ENGLISH-TAMIL PHRASES
ENVISAGE-EYEWITNESS
envisage a bright future | ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கு |
envoy, special | சிறப்புத் தூதர் |
epics, Greek | கிரேக்க காவியங்கள் |
epidemic | கொள்ளைநோய் |
epiphany, a sudden | திடீர் உள்ளொளி; திடீர் ஞானோதயம் |
episode in the play, an | நாடகத்தில் ஒரு கட்டம் |
episodic memories | கட்டம் கட்டமான நினைவுகள் |
epistemic relativism | அறிவுநெறிச் சார்புவாதம் |
epithets, racial | இனவாத அடைமொழிகள் |
equal credit opportunity | சரிநிகர் கடன் வாய்ப்பு |
equal employment opportunity | சரிநிகர் தொழில்வாய்ப்பு |
equal opportunities and equal treatment for men and women workers with family responsibilities | குடும்ப பொறுப்புடைய ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சரிநிகர் வாய்ப்புகள், அவர்களை சரிநிகராக நடத்துதல் |
equal partnership (participation) | சரிநிகர் பங்கேற்பு |
equal remuneration for men and women workers for work of equal value | சரிநிகர் பெறுமதி வாய்ந்த பணியை ஆற்றும் ஆண், பெண் பணியாளர் களுக்கு சரிநிகர் ஊதியம் |
Equality Now | உடன் சமத்துவ இயக்கம் |
equality of opportunity | வாய்ப்புச் சமத்துவம் |
equality of result | பெறுபேற்றுச் சமத்துவம் |
equality of rights | உரிமைச் சமத்துவம் |
equality rights | சரிநிகர் உரிமைகள் |
equalization of opportunities | வாய்ப்புகளை சமப்படுத்தல் |
equipment floater insurance | உபகரண பெயர்ச்சிக் காப்புறுதி |
equitable action | தடைக்கட்டளை நடவடிக்கை |
equitable distribution | ஒப்புரவான விநியோகம்; நேர்த்தியான விநியோகம்; நேரிய விநியோகம் |
equity on the house | வீட்டுத் தேறுமதி (தேறிய பெறுமதி) |
equity transfer | சொத்துரிமை மாற்றம் |
equity, and equality | ஒப்புரவும் சமத்துவமும் |
equivalent materials | நிகர்ப் பொருள்வகைகள் |
equivocal statement | கருத்துமயக்கும் கூற்று; மழுப்பல் கூற்று |
erectile dysfunction | ஆண்குறி ஓங்காப் பிறழ்வு; ஆண்குறி ஒங்காமை |
erosion control | மண்ணரிப்பு கட்டுப்படுத்தல் |
erosion index | மண்ணரிப்புச் சுட்டு |
error of fact | விவர வழு |
error of law | சட்ட வழு |
errors and omissions insurance | வழு-தவிர்வுக் காப்புறுதி |
errors in thinking | சிந்திப்பு வழுக்கள் |
erstwhile companions | முன்னாள் கூட்டாளிகள் |
erudite critics | புலமைமிகுந்த திறனாய்வாளர்கள் |
escalate into a war, This battle could | இச்சமர் ஒரு போராய் ஓங்கக்கூடும் |
escalation of prices | விலை ஏற்றம்; ஓங்கிய விலை |
escort force | வழித்துணைப் படை |
escrow account; impound account | (மூன்றாந் தரப்பிடம்) ஒப்படைத்த சொத்துக் கணக்கு |
esoteric lecture | மறைஞான விரிவுரை |
espionage, industrial | கைத்தொழில் ஒற்றாடல் |
essential oil | தாவர எண்ணெய் |
essentialize state | அரசை குறுக்கியுரை |
essentialize state as coercive | அரசை பலவந்தமானது என்று குறுக்கியுரை |
essentialist definition | உள்ளியல்பு வரையறை |
establish identity | அடையாளத்தை எண்பி |
established custom | நிலைபெற்ற வழமை |
establishment code | தாபன விதிக்கோவை |
establishment, military | படையாதிக்கத் தரப்பு |
establishment, political | அரசியல் ஆதிக்கத் தரப்பு |
Establishment, the | ஆதிக்கத்தரப்பு |
estate tax | இறப்புச்சொத்து வரி |
estate trustee | இறப்புச்சொத்துப் பொறுப்பாளர் |
estate, industrial | கைத்தொழிற் பேட்டை |
estate, the late minister's | மறைந்த அமைச்சரின் ஆதனம் |
estimate of the situation | நிலைவர மதிப்பீடு |
estimated premium | மதிப்பிட்ட கட்டுப்பணம் |
estranged husband | புறம்போன கணவர் |
ethic, work | பணி ஒழுக்கம் |
ethical jurisprudence | ஒழுக்க சட்டவியல் |
ethics; moral philosophy | அறவியல்; ஒழுக்கவியல் |
ethics commissioner | ஒழுக்கநெறி ஆணையாளர் |
ethics, professional | துறைமை ஒழுக்கம் |
ethnic antagonism | இனக்குழுமப் பகை |
ethnic cleansing | இனக்குழுமக் களைவு |
ethnic composition | இனக்குழுமக் கட்டுக்கோப்பு |
ethnic group; a set of individuals whose identity is defined by common cultural traditions, language or heritage (Oxford) | இனக்குழுமம்; பொதுவான பண்பாட்டு மரபுகள், மொழி, பாரம்பரியம் கொண்டோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள் |
ethnic massacre | இனக்குழுமப் படுகொலை |
ethnic nationalism | இனக்குழுமத் தேசியவாதம் |
ethnic slaughter | இனக்குழுமக் கொலை |
ethos of nursing | தாதிமையின் இயற்பண்பு |
etiology; aetiology | ஏதியல் |
etiquette and protocol | ஒப்பாசாரமும் உபசரணையும் |
etymology, a study of | சொற்பிறப்பியல் ஆய்வு |
euphemism, avoid | இடக்கரடக்கலை தவிர் |
euphoria ended the following day | எக்களிப்பு அடுத்த நாள் முடிவடைந்தது |
Eurocurrency Market | யூறோ நாணயச் சந்தை |
euthymic mood | நல்லுளநிலை |
evacuated tube transport technology | வளிநீக்கிய குழாய்ப் போக்கு வரத்து தொழினுட்ப வியல் |
evacuation of wounded soldiers from the field | காயப்பட்ட படையினரை களத்திலிருந்து வெளியேற்றல் |
evade payment | கொடுப்பனவைத் தட்டிக்கழி |
evaluation of the curriculum | பாடத்திட்ட மதிப்பீடு |
evaluative language | மதிப்பிடு மொழி |
evangelize indigenous people | சுதேச மக்களை கிறீஸ்தவ சமயத்துக்கு மாற்று |
evaporation pond | கழிநீர் உலர் தேக்கம் |
evapotranspiration | தாவரம்-நீர்நிலை ஆவியாதல் |
ever-married person | ஒரு தடவையாவது மணம்புரிந்தவர் |
evict tenants | வாடகைவாசிகளை வெளியேற்று |
eviction notice | வெளியேற்ற அறிவிப்பு |
evidence (testimony) and exhibits | சாட்சியமும் தடயங்களும் |
evidence, give; testify | சாட்சியமளி; சான்றுபகர் |
evil state of mind | தீய உளநிலை |
evil, an | தீமை |
evocative language | உணர்வூட்டு மொழி |
evolution, theory of | கூர்ப்புக் கோட்பாடு |
evolutionary perspective | கூர்ப்புக் கண்ணோட்டம் |
ex gratia payment; voluntary payment as a favour | உளமுவந்த கொடுப்பனவு |
ex parte | மறுதரப்பின்றி |
ex parte trial | ஒருமுக விசாரணை; மறுதரப்பற்ற விசாரணை |
Ex turpi causa non oritur action; An action does not arise from a base cause | இழியேதுவால் வழக்கெழாது |
exact interest | 365 நாள்-வட்டி |
examination for discovery | விபர வெளியீட்டு விசாரணை |
examination of title | உரித்துறுதிப் பரிசீலனை |
examination-in-chief; direct examination | நேர் விசாரணை |
exception, Every rule has an | ஒவ்வொரு விதிக்கும் ஒரு விலக்கு உண்டு |
exception to, take = object | ஆட்சேபி |
exceptionalism, American | அமெரிக்க தனித்துவவாதம் |
exceptions to public hearing | பொது விசாரணைக்கு விதிவிலக்குகள் |
excess insurance | மிகைக் காப்புறுதி |
excess reserves | மிகை ஒதுக்கு |
excessive demand | மிகைபடு கோரிக்கை; மட்டுமீறிய கோரிக்கை |
exchange of notes | குறிப்பு பரிமாற்றம் |
exchange rate | நாணயமாற்று விகிதம் |
exchange student | பரிமாற்ற மாணவர் |
exchange theory | பரிமாற்றக் கோட்பாடு |
Excise Law | மதுவரிச் சட்டம் |
excitement she left her passport in the aircraft, In her | அவர் பரபரப்பில் தனது கடவுச்சீட்டை விமானத்தில் விட்டுவிட்டார் |
excitement, The children received their presents with | பிள்ளைகள் பூரிப்புடன் தமது பரிசுகளை பெற்றுக் கொண்டார்கள் |
exclamation mark (!) | வியப்புக்குறி |
excluded persons | விலக்கப்பட்ட ஆட்கள்; விலக்கப்பட்டோர் |
exclusion clause | விலக்கல் கூற்று |
exclusion order | விலக்கல் கட்டளை |
exclusive economic zone | பிரத்தியேக பொருளாதார வலயம் |
exclusive jurisdiction | பிரத்தியேக நியாயாதிக்கம் |
exclusive listing agreement | பிரத்தியேக நிரலீட்டு உடன் படிக்கை |
exculpate me, The court will | நீதிமன்றம் என்னை குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கும் |
exculpatory clause | குற்றவிடுவிப்புக் கூற்று |
exculpatory defence | குற்றவிடுவிப்புக்கான பதில்வாதம் |
exculpatory evidence | குற்றவிடுவிப்புக்கான சான்று |
executed warrant | நிறைவேற்றப்பட்ட கைதாணை |
execution by hanging | தூக்குத்தண்டனை |
execution of a lease | குத்தகை உறுதிமுடிப்பு |
execution of duty | கடமை நிறைவேற்றம் |
executioner | இறப்புத்தண்டனையாளர்; இறப்புத்தண்டனை நிறைவேற்றுநர் |
executive order | நிறைவேற்றுக் கட்டளை |
executive president | நிறைவேற்று அரசதிபர் |
executive presidential system | நிறைவேற்று அரசதிபர் ஆட்சி முறைமை |
executive summary | பொழிப்புரை |
Executive, the | நிறைவேற்றுதுறை; நிறைவேற்றுநர்; நிருவாகி |
executor of will | இறப்பாவண தத்துவகாரர் |
Exegesis Bible Online | இணைய விவிலிய மறைவிளக்கம் |
exegetical speech | மறைவிளக்க உரை |
exemption from vaccination | தடுப்புமருந்தேற்றத்திலிருந்து விலக்கு |
exhaust gases | பெற்றோல் எந்திர வாயுவகைகள் |
exhibit your paintings | உனது ஓவியங்களைக் காட்சிக்குவை |
exhibition, industrial | கைத்தொழிற் பொருட்காட்சி |
exhibitions insurance | பொருட்காட்சிக் காப்புறுதி |
exhibits, The judge examined the | நீதிபதி தடயங்களை பரிசீலித்தார் |
exile opponents | எதிராளிகளை நாடுகடத்து |
exile, a quarter century of | கால்நூற்றாண்டுப் புகல்வாழ்வு |
exile, go into | நாடுகட; புகலிடம் செல் |
exile, live in | நாடுகடந்து வாழ்; புகலிடத்தில் வாழ் |
exile, send into | நாடுகடத்து |
exile, Tamils in | நாடுகடந்த தமிழர்; புகலிடத் தமிழர் |
exiled politician | நாடுகடத்தப்பட்ட அரசியல்வாதி |
exiles, political | நாடுகடந்த அரசியல்வாதிகள் |
existence value | நிலைநிற்புப் பெறுமதி |
existentialism | வாழ்வியல்வாதம்; வாழ்வினை வாதம்; இருப்பியல்வாதம் |
existing window covering | தற்போதுள்ள சாளர மறைப்பு |
exit poll | வாக்களித்தோர் வாய்ப்பிறப்பு |
exogamy and endogamy | புறமணமும் அகமணமும் |
exonerate the third accused | குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது ஆளுக்குப் பழிவிலக்களி |
exoneration of the third accused | குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது ஆளுக்குப் பழிவிலக்களிப்பு |
exorbitant price | அறாவிலை |
exotic species | பிறபுல உயிரினங்கள் |
expansive mood | பெருமித உளநிலை |
expatriate literature | நாடுகடந்தோர் இலக்கியம் |
expatriate workers | நாடுகடந்த தொழிலாளர்கள் |
expatriates in Malaysia, Indian | மலேசியாவில் உள்ள இந்தியர்கள் |
expectancy effects | எதிர்பார்ப்பு விளைவுகள் |
expediency, political | அரசியல் விரகு (உபாயம்) |
expedited hearing | துரித விசாரணை |
expedition, military | படையெழுச்சி |
experience-sampling method | பட்டறிவு மாதிரிக்கூறாக்க முறை |
experiential education | பட்டறிவுக் கல்வி |
experimental method | பரீட்சார்த்த முறை |
experimental vaccine | பரீட்சார்த்த தடுப்புமருந்து |
experimentalism | ஆய்கோள்வாதம் |
expert-witness | நிபுணர்-சாட்சி |
expiration notice | முடிவடைவு அறிவிப்பு |
expiry date | முடிவுத் திகதி |
explanatory adequacy; adequacy of explanation | விளக்க நிறைவு; நிறைவுதரும் விளக்கம் |
explicit film, sexually | அப்பட்டமான பாலுறவுத் திரைப்படம் |
explicit uses of memory | வெளிப்படை நினைவாற்றல் பயன்பாடுகள் |
exploration drilling for oil | எண்ணெய் ஆய்வுத் துளையீடு |
exploratory discussion | ஆய்தற் கலந்துரையாடல் |
explore for oil | எண்ணெய் தேடி ஆய்விடு |
explosion insurance | வெடிப்புக் காப்புறுதி |
explosive issue | வெகுண்டெழத் தூண்டும் சர்ச்சை |
explosive substance | வெடிப்பொருள் |
exponential growth rate | வர்க்க வளர்ச்சி வீதம் |
export value | ஏற்றுமதிப் பெறுமதி |
exposition of economic theory | பொருளாதரக் கோட்பாட்டை விரித்துரைத்தல் |
exposure to radiation | கதிர்வீச்சுக்கு உட்படல் (உள்ளாகுதல்) |
exposure therapy | உட்படுத்தல் சிகிச்சை |
exposure with response prevention | உட்படலும் பதில்வினை தடுத்தலும் |
express an idea | ஓர் எண்ணத்தை எடுத்துரை |
express permission, with your | உங்கள் திட்டவட்டமான அனுமதியுடன் |
Expressio unius est exclusio alterius; The expression of one thing is the exclusion of the other | ஒன்றின் விதப்பு மற்றதன் விலக்கு |
expression, ability of | எடுத்துரைக்கும் ஆற்றல் |
expressionism, kinds of | உணர்ச்சிவெளிப்பாட்டு ஓவிய வகைகள் |
expression, freedom of | பேச்சு சுதந்திரம் |
expropriation of private land | தனியாரின் காணியை கையகப்படுத்தல் |
expulsion order | வெளியகற்றல் கட்டளை |
expunge from the file | கோப்பிலிருந்து நீக்கு |
extant species | நிலைத்துள்ள உயிரினங்கள் |
extended care | நீடித்த பராமரிப்பு |
extended education | நீடிப்புக் கல்வி |
extended family = consanguine family | கூட்டுக் குடும்பம் |
extended-family household | கூட்டுக் குடும்ப வீட்டார் |
extenuating circumstances | தணிக்கும் சூழ்நிலைகள் |
external world | புற உலகு |
externalization of environmental protection cost | சூழல் பாதுகாப்புச் செலவை புறநிலைப்படுத்தல் |
extinct species | அழிந்தொழிந்த உயிரினங்கள் |
extinction, on the verge of | அழிந்தொழியும் தறுவாயில் |
extort money | அச்சுறுத்திப் பணம் பறி |
extortion, crime of | வன்பறிக் குற்றம்; அச்சுறுத்திப் பறிக்கும் குற்றம் |
extra care sheltered housing | மேலதிக பராமரிப்புக் காப்பகம் |
extra virgin oil | பச்சிளம் எண்ணெய் |
extracurricular activities | பிறதுறைச் செயற்பாடுகள் |
extradite to France | பிரான்சுக்குத் திருப்பியனுப்பு |
extradition to France | பிரான்சுக்குத் திருப்பி அனுப்பல் |
extrajudicial killings | நீதிமுறை மீறிய கொலைகள் |
extramarital sex | களவொழுக்கம்; களவுப்புணர்ச்சி (மணமானோர் களவொழுக்கம்) |
extraneous evidence | தொடர்பற்ற சான்று |
extranet website | புறவலைய இணையதளம் |
extrasensory perception | அதிபுலனுணர்வு |
extraterrestrial beings | வேற்றுலகப் பிறவிகள் |
extraterritorial jurisdiction | ஆள்புலம் கடந்த நியாயாதிக்கம் |
extraterritoriality; diplomatic immunity | ஆள்புலக்கடப்பு; சூழ்வியல் விதிவிலக்கு |
extraversion and introversion | புறமுகநோக்கும் அகமுக நோக்கும் |
extreme cold warning | கடுங்குளிர் எச்சரிக்கை |
extremism, religious | சமய தீவிரவாதம் |
extrinsic good | புறநலம் |
eye movement desensitization | கண்ணசைவு மூலம் உணர்வு தணிப்பு |
eyewitness | கண்கண்ட சாட்சி; நேரில் கண்ட சாட்சி |
No comments:
Post a Comment