Search This Blog

                                                       ENGLISH-TAMIL PHRASES (O)

O tempora! O mores! = Oh the times! Oh the customs! (Cicero, 106-43 BC)

காலங்களே! வழமைகளே!

oath or solemn affirmation

சத்தியம் அல்லது பற்றுறுதி மொழி

obiter dictum

தீர்ப்பிடைக் கூற்று; இடைநேர் கூற்று

object permanence

பொருள் நிலைகோள்

object relations theory

புறப் பற்றுறவுக் கோட்பாடு

objection overruled

ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டுள்ளது

objection sustained

ஆட்சேபம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

objectionable evidence

மறுத்தற்குரிய சான்று; ஆட்சேபிக்கத்தக்க சான்று

objective approach

புறவய அணுகுமுறை

objective intent

புறவய நோக்கம்

obligated organization

கடப்பாடுடைய அமைப்பு

oblique fire

சாய் வேட்டு

obscene language

ஆபாச மொழி

obscure historical facts

தெளிவற்ற வரலாற்று விவரங்கள்

obscure reasons

தெளிவற்ற காரணங்கள்

observation post

அவதானிப்பு நிலை

observation well

அவதானிப்புக் கிணறு; தரைநீர் அவதானிப்புக் கிணறு

observational learning

அவதானிப்புக் கற்கை

observer bias

அவதானியின் பக்கச்சார்பு

obsessed with ideology

கருத்தியலுடன் ஒன்றிய; கருத்தியலில் ஒன்றிய

obsessional cleaning and washing

சுத்தம்செய்வதிலும் கழுவித் துடைப்பதிலும் ஒன்றியிருத்தல்

obsessional checking

செவ்வைபார்ப்பதில் ஒன்றியிருத்தல்

obsessional thoughts

ஒன்றிய எண்ணங்கள்

obsessive-compulsive disorder

ஒன்றல்-உந்தல் கோளாறு

obsolescent etiquette

அருகும் ஆசாரம்; வழக்கொழியும் ஆசாரம்

obsolete etiquette

அருகிய ஆசாரம்; வழக்கொழிந்த ஆசாரம்

obstacle race

தடங்கல் ஓட்டம்

obstetric fistula

கர்ப்பகால புரைக்கசிவு

obstruct justice

நீதிக்குத் தடங்கல் விளைவி

obstructed labour

மகப்பேற்றுத் தடங்கல்

obstruction of justice

நீதிக்குத் தடங்கல் விளைவிப்பு

occult, the

மாய்மாலம்

occupation, army of

ஆக்கிரமிப்பு படை

occupational gender segregation

தொழில்சார் பால்மைப் பாகுபாடு

occupational health hazards

தொழில்சார் சுகாதாரக் கெடுதிகள்

occupational prestige

தொழில்சார் மரியாதை

occupational safety standards

தொழில்சார் பாதுகாப்பு நியமங்கள்

occupational segregation

தொழில்வாய்ப்பை வகுத்து ஒதுக்குதல்

occupational stereotype

தொழில்சார் படிவார்ப்பு

occupational therapy

தொழில்சார் சிகிச்சை

occupiers' liability

குடியிருப்பாளரின் பொறுப்பு

ocean dumping

கடலில் கொட்டுதல்

ocean incineration =  incineration at sea

கடற்கல உதவியுடன் நீறாக்கல்

odious debt = illegitimate debt

சட்டப்பேறற்ற படுகடன்

Oedipal stage

பாலியக் கட்டம்; 4-6 வயது ஆண்குழந்தை தாயையும்,பெண்குழந்தை பிதாவையும்  மோகிக்கும் கட்டம்

Oedipus complex

பாலியப் பிறழ்வு; ஆண்குழந்தை தாயையும், பெண்குழந்தை பிதாவையும் மோகித்தல்

oeuvre, Ilankeeran's

இளங்கீரனின் படைப்புத்திரட்டு

off premises clause

வளவுக்கு அப்பாற்பட்ட உடைமைக் கூற்று

off-site surveillance

புறநிலைக் கண்காணிப்பு;  புறநிலை வேவு

off the record

அந்தரங்கமாக

offence, a minor

குறுங்குற்றம்; சிறுகுற்றம்

offence, take

குறைநினை; குறைவிளங்கு

offender, a minor

குறுங்குற்றவாளி

offending cartoon

புண்படுத்தும் கேலிச்சித்திரம்

offensive weapon

வன் படைக்கலம்; வல்லாயுதம்

offensive word

துன்மொழி

offer them assistance

அவர்களுக்கு உதவ முன்வா

offer of assistance, an

உதவ முன்வருகை

offer to pay the highest price

உச்சவிலை செலுத்த முன்வா

offer, This house is under

இந்த வீட்டுக்கு ஒரு விலை கிடைத்துள்ளது

Office of the United Nations High Commissioner for Human Rights

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணை யாளரின் அலுவலகம்

officer of the day

நாளதிகாரி

official announcement

அதிகாரபூர்வமான அறிவிப்பு

official opposition

அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி

offshore banking

வெளிநாட்டு வரிப்புகலிட வங்கிவைப்பு

offshore financial centres

வெளிநாட்டு வரிப்புகலிட நிதி நிலையங்கள்

offshore oil rig = oil platform =  oil rig

கடல்மேல் எண்ணெய்க் களம்

offshore patrol

புறக்கரையோரச் சுற்றுக்காவல்

offshore tax haven

வெளிநாட்டு வரிப்புகலிடம்

off stream fish farming

புறநீர் மீன்பண்ணை

oil fingerprinting

எரிநெய்ச் சுவட்டுப் பதிவு

oil spill

எரிநெய்க் கசிவு

old age dependency ratio

மூப்புக்கால தங்கிவாழ்வு விகிதம்

old people (old old)

முதியோர்; முதுமுதியோர் (75-84)

older persons

மூத்தோர்

oldest old persons

மூத்தமுதியோர்; மூப்புமிகு முதியோர் (85+)

olfactory hallucination

மணப் பிரமை

oligarch, a Russian

இரசிய செல்வச்சீமான்

oligarchy

செல்வர்குழாம்; செல்வராட்சி

olive oil

ஒலிவுநெய்

oncogenic virus

புற்றுநோய் நச்சுயிரி

one day international

ஒருநாள் நாட்டிடைத் துடுப்பாட்டம்

one standard drink

ஒரு நியம மது அலகு

one-act-play

ஓரங்க நாடகம்

one-party-dominant system

ஒருகட்சியாண்மை

one-person household

தனியாள் மனை

online banking

இணையவழி வங்கியலுவல்

online (cyber)  bullying

இணைய அடாவடி; இணையத் தறுகண்மை

online (internet) dating

இணைய உடன்போக்கு

on-site examination

அகநிலைத் தேர்வு; அகநிலை ஆய்வு

onus of proof

எண்பிக்கும்பொறுப்பு; மெய்ப்பிக்கும் பொறுப்பு

op-ed = opposite editorial page

கருத்துரைப் பக்கம்

open air theatre

வெட்டவெளி அரங்கம்

open air zoo

வெட்டவெளி விலங்கினக் கோட்டம்

open burning

வெளியிலிட்டு எரித்தல்

open court, in

நீதிமன்றில்

open discussion

வெளியரங்க(மான) கலந்துரையாடல்

open dump

கொட்டுவெளி

open house

வீட்டு விருந்துபசாரம்; பார்வை நேரம்

open land

வெளி நிலம்

open mortgage

திறந்த அடைமானம்

open peer review 

வெளிமுக ஒப்பாளர் மீள்நோக்கு (ஆக்கியோரும் மீள்நோக்கும் ஒப்பாளரும் இன்னார் என்பது வெளிப்படை)

open stock policy

வெளியிருப்புக் காப்புறுதி ஒப்பந்தம்

open verdict

காரணம்கூறா இறப்புத்தீர்ப்பு

openness order

தொடரல் கட்டளை

operant conditioning

செய்கை நெறிநிலைப்படுத்தல்

operant extinction

செய்கை ஒழிவு

operating budget

தொழிற்பாட்டுப் பாதீடு

operating income

தொழிற்பாட்டு வருமானம்

operational definition

தொழிற்பாட்டு வரையறை எ-கா: இந்த நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே வயது வந்தவர்கள்

operator =  telephonist

தொலைபேசியாளர்

opinion poll = Gallup Poll

கருத்து வாக்கெடுப்பு

opinionated older generation

கொண்டகருத்தில் ஒன்றிய பழந்தலைமுறை

opportunity cost

வாய்ப்பிழந்த செலவு

optical illusion

பார்வைத்திரிபு; திரிபுக்காட்சி

optimum population

உசிதநிலைக் குடித்தொகை

option of renewal

புதுப்பிக்கும் விருப்பத்தெரிவு

optional coverage

விருப்பத்தெரிவுக் காப்பீடு

optional protocol

விருப்பத்தெரிவு வரைமுறை

Optional Protocol to the Convention on the Elimination of All Forms of Discrimination against Women

பெண்களுக்கெதிரான பாரபட்ச வகைகள் அனைத்தையும் ஒழிப்பது குறித்த ஒப்பந்தத்துக்கான விருப்பதெரிவு வரைமுறை

Optional Protocol to the International Covenant on Economic, Social and Cultural Rights

பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் குறித்த சர்வதேச உடன்பாட்டுக்கான விருப்பத்தெரிவு வரைமுறை

oral contraceptives

கருத்தடை மாத்திரைகள்

oral contract

வாய்மொழி ஒப்பந்தம்

oral culture tradition

வாய்மொழிப் பண்பாட்டு மரபு

oral decision

வாய்மொழி முடிபு

oral impairment

வாய்மொழித் தடங்கல்; மட்டுப்பட்ட வாய்மொழி

oral  (verbal) order

வாய்மொழிக் கட்டளை

oral sex

வாய்க்குறி மதனம்

oral stage

வாயின்பக் கட்டம்

oral-aural communication

வாய்வழி-செவிவழித் தொடர்பாடல்

orchestra pit

பல்லியக் கூடம்

order of march

படைநடப்பு ஒழுங்கு

order tea, Let's

நாங்கள் தேநீர் கொணரப் பணிப்போம்

order, political

அரசியல் முறைமை

Order-in-Council

அரச மன்றக் கட்டளை

ordinance

கட்டளைச் சட்டம்

ordinarily resident

நிலையூன்றிய வாசி

ordinary interest

360 நாள்-வட்டி

organ harvest

உடலுறுப்பு அறுவடை

organ sale

உடலுறுப்பு விற்பனை

organ trade

உடலுறுப்பு வியாபாரம்

organic disease

உடலுறுப்பு நோய்; அங்க நோய்

organic farming

இயற்கை வேளாண்மை

organic fertilizer

இயற்கைப் பசளை; சேதனப் பசளை

organic food

இயற்கைப்பசளை உணவு

organic growth

இயற்கை வளர்ச்சி; இயல்பான வளர்ச்சி; உள்ளார்ந்த வளர்ச்சி

organic intellectual

உள்ளார்ந்த அறிவார்ந்தவர்

organism

அங்கி; உயிரி; உயிர்மம்

organization for combat

பொருது படையொழுங்கு

organizational barriers

அமைப்பகத் தடங்கல்கள்

organizational environment

அமைப்பகச் சூழல்

organizational management

அமைப்பக முகாமை

organizational psychologist

அமைப்பக உளவியலாளர்

organized crime

கூட்டுக் குற்றம்

organized criminality

கூட்டுக் குற்றச் செயற்பாடு

orientation and mobility skills

நாட்டத்துடன் நடமாடும் திறன்கள்

orientation course

அறிமுகப் பயிற்சிநெறி

orientation of the bird

பறவையின் நாட்டம்

orientation to profit making

இலாப நாட்டம்

oriented organizations, profit-

(oriented = orientated)

இலாபம் நாடும் அமைப்புகள்

original document

முழுமுதல் ஆவணம்; மூல ஆவணம்

original position

முழுமுதல் நிலைப்பாடு

original principal balance

முழுமுதல் கடன் மீதி

ornamental plants

ஒப்பனைச் செடிகள்

ostensible (apparent) authority

வெளித்தோற்ற அதிகாரம்

ostensible reason for the price hike

விலையேற்றத்துக்கு  முன்வைக்கப்படும் காரணம்

ostensive definition

எடுத்துக்காட்டு வரையறை எ-கா: நீலநிறப் பொருட்களை எடுத்துக்காட்டி நீலநிறத்தை வரையறுத்தல்

out guard

புறக் காவலணி

outcast, an

விலக்கப்பட்டவர்

outfall sewer

வெளிவிழு கழிகால்

out-group

புறக்குழுமம்

outlaw gambling

சூதாட்டத்தை சட்டவிரோதமாக்கு

out-migrants

வெளிக்-குடிபெயர்வாளர்

outpost area

புறக்காவல் நிலைப் பரப்பு

outpost line of resistance

புறக்காவல் எதிர்ப்பு நிரை

output, electricity

மின் உற்பத்தி

output, data

தரவு வெளியீடு

outreach services

வெளிக்கள சேவைகள்

outreach worker

வெளிக்களப் பணியாளர்

outsourcing

வெளித்தரப்பை பயன் படுத்தல்; வெளித்தரப்பிட மிருந்து தருவித்தல்; வெளித் தரப்பிடம் ஒப்படைத்தல்

outstanding amount

செலுத்தப்படாதுள்ள தொகை

outstanding charge

தீர்க்கப்படாதுள்ள குற்றச் சாட்டு

overactive bladder

சிறுநீர்ப்பை பதற்றம்

overbearing fellow

வீறாப்பான பேர்வழி

overcompensation

மிகை நட்டஈடு; மிகையீடு

overhead fire

மேல்வேட்டு

overland flow

தரைமேல் பாய்வு

overlapping insurance

ஒன்றன்மேலொரு காப்புறுதி

override objections

ஆட்சேபத்தை நிராகரி

overriding factor

இன்றியமையாத காரணி

overruled, objection

ஆட்சேபம் நிராகரிக்கப் பட்டுள்ளது

overt support

வெளிப்படையான ஆதரவு

over-the-counter medicines = non-prescription medicines

நிர்ணயமற்ற மருந்துவகைகள்; நிர்ணயமின்றி வாங்கும் மருந்துவகைகள்

oversight on our part

நாங்கள் அவதானிக்கத் தவறியமை

oversight committee

மேற்பார்வைக் குழு

overtly and covertly

வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்

overturn a decision

முடிபை நீக்கு

overvalued idea

வலிந்துவக்கும் எண்ணம்

overview, a brief

குறுநோக்கு

ovulatory cycle

சூல்வட்டம்

owner financing

உடைமையாளர் நிதியீடு

owner's liability

உடைமையாளரின் பொறுப்பு

ozone depletion

ஓசோன் குன்றல்

ozone hole

ஓசோன் புழை

ozone layer

ஓசோன் படை

No comments:

Post a Comment