Search This Blog

ENGLISH-TAMIL PHRASES (J-L)

 



jargon, legal

சட்டத் துறைச்சொல்

job burnout

வேலைச் சலிப்பு

job sharing

பணிவேளைப் பகிர்வு

 

(ஒரே பணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் நேரவாரியாகவோ நாள்வாரியாகவோ பகிர்ந்து செய்தல்)

joint account

கூட்டுக் கணக்கு

joint and several liability clause

கூட்டு-தனிப் பொறுப்புக் கூற்று

joint custody

கூட்டுக் கட்டுக்காப்பு 


(பிரிந்து வாழும் பெற்றோர் தமது பிள்ளைகள் பற்றிய முக்கிய அலுவல்களில் கூடி முடிவெடுத்தல்)

joint method of agreement and difference

உடன்பாட்டு வேறுபாட்டுக் கூட்டு முறை

joint reproduction rate

கூட்டுக் கருத்தரிப்பு வீதம்

joint retirement

கூட்டோய்வு

joint tenancy

கூட்டுரித்து

joint venture

கூட்டு முயற்சி

journalistic bias

ஊடக பக்கச்சார்பு

journalistic ethics

ஊடக ஒழுக்கம்

journalistic fraud

ஊடக ஊழல்

journalistic integrity

ஊடக நேர்நெறி

journalistic objectivity

ஊடகப் புறவயம்

journalistic responsibility

ஊடகப் பொறுப்பு

journalistic standards

ஊடக நியமங்கள்

journalistic style

ஊடகப் பாணி

journalistic treatment

ஊடகக் கையாள்கை

journalistic writing

ஊடக மொழிநடை

judge a book by its cover, Don't

தோற்றத்தை வைத்து எதையும் நிதானிக்க வேண்டாம்

judge a case

வழக்கை விசாரித்து தீர்ப்பளி

judge, a competition

போட்டி நடுவர்

Judge, High Court

மேல்நீதிமன்ற நீதிபதி

judgement creditor

தீர்ப்பின்படி கடன்மீட்பவர்

Judgement Day

இறுதித்தீர்ப்பு நாள்

judgement debtor

தீர்ப்பின்படி கடனிறுப்பவர்

judgemental

குறைகாணும் முனைப்புடைய

Judicial Committee of the Privy Council

கோமறை மன்ற நீதிக் குழு

judicial consideration

நீதித்துறையின் பரிசீலனை

judicial council

நீதித்துறை மன்றம்  

judicial foreclosure

நீதிமன்ற அறுதியீடு

judicial misconduct

நீதித்துறைசார் துர்நடத்தை

judicial pre-trial

நீதிபதி முன்னிலையில் முன்விசாரணை

judicial release

நீதித்துறை அளிக்கும் விடுதலை

judicial review

நீதித்துறையின் மீள்நோக்கு

judicial system

நீதி முறைமை

judiciary

நீதிபதிகள்; நீதித்துறை

jump line

தொடர்ச்சிக் குறிப்பு

junior high school

இடைநிலைப் பாடசாலை

junior partner

இளம்பங்குதாரர்

junior student

இளமாணவர்

junior, a

இளவல்

juridical basis

சட்டநெறி அடிப்படை

jurisprudential guides

சட்டவியல் வழிகாட்டிகள்

jury deliberation

யூரர் கூட்டாய்வு

jus cogens

மீறவொண்ணா வழமை

just and reasonable demand

நீதி நியாயமான கோரிக்கை

just war, theory of

நீதிப்போர்க் கோட்பாடு

Justice of the Peace

சமாதான நீதிவான்

Justice should not only be done, but should manifestly and undoubtedly be seen to be done. 


(Lord Hewart)

நீதி நிலைநாட்டப்படவும் வேண்டும்; நீதிநிலைநாட்டப் படுவதாக, வெளிப்படையாக, ஐயந்திரிபறப் புலப்படவும் வேண்டும்

Justice, Chief

தலைமை நீதியரசர்

justiciable matter

நீதியாய்வுக்குரிய விடயம்

justifiable homicide

நியாயப்படுத்தக்கூடிய கொலை

justification

நியாயப்பாடு; நியாயப்படுத்துகை

just-in-time delivery

குறித்தகால மகப்பேறு

Juvenile Court = Youth Court

இளையோர் நீதிமன்று

juvenile delinquency

இளையோர் நெறிபிறழ்வு

juvenile delinquents

நெறிபிறழும் இளையோர்

juvenile justice

இளையோர் நீதி

juvenile prawn

குஞ்சிறால்

kangaroo court

சட்டவிரோத நீதிமன்று

keep the peace

அமைதி பேணு

keep the peace and be of good behaviour

அமைதி காத்து, நன்னடத்தை பேணு

KGB Statement

(காவல்துறையினரால் பதிவுசெய்யப் படும்) முன்வாக்குமூலம்

KGB Warning

முன்வாக்குமூல எச்சரிக்கை 


(காவல்துறையினரால் பதிவுசெய்யப் படும் முன்வாக்குமூலம் நீதிமன்றில்

பயன்படுத்தப்படும் என்று  காவல் துறையினர் கொடுக்கும் 

முன்னெச்சரிக்கை)

kidnapped tourists

கடத்தப்பட்ட சுற்றுலாவாணர்கள்   

kidney stone

சிறுநீரகக் கல்

Kingdom of Ends

இலக்குலகு

King's Counsel

வேத்துவ சட்டவுரைஞர்

kith and kin

உற்றார் உறவினர்

la belle indifference

வெகுளிப் பராமுகம்

label reading

சிட்டை வாசித்தல்

label, a product

பொருட்சிட்டை

label, price

விலைச்சிட்டை

labelling someone a braggart

ஒருவருக்கு புளுகர் என்று முத்திரை குத்துதல்

labile affect

திடீர் உளநிலை மாற்றம்

labour ethics

தொழிலொழுக்கம்; தொழிலியல் அறம்

labour, in

மகப்பேற்று வேதனையில்

labour force

தொழிற்படை  

labour pains

மகப்பேற்று வேதனை

labour room

மகப்பேற்றுக் கூடம்

labour tribunal

தொழிலியல் தீர்ப்பாயம்

labour, go into

மகப்பேற்று வேதனைக்கு உள்ளாகு

labour-based entitlement

தொழில் அடிப்படையில் உதவிப்படி

labour-intensive industry

தொழிலாளர் மிகுந்த கைத்தொழில்

labour-saving devices

தொழிற்சிக்கன சாதனங்கள்

lacustrine plain

ஏரிச் சமவெளி  

laissez-faire = principle of non-interference

நடப்பது நடக்கட்டும்; தலையிடா நெறி

lake classification

ஏரி வகுப்பீடு

Land Acknowledgement

காணி ஒப்புக்கோடல்

land acquisition

காணி கையகப்படுத்தல்; காணி சுவீகரிப்பு

land classification

நில வகுப்பீடு

land cover = vegetation cover

தாவரக் கவிகை

land degradation

நிலவளம் குன்றல்

land dispossession

காணி களைவு

land drainage

நிலநீர் பாய்ச்சல்  

land grab

காணி அபகரிப்பு

land improvement

நில மேம்பாடு

landline

வீட்டுத் தொலைபேசி இணைப்பு

land reclamation

நில மீட்சி

land tenure

காணி உரித்து

land under cultivation

பயிர்நிலம்

land use

நிலப் பயன்பாடு

landed immigrant = permanent resident

ஏற்கப்பெற்ற குடிவரவாளர்; நிரந்தரவாசி

landing paper = record of landing

குடிபுகல் பத்திரம்; குடிபுகல் பதிவு

landlord's liability

ஆதன உடைமையாளரின் பொறுப்பு

landscape architect

தரைவண்மைக் கலைஞர்  

landscape architecture

தரைவண்மைக் கலை

landscape gardening

தரைவண்மைக் கொல்லை அமைப்பு

land-use classification

நிலப் பயன்பாட்டு வகுப்பீடு

language of proceedings

விசாரணை மொழி

language-making capacity

மொழியாக்கத் திறன்  

lapse into a coma

மயக்கத்துள் ஆழு

lapse of memory, a

நினைவுத் தப்பு

lapse of two months, a

இருமாத இடைக்காலம்

lapse, allow membership to

உறுப்புரிமையை காலாவதியாக விடு

large designated public sector organization

அரசுத்துறை நிர்ணயித்த பேரமைப்பு  

large organisation

பேரமைப்பு

large print books

பேரச்சு நூல்கள்

large, criminals (unlawfully) at

(சட்டவிரோதமாக) தடுப்புக்

காவலுக்கு மீளாத குற்றவாளிகள்

large, the people at

மக்கள் அனைவரும்

large, the robbers at

அகப்படாத கொள்ளையர்கள்

latch-key children

(பெற்றோர் வீடுதிரும்பும்வரை)  

தனித்திருக்கும் பிள்ளைகள்  

late charge

தாமதக் கட்டணம்

late foetal death

கர்ப்பச்சிசு பின்னிறப்பு  

late term birth

பிந்து மகப்பேறு; பிந்திப் பிறத்தல் (41-42 கிழமைகள்)

latent content

மறைந்துறை பொருள்

latent talent

மறைந்துறை திறமை  

latest information

ஆகப்பிந்திய தகவல்

laundering, money

பணமாற்று மோசடி

law enforcement

சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

law of demand

கிராக்கி விதி

law of effect

விளைவு விதி

law of proximity

அண்மை விதி

law of similarity

ஒப்பு விதி

Law of Succession

பின்னுரிமைச் சட்டம்; வழியுரிமைச் சட்டம்

Law of Tort

தீங்கியற் சட்டம்

law society

சட்ட சமாசம்

lawful owner

சட்டபூர்வ உடைமையாளர்

lawfulness

சட்டபூர்வம்

laws of logic

ஏரண விதிகள்; தருக்க விதிகள்

Lawyers Collective

சட்டவாளர் குழுமம்

lawyer's professional liability

சட்டவாளரின் துறைமைப் பொறுப்பு

layout editor

கோலப் பதிப்பாளர்

leadership training

தலைமைத்துவப் பயிற்சி  

leading fire

நகரும் இலக்கு வேட்டு

leading question

இட்டுச்செல்லும் வினா 


(எ-கா: "நீங்கள் இரவு 11 மணிக்கு வேணியை தொலைபேசியில் அழைத்தீர்களா?" இது போன்ற வினாக்களை எடுத்த எடுப்பில் நீதிமன்றம் அனுமதிப்பதில்லை. "நீங்கள் எத்தனை மணிக்கு வேணியை தொலை பேசியில் அழைத்தீர்கள்?" போன்ற வினாக்களை நீதிமன்றம் அனுமதிப்பதுண்டு)

leakage effects

புறவொழுக்கு விளைவுகள்

learned behaviour

கற்றறிந்த (பட்டறிந்த) நடத்தை

learned helplessness

கற்றறிந்த (பட்டறிந்த) ஆற்றாமை

learning disability = dyslexia

கற்றல் குறைபாடு

learning-performance distinction

கற்கை-ஆற்றுகை வேறுபாடு

lease of the apartment

அடுக்குமாடியக வாடகை உடன்படிக்கை

leave to appeal

மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி

left flank

இடதுபுற அணி

legacy of corruption left by the previous regime

முந்திய ஆட்சிபீடம் ஈந்துசென்ற ஊழல்  

legacy of Gandhi

காந்தி ஈந்துசென்ற கொடை

legacy of imperialism

ஏகாதிபத்தியத்தின் பெறுபேறு

legacy of one million rupees

10 இலட்சம் ரூபா முதுசொம்  

legal advice

சட்ட மதியுரை

Legal Adviser for Gender Issues

பால்மை விடய சட்ட மதியுரைஞர்

legal advisor

சட்ட மதியுரைஞர்

legal aid

சட்ட உதவிக் கொடுப்பனவு

legal burden of proof

சட்டப்படி எண்பிக்கும் (நிரூபிக்கும்) பொறுப்பு

legal clinic

சட்ட உதவியகம்

legal counsel

சட்டவாளர்

legal counsellor

சட்ட மதியுரைஞர்

legal enactment

சட்ட நிறைவேற்றம்

legal error

சட்ட வழு

legal expense insurance

சட்டச் செலவுக் காப்புறுதி

legal guardian / surrogate

சட்டபூர்வ பாதுகாவலர் / பதிலி

legal liability

சட்டப் பொறுப்பு

legal phraseology

சட்டச் சொல்நடை

legal procedure

சட்ட நடைமுறை

legal proceedings

சட்ட நடவடிக்கை

legal remedy

சட்டப் பரிகாரம்

legal status

சட்டத் தகுநிலை

legal system

சட்ட முறைமை; சட்டக் கட்டுக் கோப்பு

legal technicality

சட்ட நுட்பம்

legally binding contract

சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம்

legally innocent

சட்டப்படி குற்றமற்ற

legend, a football

புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர்

legendary heroes

காவிய நாயகர்கள்

legends and myths

பழங்கதைகளும் தொன்மங்களும்

legitimacy case

சட்டப்பேறு வழக்கு

legitimate child

சட்டப்பேறுற்ற பிள்ளை

legitimate expectation

நியாயபூர்வமான எதிர்பார்ப்பு  

leisure time

திளைப்பு வேளை

leitmotif

மீள்வரி

lending standards

கடன்கொடுப்பு (இரவல்கொடுப்பு) நியமங்கள்

lesser sardine

நெடுங்கவலை (மீன்)

letter of credence = credentials

தூதாண்மை நியமன மடல்

letter of credit

நாணயக் கடிதம்

letter of recall

மீளழைப்பு மடல்

letters patent

அரச பத்திரம்

levelled reading books

மட்டவாரியான வாசிப்பு நூல்கள்

Lex iniusta non est lex =

An unjust law is no law at all

அநீதியான சட்டம் சட்டமே அல்ல

lexicology, phonology

சொல்லியல், ஒலியியல்

lexicography, lexicology

அகராதியியல், சொல்லியல்

LGBTIQ (lesbian, gay, bisexual, transgender, intersex, and questioning rights)

நெகிழ்பாலுறவாளர்கள்

liability insurance

பொறுப்புக் காப்புறுதி

liability limits

பொறுப்பு வரம்பு

liaison officer

இணைப்புறவு அதிகாரி

liar's paradox

பொய்யர் முரண்புதிர் 


(எ-கா: "பின் கூற்று பொய்; முன் கூற்று மெய்!")

liberal arts

பொதுக்கல்வித் துறைகள்


(எ-கா: மொழியியல், மெய்யியல், தாவரவியல், ஏரணவியல்)

liberal democracy

தாராண்மைக் குடியாட்சி

Liberal Party of Canada

கனடிய தராண்மைக் கட்சி

liberalization of trade

வியாபாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல்

liberalized economic policy

தாராளமய பொருளாதாரக் கொள்கை

liberation theology

விடுதலை இறையியல்

libertine, a

போகி

libertine life

போக வாழ்வு

liberties with the manuscript, take

எழுத்துப்பிரதியில் மட்டுமீறி மாற்றங்களைப் புகுத்து

liberties with the truth, take

உண்மையைத் திரித்துக் கூறு   

liberties with you, Don't let him take

அவரை உன்னுடன் மட்டுமீறி நடக்க விடாதே

liberty and justice

விடுதலையும் நீதியும்

liberty for a while, The fugitive was at

தப்பியோடியவர் கொஞ்சக் காலம் சுதந்திரமாகத் திரிந்தார்

liberty to stand for election, You are at

உங்களுக்கு தேர்தலில் போட்டியிட உரித்துண்டு

licensed nurse

உரிமச் செவிலியர் (தாதியாளர்)

lie in ambush

தாக்கும் நோக்குடன் பதிவிரு (பதுங்கியிரு)

lieutenant colonel

படையணி ஏனாதி

lieutenant general

படையணி அதிபதி

Lieutenant Governor

பிரதி ஆளுநர்; மாகாண ஆளுநர்

life and social development skills

வாழ்வு-சமூக விருத்தித் திறன்கள்

life cap

காலவரம்பு

life course

வாழ்க்கைப் போக்கு

life cycle

வாழ்க்கை வட்டம்

life events

வாழ்வியல் நிகழ்வுகள்

life expectancy

சராசரி ஆயுட்காலம்

life imprisonment

வாழ்நாள் சிறையீடு; ஆயுள் சிறைவாசம்

life review

வாழ்க்கை மீள்நோக்கு

life sciences

உயிரினவியல்கள் 


(எ-கா: உயிரியல், விலங்கியல், தாவரவியல்)

life skills

வாழ்வியல் திறன்கள்

life span

ஆயுட்காலம்

life table

ஆயுள் அட்டவணை

lifelong learning

வாழ்நாட் கற்கை

life-style change

வாழ்க்கைப் பாணி மாற்றம்

lifting device

உயர்த்தி

light curtain

ஒளித்திரை

Light Year


9.5 trillion kilometres (9,500,000,000,000)

5.9 trillion miles (5,900,000,000,000)

ஒளி ஆண்டு


9.5 இலட்சம் கோடி கிலோமீற்றர்

5.9 இலட்சம் கோடி மைல்  

lighting plan

ஒளியமைப்பு

likely appearance of bias

பக்கச்சார்பு தோன்றும் சாத்தியம்

limestone scrubbing

சுண்ணக்கல்வழிச் சல்லடை  

limitation clause

வரையறுப்பு வாசகம்

limitation period

வரையறுப்பு காலப்பகுதி

line of credit

ஒதுக்குதொகைக் கடன்

linear thinking

படிமுறைச் சிந்திப்பு

linguistic ambiguity

மொழிவழி இருபொருள்படுகை

linguistic determinism

மொழிவழிச் சிந்தனை

linguistic identity of the deaf community

செவிப்புலன் குன்றியோரின் மொழி அடையாளம்

linguistic relativism

மொழியியற் சார்புவாதம்  

liquid assets

பணச்சொத்து; காசுச்சொத்து

liquid manure

எருக்கூளம்

liquidate, property

உடைமையை விற்றுத்தீர்

liquidator of property

உடைமையை விற்றுத்தீர்ப்பவர்

liquor identity card

மதுகொள்வனவு அடையாள அட்டை

list of exhibits

தடய நிரல்

listing brokerage

நிரலிடும் தரகாண்மை

literacy and numeracy

எழுத்தறிவும் எண்ணறிவும்

literary journalism

இலக்கிய ஊடகவியல்

literary magazine

இலக்கிய சஞ்சிகை   

literary usage

இலக்கிய வழக்கு

litigant, a

வழக்காடுநர்; வழக்காடி

Liturgy of the Eucharist

நற்கருணை வழிபாடு

Liturgy of the Hours

நாழிகை வழிபாடு

Liturgy of the Word

இறைவாக்கு வழிபாடு

live crab

உயிர் நண்டு

live fish

உயிர் மீன்

live ornamental plants

உய்யும் ஒப்பனைச் செடிகள் 

live streaming

நேரோடை

live telecast

நேரடி ஒளிபரப்பு

live-born children

உயிருடன் பிறந்த பிள்ளைகள்

live-fire drills

மெய்வேட்டுப் பயிற்சி

live-in caregiver

உடனுறையும் பராமரிப்பாளர்

liver disease

ஈரல் நோய்

living allowance

வாழ்க்கைப் படி

living from hand to mouth

அற்றைப்பிழைப்பு

living will

பராமரிப்பு விருப்பாவணம்

LL.B. = Bachelor of Laws

சட்டவியல் இளமாணி; இளஞ் சட்டமாணி

loan officer

கடன் அதிகாரி

loan-to-value

கடன்-பெறுமதி விகிதம்

lobby groups, un

துவக்குடைமை அணைவுக் குழுமங்கள் (துவக்குடைமைக்கு அணைவுநாடும் குழுமங்கள்)

lobby of the hotel

விடுதியகத்தின் உள்வாயிற்கூடம்

lobby, gun

துவக்குடைமைக்கு அணைவு நாடுவோர்

lobbyist, a gun

துவக்குடைமைக்கு அணைவுநாடி

lobbyists, gun

துவக்குடைமைக்கு அணைவு நாடுவோர்

local blowing snow

உள்ளூர் வீசுபனி

local custom

உள்ளூர் வழமை

local jurisdiction

உள்ளூர் நியாயாதிக்கம்

locative case

ஏழாம் வேற்றுமை

lock-down

கதவடைப்பு

lock-in period

வரையறுத்த காலப்பகுதி

lock-out

வேலைவிலக்கு

locus of power

அதிகார மையம்

locus standi

(நீதிமன்றில்) வாதிடும் தகுதி

lodging house

விடுதிக்கூடம்

logical fallacy

ஏரணப் போலி 

logical positivism

ஏரணப் புலனறிவாதம்

logical strength

ஏரண வலு

long term prognosis

நீண்டகாலப் பின்னிலைவரம்

longitudinal research

நெடுந்தொடர் ஆராய்ச்சி

longitudinal study

நெடுந்தொடர் ஆய்வு

long-range transport of air pollutants

நெடுந்தூரம் செல்லும் வளி மாசு வகைகள்; வளிமாசுவகைகள் நெடுந்தூரம் செல்லல்

long-term assets

நெடுந்தவணைச் சொத்து

long-term care

நெடுங்காலப் பராமரிப்பு

long-term interest rate

நெடுந்தவணை வட்டி விகிதம்

long-term liabilities

நெடுந்தவணைப் பொறுப்பு

long-term loan

நெடுந்தவணைக் கடன்

long-term memory

நெடுங்கால நினைவாற்றல்

loosening of association

சிந்தனைக் குலைவு

Lord Chancellor of England

இங்கிலாந்தின் நீதி வேந்தர்

lose-lose outcome = negative-sum outcome

பொது தோல்விப் பெறுபேறு  

loss of status

தகுநிலை இழப்பு

loss of status and removal

தகுநிலை இழத்தலும் அகற்றப்படுதலும்

loss of use insurance

பயன்பாடு இழப்புக் காப்புறுதி

loss of vision and blindness

பார்வையிழப்பும் பார்வையின்மையும்

low birth weight

எடை குறைந்த பிறப்பு  

low expressed emotion

தாழ் உணர்வெழுச்சி வெளிப்பாடு

low-income cut-off

தாழ் வருமான வரம்பு  

low rise

தாழ்மாடிக் கட்டிடம்

low risk alcohol use

கெடுதி குறைந்த மது நுகர்வு

low-angle fire

கீழ்ச்சாய் வேட்டு

low-level radioactive wastes

தாழ் மட்டக் கதிரியக்கக் கழிவுகள்  

loyal friends

உற்ற நண்பர்

loyalty oath

விசுவாசச் சத்தியம்

lubrication oil

மசகு எண்ணெய்

lucid dreaming theory

உணர் கனவுக் கோட்பாடு

lucrative business

வருவாய் மிகுந்த தொழில்

lunatic, a

உன்மத்தர்

lunatic asylum = mental asylum

உளநோய் மருத்துவமனை

lunatic fringe

உன்மத்தக் குழுமம்

luxury goods

ஆடம்பரப் பொருட்கள்

lying under oath

சத்தியத்தை மீறிப் பொய்யுரைத்தல்

lying-in clinic

மகப்பேற்று மனை

lynch law

அடாவடிக்கொலைச் சட்டம்

lynch mob

அடாவடிக்கொலைக் கும்பல்

 

 

 

 


 

 

 


No comments:

Post a Comment