ENGLISH-TAMIL PHRASES (SOMA-SYST)
somatic delusion | உடல் மலைவு |
somatic hallucination | உடல் பிரமை |
somatoform (somatization) disorder | உடல்தாக்கக் கோளாறு |
son preference | ஆண்குழந்தை மீதான நாட்டம் |
soot fall | புகையொட்டு வீழ்ச்சி |
sophisticated weapons | செப்பநுட்ப ஆயுதங்கள் |
sophistication, achieve | செப்பநுட்பம் எய்து |
sophistry, political | அரசியல் உருட்டுப்புரட்டு |
sorcerer, a | சூனியவாதி |
sorcery, practise | சூனியம் செய் |
sordid details | அருவருக்கும் விவரம் |
soul in sight, not a | எவரும் கண்ணில் படவில்லை |
soul mate | ஆருயிர் நண்பர்; ஆருயிர் துணைவர் |
soul of the dead soldier | இறந்த போர்வீரரின் ஆன்மா |
sound bite | காணொளி மேற்கோள் |
sound check | ஒலி சரிபார்ப்பு |
sound economy | திட்பமான பொருளாதாரம்; திண்ணிய பொருளாதாரம் |
sound effect | ஒலித் தாக்கம் |
sound mind, of | உளத்திட்பம் வாய்ந்த |
soundness of mind | உளத்திட்பம் |
soup kitchen | கஞ்சிமடம் |
source data | தோற்றுவாய்த் தரவுகள் (மூலங்கள்) |
sources of power | அதிகார பீடங்கள் |
sovereignty | இறைமை |
space and opportunity | அவகாசமும் வாய்ப்பும் |
space, empty | வெற்று வெளி |
space force | விண் படை |
space of time, in a short | குறுகிய காலப்பகுதியில் |
space tour | விண்ணுலா |
space tourism | விண்ணுலா துறை |
space tourist | விண்ணுலாவாணர் |
spacewalk = a period of time that an astronaut spends in space outside a spacecraft | விண் நடை |
spacing of pregnancies | இடைவிட்டுக் கருத்தரித்தல் |
spatial agnosia | இடமலைவு |
spatial distribution | இடப் பரம்பல் |
speaker phone | ஒலிபெருக்கித் தொலைபேசி |
Special Adviser on Gender Issues and Advancement of Women | பால்மைச் சர்ச்சைகள் மற்றும் முன்னேற்றம் குறித்த சிறப்பு மதியுரைஞர் |
Special Adviser on Women Workers' Questions | பெண் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்த சிறப்பு மதியுரைஞர் |
Special Adviser on Women, Environment and Development | பெண்கள், சூழல், விருத்தி குறித்த சிறப்பு மதியுரைஞர் |
Special Ambassador for the Elimination of Female Genital Mutilation | பெண் உறுப்புச் சிதைப்பு ஒழிப்பு சிறப்புத் தூதர் |
special counsel | சிறப்பு சட்டவுரைஞர் |
special damages | சிறப்பு இழப்பீடு |
special effects | செயற்கைக் காட்சிகள் |
special foods | சிறப்புணவு வகைகள் |
Special Envoy of the Secretary-General on Women and Development | ஐ. நா. தலைமைச் செயலாளரின் பெண்கள்–விருத்தி சிறப்புத் தூதர் |
Special Procedures Mandate Holder | சிறப்பு நடைமுறை ஆணையர் |
Special Rapporteur | சிறப்பு அறிக்கையாளர் |
Special Rapporteur on the Human Rights of Internally Displaced Persons | உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் |
Special Rapporteur on the situation of systematic rape, sexual slavery and slavery-like practices during periods of armed conflict, including internal conflict | உள்நாட்டுப் போராட்டம் உட்பட ஆயுதப் போராட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற திட்டமிட்ட வன்புணர்ச்சி, பாலியல் அடிமைப்பாடு மற்றும் அடிமைப்படுத்தல் போன்ற செயல்முறைகளின் நிலைவரம் குறித்த சிறப்பு அறிக்கையாளர் |
Special Rapporteur on traditional practices affecting the health of women and the girl child | பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதிக்கும் பாரம்பரிய செயல்முறைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் |
special-interest group | தனிநாட்டக் குழுமம் |
specialist, heart | இதய மருத்துவ விற்பன்னர் |
specialized skills | சிறப்புத் திறன்கள் |
special(i)ty food | சிறப்புச் சுவையுணவு |
special(i)ty, futurology is her | வருங்காலவியல் அவரது சிறப்புத்துறை |
species, human | மனித உயிரினம் |
specific learning disability | குறித்த கற்கை வலுவீனம் |
specific phobia | குறித்த வெருட்சி |
speculate on one’s motive | ஒருவரின் உள்நோக்கம் பற்றி உத்தேசி |
speculate on the stock market. | பங்குச் சந்தை வணிகம் புரி |
speculation, mere | வெறும் உத்தேசம் |
speculators, property | ஆதன வணிகர்கள் |
speech impairment | பேச்சுத் தடங்கல் |
spent conviction | காலாவதியான குற்றத்தீர்ப்பு |
spent force | வலுவிழந்த ஆள்; வலுவிழந்த தரப்பு |
spent, feel | களைத்துப்போ |
spent matches | தீர்ந்த தீக்குச்சிகள் |
spillover effect | கசிவு விளைவு |
spin doctor | கயிறு திரிப்பவர்; சரடு விடுபவர் |
spirit and matter | ஆன்மாவும் சடமும் |
spirit of justice | நீதியுணர்வு |
spiritual life | ஆன்மீக வாழ்வு |
split custody | பிரித்த கட்டுக்காப்பு (கூட்டுக் கட்டுக்காப்புக்கு உட்பட்ட பிள்ளைகளுள் ஒரு பிள்ளை பெரிதும் ஒரு பெற்றாருடனும், இன்னொரு பிள்ளை பெரிதும் மறு பெற்றாருடனும் வாழும் ஏற்பாடு) |
split personality | பிளவாளுமை |
spoken language | பேச்சு மொழி |
official spokesperson / spokesman / spokeswoman | அதிகாரபூர்வமான தரப்புமொழிவாளர் |
sponsor of the applicant | விண்ணப்பதாரியைப் பொறுப்பேற்பவர் |
sponsored applicant | பொறுப்பேற்கப்பட்ட விண்ணப்பதாரி |
spontaneous abortion | தன்னிகழ் கருச்சிதைவு |
spontaneous combustion | தன்னிகழ் தீமூள்வு |
spontaneous order | தன்னிகழ் ஒழுங்கு |
spontaneous recovery | தன்னிகழ் மீட்சி |
spontaneous-remission effect | தன்னிகழ் தணிவு விளைவு |
sports journalism | விளையாட்டுத்துறை ஊடகவியல் |
spotlight | சுட்டொளி; பொட்டொளி |
spousal consent | வாழ்க்கைத்துணையின் இசைவு |
spousal rape = marital rape | வாழ்க்கைத்துணையின் வன்புணர்ச்சி |
spousal support | வாழ்க்கைத்துணைக்கான உதவிப்படி |
spouse benefit | வாழ்க்கைத்துணை உதவிப்படி |
spurious correlation | போலி இடைத்தொடர்பு |
spy, a | ஒற்றர்; உளவாளி |
squeeze technique | அழுத்திப் பிடிக்கும் உத்தி |
stability of the country | நாட்டமைதி; நாட்டின் உறுதிப்பாடு |
stability of the ecosystem | சூழல்தொகுதியின் நிலைபேறு |
stability of the ladder | ஏணியின் உறுதி |
stable country | உறுதிவாய்ந்த நாடு |
stable population | நிலைபெற்ற குடித்தொகை |
stag party | மாப்பிள்ளைத் தோழர் விருந்து |
stage direction | மேடை நெறியாள்கை |
stage manager | மேடை முகாமையாளர் |
stage plan | மேடை அமைப்பு |
stages of loss and grief (denial, anger, bargaining, depression & acceptance) | இழப்பு-துயரக் கட்டங்கள் (மறுத்தல், சினத்தல், மேவல், சோர்தல், ஏற்றல்) |
stagnation, economic | பொருளாதார தேக்கநிலை |
stakeholders, a number of | பல பங்குதாரர்கள்; பல கரிசனையாளர்கள் |
stale water | பழுதுபட்ட நீர்; பழுதடைந்த நீர் |
stalled vehicle | நிலைகுலைந்த ஊர்தி |
stanchion, a long | நீண்ட பிடிவடம் |
standard construction | நியமக் கட்டுமானம்; நியம நிர்மாணம் |
standard definition = reportive definition | நியம வரையறை |
standard deviation | நியமப் பிறழ்வு |
standard form | நியமப் படிவம் |
standard limits | நியம வரம்பு |
standard of living | வாழ்க்கை நியமம் (தரம்) |
standard operating procedure | நியம நடவடிக்கை முறைமை |
standard provisions | நியம ஏற்பாடுகள் |
standard rules on the equalization of opportunities for persons with disabilities | மாற்றுத்திறனாளருக்கான வாய்ப்புகளை சமப்படுத்தும் நியம விதிகள் |
standardization | நியமவாக்கம் |
standardized mortality rate | நியம இறப்பு வீதம் |
standby services, medical | கைகாவல் மருத்துவ சேவைகள் |
standby ticket | கைகாவல் சீட்டு |
standby, put on | கைகாவல் நிலையில் வை |
stand-in actor | இடைநடிகர்; இடைநிரப்பு நடிகர் |
stand-up comedy | ஓரங்கப் பகிடி (விகடம்) |
stand-up comedian | ஓரங்கப் பகிடியாளர் (விகடர்) |
standing committee | நிலையியற் குழு |
standpoint epistemology | நிலைப்பாட்டு அறிவுநெறியியல் |
star-studded event | புகழ்பெற்ற கலைஞர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சி |
stare decisis = to stand by decided things | முன்தீர்ப்பு வழிநிற்கை |
state bank | அரச வங்கி |
state of affairs = situation | நிலைவரம் |
state of nature | இயற்கை நிலை |
state-of-the-art technology = cutting edge technology | புத்தம்புதிய தொழினுட்பவியல் |
State of the World's Women Report | உலக மகளிர் நிலைவர அறிக்கை |
state protection | அரச பாதுகாப்பு |
state-sponsored doping | அரச ஆதரவுடன் போதையூட்டல் |
state the facts | விவரம் கூறு |
stateless nation | அரசற்ற இனம் |
statement of claim | கோரிக்கைக் கூற்று |
static population level | நிலையான குடித்தொகை மட்டம் |
status certificate | தகுநிலைச் சான்றிதழ் |
status quo | நிலவும் சூழ்நிலை |
status quo ante | முன்னைய சூழ்நிலை |
status, a person without | தகுநிலையற்ற ஆள் |
statute of limitation | காலவரையறை நியதிச்சட்டம் |
statutory conditions | நியதிச்சட்ட நிபந்தனைகள் |
statutory declaration | நியதிச்சட்டப் பிரகடனம் |
statutory rape | பராயமடையாதவருடன் வயதுவந்தவரின் வல்லுறவு |
stay a removal order | அகற்றல் கட்டளையை தள்ளிவை |
stay the charges | குற்றச்சாட்டுகளை தள்ளிவை |
stay, letter of | தங்கல் கடிதம் |
steering committee | நெறிமுறைக் குழு |
stepbrother | மாற்றுச் சகோதரன் |
stepchild | மாற்றுப்பிள்ளை; மாற்றுமகவு |
stepdaughter | மாற்றுமகள் |
stepfather | மாற்றுத்தந்தை |
stepmother | மாற்றுத்தாய்; மாற்றாந்தாய் |
step nosing | படிவிளிம்பு |
stepparent | மாற்றுப் பெற்றார் |
stepparents | மாற்றுப் பெற்றோர் |
step siblings | மாற்று உடன்பிறப்புகள்; மாற்றுச் சகோதர சகோதரிகள் |
stepsister | மாற்றுச் சகோதரி |
stereotype threat | படிவார்ப்புக்கு உள்ளாகும் அச்சம் |
stereotyped movements | படிவார்ப்பு நகர்வுகள் |
stereotyping of older persons | முதியோரை படிவார்ப்புக்கு உட்படுத்தல் |
stiff neck | கழுத்துப் பிடிப்பு |
stigma of alcoholism | மதுநுகர்வுக்கு அடிமைப்பட்டு வடுப்படல் |
stigmatize alcoholics | மதுநுகர்வுக்கு அடிமைப்படுவோரை வடுப்படுத்து (அடிமைப்படுவோருக்கு வசையுண்டாக்கு) |
sting operation | கொடுக்குப்பிடி; இரகசிய ஆள்மாறாட்ட நடவடிக்கை |
stipulative definition | நிர்ணய வரையறை |
stock market | இருப்புச் சந்தை |
Stockholm Syndrome | சிறைகொள்வோர் மீது சிறைப்பட்டோர் கொள்ளும் பரிவு |
stockpile of oil | எண்ணெய் சேமக்கையிருப்பு |
Stolen Assets Recovery Task Force | திருட்டுச் சொத்து மீட்பணி |
stool softener | மலமிளக்கி |
stop and start technique | நிறுத்தி நிறுத்தி தொடங்கும் உத்தி |
stop payment | கொடுப்பனவு நிறுத்து |
stop-payment | கொடுப்பனவு நிறுத்தம் |
storm sewer | வெள்ளக் கழிகால்; வெள்ளக் குழாய் |
storm trooper | முறியடிப்பு படையினர் |
storm tank | வெள்ளத் தொட்டி |
storm water | வெள்ள நீர் (மழைநீர், பனிநீர்) |
straddling bus | கடப்பு மின்பேருந்து |
straddling fish stock | புலம்பெயர் மீனினம் |
strategic sale | தந்திரோபாய விற்பனை |
strategic nuclear weapons | கேந்திர அணுவாயுதங்கள் |
Strategic Arms Limitation Talks = SALT | கேந்திர அணுவாயுத வரம்புப் பேச்சுவார்த்தை |
Strategic Arms Reduction Treaty = START | கேந்திர அணுவாயுத குறைப்பு உடன்பாடு |
Strategic Defence Initiative = Star Wars | கேந்திர அணுவாயுத தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு முன்முயற்சி; விண் போர் |
strategic gender interests | பால்மை உபாய நலன்கள் |
strategic importance | கேந்திர முக்கியத்துவம் |
strategic points | கேந்திர மையங்கள் |
strategist, military | படையியல் விரகாளர் (தந்திரோபாயி) |
strategy, military | படையியல் விரகு (தந்திரோபாயம்) |
straw poll | கீற்றுக் கணிப்பு |
stray bullet | சிதறு சன்னம் |
stray dog | தெருநாய் |
stream bank erosion | ஓடைக்கரை மண்ணரிப்பு |
stream bank management | ஓடைக்கரை பேணல் |
stream of consciousness | உணர்வோடை; நனவோடை |
stream wash | வெள்ளாவிச் சலவை |
streaming audio | நிகழ்வலை ஒலிபரப்பு |
streaming media | நிகழ்வலை ஊடகம் |
streaming video | நிகழ்வலைக் காணொளி |
stress test | உளைச்சல் தேர்வு |
stressful life | உளைச்சல்மிகுந்த வாழ்வு |
striking example | துலக்கமான எடுத்துக்காட்டு |
strip mining | மேற்படை அகழ்வு |
strip search | ஆடைகளைந்து தேடுதல் |
stripper, a | துகிலுரி நடனர் |
stripper, a female | துகிலுரி நடனி |
stripper, a male | துகிலுரி நடனன் |
striptease, do a | துகிலுரி நடனம் ஆடு |
at one stroke = at a single stroke | ஒரே அடியில் |
stroke of a pen, at the | ஓர் ஒப்பம் வைப்பதன் மூலம் |
stroke of genius, a | மேதைமை வினைத்திறன் |
structural adjustment | கட்டமைப்புச் சீரீடு |
structural genocide | கட்டமைப்புவாரியான இனக்கொலை |
structural lag | கட்டமைப்புவாரியான பின்னடைவு |
structural racism; systemic racism; institutional racism; institutionalized racism | கட்டமைத்த இனவாதம்; கட்டமைப்புவாரியான இனவாதம் |
structural social mobility | கட்டமைப்புவாரியான சமூகப் பெயர்ச்சி |
structural violence | கட்டமைப்புவாரியான வன்முறை |
structural–functional paradigm | கட்டமைப்பு-செயற்பாட்டுப் படிமை |
structure of an argument | வாதத்தின் கட்டமைப்பு |
structured genocide | கட்டமைத்த இனக்கொலை |
student authorization | மாணவர்க்கான அனுமதி |
student counselling | மாணவர்க்கான புத்திமதி |
student-at-law = articled clerk = articling student | பொருந்திப்பயிலும் சட்ட மாணவர் |
stupefying substances | மதிமயக்கும் போதைமருந்துகள் |
Sub Commission on the Promotion and Protection of Human Rights | மனித உரிமைகள் மேம்பாடு, பாதுகாப்பு உப-ஆணையம் |
sub judice, This case is | இந்த வழக்கு நீதிமன்றின் விசாரணைக்கு உட்பட்டுள்ளது (ஆதலால் அதைப் பற்றிக் கதைப்பது சட்டவிரோதம்) |
subculture theory | கீழைமாந்தர் பண்பாட்டுக் கோட்பாடு |
subdermal contraceptive implant | தோலடி உட்பதிவுக் கருத்தடை |
subject case | உட்படு பொருள் |
subject property | உட்படும் ஆதனம் |
subjective intent | அகவய நோக்கம் |
subject-matter jurisdiction | விடய நியாயாதிக்கம் |
subordinate financing | உப நிதியீடு |
subsidiary, a | கிளை வணிக நிலையம் |
subsidiary motion | துணை முன்மொழிவு |
subsidiary statements | துணைக் கூற்றுகள் |
subsidies to reduce pollution | மாசு தணிப்பு மானியங்கள் |
subsoil assets | கீழ்மண் கனியங்கள் |
substance abuse | போதைமருந்து துர்ப்பிரயோகம் |
substantive evidence | பொருண்மைச் சான்று |
Substantive Law | பொருண்மைச் சட்டம் |
substantive motion | பொருண்மை முன்மொழிவு |
substitute motion | பதில் முன்மொழிவு |
subterfuge, indulge in | உருட்டுப்புரட்டில் திளை |
subversion of democracy | குடியாட்சியைக் கருவறுத்தல் |
subversive activities | கருவறுக்கும் செயற்பாடுகள் |
subvert democracy | குடியாட்சியைக் கருவறு |
successful aging | நலம்பெற மூப்பெய்தல் |
sue the government | அரசாங்கத்தின் மீது வழக்குத்தொடு |
sufferance warehouse | தடுத்துவைத்த பொருட்குதம் |
sufferance = tolerance | சகிப்பு |
sufficient conditions | போதிய நிபந்தனைகள் |
suggestive language | குறிப்புணர்த்து மொழி |
summary conviction | குறுவிசாரணைக் குற்றத்தீர்வு |
summary conviction offenses | குறுவிசாரணைத் தீர்வுக்குரிய குற்றங்கள் |
summary execution | சடுதி இறப்புத் தண்டனை; விசாரணையற்ற இறப்புத்தண்டனை |
summary lead | தலைப்புச் சுருக்கம் |
summary of an article | கட்டுரையின் பொழிப்பு (சுருக்கம்) |
summon a witness | சாட்சிக்கு அழைப்பாணையிடு |
summum bonum = supreme good | உச்சநலம் |
sump pump | தேங்குநீர் பாய்ச்சி |
sundry income | பலவித வருமானம் |
sunflower oil | சூரியகாந்தி எண்ணெய் |
sunny day | வெயில் நாள் |
sunset clause (provision) | காலக்கெடு ஏற்பாடு |
suo motu = on its own motion | தன்மொழிவின் பேரில் |
superannuation allowance | வயோதிப உதவிப்படி |
supererogatory act | கடப்பாடு விஞ்சிய செயல் |
superintendent of insurance | காப்புறுதி கண்காணிப்பாளர் |
Superior Court | மேல் நீதிமன்று |
superiority complex | உயர்வுளச் சிக்கல் |
supermarket | பேரங்காடி |
supernumerary judge | மேலதிக நீதிபதி |
superseding motion | மேலுறு முன்மொழிவு |
superstructure, cost of | மேற்கட்டுமான செலவு |
supervision order | மேற்பார்வைக் கட்டளை |
supplementary medicine | பிற்சேர்ப்பு மருந்து; மேலதிக மருந்து |
supplementary question | பிற்சேர்ப்பு வினா; மேலதிக வினா |
supply and demand | கிடைப்பும் கிராக்கியும்; நிரம்பலும் கேள்வியும் |
supply chain | வழங்கல் சங்கிலி |
supply chain meltdown | வழங்கல் சங்கிலி நிலைகுலைவு |
supply point | வழங்கல் முனை |
supply teacher | பதிலீட்டு ஆசிரியர் |
support bank | ஆதரிப்பு வலையம் |
support deduction order | உதவிப்படி கழிப்புக் கட்டளை |
support group | ஆதரவுக் குழுமம் |
support order | உதவிப்படிக் கட்டளை |
support person | உதவியாளர்; ஆதரிப்பாளர் |
support system | ஆதரிப்புக் கட்டுக்கோப்பு |
supporting evidence | துணைச் சான்று |
supporting fire | துணை வேட்டு |
supporting unit | துணைப் பிரிவு |
supportive housing | ஆதரிப்பகம் |
supranational institution | சர்வதேய நிறுவனம் |
supremacist, white | வெள்ளையின மேலாதிக்கவாதி |
supremacy of the parliament | நாடாளுமன்றத்தின் மேலாண்மை (மீயாண்மை) |
supremacy, white | வெள்ளையின மேலாதிக்கம் |
Supreme Commander = Commander-in-Chief | தலைமைத் தளபதி; சேனாதிபதி |
Supreme Court | உச்ச நீதிமன்று |
Supreme Self | பரம்பொருள்; பரமாத்மா |
surface runoff | தரைப்புற வடிந்தோடுநீர் |
surface water | தரைப்புற நீர் |
surface-to-air missile (SAM) | புறத்துவான் உந்துகணை |
surface-to-surface missile (SSM) | புறத்துப்புற உந்துகணை |
surplus value | மேல்மிகைப் பெறுமதி |
surrender the passport | கடவுச்சீட்டை ஒப்படை |
surrender to the police | காவல்துறையினரிடம் சரணடை(வு) |
surreptitious glance | கள்ளப் பார்வை |
surrogacy contract | பதிலி ஒப்பந்தம் |
surrogate father | பதிலித் தந்தை |
surrogate mother | பதிலித் தாய் |
surrogate motherhood | பதிலித் தாய்மை |
surveillance camera | கண்காணிப்பு ஒளிப்படக்கருவி |
surveillance society | கண்காணிப்புச் சமூகம் |
surveillance, place somebody under | ஒருவரைக் கண்காணிப்புக்கு உட்படுத்து |
survey questions | ஆய்வு வினாக்கள் |
surveyor general | தலைமை அளவையாளர் |
survival ratio method | தப்பிவாழ்வு விகித முறை |
survivor centered approach | தப்பிவாழ்பவரை மையப்படுத்திய அணுகுமுறை |
survivor's benefit | மீந்தார் உதவிப்படி |
survivorship | மீந்தார் உரிமை |
susceptible of various interpretations | பல்வேறு பொருள்கோடல்களுக்கு இடங்கொடுக்கவல்ல |
susceptible politicians | மசியவல்ல அரசியல்வாதிகள் |
susceptible to flattery | புகழ்ச்சிக்கு மசியவல்ல |
suspended sentence | இடைநிறுத்திய தண்டனைத் தீர்ப்பு |
suspended solid | தொங்கு திண்மம் |
suspension or termination | இடைநிறுத்தம்(ல்) அல்லது முடிவுறுத்தம்(ல்) |
suspicion, on | ஐயுறவு கொண்டு; சந்தேகத்தின் பேரில் |
sustain simple lifestyle | எளிய வாழ்க்கைப் பாணியை பேணிக்கொள் |
sustain smooth relationship | சுமுக உறவு பேணு |
sustainable argument | நிலைநிறுத்தவல்ல வாதம் |
sustainable development | பேண்தகு விருத்தி |
sustainable economic growth | பேண்தகு பொருளாதார வளர்ச்சி |
Sustainable Energy Authority | பேண்தகு வலுவள அதிகாரசபை |
sustainable farming | பேண்தகு பண்ணையம் |
sustainable forest management | பேண்தகு வன முகாமை |
sustainable society, environmentally | சூழல் பேண்தகு சமூகம் |
sustainability, debt | படுகடன் தீர்க்கும் வல்லமை; தான் பட்ட கடனை தானே தீர்க்கும் வல்லமை |
sustainability, environmental | சூழல் பேண்தகு பயன்பாடு |
sustained economic growth | நிலைபெற்ற பொருளாதார வளர்ச்சி |
sustained, objection | ஆட்சேபம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது |
sustainably, live | வளம்பேணி வாழு |
swear an oath or affirm | சூளுரை அல்லது உறுதிமொழி அளி; சத்தியம் செய் அல்லது உறுதிமொழி அளி |
swear at someone | ஒருவரை திட்டு (இழித்துரை) |
swear to tell the truth | உண்மை உரைப்பதாக ஆணையிடு |
swear word | இழிசொல் |
sweeping fire = traversing fire | பரம்படி வேட்டு |
sweetheart contract = sweetheart deal | இனிய ஒப்பந்தம்; இனிய பேரம் |
SWIFT code = The Society for Interbank Financial Telecommunication Code | உலகளாவிய வங்கியிடை நிதிய தொலைத்தொடர்பு சமாசக் குறியீடு |
sworn testimony | சத்திய சாட்சியம் |
symbolic play | குறியீட்டு நாடகம் |
symbolic verb | குறிப்பு வினை |
sympathizing and empathizing with one another | ஒருவரை ஒருவர் பரிவுடன் புரிந்து கொள்ளுதல் |
sympathy and empathy | பரிவும் புரிவும் |
symphony orchestra | பேரிசைப் பல்லியம் |
symposium, technical | தொழினுட்ப ஆய்வரங்கு |
synchronized swimming = artistic swimming | இசைபட நீந்தல் |
syncretism, religious | சமயக் கலப்பு |
syndicate, a | பல்தரப்புச் சங்கம் |
syndicated columnist | பல்தரப்புப் பத்தியாளர் |
syndicated loan | பல்தரப்புக் கடன் |
syndicated throughout India, Her column is | அவரது பத்தி இந்தியா முழுவதும் பற்பல ஊடகங்களில் வெளியிடப்படுகிறது |
synergy between humans and nature synergy = synergism | மனிதரும் இயற்கையும் ஒத்துழைக்கும் வலு; ஒத்துழைப்பு வலு |
synthetic manure | சேர்க்கை எரு |
synthetic statement | சேர்க்கைக் கூற்று (எ-கா: மழை பெய்கிறது) |
syrup, imported | இறக்குமதிசெய்த இன்பானம் |
systematic approach | திட்டமிட்ட அணுகுமுறை |
systematic rape | திட்டமிட்ட வன்புணர்ச்சி |
systematized killings | ஒழுங்குமுறைக் கொலைகள் |
systemic racism; structural racism; institutional racism; institutionalized racism | கட்டமைத்த இனவாதம்; கட்டமைப்புவாரியான இனவாதம் |
System-wide Medium-term Plan for the Advancement of Women | மகளிரின்முன்னேற்றத்துக்கான கட்டமைப்பளாவிய இடைநடுக்காலத் திட்டம் |
systolic pressure | இதய ஒடுக்க அழுத்தம் |
No comments:
Post a Comment