Search This Blog

ENGLISH-TAMIL PHRASES (AK-AX)


akinetic mutism

பேச்சுமூச்சின்மை

alcohol abuse

மதுபான துர்ப்பிரயோகம்; மட்டுமீறிய மதுபான நுகர்வு

alcohol dependence

மதுநுகர்வில் தங்கியிருப்பு 

alcohol intoxication

மதுவெறி

alcoholism among teenagers

பதின்ம வயதினர் மது நுகர்வுக்கு அடிமைப்படுகை

alcohol misuse disorder

மதுபான துர்ப்பிரயோகக் கோளாறு

Alcohol Use Disorders Identification Test (AUDIT)

மதுவகை நுகர்வுக் கோளாறுகளை இனங் காணும் தேர்வு

alert, be

எச்சரிக்கையாய் இரு

alert, on

தயார்நிலையில் 

alert the police

காவல்துறைக்கு தகவல் கொடு

Alexandrine Parakeet

பெரிய பச்சைக்கிளி

algal bloom

அல்கா மலர்ச்சி

algophobia = fear of pain

நோவெருட்சி

algorithmic amplification

நிரலி ஊடான சொற்பெருக்கு

algorithmic distribution

நிரலி ஊடான விநியோகம்

algorithms in modern life

நவீன வாழ்வில் நிரலிகள்

alias Thalaiyaari, Murugavel Mugundan

தலையாரி எனப்படும் முருகவேள் முகுந்தன்

alibi for the robbery

கொள்ளை நிகழ்கையில் வேறிடத்தில் நின்றதற்கான சான்று

alienated state land

பராதீனப்படுத்திய அரச காணி

alienated youth

புறங்கட்டப்பட்ட இளையோர்

alienate state land

அரச காணியைப் பராதீனப்படுத்து

alienate youth

இளையோரைப் புறங்கட்டு

alienation (of property)

(சொத்துப்) பராதீனம்  

alienation, social

சமூகத்திலிருந்து புறத்திப் டுகை (ஒதுக்கப்படுகை)

alien culture

வேற்றுப் பண்பாடு; புறத்திப் பண்பாடு; அந்நியப்    பண்பாடு                                             

aliens in Britain

பிரித்தானியாவில் உள்ள வெளிநாட்டவர்கள்

aliens in space? Are there

விண்வெளியில் வேற்றுலகப் பிறவிகள் உள்ளனவா?

alien to our policy, Revenge is

பழிவாங்கல் எமது கொள்கைக்குப் புறம்பானது

alimentary canal

உணவுக் கால்வாய்

alimony, pay

பிரிமனைப்படி செலுத்து

alimony pendente lite

வழக்காடுகால பிரிமனைப்படி

allegations of corruption

ஊழல் குற்றச்சாட்டுக்கள்

alleged theft

புரியப்பட்டதாக கூறப்படும் திருட்டு

allegiance, oath of

விசுவாசச் சத்தியம்

allegory, a political

அரசியல் உருவகப் படைப்பு

allergies and sensitivities

ஒவ்வாமைகளும் கூருணர்வுகளும்

alliance, political

அரசியல் நட்புறவு

allied health professionals

துணைச் சுகாதாரத் துறைஞர்கள் 


(எ-கா: உடற்சிகிச்சையாளர், உணவியலர், கதிரியலர்)

allocated mobility aid space

நடமாட்ட துணைக்கருவிகள்

allocation of funds

நிதிய ஒதுக்கீடு

alloplastic adaptation

இசைவித்தொழுகல்

allotment of shares

பங்கு ஒதுக்கீடு

allowable catch

மீன்பிடி வரம்பு

allow a claim

கோரிக்கையை அனுமதி

allow an appeal

மேன்முறையீட்டை அனுமதி

all-risk policy = all-perils policy

முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம்

allusion to racism, an

இனவாதம் பற்றிய மறை குறிப்பு; இனவாதத்தை மறைவாகக் குறிப்பிடுகை

ally, an

நட்பாளர்; நட்புநாடு

almshouse, run an

ஆதுல(ர்)சாலை நடத்து

alpine area

உயர்மலைச்சாரல்

Alpine Swift

மலை உழவாரன்

altcoin = bitcoin = cryptocurrency

மின்மநாணயம்

alternate emplacement

மாற்று நிலைக்களம்

alternate level of care

மாற்றுப் பராமரிப்பு மட்டம்

alternative communication devices

மாற்றுத் தொடர்பாடல் சாதனங்கள்

alternative dispute resolution

பிணக்கிற்கு மாற்றுத் தீர்வு

alternative explanation

மாற்று விளக்கம்

alternative facts

போலி விவரங்கள்

alternative medicine

மாற்று மருத்துவம்

alternative resolution

மாற்றுத் தீர்வு

Alternative Right = Alt-Right

மாற்று வலதுசாரித்துவம்

alternatives to detention

தடுத்துவைப்புக்கு மாற்றுவழிகள்

altius non tollendi

உயர்த்தல் மட்டுப்படுத்தும் உரிமை

altius tollendi

உயர்த்தல் உரிமை

Alt-Right = Alternative Right

மாற்று வலதுசாரித்துவம்

altruism, meaning of

பொதுநலநெறியின் பொருள்

aluminum foil

அலுமினியச் சருகு

alumna = female graduate

பட்டதாரி மகளிர்; முன்னாள் மாணவி

alumni = graduates

பட்டதாரிகள்; முன்னாள் மாணவர்கள் 

alumnus = graduate

பட்டதாரி; முன்னாள் மாணவர்

Alzheimer's disease

மூளைத்தளர்ச்சி நோய்

amalgamation of provinces

மாகாணங்களின் ஒன்றிணைப்பு

amateur athletes

பொழுதுபோக்கு மெய்வலர்கள்

amateur dramatics

விழைஞர் நாடகவியல் 

amateurs and professionals

விழைஞர்களும் துறைஞர்களும்

Ambassador-Designate

சுட்டியுரைத்த தூதர்

Ambassador Extraordinary and Plenipotentiary

அதிவிசேட முழுவலுத் தூதர்

ambient concentration of pollutants

சுற்றாடல் மாசூட்டிகளின் செறிவு

ambiguity of language, The broker's

இருபொருள்படும் தரகரின் மொழி

ambiguous statement

இருபொருள் (பல்பொருள்) படும் கூற்று; தெளிவற்ற கூற்று

ambivalence, avoid

இருவுளப்போக்கினை தவிர்

ambivalent attitude

இருவுளப்பான்மை

ambulance

நோயாளர் ஊர்தி

ambulatory patient

நடமாடும் நோயாளி

ambush journalism

(ஊடகரின்) அதிரடி வினாத்தொடுப்பு

ambush

பதுங்கி (பதிவிருந்து) தாக்கு(தல்)

amendment to agreement

உடன்படிக்கைக்கான திருத்தம்

amenorrhoea, suffer

மாதவிலக்கின்மையால் (கர்ப்பசூலையால்) வருந்து

American Mission

அமெரிக்க ஆதீனம்

amicable settlement

நட்பிணக்கம்

amicus curiae = friend of the court

நீதிமன்றின் நட்பாளர்

ammunition, export of

வெடிகணைகளின் ஏற்றுமதி

amnesia = loss of memory

நினைவிழப்பு; நினைவீனம்

amnesty, grant

மன்னிப்பு வழங்கு

amok, run

தறிகெட்டோடு

amortization schedule

கடன்தீர்ப்பு அட்டவணை

amusement park

உவகைக் கோட்டம்

amusement tax

உவகை வரி

anaclitic depression

சேயுளவழுத்தம்; தாயிழந்த சேயின் உளவழுத்தம்

anadromous fish

நன்னீர் நாடும் கடல்மீன்

anaerobic bacteria

உயிர்வளி நாடாத பற்றுயிரிகள்

anaerobic biological treatment

உயிர்வளி நாடாத உயிர்மவழிச் சுத்திகரிப்பு

anaerobic decomposition

உயிர்வளிநாடா உயிர்மவழி உருக்குலைவு

anaerobic respiration

உயிர்வளி நாடாத சுவாசம்

anal eroticism

குத மதனம்

anal examination

குதவழிப் பரிசோதனை

analogical arguments by properties

தன்மை ஒப்புநோக்கு வாதங்கள்

analogical arguments by relations

உறவு ஒப்புநோக்கு வாதங்கள்

analogical reasoning

ஒப்புநோக்கு நியாயம்

analogue case

ஒப்புத்தெரி பொருள்

anal stage

குதவுணர்வுக் கட்டம்

analysis, in the final

கூட்டிக் கழித்துப் பார்த்தால்

analysis phase

பகுப்பாய்வுக் கட்டம்

analytic psychology

பகுப்புளவியல்; பகுப்பாய்வு உளவியல்

analytic statement

பகுபடு கூற்று

anankastic disorder = obsessive-compulsive disorder  

ஒன்றல்-உந்தல் கோளாறு

anarchy lasted a month, the

களேவரம் ஒரு மாதம் நீடித்தது

anarchy, concept of 

ஆட்சியறவுக் கருதுபொருள் 

 

(பலவந்த ஆட்சிவகை எதற்கும் எதிரான கோட்பாடு; சமுதாயத்தை ஆள்வதற்கு கையாளப்படும் வலுவின் உருவமாய் விளங்கும் அரசுக்கு எதிரானது; பெரும்பான்மையோரின் ஆட்சி என்று பொருள்படு வதை விடுத்து, அனைவரின் இசைவையும் ஈட்டிய ஆட்சி என்று பொருள்படுவது. அத்துணை சுதந்திரத்தை ஈயும் ஆட்சியையே ஆட்சியறவு வாதிகளால்  சகிக்கமுடியும் - Bertrand Russell)

ancillary activity

துணைச் செயற்பாடு

ancillary motion

துணைநிலை முன்மொழிவு

anecdotal case study

அனுபவத்துணுக்கு வாரியான விடய ஆய்வு 

anecdote, a funny

வேடிக்கைத் துணுக்கு

anger management

சீற்றம் தணிப்பு

angina pectoris

நெஞ்சுத் தெண்டல்

animal cognition

விலங்கின அறிதிறன்

animo furandi

திருட்டு எண்ணத்துடன்

animo revocandi

அழிக்கும் எண்ணத்துடன்

animus iniuriandi

அவமானப்படுத்தும் எண்ணம்

animus manendi

வதியும் எண்ணம்

annual percentage

ஆண்டுச் சதவீதம்

annual percentage

ஆண்டு விழுக்காடு; ஆண்டுச் சதவீதம்

annual report

ஆண்டறிக்கை

annual return

ஆண்டு விபரத்திரட்டு 

annulment of marriage

திருமண நீக்கம்

anomalous statement

பிறழ் கூற்று

anomic aphasia = amnestic aphasia

மொழியசதி

anorexia nervosa

ஊண்வெருட்சி

anorgasmia

புணர்வுச்சம் எய்தாமை

antecedents, the politician's

அரசியல்வாதியின் பின்புலம்

antediluvian period

உலகளாவிய பிரளயத்துக்கு முற்பட்ட

antenatal (prenatal) care

கர்ப்பகால பராமரிப்பு

antenatal card

கர்ப்பகால அட்டை

antenuptial (pre-nuptial) settlement

மணமுன் இணக்கம்

anthology of poems

கவிதைத் தொகுதி; கவிதைத் திரட்டு

antiaircraft artillery intelligence service

வான்கல எதிர்ப்பு பீரங்கி உளவுச் சேவை

anti-Black racism

கருப்பினக் காழ்ப்பு (எதிர்ப்பு; விரோதம்)

anti-bullying law

அடாவடி தடுப்புச் சட்டம்

anticipatory anxiety

எதிர்பார் பதைப்பு

anticipatory bail

முன்பிணை

anticipatory coping

முன்கூட்டியே எதிர்கொள்ளல்

Anti-Corruption Committee Secretariat

ஊழல் தடுப்புக் குழு செயலகம்

antidepressant medication

உளவழுத்தம் நீக்கி மருந்துவகை 

Anti-Doping Agency

போதைமருந்து நுகர்வு தடுப்பு முகமையகம்

antidote to secession, Devolution is an

அதிகாரப் பரவலாக்கம் பிரிவினையை ஒடுக்கும்

Antifa = Anti-Fascism

பாசிச எதிர்ப்பியக்கம்

antipsychotic medication

சித்தப்பிரமை நீக்கி மருந்துவகை

anti-racism

இனவாத எதிர்ப்பு

anti-racist education

இனவாத-எதிர்ப்புக் கல்வி

antirealism

மெய்ம்மைமறுப்பு வாதம்

anti-Semitism

யூத-எதிர்ப்பு வாதம்

antiseptic

காயநச்சொடுக்கி

antisocial personality disorder

சமூகவிரோத ஆளுமைக் கோளாறு

anti tank ditch

தாங்கி எதிர்ப்புக் கிடங்கு

anti tank mine

தாங்கி எதிர்ப்புக் கண்ணி

anti tank minefield

தாங்கி எதிர்ப்புக் கண்ணிவயல்

anti tank weapons

தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்

anxiety, depression, nervousness, stress, tension

பதைப்பு, உளவழுத்தம், படபடப்பு, உளைச்சல், பதற்றம்

anxiety and tension     

பதைப்பும் பதற்றமும்

anxiety avoidant personality disorder

பதைப்புத் தவிர்ப்பு ஆளுமைக் கோளாறு

anxiety disorder

பதைப்புக் கோளாறு

anxiolytic medication

பதைப்பு நீக்கி மருந்துவகை

anxious, don't get

பதைக்க வேண்டாம்

apartment building

அடுக்குமாடிக் கட்டிடம்

apartment unit

அடுக்குமாடிக் கூடம்

apathy, voter

வாக்காளரின் அசண்டை

Apex Court = Supreme Court

உச்ச நீதிமன்று

apostate state

நெறிதுறந்த அரசு

a posteriori knowledge = knowledge   from what comes after = inductive knowledge = empirical knowledge

பின்விளைவறிவு; தொகுத்தறிவு; பட்டறிவு 

apotheosis of human rights

மனித உரிமைகளை ஏற்றிப்போற்றுகை

apparent (ostensible) authority

வெளித்தோற்ற அதிகாரம்

apparent motion

தோற்ற நகர்வு; நகரும் தோற்றம்

appeal case

மேன்முறையீட்டு வழக்கு

appearance notice

வெளிப்படல் (தோற்றல்) அறிவித்தல்

appearance of bias

பக்கச்சார்பு காணப்படல்

appear in court

நீதிமன்றில் வெளிப்படு (தோன்று)

appellate court

மேன்முறையீட்டு நீதிமன்று

appellative verb

குறிப்புவினை

applicable, if

ஏற்புடையதாயின்

applicable, where

ஏற்புடையவிடத்து

applicable to businessmen

வணிகர்களுக்கு ஏற்புடைய

apply in person

நேரில் விண்ணப்பி

apply economic principles

பொருளாதார நெறிகளை பயன்படுத்து

apply for a job

வேலைக்கு விண்ணப்பி

apply this cream to your face

இந்தக் களியை உன் முகத்தில் பூசு

apply to the court

நீதிமன்றிடம் விண்ணப்பி

apply to everybody 

அனைவருக்கும் ஏற்புடையதாகு

appliance method

சாதன முறை

appraisal clause

கணிப்புக் கூற்று

appraised value

கணித்த பெறுமதி

appreciation, applaud in

மெச்சிக் கைதட்டு

appreciation, take note with

மெச்சிக் கவனத்தில் கொள்

appreciation of property value

ஆதனப் பெறுமதி தேறுமதி

appreciation of the book

நூல் மதிப்புரை

apprehend the suspect

சந்தேகநபரைக் கைதுசெய்

apprehension of the suspect

சந்தேகநபரின் கைது

appropriate action

ஏற்ற நடவடிக்கை

appropriate public funds

பொது நிதியைக் கையாடு

appropriate technology

ஏற்ற தொழினுட்பவியல்

a priori knowledge = knowledge from what is before = deductive knowledge = inferential knowledge

முன்னேதறிவு = உய்த்தறிவு = அனுமான அறிவு 

aptitude test

உளச்சார்புத் தேர்வு

arbitral tribunal

நடுத்தீர்ப்பாயம்

arbitrary detention

விதிமுறையற்ற தடுத்துவைப்பு

arbitrary inference

ஆதாரமற்ற அனுமானம்

arbitration board

நடுத்தீர்ப்புச் சபை

archaic word

வழக்கொழிந்த சொல்

archetype of compassion

கருணையின் திருவுரு

archetype of good governance, an

நல்லாட்சிக்கொரு முன்மாதிரி

archetypes in literature

இலக்கியத்தில் தொல்மனப்படிமங்கள் (ஆழ்மனப்படிமங்கள்)

architectural barriers

கட்டுமானத் தடங்கல்கள்

archival fonds

தோற்றுவாய் வாரியான ஆவணத்திரட்டுகள்

archival science

ஆவணக்குவையியல்

archives, historical

வரலாற்று ஆவணக்குவைகள்

Archives of India, National

இந்திய தேசிய ஆவணக்குவை(யகம்)

archiving, digital

எண்மக் குவையீடு

archiving, document

ஆவணக் குவையீடு

archivists and documentarists

ஆவணக்குவைஞர்களும் ஆவணவியலர்களும்

area of destination

சேரிடம் 

area of origin

தோற்றிடம்

area sources of pollution

உள்ளூர் மாசு மூலங்கள்

areca nut

பாக்கு

areca palm

கமுகு

arena, sports

விளையாட்டரங்கு

Are you guilty or not guilty?

நீர் குற்றவாளியா, அல்லவா?

argumentative essay

வாதக் கட்டுரை

argument to the best explanation

சிறந்த விளக்க வாதம்

argumentum ad selenium = argument from silence

சான்றின்மை வாதம்

arid zone

வறண்ட வலயம்

arithmetic growth

எண்ணிக்கை வளர்ச்சி 

Armageddon, the risk of

அறுதியிறுதிப்போர் மூளும் ஆபத்து

armaments, imports of

பேராயுதங்களின் இறக்குமதி

armchair criticism

திண்ணைத் திறனாய்வு

armed ship = man of war

படைக் கப்பல்

armoured car

கவச ஊர்தி

armoured force

கவசப் படை

arms control

படைக்கலக் கட்டுப்பாடு; ஆயுதக் கட்டுப்பாடு

arms race

படைக்கலப் போட்டி; ஆயுதப் போட்டி

army attaché

தரைப்படைத் தூதிணைஞர்

army of occupation

ஆக்கிரமிப்பு படை

army regulations

தரைப்படை ஒழுங்குவிதிகள்

arraignment of the accused

குற்றஞ்சாட்டப்படவரை முன்னிறுத்தி

arraign the accused

குற்றஞ்சாட்டப்படவரை முன்னிறுத்த 

arranged marriage

பேச்சுத் திருமணம்

arrears, amount in

நிலுவையில் உள்ள தொகை

arrest memo

கைதுமடல்

arrest warrant

கைதாணை; பிடியாணை

arrow grass

ஊசிப்புல்

arsenal, China's

சீனாவின் ஆயுதக்களம்

arson, the crime of

தீவைப்புக் குற்றம்

arteries and veins

நாடி, நாளங்கள்

Art for art's sake = l'art pour l'art 

(Victor Cousin)

கலை கலைக்காகவே 

article 10 of the constitution

அரசியல்யாப்பின் உறுப்புரை 10

article about leadership, an

தலைமைத்துவம் பற்றிய கட்டுரை

articled clerk = articling student = student-at-law

பொருந்திப்பயிலும் சட்ட மாணவர்

articulation, art of

அறுத்துரைக்கும் கலை

artificial creativity = computational creativity

கணியப் படைப்பாற்றல்

artificial groundwater recharge

செயற்கைமுறைத் தரைநீர் மீள்நிரப்பல்

artificial insemination

செயற்கை விந்தீடு

artificial intelligence

செயற்கை நுண்மதி

artificial obstacles

செயற்கைத் தடங்கல்கள்

artificial watercourse

செயற்கை நீரோடை

artificial water impoundment

செயற்கைமுறை நீர் மறிப்பு

artillery, inspect

பீரங்கித்தொகுதியைப் பார்வையிடு

artillery barrage

பீரங்கிப் பல்லவேட்டு

artillery position

பீரங்கி நிலை

artist's impression, an

ஓவியரின் வரைபடம்

ascribed characteristics

பிறவிக் குணவியல்புகள்

ascribed status

பிறவித் தகுநிலை

aseptic practices

கிருமித்தடுப்பு முறைகள்

ash pumpkin = ash gourd

நீற்றுப்பூசணி

ashy-crowned sparrow lark

சாம்பல்தலை வானம்பாடி

ashy drongo

கரிச்சான்

ashy prinia

சாம்பல் கதிர்க்குருவி

ashy woodswallow

சாம்பல் தகைவிலான்  

Asian fairy bluebird

நீலச்சிட்டு  

Asian koel

கோகிலம்

Asian open-billed stork

நத்தை குத்தி நாரை

Asian palm swift

பனை உழவாரன்

Asian paradise flycatcher

அரசவால் ஈப்பிடிப்பான்

asides and soliloquies

திரைமைறை உரையும்

நெஞ்சொடு கிளத்தலும்

as of right

உரிமைப்படி

asparagus

சாத்துவாரி; தண்ணீர்விட்டான்

aspersions on, cast

அவதூறு (களங்கம்) கற்பி

assault fire

தாக்கு வேட்டு

assembly, constitutional

அரசியல்யாப்பு மன்றம்

assembly area

ஒருமிப்பு மையம்

assessed value

கணிப்பிட்ட பெறுமதி

assessment of the cost

செலவுக் கணிப்பீடு

assessment order

கணிப்பீட்டுக் கட்டளை

assessor, an

கணிப்பீட்டாளர்

assess the cost

செலவைக் கணிப்பிடு

asset recovery

சொத்து மீட்பு

asset valuation

சொத்து மதிப்பீடு

assigner = assignor

உரித்திடுநர்; உரித்தளிப்பவர்

assignment court

சாட்டுதல் நீதிமன்று

assignment in Singapore, on

சிங்கப்பூரில் பணி மேற்கொண்டு

assimilate new ideas

புதிய கருத்துகளை உள்வாங்கு

assimilation of immigrants into European culture

ஐரோப்பிய பண்பாட்டுடன் குடிவரவாளர்கள் ஒருங்கிணைவு (ஒருங்கிணைப்பு)

Assistance to and Protection of Victims of Crime and Witnesses Act

குற்றத்தால் பாதிக்கப்  பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் உதவியும் பாதுகாப்பும் 

assistant attaché

உதவித் தூதிணைஞர்

Assistant Superintendent of Police (ASP)

உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர்

assisted death = doctor-assisted death = physician-assisted death

மருத்துவ உதவியுடன் இறப்பு

assisted dying = doctor-assisted dying = physician-assisted dying

மருத்துவ உதவியுடன் இறத்தல்

assisted living facility

வாழ்வுதவி நிலையம்

assistive technology

திறனுதவித் தொழினுட்பவியல்

assistive tools

திறனுதவிக் கருவிகள்

assize court

பருவ நீதிமன்று

assumed liability

ஏற்றுக்கொண்ட பொறுப்பு

assumed name = pseudonym

புனைபெயர்

assume duties

கடமையை ஏற்றுக்கொள்

assume that we are strangers, Let's

நாங்கள் முன்பின் தெரியாதவர்கள் என்று எடுத்துக்கொள்வோம் (வைத்துக்கொள்வோம்)

assumption, a valid

வலிதான எடுகோள்

astonishment, stare in

மலைத்து (திகைத்து) உற்றுநோக்கு

asylum seeker

தஞ்சக் கோரிக்கையாளர்

asymmetrical federalism

சமசீரற்ற இணைப்பாட்சி

asymptomatic infection

நோய்க்குறியற்ற தொற்று

at (the) bar

நீதிமன்றின் முன்னிலையில் உள்ள

at a premium

மிகை விலையில்; மிகுந்த செலவில்

ataxia

தசைநார் இசையாமை

at-birth death rate

பிறக்கையில் இறப்பு வீதம்

atherosclerosis

நாடி-உட்படிவு

athlete, an

மெய்வலர்

athletic competition

மெய்வலப் போட்டி

athletic field

மெய்வலக் களம்

at large, criminals unlawfully

சட்டவிரோதமான முறையில் தடுப்புக்காவலுக்கு மீளாதிருக்கும் குற்றவாளிகள்

at large, the people

மக்கள் அனைவரும்

at large, the robbers

அகப்படாத கொள்ளையர்கள்

at law = in law

சட்டப்படி

atmospheric absorption

வளிமண்டல அகத்துறிஞ்சல்

atmospheric assimilation

வளிமண்டல உட்செறிவு

atmospheric dispersion

வளிமண்டல உட்பரம்பல்

atmospheric dispersion

வளிமண்டலத்துள் பரம்பல்

atomic energy

அணு வலு

atomic statement

அணுக் கூற்று 

(எ-கா: பனை ஒரு மரம்)

atomic wastes

அணுக் கழிவுகள்

at-risk women = women at risk = vulnerable women

நலிபடவல்ல (பாதிக்கப்படவல்ல) பெண்கள்

attached house

இணைவீடு

attachment, an email

மின்மடல் இணைப்பு

attachment to the child

பிள்ளைப்பற்று

attainment target

எய்தல் இலக்கு

attempted murder

எத்தனித்த கொலை; கொலை எத்தனம் (எத்தனிப்பு)

attention deficit disorder

அவதானக் குறைபாட்டுக் கோளாறு

attention deficit hyperactivity disorder

அவதானக் குறைபாட்டு மிகைச்செயற்பாட்டுக் கோளாறு

attention span

புலன்செலுத்தும் (அவதானிக்கும்) வேளை

attest a will

இறப்பாவணத்தை அத்தாட்சிப்படுத்து

attest to their determination

அவர்களின் திடசித்தத்துக்கு சான்றுபகரு

attitudinal barriers

உளப்பான்மைத் தடங்கல்கள்

attitudinal discrimination

உளப்பான்மைப் பாரபட்சம்

attorney = lawyer

சட்டத்தரணி; சட்டவாளர்

Attorney General

தலைமைச் சட்டவாளர்  

attorney in fact

தத்துவம்பெற்ற சட்டவாளர்

attributes of leadership

தலைமைத்துவப் பண்புகள்

attribute success to hard work

வெற்றிக்கு கடுமுயற்சியைக் காரணம்காட்டு

attribution theory

கற்பிக்கைக் கோட்பாடு

attrition, war of

கடுநெடும் போர்

auction, at

ஏலத்தில்

auction strategy

ஏல உபாயம்

audi alteram partem = hear the other side

மறுதரப்பைச் செவிமடு

audible thoughts

ஒலிக்கும் எண்ணங்கள்

audience, attract the

அவையை (அவையோரை) கவரு

audience design

அவையோர் வடிவமைப்பு

audio clip

ஒலிக்கீற்று

Auditor General

தலைமைக் கணக்காய்வாளர்

auditorium, art

கலை அவைக்கூடம்

auditory hallucination = paracusia

செவியொலிப் பிரமை

auditory test = hearing test

செவிப்புல சோதனை 

audit report

கணக்காய்வு அறிக்கை

augmentative communication devices

தொடர்பாடல் மேம்படுத்தும்  சாதனங்கள்

aural impairment

செவிப்புலன் குறைபாடு

Australian Open

ஆஸ்திரேலிய வரிப்பாந்தாட்ட வாகைப்போட்டி

authenticated document

மெய்யுறுதி ஆவணம்

authentic document = genuine document

மெய்யாவணம்

authenticity of the document

ஆவணத்தின் மெய்யுடைமை

authoring tool

ஆக்க சாதனம்

authoritarianism, autocracy, despotism, dictatorship

எதேச்சாதிகாரம், தனியாட்சி, கடுங்கோன்மை, சர்வாதிகாரம்

authoritarians, autocrats, despots, dictators

எதேச்சாதிகாரிகள், தனியாட்சியாளர்கள், கடுங்கோலர், சர்வாதிகாரிகள்

authoritative document

அதிகாரபூர்வ ஆவணம்

authority, competent

தகுதிவாய்ந்த அதிகாரி

authority on law

சட்டவியல் விற்பன்னர்

authority on Tamil classics, an

தமிழ்ச் செவ்வியல் துறைபோனவர்

authority on Tamil classics

தமிழ்ச் செவ்வியல் பாண்டித்தியம்

authority to enforce

நடைமுறைப்படுத்தும் அதிகாரம்

authorize to enforce the act

சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமளி

autobiography of Iyer

ஐயரின் சுயவரலாறு

autochthonous people = indigenous people

சுதேச மக்கள்

autochthony, constitutional

சுதேச அரசியல்யாப்பு

autocracy in this country

இந்த நாட்டில் தனியாளாட்சி

autocrat, act as an

தனியாட்சியாளராகச் செயற்படு

automated teller machine = ATM

தன்னியக்க வங்கிப் பொறி

automatic funds transfer

தன்னிகழ் நிதிய மாற்றீடு

automatic process

தன்னிகழ் படிமுறை

automobile air pollution

ஊர்தி வளி மாசு

automobile insurance

ஊர்திக் காப்புறுதி

automobile line

ஊர்திக் காப்புறுதி வகை

autonomous car

தானூர்திக்கார்

autonomous province

தன்னாட்சி மாகாணம்

autonomous vehicle

தானூர்தி

autonomy provincial

மாகாணத் தன்னாட்சி 

autoplastic adaptation

இசைந்தொழுகல்

autopsy = post mortem examination

பிரேத பரிசோதனை

autotopagnosia

தன்னங்க உணர்வீனம்

autrefois acquit

முன் விடுதலையானார் என்ற வாதம்

autrefois convict

முன் குற்றத்தீர்ப்புக்கு உள்ளானார் என்ற வாதம்

auxiliary nurse midwife

துணை மகப்பேற்றுச் செவிலி

auxiliary verb

துணை வினை

avant-garde artists

முன்னோடிக் கலைஞர்கள்

avenge yourself on those who humiliated you

உன்னை மானம் கெடுத்தியவர்களை பழிவாங்கு

avenge your father's murder

உன் பிதாவின் கொலைக்கு வஞ்சம் தீர் (பழிவாங்கு)

average daily balance

அன்றாட சராசரி மீதி

average household size

சராசரி வீட்டார் தொகை

average parity = children ever born = mean number of children ever born per woman

ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை

average price

சராசரி விலை

average prudent person

சராசரி அறிவுள்ள ஆள்; சராசரி அறிவுள்ளவர்

average tax rate

சராசரி வரி வீதம்

aversion therapy

தவிர்ப்புச் சிகிச்சை

averting a crisis

நெருக்கடி தவிர்த்தல்

aviation and navigation

வான்செலவும் கடற்செலவும்

avocado = butter-fruit

வெண்ணெய்ப் பழம்

avoidance costs

தவிர்ப்புச் செலவு

avoidance of risk

ஆபத்து தவிர்ப்பு

awards gala

விருது விழா

award-winning translation

விருதுவென்ற மொழிபெயர்ப்பு

awareness and sensitivity

விழிப்புணர்வும் கூருணர்வும்

A World Free of Violence against Women

மகளிருக்கெதிரான             வன்முறையற்ற உலகம்

axiom = axiomatic truth = self evident truth

 

Two parallel lines never intersect each other.

மெய்த்தளம் = வெளிப்படை உண்மை 

 

எ+கா: இரு சமாந்தரக் கோடுகள் ஒன்றை ஒன்று சந்திக்கா

No comments:

Post a Comment