FEMININITY = பெண்மை


A World Free of Violence against Women

பெண்களுக்கெதிரான வன்முறையற்ற உலகம்

abortifacient

கருக்கலைப்பு மருந்து

abortion rate

கருக்கலைப்பு வீதம்

abortion ratio

கருக்கலைப்பு விகிதம்

access to abortion

கருக்கலைப்பு வசதி

affirmative action

பாரபட்சத்தை ஈடுசெய்யும் நடவடிக்கை

age at marriage

மணம்புரி வயது

age at next birthday

அடுத்த பிறந்தநாள் வயது

age at retirement

ஓய்வுபெறுகை வயது

age dependency ratio

வயதுவாரித் தங்கிவாழ்வு விகிதம்

age of consent = age of protection

பாலுறவுக்கு இசையும் வயது

agenda for gender equality

பால்மைச் சமத்துவ நிகழ்ச்சிநிரல்

age-specific fertility rate

வயது குறித்த கருவள வீதம் 

alimony

பிரிமனைப்படி

allied health professionals

துணைச் சுகாதாரத் துறைஞர்கள் (எ-கா: உடற்சிகிச்சையாளர், உணவியலர், கதிரியலர்)

amenorrhea

மாதவிலக்கின்மை = கர்ப்பசூலை

anovulation

சூலறவு

antenatal card

கர்ப்பகால அட்டை

appliance method

சாதன முறை

arranged marriage

பேச்சுத் திருமணம்

at-birth death rate

பிறக்கையில் இறப்பு வீதம்

at-risk women = vulnerable women

பாதிப்புக்கு உள்ளாகவல்ல பெண்கள்

attitudinal discrimination

உளப்பான்மைப் பாரபட்சம்

auxiliary nurse midwife

துணை மகப்பேற்றுச் செவிலி

average parity = children ever born = mean number of children ever born per woman

ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை

baby blues =postnatal depression

மகப்பேற்றின்பின் உளச்சோர்வு

baby-friendly hospital

பாலூட்டுநேய மருத்துவமனை

baby-led weaning

குழந்தை தானே உண்ணப் பழகல்

balanced portrayal of women

பெண்களை ஒப்பளவாகச் சித்தரித்தல்

barrier methods

கருத்தடை முறைகள்

battered wives

தாக்குண்ட மனைவியர்

battered women

தாக்குண்ட பெண்கள்

battered women's shelter = hostel

தாக்குண்ட மகளிர் மனை = மகளிர்மனை

battery

தாக்குதல்

below replacement fertility

ஈடுசெய் பிறப்பின் தாழ்ச்சி வீதம்

benefits

உதவிப்படிகள்

better health for women and children through family planning

குடும்பத் திட்டம் ஊடாக பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் நலவாழ்வு

bias

பக்கச்சார்பு

biological family

குருதி உறவுக் குடும்பம்

biological parent = blood parent

குருதிப் பெற்றார்

birth attendant

மகப்பேற்றுத் தாதியாளர்

birth control = fertility regulation

குடும்பக் கட்டுப்பாடு

birth grant

மகப்பேற்று மானியம்

birth interval = birth spacing = child spacing

பிறப்பிடைக்காலம்

birth kit

மகப்பேற்றுப் பொட்டலம்

birth postponement

கருத்தரிப்பை பின்போடல்

birth rate

பிறப்பு வீதம்

birth timing

கர்ப்பகால ஒழுங்கு

birth weight

பிறந்த குழந்தையின் எடை

birthright

பிறப்புரிமை

bonded labour

குடிமைத் தொழில்

bottle feeding

போச்சிப்பாலூட்டல்

breadwinner

உழைப்பாளர்

breast cancer

மார்பகப் புற்றுநோய்

breast-feeding

தாய்ப்பாலூட்டல்

breast-milk substitutes

தாய்ப்பாலுக்குப் பதிலீடுகள் 

caregiver

பராமரிப்பாளர்

casework

ஆள்நிலை ஆய்வு

casual workers

அமயப் பணியாளர்கள்

cervical cancer

கருப்பைமுகைப் புற்றுநோய

cervical cap

கருத்தடை மூடி

challenges for meeting women's rights

பெண்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில் எழும் சவால்கள்

child bearing

மகப்பேறு

child born out of wedlock

மணம்புரியாத பெற்றோரின் பிள்ளை

child bride

பால மணமகள்

child care = day care

பாலர் பராமரிப்பு

child marriage

பாலர் மணம்

child prostitutes

விபசாரத்துக்கு அடிப்பட்ட சிறார்

child prostitution  

சிறாரைப் பயன்படுத்தும் விபசாரம்

child spacing

பிறப்பிடைக்காலம்

child support

சிறார் உதவிப்படி

child-bearing age

மகப்பேற்று வயது

child-bearing period

மகப்பேற்றுக் காலப்பகுதி

child-care facilities

சிறார் பராமரிப்பு வசதிகள்

children ever born = average parity = mean number of children ever born per woman

ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை

civil marriage

சடங்கற்ற திருமணம்

cohabitation

கூடிவாழ்வு

cohort fecundability

சாரிகளின் கர்ப்பவாய்ப்பு

cohorts

சாரிகள்

coitus interruptus = withdrawal method

விந்துபாய்வு இடைவிலக்கல்

commercial sex trade =sex trade

பாலுறவு வியாபாரம்

commercial sexual exploitation

பாலுறவு வியாபாரத்துக்குப் பயன்படுத்தல்

commercialized sex

வியாபாரமயப்பட்ட பாலுறவு

Commission on the Status of Women

மகளிர் தகுநிலை ஆணையம்

Committee on the Elimination of Discrimination against Women

பெண்களுக்கெதிரான பாரபட்சம் ஒழிப்புக் குழு

common-law marriage

வழமை மணவாழ்வு (சட்டப்பதிவற்றதாயினும் செல்லுபடியாகும் மணவாழ்வு)

common-law relationship

வழமை வாழ்வுறவு (இருவருள் ஒருவர் உறவை துண்டித்தவுடன் ஒழிந்துவிடும் கூடிவாழ்வு)

community kitchen

கூட்டுச் சமையற்களம்

community-based distribution of contraceptives

சமூகநிலைக் கருத்தடைப்பொருள் விநியோகம்

community-based organizations

சமூகநிலை அமைப்புகள்

companionate marriage

துணைவாழ்வு (ஒருவருக்கொருவர் துணைநிற்கும் வாழ்வு)

comparable worth

ஒப்பளவுப் பெறுமதி

compassionate counselling

கருணை உளவள மதியுரை

complete years

முற்றாண்டுகள்

completed fertility

கருத்தரிப்பு ஒழியுந் தறுவாயில் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை (எ-கா: 50 வயது பூர்த்திசெய்த பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை)

composite household = complex household

கலப்புக் குடும்பம்

conception

கருத்தரிப்பு

concubinage

வைப்புவாழ்வு

conjugal family

தனிக் குடும்பம்

consensual union

இசைந்து கூடிவாழ்வு (இருவர் உளமிசைந்து கூடிவாழ்தல்)

consent to marriage

திருமண இசைவு

contraception

கருத்தடை

contraceptive acceptor

கருத்தடை ஏற்பவர்

contraceptive continuation rate

கருத்தடை தொடர்ச்சி வீதம்

contraceptive devices

கருத்தடைச் சாதனங்கள்

contraceptive methods

கருத்தடை முறைகள்

contraceptive prevalence rate

கருத்தடை நிலவும் வீதம்

contraceptive technology

கருத்தடைத் தொழினுட்பவியல்

contraceptive user = contraceptor

கருத்தடைப் பயனாளர்

contraceptives

கருத்தடைப் பொருட்கள்

Coordinator of Activities Relating to Women

மகளிர் செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர்

cottage industry

குடிசைக் கைத்தொழில்

counselling services

உளவள மதியுரைச் சேவைகள்

craft skills

கைவினைத் திறன்கள்

crèche

பாலர் நிலையம்

criminal harassment = stalking

குற்றத் தொந்தரவு

cross-cutting issue

அடர்ந்து படர்ந்த விடயம்

crude birth rate

பருமட்டான பிறப்பு வீதம்

custody of children

சிறார் கட்டுக்காப்பு

customary marriage

வாடிக்கை மணவாழ்வு (பண்பாட்டு வாடிக்கைப்படியான மணவாழ்வு)

data disaggregated by sex = gender disaggregated information

பால்வாரித் தரவுகள் = பால்மைவாரித் தகவல்

deadbeat dad

கடப்பாடுதவறிய தந்தை

deadbeat mom

கடப்பாடுதவறிய தாய்

decriminalization of abortion

கருச்சிதைப்பை குற்றமற்றதாக்கல்

delivery care

மகப்பேற்றுப் பராமரிப்பு

demographic health surveys

குடிசார் சுகாதார விபர ஆய்வுகள்

dependent care

தங்கிவாழ்வாரைப் பராமரித்தல்

dependents = dependants

தங்கிவாழ்வோர்

determinants and consequences of female-headed households

பெண்-தலைமைக் குடும்பங்கள் அமைவதைத் தீர்மானிக்கும் காரணிகளும் பின்விளைவுகளும் 

dilation and curettage instruments set

அகட்டிச் சுரண்டும் கருவித்தொகுதி

discrimination on grounds of sex = sexual discrimination = sex-based discrimination

பால்மைவாரிப் பாரபட்சம்

diseases of ageing

மூப்புகால நோய்கள்

divorce

மணவிலக்கு

domestic arts

இல்லக் கலைகள்

domestic partnership

கூடிவாழ்வு

double standard

பாரபட்சம்

douche

நறுநீர்

dowry-related violence

சீதனம் குறித்த வன்முறை

drudgery-reducing devices

சலிப்புத் தணிக்கும் சாதனங்கள்

dual-career couple

பணியாற்றும் தம்பதியர் 

duration-specific marital fertility rate = marriage duration (marital) fertility rate

மணவாழ்வுகால மகப்பேற்று வீதம்

dysmenorrhea

கடுமாதவிலக்கு

early family formation

இளவயதில் குடும்பம் அமைத்தல்  

early marriage

இளவயது மணம்

early pregnancy

இளவயதில் கருத்தரிப்பு

early term birth

முந்து மகப்பேறு = முந்திப் பிறத்தல் (37-38 கிழமைகள்)

early weaning

வேளைக்கே பால்குடிமறப்பு

Economic Empowerment Programme

பொருளாதார வல்லமையளிப்பு நிகழ்முறை

ectopic pregnancy

பிறழ் கருத்தரிப்பு

effective fertility

பலித மகப்பேறு (5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையை 15-49 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையால் பிரித்த தொகை)

emergency contraception

அவசர கருத்தடை

emotional abuse

உணர்வுத் துன்புறுத்தல்  

emotional health

உளநலம்

employment of women with family responsibilities

குடும்ப பொறுப்புடைய பெண்களைப் பணிக்கமர்த்தல்

empowerment

வல்லமையளிப்பு

enabling environment for women

பெண்களுக்கு வல்லமையளிக்கும் சூழல்

endogamy

அகமணம்

endogenous mortality

அகக்காரண இறப்பு

endowment

அறக்கொடை

Enhancing Women's Role in Community Development

சமூக விருத்தியில் பெண்கள் பங்குவகிப்பதை விரிவுபடுத்தல்

equal employment opportunity

சமதொழில்வாய்ப்பு

equal opportunities and equal treatment for men and women workers with family responsibilities

குடும்பப் பொறுப்புடைய ஆண், பெண் தொழிலாளர்களுக்கான சரிநிகர் வாய்ப்புகள், அவர்களை சரிநிகராக  நடத்துதல்

equal opportunity

சமவாய்ப்பு

equal partnership (participation)

சமபங்கேற்பு

equal remuneration for men and women workers for work of equal value

சரிநிகர் பெறுமதி வாய்ந்த பணியை ஆற்றும் ஆண், பெண் பணியாளர்களுக்கு சரிநிகர் ஊதியம்

Equality Now

உடன் சமத்துவ இயக்கம்

ever-married person

ஒரு தடவையாவது மணம்புரிந்த ஆள்

exogamy

புறமணம்

fact-sheet

விபரமடல்

family code

குடும்பச் சட்டக்கோவை

family counselling

குடும்ப உளவளமதியுரை

family health services

குடும்பநல சேவைகள்

family life education

குடும்ப வாழ்வுக் கல்வி

family planning provider

குடும்பக் கட்டுப்பாட்டுத் துறைஞர் 

family spacing

மகப்பேற்று இடைவெளி

family wage

குடும்ப வருமானம்

family-friendly society

குடும்பநேய சமூகம்

family-friendly work environment

குடும்பநேய தொழிலக சூழ்நிலை

family-planning acceptor

குடும்பக் கட்டுப்பாடு ஏற்பவர்

fecundability

கர்ப்பவாய்ப்பு

fecundity

கர்ப்பவளம்

female circumcision = female genital mutilation = clitoridectomy = excision

பெண் உறுப்புச் சிதைப்பு

female headship of household

பெண்-தலைமைக் குடும்பம்

female infanticide

பெண்சிசுக்கொலை

female literacy

பெண் எழுத்தறிவு

female poverty

பெண் வறுமை

female-headed household

பெண் தலைமைக் குடும்பம்

female-maintained household

பெண் பராமரிக்கும் குடும்பம்

feminization of employment

பணியாற்றும் பெண்களின் பெருக்கம்

feminization of poverty

வறுமைப்படும் பெண்களின் பெருக்கம்

feminized poverty

வறுமைப்பட்ட பெண்களின் பெருக்கம்

fertility decline

கருவள வீழ்ச்சி

fertility regulation = birth control

கருவளக் கட்டுப்பாடு = பிறப்புக் கட்டுப்பாடு

fertility-controlling drugs

கருவளக் கட்டுப்பாட்டு மருந்துகள்

fetal mortality

கர்ப்பச்சிசு இறப்புவீதம்

feticide

கர்ப்பச்சிதைப்பு

field work

களப்பணி

first-birth interval = interval between marriage and first birth

மணம்புரிவுக்கும் முதலாவது மகப்பேற்றுக்கும் இடைப்பட்ட காலம்

Focal Point for Women

மகளிர் பணி இலக்கு

food supplements

பிற்சேர்ப்பு உணவுவகைகள்

forced abortion

பலவந்த கருக்கலைப்பு

forced marriage

பலவந்த மணம்

forced pregnancy

பலவந்த கருத்தரிப்பு

forced prostitution

பலவந்த விபசாரம்

forced reproduction

பலவந்த கருத்தரிப்பு

forced sterilization

பலவந்த கருவளநீக்கம்

fuel efficient stove

எரிபொருள் சிக்கன அடுப்பு

full term birth

நிறைமாத மகப்பேறு (39-40 கிழமைகள்)

gag rule

வாய்ப்பூட்டு விதி

gainful employment

சம்பள வேலை

gender

பால்மை

gender analysis

பால்மைப் பகுப்பாய்வு

gender analyst

பாலமைப் பகுப்பாய்வாளர்

gender and humanity

பால்மையும் மன்பதையும் (மனுக்குலமும்)

gender apartheid

பால்மைசார் பாரபட்சம்

gender asymmetry

பால்மைச் சீரின்மை

gender awareness

பால்மை விழிப்புணர்வு

Gender Awareness Information and Networking System

பால்மை விழிப்புணர்வு தகவல் வலையம்

gender balance

பால்மை ஒப்பளவு

gender bias

பால்மைப் பக்கச்சார்பு

gender blindness

பால்மை காணாமை

gender contract

பால்மை ஒப்பந்தம்

gender disaggregated information = data disaggregated by sex

பால்மைவாரித் தகவல் = பால்வாரித் தரவுகள்

gender discrimination

பால்மைப் பாரபட்சம்

gender disparities

பால்மைப் பேதங்கள்

gender empowerment measure

பால்மை வல்லமையளிப்பு நடவடிக்கை

gender equality

பால்மைச் சமத்துவம்

gender equity

பால்மை ஒப்புரவு

gender focal point

பால்மை இலக்கு

gender identity

பால்மை அடையாளம்

gender impact assessment methodology

பால்மைத் தாக்கம் கணிப்பீட்டு முறையியல்

gender in development programme

விருத்தி நிகழ்முறையில் பால்மை

gender inequalities

பால்மை ஏற்றத்தாழ்வுகள்

gender issues

பால்மை விடயங்கள்

gender mainstreaming

பால்மை உள்வாங்கல்

gender needs assessment

பால்மைசார் தேவைகள் கணிப்பீடு

gender perspectives

பால்மைக் கண்ணோட்டங்கள்

gender relations

பால்மை உறவு

gender role

பால்மை வகிபாகம்

gender scorecard

பால்மை நியம அட்டை

gender- sensitive budgeting

பால்மை உளங்கொள் வரசெலவீடு

gender specialist

பால்மை விற்பன்னர்

gender statistics

பால்மைப் புள்ளிவிபரம்

gender stereotypes

பால்மைப் படிவார்ப்புகள்

gender wage gap

பால்மைவாரிச் சம்பள  வேறுபாடு

gender, poverty and well-being

பால்மையும் வறுமையும் சுகசேமமும்

gender-adjusted human development index = gender-related human development index

பால்மைசார் மனித விருத்திச் சுட்டு

gender-balanced composition

பால்மை ஒப்பளவுக் கோப்பு

gender-based division of labour

பால்மை அடிப்படையில் தொழிற்பகுப்பு

gender-based harassment

பால்மை அடிப்படையில் அலைக்கழிப்பு

gender-based human rights violations

பால்மை அடிப்படையில் மனித உரிமை மீறல்கள்

gender-based pay inequalities

பால்மை அடிப்படையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள்

gender-based violence

பால்மை அடிப்படையில் வன்முறை

gender-derived skills

பால்மைவழிவந்த திறன்கள்

gender-differentiated impacts

பால்மைவாரியாக வேறுபடுத்திய தாக்கங்கள்

gender-dominated job 

பால்மை ஆதிக்க வேலை

gendered language

பால்மைத்துவ மொழி

gender-equity-sensitive indicator

பால்மை ஒப்புரவு உளங்கொள் குறிகாட்டி

gender-neutral attitude

பால்மை-நடுநிலை உளப்பான்மை

gender-neutral policy

பால்மை-நடுநிலைக் கொள்கை

gender-related claim to refugee status

பால்மை தொடர்பான அகதிநிலைக் கோரிக்கை

gender-related persecution

பால்மை தொடர்பான கொடுமை

gender-responsive budgeting

பால்மைப் பதில்வினை வரவுசெலவீடு

gender-sensitive concerns

பால்மை உளங்கொள் கரிசனைகள்

gender-sensitive planning

பால்மை உளங்கொள் திட்டமிடல்

gender-specific research

பால்மை குறித்த ஆராய்ச்சி

gender-specific terminology

பால்மை குறித்த பதங்கள்

genital mutilation

உறுப்புச் சிதைப்பு

girl child

பெண் பிள்ளை

glass ceiling

உயர்பதவி மறுக்கும் கட்டமைப்பு

grass-root action

கீழ்மட்ட நடவடிக்கை

grass-root organization

கீழ்மட்ட அமைப்பு

guidance note on gender mainstreaming

பால்மை உள்வாங்கல் வழிகாட்டிக் குறிப்பு

guidelines for the evaluation of the women's dimension in fund-assisted programmes

நிதிய-உதவி நிகழ்முறைகளில் மகளிரின் பரிமாணத்தைக் கணிப்பதற்கான வழிமுறைகள் 

guidelines on the protection of refugee women

அகதி மகளிர் பாதுகாப்பு வழிமுறைகள்

harmful traditional practices

தீங்குவிளைவிக்கும் பாரம்பரிய செயல்முறைகள்

head of household

குடும்பத் தலைவர்

health insurance

சுகாதாரக் காப்புறுதி

healthy women counselling guide

மகளிர் நல்லுள மதியுரை வழிகாட்டி

high-risk pregnancy

பாதிப்பு மிகுந்த கருத்தரிப்பு

HIV-AIDS and human rights: international guidelines

மனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி மற்றும் தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணியும் மனித உரிமைகளும்: சர்வதேய வழிமுறைகள்

holistic approach

முழுமை அணுகுமுறை

home economics

இல்லப் பொருளியல்

home-based work; homework

இல்லநிலைப் பணி

home-based worker

இல்லநிலைப் பணியாளர்

home crafts

இல்லக் கைவினைகள்

homeless, the

வீடற்றோர்

homemaker

மனையாளர்

homemaking

மனையாண்மை

honour killing

மானக்கொலை

hostel = battered women's shelter

மகளிர்மனை = தாக்குண்ட மகளிர் மனை

house girl = maid

வீட்டுப் பணிப்பெண்

household sector

நுகர்வோர் துறை

housewife

இல்லாள்

human rights fact sheet

மனித உரிமை விபரமடல்

human rights in relation to women's health

மகளிர் நலவாழ்வு குறித்த மனித உரிமைகள்

illegitimate child

சட்டப்பேறற்ற பிள்ளை

illegitimate fertility rates

சட்டப்பேறற்ற பிறப்பு வீதங்கள்

impact of crises on poor women

வறிய பெண்கள்மீது நெருக்கடிகள் ஏற்படுத்தும் தாக்கம்

implantation

உட்பதிப்பு

inbred

சொந்தத்துள் உறவுகொண்டு பெற்றெடுத்த

inbreeding

சொந்தத்துள் உறவுகொண்டு பெற்றெடுத்தல்

income-generating activities = income-producing activities

வருமானம் ஈட்டும் செயற்பாடுகள்

indigenous women: taking control of their destiny

சுதேச மகளிர்: தமது தலைவிதியை தாமே நிர்ணயித்தல்

induced abortion = intentional abortion

கருதிச்செய்யும் கருக்கலைப்பு

infibulation

விழைச்சுக்கட்டு

inheritance and transfer entitlements

இறப்புச்சொத்துப்பேறு, உரித்துப்பேறுகள்

injectable contraceptives

கருத்தடை ஊசியேற்றம் 

in-service training = on-the-job training = in-house training

உள்ளகப் பயிற்சி

insurance coverage

காப்புறுதிக் காப்பீடு

integrated management of pregnancy and childbirth

கருத்தரிப்பு, மகப்பேறு ஒருங்கிணைந்த பராமரிப்பு

integrated monitoring and evaluation plan

ஒருங்கிணைந்த கண்காணிப்பும் மதிப்பீடும்

intentional abortion = induced abortion

கருதிச்செய்யும் கருக்கலைப்பு

Inter-Agency Field Manual for Reproductive Health in Refugee Situations

அகதிச் சூழ்நிலையில் கருத்தரிப்பு உடல்நலம் குறித்த சர்வ முகமையக கைநூல்  

Inter-Agency Plan of Action on Protection from Sexual Exploitation and Abuse

பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல், பாலியல் துர்ப்பிரயோகம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பது குறித்த சர்வ முகமையக நடவடிக்கைத் திட்டம்

International Women's Day

சர்வதேய மகளிர் நாள்

International Women's Information and Communication Service

சர்வதேய மகளிர் தகவல் - தொடர்பாடல் சேவை

International Women's Year

சர்வதேய மகளிர் ஆண்டு

interpregnancy intervals

கருத்தரிப்பு இடைக்காலப்பகுதிகள்

interval between marriage and first birth

திருமணத்துக்கும் முதலாவது மகப்பேற்றுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி

intervals between successive births

மகப்பேறுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகள்

intra-uterine device

கருப்பையக கருத்தடைச் சாதனம்

intra-uterine growth retardation

கர்ப்பச்சிசு வளர்ச்சி குன்றல்

intravenous substance use

போதை ஊசி ஏற்றம்

in-vitro fertilization

புறக்கருக்கட்டல்

job sharing

பணிவேளைப் பகிர்வு (எ-கா: ஒரே பணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் நேரவாரியாகவோ நாள்வாரியாகவோ பகிர்ந்து செய்தல்)

joint custody

கூட்டுக் கட்டுக்காப்பு (எ-கா: பிரிந்து வாழும் பெற்றோர் தமது பிள்ளைகள் பற்றிய முக்கிய விடயங்களில் கூடி முடிவெடுத்தல்)

joint reproduction rate

கூட்டுக் கருத்தரிப்பு வீதம்

just-in-time delivery

குறித்தகால மகப்பேறு

labour pains

மகப்பேற்று வேதனை

labour room

மகப்பேற்றுக் கூடம்

labour, go into

மகப்பேற்று வேதனைக்கு உள்ளாகு

labour-based entitlement

தொழில் அடிப்படையில் உதவிப்படி

labour-saving devices

தொழிற்சிக்கன சாதனங்கள்

lactation

பால்சுரப்பு

latch-key children

பெற்றோர் வீடுதிரும்பும்வரை தனித்திருக்கும் பிள்ளைகள் 

late term birth

பிந்து மகப்பேறு = பிந்திப் பிறத்தல் (41-42 கிழமைகள்)

legal adult

வயதுவந்தவர்

Legal Adviser for Gender Issues

பால்மை விடய சட்ட மதியுரைஞர்

legal literacy

சட்டவிபர அறிவு

legal majority

சட்டப்படி வயதடைவு

legal status

சட்டபூர்வ தகுநிலை

lifelong learning

வாழ்நாட் கற்கை

life skills

வாழ்வியல் திறன்கள்

life-span

ஆயுட்காலம்

lifestyle

வாழ்க்கைப்பாணி

live-born children

உயிருடன் பிறந்த பிள்ளைகள்

low-paid job

சம்பளம் குறைந்த வேலை

lying-in clinic

மகப்பேற்று மனை

mail order bride

அஞ்சல்நிரல் மணமகள்

mainstreaming a gender perspective

பால்மைக் கண்ணோட்டத்தை உள்வாங்கல்

mainstreaming women in development

விருத்தியில் பெண்களை உள்வாங்கல்

male chauvinism

பேராண்மைவாதம்

male dominance

ஆணாதிக்கம்

male escort

விலைமகன்

male preserve

ஆண்களின் ஏகபோகம்

marital bond

திருமண பந்தம்

marital rape = spousal rape

வாழ்க்கைத்துணையின் வன்புணர்ச்சி

marriage of completed fertility

கருத்தரிப்பு முற்றுப்பெற்ற மணவாழ்வு

marriage rate = nuptiality rate

மணவாழ்வு வீதம்

mate

துணைவர்

maternal and child health

தாய்-சேய் நலவாழ்வு

maternal and child health and family planning

தாய்-சேய் நலவாழ்வும் குடும்பத் திட்டமும்

maternal mortality rate

மகப்பேற்றுமகளிர் இறப்பு வீதம்

maternity grant

மகப்பேற்று மானியம்

maternity leave

மகப்பேற்று விடுப்பு

mean number of children ever born per woman = average parity = children ever born

ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை

media coverage

ஊடக பிரசித்தம்

menarche

முதல் மாதவிலக்கு

menopause

மாதவிலக்கொழிவு

menses

மாதவிலக்கு

menses-inducer

மாதவிலக்கு-ஊக்கி

microbicide

நுண்ணுயிரிகொல்லி

midwife

மகப்பேற்றுத் தாதி

midwifery clinic

மக்ப்பேற்று மனை

military sexual slavery (servitude)

படையினர் பாலுறவு அடிமைத்தளை

minimum age at marriage = minimum age for marriage

ஆகக்குறைந்த திருமண வயது

minor

இளையர் = பராயமடையாதவர்

miscarriage = spontaneous abortion

கருச்சிதைவு

model national plan of action for inclusion of gender issues in mainstreaming activities at the national level

தேசியவாரியாக உள்வாங்கும் செயற்பாடுகளுள் பால்மை விடயங்களை உள்ளடக்குவதற்கான மாதிரித் தேசிய நடவடிக்கைத் திட்டம்

model strategies and practical measures on the elimination of violence against women in the field of crime prevention and criminal justice

குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையில் பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த மாதிரி உபாயங்களும் செய்முறைகளும்

morning sickness

வயிற்றுக் குமட்டல்

mothering

தாயியல்

multigravida

பல்கர்ப்பிணி

multipara

பல்மகவுத்தாய்

multiple sexual partnership

பல்பாலுறவுத் துணைமை

National Rapporteur on Trafficking and Human Rights Abuse of Women and Girls

மாதரையும் சிறுமியரையும் இரைகொள்ளும் கள்ள வியாபாரம் மற்றும் மனித உரிமைத் துர்ப்பிரயோகம் குறித்த தேசிய அறிக்கையாளர்

natural family planning = rhythm method

இயல்பான குடும்பக் கட்டுப்பாடு = இடைவிலக்கு முறை (சூல்கொள்ளும் நாட்களில் பாலுறவு தவிர்ப்பு)

neighbourhood childcare facilities

அயலக பாலர் பராமரிப்பு வசதிகள்

newly-delivered woman

புதுக்கத் தாயான பெண்

nidation = implantation

உட்பதிப்பு

No to Violence Against Women

பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு  இயக்கம்

non-marital fertility rates

புறமணப்பேற்று விகிதங்கள்

non-spermicidal microbicides

விந்துகொல்லா நுண்ணுயிரிகொல்லிகள்

non-stereotyped portrayal of women

பெண்களை படிவார்ப்புக்கு உள்ளாக்காத சித்தரிப்பு

numeracy

எண்ணறிவு

nursing woman

பாலூட்டும் தாய்

nutritional anemia

சத்துக்குறைவுச் சோகை

obstetric fistula

கர்ப்பகால புரைக்கசிவு

obstetrician

மகப்பேற்று மருத்துவர்

obstructed labour

மகப்பேற்றுத் தடங்கல்

occupational gender segregation

பால்மைவாரியாகத் தொழில்வாய்ப்பை வகுத்து ஒதுக்குதல்

occupational segregation

தொழில்வாய்ப்பை வகுத்து ஒதுக்குதல்

occupational stereotype

தொழில்சார் படிவார்ப்பு

one-person household

தனியாள் வாழ்விடம்

Optional Protocol to the Convention on the Elimination of All Forms of Discrimination against Women

பெண்களுக்கெதிரான பாரபட்ச வகைகள் அனைத்தையும் ஒழிப்பது குறித்த ஒப்பந்தத்துக்கான விருப்பதெரிவு வரைமுறை 

oral contraceptives

கருத்தடை மாத்திரைகள்

osteoporosis

என்புப்போறை

outwork

வெளித்தொழில்

over-medication

மிகை மருந்துட்கொளல்

ovulatory cycle

சூலுறு வட்டம்

paedophilia

சிறார்பால் காமம்; சிறாரைக் காமுறுகை

pap smear = pap test

கருப்பைமுகைப் பரிசோதனை

parental leave

பெற்றோருக்கான விடுப்பு

parental rights

பெற்றோரின் உரிமைகள்

parenthood

பெற்றோரியம்

parenting skills

பேற்றோரியத் திறன்கள்

parity

சமத்துவம்

partner

துணைவர்

parturition

மகப்பேறு

paternal leave

தந்தைக்கான விடுப்பு

pelvic inflammatory disease

கூபக அழற்சி நோய்

pelvic pain

கூபக நோவு

permissiveness = permissivism

நெகிழ்வு

petty trader

குறுவணிகர்

physical abuse

உடலூறுபடத் துன்புறுத்தல்

pink-collar occupation

மகளிர் பணி  

planned births

திட்டமிட்ட மகப்பேறு

planned parenthood

திட்டமிட்ட பெற்றோரியம்

Policy and Analytic Frameworks for Gender Equality

பால்மைச் சமத்துவத்துக்கான கொள்கை மற்றும் பகுப்பாய்வுக் கட்டுக்கோப்புகள்

polyandry

பல்கணவருடைமை

polygamy

பல்வாழ்க்கைத்துணைமை

polygyny

பல்மனைவியருடைமை

positive discrimination = affirmative action = reverse discrimination

ஈடுசெய் பாரபட்சம் (முன்னைய பாரபட்சத்தை ஈடுசெய்வதற்கான இன்றைய பாரபட்சம்)

post-abortion counselling

கருக்கலைப்பின்பின் உளவள மதியுரை

post-partum abstinence

மகப்பேற்றின்பின் உடலுறவு கொள்ளாமை

post-partum care

மகப்பேற்றின்பின் பராமரிப்பு

post-partum depression = baby blues

மகப்பேற்றின்பின் உளச்சோர்வு

Poverty Alleviation Programme

வறுமை தணிப்பு நிகழ்முறை

pregnancy intervals

கருத்தரிப்பு இடைக்காலப்பகுதிகள்

pregnancy leave

கர்ப்பகால விடுப்பு

pregnancy termination

கருத்தரிப்பு முடிவுறுத்தல்

pre-marital examination

மணமுன் பரிசோதனை

premature birth

குறைமாதப் பிறப்பு

prenatal care = antenatal care

கர்ப்பகால பராமரிப்பு

prenatal sex selection

கர்ப்பச்சிசுவின் பால்-தெரிவு 

prereproductive-age girl

கர்ப்பவயது முதிராத சிறுமி

Prevention and Management of Unsafe Abortion

பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தடுத்தலும் கையாளலும்

primigravida

முதன்முதல் தாயாகுபவர்

principal earner

முதன்மை உழைப்பாளர்

Pro-choice Movement

சுயேச்சை மகப்பேற்று இயக்கம் (மகப்பேறு பெண்களின் சுயேச்சையைப் பொறுத்தது, அரசையோ சமூகத்தையோ பொறுத்ததல்ல என்று முழங்கும் இயக்கும்) 

production-based entitlements

சொந்த உற்பத்தி ஆதாயங்கள் 

Progress of the World's Women

உலக மகளிர் முன்னேற்ற இயக்கம்

Pro-life Movement

கருக்கலைப்பு எதிர்ப்பு இயக்கம்

promotion ladder

பதவியேற்றம்

psychological abuse

உளத்துன்புறுத்தல்

puerperal mortality rate

மகப்பேற்றுமகளிர் இறப்பு வீதம் (பெண்கள் மகப்பேற்றின் முன் அல்லது பின் இறக்கும் வீதம்) 

puerperium

மகப்பேற்று மீட்சிக்காலம்

rape

வன்புணர்ச்சி

regional gender programme

பிராந்திய பால்மை நிகழ்முறை

religious marriage

சமயத் திருமணம்

remunerated work

ஊதிய வேலை

replacement fertility

ஈடுசெய் பிறப்பு வீதம்

reproductive age

கருத்தரிப்பு வயது

reproductive choice

கருத்தரிப்புத் தெரிவு

reproductive coercion

கருத்தரிப்பு பலவந்தம்

reproductive health care

கருத்தரிப்பு நலம்பேணல்

reproductive responsibilities

கருத்தரிப்பு பொறுப்புகள்

reproductive rights

கருத்தரிப்பு உரிமைகள்

reproductive technologies

கருத்தரிப்பு தொழினுட்பவியல்

required minimum age for marriage

மணம்புரிவதற்கான ஆகக்குறைந்த வயது

restraining order

தடைக் கட்டளை

returnee women

மீள்மகளிர்

revenue-generating activities = revenue-producing activities

வருமானம் ஈட்டும் செயற்பாடுகள்

reverse discrimination = affirmative action = positive discrimination

ஈடுசெய் பாரபட்சம் (முன்னைய பாரபட்சத்தை ஈடுசெய்வதற்கான இன்றைய பாரபட்சம்)

Right to Life Movement

வாழ்வுரிமை இயக்கம்

rights-based approach to women's empowerment and advancement and gender equality

உரிமை அடிப்படையில் பெண்கள் வல்லமையீட்டம், முன்னேற்றம், பால்மைச் சமத்துவ அணுகுமுறை

risk behaviour

கெடுதி நடத்தை

role-sharing

வகிபாகப் பகிர்வு

role-specific behaviour

வகிபாகம் குறித்த நடத்தை

safe abortion

பாதுகாப்பான கருக்கலைப்பு

safe delivery

பாதுகாப்பான மகப்பேறு

safe femalehood

பாதுகாப்பான பெண்மை

safe motherhood

பாதுகாப்பான தாய்மை

Safe Motherhood Initiative

பாதுகாப்பான தாய்மை இயக்கம்

safe sex practices

பாதுகாப்பான பாலுறவு முறைகள்

safe womanhood

பாதுகாப்பான பெண்மை

serial monogamy

அடுத்தடுத்த ஒற்றைமணவாழ்வு

sex ratio

பால் விகிதம்

sex role

பால் வகிபாகம்

sex tourism = sexual tourism

பாலுறவுச் சுற்றுலா

sex trafficking; sexual trafficking

கள்ளப் பாலுறவு வியாபாரம்

sex workers

பாலுறவுப் பணியாளர்கள்

sexism

பால்சார் பாரபட்சம்

sexist stereotypes

பால் படிவார்ப்புகள்

sex-selective abortion

பால்தெரிவுக் கருக்கலைப்பு

sex-specific marriage rate

பால்குறித்த மணவீதம்

sexual abuse

பாலியல் துர்ப்பிரயோகம்

sexual and gender-based violence

பாலியல், பால்மை அடிப்படையில் வன்முறை

sexual and gender-based violence against refugees, returnees and internally displaced persons

பாலியல், பால்மை அடிப்படையில் அகதிகளுக்கும் மீள்வோருக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கும் எதிரான வன்முறை

sexual assault

பாலியல் தாக்குதல்

sexual exploitation

பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல்

sexual harassment

பாலியல் தொந்தரவு

sexual health

பாலியல் உடல்நலம்

sexual molestation

பாலியல் கேடுவிளைவிப்பு

sexual preference

பாலியல் தெரிவு

sexual rights

பாலியல் உரிமைகள்

sexual slavery

பாலியல் அடிமைத்தளை

sexual violence

பாலியல் வன்முறை

sexual violence against refugees

அகதிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை

sexually active individual

பாலுறவாளர்

shared custody

பகிர்வுக் கட்டுக்காப்பு (கூட்டுக் கட்டுக்காப்புக்கு உட்பட்ட பிள்ளைகளை பெற்றோர் ஆள்மாறிக் காத்தல்)

single delivery

ஒற்றை மகப்பேறு

single parent = lone parent = sole parent

தனிப் பெற்றார்

single parenthood

தனிப் பெற்றாரியம்

single status 

மணமாகாத் தகுநிலை

singulate mean age at marriage

50 வயதுக்குமுன் மணம்புரிவோருள் மணமாகாதோர் அவ்வாறிருக்கும் சராசரிக் காலம்   

social marginalization

சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலை

social subordination

சமூகத்துக்கு அடிப்பட்ட நிலை

social support services = social welfare services

சமூகநல உதவிச் சேவைகள்

sole custody

தனிக் கட்டுக்காப்பு

son preference

ஆண்குழந்தை நாட்டம் 

spacing of pregnancies

இடைவிட்டுக் கருத்தரித்தல் 

Special Adviser on Gender Issues and Advancement of Women

பால்மைச் சர்ச்சைகள் மற்றும் முன்னேற்றம் பற்றிய சிறப்பு மதியுரைஞர்

Special Adviser on Women Workers' Questions

பெண் தொழிலாளர் பிரச்சனைகள் பற்றிய சிறப்பு மதியுரைஞர்

Special Adviser on Women, Enviroment and Development

மகளிர், சூழல், விருத்தி குறித்த சிறப்பு மதியுரைஞர்

Special Ambassador for the Elimination of Female Genital Mutilation

பெண் உறுப்புச் சிதைப்பு ஒழிப்புக்கான சிறப்புத் தூதர்

Special Envoy of the Secretary-General on Women and Development

மகளிர்-விருத்தி குறித்த ஐ. நா. செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதர்

Special Rapporteur on the situation of systematic rape, sexual slavery and slavery-like practices during periods of armed conflict, including internal conflict

உள்நாட்டுப் போராட்டம் உட்பட ஆயுதப் போராட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற திட்டமிட்ட வன்புணர்ச்சி, பாலியல் அடிமைப்பாடு மற்றும் அடிமைப்படுத்தல்  போன்ற செயல்முறைகளின் நிலைவரம் பற்றிய சிறப்பு அறிக்கையாளர்

Special Rapporteur on traditional practices affecting the health of women and the girl child

பெண்களையும் பெண்குழந்தைகளையும் பாதிக்கும் பாரம்பரிய செயல்முறைகள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர்

spermicide

விந்துகொல்லி

split custody

பிரித்த கட்டுக்காப்பு (கூட்டுக் கட்டுக்காப்புக்கு உட்பட்ட பிள்ளைகளுள் ஒருவர் பெரிதும் ஒரு பெற்றாருடனும், இன்னொருவர் பெரிதும் மறு பெற்றாருடனும் வாழும் ஏற்பாடு) 

spousal rape = marital rape

வாழ்க்கைத்துணையின் வன்புணர்ச்சி

stalking = criminal harassment

குற்றத் தொந்தரவு

State of the World's Women Report

உலக மகளிர் நிலை அறிக்கை

status of women

மகளிர் தகுநிலை

statutory rape

பராயமடையாதவருடன் வயதுவந்தவரின் வல்லுறவு

stereotyping

படிவார்ப்பு

subdermal contraceptive implant

தோலடி உட்பதிவுக் கருத்தடை

surrogate mother

பதிலித்தாய்

suttee

உடன்கட்டையேறல்

systematic rape

திட்டமிட்ட வன்புணர்ச்சி

System-wide Medium-term Plan for the Advancement of Women

பெண்களின் முன்னேற்றத்துக்கான கட்டமைப்பளாவிய இடைநடுக்காலத் திட்டம்

teenage pregnancy

பதின்மவயதுக் கர்ப்பம்; பதின்மவயதினர் கருத்தரிப்பு

telecommuting = telework

தொலைத்தொடர்பு மூலம் பணியாற்றல்

Thematic Trust Fund on Gender in Development

பால்மை விருத்தி விடய நம்பிக்கை நிதியம்

therapeutic abortion

சிகிச்சைக் கருக்கலைப்பு

time-series analysis

காலத்தொடர் பகுப்பாய்வு

token role

அடையாள வகிபாகம்

tokenism, fallacy of

அடையாளப்போலி (எ-கா: "எங்கள் தாபனத்தை ஓர் ஆணாதிக்க தாபனம் என்று கொள்ளமுடியாது. ஏனெனில் எங்கள் பாலர் பராமரிப்பாளர் ஒரு பெண்மணி")

total fertility rate

மொத்தக் கருவள வீதம்

trade-based entitlements

பண்டமாற்றுகள்

traditional birth attendant

மரபுவழி மகப்பேற்றுத் தாதி

trafficking in women

பெண்களை இரைகொள்ளும் கள்ள வியாபாரம்  

UN Decade for Women and Development

ஐ. நா. மகளிர்-விருத்தி தசாப்தம்

UN Decade for Women: Equality, Development and Peace

ஐ. நா. மகளிர் தசாப்தம்: சமத்துவம், விருத்தி, அமைதி

UN Decade for Women: Policies, Principles and Mandates

ஐ. நா. மகளிர் தசாப்தம்: கொள்கைகள், நெறிகள், ஆணைகள்

UN Focal Point for Women

ஐ. நா. மகளிர் பணி இலக்கு

undervalued job

குறைத்து மதித்த வேலை

UNHCR Guidelines on Evaluation and Care of Victims of Trauma and Violence

ஊறுபாட்டுக்கும் வன்முறைக்கும் உள்ளானவர்களைக் கணிப்பிட்டு பராமரிப்பதற்கான  ஐ. நா. அகதிகள் ஆணையாளரின் வழிமுறைகள்

unpaid contribution

ஊதியம்பெறாத பங்களிப்பு

unpaid family work

ஊதியம்பெறாத குடும்ப வேலை

unremunerated work

ஊதியமற்ற வேலை

unsafe abortion

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

unwanted child

வேண்டாப் பிள்ளை; வேண்டாத பிள்ளை

unwanted pregnancy

வேண்டாக் கருத்தரிப்பு; வேண்டாத கருத்தரிப்பு

user-centered services

பயனாளரை நோக்கிய சேவைகள்

village midwife

கிராம மகப்பேற்றுத் தாதி

violence against women

பெண்களுக்கெதிரான வன்முறை

vital records

வாழ்க்கைப் பதிவேடுகள் (எ-கா: பிறப்பு, திருமண, இறப்புச் சான்றிதழ்கள்)

vital statistics

வாழ்க்கைப் புள்ளிவிபரம் (எ-கா: பிறப்பு, திருமண, இறப்பு விபரங்கள்)

vulnerable women = at-risk women

பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பெண்கள்

wage baseline

அடிப்படைக் கூலி 

wage differentials

சம்பள வேறுபாடுகள்

weaning

பால்குடி மறப்பு (மறக்கச்செய்தல்)

wet nurse

பாலூட்டும் செவிலி

wife-burning

மனைவி எரிப்பு

withdrawal method = coitus interruptus

விந்துபாய்வு இடைவிலக்கல்

Women and Children First

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் முதன்மை இயக்கம்

women in decision making

தீர்மானம் எடுப்பதில் பெண்கள்

women in development

அபிவிருத்தித் துறையில் பெண்கள்

women in domestic service

வீட்டுப்பணிப் பெண்கள்

women in power

அதிகாரம் மிகுந்த பெண்கள்

women of reproductive age

கர்ப்ப வயதுப் பெண்கள்

Women on the Move

மகளிர் முன்னகர்வு இயக்கம்

Women's Action Agenda

மகளிர் நடவடிக்கை நிரல்

women's health counts

மகளிர் சுகாதாரப் புள்ளிவிபரம்

women's indicators and statistics database

மகளிர் குறிகாட்டிகள் மற்றும் புள்ளிவிபர தரவுத்தளம்

women's productive roles

மகளிரின் ஆக்கபூர்வமான பங்குகள்  

Women's Rights are Human Rights!

மாதரின் உரிமைகள் மாந்தரின்  உரிமைகளே! 

women's self-employment project

மகளிர் சுயதொழில் நிகழ்பாடு

women-specific project

மகளிர் குறித்த நிகழ்பாடு

workplace childcare facilities

வேலைத்தல பாலர் பராமரிப்பு வசதிகள்

World Plan of Action for the Implementation of the Objectives of the International Women's Year

சர்வதேய மகளிர் ஆண்டின் இலக்குகளை எய்துவதற்கான உலக நடவடிக்கைத் திட்டம்

Zero Tolerance Campaign against Trafficking of Women

மகளிரை இரைகொள்ளும் கள்ள வியாபாரத்தை இம்மியும் சகியா இயக்கம்

 

No comments:

Post a Comment