Search This Blog

ECOLOGY = சூழலியல்

abiotic factors

சடக் காரணிகள்

acid deposition

அமிலப் படிவு

acid precipitation

அமிலப் பொழிவு

acid rain

அமில மழை            

acidification

அமிலவாக்கம்

activated sludge

சுத்திகரித்த கூளம்

active carbon = activated carbon

சுத்திகரித்த கரியம்

active ingredient

முனைப்புக் கூறு

adapted products = clean products

இசைவித்த ஆக்கங்கள்

adsorption

புறத்துறிஞ்சல்

aeration

வளியூட்டம்

aeration tank

வளியூட்டு தொட்டி

aerobic bacteria

வளிப் பற்றீரியாக்கள்

aerosol

வளியமுக்க கலம்

aerosol propellant

வளியமுக்க கலம் முடுக்கி

afforestation

காடாக்கம்

agricultural pollutants

வேளாண்நில மாசுவகைகள்

agricultural pollution

வேளாண்நில மாசு

agricultural run-off

வடிந்தோடு வேளாண்நில நீர்

agricultural waste

வேளாண்நிலக் கழிவு

agriculture

வேளாண்மை

agrobiodiversity system

பயிர்-தாவர-விலங்கினத் தொகுதி

agroecology

பயிர்ச்சூழலியல்

agroecosystem

வேளாண்மைச் சூழல்தொகுதி

agroforestry

பயிர்வனவியல்

Agrology

பயிராக்கவியல்

agronomy

பயிர்ச்சூழலியல்

air basin

வளித்தேக்கம்

air contaminant

வளி மாசுபடுத்தி

air curtain

வளித் திரையீடு

air filter

வளிச் சல்லடை

air pollutant

வளி மாசூட்டி

air pollution

வளி மாசு

air pollution control

வளிமாசு கட்டுப்படுத்தல்

air pollution episode

வளிமாசுக் கட்டம்

air pollution index

வளிமாசுச் சுட்டு

air pollution sources

வளிமாசு மூலங்கள்

air quality criteria

வளித்தரப் பிரமாணங்கள்

air quality index

வளித்தரச் சுட்டு

air quality monitoring

வளித்தரக் கண்காணிப்பு

air quality standards

வளித்தர நியமங்கள்

airborne disease

வளிகொணர் நோய்

airborne particulates

வளிகொணர் துணிக்கைக் கூறுகள்

air-conditioning

குளுமை வசதி; குளுமையூட்டி

algal bloom

அல்கா மலர்ச்சி

Algaecide

அல்காகொல்லி

Alkali

காரம்

alkalinization

காரமயமாக்கம்

Alkalinity

காரத்திறன்

allelopathy

உயிர்மவேதி உமிழ்வுத் தாக்கம்

Allergy

ஒவ்வாமை

allowable catch

மீன்பிடி வரம்பு

alpine area

உயர்மலைச்சாரல்

ambience

சுற்றாடல்; சூழ்நிலை

ambient concentration of pollutants

சுற்றாடல் மாசூட்டிச் செறிவு

amusement park

உவகைக் கோட்டம்

anadromous fish

நன்னீர் நாடும் கடல்மீன்

anaerobic bacteria

உயிர்வளி நாடாத பற்றுயிரிகள்

anaerobic biological treatment

உயிர்வளி நாடாத உயிர்மவழிச் 

சுத்திகரிப்பு

anaerobic decomposition

உயிர்வளி நாடாத உயிர்மவழி உருக்குலைவு

anaerobic respiration

உயிர்வளி நாடாத சுவாசம்

ancillary activity

துணைச் செயற்பாடு

arthropods

ஒட்டுக்காலிகள்

anthropoid diversity

மாந்தக்குரங்கு வகைமை

appropriate technology

ஏற்ற தொழினுட்பவியல்

aquaculture

நீர்ப்பண்ணை

Aquifer

நீரேந்துபடுகை

archipelago

தீவுத்தொகுதி

area sources of pollution

உள்ளூர் மாசு மூலங்கள்

arid zone

வறண்ட வலயம்

artificial groundwater recharge

செயற்கைமுறைத் தரைநீர் மீள்நிரப்பல்

artificial water impoundment

செயற்கைமுறை நீர் மறிப்பு

artificial watercourse

செயற்கை நீரோடை

Asbestos

கல்நார்

asbestosis

கல்நார்ப்பிணி

Asteroid

விண்கல்

atmosphere

வளிமண்டலம்

atmospheric absorption

வளிமண்டல அகத்துறிஞ்சல்

atmospheric assimilation

வளிமண்டல உள்வாங்கல்

atmospheric dispersion

வளிமண்டலத்துள் பரம்பல்

atomic energy

அணுவலு

atomic wastes

அணுவலுக் கழிவுகள்

attenuation

மெலிவு

Attrition

தேய்வு

automobile air pollution

ஊர்திமூல வளி மாசு; வாகன வளி மாசு

avoidance costs

தவிர்ப்புச் செலவு

background concentration

பிற்புலச் செறிவு

background radiation

பிற்புலக் கதிர்வீச்சு

Bacteria

பற்றீரியாக்கள்

bacteria denitrification

பற்றீரியாக்கள் ஊடான நைதரசினிறக்கம்

bacterial count

பற்றீரிய எண்ணிக்கை

bacterial leaching = bioleaching

பற்றீரியச் சல்லடை

bacterial purity

பற்றீரியத் தூய்மை

beamhouse wastes

தோல்பதனக் கழிவுகள்

Bedrock

நிலத்தடிப்பாறை

beef cattle feedlot

இறைச்சி மந்தை தீன்களம்

bench terrace

படியமைப்பு

benchmark

மட்டக்குறி

Benthos

நீரடி உயிரினங்கள்

Biocide

உயிர்மநாசினி

bioclimatology

உயிர்மக் காலநிலையியல்

biocoenosis

சூழல்-உயிர்ம உறவு

biocontrol = biological pest control

உயிர்மநாசினி கொண்டு பீடை 

ஒடுக்கல்

Biocycle

உயிர்ம வட்டம்

biodegradable

உயிர்மங்களால் சிதையவல்ல

biodegradation

உயிர்மங்களாலாகும் சிதைவு

biodiversity = biological diversity

உயிர்ம வகைமை = தாவர விலங்கின வகைமை

biodiversity indices

உயிர்ம வகைமைச் சுட்டிகள் = தாவர விலங்கின வகைமைச் சுட்டிகள்

bioecology

உயிர்ம சூழலியல்

biofertilizer

உயிர்மப்பசளை

biofuel 

உயிர்ம எரியம்

Biogas

உயிர்ம வாயு

biogeochemical cycle

புவி உயிர்ம வேதி வட்டம்

biogeography

உயிர்மப்புவியியல்

bioleaching = bacterial leaching

உயிர்மச் சல்லடை

biologic erosion

உயிர்ம மண்ணரிப்பு

biological accumulation

உயிர்மக் குவிவு

biological benchmark

உயிர்ம மட்டக்குறி

biological clock

உடற் கடிகாரம்

biological control

உயிர்மங்கள் கொண்டு     பீடைகளைக் கட்டுப்படுத்தல்

biological farming = ecological farming = organic farming

இயற்கை வேளாண்மை

biological indicator

உயிர்ம இனங்காட்டி

biological pest control = biocontrol

உயிர்மவழிப் பீடை ஒடுக்கம்

biological pesticides

உயிர்ம பீடைநாசினிகள்

biological sewage treatment

உயிர்மமுறை கழிநீர் சுத்திகரிப்பு

biological spectrum

உயிரினக் கற்றை

biological treatment technology

உயிர்ம சுத்திகரிப்பு தொழினுட்பவியல்

biological waste

உயிர்மக் கழிவு

biolysis

உயிர்மங்களாலாகும் உருக்குலைவு

biomass

உயிர்மத்திரள்

biomass consumption

உயிர்மத்திரள் நுகர்வு

biome

தாவரப்புலம்

biometeorology

உயிர்ம வானிலையியல்

biometrics

உயிரிர்மப் புள்ளிவிபரவியல்

biomonitoring

உயிர்ம நீர்மக் கண்காணிப்பு

bionomics

உயிரின சூழலியல்

biophysics

இயற்பியல்சார் உயிரியல்

bioproductivity

உயிர்மத் திறன்

biosphere

உயிரின மண்டலம்

biota

உயிரினத்திரள்; தாவர, விலங்கினத் திரள்

biotic pest regulation

உயிர்மப் பீடை ஒழுங்குமுறை

biotope

தனி உயிரினப் பரம்பல்

body burden

மாசுச் சுமை

bog

சதுப்புநிலம்

botanical pesticide

தாவரப் பீடைகொல்லி

brackish water

உவர்நீர்

buffers against natural disasters

இயற்கைப் பேரழிவு தாங்கிகள்

canopy

மூடாப்பு

cap rock

தொப்பிப் பாறை

carabid

தரைவண்டு

carbon adsorber

கரியம் புறத்துறிஞ்சி

carbon cycle

கரிய வட்டம்

carbon footprint

கரியச் சுவடு

carbon neutral fuel

கரிய நிகர்நிலை எரியம்

carbon neutrality 

கரிய நடுநிலை

carbon neutral plan

கரிய நிகர்நிலைத் திட்ட ம்

carbon sequestration.

கரியம் தனிமைப்படுத்தல்

carbon sink

கரியமேந்தி

carbon tax

கரிய வரி

carnivore

ஊனுண்ணி; புலாலுண்ணி

carnivorous plant = insectivorous plant

ஊனுண்ணித் தாவரம்; பூச்சிதின்னித் 

தாவரம்

cascade tank - village system

அருவிக்குளம் - கிராமத் தொகுதி

catalytic converter

சடுதி உருமாற்றி

catalytic incineration

சடுதி நீறாக்கம்

catchment area = drainage basin = watershed

வடிநிலம்

causeway

சேது

cesspit

கழிகிடங்கு

channelization

கால்வாயாக்கம்

characteristic species

சிறப்புயிரினங்கள்

charcoal

மரக்கரி

chemical toilet

வேதிக் கழிவுகூடம்

chemical treatment

வேதிச் சுத்திகரிப்பு

chemosterilant

கருவறுப்புவேதி

chilling effect

வெப்பத் தாழ்ச்சி விளைவு

chimney effect

மேற்கிளம்பு விளைவு

chloride

குளோறைட்டு

chlorinated hydrocarbon

குளோறினேற்றிய ஐதரோகாபண்

chlorination

குளோறினேற்றம்

chlorine

குளோறின்

chlorine loading

குளோறின் செறிவு

chlorite

குளோறைற்று

chlorophyll

பச்சையம்

cholera

வாந்திபேதி

chronic toxicity

நீடித்த நச்சுடைமை

chute

அதர்; போறை

classification of environmental protection activities

சூழல் பாதுகாப்புச் செயற்பாட்டு வகுப்பீடு

clean cultivation

துப்புரவான பயிர்ச்செய்கை

clean products = adapted products

இசைவித்த ஆக்கங்கள்

clean technology

இசைவித்த தொழினுட்பவியல்

clean-up

சுத்திகரிப்பு

clear-cutting

முழுக்காடு வெட்டல்

climate change

காலநிலை மாற்றம்

climate change adaptability

காலநிலை மாற்றத்துக்கு நெகிழ்வுடைமை

climate convention

காலநிலை மாநாடு

climate index

காலநிலைச் சுட்டு

climate protection

காலநிலைப் பாதுகாப்பு

climatological statistics

காலநிலைப் புள்ளிவிபரம்

climosequence

காலநிலைத் தரவுத்தொடர்

closed ecological system

மூடிய சூழல் தொகுதி; மீள்பாவனை சூழல் தொகுதி

cloud forest

மந்தாரக் காடு

cloud seeding

செயற்கைமழை வித்தீடு

coastal lagoon

கடனீரேரி = கடல் நீரேரி

coastal protection

கடற்கரைப் பாதுகாப்பு

coastal zone

கடற்கரை வலயம்

coke oven emission

கற்கரி உலைக் கால்வு

cold desert

குளிர்ப் பாலைவனம்

coliform index

குடற்பற்றுயிரிச் சுட்டு

coliform organism

குடல் உயிர்மம்

collection of waste

கழிவகற்றல்

combustion

கனல்வு

comet

வால்வெள்ளி; தூமகேது; தூமக்கோள்

comminution

கழிவுமசிப்பு

common property resources

பொது உடைமை வளங்கள்

community of species

உயிரின சமூகம்

community structure

சமூகக் கட்டமைப்பு

compaction

நெரித்திறுக்கல்

companion planting

கேண்மைப் பயிரீடு

complete fertilizer

முற்றுரம்

compost

கழிவுப்பசளை

composting

கழிவுப்பசளையாக்கல்

compression

அழுத்திநெரித்தல்

conditioning of radioactive wastes

கதிரியக்க கழிவுகளை நெகிழ்த்தல்

confined aquifer

அடைநீர்ப் படுகை

confined water well

அடைநீர்க் கிணறு

conifers

ஊசியிலை மரங்கள்

conservation farming

சூழல்பேண் வேளாண்மை

consumption residues

நுகர்வெச்சங்கள்

contact pesticide

தொடுபடு பீடைகொல்லி

contaminant

மாசுவகை = மாசுபடுத்தி

coolant

குளிர்வூட்டி

coral

பவளம்

coral bleaching

பவளப்பாறை வெளிறல்

corrosion

துருப்பிடிப்பு

cosmic rays

அண்டவெளிக் கதிர்கள்

cove

கோவளம்

cover crop

மூடுபயிர்

crop residues

பயிரெச்சங்கள்

crop rotation

பயிர்ச் சுழற்சி

cropping system

பயிரீட்டுத் தொகுதி

crustaceans

புறவன்கூட்டுக் கடலுயிரினங்கள் 

(எ-கா: இறால், நண்டு)

cultigen

பயிர்வழித் தாவரம் (எ-கா: கோவா)

cyclone collector

மையநீக்க மாசகற்றி

dam

அணை

decay

சிதை(வு)

dechlorination

குளோறினீக்கம்

deciduous forest

இலையுதிர்காடு

declaration on environment and development

சூழல்-அபிவிருத்திப் பிரகடனம்

declaration on the human environment

மனித சூழல் பிரகடனம்

declivity

கீழ்ச்சரிவு

decomposers

சிதைப்புயிர்மங்கள்

decomposition

சிதைவு

deep ecology = holistic ecology

முழுமைச் சூழலியல்

defensive environmental cost

சூழல் காப்புச் செலவு

defoliant

இலையுதிர்ப்பி

deforestation

காடழிப்பு

degradation of environmental assets

சூழல் வளக்கேடு

degraded soil

வளங்கெட்ட மண்

denudation

உரிவு

depletion of natural economic assets

இயற்கைப் பொருளாதார வளம் குன்றல்

derelict land

கைவிடப்பட்ட நிலம்

desalinization

உவர்நீக்கம்

desert

பாலைநிலம்

desertification

பாலைநிலமாதல்

desludging

கூளநீக்கம்

detritus

அடையற்கூளம்

dew point

பனிபடுநிலை

diapause

விருத்தி இடைநிற்பு

diffuse emission

பரவுமாசு வெளிப்பாடு

digester

செரிமானத் தொட்டி

digestion

செரிமானம்

dike = dyke

அணைமதில்

dilution

ஐதாக்கம்

dilution ratio

ஐதாக்க விகிதம்

dimension

பரிமாணம்

dimensionality

பரிமாணத்துவம்

direct discharger

நேரடிக் கழிப்பு உபகரணம்

direct incineration

நேரடி நீறாக்கம்

discharge

வெளியகற்று

disease suppression

நோய் ஒடுக்கல்

disinfection

கிருமியொழிப்பு

disinfestation

பீடையொழிப்பு

dispersant

இளக்கி

disperse

பரவு / பரப்பு

dispersion

பரவல் / பரம்பல்

disposal of waste

கழிவு நீக்கல்

dissolved solids

கரைந்த திண்மங்கள்

domestication

பழக்கியெடுத்தல்

domicile

வாழிடம்

domicile, country of

வாழும் நாடு

downwash

காற்றுக் கீழுதைப்பு

draft animal

சுமையிழுக்கும் விலங்கு

drainage basin; catchment area; watershed

வடிநிலம்

dredging sludge

கூளம் வாரியெடுத்தல்

drinking water standards

குடிநீர் நியமங்கள்

drip irrigation

கசிவு நீர்ப்பாசனம்

drought

வறட்சி

dry matter

எஞ்சுகட்டி

dry tundra

உலர் பனிப்புலம்

dual purpose sewer

இருநோக்க கழிகால்

duff

இலைதழைக்கூளம்

dumping at sea

கடலில் கொட்டல்

dune stabilization

மணற்குன்று நிலைநிறுத்தல்

durable good

நீடிக்கும் பொருள்வகை

dust arrester

தூசு பற்றி

dust burden

தூசுச் சுமை

dust devil = dust whirl

தூசுச் சுழி

dwellings

வசிப்பிடங்கள்

dyeing wastes

சாயக் கழிவுகள்

dystrophic water

கூள நீர்

E. Coli = Escherichia Coli

ஈ-கொலாய் பற்றீரியா

குடற்கோலுருப் பற்றீரியா

Earth Summit

புவி உச்சமாநாடு

earthquake

நிலநடுக்கம்

earth tremor

நில அதிர்வு

earth watch

புவி கண்காணிப்பு

ebb

வற்று

ecocide

சூழல் அழிப்பு

ecodevelopment

சூழல்பேண் விருத்தி

ecological amplitude

சூழலியல் வீச்சம்

ecological balance = ecological equilibrium

சூழலியல் சமநிலை

ecological dominance

சூழலியல் ஆதிக்கம்

ecological economics

சூழற்பொருளியல்

ecological equilibrium = ecological balance

சூழலியல்  சமநிலை

ecological ethics

சூழலியல் அறம்

ecological farming = biological farming = organic farming

இயற்கை வேளாண்மை

ecological impact

சூழலியல் தாக்கம்

ecological statistics

சூழலியல் புள்ளிவிபரம்

ecology

சூழலியல்

economic assets

பொருளாதார சொத்துக்கள்

economic injury level

பொருளாதார பாதிப்பு மட்டம்

economic territory

பொருளாதாரப் புலம்

ecoregion

சூழற்பிராந்தியம்

ecosphere

சூழலுயிரின மண்டலம்

ecosystem

சூழல்தொகுதி

ecotourism

சூழற்சுற்றுலா

ecozone

சூழல்வலயம்

edaphic

மண்சார்ந்த

edaphic characters

மண்ணியல்புகள்

efficiency of input use

உள்ளீட்டுப் பயன்பாட்டு வினைத்திறன்

effluent

கழிவுநீர்மம்

effluent charge

கழிவுநீர்மக் கட்டணம்

effluent standards

கழிவுநீர்ம நியமங்கள்

ekistics

குடியமர்வியல்

electrodialysis

மின்வழிச்சுத்திகரிப்பு

emission

கால்வு; உமிவு

emission damage

கால்வுச் சேதம்

emission, greenhouse gas

புவிவெப்ப வாயுக் கால்வு

emission factor

கால்வுக் காரணி

emission inventory

கால்வு அட்டவணை

emission standard

கால்வு நியமம்

endangered species

அருகிவரும் உயிரினங்கள்

endemic

குறும்புல(நோய்)

endemic species

குறும்புல உயிரினங்கள்

end-of-pipe protection

சேர்த்திடு பாதுகாப்பு

end-of-pipe technology

சேர்த்திடு தொழினுட்பவியல்

energy conversion factors

வலுவள உருமாற்றுக் காரணிகள்

energy sources

வலுவள மூலங்கள்

energy theory of valuation

வலுவள மதிப்பீட்டுக் கோட்பாடு

entomology

பூச்சியியல்

environment

சூழல்

environment statistics

சூழற் புள்ளிவிபரம்

environmental assets

சூழற் சொத்துக்கள்

environmental clean-up

சூழல் சுத்திகரிப்பு

environmental conditioning

சூழல் நெகிழ்த்தல்

environmental costs

சூழல்சார் இழப்புகள்

environmental damage cost

சூழல் சேதச் செலவு

environmental debt

சூழல்சார் கடப்பாடு

environmental degradation

சூழல் வளம்குன்றல்

environmental disease

சூழல் நோய்

environmental effect

சூழல் விளைவு

environmental expenditures

சூழற் செலவினம்

environmental externalities

சூழல்சார் புறக்கடப்பாடுகள்

environmental functions

சூழல் தொழிற்பாடுகள்

environmental health indicators

சூழல்நலம் காட்டிகள்

environmental impact

சூழல் தாக்கம்

environmental impact assessment

சூழல் தாக்கக் கணிப்பீடு

environmental impact statement

சூழல் தாக்கக் கூற்று

environmental indicator

சூழல் காட்டி

environmental labelling

சூழல் தாக்கம் சுட்டிக்காட்டல்

environmental media

சூழல்சார் ஊடகங்கள் (வளி, நீர், நிலம்)

environmental protection

சூழல் பாதுகாப்பு

environmental quality

சூழல் தரம்

environmental quality standard

சூழல் தர நியமம்

environmental refugee

சூழல்சார் அகதி

environmental restoration

சூழல் மீள்நிலைப்படுத்தல்

environmental restructuring

சூழல் மீள்கட்டமைப்பு

environmental risk assessment

சூழல் பாதிப்புக் கணிப்பீடு

environmental services

சூழற் சேவைகள்

environmental sustainability

சூழல் நிலைபேறு

environmental variable

சூழல் மாறி

environmentalism

சூழல்நலவாதம்

environmentally adjusted national income

சூழலிழப்புக் கழிந்த தேசிய வருமானம் =  இயற்கைவள இழப்புக் கழிந்த தேசிய வருமானம்

environmentally adjusted net domestic product = eco domestic product

சூழலிழப்புக் கழிந்த தேறிய உள்நாட்டு உற்பத்தி = இயற்கைவள இழப்புக் கழிந்த தேறிய உள்நாட்டு உற்பத்தி

environmentally sound technologies

சூழல்நல தொழினுட்பவியல்கள்

environmentally-adjusted net capital formation

சூழலிழப்புக் கழிந்த தேறிய நிலைமுதற்சொத்து உருவாக்கம் = இயற்கைவள இழப்புக் கழிந்த தேறிய நிலைமுதற் சொத்து உருவாக்கம்

environment-related defensive activities

சூழல்சார் பாதுகாப்புச் செயற்பாடுகள்

epicentre

உச்சமையம்

epidemic

தொற்றுநோய்

epidemiology

தொற்றுநோயியல்

epilimnion

மேல்நீர்ப்படை

erosion

மண்ணரிப்பு

erosion control

மண்ணரிப்பு கட்டுப்படுத்தல்

erosion index

மண்ணரிப்புச் சுட்டு

estuary

பொங்குமுகம்

ethnoecology

இனப்பண்புச் சூழலியல்

ethnoscience

இனப்பண்பு அறிவியல்

ethology

விலங்கு நடத்தையியல்

eugenics

நல்லினவிருத்தியியல்

eutrophication

வளம்பட்டழிதல்

 

(ஊட்டவளம் மிகுந்து, மரஞ்செடிகொடிகள் பெருகி, உயிர்வளி குன்ற, பிற உயிரினம் அழிதல்)

evaporation pond

கழிநீர் உலர்களம்

evapotranspiration

தாவரம்-நீர்நிலை ஆவியாதல்

evolution

கூர்ப்பு

exclusive economic zone

பிரத்தியேக பொருளாதார வலயம்

exhaust gases

பெற்றோல் எந்திர வாயுவகைகள்

existence value

நிலைநில் பெறுமதி

exotic species

பிறபுல உயிரினங்கள்

exposure

உட்படுகை; தாக்கத்துக்குள்ளாதல்

externalization of environmental protection cost

சூழல் பாதுகாப்புச் செலவை புறநிலைப்படுத்தல்

extinct species

அருகிய உயிரினங்கள்

facilitation

வசதிப்படுத்தல்; வசதிசெய்துகொடுத்தல்

faecal coliform bacteria

மலக்குடற் பற்றுயிரிகள்

faeces

மலம்

fallow agricultural land

தரிசுப் பயிர் நிலம்

farmstead

பண்ணைவளவு

fauna

விலங்கினம்

feedlot

தீன்களம்

fen

குட்டை

fermentation

நொதிப்பு

fertilizer

உரம்

field capacity

களக் கொள்ளளவு

filtration

வடிகட்டல்

fish farm

மீன் பண்ணை

fish stock

மீன் இருப்பு

fishing effort

மீன்பிடி முயற்சி

flash flood

சடுதி வெள்ளம்

flocculation

திரளாக்கம்

flood

வெள்ளம்

flora

தாவர இனம்

flue

கனல்வாயுபோக்கி

flue gas

கனல் வாயு

flurries

பனித்தூறல்

fly ash

பறக்கும் சாம்பல்

fodder shrubs

தீவனச் செடிகள்

fog

மூடுபனி

foliage

இலைதழை

food chain

உணவுச் சங்கிலி

food self-provisioning = household food production 

வீட்டுத் தோட்ட விளைச்சல்

food web

உணவு வலையம்

forest cover

காட்டுக் கவிகை

forest functions

காட்டின் தொழிற்பாடுகள்

forestry

வனவியல்

fossil fuel

உயிர்ச்சுவட்டு எரியம்

fracking

பாய்ச்சுநீர் அமுக்கப் படிமுறை 

 

(பழைய, புதிய தரைத் துளைகள் ஊடாக நீர்மவகையைப் பாய்ச்சி, பாறை  இடுக்குகளில் முடங்கியிருக்கும் எண்ணெய், எரிவாயு வகைகளை வெளிக்கொணரும் படிமுறை)

freshwater

நன்னீர்

frost

உறைபனி; பனிப்படிவு

fuelwood = firewood

விறகு

fugitive emission

பிடிபடாத கால்வு

fumes

எரிகிளம்பிகள் (ஆவி, புகை, வாயு)

fumigant

பீடைகொல் எரிகிளம்பி

functional diversity

தொழிற்பாட்டு வகைமை

fungi

பங்கசு வகைகள்

fungicide

பங்கசுகொல்லி

fungus

பங்கசு

game

வேட்டைப்படு விலங்கினம்

வேட்டைப் புலால்

game bird

வேட்டைப்படு பறவை

game cock

வேட்டைச் சேவல்

game park = game refuge = wildlife reserve

கானுயிர்க் கோட்டம்; வனவிலங்குக் 

கோட்டம்

gangue

தாதுக் கனிமக் கழிவு

gas cleaning plant

வாயு சுத்திகரிப்பு ஆலை

gas flaring

வாயு மூளல்

gasification

வாயுவாக்கம்

genecology

சூழல்சார் பரம்பரையியல்

genetic diversity

மரபணு வகைமை

genetic introgression

மரபணு ஊடுகடத்தல்

genetic resources

மரபணு மூலவளங்கள்

genetics

பரம்பரையியல்

geographical information system

புவியியல் தகவல் கட்டுக்கோப்பு

geologic hazard

புவிக் கெடுதி

geomorphology

புவிப்புறவுருவியல்

germicide

கிருமிகொல்லி

germination

முளைப்பு

glacier

பனிக்கட்டியாறு

global commons

உலகப் பொதுச் சொத்துகள் 

(எ-கா: ஆழிகள், விண்வெளி, அந்தாட்டிக்கு)

global warming

புவி வேகல்

grassland

புல்வெளி

green belt

பசுமை வலயம்

green grass

பசும்புல்

green manures

பசும்பசளை

green revolution

பசுமைப் புரட்சி

greenhouse effect

புவிவெப்ப விளைவு

greenhouse gas emission

புவிவெப்ப வாயு உமிழ்வு

ground-level ozone

தரைமட்ட ஓசோன்

ground-level pollution

தரைமட்ட மாசு

groundwater

தரைநீர்

groundwater protection

தரைநீர்ப் பாதுகாப்பு

groundwater reservoir

தரைநீர்த் தேக்கம்

groundwater run-off

கழிந்தோடு தரைநீர்

groundwater surface = water table

தரைநீர்ப் பீடம்

gust of wind

கடுங்காற்றுவீச்சு

gusty winds

கடுங்காற்று

gully

நீரரிபள்ளம்

habitat

வாழிடம்

habitat diversity

வாழிட வகைமை

habitat protection

வாழிடப் பாதுகாப்பு

hail

ஆலி மழை; ஆலங்கட்டி மழை

hailstone

ஆலி; ஆலங்கட்டி

hailstorm

ஆலிப்புயல்; ஆலங்கட்டிப் புயல்

half-life

அரைவாசி குன்றும் காலப்பகுதி

hard water

வன்னீர்

hazardous substance

கெடுதிப் பொருள்

hazardous waste treatment

கெடுதிக் கழிவு சுத்திகரிப்பு

hazardous wastes

கெடுதிக் கழிவுகள்

haze

மென்புகார்

haze coefficient

மென்புகார்க் குணகம்

heat sink

வெப்பம் உறிஞ்சுபுலம்

heat wave

கடுவெயில்; அனல் வெயில்; அனல் பறக்கும் வெயில்

heathland

தரிசு நிலம்

heavy metals

கனரக உலோகங்கள்

hedge

செடிவரிசை = செடிவேலி

herbicide

களைகொல்லி

herbivore

குழைதின்னி

heterotrophic bacteria

பிறபோசணைப் பற்றீரியா

hillside cascade paddy field

குன்றுச்சாரல் அருவி நெல்வயல் = மலையருவி நெல்வயல்

holding pond

கழிநீர்க் குட்டை

holistic ecology = deep ecology

முழுமைச் சூழலியல்

homeostasis

தன்னிலைபேறு; ஏகநிலைபேறு

household waste

வீட்டுக் கழிவு

household food production = food self-provisioning 

வீட்டுத் தோட்ட விளைச்சல்

humic water

உக்கல் நீர்

humidity

ஈரப்பதன்

humification

உக்குதல்

humus

உக்கல்

hybrid

கலப்புப்பிறப்பு

hydrobiology

நீருயிரினவியல்

hydrogeology

புவிநீரியல்

hydrograph

நீர்பாய்வு வரைப்படம்

hydrologic cycle

நீர்க் காலவட்டம்

hydrology

நீரியல்

hydrolysis

நீர்ப்பகுப்பு

hydroponics

நீர்ப்பயிரீடு; நீரியல் பயிரீடு

hydropower

நீர்வலு

ice

உறைநீர்க்கட்டி; பனிக்கட்டி

idle land

பயன்படுத்தா நிலம்

incineration

நீறாக்கம்

incineration at sea

கடற்கலத்தில் நீறாக்கல்

incineration with recovery of energy

வலுமீள் நீறாக்கம்

incinerator

நீற்றுலை

indoor air pollution

உள்ளக வளி மாசு

industrial park

தொழில்-துறைக் கோட்டம்

industrial waste

தொழில்-துறைக் கழிவு

inorganic matter

அசேதனப் பொருள்

inorganic pesticide

அசேதனப் பீடைகொல்லி

insecticide

பூச்சிகொல்லி

insectivorous plant = carnivorous plant

பூச்சிதின்னித் தாவரம்

insectary flowers

பூச்சிகளை ஈர்க்கும் பூக்கள்

instream aeration

கழிவோடை வளியேற்றம்

intensive agriculture

தீவிர வேளாண்மை

interaction

ஊடியக்கம்

intercropping

ஊடுபயிரீடு

introgression

ஊடுகடத்தல்

irradiation

வீசுகதிரீடு

irrigation system

நீர்ப்பாசனத் தொகுதி

isotope

சமதானி

lacustrine plain

ஏரிச் சமவெளி

lagoon

கடனீரேரி

lahar

எரிமலைச் சேற்றுப்படிவு

lake classification

ஏரி வகுப்பீடு

land

நிலம்

land classification

நில வகுப்பீடு

land cover = vegetation cover

தாவரக் கவிகை

land degradation

நிலவளம் குன்றல்

land drainage

நிலநீர் பாய்ச்சல்

land improvement

நில மேம்பாடு

land reclamation

நில மீட்சி

land tenure

நில உரித்து

land under cultivation

பயிரீட்டுக்கு உட்பட்ட நிலம்

land use

நிலப் பயன்பாடு

landfill

கழிவுதாழ்புலம்

landrace

இசைந்தோங்கிய உயிரினம்

landslide

மண்சரிவு

land-use classification

நிலப் பயன்பாட்டு வகுப்பீடு

larva

குடம்பை; முட்டைப்புழு

larvicide

குடம்பைகொல்லி; முட்டைப்புழுகொல்லி

lawn

புல்தரை

leachate

கழிவுக்கசிவு

leaching

நீர்மவழிச் சல்லடை

lead

ஈயம்

leaf morphology

இலை உருபியல்

leafhopper

இலைதத்தி

limestone scrubbing

சுண்ணக்கல்வழிச் சல்லடை

limification = liming

சுண்ணாம்பீடு

limnology

நன்னீரியல்

liquefaction

திரவமாக்கம்

liquid manure

எருக்கூளம்

lithosphere

கற்கோளம்

livestock

கால்நடை

livestock feed

கால்நடைத் தீன்

living fence posts

வளர்மர வேலிக் கம்பங்கள்

logging

மரம் தறித்து துண்டாடல்

long-range transport of air pollutants

நெடுந்தூரம் செல்லும் வளி மாசுவகைகள்

low-level radioactive wastes

தாழ் மட்டக் கதிரியக்கக் கழிவுகள்

malaria

மலேரியா

mangrove

கண்டல்

manure

எரு

marginal environment

ஓரச்சூழல்

marginal land

ஓர நிலம்

mariculture

கடற்பண்ணை

marine park

கடற்கா; கடற்கோட்டம்

marine pollution

கடல் மாசு

marsh

சேற்றுநிலம்

matrix

வார்ப்பச்சு

maximum sustainable yield

உச்ச வளம்பேணு விளைச்சல்

meta-analysis

மீபகுப்பாய்வு

mechanical erosion control

பொறிவழி மண்ணரிப்புக் கட்டுப்பாடு

mechanical treatment technology

பொறிவழி சுத்திகரிப்புத் தொழினுட்பவியல்

metallic mineral reserves

உலோகக் கனிமப் படிவுகள்

meteor

உற்கை

meteorite

வீழ்மீன்; விண்வீழ்கொள்ளி

meteoroid

எரிகல்

microbes = microorganisms

நுண்ணங்கிகள்; நுண்ணுயிரிகள்; நுண்ணுயிர்மங்கள்

microbial metallurgy

நுண்ணுயிர்ம உலோகவியல்

microbiology

நுண்ணுயிரியல்

microclimate

உள்ளூர்க் காலநிலை

microorganisms = microbes

நுண்ணுயிர்மங்கள்; நுண்ணங்கிகள்; நுண்ணுயிரிகள்;

microcosm

நுண்ணுரு

microfauna

நுண்விலங்கினம்

mildew

பனிப்பூஞ்சணம்

mine tailings

சுரங்கக் கழிவுகள்

mineral exploration

சுரங்க ஆய்வு

mining wastes

அகழ்தற் கழிவுகள்

mire

சகதி

mist

பனிமூட்டம்

miticide

பூச்சிகொல்லி

mixed cropping

கலப்புப் பயிரீடு

mixed farm

கலப்புப் பண்ணை; பயிர்ப் பண்ணை

monoculture

ஒற்றைப்பயிர்ச்செய்கை

mold = mould

பூஞ்சணம்

muck soil

கூள மண்

mudflat

சேற்றுத் தரை

mulch

இலைதழைக்கூளம்

mulch farming

இலைதழைப் பண்ணைத்தொழில்

multiple cropping

பல்பயிரீடு

mushroom

காளான்

mycology

பூஞ்சணவியல்

mycorrhizae

தாவர-வேர்ப்பூஞ்சை ஊடாட்டம்

national park

தேசிய வனவிலங்குக் கோட்டம்

தேசிய வனவிலங்குப் புலம்

natural asset

இயற்கைச் சொத்து

natural capital

இயற்கை மூலதனம்

natural disaster

இயற்கைப் பேரழிவு

natural gas

இயற்கை வாயு

natural habitat

இயற்கை வாழிடம்

natural heritage = natural patrimony

இயற்கை முதுசொம்

natural pollutant

இயற்கை மாசுபடுத்தி

natural resources

இயற்கை வளங்கள்

natural selection

இயற்கைத் தேர்வு

nature reserve

கானுயிர் காப்புலம்

nectar-source plants

தேன்மலர்த் தாவரங்கள்

neighbourhood

அயல்

nematode

உருளைப்புழு

niche

வாழ்நிலை; வாழ்வினை

night-soil

மலப்பசளை

noise = noise pollution

இரைச்சல்

noise abatement

இரைச்சல் தணிப்பு

noise zoning

இரைச்சல் வலய வகுப்பீடு

nomads

நாடோடிகள்

nomenclature

இடுபெயர்த்தொகுதி

non-clean cultivation

துப்புரவற்ற பயிர்ச்செய்கை

non-crop vegetation

பயிர் அல்லாத தாவரங்கள்

non-durable good

நீடிக்காத பொருள்

non-renewable natural resources

மீள்வுறா இயற்கை வளங்கள்

nuclear energy

அணுவலு

nuclear power plant

அணுமின் ஆலை

nuclear radiation

அணுக் கதிர்வீச்சு

nuclear reactor

அணு உலை

nuclear waste pollution

அணுக் கழிவு மாசு

nuclear winter

அணுவாயுதப் போரினால் விளையும் குளிர்மை

nutrient cycling

ஊட்டச்சத்துச் சுழற்சி

nutrient leaching

ஊட்டச்சத்துக் கசிவு

observation well

அவதானிப்புக் கிணறு

occupational health hazards

தொழில்சார் உடல்நலக் கெடுதிகள்

ocean dumping

கடலில் கொட்டுதல்

ocean incineration = incineration at sea

கடற்கலத்தில் நீறாக்கல்

off-farm

பண்ணைக்கு கடந்த பணி

offstream fish farming

புறநீர் மீன்பண்ணை

oil fingerprinting

எண்ணெய்ச் சுவட்டுப் பதிவு

oil spill

எண்ணெய்க் கசிவு

oncogenic virus

புற்றுநோய் நச்சுயிரி

opacity

மழுக்கம்

open burning

வெளியிலிட்டு எரித்தல்

open dump

கொட்டு வெளி

open land

வெளி நிலம்

organic farming = biological farming = ecological farming

இயற்கை வேளாண்மை

organic fertilizer

இயற்கைப் பசளை; சேதனப் பசளை

organic food

இயற்கைப்பசளை உணவு; சேதனப்பசளை உணவு

organic matter accumulation

இயற்கைப் பசளைத் திரள்

organic practices

இயற்கை வேளாண்மை நடைமுறைகள்

organism

அங்கி

osmosis

சவ்வூடுபரவல்

outfall sewer

வெளிவிழு கழிகால்

overgrazing

மிகைமேய்ச்சல்

overland flow

தரைமேல் பாய்வு

overpopulation

மிகைக்குடித்தொகை

overpumping

மிகையிறைப்பு

overwintering

பனிக்காலத்துக்கு ஈடுகொடுத்தல்

oxygenated water

உயிர்வளி ஏற்றிய நீர்

ozone depletion

ஓசோன் குன்றல்

ozone hole

ஓசோன் புழை

ozone layer

ஓசோன் படை

ozonosphere

ஓசோன்மண்டலம்

pandemic disease

பெரும்புல நோய்

parasite

ஒட்டுண்ணி

parasitic wasps

ஒட்டுண்ணிக் குளவிகள்

parasitism rate

ஒட்டுண்ணல் விகிதம்

park, country

நாட்டுப்புற வனம்

park, flower

பூங்கா

park, forest

வனக்கோட்டம்

park, industrial; industrial estate

கைத்தொழிற் பேட்டை

park, national

தேசிய வனம்

park, walk in the

காவில் உலாவு

pasture

மேய்ச்சனிலம்; மேய்ச்சல் தரை

pasteurization

சூடாக்கி கிருமியொழித்தல்

pathogen

நோயூட்டி

peasant

உழவர்

peat soil

மட்கிப்பசளை; பசளைமண்

percolating filter

கசிவு வடி

percolation

கசிவு

perennial plants

பல்லாண்டுத் தாவரங்கள்

permafrost

உறைமண்படை

permanent crop

நிரந்தரப் பயிர்

pest

பீடை

pest attacks

பீடைகளின் தாக்குதல்

pesticide

பீடைகொல்லி

plankton

மிதப்புயிரி

plant diversity

தாவர வகைமை

plant pathologist

தாவர நோயியலர்

plume

புகைமம்

poised stream

நிலைநில் ஓடை

poison

நஞ்சு

pollination

மகரந்தச்சேர்க்கை

pollinator

மகரந்தி

pollutant

மாசுபடுத்தி

polluter-pays principle

மாசுபடுத்துவோர் செலவுப்பொறுப்பு நெறி

pollution

மாசு

pollution abatement

மாசு தணிப்பு

pollution of poverty

வறுமைசார் மாசு

polyculture

பல்பயிர்ச்செய்கை

population regulation

குடித்தொகை ஒழுங்காக்கம்

potable water

பருகு நீர்

precipitation

பொழிவு

precision

நுண்மை

predation

கொன்றுண்கை

predator

கொன்றுண்ணி; கொல்லுயிரி

primary energy consumption

முதனிலை வலுவள நுகர்வு

putrescible waste

அழுகிய கழிவு

quicksand

புதைமணல்

radiation

கதிர்வீச்சு

radioactive decay

கதிரியக்கச் சிதைவு

radioactive waste

கதிரியக்கக் கழிவு

radioactivity

கதிரியக்கம்

radioecology

கதிரியக்க சூழலியல்

rain shadow

மழையொதுக்கு

rainforest

மழைக்காடு

rainwater

மழைநீர்

raised field

உயர்த்திய களம்

rapeseed

காட்டுக்கடுகு வகை

range management

மேய்ச்சனிலம் ஓம்புதல்

rare species

அரிய உயிரினம்

rate of natural increase

இயல்பான அதிகரிப்பு வேகம்

raw sewage

சுத்திகரிக்கப்படாத கழிநீர்

real growth

மெய் வளர்ச்சி

recreation park

கேளிக்கைக் கோட்டம்

recuperative incineration

வலுமீட்பு நீறாக்கம்

recycled materials

மீளாக்கப் பொருட்கள்

recycling

மீளாக்கம்

red list of threatened animals

அருகு விலங்கின செந்நிரல்

red tide

செவ்வுயிர்மப் பெருக்கு

reforestation

மீள்காடாக்கம்

refuse = solid waste

திரட் கழிவு

refuse reclamation

திரட் கழிவு மீட்பு

regeneration

புத்துயிர்ப்பு

renewable natural resources

மீள்தகு இயற்கை வளங்கள்

reserve, nature

இயற்கைக் கோட்டம்

reservoir

நீர்த்தேக்கம்

residual income

எஞ்சிய வருமானம்

residue

எச்சம்

resilience

மீள்திறன்

restoration cost

மீள்நிலைப்படுத்தல் செலவு

restorative crops

மீள்நிலைப்படுத்தும் பயிர்கள்

reuse

மீள்பயன்பாடு

riparian forest

ஆற்றோரக் காடு

riparian habitat

ஆற்றோர வாழிடம்

river basin

ஆற்று வடிநிலம்

river-regulating reservoir

ஆற்றொழுங்கு நீர்த்தேக்கம்

rodenticide

கொறிவிலங்குகொல்லி

root zone

வேர் வலயம்

roundwood

மரக்குற்றி

run-off

வடிந்தோடுநீர்

saline soil reclamation = desalination

உவர்நீக்கம்

salinity

உவர்ப்பு

salinization

உவர்மயமாக்கம்

salt water intrusion

உவர்நீர் ஊடுருவல்

sanctuary

அடைக்கலம்; புகலரண்; வாழ்புலம்

sanitary sewage

உள்ளகக் கழிநீர்

sanitation

துப்புரவு

saprobe

அழுகுயிர்மம்

saturated soil

நீராள மண்

scaling up agroecology 

சூழல்சார் வேளாண்மை வளம் மேம்படுத்தல்

scaling out agroecology 

சூழல்சார் வேளாண்மை வளம் பெருக்கல்

scavenge

பொறுக்கியுண்

scrap

உடைசல்

scrubber

மாசகற்றி

scum collector

புறநீர்க் கழிவகற்றி

seaweed

சாதாழை

secondary air pollution

இரண்டாங்கட்ட வளிமாசு

secondary radiation

இரண்டாங்கட்டக் கதிர்வீச்சு

sedimentation

அடையல்

sedimentation tank

அடையல் குளம்

selective cutting

தேர்ந்து மரந்தறிப்பு

semi-arid zone

பாதி வறண்ட வலயம்

semi-confined aquifer

பாதி மண்ணணைந்த நீர்தாங்குபடுகை

septic tank

கழிவுத்தொட்டி

sewage

கழிநீர்

sewage effluent standards

கழிநீர் நியமங்கள்

sewage farm

கழிநீர்ப் பண்ணை

sewage lagoon

கழிநீர்த் தேக்கம்

sewer

கழிகால்

sewerage network

கழிகால் வலையம் (தொகுதி)

sheath blight disease

சாவட்டை நோய்

sheet erosion

தகட்டு மண்ணரிப்பு

shifting agriculture

பெயர்ச்சி வேளாண்மை

shifting cultivation

பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை

shredding

கீற்றாக்கம்

silt

துகட்படிவு

silviculture

காட்டுமரவளர்ப்பு

silvopastoral system

மேய்ச்சல்வனத் தொகுதி

sink

ஏந்தி

sinkhole

போறை

sinking

தாழ்தல் ; தாழ்த்தல்

skimming

சிலாவியெடுத்தல்

slack

நிலக்கரித்தூசு

slash-and-burn agriculture

காடழித்துப் பயிரேற்றல்

slow sand filtration

மணல் மெதுநீர் வடிகட்டல்

sludge

அடையற்கூளம்

sludge digestion

அடையற்கூளச் செரிமானம்

sludge disposal

அடையற்கூளம் அகற்றல்

slums

சேரிகள்

slurry

கலவைச் சகதி

smelting

உருக்கியெடுத்தல்

smog

புகார்

smoke

புகை

soft detergents

மென் சலவைப்பொருட்கள்

soft pesticides

மென் பீடைகொல்லிகள்

soil aeration

மண் வளியூட்டம்

soil conditioner

மண் நெகிழ்த்தி

soil conservation

மண் பேணல்

soil cover

மண்மூடி

soil creep

மண் ஊர்வு

soil erosion

மண்ணரிப்பு

soil erosion index

மண்ணரிப்புச் சுட்டு

soil fertility 

மண் வளம்

soil injection

கீழ்மண் களைகொல்லியீடு

soil mesofauna

மண்வாழ் சிற்றுயிரினம்

soil morphology

மண் உருவவியல்

soil profile

மண் வெட்டுமுகம்

soil sealing

மண் விலக்கம்

soil structure

மண் கட்டமைப்பு

soil-borne disease

மண்கொணர் நோய்

solar energy

கதிரொளி வலு

solar flare

கதிரவன் அழற்சி

solid waste disposal

திண்மக் கழிவகற்றல்

solid waste management

திண்மக் கழிவு கையாள்கை

solifluction

ஈரமண்ணகர்வு

soot

புகையொட்டு

soot fall

புகையொட்டு வீழ்ச்சி

sorption

வாயு உறிஞ்சல்

source

தோற்றுவாய்

sources of natural enemies

இயற்கை எதிரிகளின் தோற்றுவாய்கள்

source data

தோற்றுவாய்த் தரவுகள்

species

உயிரினங்கள்

spillover effect

கசிவு விளைவு

spoil

கசடு

stability of ecosystem

சூழல்தொகுதியின் நிலைபேறு

staphylinidae 

அலையும் வண்டுகள்

sterilization

கருவளநீக்கம்

storm, heavy

பலத்த புயல்

storm sewer

வெள்ளக் கழிகால்; வெள்ளக் குழாய்

storm surge

புயற் கடற்பெருக்கு

storm tank

வெள்ளத் தொட்டி

storm water

மழைநீர்; மழைவெள்ளம்

storm window

புயல்காப்புச் சாளரம்

straddling fish stock

புலம்பெயர் மீனினம்

stratification

படையாக்கம்

stratosphere

படைமண்டலம்

stream bank erosion

ஓடைக்கரை மண்ணரிப்பு

stream bank management

ஓடைக்கரை பேணல்

strip mining

மேற்படை அகழ்வு

subsidies to reduce pollution

மாசு தணிப்பு மானியங்கள்

subsistence farming

சுயதேவைப் பயிர்ப் பண்ணை

subsoil assets

கீழ்மண் கனியங்கள்

sullage

வடிந்தோடு கழிநீர்

surface run-off

தரைப்புற வடிந்தோடுநீர்

surface water

தரைப்புற நீர்

surroundings

சுற்றாடல்

suspended solid

தொங்கு திரள்

sustainability, environmental

சூழல் பேண்தகு பயன்பாடு; சூழல் வளம்பேணு(ம்) பயன்பாடு

sustainable catch

பேண்தகு மீன்பிடி; வளம்பேணு(ம்) மீன்பிடி

sustainable development

பேண்தகு விருத்தி; வளம்பேணு(ம்) விருத்தி

sustainable economic growth

பேண்தகு பொருளாதார வளர்ச்சி; வளம்பேணு(ம்) பொருளாதார வளர்ச்சி

sustainable forest management

பேண்தகு வன முகாமை; வளம்பேணு(ம்) வன முகாமை

sustainable society, environmentally

சூழல் பேண்தகு சமூகம்; சூழல்  வளம்பேணு(ம்) சமூகம்

sustainably, live

வளம்பேணி வாழு

swamp

குட்டை

symbiosis

ஒன்றியவாழ்வு

synecology

ஒன்றிய சூழலியல்

synergism 

ஒட்டுறவு வலு

synthetic manure

சேர்க்கை எரு

tailings

தாதுக் கழிவுகள்

taxonomy

பாகுபாட்டியல்

temperate climate

மிதமான காலநிலை

temperature inversion

வெப்பநிலை எதிர்மாற்று

terracing

படித்தரையமைப்பு

thermal pollution

அனல்வலு மாசு

tidal flat

வற்றுப்பெருக்குச் சமதரை

tidal marsh

வற்றுப்பெருக்குச் சேற்றுத்தரை

timber tree

வெட்டுமரம்

topography

இடவிளக்கவியல்

total fertility

மொத்தக் கருவளம்

total final consumption

மொத்த இறுதி நுகர்வு

toxic pollutants

நச்சு மாசுவகைகள்

toxicity

நச்சுடைமை

tradable pollution permit

மாசு வியாபார அனுமதிச்சீட்டு

transboundary pollution

எல்லைகடப்பு மாசு

transplant 

பெயர்த்து நடு

trash

குப்பை

trial

தேர்வீடு

trickling filter

தாரை வடிகட்டி

tropical forest

அயனமண்டலக் காடு

troposphere

அயனமண்டலம்

truncated soil profile

துணித்தமண் பக்கத்தோற்றம்

tsunami

ஆழிப்பேரலை

tundra

பனிப்புலம்

turbidity

கலங்கல்

turnip

வேர்க்கிழங்குச் செடிவகை

universal soil loss equation

உலகளாவிய மண் இழப்புச் சமன்பாடு

urban run-off

நகர்ப்புற வழிந்தோடு மழைநீர்

urban sprawl

நகர்ப் பரம்பல்

urbanization

நகரமயமாக்கம்

vegetation cover

தாவரக் கவிகை

venting of landfill

தாழ்புலவாயு வெளியேற்றம்

vesicular arbuscular mycorrhiza

வேர்க்குமிழ்ப் பூஞ்சை

vulnerability

நலிவுறுநிலை

vulnerability analysis

நலிவுறுநிலை ஆய்வு

vulnerable species

நலிவுறவல்ல உயிரினங்கள்

washout

வான்மாசு கழுவுப்படல்

waste

கழிவு

waste absorption

கழிவுறிஞ்சல்

waste collection

கழிவகற்றல்

waste disposal

கழிவு நீக்கல்

waste management

கழிவு கையாளல்

waste stabilization pond

கழிவு தெளிவிப்புக் குட்டை

waste water

கழிவு நீர்

waste-water treatment

கழிவுநீர் சுத்திகரிப்பு

water abstraction = water withdrawal

நீர் மீட்பு

water conservation

நீர் பேணல்

water cycle

நீர் வட்டம்

water erosion

நீரினாலாகும் மண்ணரிப்பு

water management efficiency

நீர் முகாமைத் திறன்

water mining

நீர் அகழ்வு

water pollution

நீர் மாசு

water quality

நீர்த்தரம்

water quality criteria

நீர்த்தரப் பிரமாணங்கள்

water quality index

நீர்த்தரச் சுட்டு

water quality monitoring

நீர்த்தரக் கண்காணிப்பு

water resources

நீர் வளங்கள்

water supply system

நீர் வழங்கல் கட்டுக்கோப்பு

water table

நீர்ப்பீடம்

water treatment

நீர் சுத்திகரிப்பு

water use

நீர்ப் பயன்பாடு

water withdrawal = water abstraction

நீர் மீட்பு

water-based disease = waterborne disease = water-related disease

நீர்வழிபரவு நோய்

waterlogging

நீர்ப்பிடிப்பு

watershed

நீர்ப்பிரிநிலம்

weather

வானிலை

weathering

வானிலையாலழிதல்

weevil

அந்துப்பூச்சி

wetland

நீர்நிலை

wild and weedy relatives of crops

இயற்கைப் பயிரினங்களும் களைகளும்

wild plants 

காட்டுத் தாவரங்கள்

wildlife habitat

கானுயிர் வாழ்புலம்; வனவிலங்கு வாழ்புலம்

wildlife park = wildlife reserve = game park = game reserve

கானுயிர்க் கோட்டம்; வனவிலங்குக் கோட்டம்

wildlife sanctuary

கானுயிர் காப்புலம்; வனவிலங்கு காப்புலம்

wind erosion

காற்று மண்ணரிப்பு

wind strip cropping

காற்றுரிப்புப் பயிரீடு

windbreak 

காற்றெதிர் மரவரிசை; 

காற்றுத்தடை மரவரிசை

world heritage

உலக பாரம்பரியம்

yield gap

விளைச்சல் இடைவெளி

zero-tillage = no-tillage 

பண்படுத்தாமை

 

No comments:

Post a Comment