ENGLISH-TAMIL
PHRASES
(AKINETIC-AXIOM)
akinetic mutism | பேச்சுமூச்சின்மை |
alcohol abuse | மதுபான துர்ப்பிரயோகம்; மட்டுமீறிய மதுபான நுகர்வு |
alcohol dependence | மதுநுகர்வில் தங்கியிருப்பு |
alcohol intoxication | மதுவெறி |
alcoholism among teenagers | பதின்ம வயதினர் மது நுகர்வுக்கு அடிமைப்படுகை |
alcohol misuse disorder | மதுபான துர்ப்பிரயோகக் கோளாறு |
Alcohol Use Disorders Identification Test (AUDIT) | மதுவகை நுகர்வுக் கோளாறுகளை இனங் காணும் தேர்வு |
alert, be | எச்சரிக்கையாய் இரு |
alert, on | தயார்நிலையில் |
alert the police | காவல்துறைக்கு தகவல் கொடு |
Alexandrine Parakeet | பெரிய பச்சைக்கிளி |
algal bloom | அல்கா மலர்ச்சி |
algophobia; fear of pain | நோவெருட்சி |
algorithmic amplification | நிரலி ஊடான சொற்பெருக்கு |
algorithmic distribution | நிரலி ஊடான விநியோகம் |
algorithms in modern life | நவீன வாழ்வில் நிரலிகள் |
alias Thalaiyaari, Murugavel Mugundan | தலையாரி எனப்படும் முருகவேள் முகுந்தன் |
alibi for the robbery | கொள்ளை நிகழ்கையில் வேறிடத்தில் நின்றதற்கான சான்று |
alienated state land | பராதீனப்படுத்திய அரச காணி |
alienated youth | புறங்கட்டப்பட்ட இளையோர் |
alienate state land | அரச காணியைப் பராதீனப்படுத்து |
alienate youth | இளையோரைப் புறங்கட்டு |
alienation (of property) | (சொத்துப்) பராதீனம் |
alienation, social | சமூகத்திலிருந்து புறத்திப் டுகை (ஒதுக்கப்படுகை) |
alien culture | வேற்றுப் பண்பாடு; புறத்திப் பண்பாடு |
aliens in Britain | பிரித்தானியாவில் உள்ள வெளிநாட்டவர்கள் |
aliens in space? Are there | விண்வெளியில் வேற்றுலகப் பிறவிகள் உள்ளனவா? |
alien to our policy, Revenge is | பழிவாங்கல் எமது கொள்கைக்குப் புறம்பானது |
alimentary canal | உணவுக் கால்வாய் |
alimony, pay | பிரிமனைப்படி செலுத்து |
alimony pendente lite | வழக்காடுகால பிரிமனைப்படி |
allegations of corruption | ஊழல் குற்றச்சாட்டுக்கள் |
alleged theft | புரியப்பட்டதாக கூறப்படும் திருட்டு |
allegiance, oath of | விசுவாசச் சத்தியம் |
allegory, a political | அரசியல் உருவகப் படைப்பு |
allergies and sensitivities | ஒவ்வாமைகளும் கூருணர்வுகளும் |
alliance, political | அரசியல் நட்புறவு |
allied health professionals | துணைச் சுகாதாரத் துறைஞர்கள் எ-கா: உடற்சிகிச்சையாளர், உணவியலர், கதிரியலர் |
allocated mobility aid space | நடமாட்ட துணைக்கருவிகள் |
allocation of funds | நிதிய ஒதுக்கீடு |
alloplastic adaptation | இசைவித்தொழுகல் |
allotment of shares | பங்கு ஒதுக்கீடு |
allowable catch | மீன்பிடி வரம்பு |
allow a claim | கோரிக்கையை அனுமதி |
allow an appeal | மேன்முறையீட்டை அனுமதி |
all-risk policy; all-perils policy | முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம் |
allusion to racism, an | இனவாதம் பற்றிய மறைகுறிப்பு; இனவாதத்தை மறைவாகக் குறிப்பிடுகை |
ally, an | நட்பாளர்; நட்புநாடு |
almshouse, run an | ஆதுல(ர்)சாலை நடத்து |
alpine area | உயர்மலைச்சாரல் |
Alpine Swift | மலை உழவாரன் |
Alt-Right; Alternative Right | மாற்று வலதுசாரித்துவம் |
altcoin; bitcoin; cryptocurrency | மின்மநாணயம் |
alternate emplacement | மாற்று நிலைக்களம் |
alternate level of care | மாற்றுப் பராமரிப்பு மட்டம் |
alternative communication devices | மாற்றுத் தொடர்பாடல் சாதனங்கள் |
alternative dispute resolution | பிணக்கிற்கு மாற்றுத் தீர்வு |
alternative explanation | மாற்று விளக்கம் |
alternative facts | போலி விவரங்கள் |
alternative medicine | மாற்று மருத்துவம் |
alternative resolution | மாற்றுத் தீர்வு |
Alternative Right = Alt-Right | மாற்று வலதுசாரித்துவம் |
alternatives to detention | தடுத்துவைப்புக்கு மாற்றுவழிகள் |
altius non tollendi | உயர்த்தல் மட்டுப்படுத்தும் உரிமை |
altius tollendi | உயர்த்தல் உரிமை |
Alt-Right; Alternative Right | மாற்று வலதுசாரித்துவம் |
altruism, meaning of | பொதுநலநெறியின் பொருள் |
aluminum foil | அலுமினியச் சருகு |
alumna; female graduate | பட்டதாரி மகளிர்; முன்னாள் மாணவி |
alumni; graduates | பட்டதாரிகள்; முன்னாள் மாணவர்கள் |
alumnus; graduate | பட்டதாரி; முன்னாள் மாணவர் |
Alzheimer's disease | மூளைத்தளர்ச்சி நோய் |
amalgamation of provinces | மாகாணங்களின் ஒன்றிணைப்பு |
amateur athletes | பொழுதுபோக்கு மெய்வலர்கள் |
amateur dramatics | விழைஞர் நாடகவியல் |
amateurs and professionals | விழைஞர்களும் துறைஞர்களும் |
Ambassador-Designate | சுட்டியுரைத்த தூதர் |
Ambassador Extraordinary and Plenipotentiary | அதிவிசேட முழுவலுத் தூதர் |
ambient concentration of pollutants | சுற்றாடல் மாசூட்டிகளின் செறிவு |
ambiguity of language, The broker's | இருபொருள்படும் தரகரின் மொழி |
ambiguous statement | இருபொருள்படும் கூற்று; தெளிவற்ற கூற்று |
ambivalence, avoid | இருவுளப்போக்கினை தவிர் |
ambivalent attitude | இருவுளப்பான்மை |
ambulance | நோயாளர் ஊர்தி |
ambulatory patient | நடமாடும் நோயாளி |
ambush journalism | (ஊடகரின்) அதிரடி வினாத்தொடுப்பு |
ambush | பதுங்கி தாக்கு(தல்); பதிவிருந்து தாக்கு(தல்) |
amendment to agreement | உடன்படிக்கைக்கான திருத்தம் |
amenorrhoea | மாதவிலக்கின்மை; கர்ப்பசூலை |
American Mission | அமெரிக்க ஆதீனம் |
amicable settlement | நட்பிணக்கம் |
amicus curiae; friend of the court | நீதிமன்றின் நட்பாளர் |
ammunition, export of | வெடிகணைகளின் ஏற்றுமதி |
amnesia; loss of memory | நினைவிழப்பு; நினைவீனம் |
amnesty, grant | மன்னிப்பு வழங்கு |
amok, run | தறிகெட்டோடு |
amortization schedule | கடன்தீர்ப்பு அட்டவணை |
amusement park | உவகைக் கோட்டம் |
amusement tax | உவகை வரி |
anaclitic depression | சேயுளவழுத்தம்; தாயிழந்த சேயின் உளவழுத்தம் |
anadromous fish | நன்னீர் நாடும் கடல்மீன் |
anaerobic bacteria | உயிர்வளி நாடாத பற்றுயிரிகள் |
anaerobic biological treatment | உயிர்வளி நாடாத உயிர்மவழிச் சுத்திகரிப்பு |
anaerobic decomposition | உயிர்வளிநாடா உயிர்மவழி உருக்குலைவு |
anaerobic respiration | உயிர்வளி நாடாத சுவாசம் |
anal eroticism | குத மதனம் |
anal examination | குதவழிப் பரிசோதனை |
analogical arguments by properties | தன்மை ஒப்புநோக்கு வாதங்கள் |
analogical arguments by relations | உறவு ஒப்புநோக்கு வாதங்கள் |
analogical reasoning | ஒப்புநோக்கு நியாயம் |
analogue case | ஒப்புத்தெரி பொருள் |
anal stage | குதவுணர்வுக் கட்டம் |
analysis, in the final | கூட்டிக் கழித்துப் பார்த்தால் |
analysis phase | பகுப்பாய்வுக் கட்டம் |
analytic psychology | பகுப்புளவியல்; பகுப்பாய்வு உளவியல் |
analytic statement | பகுபடு கூற்று |
anankastic disorder; obsessive-compulsive disorder | ஒன்றல்-உந்தல் கோளாறு |
anarchy = chaos | களேவரம் |
anarchy, concept of | ஆட்சியறவுக் கருதுபொருள் (இது பலவந்த ஆட்சிவகை எதற்கும் எதிரான கோட்பாடு; சமூகத்தை ஆள்வதற்கு கையாளப்படும் வலுவின் உருவமாய் விளங்கும் அரசுக்கு எதிரானது; பெரும்பான்மை யோரின் ஆட்சி என்று பொருள்படு வதை விடுத்து, அனைவரின் இசைவையும் ஈட்டிய ஆட்சி என்று பொருள் படுவது. அத்துணை சுதந்திரத்தை ஈயும் ஆட்சியையே ஆட்சியறவு வாதிகளால் சகிக்கமுடியும் - Bertrand Russell) |
ancillary activity | துணைச் செயற்பாடு |
ancillary motion | துணைநிலை முன்மொழிவு |
anecdotal case study | அனுபவத்துணுக்கு வாரியான விடய ஆய்வு |
anecdote, a funny | வேடிக்கைத் துணுக்கு |
anger management | சீற்றம் தணிப்பு |
angina pectoris | நெஞ்சுத் தெண்டல் |
animal cognition | விலங்கின அறிதிறன் |
animo furandi | திருட்டு எண்ணத்துடன் |
animo revocandi | அழிக்கும் எண்ணத்துடன் |
animus iniuriandi | அவமானப்படுத்தும் எண்ணம் |
animus manendi | வதியும் எண்ணம் |
annual percentage | ஆண்டுச் சதவீதம் |
annual percentage | ஆண்டு விழுக்காடு; ஆண்டுச் சதவீதம் |
annual report | ஆண்டறிக்கை |
annual return | ஆண்டு விபரத்திரட்டு |
annulment of marriage | திருமண நீக்கம் |
anomalous statement | பிறழ் கூற்று |
anomic aphasia; amnestic aphasia | மொழியசதி |
anorexia nervosa | ஊண்வெருட்சி |
anorgasmia | புணர்வுச்சம் எய்தாமை |
antecedents, the politician's | அரசியல்வாதியின் பின்புலம் |
antediluvian period | உலகளாவிய பிரளயத்துக்கு முற்பட்ட |
antenatal (prenatal) care | கர்ப்பகால பராமரிப்பு |
antenatal card | கர்ப்பகால அட்டை |
antenuptial (pre-nuptial) settlement | மணமுன் இணக்கம் |
anthology of poems | கவிதைத் தொகுதி; கவிதைத் திரட்டு |
antiaircraft artillery intelligence service | வான்கல எதிர்ப்பு பீரங்கி உளவுச் சேவை |
anti-Black racism | கருப்பர்-எதிர்ப்பு இனவாதம் |
anti-bullying law | அடாவடி தடுப்புச் சட்டம் |
anticipatory anxiety | எதிர்பார் பதைப்பு |
anticipatory bail | முன்பிணை |
anticipatory coping | முன்கூட்டியே எதிர்கொள்ளல் |
Anti-Corruption Committee Secretariat | ஊழல் தடுப்புக் குழு செயலகம் |
antidepressant medication | உளவழுத்தம் நீக்கி மருந்துவகை |
Anti-Doping Agency | போதைமருந்து நுகர்வு தடுப்பு முகமையகம் |
antidote to secession, Devolution is an | அதிகாரப் பரவலாக்கம் பிரிவினையை ஒடுக்கும் |
Antifa; Anti-Fascism | பாசிச எதிர்ப்பியக்கம் |
antipsychotic medication | சித்தப்பிரமை நீக்கி மருந்துவகை |
anti-racism | இனவாத எதிர்ப்பு |
anti-racist education | இனவாத-எதிர்ப்புக் கல்வி |
antirealism | மெய்ம்மைமறுப்பு வாதம் |
anti-Semitism | யூத-எதிர்ப்பு வாதம் |
antiseptic | காயநச்சொடுக்கி |
antisocial personality disorder | சமூகவிரோத ஆளுமைக் கோளாறு |
anti tank ditch | தாங்கி எதிர்ப்புக் கிடங்கு |
anti tank mine | தாங்கி எதிர்ப்புக் கண்ணி |
anti tank minefield | தாங்கி எதிர்ப்புக் கண்ணிவயல் |
anti tank weapons | தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் |
anxiety, depression, nervousness, stress, tension | பதைப்பு, உளவழுத்தம், படபடப்பு, உளைச்சல், பதற்றம் |
anxiety avoidant personality disorder | பதைப்பு தவிர்ப்பு ஆளுமைக் கோளாறு |
anxiety disorder | பதைப்புக் கோளாறு |
anxiolytic medication | பதைப்பு நீக்கி மருந்துவகை |
anxious, don't get | பதைக்க வேண்டாம் |
a priori knowledge; knowledge from what is before; deductive knowledge; inferential knowledge | முன்னேதறிவு; உய்த்தறிவு; அனுமான அறிவு |
apartment building | அடுக்குமாடிக் கட்டிடம் |
apartment unit | அடுக்குமாடிக் கூடம் |
apathy, voter | வாக்காளரின் அசண்டை |
Apex Court; Supreme Court | உச்ச நீதிமன்று |
apocalypse = universal or widespread destruction or disaster | உலகளாவிய பேரழிவு |
apocalypse, environmental | சூழற் பேரழிவு |
apocalypse of nuclear war | அணுவாயுதப் போரழிவு |
apocalypse, on the brink of | உலகளாவிய பேரழிவின் விளிம்பில் |
Apocalypse, the = revelation = prophecy | அருள்வெளிப்பாடு; திருவெளிப்பாடு |
apostate state | நெறிதுறந்த அரசு |
apotheosis of human rights | மனித உரிமைகளை ஏற்றிப் போற்றுகை |
apparent (ostensible) authority | வெளித்தோற்ற அதிகாரம் |
apparent motion | தோற்ற நகர்வு; நகரும் தோற்றம் |
appeal case | மேன்முறையீட்டு வழக்கு |
appearance notice | வெளிப்படல் (தோற்றல்) அறிவித்தல் |
appearance of bias | பக்கச்சார்பு காணப்படல் |
appear in court | நீதிமன்றில் வெளிப்படு (தோன்று) |
appellate court | மேன்முறையீட்டு நீதிமன்று |
appellative verb | குறிப்புவினை |
applicable, if | ஏற்புடையதாயின் |
applicable, where | ஏற்புடையவிடத்து |
applicable to businessmen | வணிகர்களுக்கு ஏற்புடைய |
apply in person | நேரில் விண்ணப்பி |
apply economic principles | பொருளாதார நெறிகளை பயன்படுத்து |
apply for a job | வேலைக்கு விண்ணப்பி |
apply this cream to your face | இந்தக் களியை உன் முகத்தில் பூசு |
apply to the court | நீதிமன்றிடம் விண்ணப்பி |
apply to everybody | அனைவருக்கும் ஏற்புடையதாகு |
appliance method | சாதன முறை |
appraisal clause | கணிப்புக் கூற்று |
appraised value | கணித்த பெறுமதி |
appreciation, applaud in | மெச்சிக் கைதட்டு |
appreciation, take note with | மெச்சிக் கவனத்தில் கொள் |
appreciation of property value | ஆதனப் பெறுமதி தேறுமதி |
appreciation of the book | நூல் மதிப்புரை |
apprehend the suspect | சந்தேகநபரைக் கைதுசெய் |
apprehension of the suspect | சந்தேகநபரின் கைது |
appropriate action | ஏற்ற நடவடிக்கை |
appropriate public funds | பொது நிதியைக் கையாடு |
appropriate technology | ஏற்ற தொழினுட்பவியல் |
aptitude test | உளச்சார்புத் தேர்வு |
arbitral tribunal | நடுத்தீர்ப்பாயம் |
arbitrary detention | விதிமுறைமீறிய தடுத்துவைப்பு |
arbitrary inference | ஆதாரமற்ற அனுமானம் |
arbitration board | நடுமைச் சபை |
archaic word | வழக்கொழிந்த சொல் |
archetype of compassion | கருணையின் திருவுரு |
archetype of good governance, an | நல்லாட்சிக்கொரு முன்மாதிரி; |
archetypes in literature | இலக்கியத்தில் தொல்மனப் படிமங்கள் (ஆழ்மனப்படிமங்கள்) |
architectural barriers | கட்டுமானத் தடங்கல்கள் |
archival fonds | தோற்றுவாய் வாரியான ஆவணத்திரட்டுகள் |
archival science | ஆவணக்குவையியல் |
archive | ஆவணக்குவை |
archives, historical | வரலாற்று ஆவணக்குவைகள் |
Archives of India, National | இந்திய தேசிய ஆவணக்குவையகம் |
archiving, digital | எண்மக் குவையீடு |
archiving, document | ஆவணக் குவையீடு |
archivists and documentarists | ஆவணக்குவைஞர்களும் ஆவணவியலர்களும் |
area of destination | சேரிடம் |
area of origin | தோற்றிடம் |
area sources of pollution | உள்ளூர் மாசு மூலங்கள் |
areca nut | பாக்கு |
areca palm | கமுகு |
arena, sports | விளையாட்டரங்கு |
Are you guilty or not guilty? | நீர் குற்றவாளியா, அல்லவா? |
argumentative essay | வாதக் கட்டுரை |
argument to the best explanation | சிறந்த விளக்க வாதம் |
argumentum ad selenium = argument from silence | சான்றின்மை வாதம் |
arid zone | வறண்ட வலயம் |
arithmetic growth | எண்ணிக்கை வளர்ச்சி |
Armageddon | ஊழிப்போர்; இறுதி உலகப் போர்; நல்வினைக்கும் தீவினைக்கும் இடையில் நிகழும் இறுதிப்போர் |
armaments, imports of | பேராயுதங்களின் இறக்குமதி |
armchair criticism | திண்ணைத் திறனாய்வு |
armed ship; man of war | படைக் கப்பல் |
armoured car | கவச ஊர்தி |
armoured force | கவசப் படை |
arms control | படைக்கலக் கட்டுப்பாடு; ஆயுதக் கட்டுப்பாடு |
arms race | படைக்கலப் போட்டி; ஆயுதப் போட்டி |
army attaché | தரைப்படைத் தூதிணைஞர் |
army of occupation | ஆக்கிரமிப்பு படை |
army regulations | தரைப்படை ஒழுங்குவிதிகள் |
arraignment of the accused | குற்றஞ்சாட்டப்படவரை முன்னிறுத்தல் |
arraign the accused | குற்றஞ்சாட்டப்படவரை முன்னிறுத்து |
arranged marriage | பேச்சுத் திருமணம் |
arrears, amount in | நிலுவையில் உள்ள தொகை |
arrest memo | கைதுமடல் |
arrest warrant | கைதாணை; பிடியாணை |
arrow grass | ஊசிப்புல் |
arsenal, China's | சீனாவின் ஆயுதக்களம் |
arson, the crime of | தீவைப்புக் குற்றம் |
arteries and veins | நாடி, நாளங்கள் |
Art for art's sake = l'art pour l'art (Victor Cousin) | கலை கலைக்காகவே |
article 10 of the constitution | அரசியல்யாப்பின் உறுப்புரை 10 |
article about leadership, an | தலைமைத்துவம் பற்றிய கட்டுரை |
articled clerk; articling student; student-at-law | பொருந்திப்பயிலும் சட்ட மாணவர் |
articulation, art of | அறுத்துரைக்கும் கலை |
artificial creativity; computational creativity | கணியப் படைப்பாற்றல் |
artificial groundwater recharge | செயற்கைமுறைத் தரைநீர் மீள்நிரப்பல் |
artificial insemination | செயற்கை விந்தீடு |
artificial intelligence | செயற்கை நுண்மதி |
artificial obstacles | செயற்கைத் தடங்கல்கள் |
artificial watercourse | செயற்கை நீரோடை |
artificial water impoundment | செயற்கைமுறை நீர் மறிப்பு |
artillery, inspect | பீரங்கித்தொகுதியைப் பார்வையிடு |
artillery barrage | பீரங்கிப் பல்லவேட்டு |
artillery position | பீரங்கி நிலை |
artist's impression, an | ஓவியரின் வரைபடம் |
artistic swimming; synchronized swimming | இசைபட நீந்தல் |
ascribed characteristics | பிறவிக் குணவியல்புகள் |
ascribed status | பிறவித் தகுநிலை |
aseptic practices | கிருமித்தடுப்பு முறைகள் |
ash pumpkin; ash gourd | நீற்றுப்பூசணி |
ashy-crowned sparrow lark | சாம்பல்தலை வானம்பாடி |
ashy drongo | கரிச்சான் |
ashy prinia | சாம்பல் கதிர்க்குருவி |
ashy woodswallow | சாம்பல் தகைவிலான் |
Asian fairy bluebird | நீலச்சிட்டு |
Asian koel | கோகிலம் |
Asian open-billed stork | நத்தை குத்தி நாரை |
Asian palm swift | பனை உழவாரன் |
Asian paradise flycatcher | அரசவால் ஈப்பிடிப்பான் |
asides and soliloquies | திரைமைறை உரையும் நெஞ்சொடு கிளத்தலும் |
as of right | உரிமைப்படி |
asparagus | சாத்துவாரி; தண்ணீர்விட்டான் |
aspersions on, cast | அவதூறு (களங்கம்) கற்பி |
assault fire | தாக்கு வேட்டு |
assault and battery | தாக்குதலும் ஊறுபடுத்தலும் |
assault with bodily harm | உடலூறுபடத் தாக்குதல் |
assault with grievous bodily harm | உடலூனப்படத் தாக்குதல் |
assembly, constitutional | அரசியல்யாப்பு மன்றம் |
assembly area | ஒருமிப்பு மையம் |
assessed value | கணிப்பிட்ட பெறுமதி |
assessment of the cost | செலவுக் கணிப்பீடு |
assessment order | கணிப்பீட்டுக் கட்டளை |
assessor, an | கணிப்பீட்டாளர் |
assess the cost | செலவைக் கணிப்பிடு |
asset recovery | சொத்து மீட்பு |
asset valuation | சொத்து மதிப்பீடு |
assigner; assignor | உரித்திடுநர்; உரித்தளிப்பவர் |
assignment court | சாட்டுதல் நீதிமன்று |
assignment in Singapore, on | சிங்கப்பூரில் பணி மேற்கொண்டு |
assimilate new ideas | புதிய எண்ணங்களை உள்வாங்கு |
assimilation of immigrants into European culture | ஐரோப்பிய பண்பாட்டுடன் குடிவரவாளர்கள் ஒருங்கிணைவு (ஒருங்கிணைப்பு) |
Assistance to and Protection of Victims of Crime and Witnesses Act | குற்றத்தால் பாதிக்கப் பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் உதவியும் பாதுகாப்பும் |
assistant attaché | உதவித் தூதிணைஞர் |
Assistant Superintendent of Police (ASP) | உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் |
assisted death; doctor-assisted death; physician-assisted death | மருத்துவ உதவியுடன் இறப்பு |
assisted dying; doctor-assisted dying; physician-assisted dying | மருத்துவ உதவியுடன் இறத்தல் |
assisted living facility | வாழ்வுதவி நிலையம் |
assistive technology | திறனுதவித் தொழினுட்பவியல் |
assistive tools | திறனுதவிக் கருவிகள் |
assize court | பருவ நீதிமன்று |
assumed liability | ஏற்றுக்கொண்ட பொறுப்பு |
assumed name; pseudonym | புனைபெயர் |
assume duties | கடமையை ஏற்றுக்கொள் |
assume that we are strangers, Let's | நாங்கள் முன்பின் தெரியாதவர்கள் என்று எடுத்துக்கொள்வோம் (வைத்துக்கொள்வோம்) |
assumption, a valid | வலிதான எடுகோள் |
astonishment, stare in | மலைத்து உற்றுநோக்கு; திகைத்து உற்றுநோக்கு |
asylum seeker | தஞ்சக் கோரிக்கையாளர் |
asymmetrical federalism | சமசீரற்ற இணைப்பாட்சி |
asymptomatic infection | நோய்க்குறியற்ற தொற்று |
at (the) bar | நீதிமன்றின் முன்னிலையில் |
at a premium | மிகை விலையில்; மிகுந்த செலவில் |
ataxia | தசைநார் இசையாமை |
at-birth death rate | பிறக்கையில் இறப்பு வீதம் |
atherosclerosis | நாடி-உட்படிவு |
athlete, an | மெய்வலர் |
athletic competition | மெய்வலப் போட்டி |
athletic field | மெய்வலக் களம் |
at large, criminals unlawfully | சட்டவிரோதமான முறையில் தடுப்புக்காவலுக்கு மீளாதிருக்கும் குற்றவாளிகள் |
at large, the people | மக்கள் அனைவரும் |
at large, the robbers | அகப்படாத கொள்ளையர்கள் |
at law; in law | சட்டப்படி |
atmospheric absorption | வளிமண்டல அகத்துறிஞ்சல் |
atmospheric assimilation | வளிமண்டல உட்செறிவு |
atmospheric dispersion | வளிமண்டல உட்பரம்பல் |
atmospheric dispersion | வளிமண்டலத்துள் பரம்பல் |
atomic energy | அணு வலு |
atomic statement | அணுக் கூற்று (எ-கா: பனை ஒரு மரம்) |
atomic wastes | அணுக் கழிவுகள் |
at-risk women; women at risk; vulnerable women | நலிபடவல்ல (பாதிக்கப்படவல்ல) பெண்கள் |
attached house | இணைவீடு |
attachment, an email | மின்மடல் இணைப்பு |
attachment to the child | பிள்ளைப்பற்று |
attainment target | எய்தல் இலக்கு |
attempted murder | எத்தனித்த கொலை; கொலை எத்தனம் (எத்தனிப்பு) |
attention deficit disorder | அவதானக் குறைபாட்டுக் கோளாறு |
attention deficit hyperactivity disorder | அவதானக் குறைபாட்டு மிகைச்செயற்பாட்டுக் கோளாறு |
attention span | புலன்செலுத்தும் (அவதானிக்கும்) வேளை |
attest a will | இறப்பாவணத்தை அத்தாட்சிப்படுத்து |
attest to their determination | அவர்களின் திடசித்தத்துக்கு சான்றுபகரு |
attitudinal barriers | உளப்பான்மைத் தடங்கல்கள் |
attitudinal discrimination | உளப்பான்மைப் பாரபட்சம் |
attorney; lawyer | சட்டத்தரணி; சட்டவாளர் |
Attorney General | அரச தலைமைச் சட்டவாளர் |
attorney in fact | தத்துவம்பெற்ற சட்டவாளர் |
attributes of leadership | தலைமைத்துவப் பண்புகள் |
attribute success to hard work | வெற்றிக்கு கடுமுயற்சியைக் காரணம்காட்டு |
attribution theory | கற்பிக்கைக் கோட்பாடு |
attrition, war of | கடுநெடும் போர் |
auction, at | ஏலத்தில் |
auction strategy | ஏல உபாயம் |
audi alteram partem; hear the other side | மறுதரப்பைச் செவிமடு |
audible thoughts | ஒலிக்கும் எண்ணங்கள் |
audience, attract the | அவையை (அவையோரை) கவரு |
audience design | அவையோர் வடிவமைப்பு |
audio clip | ஒலிக்கீற்று |
Auditor General | தலைமைக் கணக்காய்வாளர் |
auditorium, art | கலை அவைக்கூடம் |
auditory hallucination; paracusia | செவியொலிப் பிரமை |
auditory test; hearing test | செவிப்புல சோதனை |
audit report | கணக்காய்வு அறிக்கை |
Augean stables | ஊழல் |
augmentative communication devices | தொடர்பாடல் மேம்படுத்தும் சாதனங்கள் |
aural impairment | செவிப்புலன் குறைபாடு |
Australian Open | ஆஸ்திரேலிய வரிப்பாந்தாட்ட வாகைப்போட்டி |
authenticated document | மெய்யுறுதி ஆவணம் |
authentic document; genuine document | மெய்யாவணம் |
authenticity of the document | ஆவணத்தின் மெய்ம்மை |
authoring tool | ஆக்க சாதனம் |
authoritarianism, autocracy, despotism, dictatorship, tyranny | வன்கோன்மை, தனியாளாட்சி, கடுங்கோன்மை, தனிவல்லாட்சி, கொடுங்கோன்மை |
authoritarian, autocrat, despot, dictator, tyrant | வன்கோலர், தனியாட்சியாளர், கடுங்கோலர், தனிவல்லாட்சியாளர், கொடுங்கோலர் |
authoritative document | அதிகாரபூர்வ ஆவணம் |
authority, competent | தகுதிவாய்ந்த அதிகாரி |
authority on law, an | சட்டவியல் துறைபோனவர் |
authority on Tamil classics, an | தமிழ்ச் செவ்வியல் துறைபோனவர் |
authority on Tamil classics | தமிழ்ச் செவ்வியல் பாண்டித்தியம் |
authority to enforce | நடைமுறைப்படுத்தும் அதிகாரம் |
authorize to enforce the act | சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமளி |
autobiography of Iyer | ஐயரின் தன்வரலாறு |
autochthonous people; indigenous people | சுதேச மக்கள் |
autochthony, constitutional | சுதேச அரசியல்யாப்பு |
autocracy in this country | இந்த நாட்டில் தனியாளாட்சி |
autocrat, act as an | தனியாட்சியாளராகச் செயற்படு |
automated teller machine; ATM | தன்னியக்க வங்கிப் பொறி |
automatic funds transfer | தன்னிகழ் நிதிய மாற்றீடு |
automatic process | தன்னிகழ் படிமுறை |
automobile air pollution | ஊர்தி வளி மாசு |
automobile insurance | ஊர்திக் காப்புறுதி |
automobile line | ஊர்திக் காப்புறுதி வகை |
autonomous car | தானூர்திக்கார் |
autonomous province | தன்னாட்சி மாகாணம் |
autonomous vehicle | தானூர்தி |
autonomy provincial | மாகாணத் தன்னாட்சி |
autoplastic adaptation | இசைந்தொழுகல் |
autopsy; post mortem examination | பிரேத பரிசோதனை |
autotopagnosia | தன்னங்க உணர்வீனம் |
autrefois acquit | ஏற்கெனவே அதே குற்றச்சாட்டுக்காக விசாரிக்கப்பட்டு விடுதலையனவர் எனும் வாதம் |
autrefois convict | ஏற்கெனவே அதே குற்றச்சாட்டுக்கும் குற்றத்தீர்ப்புக்கும் உள்ளானவர் எனும் வாதம் |
auxiliary nurse midwife | துணை மகப்பேற்றுச் செவிலி |
auxiliary verb | துணை வினை |
avant-garde artists | முன்னோடிக் கலைஞர்கள் |
avenge yourself on those who humiliated you | உன்னை மானங் கெடுத்தியவர்களை பழிவாங்கு |
avenge your father's murder | உன் பிதாவின் கொலைக்கு வஞ்சம் தீர் (பழிவாங்கு) |
average daily balance | அன்றாட சராசரி மீதி |
average household size | சராசரி வீட்டார் தொகை |
average parity; children ever born; mean number of children ever born per woman | ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை |
average price | சராசரி விலை |
average prudent person | சராசரி அறிவுள்ள ஆள்; சராசரி அறிவுள்ளவர் |
average tax rate | சராசரி வரி வீதம் |
aversion therapy | தவிர்ப்புச் சிகிச்சை |
averting a crisis | நெருக்கடி தவிர்த்தல் |
aviation and navigation | வான்செலவும் கடற்செலவும் |
avocado; butter-fruit | வெண்ணெய்ப் பழம் |
avoidance costs | தவிர்ப்புச் செலவு |
avoidance of risk | ஆபத்து தவிர்ப்பு |
awards gala | விருது விழா |
award-winning translation | விருதுவென்ற மொழிபெயர்ப்பு |
awareness and sensitivity | விழிப்புணர்வும் கூருணர்வும் |
A World Free of Violence against Women | மகளிருக்கெதிரான வன்முறையற்ற உலகம் |
axiom = axiomatic truth = self evident truth e.g. Two parallel lines never intersect each other | மெய்த்தளம்; வெளிப்படை உண்மை எ+கா: இரு சமாந்தரக் கோடுகள் ஒன்றை ஒன்று ஊடறுக்கா |
No comments:
Post a Comment