Search This Blog

சட்டவியல் = LAW (Q-Z)

quash a conviction

குற்றத்தீர்ப்பை நீக்கு

quasi-judicial procedure

மருவு-நீதி நடைமுறை

quid pro quo = something for something

கைமாறு; பிரதிபலன்

quo warranto, writ of

அதிகாரவினாப் பேராணை

raid

திடீர்ச்சோதனை (இடு)

ransom

கப்பம்

rape

வன்புணர்ச்சி; வல்லுறவு

rave, illegal

சட்டவிரோத களிவெறியாட்டம்

ratification

ஏற்புறுதி

ratify

ஏற்றுறுதிப்படுத்து

ready to proceed

விசாரணைக்குத் தயாரான

reasonable doubt

நியாயமான ஐயம்

reasonable grounds

நியாயமான ஆதாரம்

reasonable person

நியாயமான ஆள்

reasons for decision

முடிபுக்கான காரணங்கள்

rebut

மறுத்துரை

recidivist

திருந்தாத் தவறாளி

reciprocal reward

இருவயினொத்த கைமாறு

reciprocating jurisdiction

இருவயினொத்த நியாயாதிக்கம்

reciprocity

இருவயினொப்பு

recognize as a convention refugee

பொருத்தனை அகதியாக ஏற்றுக்கொள்

recognizance

பிணைமுறி

reconsideration

மீள்கணிப்பு

reconvene the parties

தரப்புகளை மீளக் கூட்டு

recusal

(நீதிபதி) விசாரணை செய்வதை தவிர்த்தல் 


(ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு அந்த வழக்கின் பெறுபேறுகளில் தனிப்பட்ட அக்கறை இருந்தால், அது "அக்கறை முரண்பாடு" எனப்படும். அதனால் அவர் பக்கஞ்சாரக்கூடும். ஆதலால் அந்த வழக்கை விசாரணை செய்வதை அவர் தவிர்த்தல் கடன்)

recuse

(நீதிபதி) விசாரணை செய்வதை தவிர் 

redetermination

மீள்தீர்மானம்

re-enter

மீள நுழை

re-examination

மீள்-விசாரணை

refer the claim

கோரிக்கையைப் பாரப்படுத்து

referred claim

பாரப்படுத்திய கோரிக்கை

refoulement

(அகதிக் கோரிக்கையாளரை) திருப்பி அனுப்பல்

refugee

அகதி

refugee convention

அகதி பொருத்தனை

refugee protection

அகதிப் பாதுகாப்பு

refugee protection division

அகதிப் பாதுகாப்புப் பகுதி

refugee protection officer

அகதிப் பாதுகாப்பு அதிகாரி

refusal

மறுப்பு

refuse to accept

ஏற்கமறு

refutation

மறுத்துவாதிடல்

refute

மறுத்துவாதிடு

registrar

பதிவாளர்

registration of documents

ஆவணப் பதிவு

Registry of the Federal Court – Trial Division

ஒன்றிய நீதிமன்றப் பதிவகம் -விசாரணைப் பகுதி

Registry Office

பதிவு அலுவலகம்

regulate

ஒழுங்குபடுத்து

regulation

ஒழுங்குவிதி

regulative law

ஒழுங்குறுத்து சட்டம்

regulatory offence

ஒழுங்குவிதியை மீறிய குற்றம்

reimburse

ஈடுசெய்

reinstate

மீளவமர்த்து

reject

நிராகரி

rejection

நிராகரிப்பு

release on bail

பிணையில் விடுதலைசெய்

relevancy

இயைபுடைமை; பொருத்தப்பாடு

relevant

இயைபுடைய

relief, seek

நிவாரணம் கோரு

remedial and disciplinary measures

பரிகார-ஒழுக்காற்று நடவடிக்கைகள்

remission

தணிப்பு

remote evidence

சேய்மைச் சான்று

removal order

அகற்றல் கட்டளை

remove counsel

சட்டமதிஞரை அகற்று

reopen a claim

கோரிக்கையை  மீண்டும் முன்வை

repatriation

தாயகத்துக்கு அனுப்பல்

repeal

நீக்கு

report on inadmissibility

அனுமதிக்கவியலாமை பற்றிய அறிக்கை

reprieve

தண்டனை நிறுத்தம்

repudiate

மறுதலி

repudiation

மறுதலிப்பு

reputation

நன்மதிப்பு; நற்பெயர்

reputed husband

கணவராய் விளங்குபவர்

requisition

தேவைக் கோரிக்கை

res judicata

நீதிகண்டது

rescind a warrant

பிடியாணையை இலதாக்கு

rescue

காப்பாற்று

reserved decision

ஒத்திவைத்த தீர்மானம்

reserve judgement

தீர்ப்பை ஒத்திவை

reserved judgement

ஒத்திவைத்த தீர்ப்பு

resettlement

மீள்குடியமர்வு

residency obligation

வசிப்புக் கடப்பாடு

residuary estate

எஞ்சிய மரணச்சொத்து

resistance

எதிர்ப்பு

respite

இடை ஓய்வு

respondent

பதில்வாதி; எதிர்வாதி

restitution

மீட்டளிப்பு

restoration

மீள்வுறுத்தல்

restorative justice

மீள்வுறுத்து நீதி

restrain

தடைப்படுத்து

restraining order

தடைக் கட்டளை

restrict

கட்டுறுத்து; கட்டுப்படுத்து

restricted weapons

கட்டுறுத்தப்பட்ட ஆயுதங்கள்

resume

மீளத்தொடங்கு

resume a procedure

நடைமுறையை மீண்டும் தொடரு

retain a lawyer

சட்டவாளரை அமர்த்து

retainer

அமர்த்தற் கட்டணம்

retention money

பிடிப்பணம்

retrial

மறுவிசாரணை

retributive justice

ஒறுப்பு நீதி; தண்டிப்பு நீதி

retroactive law

பின்னோக்கிச் செல்லுபடியாகும் சட்டம்

retrospective rule

கடந்தகாலத்திலிருந்து செல்லு படியாகும் விதி

reunification of family members

குடும்ப உறுப்பினர்களின் மீளிணைவு

review

மீள்நோக்கு

review of decision for detention

தடுத்துவைக்கும் தீர்மானத்தை மீள்நோக்கல்

revise

மீட்டியமை

revision

மீட்டல்

revoke

நீக்கு

reward

வெகுமதி

rider

சாருரை

right of appeal

மேன்முறையிடும் உரிமை

Right of Minister

அமைச்சரின் உரிமை

right to fair trial

செவ்விய விசாரணைக்கான உரிமை

rigorous imprisonment

அருஞ்சிறை; கடூழியச் சிறைத் தண்டனை

riot police

கலகம் அடக்கும் காவல்துறை

Rule of Law

சட்ட ஆட்சி

rules of evidence

சாட்சிய விதிகள்

ruling

தீர்வுரை

safe haven

பத்திரமான புகலிடம்

safe third country

பத்திரமான மூன்றாவது நாடு

sanction of the court

நீதிமன்றின் இசைவு

sanctions, economic

பொருளாதாரத் தடைகள் 

sanctity of marriage

மணவாழ்வின் மகிமை

sanctity of law

சட்டத்தின் மகிமை

second degree murder

சடுதி வன்மக் கொலை

second degree unintentional murder 

சடுதி வன்மக் கருதாக்கொலை

secular state

உலகியல் அரசு; மதச்சார்பற்ற அரசு

security grounds

பாதுகாப்புக் காரணங்கள்

security risks

பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்

seduce

வசப்படுத்தி உடலுறவுகொள்

seduction

வசப்படுத்தி உடலுறவுகொள்கை

seized panel

பற்றிக்கொண்ட குழாம்

self-defence

தற்காப்பு

self-represented accused

சுயவாதாட்டப் பதில்வாதி 

senate

மூதவை

sentence

தண்டனைவிதிப்பு; தண்டனைத் தீர்ப்பு

separating claims

கோரிக்கைகளைப் புறம்பாக்கல்

sequester a jury

யூரர்குழுவை தனிமைப்படுத்து

sequestered jury

தனிமைப்படுத்திய யூரர்குழு

serious criminality

கடுங் குற்றச்செயற்பாடு

serve summons

அழைப்பாணை சேர்ப்பி

servitude

சேவகம்

set aside a decision

முடிபை புறந்தள்ளு

seven-day review

ஏழு-நாள் மீள்நோக்கு

sex trade worker

பாலியல் தொழிலாளர்

sexism

பால்மைப் பாரபட்சம் (பாகுபாடு)

sextortion

இணையப் பாலியல் மோசடி

sexual abuse

பாலியல் துர்ப்பிரயோகம்

sexual exploitation

பாலியல் நோக்கத்துக்குப் பயன் படுத்தல்

sexual harassment

பாலியல் தொந்தரவு

sexual intercourse

உடலுறவு; புணர்ச்சி

sexual interference

பாலியல் இடையூறு

sexual orientation

பால் நாட்டம்; பால் நிலைப்பாடு

sexual relationship

பாலுறவு

sexually abused children

பாலியல்வாரியாகத் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள்

sheriff

ஆராய்ச்சியார்

show-cause hearing = bail hearing

காரணம் காட்டல் விசாரணை; பிணை விசாரணை 

show-cause notice = bail notice

காரணம் காட்டல் அறிவித்தல்; பிணை அறிவித்தல்

show-cause order = bail order

காரணம் காட்டல் கட்டளை; பிணைக் கட்டளை

sine die = without fixing a date

காலவரையறையின்றி; திகதி குறிப்பிடாது

sin qua non = without which not = indispensable 

இன்றியமையாதது

slander

வசை; வசைதூற்று

Small Claims Court

சிறு கோரிக்கை நீதிமன்று

society, cooperative 

கூட்டுறவுச் சமாசம்

society wardship order

சிறாருக்கான சமுதாய பாதுகாவல் கட்டளை

social group persecution

சமூகக் குழுமக் கொடுமை

sodomite

குதவழிப் புணர்ச்சியாளர்

sodomy

குதவழிப் புணர்ச்சி

solemn affirmation

பற்றுணர்வுடன் கூடிய உறுதிமொழி

solemn music

பற்றுணர்வுடன் கூடிய இசை

solemn oath

பற்றுணர்வுடன் கூடிய சத்தியம்

solemnly, affirm

பற்றுணர்வுடன் உறுதியளி

solemnly, swear 

பற்றுணர்வுடன் சத்தியம்செய்

Solicitor General

தலைமை மன்றாடுநர்; மன்றாடுநர் அதிபதி

solitary confinement

தனிமறியல்; தனிக்காவல்; தனிச் சிறைவாசம்

sound mind, of

உளத்திட்பம் வாய்ந்த; சித்த சுவாதீனமுள்ள

soundness of mind

உளத்திட்பம்; சித்தசுவாதீனம்

special counsel

சிறப்புச் சட்டவுரைஞர்

special damages

சிறப்பு இழப்பீடு

spent conviction

காலாவதியான குற்றத்தீர்ப்பு

sponsor of the applicant

விண்ணப்பதாரியைப் பொறுப்பேற்பவர்

sponsored applicant

பொறுப்பேற்கப்பட்ட விண்ணப்பதாரி

spousal support

வாழ்க்கைத்துணைக்கான உதவிப்படி

spouse

வாழ்க்கைத்துணை

stalking = criminal harassment

குற்றத் தொந்தரவு; தொந்தரவுக் குற்றம்

stare decisis = to stand by decided things

முன்தீர்ப்பு வழிநிற்றல்

state protection

அரச பாதுகாப்பு

statement

கூற்று

statement that documents were provided

ஆவணங்கள் வழங்கிய கூற்று

statute of limitations

காலவரையறை நியதிச்சட்டம்

statutory declaration

நியதிச்சட்டப் பிரகடனம்

statutory rape

பராயமடையாதவருடன் வயதுவந்தவர் கொள்ளும் வல்லுறவு

stay a removal order

அகற்றல் கட்டளையை தள்ளிவை

stay the charges

குற்றச்சாட்டுகளை தள்ளிவை

step child

மறுதாரப் பிள்ளை

strangulation

திருகிக்கொல்லல்

student authorization

மாணவர்க்கான அனுமதி

student-at-law = articled clerk = articling student

பொருந்திப்பயிலும் சட்ட மாணவர்

stupefying substances

மதிமயக்கும் போதைப்பொருட்கள்

subjective intent

அக நோக்கம்

sub judice, This case is

இந்த வழக்கு நீதிமன்றின் விசாரணைக்கு உட்பட்டுள்ளது (ஆதலால் அதைப் பற்றி வெளியே கதைப்பது சட்டவிரோதம்)

subpoena

வரவாணை(யிடு)

subsidy

உதவிப்படி

substance abuse = drug abuse

போதைமருந்து துர்ப்பிரயோகம்

substantiate

மெய்யுறுதிப்படுத்து

substantive evidence

பொருண்மைச் சான்று

Substantive Law

பொருண்மைச் சட்டம்

successor

பின்னுரிமையாளர்

sue

வழக்குத்தொடு

suicide

தற்கொலை

suit

வழக்கீடு

summary conviction offences

குறுவிசாரணைத் தீர்வுக்குரிய குற்றங்கள்

summary execution

சடுதி மரண தண்டனை; விசாரணையற்ற மரண தண்டனை

summon a witness

சாட்சிக்கு அழைப்பாணையிடு

summons

அழைப்பாணை

suo motu action of the court, a

நீதிமன்றின் சொந்த நடவடிக்கை

suo motu statement, in a 

சொந்த அறிக்கையில் 

Superior Court

மேல் நீதிமன்று

supernumerary judge

மேலதிக நீதிபதி

supervision order

மேற்பார்வைக் கட்டளை

support order

உதவிப்படிக் கட்டளை

support deduction order

உதவிப்படி கழிப்புக் கட்டளை

supporting evidence

துணைச் சான்று

supremacy of parliament

நாடாளுமன்றத்தின் மேலாண்மை (மீயாண்மை)

Supreme Court

உச்ச நீதிமன்று

surcharge

மிகைக்கட்டணம்

surety

பிணையாளி

surname

குடும்பப் பெயர்

surtax

மிகைவரி

surveillance camera

கண்காணிப்பு ஒளிப்படக்கருவி

survivor

மீந்தார்

survivorship

மீந்தார் உரிமை

suspect

சந்தேகநபர்

suspend

இடைநிறுத்து

suspended sentence

இடைநிறுத்திய தண்டனைத்தீர்ப்பு

suspension or termination

இடைநிறுத்தம்(ல்) அல்லது முடிவுறுத்தம்(ல்)

suspicion

ஐயுறவு

swear

சத்தியம்செய்

swear solemnly

பற்றுறுதியுடன் சத்தியம்செய்

sworn testimony

சத்திய சாட்சியம்

tainted evidence

கறைபட்ட சான்று

tamper with evidence

சான்றைத் திரிவுபடுத்து

tangible evidence

உருப்படியான சான்று

temporal jurisdiction

கால நியாயாதிக்கம்

temporalities

கோயிலுடைமைகள்

temporary resident

தற்காலிக வாசி                                

temporary resident permit

தற்காலிக வசிப்பு அனுமதிப் பத்திரம்                             

temporary worker

தற்காலிக தொழிலாளர்

tenancy

வாடகைக் குடியிருப்பு

tender your resignation

உனது பதவிதுறப்பு மடலை சமர்ப்பி

termination and cancellation

முடிவுறுத்தலும் நீக்கலும்

terms and conditions

நியதிகளும் நிபந்தனைகளும்

territorial integrity

ஆள்புலத் திண்மை; ஆள்புலக் கட்டுறுதி

territorial waters

ஆள்புல நீர்ப்பரப்பு

territory

ஆள்புலம்

testament

இறுதியாவணம்; மரணசாதனம்

testamentary trust

இறுதியாவண நம்பிக்கைப் பொறுப்பு

testify

சான்றுபகரு; சாட்சியமளி

testimonial

நற்சான்றிதழ்

testimony

சான்றுரை; சாட்சியம்

theft at or after fire

எரிகையில் அல்லது எரிந்தபின் திருடல்

third degree murder

விளைவுக் கொலை

third party

மூன்றாந் தரப்பு

threat

அச்சுறுத்தல்

threaten

அச்சுறுத்து

thumb impression

பெருவிரல் அடையாளம்

title deed

உரித்துறுதி

toll

ஆயம்

tort

தீங்கு

tout

ஆட்கூட்டி

trafficking in persons = human trafficking

ஆட்கடத்து வியாபாரம்

transcript of the trial

விசாரணையின் எழுத்துப்பிரதி

transgress the bounds of decency

பண்புவரம்பை மீறு

transitional government

மாறுகால அரசாங்கம்

translator

மொழிபெயர்ப்பாளர்

transnational crime

நாடுகடந்து புரியும் குற்றம்

travel document

பயண ஆவணம்

treason

அரச துரோகம்

treaty

உடன்பாடு

trespass

அத்துமீறல்

triable issue

விசாரணைக்குரிய சர்ச்சை

trial

விளக்கம்; விசாரணை

trial-at-bar

நீதாய மன்ற விளக்கம்; யூரரில்லா நீதிமன்ற விளக்கம்

trial by jury

நடுவர்கள் மூலமான விசாரணை

trial judge

விளக்க (விசாரணை) நீதிபதி

tribunal

தீர்ப்பாயம்

ulterior motive

உள்நோக்கம்; உட்கிடை நோக்கம்

unambiguous

தெளிவான; இருபொருள்படாத

unconstitutional action

அரசமைப்புக்கு ஒவ்வாத நடவடிக்கை

uncontrollable impulse

கட்டுப்படுத்தவியலாத உந்தல்

undefended accused

சட்டவாதித் துணையற்ற பதில்வாதி

undertaking relating to sponsorship

பொறுப்பேற்புத் தொடர்பான உறுதிமொழி

undisclosed assets

வெளிப்படுத்தாத சொத்துகள்

undue hardship

அடா இடும்பை; மிகுந்த இன்னல்

unequivocal statement

தெட்டத்தெளிவான கூற்று

unexecuted warrant

நிறைவேற்றப்படாத கைதாணை

unilateral declaration of independence

ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம்

unimpeachable evidence

ஐயத்துக்கு இடங்கொடாத சான்று

unintentional murder

கருதாக்கொலை

uninterrupted possession

இடையறா உடைமை

United Nations High Commissioner for Refugees

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையாளர்

universal jurisdiction

உலகளாவிய நியாயாதிக்கம்

Universal Law

உலகளாவிய சட்டம்

unjust enrichment

அநியாய ஆதாயம்

unjustifiable action

நியாயப்படுத்தவியலாத நடவடிக்கை

unlawful assembly

சட்டவிரோதமான கூட்டம்

unlikely to appear

தோற்றும் வாய்ப்பு இல்லை

unnatural death

அவச்சா; இயற்கைக்கு மாறான இறப்பு

unprofessional conduct

துறைமைசாரா நடத்தை

unqualified applicant

தகைமையற்ற விண்ணப்பதாரி

unqualified support

முற்றுமுழுதான ஆதரவு

unreasonable conditions

நியாயமற்ற நிபந்தனைகள்

unrepresented accused

சட்டவாதித்துணையற்ற பதில்வாதி

unsound mind, of

உளத்திட்பமற்ற; சித்தசுவாதீனமமற்ற

unsoundness of mind

உளத்திட்பம் இல்லாமை; சித்தசுவாதீனம் இன்மை                                                                            

usury

கடுவட்டி

vacate determination

தீர்மானத்தை நீக்கு

vacate refugee protection

அகதிப் பாதுகாப்பை நீக்கு

vagrancy

அலைந்து திரிதல்; தெருச்சுற்றல்

vagrant

அலைந்து திரிபவர்; தெருச்சுற்றி

valid passport

வலிதான கடவுச்சீட்டு; செல்லும் (செல்லுபடியான) கடவுச்சீட்டு

validate

வலிதாக்கு; செல்லுபடியாக்கு

validity period

வலிது காலப்பகுதி; செல்லுபடியாகும் காலப்பகுதி

value of money

பணத்தின் பெறுமதி

vandalism

நாசவேலை

veracity

வாய்மை; மெய்ம்மை

verbal agreement

வாய்மொழி உடன்படிக்கை

verbatim report

சொல்லுக்குச் சொல்லான அறிக்கை

verdict

தீர்ப்பு

verifiable facts

உறுதிசெய்யக்கூடிய விவரங்கள்

verified by affidavit

சத்தியக்கடதாசியால் உறுதிசெய்யப்பட்ட

verify the quotation

மேற்கோளை உறுதிசெய்

vest in the temple, the property shall

ஆதனம் கோயிலுக்கு உரித்தாக வேண்டும்

vested in the minister, powers

அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்கள்

vested interests

உடைமை நலன்கள்; தன்னலமிகள்

vesting order

உரித்தாக்கல் உத்தரவு; உரித்தாக்கல் கட்டளை

veto

வெட்டுவாக்கு

vexatious action

அலைக்கழிக்கும் வழக்கு

vexatious litigant

அலைக்கழிக்கும் வழக்காடி

vice versa

மறுதலையாக

victim impact statement

பாதிக்கப்பட்டோர் கூற்று

victim surcharge

பாதிப்பு மிகைக்கட்டணம்

victim / witness assistance program

பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் உதவும் திட்டம்

vigilance

விழிப்பு

vigilante, a

தான்தோன்றிக் குழுமத்தவர்

vigilante group

தான்தோன்றிக் குழுமம்

vigilante justice

தான்தோன்றிக் குழும நீதி

vindicate

நிரபராதி என்பதை நிலைநிறுத்து

violate human rights

மனித உரிமைகளை மீறு

violence

வன்செயல்; வன்முறை

visa

உள்ளிசைவு

viva voce evidence

வாய்மொழிச் சாட்சியம்

void

வெறிதான; வெற்று

voir dire

ஏற்புடைமை விசாரணை

voluntary confession

மனமிசைந்த குற்றவொப்புதல்

voluntary departure

உளமிசைந்த புறப்பாடு

voluntary manslaughter

உளமிசைந்த ஆள்வதம்

vouch

உத்தரவாதமளி

wagering contract

பந்தய ஒப்பந்தம்

waive arraignment

குற்றவினாத்தொடுப்பை தளர்த்திவிடு

waiver of arraignment

குற்றவினாத்தொடுப்பை தளர்த்திவிடுதல்

War Crimes Act

போர்க் குற்றச் சட்டம்

ward

பாதுகாவற் சிறார்

warning

முன்னெச்சரிக்கை

warrant

பிடியாணை; எழுத்தாணை

warrant to arrest

பிடியாணை

well-founded fear of persecution

தகுந்த  காரணங்களுடன் கொடுமைக்கு உள்ளாகும் அச்சம்

whipping

சவுக்கடி

widow

கணவரை இழந்தவர்

widower

தாரமிழந்தவர்; மனைவியை இழந்தவர்

willful evasion

வேண்டுமென்றே தட்டிக்கழித்தல்

willful blindness

வேண்டுமென்றே கண்மூடித்தனமாக இருத்தல்

will = testament

விருப்பாவணம்; இறுதியாவணம்

Will Say Statement

அளிக்கவுள்ள சாட்சியம்

with impunity

தண்டனைப் பயமின்றி

withdraw the charges

குற்றச்சாட்டுகளை மீளப்பெறு

without let or hindrance

தங்குதடையின்றி

Witness Protection Act = Act for Protection of Witnesses

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம்

writ

பேராணை

writ of certiorari

பதிவேட்டுப் பேராணை

writ of delivery

ஒப்படைப் பேராணை

writ of execution

நிறைவேற்றுப் பேராணை

writ of possession

உடைமைப் பேராணை

writ of quo warranto

அதிகாரவினாப் பேராணை

writ of seizure and sale

பறிமுதல் விற்பனைப் பேராணை

writ of sequestration

பற்றிவைத்திருப்பு பேராணை

written request

எழுத்துமூல வேண்டுகோள்

written submissions

எழுத்துமூல சமர்ப்பணம்

wrongdoing

தவறிழைப்பு

wrongful conviction

தவறான குற்றத்தீர்ப்பு

young offender

இளந் தவறாளி

No comments:

Post a Comment