Search This Blog

ENGLISH-TAMIL PHRASES (P)

package (insurance) policy

பொதிக் காப்புறுதி ஒப்பந்தம்

pact, peace

அமைதி உடன்படிக்கை

pacta sunt servanda;

agreements must be kept

உடன்படிக்கைகள் பேணப்பட வேண்டும்

pagan

புறச்சமயி

paganism

புறச்சமயத்துவம்

pain and suffering

நோவு நொம்பலம்; நோவும் வேதனையும்

pain killers

வேதனைதணிப்பு மருந்துவகைகள்

pain, back

முதுகுவலி

pains, labour

மகப்பேற்று வலி (வேதனை)

painters, famous

புகழ்பெற்ற ஓவியர்கள்

painters, wall

சுவர் வண்ணப் பூச்சாளர்கள்

pair and set clause

சோடி-தொடைக் கூற்று

palimony

புறம்போக்குப் படி

palliative care

வேதனை தணிக்கும் பராமரிப்பு

palm oil

சமையல் எண்ணெய்

palmyra jaggery

பனம் வெல்லம்

pamphlet

பனுவல்

pancreatitis

கணைய அழற்சி

pandemic disease

பெரும்புல நோய்

pander to bias


பக்கச்சார்புக்கு இடந்தேடிக்கொடு

panel of jurors

நடுவர் குழாம்

panic attack

திகில் தாக்கம்

panic disorder

திகில் கோளாறு

pap smear; pap test

கருப்பைமுகைப் பரிசோதனை

parachute troops

வான்குடைப் படையினர்

paradigm shift = fundamental change =

radical change = revolutionary change

படிமைப் பெயர்ச்சி = அடிப்படை மாற்றம் = பருமாற்றம் = புரட்சிகர மற்றம்

paragon of virtue

அறநெறிச் செம்மல்; ஒழுக்க சீலர்

parallel form

சமாந்தர உரு

parallel process

சமாந்தரப் படிமுறை

parameters, structural

கட்டமைப்புக்குரிய அளவீடுகள்

paramilitary group

துணைப்படைக் குழுமம்

paranoid delusions

ஐயுறவு மலைவுகள்

parboiled and dried palmyra root

புழுக்கொடியல்

par-boiled rice

புழுங்கல் அரிசி

parental consent

பெற்றோரது சம்மதம்

parental investment

பெற்றோரின் ஈடுபாடு

parental leave

பெற்றோருக்கான விடுப்பு

parental rights

பெற்றோரின் உரிமைகள்

parenting practices

பெற்றோரிய செயல்முறைகள்

parenting skills

பேற்றோரியத் திறன்கள்

parenting style

பெற்றோரியப் பாணி

park, car

ஊர்தி மேடை

park, country

நாட்டுப்புற வனம்

park, flower

பூங்கா

park, forest

வனக்கோட்டம்

park, industrial; industrial estate

கைத்தொழிற் பேட்டை

park, national

தேசிய வனம்

park, walk in the

காவில் உலாவு

parking garage

ஊர்தி மடுவம்

parking lot

ஊர்தி மேடை

parking meter

ஊர்திநிலைக் கட்டணமானி

parking space; parking spot; parking stall

ஊர்தி நிறுத்திடம்

parking ticket

ஊர்திநிலை அபராதச்சீட்டு

Parkinson's disease

பார்க்கின்சன் நோய்; உடல்-தளர்ச்சி நோய்

parlance, modern

தற்கால மொழிப்பாணி

parliamentary sovereignty

நாடாளுமன்ற இறைமை

parolee card

நன்னடத்தையாளர் அட்டை

part of speech

வாக்கிய உறுப்பு

partial loss

அரைகுறை இழப்பு

partial payment

அரைகுறைக் கொடுப்பனவு

partial reinforcement effect

அரைகுறை வலியுறுத்தல் விளைவு

participant modeling

பங்குபற்றுநர் முன்மாதிரியாதல்

participant observation

பங்குபற்றி அவதானிப்பு

participatory development

பங்குகொள் அபிவிருத்தி

particular interest

தனி அக்கறை

particularistic approach

தனிக்கவன அணுகுமுறை

Parting shot = Parthian shot

இறுதி அம்புவீச்சு

partner abuse response program

துணைவர் துன்புறுத்தல் பதில்வினைத் திட்டம்

partnership business

பங்கு வணிகம்

partnership with parents, in

பெற்றோரின் பங்களிப்புடன்

party discipline

கட்சி ஒழுக்கம்

party in default

கடப்பாடு தவறிய தரப்பு

passengers and crew

பயணிகளும் பணியாளர்களும்

passive euthanasia

செயப்பாட்டுக் கருணைவதம்

passive voice

செயப்பாட்டு வினை

pastoral counsellor

மதியுரைக் குரவர்

pat down search

உடைதடவித் தேடுதல்

paternal inheritance

பிதாவழிக் குணாம்சம்

paternal leave

தந்தைக்கான விடுப்பு

pathetic fallacy

தற்குறிப்பேற்றம்

pathologizing disabilities

வலுவீனங்களை நோய்களாக நோக்குதல்

patient flow

நோயாளர் சுற்றோட்டம்

patriarchy

ஆணாதிக்க சமூகம்

patriation

முழு அதிகாரப்பேறு

patrilineal descent

ஆண் சந்ததி

patrimony

முதிசம்; முதுசொம்

patronage of the arts

கலைத்துறைப் புரவு; கலைத்துறைக்கான பொருளுதவி

patronage, state

அரச புரவு; அரச பொருளுதவி

patron-clientelism

புரவலர்-பயனர் உறவுமுறை

patronizing smile

புரவுப் புன்னகை; தயவுப் புன்னகை

pawn, a political

அரசியற் பகடை

pawn shop, a

அடகு கடை

pay equity

சரிநிகர் சம்பளம்

payment by installments

தவணைக் கொடுப்பனவு

payment change date

கொடுப்பனவு மாற்றத் திகதி

payment frequency

கொடுப்பனவுத் தவணையீடு

payroll register

சம்பளப் பதிவேடு

peace and harmony

அமைதியும் இசைவும்

peace bond

அமைதிகாப்பு முறி

Peace Education and Reconciliation Unit


அமைதி-கல்வி-மீளிணக்கப் பிரிவு

peace building

அமைதி மேம்படுத்தல்

peace enforcement

அமைதி நிலைநாட்டல்

peace officer

அமைதிகாப்பு அதிகாரி

peace psychology

அமைதி உளவியல்

peace studies

அமைதி ஆய்வுகள்

peacekeeping

அமைதிகாப்பு

peak of the crisis

நெருக்கடியின் உச்சம்

peat soil

மட்கிப்பசளை; பசளைமண்

pecuniary damages

பண இழப்பீடு

pecuniary loss

பண நட்டம்

pedal artery

பாதநாடி

pedal pulse

பாதநாடித் துடிப்பு

peer group

ஒப்பாளர் குழுமம்

peer pressure

ஒப்பாளரின் நெருக்குதல்

peer review

ஒப்பாளரின் மீள்நோக்கு

pelvic examination

கூபக சோதனை

pelvic inflammatory disease

கூபக அழற்சி நோய்

pelvic pain

கூபக வேதனை

Penal Code

தண்டனைச் சட்டக்கோவை

penal colony

சிறைப்புலம்

penchant for politics

அரசியல் வேட்கை

penetration

உள்நுழைவு; உள்நுழைப்பு

penile disease

ஆண்குறி நோய்

pension-splitting

ஓய்வூதியப் பகிர்வு

people of colour

நிறமாந்தர்

people smuggling

ஆட்கடத்தல்

pepper powder

மிளகு தூள்

per annum

ஆண்டுதோறும்; ஆண்டுக்கு

per capita income

தலை வருமானம்

per se; This drug is not harmful per se, but is dangerous when taken with alcohol

அதனளவில்; இப்போதைமருந்து அதனளவில் தீங்கானதல்ல; எனினும் மதுவகையுடன் உட்கொள்ளும் பொழுது ஆபத்தானது

perceived impairments

உணரப்படும் வலுக்குறைவுகள்

perceptual constancy

புலப்பாட்டு நிலைபேறு

perceptual organization

புலப்பாட்டு ஒழுங்கு

percolating filter

கசிவு வடி

peremptory order

மீறமுடியாத(மீறவொண்ணாத) கட்டளை

perfidious Albion

துரோக நாடு

performance anxiety

ஆற்றுகைப் பதைப்பு

performance arts

ஆற்றுகலை

performing arts

நிகழ்த்துகலை

performance enhancing drugs

ஆற்றலூக்கப் போதைமருந்துகள்

performative language

ஆற்றுமொழி

perinatal mortality

சிசுப்பருவ இறப்பு

period effect

காலகட்ட விளைவு

period of indemnity

இழப்பீட்டுக் காலப்பகுதி

periodic payment cap

காலவாரியான கொடுப்பனவு மேல்வரம்பு

periodic rate cap

காலவாரியான வீத மேல்வரம்பு

periodontal disease

பல்-முரசு நோய்

periodontal physiology

பல்-முரசுத் தொழிற்பாடு

peripatetic teacher

தலம்பெயர் ஆசிரியர்

peripheral nervous system

சுற்றயல் நரம்புத் தொகுதி

peripheral neuropathy

சுற்றயல் நரம்புப் பீடை

permanent crop

பல்லாண்டுப் பயிர்

permanent migration

நிரந்தர குடிபெயர்வு

Permanent Peoples’ Tribunal

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்

permanent resident; landed immigrant

நிரந்தர வாசி; ஏற்கப்பெற்ற குடிவரவாளர்

permission granted clause

அனுமதிப்புக் கூற்று

perpetrators and victims

பாதகம்புரிவோரும் பாதிக்கப்படுவோரும்

perpetuating entrenched discrepancies

நிலைநாட்டிய பேதங்களை நிலைநிறுத்தல்

persecuted person

கொடுமைக்குள்ளானவர்; கொடுமைப்படுத்தப்பட்ட ஆள்

persecutory delusion

கொடுமைக்கு உள்ளாகும் மலைவு

person in need of protection

பாதுகாப்புத் தேவையான ஆள்

person of the year

ஆண்டின் பிரபலர்

persona public

வெளிமுகம்; வெளிவேடம்

persona grata

ஏற்கத்தக்கவர்

persona non grata

ஏற்கத்தகாதவர்

personal appearance

உடல் தோற்றம்

personal bond

ஆட்பிணை

personal contents insurance

கைவசப் பொருட் காப்புறுதி

personal effects

கைவசப் பொருட்கள்

personal freedom

ஆட்சுதந்திரம்

personal hygiene

உடல் தூய்மை

personal identification number = PIN

ஆளடையாள இலக்கம்

personal information form

ஆள் தகவல் படிவம்; ஆள் விபரப் படிவம்

personal injury

உடற்காயம்

personal insurance

ஆட்காப்புறுதி

personal jurisdiction

ஆள் நியாயாதிக்கம்

personal law and territorial law

ஆட்சட்டமும் ஆள்புலச் சட்டமும்

personal mobility devices

கைவச நடமாட்ட சாதனங்கள்

personal profile

ஆளுமைக் குறிப்பு

personal property = movable property

அசையும் சொத்து

personal property insurance

அசையும் சொத்துக் காப்புறுதி

personal secretary

அணுக்கச் செயலாளர்

personal support worker

ஆளுதவிப் பணியாளர்

personal trainer

உடற்பயிற்சியாளர்

personal trauma pouch

கைவச ஊறுபாட்டு முதலுதவிப் பை

personality cult

ஆள் (ஆளுமை) வழிபாடு

personality disorder

ஆளுமைக் கோளாறு

personality traits

ஆளுமைக் குணாம்சங்கள்

personal trainer

உடற்பயிற்சி

personality type

ஆளுமை வகை

personification of truth


உண்மையை ஆளாக உருவகித்தல்

personnel carrier

ஆளணி காவூர்தி

persons with disabilities

மாற்றுத் திறனாளர்கள்

persuasive language

இணங்கத்தூண்டும் மொழி

persuasive redefinition


இணங்கத்தூண்டும் மீள்வரையறை

pertussis; whooping cough


குக்கல்; கக்குவான்

pervasive development disorder


தாமத விருத்திக் கோளாறு

pervert, a

பிறழி; கோணி; கோடி; வக்கிரர்

peter out

குன்றிக்குறுகு

phallic stage

குறியின்பக் கட்டம்

phantom employee, a

மாயப் பணியாளர்

pharmaceutical manufacturer

மருந்துவகை உற்பத்தியாளர்


pharmaceuticals and cosmetics

மருந்துவகைகளும் உடலொப்பனைப் பொருட்களும்

PhD = Doctor of Philosophy

கலாநிதி; முனைவர்


phenomenal world

புலப்படும் உலகு

philharmonic orchestra

இசைப்பல்லியம்

philosopher-king

மெய்ஞான வேந்தன் (பிளேட்டோவின் சொல்லாட்சி)

phobic disorders

வெருட்சிக் கோளாறுகள்

photo op; photo opportunity

ஒளிப்பட வாய்ப்பு

phrasal verb

வினைத்தொடர்

phrases, glossary of

சொற்றொடர்க் கோவை

phraseology, legal

சட்டச் சொல்நடை

physical abuse

உடலூறுபடத் துன்புறுத்தல்

physical barriers

உருப்படித் தடங்கல்கள்

physical development

உடல் விருத்தி

physical evidence; demonstrative evidence

உருப்படிச் சான்று

physical hazard

உருப்படி இடர்; இடர்ப்படுத்தும் உருப்படி

physical impairment

உடல்சார் வலுக்குறைவு

physical inactivity

உடற்செயலின்மை

physical injury

உடற்காயம்; உடலூறு

physical science

இயற்கை அறிவியல்

physical theatre

மெய்ப்பாட்டு அரங்கம்

physically disabled person

மாற்றுத் திறனாளர்

physician-assisted suicide

வைத்தியர் துணையுடன் தற்கொலை

pillars of support

துணைத்தூண்கள்; துணைநிற்கும் தரப்புகள்

pilot study

முன்னோடி ஆய்வு

pimp, act as a

பாங்கனாக (கூட்டிக் கொடுப்பவனாக) செயற்படு

pink-collar occupation

மகளிர் பணி

piracy, an act of

கடற்கொள்ளைச் செயல்

pirates, a group of

கடற்கொள்ளையர் குழுமம்

place theory

இடக் கோட்பாடு

plagiarism, practise

படைப்புத்திருட்டுப் புரி

plain meaning rule = literal meaning rule

சொற்பொருள் விதி

plan of action on ageing

மூப்பு நடவடிக்கைத் திட்டம்

plan of care

பராமரிப்புத் திட்டம்

planned births

திட்டமிட்ட மகப்பேறு

planned parenthood

திட்டமிட்ட பெற்றோரியம்

plant repairs

பொறித்தொகுதி பழுதுபார்ப்புகள்

plant, an indoor

உள்ளகச் செடி

plant, cement

சீமேந்துத் தொழிற்சாலை

plastic surgery

இழையமாற்றுச் சிகிச்சை

platform stage

அவையக மேடை

platonic love

ஆன்ம நேயம்

playhouse

அரங்கம்

playboy philosophy

இன்ப மெய்யியல்

playing stage

அரங்க மேடை

plea bargain

குற்ற ஒப்புதல் பேரம்

plea for help, a

உதவிக் கோரிக்கை

plea of insanity, a

சித்தசுவாதீனம் இன்மை என்ற வாதம்

plead guilty

குற்றத்தை ஒப்புக்கொள்

pleasantries, exchange

முகமன் பரிமாறு

plenary session

நிறை அமர்வு

plot of a story

கதைப்பின்னல்

plot of land

காணித்துண்டு

plot, robbery

கொள்ளைச் சதி

plunging fire

இறங்கு வேட்டு

poetic imagery

கவித்துவக் காட்சி

poetic justice

பழிதீர்ப்பு; கைமாறு

poetic licence (license)

கலைஞர் உரிமம்; கலைஞர் சிறப்புரிமை

point of view

கண்ணோட்டம்

poised stream

நிலைகொள் ஓடை

polarization of communities

சமூகங்கள் எதிர்முனைப்படல்

polarize communities

சமுகங்களை எதிர்முனைப் படுத்து

polarized communities

எதிர்முனைப்பட்ட சமுகங்கள்

pole dance

கழைக்கூத்து; வேழம்பம்

pole dancer

கழைக்கூத்தர்; வேழம்பர்

police chief

காவல்துறை அதிபர்

police constable

காவல்துறை அணியாளர்

police officer

காவல்துறை அதிகாரி

Policy and Analytic Frameworks for Gender Equality

பால்மைச் சமத்துவத்துக்கான கொள்கை மற்றும் பகுப்பாய்வுக் கட்டுக்கோப்புகள்

policing, improve

காவற்பணியை மேம்படுத்து

policing, community

சமூகம்சார்ந்த காவற்பணி

policy conditions

காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள்

policy expiration date

காப்புறுதி ஒப்பந்த முடிவுத் திகதி

policy fee

காப்புறுதி ஒப்பந்தக் கட்டணம்

policy making

கொள்கை வகுப்பு

policyholder

காப்புறுதியுறுநர்; காப்புறுதி கொள்பவர்

political alienation

அரசியற் புறக்கணிப்பு

political assassination

அரசியற் கொலை

political consultant

அரசியல் உசாவலர்

political correctness

அரசியல் உசிதப்பாடு

political culture

அரசியற் பண்பாடு

political economy

அரசியற் பொருளாதாரம்

political expediency

அரசியல் விரகு (உபாயம்)

political opinion

அரசியல் அபிப்பிராயம்

political orientation

அரசியல் நிலைப்பாடு

political patronage

அரசியலணைவு

political power

அரசியல் அதிகாரம்

political process

அரசியற் படிமுறை

political repression

அரசியல் அடக்குமுறை

political science

அரசறிவியல்

political spectrum

அரசியற் களம்

political strategist

அரசியல் விரகாளர் (தந்திரோபாயி)

political will

அரசியற் திடசித்தம்

political witch-hunt

அரசியலெதிரி வேட்டை

politically correct language

அரசியலுக்கு உசிதமான மொழி; அரசியல் நேயமொழி

politically exposed person

அரசியற் செல்வாக்கு மிகுந்தவர்

politically motivated violence

அரசியல்நயம் கருதிய வன்முறை

politically sensitive situation

உணர்ச்சிவசப்படுத்தும் அரசியல நிலைவரம்

politicide

அரசியற் படுகொலை

polity, democratic

குடியாட்சி அரசமைப்பு

polity, Tamil

தமிழர் சமூகவமைப்பு

polluted air

மாசடைந்த வளி

polluter-pays principle

மாசுபடுத்துவோர் செலவுப் பொறுப்பு நெறி

pollution abatement

மாசு தணிப்பு

pollution of poverty

வறுமைசார் மாசு

Ponzi scheme

பொஞ்சி மோசடி

popular culture

மக்களீர் பண்பாடு

popular sovereignty

மக்களீர் இறைமை

population ageing (aging)

குடிமக்கள் மூப்பெய்தல்

population census

குடித்தொகை மதிப்பு

population components

குடித்தொகைக் கூறுகள்

population concentration

குடித்தொகைச் செறிவு

population density

குடித்தொகை அடர்த்தி

population dynamics

குடித்தொகை  விரிவியக்கம்

population explosion

திடீர்க் குடித்தொகைப் பெருக்கம்

population growth model

குடித்தொகை வளர்ச்சி மாதிரி

population momentum

குடித்தொகை உந்துவிசை

population policy

குடித்தொகைக் கொள்கை

population process

குடித்தொகைப் படிமுறை

population projection

குடித்தொகை எறியம்

population pyramid

குடித்தொகைக் கூம்பு

population register

குடித்தொகைப் பதிவேடு

population structure

குடித்தொகைக் கட்டமைப்பு

populism, rise of

மக்களீர்வாதத்தின் எழுச்சி

port of disembarkation

இறங்குதுறை

port of embarkation

ஏறுதுறை

port of entry

புகுதுறை; நுழைதுறை

portable bridge plate

கையடக்க கடப்புத்தகடு

portmanteau word; blend (e.g., motor + hotel = motel)

இருபாதி ஒட்டுச்சொல்

positive absorption

நேர்ப் புறத்துறிஞ்சல்

positive discrimination; affirmative action; reverse discrimination

ஈடுசெய் ஏற்றத்தாழ்வு (அன்றைய ஏற்றத்தாழ்வை ஈடுசெய்வதற்கான இன்றைய ஏற்றத்தாழ்வு)

positive (direct) evidence

நேரடிச் சான்று

positive effect

நல்விளைவு; நற்பயன்

positive lifestyle

இணக்க வாழ்க்கைப் பாணி

positive peace

இணக்க அமைதி

positive perspective

இணக்கமான கண்ணோட்டம்

positive punishment

இணக்கத் தண்டனை

positive reinforcement

இணங்க வலியுறுத்தல்

positive resistance

நேர் எதிர்ப்பீடு

positive-sum outcome; win-win outcome

பொது வெற்றிப் பெறுபேறு

positivism, logical

ஏரணப் புலனறிவாதம்; தருக்கப் புலனறிவாதம்

possessive form

உடைமை உரு

possible self

சாத்திய சுயம்

post-abortion counselling

கருக்கலைப்பின் பின் உளவள மதியுரை

post-dated cheque

பின்தேதியிட்ட காசோலை       

post-enumeration stage

கணக்கெடுப்பின் பின்கட்டம்

postgraduate = a postgraduate student 


பட்டப்பிற்கல்வி மாணவர்


postgraduate course

பட்டப்பிற்கல்விப் பயிற்சிநெறி

posthumous award for bravery

மறைவின்பின் தீரவிருது

postmodernism

நவீனத்தின் பின்னெறி

post-mortem examination = autopsy

பிரேத பரிசோதனை

post-nationalism

தேசியத்தின் பின்னெறி

postnatal (post-partum) depression; baby blues

மகப்பேற்றின் பின் உளவழுத்தம்

post-neonatal mortality


பிறந்தொரு மாதங்கழிந்த இறப்பு            

post-nuptial agreement

மணத்தின் பின் உடன்பாடு

postpartum abstinence

மகப்பேற்றின் பின் பாலுறவு கொள்ளாமை

post-shipment credit

ஏற்றுமதிக்குப் பின்கடன்

post-secondary education

இரண்டாம் நிலைக்கடுத்த கல்வி

post-traumatic stress disorder

ஊறுபாட்டின்பின் உளைச்சல் கோளாறு; அதிர்ச்சி அனுபவத்தின்பின் உளைச்சல் கோளாறு;

post-truth age

உணர்வுமுனைப்புக் காலகட்டம்

post-war Europe

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஐரோப்பா

potable water

பருகு நீர்

Potemkin peace

போலி அமைதி

potential (prospective) buyer

வாங்கக்கூடியவர்; கொள்வனவு செய்யக் கூ டியவர்

potentates and princes

வல்லாட்சியாளர்களும் இளவரசர்களும்

pour condoler

இரங்கற் குறிப்பு

pour féliciter

பாராட்டுக் குறிப்பு

pour memoire

நினைவூட்டற் குறிப்பு

pour prendre congé

விடைபெறு குறிப்பு

pour presenter

அறிமுகக் குறிப்பு

pour remercier

நன்றிக் குறிப்பு

power balance

வலுச் சமநிலை

power cut

மின்வெட்டு

power, everything in my

என்னால் இயன்ற அனைத்தையும்

power of argument

வாத வலு

power of attorney

பதிலாளித் தத்துவம்; பகராண்மைத் தத்துவம்

power of speech

பேச்சாற்றல்

power politics

வல்லாதிக்க அரசியல்

power struggle

அதிகாரப் போராட்டம்

power, seize

ஆட்சியைக் கைப்பற்று

power, solar

கதிரொளி வலு

power, the corridors of

உயர் அதிகார பீடங்கள்

power, wield

அதிகாரம் செலுத்து

power words and alternates

வலுச்சொற்களும் மாற்றுச் சொற்களும்

power, world

உலக வல்லரசு

practical (applied) ethics

செய்முறை அறவியல்; பிரயோக அறவியல்

practical gender needs


பால்மை நடைமுறைத் தேவைகள்

practitioner, medical

மருத்துவர்; மருத்துவம் புரியுநர் (புரிபவர்)

pragmatic approach

செயல்நோக்கு அணுகுமுறை

pragmatic theory of truth

செயல்நோக்கு மெய்க் கோட்பாடு

pragmatist

idealist

realist

செயல்நோக்கு நெறிஞர்

குறிக்கோள் நெறிஞர்

மெய்மை நெறிஞர்

prawn shell

இறால் கோது

praxis of life

வாழ்கை; வாழும் விதம்; வாழும் பாங்கு

preamble, introduction, foreword, preface

பாயிரம், அணிந்துரை, முன்னுரை, முகவுரை

pre-approval for mortgage

அடைமானக் கடனுக்கான முன்-அனுமதி

pre-attentive processing

அவதானிக்கமுன் படிமுறையீடு

preceptor in nursing

தாதிமைப் பயிற்சிநெறிஞர்

PRECIFAC; Presidential Commission of Inquiry to Investigate and Inquire into Serious Acts of Fraud, Corruption and Abuse of Power, State Resources and Privileges

பாரதூரமான மோசடிகள், ஊழல்கள் புரியப்பட்டதையும், அதிகாரம், அரச வளங்கள், சிறப்புரிமைகள் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதையும் புலனாய்ந்து விசாரணை செய்வதற்கான அரசதிபர் விசாரணை ஆணையம்

precision instruments

நுண்கருவிகள்

preclinical stage

சிகிச்சைநிலைக்கு முன்கட்டம்

preconceived notion

முன்கூட்டிய எண்ணம்

preconscious memory

உணர்வடி நினைவு

preconscious psychology

உணர்வடி உளவியல்

predatory existence

கொன்றுண்ணும் வாழ்வு

predeceasing spouse

முன் இறக்கும் வாழ்க்கைத் துணை

predictive policing

முன்புலனாய்வுக் காவல் நடவடிக்கை

predominant culture

முதன்மையான பண்பாடு

predatory lending

வஞ்சகமான கடன்கொடுப்பு  

pre-emptive attack

முன்கூட்டித் தாக்குதல்

pre-enumeration stage

கணக்கெடுப்புக்கு முன்கட்டம் 

preface, preamble, introduction, foreword

முகவுரை, பாயிரம், அணிந்துரை, முன்னுரை

prefer an appeal

மேன்முறையீடு முன்வை

preferential ballot

தெரிவொழுங்கு வாக்கு

preferential claim

முன்தெரிவுக் கோரிக்கை

preferred share

முன்னுரிமைப் பங்கு

pregenital stage

குறியின்பத்துக்கு முன்கட்டம்

pregnancy intervals


கருத்தரிப்பு இடைக்காலப் பகுதிகள்

pregnancy leave

கர்ப்பகால விடுப்பு

pregnancy termination

கருத்தரிப்பு முடிவுறுத்தல்

prejudice

பக்கச்சாய்வு; உளக்கோட்டம்

prejudice, payment without

குற்ற ஒப்புதலற்ற கொடுப்பனவு

prejudice, racial

இனத்துவ பக்கச்சாய்வு

prejudiced critics, ideologically

கருத்தியல் பக்கச்சாய்வுடைய திறனாய்வாளர்கள்

prejudicial to the public interest

பொது நலனுக்குப் பங்கம் விளைவிக்கின்ற

preliminary hearing

முதனிலை விசாரணை

preliminary proofs of loss

இழப்புக்கான முதனிலைச் சான்றுகள்

premalignant lesion

புற்றுநோய் சூழக்கூடிய ஊறுபாடு

premarital examination

மணமுன் பரிசோதனை

premarital intercourse

மணமுன் புணர்ச்சி

premature ejaculation

முன்கூட்டியே விந்துபாய்வு      

premeditated act

முன்சிந்தித்த செயல்

premenstrual syndrome

மாதவிலக்கிற்கு முன்பிணி

premises clause, off

வளவுக்கு அப்பாற்பட்ட உடைமைக் கூற்று

premium, at a

அதிக விலையில்; மிகுந்த செலவில்

premium, insurance

காப்புறுதிக் கட்டுப்பணம்

prenatal (antenatal) care

கர்ப்பகால பராமரிப்பு

prenatal mortality

கர்ப்பச்சிசு இறப்பு

prenatal sex selection

கர்ப்பச்சிசுவின் பால்-தெரிவு

prepaid rent

முன்செலுத்து வாடகை

preparation, food

உணவு தயாரிப்பு

preparations for war

போருக்கான ஆயத்தங்கள்

prepayment penalty

முற்கொடுப்பனவுத் தண்டம்

preponderance of evidence

சான்றுப் பெரும்பான்மை

preponderance of probability

சாத்தியப் பெரும்பான்மை

pre-qualification

முன்தகைமை

pre-removal risk assessment

அகற்றலுக்கு முந்திய ஆபத்துக் கணிப்பீடு

pre-reproductive-age girl

கர்ப்பவயது முதிராத சிறுமி

pre-school education

முன்பள்ளிக் கல்வி

pre-school speech program

முன்பள்ளிப் பேச்சு நிகழ் முறை

prescribed period

நிர்ணயித்த காலப்பகுதி

prescribing physician

மருந்து நிர்ணய மருத்துவர்

prescription drug

நிர்ணய மருந்து

presence of mind

மின்மதி; மின்னல் மதி

presentation, give a

விளக்கவுரை அளி

presentation, public

வெளியரங்க விளக்கவுரை

presentence report

தீர்ப்புக்கு முந்திய அறிக்கை

preservation of documents

ஆவணங்கள் பேணல்

pre-shipment credit

ஏற்றுமதிக்கு முன்கடன்

President, the new

புதிய அரசதிபர்

Presidential Commission of Inquiry

அரசதிபர் விசாரணை ஆணையம்

Presidential Commission of Inquiry to Investigate and Inquire into Serious Acts of Fraud, Corruption and Abuse of Power, State Resources and Privileges (PRECIFAC)

பாரதூரமான மோசடிகள், ஊழல்கள் புரியப்பட்டதையும், அதிகாரம், அரச வளங்கள், சிறப்புரிமைகள் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதையும் புலனாய்ந்து விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணையம்

press council

ஊடக மன்றம்

press release

ஊடக அறிவிப்பு

pressure garment

அழுத்துடை

pressure group

நிர்ப்பந்தக் குழுமம்

pressured speech

உள்ளுந்தல் பேச்சு

presumption of innocence

குற்றமற்றவர் என்ற ஊகம்

presumption of legitimacy

சட்டப்பேறு என்ற ஊகம்

pretend play

பாசாங்கு நாடகம்

pretended marriage

பாசாங்கு மணம்

pre-trial motions

விசாரணைக்கு முன்மொழிவுகள்

Prevention and Management of Unsafe Abortion

பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தடுத்தலும் கையாளலும்

Prevention of Terrorism Act

பயங்கரவாத தடுப்புச் சட்டம்

preventive care

நோய்தடுக்கும் பராமரிப்பு

preventive medicine

தடுப்பு மருந்து

preventive punishment

தடுப்புத் தண்டனை

price cap

விலை வரம்பு

price control

விலைக் கட்டுப்பாடு

price gouging

அறா விலையீடு

price list

விலை நிரல்

price-to-cash-flow ratio

விலை-காசுப் புழக்க விகிதம்

pride parade

நெகிழ்பாலுறவாளர் ஊர்வலம்

prima facie evidence

முதல் தோற்றச் சான்று

prima facie, This seems to be a valid argument

பார்த்த மாத்திரத்தில் இது ஒரு வலிதான வாதமாய் தென்படுகிறது

primary; primary election

வேட்பாளர் தேர்தல்

primary care

முதனிலைப் பராமரிப்பு

primary caregiver

முதனிலைப் பராமரிப்பாளர்

primary effect

முதனிலை விளைவு

primary energy consumption

முதனிலை வலு நுகர்வு

primary evidence

முதனிலைச் சான்று

primary health care

முதனிலைச் சுகாதார பராமரிப்பு

primary reinforcers

முதனிலை வலியுறுத்திகள்

primary school

முதனிலைப் பாடசாலை

primary sterility

முதனிலை மகப்பேறின்மை

prime rate

முதன்மை வட்டி வீதம்

primigravida

முதன்முதல் தாயாகுபவர்

primogeniture

முதற்பிறப்பு; முதற் பிறப்புரிமை

primus inter pares = first among equals

ஒப்பாருள் முதல்வர்

principal and agent

முதல்வரும் முகவரும்

principal and interest

முதலும் வட்டியும்

principal balance

முதல்சார் மீதி

principal, interest, taxes, and insurance


முதல், வட்டி, வரி, காப்புறுதி

principle of charity

நெகிழ்ந்து பொருள்கொள் நெறி

principles of justice

நீதி நெறிகள்

print journalism

ஏட்டு ஊடகவியல்

prior encumbrance

முந்திய பாரபந்தம்

priority message

முதன்மைச் செய்தி

prisoners of conscience

கொள்கைநெறிக் கைதிகள்

prisoners of war

போர்க் கைதிகள்

pristine beach

அப்பழுக்கற்ற கடற்கரை

privacy commissioner

அந்தரங்க ஆணையாளர்

Privacy International

சர்வதேய அந்தரங்க காப்பகம்

private banking

தனி வங்கியலுவல்

private driveway

தனி ஊர்திப்பாதை

private language

பிரத்தியேக மொழி

Private Law

தனியாள் சட்டம்

private member's bill

தனி அங்கத்தவர் சட்டமூலம்

private passenger vehicle

தனிப் பயண ஊர்தி

private prosecution

தனியாள் வழக்குத்தொடர்வு

private sector

தனியார் துறை

privilege and influence

சிறப்புரிமையும் செல்வாக்கும்

Privy Council

கோமறை மன்றம்

pro bono

இலவச சட்டப்பணி

pro bono publico; for the public good

பொதுநல சட்டப்பணி

pro forma debate

மாதிரியான விவாதம்

pro forma invoice

மாதிரியான கட்டணச் சீட்டு

pro forma report

மாதிரியான அறிக்கை

pro rata cancellation

விகிதமுறை நீக்கம்

proactive approach

ஆக்கபூர்வமான அணுகுமுறை

probation order

நன்னடத்தைக் கட்டளை

probative value

எண்பித்தற் பெறுமதி

probity, act with

நேரிய முறையில் செயற்படு; நேர்மையுடன் செயற்படு

probity, moral

நேரிய ஒழுக்கம்

problem solving

பிரச்சனை தீர்த்தல்

problem space

பிரச்சனை வெளி

problem-solving skills

பிரச்சனை தீர்க்கும் திறன்கள்

Procedural Law

நடைமுறைமைச் சட்டம்

procedural memory

நடைமுறை நினைவாற்றல்

proceedings; legal proceedings

சட்ட நடபடிக்கை

proceeds of the sale

விற்பனை வருவாய்

process an application

விண்ணப்பத்தைக் குறித்து நடவடிக்கை எடு

process meat

இறைச்சி பதனிடு

process, a court

மன்றாணை

process, peace

அமைதிப் படிமுறை

processed meat

பதனிட்ட இறைச்சி

Pro-choice Movement

சுயேச்சை மகப்பேற்று இயக்கம் (மகப்பேறு என்பது மகளிரின் சுயேச்சையைப் பொறுத்தது, அரசையோ சமூகத்தையோ பொறுத்ததல்ல என்று முழங்கும் இயக்கம்)

proclaimed offender

விளம்பப்பட்ட தவறாளி

procure arms

ஆயுதங்கள் தருவி

procure minors

பராயமடையாதோரை பாலுறவுக்கு கூட்டிக்கொடு

procurement of minors

பராயமடையாதோரை பாலுறவுக்கு கூட்டிக்கொடுத்தல்

procurement of arms

ஆயுதங்கள் தருவிப்பு

produce the accused before the court

குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்து

producer surplus

உற்பத்தியாளர் உறுமிகை (தேறுமதி)

producer, a film

திரைப்படத் தயாரிப்பாளர்

product liability insurance

ஆக்கப் பொறுப்புக் காப்புறுதி

product recall insurance

ஆக்க மீட்புக் காப்புறுதி

professional, a

துறைஞர்

professional actor


துறைமை நடிகர்; நடிப்புத் துறைஞர்

professional building

துறைமைப்பணிக் கட்டிடம்

professional incompetence

துறைமைத் தகுதியீனம்

professional liability insurance


துறைமைப் பொறுப்புக் காப்புறுதி

professional qualification

துறைமைத் தகைமை

professional service

துறைமைச் சேவை

professionally translated documents

துறைமைத்திறம் கொண்டு மொழிபெயர்த்த ஆவணங்கள்

professionals and amateurs

துறைஞர்களும் விழைஞர்களும்

profile of the university, raise the

பல்கலைக்கழகத்தின் மகிமையை உயர்த்து

profile, personal

மகிமைக் குறிப்பு

profound intellectual disability


திண்ணிய அறிவாற்றல் குறைபாடு

profound thought

திண்ணிய சிந்தனை

program director

நிகழ்முறைப் பணிப்பாளர்

programme of research on aging and health

மூப்பு-சுகாதார ஆராய்ச்சித் திட்டம்

programming

நிகழ்முறையாக்கம்

Progress of the World's Women


உலக மகளிர் முன்னேற்ற இயக்கம்

Progressive Conservative Party of Canada

கனடிய முற்போக்கு பழமைபேண் கட்சி

progressive muscle relaxation

படிப்படியான தசைநார் நெகிழ்வு

progressive tax

ஏறு வரி

prohibited ammunition


தடைசெய்யப்பட்ட வெடிகணைகள்

prohibited devices

தடைசெய்யப்பட்ட கருவிகள்

prohibited weapons

தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்

prohibition against disclosure of information

தகவல் வெளிப்படுத்துவதற்கு எதிரான தடை

prohibitory order

தடைக் கட்டளை

project management

நிகழ்பாட்டு முகாமை; திட்ட முகாமை

projective test

எறிவுப் பரிசோதனை

proletarian revolution

பாட்டாளியப் புரட்சி

Pro-life Movement

கருக்கலைப்பு எதிர்ப்பு இயக்கம்

promissory note

வாக்குறுதிச் சீட்டு

promotion and protection of human rights

மனித உரிமை மேம்பாடும் பாதுகாப்பும்

Promotion of Truth, Justice, Reparation and Guarantees of Non-Recurrence, UN Special Rapporteur on the

ஐ. நா. உண்மை மேம்பாடு, நீதி, இழப்பீடு, மீளநிகழாமை உத்தரவாத சிறப்பு அறிக்கையாளர்

prompt action

உடனடி நடவடிக்கை

prompt copy

அடியெடுப்புப் பிரதி; அருக்கூட்டுப் பிரதி

prompt corner


அடியெடுப்பு மூலை; அருக்கூட்டு மூலை

prone to hazard

இடருக்கு உள்ளாகக்கூடிய 

prone to breach rules 

விதிகளை மீறக்கூடிய 

prone to hating strangers

முன்பின் தெரியாதவர்களை வெறுக்கக்கூடிய 

pronounce man and wife

கணவர், மனைவி என்று விளம்பு

proof of loss

இழப்புச் சான்று

propaganda bullhorn

ஊதுகுழல்; பிரசாரப் பீரங்கி

proper law

தக்க சட்டம்; முறையான சட்டம்

property and casualty insurance

உடைமை-சேதாரக் காப்புறுதி

property damage liability insurance

உடைமைச் சேதப் பொறுப்புக் காப்புறுதி

property franchise (suffrage)

ஆதன வாக்குரிமை

property insurance

ஆதனக் காப்புறுதி

property market

ஆதனச் சந்தை

property tax

ஆதன வரி; சோலை வரி

proportional representation

விகிதாசார பிரதிநிதித்துவம்

proportional tax

ஒப்பளவீட்டு வரி; விகிதாசார வரி

proposition to

உடலுறவுக்கு கேள்

proposition, business

வணிக முன்மொழிவு

proprieties, observe the

தகவொழுக்கம் பேணு; தக்கபடி ஒழுகு

proprietor; owner

உடைமையாளர்; உரிமையாளர்

propriety, sense of

தகவொழுக்க உணர்வு

propriety, standards of

தகவொழுக்க நியமங்கள்

prorogue a parliamentary session

நாடாளுமன்ற அமர்வை தள்ளிவை

proscenium

முன்னரங்கம்

proscribe an organization

ஓர் அமைப்புக்கு தடைவிதி

prosocial behavior

சமூகச்சார்பு நடத்தை

prosopagnosia; face blindness

முகம் புரியாமை

prospective (potential) buyer

வாங்கக்கூடியவர்; கொள்வனவு செய்யக் கூடியவர்

prospective payment system

எதிர்பார்க்கப்படும் கொடுப்பனவு முறைமை

prospective voting

எதிர்பார்க்கப்படும் வாக்களிப்பு

prostitution, force one into


ஒருவரை விபசாரத்துள் தள்ளிவிடு

protean world

நிலைமாறும் உலகு

protected person

பாதுகாக்கப்படும் ஆள்

protection and monitoring of the human rights of persons with disabilities

மாற்றுத்திறனாளர்களின் மனித உரிமைகளை பாதுகாத்தலும் கண்காணித்தலும்

protection determination

பாதுகாப்புத் தீர்மானம்

proto-Dravidian word

ஆதி-திராவிடச் சொல்

protocol and etiquette

உபசரணையும் ஒப்பாசாரமும்

protocol officer

உபசரணை அதிகாரி

protocol, diplomatic

சூழ்வியல் விதிமுறை

Protocol, Geneva

ஜெனீவா முன்வரைவு

provincial court

மாகாண நீதிமன்று

provision of health services

சுகாதார சேவைகள் வழங்கல்

provisional plan

இடையேற்பாட்டுத் திட்டம்

provisions for the journey

பயண உணவேற்பாடு

provisions, legal

சட்ட ஏற்பாடுகள்

proximate cause

அண்மித்த ஏது (காரணம்)

prudent man

மதிகொண்ட மனிதன்

pseudo fits

போலி வலிப்புகள்

pseudo seizure

போலி இழுப்பு

psychiatric assessment

உளநலக் கணிப்பீடு

psychic healing

ஆவிமூலப் பரிகாரம்

psychoactive drugs

உளச்செயற்பாட்டு மருந்துகள்

psychodynamic personality theory

உளவியக்க ஆளுமைக் கோட்பாடு

psychodynamic perspective

உளவியக்க கண்ணோட்டம்

psychogeriatric facility

உளமுதுமை பராமரிப்பு நிலையம்

psychological abuse

உளத்துன்புறுத்தல்

psychological assessment

உளவியல் கணிப்பீடு

psychological dependence

போதைமருந்தில் தங்கிய உளநிலை


psychological diagnosis

உளநோய் நிர்ணயம்

psychological fatigue

உள அயர்ச்சி

psychomotor agitation

உளவுடலியக்கப் பதகளிப்பு

psychomotor retardation

உளவுடலியக்கப் பின்னடைவு

psychoneuroimmunology

நரம்புநோய்த்தடுப்புளவியல்

psychosexual development

பாலியல் உளவிருத்தி

psychosocial stages

உள-சமூக விருத்திக் கட்டங்கள்

psychosomatic disorders

உளத்தாக்க உடற் கோளாறுகள்

psychosomatic factors

உளத்தாக்க உடற் காரணிகள்

psychotic depression

சித்தப்பிரமை உளவழுத்தம்

psychotic disorder

சித்தப்பிரமைக் கோளாறு

public accounts committee

அரசாங்க கணக்குக் குழு

public affairs

பொது அலுவல்கள்

public art

வெளியரங்க கலை

public auction

பகிரங்க ஏலம்

public domain

வெளியரங்கு

public guardian and trustee

அரச பாதுகாவலர் மற்றும் அறங்காவலர்

public health and public safety

பொதுமக்களின் நலவாழ்வும், பாதுகாப்பும்

public hearing

பகிரங்க விசாரணை

public (civic) holiday

பொது விடுதலை

public intellectuals

வெளயரங்க அறிவாரந்தோர்

Public Law

பொதுச் சட்டம்

public life

பொது வாழ்வு

public presentation

வெளியரங்க விளக்கவுரை

public proceeding

வெளியரங்க நடவடிக்கை

public relations

பொது உறவு

public representations committee

மக்கள் கருத்துரைக் குழு

public right of way

பொது வழியுரிமை

public safety

பொதுமக்கள் பாதுகாப்பு

public sector

அரசுத் துறை

public utility service

பொது வழங்கல் சேவை (எ-கா: நீர், மின், வாயு)

public, in

வெளியரங்கமாக

public, the

பொதுமக்கள்

publication ban

வெளியீட்டுத் தடை

puerperal mortality rate

மகப்பேற்றுப் பெண்களின் இறப்பு வீதம் (பெண்கள் மகப்பேற்றின் முன் அல்லது  பின் இறக்கும் வீதம்)

puisne judge

துணை நீதிபதி

pull factors

ஈர்க்கும் காரணிகள்

pulse rate

நாடித்துடிப்பு வேகம்

punitive damages

தண்டிக்கும் இழப்பீடு

punitive powers

தண்டிக்கும் அதிகாரம்

puppet show

பொம்மலாட்டம்

purchase agreement

கொள்வனவு உடன்படிக்கை

purchase money transaction

கொள்வனவுப் பண அலுவல்

purchasing power

கொள்வனவு வலு

pure culture spawn

தேர்ந்த இனவிருத்திப் பெருக்கம்

purported leader of the party

கட்சியின் தலைவர் எனப்படுபவர்

purportedly written by the minister, the poem

அமைச்சரால் எழுதப்பட்டதாக கொள்ளப்படும் கவிதை

purpose, main

தலையாய நோக்கம்

purpose, on

வேண்டுமென்றே

pursuit of happiness

இன்பத் தேட்டம்

purview of the committee, within the

குழுவின் செயல்வரம்பினுள்

push factor

விலக்கும் காரணி

putrescible waste

அழுகிய கழிவு

pyramid scheme

கூம்புப்பண மோசடி

No comments:

Post a Comment