INSURANCE = காப்புறுதி
absolute liability | முழுப் பொறுப்பு | |
accident benefits | விபத்து உதவிப்படி | |
accounts receivable coverage | வருமதிக் காப்பீடு | |
actual cash value | மெய்க் காசுப் பெறுமதி | |
actuary | காப்புறுதிக் கணக்கீட்டாளர் | |
additional living expense insurance | மேலதிக வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி | |
additional premium | மேலதிக கட்டுப்பணம் | |
adjuster | நெகிழ்விப்பாளர் | |
adjustment | நெகிழ்விப்பு | |
agent | முகவர் | |
all-risk policy = all-perils policy | முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம் | |
applicant | விண்ணப்பதாரி | |
application | விண்ணப்பம் | |
appraisal | கணிப்பு | |
appraise | கணி | |
appraiser | கணிப்பாளர் | |
arbitration | நடுத்தீர்ப்பு | |
arbitration clause | நடுத்தீர்ப்பு கூற்று | |
arbitrator | நடுத்தீர்ப்பாளர் | |
arrears | நிலுவை | |
arson | தீவைப்பு | |
assess | கணிப்பிடு | |
assessment | கணிப்பீடு | |
assigner = assignor | உரித்திடுநர் | |
assignment | உரித்தீடு | |
assumed liability | ஏற்றுக்கொண்ட பொறுப்பு | |
authorization | அனுமதி | |
automobile insurance | ஊர்திக் காப்புறுதி | |
automobile line | ஊர்திக் காப்புறுதி வகை | |
avoidance of risk | ஆபத்து தவிர்ப்பு | |
bad faith = intent to deceive | தகாத எண்ணம் = ஏய்க்கும் எண்ணம் | |
basic insurance policy | அடிப்படைக் காப்புறுதி ஒப்பந்தம் | |
betterment | (1) செப்பம் (2) செப்பஞ்செயல் | |
breach | மீறல் | |
broad coverage | பரந்த காப்பீடு | |
builders risk insurance | கட்டுமானர் ஆபத்துக் காப்புறுதி | |
burglar alarm | கன்னமிடல் எச்சரிக்கை ஒலி | |
burglary insurance | கன்னமிடல் காப்புறுதி | |
business insurance | வணிகக் காப்புறுதி | |
business interruption insurance | வணிகத் தடங்கல் காப்புறுதி | |
calculate | கணக்கிடு | |
calculation | கணக்கீடு | |
casualty line | சேதாரக் காப்புறுதி வகை | |
catastrophic loss | பேரிழப்பு | |
certificate of insurance | காப்புறுதிச் சான்றிதழ் | |
certified copy | அத்தாட்சிப்படுத்திய பிரதி | |
chartered insurance broker | பட்டயக் காப்புறுதித் தரகர் | |
chattels | தளபாடங்கள் | |
civil commotion | குடிமக்கள் கொந்தளிப்பு | |
claim | கோரிக்கை | |
claimant | கோரிக்கையாளர் | |
claims examiner | கோரிக்கை தேர்வாளர் | |
clause | வாசகம் | |
co-insurance clause | சக காப்புறுக் கூற்று | |
co-insurer | சக காப்புறுதியுறுநர் | |
collapse | நிலைகுலைவு | |
collection agency | கடன் அறவீட்டு முகமையகம் | |
collision | மோதல் | |
collision coverage | மோதல் காப்பீடு | |
collusion | மறைசூழ்ச்சி | |
commercial auto insurance | வணிக ஊர்திக் காப்புறுதி | |
commercial host liability = liquor liability | ஓம்பு வணிகர் பொறுப்பு; மதுவழங்கு பொறுப்பு | |
commercial property | வணிக உடைமை | |
commercial property policy | வணிக உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம் | |
commission | தரகு | |
community property | சமூக ஆதனம் | |
comprehensive automobile coverage | ஊர்திக்குரிய முழுக் காப்பீடு | |
comprehensive personal liability | தனியாளுக்குரிய முழுப் பொறுப்பு | |
compulsory insurance | கட்டாயக் காப்புறுதி | |
computation | கணிக்கை | |
concealment | தகவல் மறைத்தல் | |
condition | நிபந்தனை | |
condominium | கொண்டமனை | |
consequential loss | பின்விளை இழப்பு | |
contingent liability | சார்ந்த பொறுப்பு | |
contract | ஒப்பந்தம் | |
contractor's liability insurance | ஒப்பந்தி பொறுப்புக் காப்புறுதி | |
contractual liability | ஒப்பந்தப் பொறுப்பு | |
conversion | உருத்திரிப்பு | |
cover | காப்பிடு | |
coverage | காப்பீடு | |
critical illness insurance | தீவிர நோய்க் காப்புறுதி | |
death benefit | இறப்பு உதவிப்படி | |
debris removal | துண்டுதுகள் அகற்றல் | |
declaration | பிரகடனம் | |
declare a contract void | ஒப்பந்தம் வெற்றானதெனப் பிரகடனஞ்செய் | |
deductible | கழிப்புத்தொகை | |
defendant | எதிர்வாதி | |
deferred premium payment plan | பிற்போட்ட கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம் | |
demolition insurance | சிதைவகற்றல் காப்புறுதி | |
depreciation | தேய்மானம் | |
direct billing | நேரடி அறவிடல் | |
direct compensation | நேரடி நட்டஈடு | |
direct loss | நேரடி இழப்பு | |
directors' and officers' liability insurance | பணிப்பாளர்-அதிகாரிகள் பொறுப்புக் காப்புறுதி | |
disappearing deductible | மறையும் கழிப்புத்தொகை | |
disclaimer | துறவுரை | |
disclosure | வெளிப்படுத்தல் | |
dismemberment | அங்கவிழப்பு | |
drive other cars clause | வேறு கார்கள் செலுத்தல் வாசகம் | |
drive-in claims service | வருகை தந்து கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கும் சேவை | |
driver training credit | சாரதிப் பயிற்சிச் சலுகை | |
duty of care | கவனம் செலுத்தும் கடமை | |
dwelling | வசிப்பிடம் | |
dwelling coverage | வசிப்பிடக் காப்பீடு | |
earned premium | ஈட்டிய கட்டுப்பணம் | |
earthquake insurance | நிலநடுக்க காப்புறுதி | |
easement | வசதியுரிமை | |
effective date | செல்லுபடியாகும் திகதி | |
embezzlement | கையாடல் | |
employer's liability insurance | பணிக்கமர்த்துவோர் பொறுப்புக் காப்புறுதி | |
endorse | மேலொப்பமிடு | |
endorsement | மேலொப்பம் | |
equipment floater insurance | உபகரண பெயர்ச்சிக் காப்புறுதி | |
equivalent materials | நிகர்ப் பொருள்வகைகள் | |
errors and omissions insurance | வழு-தவிர்வுக் காப்புறுதி | |
escrow | மூன்றாந் தரப்பிடம் ஒப்படைத்த சொத்து | |
escrow account = impound account | மூன்றாந் தரப்பிடம் ஒப்படைத்த சொத்துக் கணக்கு | |
estate | ஆதனம் | |
estimation | குத்துமதிப்பு | |
evaluation | மதிப்பீடு | |
exceptions | விதிவிலக்குகள் | |
excess insurance | மிகைக் காப்புறுதி | |
exclusion | தவிர்ப்பு | |
exculpatory clause | விடுவிக்கும் கூற்று | |
exhibitions insurance | பொருட்காட்சிக் காப்புறுதி | |
expiration notice | முடிவடைவு அறிவிப்பு | |
expiry date | முடிவு திகதி | |
explosion insurance | வெடிப்புக் காப்புறுதி | |
exposure | தாக்கத்துக்கு உள்ளாதல் | |
facility of payment clause | கொடுப்பனவு வசதிக் கூற்று | |
fair market value | நியாய சந்தைப் பெறுமதி | |
fault determination rules | தவறு நிர்ணய விதிகள் | |
finding fault | தவறு காணல் | |
fire damage | தீச்சேதம் | |
fire insurance | தீக்காப்புறுதி | |
fire-resistive construction | தீ தடுப்புக் கட்டுமானம் | |
first party = policyholder | முதலாம் தரப்பு = காப்புறுதியுறுநர் | |
fittings | பொருத்துகலங்கள் | |
fixtures | இணைகலங்கள் = சேர்மானங்கள் | |
flat cancellation | படுரத்து | |
fleet policy | பன்னூர்தி ஒப்பந்தம் | |
forgery | போலியாக்கம்; போலியொப்பம் | |
fortuitous cause | தற்செயல் கூற்று | |
fortuitous event | தற்செயல் நிகழ்வு | |
fraud | மோசடி | |
fraudulent | மோசடியான | |
fraudulent misrepresentation | மோசடிப் பிறழ்கூற்று | |
friendly fire | ஆகிடத் தீ | |
garage liability insurance | ஊர்தி பழுதுபார்ப்பிட பொறுப்புக் காப்புறுதி | |
garaging location | ஊர்திக் காலை | |
general cover | பொதுக் காப்பீடு | |
general damages | பொது இழப்பீடு | |
general insurance | பொதுக் காப்புறுதி | |
general liability policy | பொது பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம் | |
good faith | நேரிய நோக்கம்; நன்னோக்கம் | |
goods and chattels | பொருட்களும் தளபாடங்களும் | |
government-run auto insurance | அரசாங்கம் நிர்வகிக்கும் ஊர்திக் காப்புறுதி | |
grace period | தயவு காலப்பகுதி | |
graduated driver's licensing | படிமுறைச் சாரதி உரிமம் வழங்கல் | |
gross negligence | மிக்க கவலையீனம் | |
guaranteed replacement cost endorsement | உத்தரவாத செலவீட்டு மேலொப்பம் | |
guarantor | உத்தரவாதி | |
habitational fire | வாழ்விடத் தீ | |
hail insurance | ஆலிக்காப்புறுதி | |
hazard | இடர் | |
hazard insurance | இடர்க் காப்புறுதி | |
highway traffic act | வீதிப் போக்குவரத்துச் சட்டம் | |
hit and run | மோதி விரைதல் | |
home insurance | வீட்டுக் காப்புறுதி | |
homeowners insurance | வீட்டு உடைமையாளர் காப்புறுதி | |
hostile fire | ஆகாவிடத் தீ | |
improvement | செம்மைப்பாடு | |
incendiary bomb = fire bomb | எரிகுண்டு | |
inception | தொடக்கம் | |
incident | நிகழ்வு | |
indemnify | இழப்பீடு செலுத்து | |
indemnity | இழப்பீடு | |
indirect or consequential loss | மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு | |
informed consent | விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு | |
inherent explosion | உள்ளார்ந்த வெடிப்பு | |
inherent vice | உள்ளார்ந்த கேடு | |
inspection | பரிசோதனை | |
inspector | பரிசோதகர் | |
insurable property | காப்புறுதி செய்யக்கூடிய உடைமை | |
insurance | காப்புறுதி | |
insurance broker | காப்புறுதித் தரகர் | |
insurance bureau | காப்புறுதிப் பணியகம் | |
insurance corporation | காப்புறுதிக் கூட்டுத்தாபனம் | |
insurance policy | காப்புறுதி ஒப்பந்தம் | |
insured = policyholder | காப்புறுதியுறுநர் | |
insurer | காப்புறுதியிடுநர் | |
insuring clause | காப்புறுதி வாசகம் | |
invalid | வலிதற்ற; செல்லாத; செல்லுபடியாகாத | |
joint and several liability clause | கூட்டு-தனிப் பொறுப்பு வாசகம் | |
judgment | தீர்ப்பு | |
landlord's liability | ஆதன உடைமையாளரின் பொறுப்பு | |
lapse | காலாவதியாகு(தல்) | |
law | சட்டம் | |
lawyer's professional liability | சட்டவாளரின் துறைமைப் பொறுப்பு | |
lease | வாடகை உடன்படிக்கை; குத்தகை | |
legal expense insurance | சட்டச் செலவுக் காப்புறுதி | |
legal liability | சட்டப் பொறுப்பு | |
legally binding contract | சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம் | |
lender | கடனிடுநர் = கடனிடுதரப்பு | |
lending | கடனீடு | |
lessee | குத்தகையுறுநர் = குத்தகைக்கு எடுப்பவர் | |
lessor | குத்தகையிடுநர் = குத்தகைக்கு கொடுப்பவர் | |
liability insurance | பொறுப்புக் காப்புறுதி | |
liability limits | பொறுப்பு வரம்பு | |
libel | வரைதூறு; எழுத்திலான அவதூறு | |
lien | பாத்தியம் | |
limitation period | வரையறுப்புக் காலப்பகுதி | |
loss of use insurance | பயன்பாடு இழப்புக் காப்புறுதி | |
low rise | தாழ்மாடிக் கட்டிடம் | |
malfeasance | தீது | |
malicious mischief | வன்மத் தீங்கு | |
malpractice | முறைகேடு | |
manufacturer's and contractor's liability policy | உற்பத்தியாளர்-ஒப்பந்தக்காரர் பொறுப்புக் காப்புறுதி | |
material fact | முக்கிய விடயம் | |
material misrepresentation | முக்கிய விடய பிறழ்கூற்று | |
merit rating | தகுதிக் கணிப்பீடு | |
moral hazard | குணவியல்புசார் இடர் | |
multi-peril policy | பன்னிடர்க் காப்புறுதி ஒப்பந்தம் | |
mutual insurance company | பன்கூட்டுக் காப்புறுதி நிறுவனம் | |
mysterious disappearance | மர்ம மறைவு | |
named insured | பெயர் குறிப்பிடப்பட்ட காப்புறுதியுறுநர் | |
natural disaster | இயற்கைப் பேரழிவு | |
negligence | கவலையீனம் | |
no-fault insurance | தவறு பொருட்படுத்தாமைக் காப்புறுதி | |
non-disclosure | வெளிப்படுத்தாமை | |
non-feasance | செயற்படாமை | |
non-hazardous | இடர் விளைவிக்காத | |
non-insurable | காப்புறுதி செய்யவியலாத | |
non-owned automobile policy = non-owner's policy | உடைமை கொள்ளாதோர் ஊர்திக் காப்புறுதி ஒப்பந்தம் | |
notice of loss | இழப்பு அறிவிப்பு | |
notice of termination | முடிவுறுத்தல் அறிவிப்பு | |
nuisance | தொல்லை | |
occupancy | குடியிருப்பு | |
occupier | குடியிருப்பாளர் | |
occupiers' liability | குடியிருப்பாளரின் பொறுப்பு | |
occurrence | நிகழ்வு | |
off premises clause | வளவுக்கு அப்பாற்பட்ட உடைமை வாசகம் | |
open stock policy | வெளியிருப்புக் காப்புறுதி ஒப்பந்தம் | |
option of renewal | புதுப்பிக்கும் விருப்பத்தெரிவு | |
optional coverage | விருப்பத்தெரிவுக் காப்பீடு | |
overlapping insurance | ஒன்றன்மேலொரு காப்புறுதி | |
owner's liability | உடைமையாளரின் பொறுப்பு | |
package policy | பொதிக் காப்புறுதி ஒப்பந்தம் | |
pain and suffering | நோவும் வேதனையும் = நோவு நொம்பலம் | |
pair and set clause | சோடி-தொகுதிக் கூற்று | |
partial loss | அரைகுறை இழப்பு | |
per annum | ஆண்டுதோறும் = ஆண்டுக்கு | |
per capita | ஆளுக்கு = தலைக்கு | |
peril | பேரிடர் | |
period of indemnity | இழப்பீட்டுக் காலப்பகுதி | |
perjury | பொய்ச்சாட்சியம் | |
permission granted clause | அனுமதி அளிப்புக் கூற்று | |
personal effects | கைவசப் பொருட்கள் | |
personal injury | உடற்காயம் | |
personal insurance | ஆட்காப்புறுதி | |
personal property | அசையும் சொத்து | |
personal property insurance | அசையும் சொத்துக் காப்புறுதி | |
physical hazard | உருப்படி இடர் | |
physical injury | உடலூறு | |
plaintiff | வழக்காளி | |
policy | காப்புறுதி ஒப்பந்தம் | |
policy conditions | காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள் | |
policy expiration date | காப்புறுதி ஒப்பந்த முடிவுத் திகதி | |
policy fee | காப்புறுதி ஒப்பந்தக் கட்டணம் | |
policyholder = insured | காப்புறுதியுறுநர் | |
precedent | முன்தீர்ப்பு | |
preliminary proofs of loss | இழப்புக்கான முதனிலைச் சான்றுகள் | |
premises | வளவு | |
premium | கட்டுப்பணம் | |
prior insurance | முந்திய காப்புறுதி | |
private passenger vehicle | சொந்தப் பயண ஊர்தி | |
pro rata cancellation | விகிதமுறை நீக்கம் | |
product liability insurance | ஆக்கப் பொறுப்புக் காப்புறுதி | |
product recall insurance | ஆக்க மீட்புக் காப்புறுதி | |
professional liability insurance | துறைமைப்பணிப் பொறுப்புக் காப்புறுதி | |
proof of loss | இழப்புக்கான சான்று | |
property and casualty insurance | உடைமை-சேதாரக் காப்புறுதி | |
property damage liability insurance | உடைமைச் சேதப் பொறுப்புக் காப்புறுதி | |
property insurance | உடைமைக் காப்புறுதி | |
prorating | விகிதமுறையீடு | |
provision | ஏற்பாடு | |
proximate cause | அண்மித்த ஏது = அண்மித்த காரணம் | |
real estate = real property | ஆதனம்; ஆதனத்துறை; ஆதனவியல் | |
real estate agent | ஆதன முகவர் | |
real estate broker | ஆதனத் தரகர் | |
real estate brokerage | ஆதனத் தரகாண்மை | |
real estate community | ஆதன சமூகம் | |
real estate property | ஆதனம் | |
real estate sales representative | ஆதன விற்பனைப் பிரதிநிதி | |
real estate trust account | ஆதன நம்பிக்கைக் கணக்கு | |
realty | ஆதனத்துறை; ஆதனவியல் | |
red book value | ஊர்திச் செவ்வேட்டுப் பெறுமதி | |
registered insurance broker | பதிவுற்ற காப்புறுதித் தரகர் | |
regulator | ஒழுங்குறுத்துநர் | |
reinstatement | மீள்நிலைப்படுத்துகை | |
reinsurance | மீள்காப்புறுதி | |
relative claim index | சார்புக் கோரிக்கைச் சுட்டெண் | |
removal | அகற்றல் | |
renewal | புதுப்பித்தல் | |
renewal certificate | புதுப்பித்தல் சான்றிதழ் | |
rent insurance | வாடகைக் காப்புறுதி | |
rental value insurance | வாடகைப் பெறுமதிக் காப்புறுதி | |
replacement cost | மாற்றீட்டுச் செலவு | |
return premium | மீள்வரு கட்டுப்பணம் | |
rider | சாருரை | |
risk | ஆபத்து | |
robbery | கொள்ளை | |
salvage | மீட்டெடு | |
salvage team | மீட்டெடுக்கும் அணி | |
salvaged property | மீட்டெடுத்த உடைமை | |
schedule | அட்டவணை | |
schedule of insurance | காப்புறுதி அட்டவணை | |
schedule of property | உடைமை அட்டவணை | |
scheduled property | அட்டவணையிட்ட உடைமை | |
seasonal risk | பருவகால ஆபத்து | |
second party = insurance company | இரண்டாம் தரப்பு = காப்புறுதி நிறுவனம் | |
slander | வசை(தூற்று) | |
smoke damage | புகைபடு சேதம் | |
social host liability | விருந்தோம்புநர் பொறுப்பு; மதுவழங்குநர் பொறுப்பு | |
spontaneous combustion | தன்னகத் தீமூள்வு | |
standard construction | நியமக் கட்டுமானம் = நியம நிர்மாணம் | |
standard form | நியமப் படிவம் | |
standard limits | நியம வரம்பு | |
standard of care | பராமரிப்பு நியமம் | |
standard provisions | நியம ஏற்பாடுகள் | |
statement of claim | கோரிக்கைக் கூற்று | |
statutory conditions | நியதிச்சட்ட நிபந்தனைகள் | |
subrogation | கடன்பற்றுரிமை | |
subrogee | கடன்பற்றுரிமையுறுநர் | |
subrogor | கடன்பற்றுரிமையிடுநர் | |
suit | வழக்கு | |
summons | அழைப்பாணை | |
superintendent of insurance | காப்புறுதி கண்காணிப்பாளர் | |
surrender | முன்கையளிப்பு | |
survey | ஆய்வு | |
tenant's liability | வாடகைக் குடியிருப்பாளர் பொறுப்பு | |
tenant's policy | வாடகைக் குடியிருப்பாளரின் காப்புறுதி ஒப்பந்தம் | |
term | நியதி; தவணை; பதம் | |
theft | களவு; திருட்டு | |
theft at or after fire | எரிகையில் அல்லது எரிந்தபின் திருடல் | |
third-party liability | மூன்றாம் தரப்பு பொறுப்பு | |
title | உரித்து | |
title insurance | உரித்துக் காப்புறுதி | |
tort | தீங்கு | |
tort-feasor | தீங்கு விளைவிப்பவர் | |
total loss | மொத்த இழப்பு | |
trespass | அத்துமீறல் | |
umbrella policy | மிகைக் காப்புறுதி ஒப்பந்தம் | |
underinsured motorist coverage | குறைகாப்புறுதி ஊர்தியாளர் காப்பீடு | |
underwriter | காப்புறுதி விண்ணப்ப கணிப்பாளர் | |
underwriting rules | காப்புறுதி விண்ணப்ப கணிப்பு விதிகள் | |
uninsurable perils | காப்புறுதி செய்யவியலாத பேரிடர்கள் | |
uninsured motorist coverage | காப்புறுதியுறாத ஊர்தியாளர் காப்பீடு | |
unnamed insured | பெயர்குறிப்பிடாத காப்புறுதியுறுநர் | |
unoccupied premises | குடியிரா வளவு = ஆளில்லா வளவு | |
unprotected premises | பாதுகாப்பற்ற வளவு = பாதுகாக்கப்படாத வளவு | |
utmost good faith | உச்ச நன்னோக்கம் | |
vacant building | வெறும் கட்டிடம் | |
valuable papers insurance | பெறுமதி ஆவணக் காப்புறுதி | |
valuation | மதிப்பீடு | |
vandalism | நாசவேலை | |
vehicle identification number | ஊர்தி அடையாள இலக்கம் | |
vicarious liability | மறைமுகப் பொறுப்பு | |
waive | தளர்த்திவிடு | |
waiver | தளர்த்திவிடுகை | |
waiver of subrogation | கடன்பற்றுரிமையை தளர்த்திவிடுகை | |
warranty | உத்தரவாதம் | |
water damage clause | நீர்ச் சேதக் கூற்று | |
windstorm insurance | புயல் சேதக் காப்புறுதி | |
without prejudice | பங்கமின்றி | |
No comments:
Post a Comment