| A World Free of Violence against Women | மகளிருக்கெதிரான வன்முறையற்ற உலகம் |
| abortifacient | கருக்கலைப்பு மருந்து |
| abortion rate | கருக்கலைப்பு வீதம் |
| abortion ratio | கருக்கலைப்பு விகிதம் |
| access to abortion | கருக்கலைப்பு வசதி |
| affirmative action | பாரபட்சத்தை ஈடுசெய்யும் நடவடிக்கை |
| age at marriage | மணம்புரி வயது |
| age at next birthday | அடுத்த பிறந்தநாள் வயது |
| age at retirement | ஓய்வுபெறுகை வயது |
| age dependency ratio | வயதுவாரித் தங்கிவாழ்வு விகிதம் |
| age of consent = age of protection | பாலுறவுக்கு இசையும் வயது |
| agenda for gender equality | பால்மைச் சமத்துவ நிகழ்ச்சிநிரல் |
| age-specific fertility rate | வயது குறித்த கருவள வீதம் |
| alimony | பிரிமனைப்படி |
| allied health professionals | துணைச் சுகாதாரத் துறைஞர்கள் (எ-கா: உடற்சிகிச்சையாளர், உணவியலர், கதிரியலர்) |
| amenorrhea | மாதவிலக்கின்மை = கர்ப்பசூலை |
| anovulation | சூலறவு |
| antenatal card | கர்ப்பகால அட்டை |
| appliance method | சாதன முறை |
| arranged marriage | பேச்சுத் திருமணம் |
| at-birth death rate | பிறக்கையில் இறப்பு வீதம் |
| at-risk women = women at risk = vulnerable women | நலிபடவல்ல (பாதிக்கப்படவல்ல) பெண்கள் |
| attitudinal discrimination | உளப்பான்மைப் பாரபட்சம் |
| auxiliary nurse midwife | துணை மகப்பேற்றுச் செவிலி |
| average parity = children ever born = mean number of children ever born per woman | ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை |
| baby blues =postnatal depression | மகப்பேற்றின்பின் உளச்சோர்வு |
| baby-friendly hospital | பாலூட்டுநேய மருத்துவமனை |
| baby-led weaning | குழந்தை தானே உண்ணப் பழகல் |
| balanced portrayal of women | பெண்களை ஒப்பளவாகச் சித்தரித்தல் |
| barrier methods | கருத்தடை முறைகள் |
| battered wives | தாக்குண்ட மனைவியர் |
| battered women | தாக்குண்ட பெண்கள் |
| battered women's shelter = hostel | தாக்குண்ட மகளிர் மனை = மகளிர்மனை |
| battery | தாக்குதல் |
| below replacement fertility | ஈடுசெய் பிறப்பின் தாழ்ச்சி வீதம் |
| benefits | உதவிப்படிகள் |
| better health for women and children through family planning | குடும்பத் திட்டம் ஊடாக பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் நலவாழ்வு |
| bias | பக்கச்சார்பு |
| biological family | குருதி உறவுக் குடும்பம் |
| biological parent = blood parent | குருதிப் பெற்றார் |
| birth attendant | மகப்பேற்றுத் தாதியாளர் |
| birth control = fertility regulation | குடும்பக் கட்டுப்பாடு |
| birth grant | மகப்பேற்று மானியம் |
| birth interval = birth spacing = child spacing | பிறப்பிடைக்காலம் |
| birth kit | மகப்பேற்றுப் பொட்டலம் |
| birth postponement | கருத்தரிப்பை பின்போடல் |
| birth rate | பிறப்பு வீதம் |
| birth timing | கர்ப்பகால ஒழுங்கு |
| birth weight | பிறப்பெடை; பிறந்த குழந்தையின் எடை |
| birthright | பிறப்புரிமை |
| bonded labour | குடிமைத் தொழில் |
| bottle feeding | போச்சிப்பாலூட்டல் |
| breadwinner | உழைப்பாளர் |
| breast cancer | மார்பகப் புற்றுநோய் |
| breast-feeding | தாய்ப்பாலூட்டல் |
| breast-milk substitutes | தாய்ப்பாலுக்குப் பதிலீடுகள் |
| caregiver | பராமரிப்பாளர் |
| casework | ஆள்நிலை ஆய்வு |
| casual workers | அமயப் பணியாளர்கள் |
| cervical cancer | கருப்பைமுகைப் புற்றுநோய |
| cervical cap | கருத்தடை மூடி |
| challenges for meeting women's rights | பெண்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில் எழும் சவால்கள் |
| child bearing | மகப்பேறு |
| child born out of wedlock | மணம்புரியாத பெற்றோரின் பிள்ளை |
| child bride | பால மணமகள் |
| child care = day care | பாலர் பராமரிப்பு |
| child marriage | பாலர் மணம் |
| child prostitutes | விபசாரச் சிறார்; விபசாரப் பாலர் |
| child prostitution | சிறார் (பாலர்) விபசாரம் |
| child spacing | பிறப்பிடைக்காலம் |
| child support | சிறார் (பாலர்) உதவிப்படி |
| child-bearing age | மகப்பேற்று வயது |
| child-bearing period | மகப்பேற்றுக் காலப்பகுதி |
| child-care facilities | சிறார் (பாலர்) பராமரிப்பு வசதிகள் |
| children ever born = average parity = mean number of children ever born per woman | ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை |
| civil marriage | சடங்கற்ற திருமணம் |
| cohabitation | கூடிவாழ்வு |
| cohort fecundability | சாரிகளின் கர்ப்பவாய்ப்பு |
| cohorts | சாரிகள் |
| coitus interruptus = withdrawal method | விந்துபாய்வு இடைவிலக்கல் |
| commercial sex trade =sex trade | பாலுறவு வியாபாரம் |
| commercial sexual exploitation | பாலுறவு வியாபாரத்துக்குப் பயன்படுத்தல் |
| commercialized sex | வியாபாரமயப்பட்ட பாலுறவு |
| Commission on the Status of Women | மகளிர் தகுநிலை ஆணையம் |
| Committee on the Elimination of Discrimination against Women | பெண்களுக்கெதிரான பாரபட்சம் ஒழிப்புக் குழு |
| common-law marriage | வழமை மணவாழ்வு (சட்டப்பதிவற்றதாயினும் செல்லுபடியாகும் மணவாழ்வு) |
| common-law relationship | வழமை வாழ்வுறவு (இருவருள் ஒருவர் உறவை துண்டித்தவுடன் ஒழிந்துவிடும் கூடிவாழ்வு) |
| community kitchen | கூட்டுச் சமையற்களம் |
| community-based distribution of contraceptives | சமூகநிலைக் கருத்தடைப்பொருள் விநியோகம் |
| community-based organizations | சமூகநிலை அமைப்புகள் |
| companionate marriage | துணைவாழ்வு (ஒருவருக்கொருவர் துணைநிற்கும் வாழ்வு) |
| comparable worth | ஒப்பளவுப் பெறுமதி |
| compassionate counselling | கருணை உளவள மதியுரை |
| complete years | முற்றாண்டுகள் |
| completed fertility | கருத்தரிப்பு ஒழியுந் தறுவாயில் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை (எ-கா: 50 வயது பூர்த்திசெய்த பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை) |
| composite household = complex household | கலப்புக் குடும்பம் |
| conception | கருத்தரிப்பு |
| concubinage | வைப்புவாழ்வு |
| conjugal family | தனிக் குடும்பம் |
| consensual union | இசைந்து கூடிவாழ்வு (இருவர் உளமிசைந்து கூடிவாழ்தல்) |
| consent to marriage | திருமண இசைவு |
| contraception | கருத்தடை |
| contraceptive acceptor | கருத்தடை ஏற்பவர் |
| contraceptive continuation rate | கருத்தடை தொடர்ச்சி வீதம் |
| contraceptive devices | கருத்தடைச் சாதனங்கள் |
| contraceptive methods | கருத்தடை முறைகள் |
| contraceptive prevalence rate | கருத்தடை நிலவும் வீதம் |
| contraceptive technology | கருத்தடைத் தொழினுட்பவியல் |
| contraceptive user = contraceptor | கருத்தடைப் பயனாளர் |
| contraceptives | கருத்தடைப் பொருட்கள் |
| Coordinator of Activities Relating to Women | மகளிர் செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் |
| cottage industry | குடிசைக் கைத்தொழில் |
| counselling services | உளவள மதியுரைச் சேவைகள் |
| craft skills | கைவினைத் திறன்கள் |
| crèche | பாலர் நிலையம் |
| criminal harassment = stalking | குற்றத் தொந்தரவு |
| cross-cutting issue | அடர்ந்து படர்ந்த விடயம் |
| crude birth rate | பருமட்டான பிறப்பு வீதம் |
| custody of children | சிறார் (பாலர்) கட்டுக்காப்பு |
| customary marriage | வாடிக்கை மணவாழ்வு (பண்பாட்டு வாடிக்கைப்படியான மணவாழ்வு) |
| data disaggregated by sex = gender disaggregated information | பால்வாரித் தரவுகள் = பால்மைவாரித் தகவல் |
| deadbeat dad | கடப்பாடுதவறிய தந்தை |
| deadbeat mom | கடப்பாடுதவறிய தாய் |
| decriminalization of abortion | கருச்சிதைப்பை குற்றமற்றதாக்கல் |
| delivery care | மகப்பேற்றுப் பராமரிப்பு |
| demographic health surveys | குடிசார் சுகாதார விபர ஆய்வுகள் |
| dependent care | தங்கிவாழ்வாரைப் பராமரித்தல் |
| dependents = dependants | தங்கிவாழ்வோர் |
| determinants and consequences of female-headed households | பெண்-தலைமைக் குடும்பங்கள் அமைவதைத் தீர்மானிக்கும் காரணிகளும் பின்விளைவுகளும் |
| dilation and curettage instruments set | அகட்டிச் சுரண்டும் கருவித்தொகுதி |
| discrimination on grounds of sex = sexual discrimination = sex-based discrimination | பால்மைவாரிப் பாரபட்சம் |
| diseases of ageing | மூப்புகால நோய்கள் |
| divorce | மணவிலக்கு |
| domestic arts | இல்லக் கலைகள் |
| domestic partnership | கூடிவாழ்வு |
| double standard | பாரபட்சம் |
| douche | நறுநீர் |
| dowry-related violence | சீதனம் குறித்த வன்முறை |
| drudgery-reducing devices | சலிப்புத் தணிக்கும் சாதனங்கள் |
| dual-career couple | பணியாற்றும் தம்பதியர் |
| duration-specific marital fertility rate = marriage duration (marital) fertility rate | மணவாழ்வுகால மகப்பேற்று வீதம் |
| dysmenorrhea | கடுமாதவிலக்கு |
| early family formation | இளவயதில் குடும்பம் அமைத்தல் |
| early marriage | இளவயது மணம் |
| early pregnancy | இளவயதில் கருத்தரிப்பு |
| early term birth | முந்து மகப்பேறு = முந்திப் பிறத்தல் (37-38 கிழமைகள்) |
| early weaning | வேளைக்கே பால்குடிமறப்பு |
| Economic Empowerment Programme | பொருளாதார வல்லமையளிப்பு நிகழ்முறை |
| ectopic pregnancy | பிறழ் கருத்தரிப்பு |
| effective fertility | பலித மகப்பேறு (5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையை 15-49 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையால் பிரித்த தொகை) |
| emergency contraception | அவசர கருத்தடை |
| emotional abuse | உணர்வுத் துன்புறுத்தல் |
| emotional health | உணர்வு நலம் |
| employment of women with family responsibilities | குடும்ப பொறுப்புடைய பெண்களைப் பணிக்கமர்த்தல் |
| empowerment | வல்லமையளிப்பு |
| enabling environment for women | பெண்களுக்கு வல்லமையளிக்கும் சூழல் |
| endogamy | அகமணம் |
| endogenous mortality | அகக்காரண இறப்பு |
| endowment | அறக்கொடை |
| Enhancing Women's Role in Community Development | சமூக விருத்தியில் பெண்கள் பங்குவகிப்பதை விரிவுபடுத்தல் |
| equal employment opportunity | சமதொழில்வாய்ப்பு |
| equal opportunities and equal treatment for men and women workers with family responsibilities | குடும்பப் பொறுப்புடைய ஆண், பெண் தொழிலாளர்களுக்கான சரிநிகர் வாய்ப்புகள், அவர்களை சரிநிகராக நடத்துதல் |
| equal opportunity | சமவாய்ப்பு |
| equal partnership (participation) | சமபங்கேற்பு |
| equal remuneration for men and women workers for work of equal value | சரிநிகர் பெறுமதி வாய்ந்த பணியை ஆற்றும் ஆண், பெண் பணியாளர்களுக்கு சரிநிகர் ஊதியம் |
| Equality Now | உடன் சமத்துவ இயக்கம் |
| ever-married person | ஒரு தடவையாவது மணம்புரிந்த ஆள் |
| exogamy | புறமணம் |
| fact-sheet | விபரமடல் |
| family code | குடும்பச் சட்டக்கோவை |
| family counselling | குடும்ப உளவளமதியுரை |
| family health services | குடும்பநல சேவைகள் |
| family life education | குடும்ப வாழ்வுக் கல்வி |
| family planning provider | குடும்பக் கட்டுப்பாட்டுத் துறைஞர் |
| family spacing | மகப்பேற்று இடைவெளி |
| family wage | குடும்ப வருமானம் |
| family-friendly society | குடும்பநேய சமூகம் |
| family-friendly work environment | குடும்பநேய தொழிலக சூழ்நிலை |
| family-planning acceptor | குடும்பக் கட்டுப்பாடு ஏற்பவர் |
| fecundability | கர்ப்பவாய்ப்பு |
| fecundity | கர்ப்பவளம் |
| female circumcision = female genital mutilation = clitoridectomy = excision | பெண் உறுப்புச் சிதைப்பு |
| female headship of household | பெண்-தலைமைக் குடும்பம் |
| female infanticide | பெண்சிசுக்கொலை |
| female literacy | மகளிர் எழுத்தறிவு |
| female poverty | பெண் வறுமை |
| female-headed household | பெண் தலைமைக் குடும்பம் |
| female-maintained household | பெண் பராமரிப்புக் குடும்பம் |
| feminization of employment | பணியாற்றும் பெண்களின் பெருக்கம் |
| feminization of poverty | வறுமைப்படும் பெண்களின் பெருக்கம் |
| femininity | பெண்மை |
| feminized poverty | வறிய பெண்களின் பெருக்கம் |
| fertility decline | கருவள வீழ்ச்சி |
| fertility regulation = birth control | கருவளக் கட்டுப்பாடு = பிறப்புக் கட்டுப்பாடு |
| fertility-controlling drugs | கருவளக் கட்டுப்பாட்டு மருந்துகள் |
| fetal mortality | கர்ப்பச்சிசு இறப்புவீதம் |
| feticide | கர்ப்பச்சிதைப்பு |
| field work | களப்பணி |
| first-birth interval = interval between marriage and first birth | மணம்புரிவுக்கும் முதலாவது மகப்பேற்றுக்கும் இடைப்பட்ட காலம் |
| focal point for women | மகளிர் பணி இலக்கு |
| food supplements | பிற்சேர்ப்பு உணவுவகைகள் |
| forced abortion | பலவந்த கருக்கலைப்பு |
| forced marriage | பலவந்த மணம் |
| forced pregnancy | பலவந்த கருத்தரிப்பு |
| forced prostitution | பலவந்த விபசாரம் |
| forced reproduction | பலவந்த கருத்தரிப்பு |
| forced sterilization | பலவந்த கருவளநீக்கம் |
| foster care, children in | வளர்ப்போரின் பராமரிப்பில் உள்ள பிள்ளைகள் |
| fuel efficient stove | எரிபொருள் சிக்கன அடுப்பு |
| full term birth | நிறைமாத மகப்பேறு (39-40 கிழமைகள்) |
| gag rule | வாய்ப்பூட்டு விதி |
| gainful employment | சம்பள வேலை |
| gender | பால்மை |
| gender analysis | பால்மைப் பகுப்பாய்வு |
| gender analyst | பாலமைப் பகுப்பாய்வாளர் |
| gender and humanity | பால்மையும் மன்பதையும் (மனுக்குலமும்) |
| gender apartheid | பால்மைசார் பாரபட்சம் |
| gender asymmetry | பால்மைச் சீரின்மை |
| gender awareness | பால்மை விழிப்புணர்வு |
| Gender Awareness Information and Networking System | பால்மை விழிப்புணர்வு தகவல் வலையம் |
| gender balance | பால்மை ஒப்பளவு |
| gender bias | பால்மைப் பக்கச்சார்பு |
| gender blindness | பால்மை காணாமை |
| gender contract | பால்மை ஒப்பந்தம் |
| gender disaggregated information = data disaggregated by sex | பால்மைவாரித் தகவல் = பால்வாரித் தரவுகள் |
| gender discrimination | பால்மைப் பாரபட்சம் |
| gender disparities | பால்மைப் பேதங்கள் |
| gender dysphoria | பால்மைச் சோகம் |
| gender empowerment measure | பால்மை வல்லமையளிப்பு நடவடிக்கை |
| gender equality | பால்மைச் சமத்துவம் |
| gender equity | பால்மை ஒப்புரவு |
| gender focal point | பால்மை இலக்கு |
| gender identity | பால்மை அடையாளம் |
| gender impact assessment methodology | பால்மைத் தாக்கம் கணிப்பீட்டு முறையியல் |
| gender in development programme | விருத்தி நிகழ்முறையில் பால்மை |
| gender inequalities | பால்மை ஏற்றத்தாழ்வுகள் |
| gender issues | பால்மை விடயங்கள் |
| gender mainstreaming | பால்மை உள்வாங்கல் |
| gender needs assessment | பால்மைசார் தேவைகள் கணிப்பீடு |
| gender perspectives | பால்மைக் கண்ணோட்டங்கள் |
| gender relations | பால்மை உறவு |
| gender role | பால்மை வகிபாகம் |
| gender scorecard | பால்மை நியம அட்டை |
| gender- sensitive budgeting | பால்மை உளங்கொள் வரவுசெலவீடு |
| gender specialist | பால்மை விற்பன்னர் |
| gender statistics | பால்மைப் புள்ளிவிபரம் |
| gender stereotypes | பால்மைப் படிவார்ப்புகள் |
| gender wage gap | பால்மைவாரிச் சம்பள வேறுபாடு |
| gender, poverty and well-being | பால்மையும் வறுமையும் சுகசேமமும் |
| gender-adjusted human development index = gender-related human development index | பால்மைசார் மனித விருத்திச் சுட்டு |
| gender-balanced composition | பால்மை ஒப்பளவுக் கோப்பு |
| gender-based division of labour | பால்மை அடிப்படையில் தொழிற்பகுப்பு |
| gender-based harassment | பால்மை அடிப்படையில் அலைக்கழிப்பு |
| gender-based human rights violations | பால்மை அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் |
| gender-based pay inequalities | பால்மை அடிப்படையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் |
| gender-based violence | பால்மை அடிப்படையில் வன்முறை |
| gender-derived skills | பால்மைவழிவந்த திறன்கள் |
| gender-differentiated impacts | பால்மைவாரியாக வேறுபடுத்திய தாக்கங்கள் |
| gender-dominated job | பால்மை ஆதிக்க வேலை |
| gendered language | பால்மைத்துவ மொழி |
| gender-equity-sensitive indicator | பால்மை ஒப்புரவு உளங்கொள் குறிகாட்டி |
| gender-neutral attitude | பால்மை-நடுநிலை உளப்பான்மை |
| gender-neutral policy | பால்மை-நடுநிலைக் கொள்கை |
| gender-related claim to refugee status | பால்மை தொடர்பான அகதிநிலைக் கோரிக்கை |
| gender-related persecution | பால்மை தொடர்பான கொடுமை |
| gender-responsive budgeting | பால்மைப் பதில்வினை வரவுசெலவீடு |
| gender-sensitive concerns | பால்மை உளங்கொள் கரிசனைகள் |
| gender-sensitive planning | பால்மை உளங்கொள் திட்டமிடல் |
| gender-specific research | பால்மை குறித்த ஆராய்ச்சி |
| gender-specific terminology | பால்மை குறித்த பதங்கள் |
| genital mutilation | உறுப்புச் சிதைப்பு |
| girl child | பெண் பிள்ளை |
| glass ceiling | உயர்பதவி மறுக்கும் கட்டமைப்பு |
| grass-root action | கீழ்மட்ட நடவடிக்கை |
| grass-root organization | கீழ்மட்ட அமைப்பு |
| guidance note on gender mainstreaming | பால்மை உள்வாங்கல் வழிகாட்டிக் குறிப்பு |
| guidelines for the evaluation of the women's dimension in fund-assisted programmes | நிதிய-உதவி நிகழ்முறைகளில் மகளிரின் பரிமாணத்தைக் கணிப்பதற்கான வழிமுறைகள் |
| guidelines on the protection of refugee women | அகதி மகளிர் பாதுகாப்பு வழிமுறைகள் |
| harmful traditional practices | தீங்குவிளைவிக்கும் பாரம்பரிய செயல்முறைகள் |
| head of household | குடும்பத் தலைவர் |
| health insurance | சுகாதாரக் காப்புறுதி |
| healthy women counselling guide | மகளிர் நல்லுள மதியுரை வழிகாட்டி |
| high-risk pregnancy | பாதிப்பு மிகுந்த கருத்தரிப்பு |
| HIV-AIDS and human rights: international guidelines | மனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி மற்றும் தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணியும் மனித உரிமைகளும்: சர்வதேய வழிமுறைகள் |
| holistic approach | முழுமை அணுகுமுறை |
| home economics | இல்லப் பொருளியல் |
| home-based work; homework | இல்லநிலைப் பணி |
| home-based worker | இல்லநிலைப் பணியாளர் |
| home crafts | இல்லக் கைவினைகள் |
| homeless, the | வீடற்றோர் |
| homemaker | மனையாளர் |
| homemaking | மனையாண்மை |
| honour killing | மானக்கொலை |
| hostel = battered women's shelter | மகளிர்மனை = தாக்குண்ட மகளிர் மனை |
| house girl = maid | வீட்டுப் பணிப்பெண் |
| household sector | நுகர்வோர் துறை |
| housewife | இல்லாள் |
| human rights fact sheet | மனித உரிமை விபரமடல் |
| human rights in relation to women's health | மகளிர் நலவாழ்வு குறித்த மனித உரிமைகள் |
| illegitimate child | சட்டப்பேறற்ற பிள்ளை |
| illegitimate fertility rates | சட்டப்பேறற்ற பிறப்பு வீதங்கள் |
| impact of crises on poor women | வறிய பெண்கள்மீது நெருக்கடிகள் ஏற்படுத்தும் தாக்கம் |
| implantation | உட்பதிப்பு |
| inbred | சொந்தத்துள் உறவுகொண்டு பெற்றெடுத்த |
| inbreeding | சொந்தத்துள் உறவுகொண்டு பெற்றெடுத்தல் |
| income-generating activities = income-producing activities | வருமானம் ஈட்டும் செயற்பாடுகள் |
| indigenous women: taking control of their destiny | சுதேச மகளிர்: தமது தலைவிதியை தாமே நிர்ணயித்தல் |
| induced abortion = intentional abortion | கருதிச்செய்யும் கருக்கலைப்பு |
| infibulation | விழைச்சுக்கட்டு |
| inheritance and transfer entitlements | இறப்புச்சொத்துப்பேறு, உரித்துப்பேறுகள் |
| injectable contraceptives | கருத்தடை ஊசியேற்றம் |
| in-service training = on-the-job training = in-house training | உள்ளகப் பயிற்சி |
| insurance coverage | காப்புறுதிக் காப்பீடு |
| integrated management of pregnancy and childbirth | கருத்தரிப்பு, மகப்பேறு ஒருங்கிணைந்த பராமரிப்பு |
| integrated monitoring and evaluation plan | ஒருங்கிணைந்த கண்காணிப்பும் மதிப்பீடும் |
| intentional abortion = induced abortion | கருதிச்செய்யும் கருக்கலைப்பு |
| Inter-Agency Field Manual for Reproductive Health in Refugee Situations | அகதிச் சூழ்நிலையில் கருத்தரிப்பு உடல்நலம் குறித்த சர்வ முகமையக கைநூல் |
| Inter-Agency Plan of Action on Protection from Sexual Exploitation and Abuse | பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல், பாலியல் துர்ப்பிரயோகம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பது குறித்த சர்வ முகமையக நடவடிக்கைத் திட்டம் |
| International Women's Day | சர்வதேய மகளிர் நாள் |
| International Women's Information and Communication Service | சர்வதேய மகளிர் தகவல் - தொடர்பாடல் சேவை |
| International Women's Year | சர்வதேய மகளிர் ஆண்டு |
| interpregnancy intervals | கருத்தரிப்பு இடைக்காலப்பகுதிகள் |
| interval between marriage and first birth | திருமணத்துக்கும் முதலாவது மகப்பேற்றுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி |
| intervals between successive births | மகப்பேறுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகள் |
| intra-uterine device | கருப்பையக கருத்தடைச் சாதனம் |
| intra-uterine growth retardation | கர்ப்பச்சிசு வளர்ச்சி குன்றல் |
| intravenous substance use | போதை ஊசி ஏற்றம் |
| in-vitro fertilization | புறக்கருக்கட்டல் |
| job sharing | பணிவேளைப் பகிர்வு (எ-கா: ஒரே பணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் நேரவாரியாகவோ நாள்வாரியாகவோ பகிர்ந்து செய்தல்) |
| joint custody | கூட்டுக் கட்டுக்காப்பு (எ-கா: பிரிந்து வாழும் பெற்றோர் தமது பிள்ளைகள் பற்றிய முக்கிய விடயங்களில் கூடி முடிவெடுத்தல்) |
| joint reproduction rate | கூட்டுக் கருத்தரிப்பு வீதம் |
| just-in-time delivery | குறித்தகால மகப்பேறு |
| labour pains | மகப்பேற்று வேதனை |
| labour room | மகப்பேற்றுக் கூடம் |
| labour, go into | மகப்பேற்று வேதனைக்கு உள்ளாகு |
| labour-based entitlement | தொழில் அடிப்படையில் உதவிப்படி |
| labour-saving devices | தொழிற்சிக்கன சாதனங்கள் |
| lactation | பால்சுரப்பு |
| latch-key children | பெற்றோர் வீடுதிரும்பும்வரை தனித்திருக்கும் பிள்ளைகள் |
| late term birth | பிந்து மகப்பேறு = பிந்திப் பிறத்தல் (41-42 கிழமைகள்) |
| legal adult | வயதுவந்தவர் |
| Legal Adviser for Gender Issues | பால்மை விடய சட்ட மதியுரைஞர் |
| legal literacy | சட்டவிபர அறிவு |
| legal majority | சட்டப்படி வயதடைவு |
| legal status | சட்டபூர்வ தகுநிலை |
| lifelong learning | வாழ்நாட் கற்கை |
| life skills | வாழ்வியல் திறன்கள் |
| life-span | ஆயுட்காலம் |
| lifestyle | வாழ்க்கைப்பாணி |
| live-born children | உயிருடன் பிறந்த பிள்ளைகள் |
| low-paid job | சம்பளம் குறைந்த வேலை |
| lying-in clinic | மகப்பேற்று மனை |
| mail order bride | அஞ்சல்நிரல் மணமகள் |
| mainstreaming a gender perspective | பால்மைக் கண்ணோட்டத்தை உள்வாங்கல் (மையப்படுத்தல்) |
| mainstreaming women in development | விருத்தியில் பெண்களை உள்வாங்கல் (மையப்படுத்தல்) |
| male chauvinism | பேராண்மைவாதம் |
| male dominance | ஆணாதிக்கம் |
| male escort | விலைமகன் |
| male preserve | ஆண்களின் ஏகபோகம் |
| marital bond | திருமண பந்தம் |
| marital rape = spousal rape | வாழ்க்கைத்துணையின் வன்புணர்ச்சி |
| marriage of completed fertility | கருத்தரிப்பு முற்றுப்பெற்ற மணவாழ்வு |
| marriage rate = nuptiality rate | மணவாழ்வு வீதம் |
| mate | துணைவர் |
| maternal and child health | தாய்-சேய் நலவாழ்வு |
| maternal and child health and family planning | தாய்-சேய் நலவாழ்வும் குடும்பத் திட்டமும் |
| maternal mortality rate | மகப்பேற்றுமகளிர் இறப்பு வீதம் |
| maternity grant | மகப்பேற்று மானியம் |
| maternity leave | மகப்பேற்று விடுப்பு |
| mean number of children ever born per woman = average parity = children ever born | ஒரு பெண்ணுக்கு உயிருடன் பிறக்கும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கை |
| media coverage | ஊடக பிரசித்தம் |
| menarche | முதல் மாதவிலக்கு |
| menopause | மாதவிலக்கொழிவு |
| menses | மாதவிலக்கு |
| menses-inducer | மாதவிலக்கு-ஊக்கி |
| microbicide | நுண்ணுயிரிகொல்லி |
| midwife | மகப்பேற்றுத் தாதி |
| midwifery clinic | மக்ப்பேற்று மனை |
| military sexual slavery (servitude) | படையினர் பாலுறவு அடிமைத்தளை |
| minimum age at marriage = minimum age for marriage | ஆகக்குறைந்த திருமண வயது |
| minor | இளையர் = பராயமடையாதவர் |
| miscarriage = spontaneous abortion | கருச்சிதைவு |
| model national plan of action for inclusion of gender issues in mainstreaming activities at the national level | தேசியவாரியாக உள்வாங்கும் செயற்பாடுகளுள் பால்மை விடயங்களை உள்ளடக்குவதற்கான மாதிரித் தேசிய நடவடிக்கைத் திட்டம் |
| model strategies and practical measures on the elimination of violence against women in the field of crime prevention and criminal justice | குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையில் பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த மாதிரி உபாயங்களும் செய்முறைகளும் |
| morning sickness | வயிற்றுக் குமட்டல் |
| motherhood | தாய்மை |
| mothering | தாய்மையியல் |
| multigravida | பல்கர்ப்பிணி |
| multipara | பல்மகவுத்தாய் |
| multiple sexual partnership | பல்பாலுறவுத் துணைமை |
| National Rapporteur on Trafficking and Human Rights Abuse of Women and Girls | மாதர்-சிறுமியர் கடத்தல் வியாபாரம் மற்றும் மனித உரிமைத் துர்ப்பிரயோகம் குறித்த தேசிய அறிக்கையாளர் |
| natural family planning = rhythm method | இயல்பான குடும்பக் கட்டுப்பாடு = இடைவிலக்கு முறை (சூல்கொள்ளும் நாட்களில் பாலுறவு தவிர்ப்பு) |
| neighbourhood childcare facilities | அயலக பாலர் பராமரிப்பு வசதிகள் |
| newly-delivered woman | புதுக்கத் தாயான பெண் |
| nidation = implantation | உட்பதிப்பு |
| No to Violence Against Women | பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு இயக்கம் |
| non-marital fertility rates | புறமணப்பேற்று விகிதங்கள் |
| non-spermicidal microbicides | விந்துகொல்லா நுண்ணுயிரிகொல்லிகள் |
| non-stereotyped portrayal of women | பெண்களை படிவார்ப்புக்கு உள்ளாக்காத சித்தரிப்பு |
| numeracy | எண்ணறிவு |
| nursing woman | பாலூட்டும் தாய் |
| nutritional anemia | சத்துக்குறைவுச் சோகை |
| obstetric fistula | கர்ப்பகால புரைக்கசிவு |
| obstetrician | மகப்பேற்று மருத்துவர் |
| obstructed labour | மகப்பேற்றுத் தடங்கல் |
| occupational gender segregation | பால்மைவாரியாகத் தொழில்வாய்ப்பை வகுத்து ஒதுக்குதல் |
| occupational segregation | தொழில்வாய்ப்பை வகுத்து ஒதுக்குதல் |
| occupational stereotype | தொழில்சார் படிவார்ப்பு |
| one-person household | தனியாள் வாழ்விடம் |
| Optional Protocol to the Convention on the Elimination of All Forms of Discrimination against Women | பெண்களுக்கெதிரான பாரபட்ச வகைகள் அனைத்தையும் ஒழிப்பது குறித்த ஒப்பந்தத்துக்கான விருப்பதெரிவு வரைமுறை |
| oral contraceptives | கருத்தடை மாத்திரைகள் |
| osteoporosis | என்புப்போறை |
| outwork | வெளித்தொழில் |
| over-medication | மிகை மருந்துட்கொளல் |
| ovulatory cycle | சூலுறு வட்டம் |
| paedophilia | சிறார்பால் (பாலர்பால்) காமம்; சிறாரைக் காமுறுகை |
| pap smear = pap test | கருப்பைமுகைப் பரிசோதனை |
| parental leave | பெற்றோருக்கான விடுப்பு |
| parental rights | பெற்றோரின் உரிமைகள் |
| parenthood | பெற்றோரியம் |
| parenting skills | பேற்றோரியத் திறன்கள் |
| parity | சமத்துவம் |
| partner | துணைவர் |
| parturition | மகப்பேறு |
| paternal leave | தந்தைக்கான விடுப்பு |
| pelvic inflammatory disease | கூபக அழற்சி நோய் |
| pelvic pain | கூபக நோவு |
| permissiveness = permissivism | நெகிழ்வு |
| petty trader | குறுவணிகர் |
| physical abuse | உடலூறுபடத் துன்புறுத்தல் |
| pink-collar occupation | மகளிர் பணி |
| planned births | திட்டமிட்ட மகப்பேறு |
| planned parenthood | திட்டமிட்ட பெற்றோரியம் |
| Policy and Analytic Frameworks for Gender Equality | பால்மைச் சமத்துவத்துக்கான கொள்கை மற்றும் பகுப்பாய்வுக் கட்டுக்கோப்புகள் |
| polyandry | பல்கணவருடைமை |
| polygamy | பல்வாழ்க்கைத்துணைமை |
| polygyny | பல்மனைவியருடைமை |
| positive discrimination = affirmative action = reverse discrimination | ஈடுசெய் பாரபட்சம் (முன்னைய பாரபட்சத்தை ஈடுசெய்வதற்கான இன்றைய பாரபட்சம்) |
| post-abortion counselling | கருக்கலைப்பின்பின் உளவள மதியுரை |
| post-partum abstinence | மகப்பேற்றின்பின் உடலுறவு கொள்ளாமை |
| post-partum care | மகப்பேற்றின்பின் பராமரிப்பு |
| post-partum depression = baby blues | மகப்பேற்றின்பின் உளச்சோர்வு |
| Poverty Alleviation Programme | வறுமை தணிப்பு நிகழ்முறை |
| pregnancy intervals | கருத்தரிப்பு இடைக்காலப்பகுதிகள் |
| pregnancy leave | கர்ப்பகால விடுப்பு |
| pregnancy termination | கருத்தரிப்பு முடிவுறுத்தல் |
| pre-marital examination | மணமுன் பரிசோதனை |
| premature birth | குறைமாதப் பிறப்பு |
| prenatal care = antenatal care | கர்ப்பகால பராமரிப்பு |
| prenatal sex selection | கர்ப்பச்சிசுவின் பால்-தெரிவு |
| prereproductive-age girl | கர்ப்பவயது முதிராத சிறுமி |
| Prevention and Management of Unsafe Abortion | பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தடுத்தலும் கையாளலும் |
| primigravida | முதன்முதல் தாயாகுபவர் |
| principal earner | முதன்மை உழைப்பாளர் |
| Pro-choice Movement | சுயேச்சை மகப்பேற்று இயக்கம் (மகப்பேறு பெண்களின் சுயேச்சையைப் பொறுத்தது, அரசையோ சமூகத்தையோ பொறுத்ததல்ல என்று முழங்கும் இயக்கம்) |
| production-based entitlements | சொந்த உற்பத்தி ஆதாயங்கள் |
| Progress of the World's Women | உலக மகளிர் முன்னேற்ற இயக்கம் |
| Pro-life Movement | கருக்கலைப்பு எதிர்ப்பு இயக்கம் |
| promotion ladder | பதவியேற்றம் |
| psychological abuse | உளத்துன்புறுத்தல் |
| puerperal mortality rate | மகப்பேற்றுமகளிர் இறப்பு வீதம் (பெண்கள் மகப்பேற்றின் முன் அல்லது பின் இறக்கும் வீதம்) |
| puerperium | மகப்பேற்று மீட்சிக்காலம் |
| rape | வன்புணர்ச்சி |
| regional gender programme | பிராந்திய பால்மை நிகழ்முறை |
| religious marriage | சமயத் திருமணம் |
| remunerated work | ஊதிய வேலை |
| replacement fertility | ஈடுசெய் பிறப்பு வீதம் |
| reproductive age | கருத்தரிப்பு வயது |
| reproductive choice | கருத்தரிப்புத் தெரிவு |
| reproductive coercion | கருத்தரிப்பு பலவந்தம் |
| reproductive health care | கருத்தரிப்பு நலம்பேணல் |
| reproductive responsibilities | கருத்தரிப்பு பொறுப்புகள் |
| reproductive rights | கருத்தரிப்பு உரிமைகள் |
| reproductive technologies | கருத்தரிப்பு தொழினுட்பவியல் |
| required minimum age for marriage | மணம்புரிவதற்கான ஆகக்குறைந்த வயது |
| restraining order | தடைக் கட்டளை |
| returnee women | மீள்மகளிர் |
| revenue-generating activities = revenue-producing activities | வருமானம் ஈட்டும் செயற்பாடுகள் |
| reverse discrimination = affirmative action = positive discrimination | ஈடுசெய் பாரபட்சம் (முன்னைய பாரபட்சத்தை ஈடுசெய்வதற்கான இன்றைய பாரபட்சம்) |
| Right to Life Movement | வாழ்வுரிமை இயக்கம் |
| rights-based approach to women's empowerment and advancement and gender equality | உரிமை அடிப்படையில் பெண்கள் வல்லமையீட்டம், முன்னேற்றம், பால்மைச் சமத்துவ அணுகுமுறை |
| risk behaviour | கெடுதி நடத்தை |
| role-sharing | வகிபாகப் பகிர்வு |
| role-specific behaviour | வகிபாகம் குறித்த நடத்தை |
| safe abortion | பாதுகாப்பான கருக்கலைப்பு |
| safe delivery | பாதுகாப்பான மகப்பேறு |
| safe femalehood | பாதுகாப்பான பெண்மை |
| safe motherhood | பாதுகாப்பான தாய்மை |
| Safe Motherhood Initiative | பாதுகாப்பான தாய்மை இயக்கம் |
| safe sex practices | பாதுகாப்பான பாலுறவு முறைகள் |
| safe womanhood | பாதுகாப்பான பெண்மை |
| serial monogamy | அடுத்தடுத்த ஒற்றைமணவாழ்வு |
| sex ratio | பால் விகிதம் |
| sex role | பால் வகிபாகம் |
| sex tourism = sexual tourism | பாலுறவுச் சுற்றுலா |
| sex trafficking; sexual trafficking | பாலுறவு அடிமை வியாபாரம் |
| sex workers | பாலுறவுப் பணியாளர்கள் |
| sexism | பால்சார் பாரபட்சம் |
| sexist stereotypes | பால் படிவார்ப்புகள் |
| sex-selective abortion | பால்தெரிவுக் கருக்கலைப்பு |
| sex-specific marriage rate | பால்குறித்த மணவீதம் |
| sexual abuse | பாலியல் துர்ப்பிரயோகம் |
| sexual and gender-based violence | பாலியல், பால்மை அடிப்படையில் வன்முறை |
| sexual and gender-based violence against refugees, returnees and internally displaced persons | பாலியல், பால்மை அடிப்படையில் அகதிகளுக்கும் மீள்வோருக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கும் எதிரான வன்முறை |
| sexual assault | பாலியல் தாக்குதல் |
| sexual exploitation | பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல் |
| sexual harassment | பாலியல் தொந்தரவு |
| sexual health | பாலியல் உடல்நலம் |
| sexual molestation | பாலியல் கேடுவிளைவிப்பு |
| sexual preference | பாலியல் தெரிவு |
| sexual rights | பாலியல் உரிமைகள் |
| sexual slavery | பாலியல் அடிமைத்தளை |
| sexual trafficking = sex trafficking | பாலுறவு அடிமை வியாபாரம் |
| sexual violence | பாலியல் வன்முறை |
| sexual violence against refugees | அகதிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை |
| sexually active individual | பாலுறவாளர் |
| shared custody | பகிர்வுக் கட்டுக்காப்பு (கூட்டுக் கட்டுக்காப்புக்கு உட்பட்ட பிள்ளைகளை பெற்றோர் ஆள்மாறிக் காத்தல்) |
| single delivery | ஒற்றை மகப்பேறு |
| single parent = lone parent = sole parent | தனிப் பெற்றார் |
| single parenthood | தனிப் பெற்றாரியம் |
| single status | மணமாகாத் தகுநிலை |
| singulate mean age at marriage | 50 வயதுக்குமுன் மணம்புரிவோருள் மணமாகாதோர் அவ்வாறிருக்கும் சராசரிக் காலம் |
| social marginalization | சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலை |
| social subordination | சமூகத்துக்கு அடிப்பட்ட நிலை |
| social support services = social welfare services | சமூகநல உதவிச் சேவைகள் |
| sole custody | தனிக் கட்டுக்காப்பு |
| son preference | ஆண்குழந்தை நாட்டம் |
| spacing of pregnancies | இடைவிட்டுக் கருத்தரித்தல் |
| Special Adviser on Gender Issues and Advancement of Women | பால்மைச் சர்ச்சைகள் மற்றும் முன்னேற்றம் பற்றிய சிறப்பு மதியுரைஞர் |
| Special Adviser on Women Workers' Questions | பெண் தொழிலாளர் பிரச்சனைகள் பற்றிய சிறப்பு மதியுரைஞர் |
| Special Adviser on Women, Enviroment and Development | மகளிர், சூழல், விருத்தி குறித்த சிறப்பு மதியுரைஞர் |
| Special Ambassador for the Elimination of Female Genital Mutilation | பெண் உறுப்புச் சிதைப்பு ஒழிப்புக்கான சிறப்புத் தூதர் |
| Special Envoy of the Secretary-General on Women and Development | மகளிர்-விருத்தி குறித்த ஐ. நா. செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதர் |
| Special Rapporteur on the situation of systematic rape, sexual slavery and slavery-like practices during periods of armed conflict, including internal conflict | உள்நாட்டுப் போராட்டம் உட்பட ஆயுதப் போராட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற திட்டமிட்ட வன்புணர்ச்சி, பாலியல் அடிமைத்தளை மற்றும் அடிமைப்படுத்தல் போன்ற செயல்முறைகளின் நிலைவரம் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் |
| Special Rapporteur on traditional practices affecting the health of women and the girl child | பெண்களையும் பெண்குழந்தைகளையும் பாதிக்கும் பாரம்பரிய செயல்முறைகள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் |
| spermicide | விந்துகொல்லி |
| split custody | பிரித்த கட்டுக்காப்பு (கூட்டுக் கட்டுக்காப்புக்கு உட்பட்ட பிள்ளைகளுள் ஒருவர் பெரிதும் ஒரு பெற்றாருடனும், இன்னொருவர் பெரிதும் மறு பெற்றாருடனும் வாழும் ஏற்பாடு) |
| spousal rape = marital rape | வாழ்க்கைத்துணையின் வன்புணர்ச்சி |
| stalking = criminal harassment | குற்றத் தொந்தரவு |
| State of the World's Women Report | உலக மகளிர் நிலை அறிக்கை |
| status of women | மகளிர் தகுநிலை |
| statutory rape | பராயமடையாதவருடன் வயதுவந்தவரின் வல்லுறவு |
| stereotyping | படிவார்ப்பு |
| subdermal contraceptive implant | தோலடி உட்பதிவுக் கருத்தடை |
| surrogate mother | பதிலித்தாய் |
| suttee | உடன்கட்டையேறல் |
| systematic rape | திட்டமிட்ட வன்புணர்ச்சி |
| System-wide Medium-term Plan for the Advancement of Women | பெண்களின் முன்னேற்றத்துக்கான கட்டமைப்பளாவிய இடைநடுக்காலத் திட்டம் |
| teenage pregnancy | பதின்மவயதுக் கர்ப்பம்; பதின்மவயதினர் கருத்தரிப்பு |
| telecommuting = telework | தொலைத்தொடர்பு மூலம் பணியாற்றல் |
| Thematic Trust Fund on Gender in Development | பால்மை விருத்தி விடய நம்பிக்கை நிதியம் |
| therapeutic abortion | சிகிச்சைக் கருக்கலைப்பு |
| time-series analysis | காலத்தொடர் பகுப்பாய்வு |
| token role | அடையாள வகிபாகம்; அடையாளப் பங்கு |
| tokenism, fallacy of | அடையாளப்போலி (எ-கா: "எங்கள் தாபனத்தை ஓர் ஆணாதிக்க தாபனம் என்று கொள்ளமுடியாது. ஏனெனில் எங்கள் பாலர் பராமரிப்பாளர் ஒரு பெண்மணி") |
| total fertility rate | மொத்தக் கருவள வீதம் |
| trade-based entitlements | பண்டமாற்றுக்கள் |
| traditional birth attendant | மரபுவழி மகப்பேற்றுத் தாதி |
| traffic in girls | சிறுமியர்-கடத்தல் வியாபாரம் |
| traffic in women | மகளிர்-கடத்தல் வியாபாரம் |
| UN Decade for Women and Development | ஐ. நா. மகளிர்-விருத்தி தசாப்தம் |
| UN Decade for Women: Equality, Development and Peace | ஐ. நா. மகளிர் தசாப்தம்: சமத்துவம், விருத்தி, அமைதி |
| UN Decade for Women: Policies, Principles and Mandates | ஐ. நா. மகளிர் தசாப்தம்: கொள்கைகள், நெறிகள், ஆணைகள் |
| UN Focal Point for Women | ஐ. நா. மகளிர் பணி இலக்கு |
| undervalued job | குறைத்து மதித்த வேலை |
| UNHCR Guidelines on Evaluation and Care of Victims of Trauma and Violence | ஊறுபாட்டுக்கும் வன்முறைக்கும் உள்ளானவர்களைக் கணிப்பிட்டு பராமரிப்பதற்கான ஐ. நா. அகதிகள் ஆணையாளரின் வழிமுறைகள் |
| unpaid contribution | ஊதியம்பெறாத பங்களிப்பு |
| unpaid family work | ஊதியம்பெறாத குடும்ப வேலை |
| unremunerated work | ஊதியமற்ற வேலை |
| unsafe abortion | பாதுகாப்பற்ற கருக்கலைப்பு |
| unwanted child | வேண்டாப் பிள்ளை |
| unwanted pregnancy | வேண்டாக் கருத்தரிப்பு |
| user-centered services | பயனாளரை நோக்கிய சேவைகள் |
| village midwife | கிராமிய மகப்பேற்றுத் தாதி |
| violence against women | பெண்களுக்கெதிரான வன்முறை |
| vital records | வாழ்க்கைப் பதிவேடுகள் (எ-கா: பிறப்பு, திருமண, இறப்புச் சான்றிதழ்கள்) |
| vital statistics | வாழ்க்கைப் புள்ளிவிபரம் (எ-கா: பிறப்பு, திருமண, இறப்பு விபரங்கள்) |
| vulnerable women = at-risk women | நலிபடவல்ல பெண்கள்; பாதிக்கப்படவல்ல பெண்கள் |
| wage baseline | அடிப்படைக் கூலி |
| wage differentials | சம்பள வேறுபாடுகள் |
| weaning | பால்குடி மறப்பு (மறக்கச்செய்தல்) |
| wet nurse | பாலூட்டும் செவிலி |
| wife-burning | மனைவி எரிப்பு |
| withdrawal method = coitus interruptus | விந்துபாய்வு இடைவிலக்கல் |
| Women and Children First | பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் முதன்மை இயக்கம் |
| women at risk = at-risk women = vulnerable women | நலிபடவல்ல (பாதிக்கப்படவல்ல) பெண்கள் |
| women in decision making | தீர்மானம் எடுப்பதில் பெண்கள் |
| women in development | அபிவிருத்தித் துறையில் பெண்கள் |
| women in domestic service | வீட்டுப்பணிப் பெண்கள் |
| women in power | அதிகாரம் செலுத்தும் பெண்கள் |
| Women Action Network | மகளிர் நடவடிக்கை வலையம் |
| women of reproductive age | கர்ப்ப வயதுப் பெண்கள் |
| Women on the Move | மகளிர் முன்னகர்வு இயக்கம் |
| Women's Action Agenda | மகளிர் நடவடிக்கை நிரல் |
| women's health counts | மகளிர் சுகாதாரப் புள்ளிவிபரம் |
| women's indicators and statistics database | மகளிர் குறிகாட்டிகள் மற்றும் புள்ளிவிபர தரவுத்தளம் |
| women's productive roles | மகளிரின் ஆக்கபூர்வமான பங்குகள் |
| Women's Rights are Human Rights! | மாதரின் உரிமைகள் மாந்தரின் உரிமைகளே! |
| women's self-employment project | மகளிர் சுயதொழில் நிகழ்பாடு |
| women-specific project | மகளிர் குறித்த நிகழ்பாடு |
| workplace childcare facilities | வேலைத்தல பாலர் பராமரிப்பு வசதிகள் |
| World Plan of Action for the Implementation of the Objectives of the International Women's Year | சர்வதேய மகளிர் ஆண்டின் இலக்குகளை எய்துவதற்கான உலக நடவடிக்கைத் திட்டம் |
| Zero Tolerance Campaign against Trafficking of Women | மகளிர்-கடத்தல் வியாபாரத்தை இம்மியும் சகியா இயக்கம் |
No comments:
Post a Comment