, and the barber only shaves men who don't shave themselves. But if he doesn't shave himself, he must shave himself, because he shaves all the men who don't shave themselves - Bertrand Russell).

சிகைவலர் முரண்புதிர்


(எ-கா: ஓர் ஊரில் ஒரேயொரு  சிகைவலர் இருக்கிறார் என்றும், அங்கு தமக்குத் தாமே சவரம் செய்யாதவர்களுக்கு மாத்திரமே அவர் சவரம் செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படி என்றால், அந்த சிகைவலருக்கு சவரம் செய்பவர் யார்? மேற்கண்ட கூற்றின்படி தனக்குத் தானே சவரம் செய்யும் எவருக்கும் அவர் சவரம் செய்பவர் அல்லர். ஆகவே அவர் தனக்குத் தானே சவரம் செய்பவர் என்றால், தனக்குத் தானே சவரம் செய்ய முடியாது என்றாகிறது. அத்துடன், அவர் தனக்குத் தானே சவரம் செய்யாதவராக விளங்கினால் மாத்திரமே தனக்குத் தானே சவரம் செய்பவராக விளங்க முடியும் என்றாகிறது! அப்படி என்றால், அந்த சிகைவலருக்கு சவரம் செய்பவர் யார்? - Bertrand Russell)

basic statements

அடிப்படைக் கூற்றுகள்

begging the question

மெய்ப்பிக்க முன் மெய்யெனல்


(எ- கா:

"குருவில் பிழை பிடிப்பது பிழை"

"ஏன்?"

"குரு பிழை விடமாட்டாரே!") 

bias

பக்கச்சார்பு

biconditional statement

(iff  = if and only if )

இருசார்புக் கூற்று

bivalence

இருவலு (மெய், பொய் வலு)

capacity to reason

நியாயம் உரைக்கும் திறன்

categorical proposition

திட்டவட்டமான கூற்று

categorical syllogism

திட்டவட்டமான நியாயத்தொடை

category error

வகுதி வழு

causal fallacy

ஏதுப் போலி

causation = causality

விளைவிப்பு 

cause and effect

ஏதும் விளைவும்

caveat

முன்னெச்சரிப்பு

certainty

உறுதிப்பாடு

coherence

இயைவு

coherence theory of truth

இயைவு மெய்க் கோட்பாடு

collective use of a term

ஒரு பதத்தின் கூட்டுப் பயன்பாடு 


(எ.கா:  பாகற்காய் கசக்கும் = பாகற்காய்கள் எல்லாம் கசக்கும்)

complex statement

தொகுதிக் கூற்று; சரடுக் கூற்று

complexity

தொகுதியீடு; சரடு

compound statement

கூட்டுக் கூற்று

concept

கருதுபொருள்

conclusion

முடிபு

conditional statement (If p, then q)

நிலைசார் கூற்று 


(எ-கா: மழை  பெய்தால், அவர்கள் குடை பிடிப்பார்கள்)

conjecture

ஊகம்

connotation = intension

உட்பொருள்

consequent

பின்விளைவுக் கூறு 


(எ-கா: தீப்பற்றினால், புகைக்கும்)

contextual definition of a word

சொல்லின் சூழ்நிலைக்கான வேற்றுச்சொல் வரையறை = ஒரு சொல் ஒரு சூழ்நிலையில் பொருள்படும் விதத்தை வேறு சொற்களில் வரையறுத்தல் 

contingent truth

தங்கியமையும் உண்மை 


(எ-கா: மனிதர்கள் வேறு உயிரினங்களிலிருந்து உருவாகினார்கள்)

contradiction

முரண்பாடு

contradictory statement

முரண்பட்ட கூற்று

contrapositive statement = If not q, then not p

தலைநேர்மாறு கூற்று

contrary statement

எதிர்மாறு கூற்று         

converse statement = If q, then p

மறுதலைக் கூற்று 


(எ-கா: அவர்கள் குடை  பிடித்தால், மழை பெய்கிறது)

copula (i.e: be, seem, look)

இணைப்புச்சொல்

corollary

நேர்விளைவு

correlation

இடைத்தொடர்பு

correspondence theory of truth

மெய் நேரொப்புக் கோட்பாடு 


(எ-கா:

ஒருவர் பிறந்த திகதி 1990-04-22 என்று வைத்துக் கொள்வோம். அதற்கொரு சான்று தேவைப் படுகிறது. அப்பொழுது அவருடைய பிறப்புச் சான்றிதழ் உற்றுநோக்கப்படுகிறது. அவர் தெரிவித்த திகதியும், அவருடைய பிறப்புச் சான்றிதழில் உள்ள திகதியும் நேரொத்தவையாக விளங்குகின்றன. அவர் பிறந்த திகதி இங்கு நேரொப்புக் கோட்பாட்டின்படி எண்பிக்கப் படுகிறது)

counter-example

எதிர்-எடுத்துக்காட்டு

counterfactual statement = if p then q

நேர்வெதிர்க் கூற்று 


(எ-கா: நீ அழைத்திருந்தால் நான் வந்திருப்பேன்)

criteria approach

பிரமாண அணுகுமுறை

criterion of adequacy

நிறைவுடைமைப் பிரமாணம்

criterion of relevance

இயைபுடைமைப் பிரமாணம்

critic's strategy

கண்டிப்பவரின் உபாயம் 


(எ-கா: "இறக்குமதிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை நான் கண்டிக்கிறேன்." இங்கு மறுபேச்சுக்கு இடமில்லை)

critical thinking

திறனாய்வுச் சிந்தனை

critical thinking skills

திறனாய்வுச் சிந்தனைத் தேர்ச்சிகள்

deductive argument

உய்த்தறிவு வாதம்

deduction

உய்த்தறிவு 


(எ-கா: காகங்கள் எல்லாம் கரியவை; இது ஒரு காகம்; ஆகவே இது கரியது)

definition

வரையறை; வரைவிலக்கணம்

denotation = extension

குறிப்பொருள்

descriptive language

விவரண மொழி

descriptive meaning

விவரணக் கருத்து

dilemma

சங்கடம்; திண்டாட்டம்; கவர்ப்பொறி இருதலைப்பொறி; இருதலைக் கொள்ளி

directive language

பணிப்பு மொழி

disjunct

பிரிகூறு

disjunction = either p or q

பிரிநிலை 


(எ-கா: ஒன்றில் அவர் காணாமல் போய்விட்டார் அல்லது வெளிநாடு போய்விட்டார்)

distributive use of a term

ஒரு பதத்தின் வகுப்பீட்டுப் பயன்பாடு

doubt

ஐயம்

emotive language

உணர்வுறுத்து மொழி

empirical statement

பட்டறிவுக் கூற்று

empirical truth claim

பட்டறிவு மெய்ம்மைக் கோரிக்கை

enthymeme

குறைநியாயத்தொடை 


(எ-கா: அரசியல்வாதிகள் பெரிதும் ஊழல்-பேர்வழிகள். ஆகவே எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் ஊழல்-பேர்வழி) 

equivocation

மழுப்பல்; கருத்துமயக்கல்

essentialist definition

உள்ளியல்பு வரையறை

evaluative language

மதிப்பிடு மொழி

evaluative meaning

மதிப்பிடு கருத்து

evocative language

உணர்வூட்டு மொழி

explanation

விளக்கம்

explanatory adequacy = adequacy of explanation

விளக்க நிறைவு  

fact ("I mean by a 'fact' something which is there , whether anybody thinks so or not. If I look up a railway timetable and find that there is a train to Edinburgh at 10 A.M., then, if the timetable is correct, there is an actual train, which is a 'fact.' The statement in the timetable is itself a 'fact,' whether true or false, but it only states a fact if it is true, i.e., if there really is a train. Most facts are independent of our volition; that is why they are called 'hard,' 'stubborn' or 'ineluctable.' Physical facts, for the most part, are independent, not only of our volitions but even of our existence -  Bertrand Russell)   

மெய்ப்பொருள்; விவரம்; நேர்வு; உண்மை

factual claims

மெய்ப்பொருள் வாதீடுகள்;

விவர வாதீடுகள்

factual statement

மெய்ப்பொருட் கூற்று; 

விவரக் கூற்று 


(எ-கா: அந்த வழக்கு விசாரணை 6 நாட்கள் நடைபெற்றது)

fallacy

போலி(மை)

fallibilism

வழுவாய்ப்புவாதம் 

false cause

பொய் ஏது

false confidence

பொய் நம்பிக்கை

false dilemma

பொய்த் திண்டாட்டம்

false statement

பொய்க் கூற்று

falsifiability

பொய்வாய்ப்புடைமை 


(எ-கா: "அன்னங்கள் அனைத்தும் வெள்ளை." வேறு நிறம் கொண்ட ஓர் அன்னம் அகப்பட்டால், அதனைக் கொண்டு "அன்னங்கள் அனைத்தும் வெள்ளை" என்னும் கூற்றைப் பொய்ப்பிக்க முடியும். அவ்வாறு பொய்ப்பிக்கக்கூடிய வாய்ப்பே, பொய்வாய்ப் புடைமை. அதாவது பொய்வாய்ப்புடைமை என்பது மெய்வாய்ப்புடைமையை உணர்த்துகிறது - Karl Popper) 

formal invalidity

முறைமை வலிதின்மை

function of language

மொழியின் தொழிற்பாடு

fuzzy logic

ஐதான அளவையியல் 


(இதில் சற்று, மிகவும், பெரிதும்... போன்ற அடைகள் தாராளமாகப் பயன்படுத்தப்படுவதால், இது முறைசார் அளவையியல் ஆகாது)

grammatical ambiguity

இலக்கணவாரியாக

இருபொருள்படுகை 

heuristic principle

பட்டறிவு நெறி

Hume's fork = David Hume's Fork = Relations of ideas and Matters of Fact

எண்ணங்களின் உறவும், விவர

விடயங்களும்

hypothesis

கருதுகோள்

hypothetical proposition

கருதுகோள் முன்னீடு

idea theory of meaning

எண்ணக் கருத்துக் கோட்பாடு

illusion

மாயை

impartial adjudicator's strategy

பக்கம்சாரா தீர்ப்பாளரின் உபாயம் 


(எ-கா: "இன்றியமையாத பொருட்கள் தற்பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை என்றால், அல்லது அவற்றுக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவினால், அவை உற்பத்தி செய்யப்படும் கட்டம் ஓங்கும்வரை, அல்லது அவற்றுக்கான தட்டுப்பாடு நீங்கும்வரை, அவற்றை இறக்குமதி செய்யலாம். உள்நாட்டில் தாராளமாக உற்பத்தி செய்யப்பட்டு, தாராளமாகக் கிடைக்கும்

பொருட்கள் எவற்றையும் இறக்குமதி செய்யக்கூடாது!")   

implication

உட்கிடை; மறைகுறிப்பு; விளைவு; தாக்கம்

inconsistency

மாறுகொளக்கூறல்; முன்பின் முரண்பாடு

induction by confirmation

உறுதிப்படுத்தலுடன் கூடிய தொகுத்தறிவு

induction

தொகுத்தறிவு 


(எ-கா: இந்தக் காகம் கரியது; அந்தக் காகம் கரியது; ஆகவே காகங்கள் எல்லாம் கரியவை)

inductive argument

தொகுத்தறி வாதம்

inductive generalization

தொகுத்தறிவுடன் கூடிய பொதுமையாக்கம்

inference

அனுமானம்

interpretive skills

பொருள்கோடல் திறன்

interrogative language

வினாவு மொழி

invalid argument

வலிதிலா வாதம்;வலிதற்ற வாதம்

invalidity

வலிதீனம்;வலிதின்மை;வலிதறவு

inverse statement = If not p, then not q

நேர்மாறு கூற்று 


(எ-கா: மழை பெய்யா விட்டால், அவர்கள் குடை பிடிக்க மாட்டார்கள்)

irrational technique of persuasion

நியாயம்மீறி இணங்கத்தூண்டும் உத்தி

irrelevance

இயைபின்மை; பொருந்தாமை

joint method of agreement and difference

உடன்பாட்டு வேறுபாட்டுக் கூட்டு முறை

justification

நியாயப்பாடு; நியாயப்படுத்துகை

laws of logic

அளவையியல் விதிகள்

lemma

முற்கோள்

liar's paradox

பொய்யர் முரண்மை 


(எ-கா: "அடுத்த கூற்று பொய். முந்திய கூற்று மெய்!")

linguistic ambiguity

மொழிவழி இருபொருள்படுகை

loaded term

முடிச்சுப் பதம்; சரட்டுப் பதம்

logic

அளவையியல்; தருக்கவியல்

logical fallacies

அளவையியற் போலிகள்; ஏரணப்போலிகள் 

logical strength

அளவையியல் வலு; ஏரண வலு

logical positivism

அளவையியற் புலனறிவாதம்; ஏரணப் புலனறிவாதம் 

major premise

பெரு முன்னீடு 


(எ-கா: எல்லா மலேசியர்களும் ஆசியக் கண்டத்தவர்கள்)

meaning

கருத்து

method

முறை

method of absurd example

அபத்த எடுத்துக்காட்டு முறை

method of agreement

உடன்பாட்டு முறை

method of concomitant variations

உடனிணை வேறுபாட்டு முறை

method of difference

வேறுபாட்டு முறை

method of residue

எச்ச முறை

minor premise

சிறு முன்னீடு


(எ-கா: சாக்கிரட்டீஸ் ஒரு மனிதர்)

modus ponens

உடன்பாட்டு முறை 

(எ-கா: புகைக்கிறது என்றால் எரிகிறது; புகைக்கிறது; ஆகவே எரிகிறது)        

modus tollens

மறுப்பீட்டு முறை 


(எ-கா: புகைக்கவில்லை என்றால் எரியவில்லை; புகைக்கவில்லை; ஆகவே எரியவில்லை)

moral judgement

ஒழுக்க மட்டீடு; ஒழுக்க நிதானிப்பு

moral justification

ஒழுக்க நியாயப்பாடு

moral maturity

ஒழுக்க முதிர்ச்சி

moral reasoning

ஒழுக்க நியாயம்

necessary condition

அவசிய நிபந்தனை

necessary and sufficient conditions

அவசிய, போதிய நிபந்தனைகள்

necessary truth

இன்றியமையா உண்மை 


(எ-கா: இரு முனைகளுக்கிடையே, அவற்றை இணைக்கும் நேர் கோடே மிகக் குறுகியது)

negation = not p

மறுப்பு 


(எ-கா:


கூற்று: 2 + 2 = 4 (மெய்)

மறுப்பு: 2 + 3 = 4 (பொய்) 

இங்கு கூற்று மெய்யாகிறது, மறுப்பு பொய்யாகிறது

 

கூற்று: நாய் ஒரு பூனை (பொய்)

மறுப்பு: நாய் ஒரு பூனை அல்ல (மெய்)

இங்கு கூற்று பொய்யாகிறது, மறுப்பு மெய்யாகிறது) 

normative principles

நியம நெறிகள்

objective approach

புறவய அணுகுமுறை

obscure = vague

தெளிவற்ற; மங்கிய; மழுங்கிய

operational definition

அலுவலுக்கான வரையறை 


(எ-கா: இந்த நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே வயதுவந்தவர்கள்) 

ostensive definition

எடுத்துக்காட்டு வரையறை 


(எ-கா: நீலநிறப் பொருட்களை எடுத்துக்காட்டி நீலநிறத்தை வரையறுத்தல்)

paradox

முரண்புதிர்

performative language

ஆற்றுகை மொழி

persuasive language

இணங்கத்தூண்டும் மொழி

persuasive redefinition

இணங்கத்தூண்டும் மீள்வரையறை

postulate

அடிக்கோளிடு; அடிக்கோள்

pragmatic theory of truth

செயல்நோக்கு மெய்க் கோட்பாடு

premise

எடுகூற்று

principle of charity

நெகிழ்ந்து பொருள்கொள் நெறி

proof

சான்று

proposition

முன்னீடு

puzzle

புதிர்

quality and quantity

தரமும் தொகையும்

rational agreement

நியாயபூர்வமான இணக்கம்

reason

ஏது; காரணம்; நியாயம்; தருக்க சிந்தை; தருக்க சிந்தனைத் திறன்

reasoning

நியாயம் உரைத்தல்

reasoning skills

நியாயத்திறன்

reconstructing arguments

வாதங்களை மீளமைத்தல்

recreational language

கேளிக்கை மொழி

red herring

கவனத்தை திசைதிருப்பும் விடயம்

reductio ad absurdum

விழல்படு குறுக்கம்

reference theory of meaning

தொடர்பீட்டுக் கருத்துக் கோட்பாடு

referential ambiguity

தொடர்பீடுவாரியாக இருபொருள்படுகை

reification

உருக்கொடுப்பு

relevance

இயைபு; பொருத்தப்பாடு

reportive definition = standard definition

நியம வரையறை

rule of inference

அனுமான விதி

scientific reasoning

அறிவியல் நியாயம்

selectivity

தெரிவீடு

simple statement

எளிய கூற்று 


(எ-கா: நான் இளநீர் பருகினேன்)

sound mind

உளத்திட்பம்  

soundness

திட்பம்

standard definition = reportive definition

நியம வரையறை

stipulative definition

நிர்ணய வரையறை

structure of argument

வாதத்தின் கட்டமைப்பு

subject case

ஒப்புக்குட்படு பொருள்

subsidiary statements

உப கூற்றுகள்

sufficient conditions

போதிய நிபந்தனைகள்

syllogism

நியாயத்தொடை

synthetic statement

சேர்க்கைக் கூற்று 


(எ-கா: மழை பெய்கிறது)

tautology

கூறியதுகூறல்

theorem

தேற்றம்

tradition

மரபு

true statement

மெய்ம்மைக் கூற்று

truth

மெய்(ம்மை)

truth claim

மெய்ம்மை வாதீடு   

truth functional statement

மெய்ம்மைத் தொழிற்பாட்டுக் கூற்று

truth-table

மெய்ம்மை அட்டவணை

truth-value

மெய்ம்மைப் பெறுமதி

universalizability

பொதுமையுடைமை

vagueness

தெளிவீனம்

valid argument

வலிதான வாதம்

valid chain of reasoning

வலிது நியாயத் தொடர்

validity

வலிதுடைமை

value judgement

அகவய நிதானிப்பு; தன்னெண்ண நிதானிப்பு

verifiability

மெய்ப்புடைமை; நிச்சயிப்புடைமை

verifiable

மெய்காணவல்ல; உறுதிசெய்யவல்ல; நிச்சயிக்கவல்ல 

verification

மெய்காண்கை; உறுதிசெய்கை; நிச்சயிப்பு

verify

மெய்காண்; உறுதிசெய்; நிச்சயி

weasel word

மழுப்புச் சொல்


எ-கா: விலையேற்றத்தை "விலைமாற்றம்" எனல்;


...என்று கொள்ளப்படுகிறது; 


...என்கிறர்கள் ஆராய்ச்சியாளர்கள்; 


ஆய்வுகளின்படி...;


 ...என்பது திறனாய்வாளர்களின் கருத்து; 


...என்பதை அனைவரும் அறிவர்


No comments:

Post a Comment