சட்டவியல் = LAW (J-P)
joining claims or applications | கோரிக்கைகளை அல்லது விண்ணப்பங்களை இணைத்தல் |
judge | நீதிபதி |
judgement | தீர்ப்பு |
judgement creditor | தீர்ப்பின்படி கடன்மீட்பவர் |
judgement debtor | தீர்ப்பின்படி கடனிறுப்பவர் |
judicature | நீதித்துறை |
judicial consideration | நீதித்துறையின் பரிசீலனை |
judicial council | நீதித்துறை மன்றம் |
judicial misconduct | நீதித்துறைசார் துர்நடத்தை |
judicial pre-trial | நீதிபதி முன்னிலையில் முன்விசாரணை |
judicial release | நீதித்துறை அளிக்கும் விடுதலை |
judicial review | நீதித்துறையின் மீள்நோக்கு |
judicial system | நீதி முறைமை |
judiciary | நீதிபதிகள்; நீதித்துறை |
judicious approach | நிதானமான அணுகுமுறை |
jurisdiction | நியாயாதிக்கம் |
jurisprudence | சட்டவியல் |
jurisprudential guides | சட்டவியல் வழிகாட்டிகள் |
jurist | சட்டவல்லுநர் |
juror | நடுவர் |
jury | நடுவர் குழாம் |
jury deliberation | நடுவர் கூட்டாய்வு |
jus accrescendi = the right of survivorship | மீந்தார் உரிமை |
jus ad rem = a right to a thing | பொருளுக்கான உரிமை |
jus cloacae | வடிகால் செலுத்துரிமை |
jus cogens = peremptory law | மீறவொண்ணா சட்டம் |
jus commune = common law | வழக்காற்றுச் சட்டம் |
jus disponendi = the right of disposing | கையாளும் உரிமை |
jus et fraus nunquam cohabitant = Fraud and justice never cohabitate. | நீதியும் மோசடியும் என்றுமே ஒருங்குறையா |
jus fluminis | பாய்நீர் உரிமை |
jus gentium = law of nations | நாடுகளுக்கான சட்டம் |
jus habendi = the right to have and enjoy a thing | உடைமை உரிமை |
jus in personam = a right against a person | ஆளுக்கெதிரான உரிமை |
jus in re = a right in a thing | பொருளுரிமை |
jus mariti = the right of the husband | கணவனின் உரிமை |
jus postliminium | மீட்சிக்குப்பின் உரிமை |
jus retentionis = right of retention | வைத்திரு உரிமை |
jus retractus = right of redemption | மீள்கொள் உரிமை |
just and reasonable | நேரிய-நியாயமான |
justa causa = just cause | நேரிய காரணம் |
justice | நீதி; நீதியரசர் |
Justice of the Peace | சமாதான நீதிவான் |
Justice should not only be done, but should manifestly and undoubtedly be seen to be done (Lord Hewart) | நீதி நிலைநாட்டப்படவும் வேண்டும்; நீதி நிலைநாட்டப்படுவதாக, வெளிப்படையாக, ஐயந்திரிபறப் புலப்படவும் வேண்டும் |
justiciable matter | நீதியாய்வுக்குரிய விடயம் |
justifiable homicide | நியாயப்படுத்தக்கூடிய கொலை |
justus error | ஏற்றுக்கொள்ளக்கூடிய வழு |
Juvenile Court = Youth Court | இளையோர் நீதிமன்று |
juvenile delinquency | இளையோர் நெறிபிறழ்வு |
juvenile delinquents | நெறிபிறழும் இளையோர் |
Kennedy plea = Alford plea | முன்னர் தான் குற்றமற்றவர் என்று வாதித்தாலும் பின்னர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளல் |
KGB Statement | முன்வாக்குமூலம் (காவல்துறையினரால் பதிவுசெய்யப்படும் முன்வாக்குமூலம்) |
KGB Warning | வாக்குமூலத்துக்கு முன்னெச்சரிக்கை (காவல்துறையினரால் பதிவுசெய்யப்படும் முதலாவது வாக்குமூலம் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்று காவல்துறையினர் கொடுக்கும் முன்னெச்சரிக்கை) |
keep the peace | அமைதி பேணு |
keep the peace and be of good behaviour | அமைதி காத்து, நன்னடத்தை பேணு |
kidnap | ஆட்கடத்து |
Labour Tribunal | தொழில் தீர்ப்பாயம் |
lacuna | இடைவெளி |
language of proceedings | விசாரணை மொழி |
lapse | தவறு; காலாவதியாகு(தல்) |
law | சட்டம் |
Law of Succession | பின்னுரிமைச் சட்டம் |
Law of Tort | தீங்கியற் சட்டம் |
law society | சட்ட சமாசம் |
lawful owner | சட்டபூர்வ உடைமையாளர் |
lawfulness | சட்டபூர்வம் |
lawsuit | வழக்கு |
lawyer | சட்டவாளர்; சட்டவாதி |
leading question | இட்டுச்செல்லும் வினா |
lease | வாடகை உடன்படிக்கை; குத்தகை |
leave to appeal | மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி |
legacy | விருப்பாவணக் கொடை |
legal advice | சட்ட மதியுரை |
legal advisor | சட்ட மதியுரைஞர் |
legal aid | சட்ட உதவிக் கொடுப்பனவு |
legal burden of proof | சட்டப்படி எண்பிக்கும் (நிரூபிக்கும்) பொறுப்பு |
legal clinic | சட்ட உதவியகம் |
legal counsel | சட்டவாளர் |
legal counsellor | சட்ட மதியுரைஞர் |
legal error | சட்ட வழு |
legal liability | சட்டப் பொறுப்பு |
legal phraseology | சட்டச் சொல்நடை |
legal precedent | நீதிமன்ற முன்தீர்ப்பு |
legal procedure | சட்ட நடைமுறை |
legal proceedings | சட்ட நடவடிக்கை |
legal remedy | சட்டப் பரிகாரம் |
legal status | சட்டத் தகுநிலை |
legal system | சட்ட முறைமை; சட்டக் கட்டுக்கோப்பு |
legal technicality | சட்ட நுட்பம் |
legalese | சட்டமொழி |
legality | சட்டதிட்பம் |
legalize | சட்டபூர்வமாக்கு |
legally binding action | சட்டப்படி பிணிக்கும் நடவடிக்கை |
legally innocent | சட்டப்படி குற்றமற்ற |
legatee | விருப்பாவண உடைமையுறுநர் (பெறுநர்) |
legislation | சட்டவாக்கம் |
legislator | சட்டமன்றாளர் |
legislature | சட்டவாக்க மன்றம் |
legitimacy | சட்டப்பேறு; சட்டப்பெறுதி |
legitimacy case | சட்டப்பேறு வழக்கு |
legitimate child | சட்டப்பேறுற்ற பிள்ளை |
legitimize | சட்டப்பேறாக்கு |
lesbian | ஓரினச்சேர்க்கைப் பெண் |
lessee | குத்தகையுறுநர் |
lessor | குத்தகையிடுநர் |
letters patent | அரச பத்திரம் |
levy | அறவிடு; அறவீடு |
Lex iniusta non est lex = An unjust law is no law at all | அநீதியான சட்டம் சட்டமே அல்ல |
libel | வரைதூறு (எழுத்தில் வரைந்த அவதூறு) |
lien | பாத்தியம் |
life imprisonment | வாழ்நாள் சிறையீடு |
likely appearance of bias | பக்கச்சார்பு தோன்றும் சாத்தியம் |
limitation clause | வரம்பு வாசகம் |
liquidate | விற்றுத்தீர் |
liquidator | விற்றுத்தீர்ப்பவர் |
list of exhibits | தடய நிரல் |
litigant | வழக்காடி |
litigation | வழக்காடல் |
live-in relationship | (மணமாகாது) கூடிவாழும் உறவு |
LL.B. = Bachelor Of Laws | சட்டவியல் இளமாணி |
local custom | உள்ளூர் வழக்கம்; உள்ளூர் வழமை |
local jurisdiction | இட நியாயாதிக்கம் |
locus standi | நீதிமன்றில் வாதிடும் தகுநிலை |
loitering | சுற்றித்திரிதல் |
loss of status | தகுநிலை இழப்பு |
loss of status and removal | தகுநிலை இழத்தலும் அகற்றப்படுதலும் |
low income cut-off (LICO) | தாழ்ந்த வருமான வரம்பு |
lunacy | உன்மத்தம் |
lunatic | உன்மத்தர் |
lying under oath | சத்தியத்தை மீறிப் பொய்யுரைத்தல் |
lynch law | அடாவடிக்கொலைச் சட்டம் |
lynch mob | அடாவடிக்கொலைக் கும்பல் |
magistrate | நீதிவான் |
Magna Carta = Great Charter
“No free man shall be seized or imprisoned, or stripped of his rights or possessions, or outlawed or exiled, or deprived of his standing in any other way, nor will we proceed with force against him, or send others to do so, except by the lawful judgement of his equals or by the law of the land" (King John of England and English Barons, 1215). | மாபெரும் பட்டயம்
"சுதந்திர மனிதர் எவரும் கைதுசெய்யப்படல் அல்லது சிறையில் அடைக்கப்படல் அல்லது அவருடைய உரிமைகள் அல்லது உடைமைகள் களையப்படல் ஆகாது; அல்லது சட்டப்படி அவருக்கு உரித்தான பாதுகாப்பு நீக்கப்படல் ஆகாது; அல்லது அவர் நாடுகடத்தப்படல் ஆகாது; அல்லது அவருடைய தகுநிலை வேறெந்த விதத்திலும் நீக்கப்படல் ஆகாது; நாங்கள் அவர்மீது பலவந்தம் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் போவதில்லை, அப்படிச் செய்வதற்கு மற்றவர்களை அனுப்பவும் போவதில்லை; அவருக்கு ஒப்பானவர்களின் சட்டபூர்வமான தீர்ப்புக்கு அல்லது நாட்டின் சட்டத்துக்கு அமையவே நாங்கள் அப்படிச் செய்வோம்" |
maiming | அங்கவீனப்படுத்தல் |
maintenance case | தாபரிப்பு வழக்கு |
make an appeal | மேன்முறையிடு |
make out | வலியுறுத்து |
make representations on our behalf | எம் சார்பில் எடுத்துரை |
mala fide | தீயெண்ணம்; தீய நோக்கம்; துர்நோக்கம்; துன்னோக்கம் |
malfeasance | தீது |
malice | வன்மம் |
malice aforethought | முன்சிந்தித்த வன்மம் |
malicious desertion | வன்மைக் கைவிடுகை; வன்மம் கொண்டு கைவிடல் |
malingering | கள்ளக்கிடை; நோயுற்றதாகப் பாசாங்குசெய்தல் |
malpractice | முறைகேடு |
mandamus = we command | மேல்மன்றுப் பேராணை |
mandate | பணிப்பாணை |
mandatory detention | கட்டாய தடுத்துவைப்பு; நியதிப்படியான தடுத்துவைப்பு |
mandatory injunction | கட்டாய தடைகட்டளை; நியதிப்படியான தடையுத்தரவு |
manslaughter | ஆள்வதம் |
marital status | திருமணத் தகுநிலை |
Maritime Law | கடற் சட்டம் |
marriage | திருமணம்; மணவாழ்வு |
marriage of convenience | வசதிமணம் |
Martial Law | படைச் சட்டம் |
material evidence | முக்கிய சான்று |
material jurisdiction = subject-matter jurisdiction | விடய நியாயாதிக்கம் |
material witness | முக்கிய சாட்சி |
maternal inheritance | தாய்வழி மரபுரிமை |
matrimonial home | மணவாழ்வு மனை |
matrimony | மணம் |
matter of law | சட்ட விசயம் |
mayhem | குதறல்; கூச்சல் குழப்பம் |
mediate | இணக்குவி |
mediation | நடுக்கட்டு |
mediation board | நடுக்கட்டு சபை |
mediator | நடுக்கட்டுநர் |
medical examination | வைத்திய பரிசோதனை |
medical inadmissibility | வைத்திய காரணங்களால் அனுமதிக்கவியலாமை |
member of the economic class | பொருளாதார வகுப்பினர் |
member of the family class | குடும்ப வகுப்பினர் |
mens rea = guilty mind | குற்ற நெஞ்சம் |
mental agitation | பதகழிப்பு |
mental disability | உளத் தளர்வு |
mental incompetence | உளத் தகுதியீனம் |
mentally incapable | உளவல்லமையற்ற |
Mercantile Law | வணிகச் சட்டம் |
military service | படைச் சேவை |
minister's counsel | அமைச்சரின் சட்டமதிஞர் |
minutes of settlement | இணக்கக் குறிப்பு; இணக்க மடல் |
minutia | அற்பநுட்பம் |
minutiae | அற்பநுட்பங்கள் |
misappropriation | கையாடல் |
miscarriage of justice | நீதிதிறம்பல்; நீதிவழுவல் |
mischief | தீங்கு |
misconduct | துர்நடத்தை; துன்னடத்தை |
misdeed | துர்ச்செயல் |
misdemeanour | பொல்லாங்கு |
misrepresentation | பிறழ்கூற்று |
mistake of fact | விவர வழு |
mistake of law = error of law | சட்ட வழு |
mistaken identity | தப்படையாளம் |
mistress | வைப்பாட்டி |
mistrial | வழுபடு விசாரணை |
mistrust | அவநம்பிக்கை |
mitigating circumstances | தணிக்கும் சூழ்நிலைகள் |
mob violence | கும்பல் வன்முறை |
molest | மானபங்கப்படுத்து |
Monetary Law | நாணயச் சட்டம் |
monogamy | ஒற்றைமணவாழ்வு |
moral code | ஒழுக்கக் கோவை |
moral outrage | ஒழுக்கச்சீற்றம்; அறச்சீற்றம் |
moral turpitude | ஒழுக்கக் கேடு |
moratorium | தற்காலிகத் தடை |
mug somebody | ஒருவரை தட்டிப்பறி (அடித்துப் பிடுங்கு) |
Municipal Law | உள்ளாட்சிச் சட்டம் |
murder | கொலை |
mutilate | கண்டதுண்டமாக்கு |
mutiny | படைக்கலகம் |
named surety | பெயர்குறித்த பிணையாளி |
natural justice | இயற்கை நீதி |
Natural Law | இயற்கைச் சட்டம் |
necessaries of life = necessities of life | உயிவாழ்வதற்கு வேண்டிய வசதிகள் |
negligence | கவலையீனம் |
Nemo debet bis vexari pro una et eadem causa = No one ought to be troubled twice for one and the same cause | ஒரே வழக்கிற்கு எவரையும் இருமுறை அலைக்கழித்தல் ஆகாது |
Nemo debet esse judex in propia causa = No one shall be a judge in their own case | எந்த வழக்கிலும் எவரும் தனக்குத் தானே நீதிபதியாகல் ஆகாது |
Nemo judex in parte sua = No person can judge a case in which he or she is a party | தான் ஒரு தரப்பாக விளங்கும் வழக்கிற்குத் தானே நீதிபதியாகல் ஆகாது |
new evidence | புதிய சான்று |
new immigrant | புதிய குடிவரவாளர் |
next of kin | கிட்டிய உரித்தாளர் |
nexus | தொடர்பு |
no contact order | தொடர்புத்தடைக் கட்டளை |
nolens volens = willy nilly | விரும்பியோ விரும்பாமலோ |
nolle prosequi = the relinquishment by a plaintiff or prosecutor of all or part of a suit | வழக்கை கைவிடும் அறிவிப்பு |
nominal payment | பெயரளவிலான கொடுப்பனவு |
non compos mentis | புத்திமாறாட்டமுடைய |
non-capital offence | இறப்புத் தண்டனைக்கு உள்ளாக்காத குற்றம் |
non-cognizable offence | பிடியாணையின்றிக் கைதுக்குள்ளாக்காத குற்றம் |
non-compliance with the act | சட்டத்துக்கு அமைந்தொழுகாமை |
non-disclosure of information | தகவல் வெளிப்படுத்தாமை |
non-pecuniary damages | பணக்கணிப்புக்கு உட்படாத இழப்பீடு |
non-restricted weapons | கட்டுறுத்தப்படாத ஆயுதங்கள் |
normal prudence | சாதாரண மதியுடைமை |
Noscitur a sociis = A word is known by the company it keeps | சொல்லின் பொருள் அதன் சூழ்நிலையைப் பொறுத்தது |
notarial agreement | நொத்தாரிசு மூலமான உடன்படிக்கை |
notarized document | நொத்தாரிசால் சான்றளிக்கப்பட்ட ஆவணம் |
notary public | பிரசித்த நொத்தாரிசு |
notice of appeal | மேன்முறையீடு அறிவிப்பு |
notice of decision | முடிபு அறிவிப்பு |
notice of intervention | தலையீடு அறிவிப்பு |
notice to appear | தோற்றும்படி அறிவிப்பு; வெளிப்படுமாறு அறிவித்தல் |
notification | அறிவித்தல் |
notify | அறிவி |
notwithstanding clause = override clause = Section 33 of the Canadian Charter of Rights and Freedoms | மீச்செல் பிரிவு = கனடிய உரிமைகள் - சுதந்திரங்கள் பட்டயத்தின் 33ம் பிரிவு |
notwithstanding lapse of time | காலங் கழிந்தும் |
null and void | வெற்றுவெறிதான; வெற்றும் வறிதுமான |
Nulla poena sine lege = No penalty without a law | சட்டமின்றித் தண்டமில்லை |
nullify | வெறிதாக்கு |
oath or solemn affirmation | சத்தியம் அல்லது பற்றுறுதிமொழி |
obiter dictum | தீர்ப்பிடைக் கூற்று; இடைநேர் கூற்று |
object | மறு; ஆட்சேபி |
objection overruled | ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டுள்ளது |
objection sustained | ஆட்சேபம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது |
objectionable evidence | ஆட்சேபிக்கத்தக்க சான்று |
objective intent | புற நோக்கம் |
obligation | கடப்பாடு |
obscene language | ஆபாச மொழி |
obsolescent etiquette | அருகிவரும் (வழக்கொழியும்) ஆசாரம் |
obsolete etiquette | அருகிய (வழக்கொழிந்த) ஆசாரம் |
obstruct | தடங்கல் விளைவி |
obstruction | தடங்கல் |
obstruction of justice | நீதிக்குத் தடங்கல் விளைவிப்பு |
of sound mind | சித்தநலம் வாய்ந்த; உளநலம் வாய்ந்த |
offence | தவறு |
offender | தவறாளி |
offensive weapon | தீங்கு விளைவிக்கும் ஆயுதம் |
offer to settle | இணக்க வரைவு |
offspring | மகவு; பிள்ளை |
ombudsman | முறைகேள் ஆணையாளர் |
omne quod inaedificatio solo cedit = Whatever is built on the soil is an accessory of the soil | மண்ணிற் கட்டியவை மண்ணிற்கே உரியவையாம் |
omnia praesumuntur rite esse acta = All things are presumed to have been done rightly | அனைத்தும் செவ்வனே செய்யப்பட்டன என்பது எடுகோளாகும் |
on parole | நன்னடத்தைப் பிணையிலுள்ள |
on probation | தகுதிகூர்வில் உள்ள; நன்னடத்தைக் கண்காணிப்பில் உள்ள |
oneris ferendi = the servitude of support | ஆதார உரிமை |
onus of proof | எண்பிக்கும் பொறுப்பு; மெய்ப்பிக்கும் பொறுப்பு |
open verdict | காரணம்கூறா இறப்புத்தீர்ப்பு |
openness order | தொடர்பு தொடரல் கட்டளை |
opinion | அபிப்பிராயம் |
opprobrium | பழி |
oral contract | வாய்மொழி ஒப்பந்தம் |
oral decision | வாய்மொழி முடிபு |
order absolute | அறுதிக் கட்டளை; அறுதித் தீர்வை; முற்றுக் கட்டளை; முற்றுத் தீர்வை |
Order-in-Council | அரச மன்றக் கட்டளை |
ordinance | கட்டளைச் சட்டம் |
organized crime | கூட்டுக் குற்றம் |
organized criminality | கூட்டுக் குற்றச் செயற்பாடு |
original document | மூல ஆவணம் |
orphan | அனாதை |
outrage, moral | அறச்சீற்றம் |
outrage of modesty | மானபங்கம்; மானபங்கப்படுத்தல் |
outstanding charge | தீர்க்கப்படாத குற்றச்சாட்டு |
override | மீச்செல்; நிராகரி |
override clause = notwithstanding clause = Section 33 of the Canadian Charter of Rights and Freedoms | மீச்செல் பிரிவு = கனடிய உரிமைகள் - சுதந்திரங்கள் பட்டயத்தின் 33ம் பிரிவு |
over-rule | நிராகரி |
overtly and covertly | வெளிப்படையாகவும் மறை முகமாகவும் |
overturn a decision | ஒரு முடிபை நீக்கு |
pact | உடன்படிக்கை |
pacta delicta mutua compensatione telluntur | சமமான தீங்குகள் ஒன்றுக்கொன்று எதிரீடு செய்யப்படலாம் |
pacta legitima | சட்டமுறையான உடன்படிக்கை |
pacta sunt servanda = agreements must be kept | உடன்படிக்கைகள் பேணப்பட வேண்டும் |
palimony | புறம்போக்குப் படி |
panel of jurors | நடுவர் குழாம் |
paramour | கள்ளக்காதலர் |
pardon | மன்னி(ப்பு) |
parental consent | பெற்றோரது சம்மதம் |
parole | நன்னடத்தைப் பிணை |
partnership | பங்குடைமை |
party in default | கடப்பாடு தவறிய தரப்பு |
patent | ஆக்கவுரிமை |
paternal inheritance | பிதாவழி மரபுரிமை |
patriation | முழு அதிகாரப்பேறு |
patrimony | முதுசொம் |
patrol | சுற்றுக்காவல்; சுற்றுக்காவல் புரி; சுற்றுக் காவலணி |
peace officer | அமைதிகாப்பு அதிகாரி |
pecuniary damages | பண இழப்பீடு |
pecuniary loss | பண நட்டம் |
pedigree | பரம்பரை |
pedophile | சிறார்பால் காமுகர் |
pedophilia | சிறார்மீதான காமம் |
Penal Code | தண்டனைச் சட்டக்கோவை |
penalty | தண்டம் |
penitentiary | வன்சிறை |
penology | தண்டவியல் |
people smuggling | ஆட்கடத்தல் |
peremptory adjournment | மீறமுடியாத ஒத்திவைப்பு |
peremptory order | மீறமுடியாத கட்டளை |
perjury | பொய்ச்சாட்சியம் |
permanent resident | நிரந்தர வாசி |
permit | அனுமதிப்பத்திரம் |
persecuted person | கொடுமைப்படுத்தப்பட்ட ஆள் |
person concerned | சம்பந்தப்பட்ட ஆள் |
person detained | தடுத்து வைக்கப்பட்ட ஆள் |
person in need of protection | பாதுகாப்புத் தேவையான ஆள் |
personal bond | ஆட்பிணை |
personal information form | ஆள்விபரப் படிவம்; ஆள் தகவல் படிவம் |
personal jurisdiction | ஆள் நியாயாதிக்கம் |
personal law and territorial law | ஆட்சட்டமும் ஆள்புலச் சட்டமும் |
personate | ஆள்மாறாட்டம் செய் |
personation | ஆள்மாறாட்டம் |
petition | மனு |
petitioner | மனுதார் |
physical evidence = demonstrative evidence | உருப்படிச் சான்று |
physical injury | உடலூறு; உடற்காயம் |
piracy | கடற்கொள்ளை |
pirate | கடற்கொள்ளையர் |
plain meaning rule = literal meaning rule | எழுத்துவழிக் கருத்து விதி |
plaint | முறையீடு |
plaintiff | வழக்காளி |
plan of care | பராமரிப்புத் திட்டம் |
plea bargain | மன்றாட்டப் பேரம் |
plead guilty | குற்றத்தை ஒப்புக்கொள் |
pleading | மன்றாட்டம் |
pleadings | நேரெதிர் மன்றாட்டங்கள்; வாதப்பிரதிவாதம் |
poachers | கள்ள வேட்டையாளர்கள்; கள்ள மீனவர்கள் |
poaching | கள்ளவேட்டை; கள்ளமீன்பிடி |
political opinion | அரசியல் அபிப்பிராயம் |
polyandry | பலகணவருடைமை |
polygamy | பலதாரமணம்; பலமனைவியருடைமை |
port of entry | நுழைவுத் துறை |
positive evidence | உறுதியான சான்று |
possession | உடைமை |
post mortem examination = autopsy | பிரேத பரிசோதனை |
posthumous award | இறந்தபின் விருது |
post-nuptial | மணத்தின் பின்னான |
postscript | பிற்குறிப்பு |
power of attorney | பதிலாளித் தத்துவம்; பகராண்மைத் தத்துவம் |
precedent | முன்தீர்ப்பு |
precept | பணிப்பாணை |
predeceasing spouse | முன் இறக்கும் வாழ்க்கைத்துணை |
predecessor | முன்னவர் |
predetermined | முன்னரே தீர்மானிக்கப்பெற்ற |
pre-emption | முன்வாங்குரிமை |
prefer an appeal | மேன்முறையீடு முன்வை |
preferential claim | முன்னுரிமைக் கோரிக்கை |
prejudice | பக்கச்சாய்வு |
prejudice, without | பங்கமின்றி |
prejudicial to the public interest | பொது நலனுக்குப் பங்கம் விளைவிக்கின்ற |
preliminary hearing | முதனிலை விசாரணை |
premarital intercourse | மணமுன் உடலுறவு |
premeditated act | முன்சிந்தித்த செயல் |
premise | எடுகூற்று |
preponderance of evidence | சான்றுப் பெரும்பான்மை |
preponderance of probability | சாத்தியப் பெரும்பான்மை |
pre-removal risk assessment | அகற்றலுக்கு முந்திய ஆபத்துக் கணிப்பீடு |
prerogative | விஞ்சுரிமை; மீயுரிமை; அதியுரிமை |
prerogative writs (i.e: habeas corpus) | விஞ்சுரிமைப் பேராணைகள் (எ-கா: ஆட்கொணர்வுப் பேராணை) |
prescribed period | நிர்ணயித்த காலப்பகுதி |
presentence report | தீர்ப்புக்கு முந்திய அறிக்கை |
presume | ஊகி |
presumption of innocence | குற்றமற்றவர் என்ற ஊகம் |
presumption of legitimacy | சட்டப்பேறு என்ற ஊகம் |
pretended marriage | பாசாங்கு மணம் |
pre-trial | முன் விசாரணை |
pre-trial conference | விசாரணைக்கு முந்திய சந்திப்பு |
pre-trial motions | விசாரணைக்கு முந்திய முன்மொழிவுகள் |
prevarication | மழுப்புதல் |
preventive punishment | குற்றத்தடுப்புத் தண்டனை |
prima facie | முதல் தோற்றத்தில் |
prima facie evidence | முதல் தோற்றச் சான்று |
primary evidence | முதனிலைச் சான்று |
primus inter pares = first among equals | ஒப்பாருள் முதல்வர் |
principal and agent | முதல்வரும் முகவரும் |
principal and interest | முதலும் வட்டியும் |
principles of justice | நீதி நெறிகள் |
prior encumbrance | முந்திய பாரபந்தம் |
priority | முதன்மை |
prison | சிறை |
prisoners of conscience | கொள்கைநெறிக் கைதிகள் |
private conversation | தனிப்பட்ட உரையாடல் |
Private Law | தனியாள் சட்டம் |
private prosecution | தனியாள் வழக்குத்தொடர்வு |
private sector | தனியார் துறை |
privilege | சிறப்புரிமை |
Privy Council | கோமறை மன்றம் |
pro bono | இலவச சட்டப்பணி |
pro bono publico = for the public good | பொதுநல சட்டப்பணி |
probate | இறப்பாவணச் சான்றிதழ் |
probation | தகுதிகூர்வுக் கண்காணிப்பு; நன்னடத்தைக் கண்காணிப்பு |
probative value | எண்பித்தற் பெறுமதி |
probity | நெறிமை; நேர்நிறை |
Procedural Law | நடைமுறைமைச் சட்டம் |
procedure | நடைமுறைமை |
proceedings; legal proceedings | சட்ட நடவடிக்கை அறிக்கை |
proceeds of the sale | விற்பனை வருவாய் |
process | மன்றாணை; படிமுறை |
proclaimed offender | விளம்பப்பட்ட தவறாளி |
produce accuseds before Court | குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்து |
professional incompetence | துறைமைத் தகுதியீனம் |
prohibited weapons | தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் |
prohibition against disclosure of information | தகவல் வெளிப்பாட்டுத் தடை; தகவல் வெளிப்படுத்துவதற்கு எதிரான தடை |
prohibitory order | தடைக் கட்டளை |
promise | வாக்குறுதி(யளி) |
promulgate | முரசறை |
promulgation | முரசறைவு |
pronounce man and wife | கணவர், மனைவி என்று விளம்பு |
pronto = promptly = immediately | உடனடியாக |
proof = evidence | சான்று |
proprietor = owner | உடைமையாளர்; உரிமையாளர் |
proscribe | தடைவிதி |
proscription | தடைவிதிப்பு |
prosecute | வழக்குத்தொடு; வழக்குத்தொடரு |
prosecution of designated offences | குறித்த குற்ற வழக்குத்தொடுப்பு |
prosecution of offences | குற்ற வழக்குத்தொடுப்பு |
prosecutor | வழக்குத்தொடுநர்; வழக்குத்தொடருநர் |
protected person | பாதுகாக்கப்பட்ட ஆள் |
protection determination | பாதுகாப்புத் தீர்மானம் |
pro tempore = temporarily | தற்காலிகமாக |
protocol | வரைவேடு; ஒப்பாசாரம் |
prove | எண்பி; மெய்ப்பி |
provide = stipulate | நிர்ணயி |
provision | ஏற்பாடு |
provisional plan | இடையேற்பாட்டுத் திட்டம் |
proviso | காப்புவாசகம் |
provocation | ஆத்திரமூட்டல் |
proxy | பதிலாள் |
prudent man | மதிகொண்ட மனிதன் |
psychiatric assessment | உளநலக் கணிப்பீடு |
puberty | பூப்பு |
public guardian and trustee | அரச பாதுகாவலர்-அறங்காவலர் |
public health and public safety | பொதுமக்களின் நலவாழ்வும் பாதுகாப்பும் |
public hearing | பகிரங்க விசாரணை |
Public Law | பொதுநலச் சட்டம் |
public proceeding | பகிரங்க நடபடிக்கை |
public right of way | பொது வழியுரிமை |
public utility service | பொது வழங்கல் சேவை (எ-கா: நீர், மின், வாயு) |
publication ban | வெளியீட்டுத் தடை |
puisne judge | துணை நீதிபதி |
punitive damages | தண்டிப்பு இழப்பீடு |
punitive powers | தண்டிக்கும் அதிகாரம் |
No comments:
Post a Comment