macular degeneration | விழிப்புரைச் சிதைவு |
madman theory | மதிகெட்ட நடத்தைக் கோட்பாடு (நாம் மதிகெட்டவர் போல் நடந்தால், எதிரி எம்முடன் மோதமாட்டார் எனும் கோட்பாடு) |
magazines, weekly | கிழமைச் சிற்றிதழ்கள் |
magazines and bullets | சன்னக்கூடுகளும் சன்னங்களும் |
magic(al) realism | மாந்திரிக மெய்ம்மை |
magical thinking | மாந்திரிக சிந்தனை; எண்ணமே செயலாகும் என்னும் நினைப்பு |
Magna Carta = Great Charter | மகா பட்டயம் |
magnetic levitation train | காந்த மிதப்புத் தொடருந்து |
mail order bride | அஞ்சல்நிரல் மணமகள் |
main attack | பிரதான தாக்குதல் |
main supply road | பிரதான வழங்கல் தெரு |
mainstream media | பிரதான ஊடகங்கள்; மைய ஊடகங்கள் |
mainstreaming a gender perspective | பால்மைக் கண்ணோட்டத்தை உள்வாங்கல் (மையப்படுத்தல்) |
mainstreaming the issue of ageing in all sectors | எல்லாத் துறைகளிலும் மூப்பு விவகாரத்தை உள்வாங்கல் (மையப்படுத்தல்) |
mainstreaming women in development | விருத்தியில் பெண்களை உள்வாங்கல (மையப்படுத்தல்) |
maintenance case | தாபரிப்பு வழக்கு |
maintenance, building | கட்டிடம் பேணல் |
major depressive disorder | பேருளவழுத்தக் கோளாறு |
major general | பேரணி அதிபதி |
major in the army, a | தரைப்படையில் ஒரு பேரணிபதி |
major is Tamil, Their | அவர்களது சிறப்புப் பாடம் தமிழ் |
major life activities | பெருவாழ்வுச் செயற்பாடுகள் |
major premise | பெரு முன்னீடு (எ-கா: எல்லா மலேசியர்களும் ஆசியக் கண்டத்தவர்கள்) |
major role, play a | பெரும்பங்கு வகி |
major, a = an adult | முதிர்ந்தவர்; வயதுவந்தவர் |
major, a Tamil | தமிழ்ப்பாட சிறப்பு மாணவர் |
majoritarianism | பெரும்பான்மை நெறி |
majority community | பெரும்பான்மைச் சமூகம் |
majority, attain | பருவம் எய்து |
make an appeal | மேன்முறையிடு |
make representations on our behalf | எம் சார்பில் எடுத்துரை |
make-up artist | ஒப்பனைக் கலைஞர் |
mala fide | தீயெண்ணம்; துன்னோக்கம் |
malaise, economic | பொருளாதார மந்தம் |
Maldive fish | மாசிக் கருவாடு |
male chauvinism | பேராண்மைவாதம் |
male dominance | ஆணாதிக்கம் |
male escort | விலைமகன் |
male preserve | ஆண்களின் ஏகபோகம் |
male prostitutes | ஆண் விபசாரிகள் |
malice aforethought = malice prepense | முன்சிந்தித்த வன்மம் |
malicious desertion | வன்மக் கைவிடுகை; வன்மம் கொண்டு கைவிடல் |
malicious mischief | வன்மத் தீங்கு |
malignant lesion | புற்றுநோய்சூழ் ஊறுபாடு |
malignant tumour | புற்றுநோய்க் கழலை |
man about town | நாகரிகன் |
man of the year = person of the year | ஆண்டின் அதிபிரபலர் |
man of war = armed ship | படைக் கப்பல் |
management accounting | முகாமைத்துவக் கணக்கீடு |
managing editor | முகாமைப் பணிப்பாளர் |
mandate for reform | சீர்திருத்தத்துக்கான ஆணை |
mandate holder | ஆணையர் |
mandatory detention | கட்டாய தடுத்துவைப்புல; நியதிப்படி தடுத்துவைப்பு |
mandatory injunction | கட்டாய தடைக்கட்டளை; நியதிப்படியான தடைக்கட்டளை |
mandatory retirement | கட்டாய ஓய்வு; நியதிப்படியான ஓய்வு |
manic and depressive episodes | பித்து-உளவழுத்தக் கட்டங்கள் |
manic depression | பித்து-உளவழுத்தம் |
manic depressive disorder | பித்து-உளவழுத்தக் கோளாறு |
manic depressive psychosis | பித்து-உளவழுத்தச் சித்தப்பிரமை |
manic episode | பித்துக் கட்டம் |
manifest content | வெளிப்படு (புலப்படு) பொருள் |
manipulation, political | அரசியற் காறுபாறு |
manipulative skill | கையாள்கைத் திறன் |
manual labour | கைவேலை |
manual skill | கைத்திறன் |
marginal land | ஓரநிலம் |
marginal minority | ஓரநிலைச் சிறுபான்மை |
marginalization | ஓரங்கட்டல்; ஒதுக்கல் |
marginalized groups | ஓரங்கட்டப்பட்ட (ஒதுக்கப்பட்ட) குழுமங்கள் |
marine park | கடற்கா |
marine pollution | கடல் மாசு |
marital rape = spousal rape | வாழ்க்கைத்துணை வன்புணர்ச்சி |
marital status | மணத்தகுநிலை |
Maritime Law | கடற்சட்டம் |
market analysis | சந்தைப் பகுப்பாய்வு |
market segmentation | சந்தைக் கூறாக்கம் |
marriage counselling | மணவாழ்வுத் துறைமதியுரை |
marriage counsellor | மணவாழ்வு மதியுரைஞர் |
Marriage is an institution | மணவாழ்வு ஒரு நிறுவகம் |
marriage of completed fertility | கருத்தரிப்பு முற்றுப்பெற்ற மணவாழ்வு |
marriage of convenience | வசதிமணம் |
marriage rate = nuptiality rate | மணவாழ்வு வீதம் |
marriage tax bonus | மணவரிச் சன்மானம் |
marriage tax penalty | மணவரித் தண்டம் |
marriage, arranged | பேச்சுத் திருமணம் |
marriage, civil | பதிவுத் திருமணம் |
marriage, communal | குழுமத் திருமணம் |
marriage, give in = marry off | மணம்முடித்துக் கொடு |
marriage, He asked for my hand in | தன்னை மணம்புரியும்படி அவர் என்னிடம் கேட்டார் |
marriage, registration of | திருமணப் பதிவு |
marriage, related by | மணவழி உறவுடைய |
marriage, relationship by | மணவழி உறவு |
marriage, relatives by | மணவழி உறவினர்கள் |
marriage, They don't believe in | அவர்களுக்கு மணவாழ்வில் நம்பிக்கை இல்லை |
marry off; give in marriage | மணம்முடித்துக் கொடு |
martial art | வர்மக் கலை (எ-கா: யூடோ, கராத்தே) |
Martial Law | படைச் சட்டம் |
Marxism, ideology of | மார்க்சியக் கருத்தியல் |
masculine gender | ஆண்பால் |
mass hysteria | பாமர உணர்ச்சிப்பெருக்கு |
mass media | பொது ஊடகங்கள் |
mass of snow | பனித்திரள் |
mass, atomic | அணுத்திணிவு |
masses, the | பாமர மக்கள் |
master of arts | முது கலைமாணி |
master of ceremonies = MC | அரங்கநெறியாளர் |
master plan | முழுமுதல் திட்டம் |
material body and incorporeal mind | உருவ உடலும் அருவ உள்ளமும் |
material cause | சடப்பொருட் காரணம் |
material culture | பொருள்வளப் பண்பாடு |
material evidence | முக்கிய சான்று |
material fact | முக்கிய விவரம் |
material jurisdiction = subject-matter jurisdiction | விடய நியாயாதிக்கம் |
material misrepresentation | முக்கிய விவரப் பிறழ்கூற்று |
material witness | முக்கிய சாட்சி |
maternal and child health and family planning | தாய்-சேய் நலவாழ்வும் குடும்பத் திட்டமும் |
maternal inheritance | தாய்வழிக் குணாம்சம் |
maternal mortality rate | மகப்பேற்றுமகளிர் இறப்பு வீதம் |
maternity blues | மகப்பேற்றுச் சோர்வு |
maternity grant | மகப்பேற்று மானியம் |
maternity leave | மகப்பேற்று விடுப்பு |
mathematical abstraction | கணிதவியற் கருத்தளவீடு |
matrilineal descent | பெண்சந்ததி |
matrilocality | பெண்குடிவாசம் |
matrimonial home | மணவாழ்வு மனை |
matter and spirit | சடமும் ஆன்மாவும் |
matter of fact | விவர விடயம் |
matter of law | சட்ட விடயம் |
maturity period | முதிர்வு காலப்பகுதி |
maximization and minimization | ஆகக்கூட்டியும் ஆகக்குறைத்தும் மதிப்பிடல் |
MC = master of ceremonies | அரங்கநெறியாளர் |
mea culpa = by my fault | தவறை ஒப்புக்கொள்ளல் |
meals on wheels | கொண்டுசென்று வழங்கும் உணவு |
mean age | சராசரி வயது |
mean age at marriage | சராசரி மண வயது |
means to an end | இலக்கை எய்தும் வழிவகை |
measurable goals | கணிக்கக்கூடிய இலக்குகள் |
measure of central tendency | மத்திம தன்மை அளவீடு |
measure of variability | மாறுபாட்டு அளவீடு |
mechanical erosion control | பொறிவழி மண்ணரிப்புக் கட்டுப்பாடு |
mechanical treatment technology | பொறிவழி சுத்திகரிப்புத் தொழினுட்பவியல் |
mechanisms of change | மாற்றப் பொறிமுறைகள் |
mechanized cavalry | கவச ஊர்திப் படையணி |
mechanized unit | கவச ஊர்திப் படைப்பிரிவு |
media code of ethics | ஊடக ஒழுக்கக் கோவை |
media coverage | ஊடக பிரசித்தம் |
media launch | ஊடக பிரசித்த நிகழ்ச்சி |
media sector | ஊடகத் துறை |
media streaming | ஊடக நேரோடை |
median age | இடைநடு வயது |
median income | இடைநடு வருமானம் |
mediation board | இணக்க சபை |
medical aid | மருத்துவத் துணை |
medical examination | வைத்திய பரிசோதனை |
medical history | நோய் வரலாறு |
medical inadmissibility | வைத்திய காரணங்களால் அனுமதிக்கவியலாமை |
medical practitioner | மருத்துவம் புரியுநர்(புரிபவர்) |
medical record | மருத்துவப் பதிவேடு |
medical science | மருத்துவ அறிவியல் |
medicalization | மருத்துவமயமாக்கம் |
medically assisted death | மருத்துவ உதவியுடன் இறப்பு |
medically unexplained symptoms | மருத்துவ விளக்கம் அளிக்கப்படாத நோய்க்குறிகள் |
medium price | இடைநடு விலை |
meeting engagement | எதிர்கொள் மோதல் |
melting pot | ஒருமைப் பண்பாடு |
member of the economic class | பொருளாதார வகுப்பினர் |
member of the family class | குடும்ப வகுப்பினர் |
memorandum of understanding | புரிந்துணர்வு இணக்கம் |
memory consolidation | நினைவு திரட்டல் |
memory impairment | அசதி; நினைவாற்றல் குறை |
memory loss | நினைவாற்றல் இழப்பு |
memory power | நினைவாற்றல் |
mendicant teachers | இரந்து பணிபுரியும் குருவரர் |
meningococcal infection | தண்டுமூளைக் கிருமித்தொற்று |
mens rea = guilty mind | குற்ற மனம் |
Mens sana in corpore sano = a sound mind in a sound body | உடனலமும் உளநலமும்; நல்லுடலும நல்லுளமும் |
menses-inducer | மாதவிலக்கு-ஊக்கி |
menstrual cycle | மாதவிலக்கு வட்டம் |
mental age | உள வயது |
mental agitation | உள்ளப் பதகளிப்பு |
mental asylum = lunatic asylum | உளநோய் மருத்துவமனை |
mental disability | உளவலுவீனம் |
mental disorder | உளக்கோளாறு |
mental health | உளநலம் |
mental impairment | உளவலுக்குறைவு |
mental incompetence | உளத் தகுதியீனம் |
mental retardation | உளப் பின்னடைவு |
mental set | உள நிலைப்பாடு |
mentally disabled person | மாற்றுளத் திறனாளர் |
mentally incapable | உளவல்லமையற்ற |
mentally retarded person | உளவிருத்தி குன்றியவர் |
mentoring, art of | ஆற்றுப்படுத்தல் கலை |
Mercantile Law | வணிகச் சட்டம் |
merit recruitment | தகுதிப்படி ஆட்சேர்ப்பு |
message center | செய்தி நிலையம் |
metabolic syndrome | அனுசேபப் பிணி |
metallic mineral reserves | உலோக கனிம இருப்புகள் |
method of absurd example | அபத்த எடுத்துக்காட்டு முறை |
method of agreement | உடன்பாட்டு முறை |
method of concomitant variations | உடனிணை வேறுபாட்டு முறை |
method of difference | வேறுபாட்டு முறை |
method of residue | எச்ச முறை |
methodical doubt | முறையுறு ஐயம் |
Metropolitan London | பன்பண்பாட்டு இலண்டன் |
micro film | நுண்படலம் |
microbial metallurgy | நுண்ணுயிர்ம உலோகவியல் |
middle adulthood | இடைநடு முதிர்வு (40-65) |
middle insomnia | நள்ளிரவு விழிப்பு |
middle school | இடைநிலைப் பாடசாலை |
midlife crisis | வாழ்விடை நெருக்கடி |
midlife transition | வாழ்விடை நிலைமாற்றம் |
midstream specimen | இடைநடுச் சிறுநீர் மாதிரிக்கூறு |
midstream test | இடைநடுச் சிறுநீர்ப் பரிசோதனை |
midwifery clinic | மகப்பேற்று மனை |
migrant birds | வலசைப் பறவைகள் |
migrant community | குடிபெயர் சமூகம் |
migratory stream | பெயர்ச்சி ஓடை |
mild cognitive impairment | மென் அறிதிறன் தடங்கல் |
mild Intellectual disability | மென் அறிவாற்றல் குறைபாடு |
militant group | வன்போக்குக் குழுமம் |
militants, Tamil | தமிழ் வன்போக்காளர்கள் |
militarization, rapid | துரித படைமயமாக்கம் |
military action | படை நடவடிக்கை |
military attaché | படைத் தூதிணைஞர் |
military camp | படை முகாம் |
military force | படை வலு |
military government | படை அரசாங்கம் |
military information | படைத் தகவல் |
military intelligence | படை உளவு |
military intervention | படைபலத் தலையீடு |
military junta | படையாட்சிக் குழாம் |
military police | படைக் காவல்துறை |
military regime | படை ஆட்சிப்பீடம் |
military rule | படை ஆட்சி |
military service | படைச் சேவை |
military sexual slavery (servitude) | படையினர் பாலுறவு அடிமைத்தளை |
military strategy | படையியல் விரகு (தந்திரோபாயம்) |
military strategist | படையியல் விரகாளர் (தந்திரோபாயி) |
military unit | படைப் பிரிவு |
military-industrial complex | படைத்துறைக் கைத்தொழிற் கட்டுக்கோப்பு |
million 1,000,000 | பத்து இலட்சம் |
million-dollar question = crucial question | தீர்க்கமான வினா |
mine tailings | சுரங்கக் கழிவுகள் |
mineral exploration | கனிமவியல் (தாதியல்) ஆய்வு |
mini mental state examination | குறு உளநிலைப் பரிசோதனை |
minimally invasive grasp releases | முனைப்புத் தணித்துப் பிடிதளர்த்தல் |
minimum age at (for) marriage | ஆகக்குறைந்த திருமண வயது |
minimum payment | ஆகக்குறைந்த கொடுப்பனவு |
minimum wages | ஆகக்குறைந்த கூலி |
mining wastes | அகழ்வுக் கழிவுகள் |
Minister Plenipotentiary | முழுவலுவாய்ந்த தூததிகாரி |
Minister-Counselor | தூததிகாரி |
ministerial responsibility | அமைச்சுப் பொறுப்பு |
minister's counsel | அமைச்சரின் சட்டவுரைஞர் |
minor, a | இளையர்; பராயமடையாதவர் |
minority government | சிறுபான்மை அரசாங்கம் |
minority group | சிறுபான்மைக் குழுமம் |
minutes of settlement | இணக்கக் குறிப்பு |
miracle play | அற்புத நாடகம் |
miscarriage of justice | நீதி வழுவல்; நீதி திறம்பல் |
misinformation and disinformation | தவறான தகவலும் பொய்யான தகவலும் |
misgender mistake | பால்மைத் தவறு |
Miss Universe | பேருலக அழகி (அமெரிக்கா) |
Miss World | உலக அழகி (பிரித்தானியா) |
Missing Persons, Office of | காணாமல் போனோர் அலுவலகம் |
mission accomplished | பணி நிறைவேற்றப்பட்டுள்ளது |
mission in life | வாழ்க்கைப் பணி |
mission statement and vision statement | இயங்குரையும் இலக்குரையும் |
mission, fact-finding | விவரம் அறியும் பயணம் |
mission, reconnaissance | வேவுப் பணி |
Mission, Vivekananda | விவேகானந்தர் ஆதீனம் |
missionaries, foreign | வெளிநாட்டு சமயப் பரப்புரைஞர்கள் |
mistake of fact; error of fact | விவர வழு |
mistake of law; error of law | சட்ட வழு |
mistaken identity | ஆளை மாறி அடையாளம் காணல் |
misuse of power | அதிகார துர்ப்பிரயோகம் |
mitigating circumstances | தணிக்கும் சூழ்நிலைகள் |
mixed bipolar disorder | இருமுனைக் கலப்புக் கோளாறு |
mixed cropping | கலப்புப் பயிரீடு |
mixed economy | கலப்புப் பொருளாதாரம் |
mixed farm | கலப்புப் பண்ணை; பயிர்ப் பண்ணை |
mixed school | கலவன் பாடசாலை |
mob violence | கும்பல் வன்முறை |
mobile armament | நடமாடும் பீரங்கித்தொகுதி |
mobile device; handheld device | கைத்தொலைச் சாதனம் |
mobility aid | நடமாட்டத் துணை |
mobility assistive devices | நடமாட்ட திறனுதவிச் சாதனங்கள் |
mobility impairment | நடமாட்ட மட்டுப்பாடு; மட்டுப்பட்ட நடமாட்டம் |
mobilization of army | படைதிரட்டல் |
mobilize army | படை திரட்டு |
mode of production | உற்பத்தி முறைமை |
model home | மாதிரி வீடு |
model strategies and practical measures on the elimination of violence against women in the field of crime prevention and criminal justice | குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த மாதிரி உபாயங்களும் செய்முறைகளும் |
model, a fashion | பாங்கியற் பாவை |
models, newest | புத்தம்புதிய வடிவமைப்புகள் |
moderate intellectual disability | மிதமான அறிவாற்றல் குறைபாடு |
moderate your demands | உனது கோரிக்கைகளை மிதமாக்கு |
moderate policies | மிதவாதக் கொள்கைகள் |
moderate, a | மிதவாதி |
moderation, in | மிதமாக; மிதமான அளவில் |
moderator, debate | விவாத நடுவர் |
modus operandi | செயல் முறை |
modus ponens | உடன்பாட்டு முறை |
modus tollens | மறுப்பீட்டு முறை |
modus vivendi | வாழும் முறை; மேவுமுறை; இடை உடன்பாடு |
mole in our party, a | எங்கள் கட்சியில் ஓர் உள்ளுறை ஒற்றர் |
mole in the eye, a | கண்ணில் ஒரு மச்சம் |
mole in the garden, a | கொல்லையில் ஒரு துன்னெலி |
molest children sexually | சிறாரை பாலியல்வாரியாகத் துன்புறுத்து |
molestation, sexual | பாலியல் துன்புறுத்தல் |
Molotov cocktail; petrol bomb | பெற்றோல் குண்டு |
momentous decision | தீர்க்கமான முடிபு |
Monetary Law | நாணயச் சட்டம் |
money laundering | பணமாற்று மோசடி |
money market | பணச் சந்தை |
money order | பணக் கட்டளை |
monistic hypothesis | ஒருமைக் கருதுகோள் |
mood disorder | உணர்நிலைக் கோளாறு |
mood stabilizers | உணர்வு நிலைநிறுத்திகள் |
mood-congruent psychotic features | உணர்நிலைக்கிசைந்த சித்தப் பிரமை அம்சங்கள் (மலைவு அல்லது பிரமை) |
mood-incongruent psychotic features | உணர்நிலைக்கிசையா சித்தப் பிரமை அம்சங்கள் (மலைவு அல்லது பிரமை) |
mopping up | ஒற்றியெடுப்பு; தேடிப்பிடிப்பு |
moral ballpark | ஒழுக்க அரங்கு |
moral code | ஒழுக்கக் கோவை |
moral hazard | ஒழுக்கக் கெடுதி |
moral imperative | ஒழுக்கக் கடப்பாடு |
moral judgement | ஒழுக்க நிதானிப்பு |
moral justification | ஒழுக்க நியாயப்பாடு |
moral maturity | ஒழுக்க முதிர்ச்சி |
moral philosophy = ethics | ஒழுக்கவியல்; அறவியல் |
moral reasoning | ஒழுக்க நியாயம் |
moral relativism | ஒழுக்கச் சார்புடைமை |
moral rights | தார்மீக உரிமைகள் |
moral turpitude | ஒழுக்கக் கேடு |
morality play | ஒழுக்க நாடகம் |
morbid desire | வக்கிர ஆசை |
morning sickness | வயிற்றுக் குமட்டல் |
mortality rate | இறப்பு வீதம் |
mortgage banker | ஈட்டு வங்கியாளர்; அடைமான வங்கியாளர் |
mortgage insurance | ஈட்டுக் காப்புறுதி; அடைமானக் காப்புறுதி |
mortgage insurance premium | ஈட்டுக் காப்புறுதிக் கட்டுப்பணம்; அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம் |
mortgage rate | ஈட்டு வீதம்; அடைமான வீதம் |
Mothers Day | அன்னையர் நாள் |
motion, a | முன்மொழிவு |
motion, laws of | நகர்வு விதிகள் |
motor skills | உடலியக்கத் திறன்கள் |
motor unit = motorized unit | ஊர்திப் பிரிவு |
mould on a plank | பலகையில் பீடித்த பூஞ்சணம் |
mould, a clay | களிமண் வார்ப்பச்சு |
mov(e)able assets | அசையும் சொத்துகள் |
moving light | அசைவொளி; நகர்வொளி |
muck soil | கூளமண் |
mulch farm | இலைதழைப் பண்ணை |
mulligatawny | மிளகுதண்ணீர் (இரசம்) |
multicultural country | பல்பண்பாட்டு நாடு |
multidisciplinary teams | பல்துறை அணிகள் |
multigenerational relationships | பல்தலைமுறை உறவுகள் |
multilateral negotiations | பல்தரப்பு பேச்சுவார்த்தைகள் |
multilingual literacy | பன்மொழி எழுத்தறிவு |
multimedia information | பல்லூடகத் தகவல் |
multinational corporation | பல்தேசியக் கூட்டுத்தாபனம் |
multinational state | பல்தேசிய அரசு |
multiparty system | பல்கட்சி முறைமை |
multi-peril policy | பல்லிடர்க் காப்புறுதி ஒப்பந்தம் |
multiple cropping | பல்பயிரீடு |
multiple listing service | பல்நிரலீட்டுச் சேவை |
multiple perspectives | பன்மைக் கண்ணோட்டங்கள் |
multiple sclerosis | பன்னிழையவன்மை |
multiple sexual partnership | பல்பாலுறவுத் துணைமை |
multiracial country | பல்லின நாடு |
multi storey car park | பல்மாடி ஊர்திக் காப்புலம் |
municipal council | மாநகராட்சி மன்றம் |
Municipal Law | உள்ளாட்சிச் சட்டம் |
Murphy's Law
If something can go wrong, it will.
If there are two or more ways of doing something, and one of them can lead to catastrophe, then someone will do it.
(Edward A. Murphy JR, Captain, U.S. Air Force) | மேவியின் விதி
தவறு நிகழ வாய்ப்பிருந்தால், அது நிகழ்ந்துவிடும்.
ஓர் அலுவலை மேற்கொள்ள இரு அல்லது பல விதங்கள் இருக்கும் என்றால், அவற்றுள் ஒன்று பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்றால், யாரோ ஒருவர் அப்படிச் செய்வார். |
muscle cramp | தசைநார்ப் பிடிப்பு |
muscular dystrophy | தசைநார்த் தேய்வு |
mutatis mutandis | ஏற்ற மாற்றங்களுடன் |
mutilate the body | உடலைக் குதறு |
mutilated body | குதறப்பட்ட உடல் |
mutilation, suffer | குதறப்படு |
mutual fund | பன்கூட்டு நிதியம் |
mutual insurance company | பன்கூட்டுக் காப்புறுதி நிறுவனம் |
mutual release | இருவையினொத்து விட்டுவிடல் |
Mutual Savings Bank | பன்கூட்டுச் சேமிப்பு வங்கி |
mutual self-help | ஆளுக்காள் தன்னுதவி |
mysterious explanation | மாய விளக்கம் |
mystery and suspense movies | மாயமர்மத் திரைப்படங்கள் |
mystic beauty | மறைஞான அழகு |
mystic, a | மறைஞானி |
mystical experience | மறைஞான அனுபவம் |
mysticism, Indian | இந்திய மறைஞானம் |
No comments:
Post a Comment